என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

அத்தியாயம் – 23

அவன் தன்னைத் திடீரென கரங்களில் ஏந்துவான் என சற்றும் எதிர்பாராதவள் அவன் மார்பில் கரம் வைத்து தள்ளி தன்னுடலை அவன் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டாள். 

“தள்ளிப் போங்க தாரகன்….. என்னைத் தொட வேணாம்…..” என்றவாறு அவனை விட்டு விலகிச் சென்றாள்.


  “நில்லு ஆழியா….. நீ என்னோட பொருள் நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்” என்றவாறு அவளது இடையை இறுகப் பற்றித் தன்னுடலோடு அழுத்திக் கொள்ள ஆழியாவுக்கோ பொறுமை மெல்ல மெல்ல மடியத் தொடங்கியது.


“க்கையை எடுங்க தாரகன்…..” 


“வாவ்…. வாவ்…. மேடம்கு நான் தொட்டா கோபம் வருதோ?????” என்றவாறு அவளை மடக்கிப் பிடித்து அவளது உடலில் அவன் கரங்களை சுதந்திரமாக மேய விட்டான். 


“உன்னோட தலை முடில இருந்து  கால் நகம் வரைக்கும்  என்னோட சொத்து…. நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்டி…” என்றவனது கரம் எல்லை மீறி அங்கம் தொட கொதித்துப் போனவள் அவனது கன்னத்திலே பளாரென அறைந்தாள்.


“ஏய்ய்ய் ஹௌ டேர் யு………” எனக் கொந்தளித்தவன் தன் பலம் முழுவதையும் அவளது இடையைப் பற்றி அதில் காட்ட அவளுக்கோ இடுப்பே ஒடிந்து விடும் போல இருந்தது.. “ஆஆஆஆஆஆ ப்ளீஸ் வ்விடு…… ப்ளீஸ்….” என வலியில் அலறியவள் ஒரு கட்டத்தில் கால்கள் துவள ஆரம்பிக்க மடங்கி தரையில் அமர முயல அவளை அப்படியே கீழே தள்ளி விட்டான்.


தரையில் விழுந்தவளோ வலியில் துடிக்க தாரகனது மனதும் சேர்ந்து கதறியது…. கோபமா காதலா என இரண்டிற்கு நடுவிலும் சிக்கித் தவித்து தள்ளாடியவன் இறுதியில் ஆழியாவைத் தூக்கி படுக்கையில் கிடத்தி அவளது இடுப்பை நீவி விட்டான்.


அவளது விழிகளோ வேதனையில் மூடிக் கொள்ள  அவளது துடித்த செம்பவள இதழ்களோ “ஐ ஹேட் யு தாரகன்….. ஐ ஹேட் யு….. இன்னும் கொஞ்ச நாள்தான் எனக்கு இந்த கஷ்டங்கள் எல்லாம் இருக்கும்…  நான் போறேன் தாரகன்… எனக்கு பணம் வ்வேணாம்…….. எனக்குப் போகனும்…. என்னை விட்ருங்க ப்ளீஸ்…. “ என விம்மி வெடித்து அழுதாள்.


“சாரி ஆழியா… ஐ லவ் யு….  நீ எனக்கு வேணும்…. சோ… நீ இங்க இருந்து எங்கேயுமே போக முடியாது…..” என்றவன் அவள் அருகில் படுத்து அவளை அணைத்துக் கொண்டான். 


அவளது கண்ணீர் உப்பு மழையை பொழிந்து கன்னத்தோடு பயணித்து படுக்கையில் சங்கமித்தது. “ம்ப்ச் அழாதே ஆழியா……” என்றான் தாரகன்.  அலைகள் ஓய்வதில்லை என்பதைப் போல ஆழியாவின் கண்ணீரும் ஓய்வதில்லை போலும் அவளது உடல் அழுகையில் தூக்கி வாரிப்போட தாரகனின் காதல் கொண்ட மனம் சிறுகச் சிறுகத் துடித்தடங்கியது. 


அவளை வாரி அணைத்து தன் மார்பில் கிடத்தியவன் அவள் விழிநீர் துடைத்தான்…… ஒரு குழந்தையை அணைப்பதைப் போல அவளை அணைத்தவன் அவளைத் தன் கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.


