என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

1. என்னில் வந்துவிடு அசுரா

அது ஒரு அழகிய காலைநேரம்…இன்னும் சிறிது நேரத்தில் கதிர்கள் முழுதாக பூமியில் விழும் என்று சூரியனார் தம்பட்டம் அடித்து மேல் எழும்பும் வேளை…  

அணிந்திருந்த டீஷிர்ட்  வேர்வையில் நனைந்திருக்க கால்களில் ஷூ ஜெர்சி பேன்ட் மேல அவனின் உடல்கட்டை அப்படியே வெளிப்படுத்தும் ஒரு இறுக்கி பிடிக்கும் டீஷிர்ட் காதுகளில் ஈயர் ஃபோன் சகிதம் ஓடி கொண்டிருந்தான் ஒருவன் அந்த ட்ரெட்மில்லில்… 

மெல்லிய சீரான ஓட்டம்… நிதானமாக வேகம் எடுக்காமல் ஒரு வித தாளலயதுடன் அவனின் காதுகளில் இருக்கும் இயர்ஃபோனுக்குள் கேட்க்கும் இசைக்கு ஏற்ப…அவன் நாள் தவறாமல் செய்யும் காரியங்களில் இதுவும் ஒன்று…

அவன் வசிஷ்ட வேந்தன்… தற்போதைய வேந்தன் க்