“நான் போகனும்…… எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை    நான் என்னோட இடத்துக்கு போகனும்….” என அவள் அழுதவாறு திரும்பத் திரும்ப அதனையே கூற வேதனையுற்றவன் “சரி குட்டிமா ப்ளீஸ்டி அழாத……” என அவளை சமாதானப் படுத்தினான்.


அவளது கூந்தலின் பின்னலை கலைந்தவன் அவளது நீளமான கார் குழலை விரித்து விட்டு அதனுள் தன் கரத்தை நுழைத்து அவளது தலை கோதினான்.. வெகு நேரமாக அவளது துடிப்பும் கதறலும் நிற்காது தொடர பெரு மூச்சை வெளியேற்றிய தாரகன் தன்னவளுக்காக முதல் முறை பாடத் தொடங்கினான்.


“அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்…………… அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்…………. கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனதைப் போல் என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கலையே………………….                     பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே…………..”


அவனது வருடலிலும் பரிவிலும் அவனது உயிரை உருக்கும் குரலிலும் அவளது அழுகையும் விசும்பலும் குறைந்து போனது….  மெல்லக் குனிந்து பெண்ணவளது பிறை நெற்றியில் முத்தம் இட்டவன்  “போகாதே…. போகாதே….. நீ இருந்தால் நான் இருப்பேன்…. போகாதே போகாதே… நீ பிரிந்தால் நான் இறப்பேன்…….” என தன் காதலை பாடலில் வெளிப்படுத்தியவன்  இறுதியில் அவளது காதருகில் நெருங்கி “என்னை விட்டுப் போயிராதே ஆழிம்மா……. ப்ளீஸ்… என்ன விட்டுப் போயிராதடி…” எனக் கூறினான். கூறினான் என்பதை விட அவளிடம் மன்றாடினான் என்பதே சாலப் பொருந்தும்.


அவளோ பேச்சற்றுப் போனாள்…. தன்னவனை எந்த வகையில் சேர்ப்பது???????

சுடும் சூரியனா?? குளிர் நிலவா?????

அவன் புயலா???? தென்றலா?????

காதலனா??? காதல் மறுப்பவனா????

ராட்சசனா???? ரட்சகனா???

அவன் பிணியா???? மருந்தா????

என் காதலுக்கு இந்திரனா???? இல்லை எமனா??    

இத்தனையில் எது அவன்???? புரியாது குழம்பிப் போனாள் கடல்களின் அரசி.. மனதை ஒரு நிலையில் நிறுத்த முடியாது தவித்துப் போனாள் ஆழியா. 


“என்னை எதுக்கு கஷ்டப்படுத்தனும் பிறகு ஏன் இப்படி அன்பைக்  கொட்டனும்??? ஏன் தாரகன் இப்படி பண்றீங்க?????”


“ஏன்னா நான் உன்ன உண்மையாவே காதலிக்கிறேன்டி…..” என்றவன் தான் எடுத்து வைத்திருந்த தாலியைக் கொண்டு வந்து மீண்டும் அவள் கழுத்திலே கட்டினான். அவளோ பேச்சற்று விக்கித்துப் போக அவளது தாலியை அவளுக்குத் தூக்கிக் காட்டியவன் “இனியாவது தூக்கி எறிஞ்சிறாத…. பத்திரமா வெச்சுக்கோ…. இது எப்போ உன் கழுத்துல இருந்து இனி இறங்குதோ அன்னைக்கு என்னோட உயிரும் இந்த உலகத்தை விட்டே போயிருக்கும்….”  எனக் கூறினான்.


அவனோ காதலை வெளிப்படுத்தக் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பலிக்கப் போவதையோ அவனது  உயிர் இவ் உடலை விட்டு நீங்கப் போவதையோ அறியாது ஆழியாவின் காதில் முத்தமிட்டபடி உறங்கிப் போனான்.


ஆழியாவிடம் பேசிவிட்டு மகிழ்வோடு தன் அறைக்குள் நுழைந்தாள் சுதிஷா. தனாவோ கட்டிலில் படுத்திருக்க மறு பக்கத்தில் தயங்கியவாறே படுத்துக் கொண்டாள் சுதிஷா. “என்னடி பியூட்டி கூட டேசிட்டு வர்ற போல???” எனக் கேட்டான்.


“ம்ம்…. ஆமா…. ஆழியா ரொம்ப ஸ்வீட்… அது சரி அதென்ன பியூட்டி??? அப்போ நான் அழகா இல்லையா சனா??????” என வெளிப்படையாகவே கேட்டாள் சுதிஷா. 


அவளது கேள்வியில் அவளைப் பார்க்கும்படி திரும்பிப் படுத்தவன் எப்போதும் போல அவள் அழகை இரசித்தவாறு  “நீ பிரபஞ்ச அழகிடி…..” என்றான். அவனது பதிலில் அவளது கன்னங்கள் திடீரென சிவந்து போக தனாவின் மனதோ தடுமாறியது. 


“வாவ் சுதி… உன்னோட கன்னம் அழகா சிவக்குதுடி…” 


“அப்படியா??? எனக்குத் தெரியலையே……” எனக் கூற அவளது கரத்தைப் பற்றி அவளை எழுப்பியவன் “வா நான் காட்டுறேன்……” என்றவாறு அவளை ஆளுயரக் கண்ணாடியின் அருகே அழைத்துச் சென்றான். 


அவளைக் கண்ணாடியின் முன் நிறுத்தி அவளின் பின்புறம் வந்து நின்றவன் “ம்ம் இப்போ பாரு தெரியும்…” என்றான். அவளோ கண்ணாடியில் தன் கன்னங்களைப் பார்த்து விட்டு “சிவப்பு எல்லாம் போயிருச்சே சனா….. அச்சோ நான் பார்க்கலையே…. “ என்றாள்.


“மறுபடியும் சிவக்க வெச்சுருவோம்……..” என்றான் சனாதனன். 


“எப்படி?????”


“என்னால உன்னை வெக்கப்பட வைக்க முடியும்னு நினைக்கிறேன்…” என அவளை பின் பக்கமாக நெருங்கி நின்றான் தனா.


“நான் உன்னைத் தொடலாமா சுதி??????”

“ஆங்…??? ஏன்???”

“ஜஸ்ட் உன்ன சிவக்க வைக்கிறதுக்காகத்தான்…..”


“ம்ம்ம்……. தொட்டுக்கோங்க….” என அவள் அனுமதியை அல்வா துண்டு போல தூக்கிக் கொடுத்து விட புன்னகையோடு அவளது உள்ளங்கையைப் பற்றி அழுத்தினான் சனாதனன்.


அவளது மெல்லிடையில் கரத்தைப் பதித்தவன் எடுக்க முடியாது தவித்தான். அவளது இடையை அவன் கரம் வருட….., அவனது உதடுகள் அவளது பின்னங் கழுத்தில் உரசின. 


சுதிஷாவின் முகம் கையைத் தொட்டதுமே செங்கொழுந்தாகி விட தன்னை இரசித்துப் பார்த்தவள் சனாதனின் தொடர் தாக்குதலில் திகைத்துப் போனாள். 

“சனா… சி.. சிவந்திருச்சு… நான் பார்த்துட்டேன்….  போதும்….” எனக் கூற அதன் பின்பே சுய நினைவை அடைந்தவன் அவளை விட்டு விலகி நின்றான். “ம்ம் போய்த் தூங்குடி….”


“நீங்க தூங்கலையா??????” 

“நான் லேட்டா தூங்குறேன்…..”

“ஏன் சனா?????”

“அடியேய் டிராகுலா…. எத்தனை கேள்விதான் கேட்ப?????” என்றவாறு அவளது மூக்கை ஒற்றை விரலால் அழுத்தினான். 


“எனக்கும் தூக்கம் வரலை சனா…….”


“ஹேய்  டிராகுலா…. நாம மாடிக்குப் போகலாம் வா……” என அவளை இழுத்துக் கொண்டு மாடி ஏறினான்.


இரவு நேர குளிர் காற்றும் காணும் இடம் யாவிலும் கருமை நிறமும் இரவு வானம் ஒற்றை வெண்ணிலவைத் தன் பொட்டாக சூடி இருக்க வர்ணிக்க இயலாத விதமாய் விரிந்திருந்தது அந்த இரவு நேரம். 


“ரொம்ப அழகா இருக்கு சனா……”

“ம்ம் டி……”

“ஹூம்ம்ம்……”

“என்னை விட்டுப் போனால் என்ன மறந்துருவியா????”


“உங்களை மறக்க முடியுமாபா??”

“நானும் உன்னை மறக்கவே மாட்டேன்டி டிராகுலா…. அவ்வளவு இம்சை நீ…. ஹா ஹா….” எனச் சிரித்தான் தனா.


“போடாஆஆ..”


“எதே போடாவா????? அடிங்க…..” என அவளைத் துரத்தினான் சனாதனன். அவளோ அங்கே இருந்த பெரிய நீச்சல் குளத்தைச் சுற்றி ஓடியவள் “முடிஞ்சா என்னைப் பிடிங்க பார்ப்போம்….” என கலகலத்துச் சிரித்தவாறு  அந்த நீச்சல் குளத்தினுள் குதித்தாள்.



“அடிப்பாவி இது சீட்டிங்  மேல வாடி…. நான் வேற நீ ஒரு கடல் கன்னின்னு அடிக்கடி மறந்து போயிடுறேன்…” எனப் புலம்ப…


“யோவ் டான்ஸர்… அங்க என்னையா தனியாப்  புலம்புற.. முடிஞ்சா பிடி பார்ப்போம்…” என்றவள் நீருக்குள் சென்று விட,


“அடிங் கொய்யால… இருடி வர்றேன்..” என்றவன் தன் ஷேர்ட் பட்டன்களை கழற்றி மேலாடையைக் கலைந்து விட்டு நீச்சல் குளத்தினுள் குதித்தான்.


“அவனோ லாவகமாக நீந்த சடாரென நின்றவள் குனிந்து அவனது காலைப் பார்த்தாள்…”


“அடியேய் டிராகுலா எங்கடி பார்க்கிற…. ச்சீ ச்சீ  பேட் கேர்ள்……” என்றான் சிரிப்புடன்..


“ஹா….. ஹா… ஹா…. சும்மா இருங்க சனா…. நீங்க ரொம்ப வேகமா நீச்சல் அடிச்சீங்களா அதான் நீங்களும் ஒரு கடல் கன்னனா இருப்பீங்களோன்னு பார்த்தேன்…..”


“அடிப்பாவி…. ஹா ஹா என் அறிவுக் கொழுந்தே….. நாங்களும் நல்லாவே ஸ்விம் பண்ணுவோம்… தாரகன் ரொம்ப ரொம்ப வேகமா நீந்துவான்….” 


“நான் ஆழத்துக்கு போக போறேனே…..” என அவள் துள்ளிக் குதித்து தன் வால் தெரிய அழகாக நீந்திச் செல்ல அவளது அங்கங்கள் ஆடை விலகி வெளிப்பட தனாவின் மனதோ அழகான மனைவி மீது மெல்ல சாய ஆரம்பித்தது.


தன்னை மீறி அவளுக்கு ஏதாவது அநியாயம் செய்து விடுவோமோ எனப் பயந்தவன் அந்த இடத்தை விட்டே செல்ல முயன்றான். 


“சுதி நான் போறேன்டி…. நீ ஆறுதலா என்ஜாய் பண்ணிட்டு வா…….”


“அச்சோ  என்னப்பா….. நான் தனியா இருக்கனுமே…  பயமா இருக்கும்….. ப்ளீஸ் என்கூடக் கொஞ்சம் உள்ளே வாங்களேன்…..”


‘ஏதோ ரூமுக்குள் வாங்க என்பதைப் போல தண்ணிக்குள் வாங்கன்னு கூப்பிடுறாளே…..’ என மனதினுள் நினைத்தவன் வெளியே “சரி வா…..” என அவள் கரம் பற்றி மூச்சடக்கி நீருக்குள் சென்றான்.


இருவரும் அந்த நீச்சல் குளத்தின் அடியாழம் தொட்டார்கள்… அவளது அழகிய வாலைப் பார்த்து வியந்தவன் அவளது இடையை அவள் எதிர்பாராத நேரம் பற்றி அவளது ஆடையை மெல்ல உயர்த்தி அவளது அழகான வாலைப் பார்த்தான். அவளோ கூச்சத்தில் நெளிய, அவனோ அவளது வாலைத் தன் இரு கரங்களால் ஆராய்ந்து வருட… அவனைத் தள்ளியவள் நீருக்கு மேலே வந்தாள்.



அவளின் பின்னே தனாவும் மேலே வந்து மூச்சை நன்றாக இழுத்து விட்டவன் “வாவ் வாவ் செம அழகுடி நீ……” என்றான்.



“அச்சோ…… போதுமே……” என்ற அவளது பேச்சு சிணுங்கலில் முடிந்தது. அவளை நெருங்கி விலகி இருந்த ஆடையை சரி செய்தவன்  அவள் நெற்றியில் முத்தம் இட்டான்….. அவளோ அதிர்ந்து “என்ன பண்றீங்க சனா???????” எனக் கேட்க, அவனோ அடுத்த முத்தத்தை அவளது கன்னத்தில் பதித்தான்….


“இப்போ நாம பண்றது தப்பு சனா…..” என்றவளை இழுத்து தன்னோடு அழுந்த அணைத்தவன் அவள் இதழ்களை நோக்கி முன்னேறினான்…. அந்த இதழ்களின் துடிப்பில் அவளது பயத்தை உணர்ந்தவன் தன் பெரு விரலால் அவளது உதட்டை வருடி எடுத்து அந்த விரலை தன் உதட்டில் ஒற்றி எடுத்தான்.



அவனது செய்கையில் அவளுக்கோ உடல் தகித்தது… இவ்வளவு அருகில் நெருங்கி முத்தமிட வந்து பின் உதட்டைக் கிள்ளியது அவளைப் பெரிதும் பாதிக்க நடுக்கத்துடன் அவன் மார்பிலே தஞ்சம் புகுந்தாள்…



“சாரி பேபி…. ஐ கான்ட் கன்ட்ரோல்….” என்றவன் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.



அங்கே இதழ் முத்தம் பரிமாறப் படவில்லை….. 

ஆனால் காதல் விதையின் துளிர் அங்கே ஆழமாகப் பரிமாறப் பட்டது….


இதழ் அமுதம் சுவைக்கப் படவில்லை…..
ஆனால் இரு இதயங்களும் அன்பின் சுவையை சுவைத்துக் கொண்டனர்…


அவனது செயலில் திகைத்து உடல் உதற தன் கரங்களுக்குள் கோழிக் குஞ்சு போல பதுங்கி இருப்வளைப் பார்த்தவன் “போதும் பேபி உள்ளே போகலாம் வா…” என்றான்.


“பேபி????? நானா??”

“ம்ம் உன்னை அப்படித்தான்டி அழைக்கத் தோணுது…..” என்றான்..

“சனா….”

“சொல்லு பேபி……”


“நான் இங்கே இருந்து போனால் என்னை மிஸ் பண்ணுவீங்களா???” அவளது குரல் அடைத்தது. அவளது கேள்விக்கு பதில் சொல்வதைத் தவிர்த்தவன் “அதை அந்த நேரத்துல பார்க்கலாம்… இப்போ நீ மேலே வா உள்ளே போவோம்…..” என அவளை அழைத்தான்.


“சனா எனக்கு இங்கே இருக்க பிடிச்சிருக்கு…. தண்ணீருக்குள்ளே போனால் பயம் கூட வரலை… நான் இன்னைக்கு நைட் இங்கேயே தூங்கவா????” 


.
அவளிடம் மறுத்துக் கூற முயன்றவன் பின் இருக்கட்டும் என்ற முடிவோடு “சரிடி டிராகுலா… என்ஜாய் குட் நைட்…..” என அவளிடம் விடை பெற்றுச் சென்றான். 

அறைக்குள் நுழைந்தவனுக்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது. ‘அவளை எனக்கு ஏன் ரொம்ப பிடிக்குது????? ஷீ இஸ் க்யூட்…..’ என நினைத்து புன்னகைத்தவன் படுக்கையில் படுத்து கண்களை மூடிக் கொண்டான்..  அந்த அறையில் அவள் இல்லாதது ஏதோ ஒன்றை பெரிதாக இழந்தது போல இருக்க அவனது தூக்கமோ தூரம் போனது…



ஒரு மணி நேரமாக தூக்கத்தை வர வைக்க போராடியவன் இறுதியில் அவளின்றி தூக்கமும் தன்னை நெருங்காது என்பதை உணர்ந்து கொண்டு அவளை அழைத்து வருவதற்காக மீண்டும் மாடி ஏறினான்.



ஒற்றை இரவே அவள் இன்றி தூங்காது தவித்தவன் அவள் முழுமையாகப் பிரிந்து விலகி சென்றால் என் செய்வான்????? 



காதல் வரமோ சாபமோ இல்லை..
அது ஓர் சுகவதை………


💙💜காதல் துளிரும்💜💙

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *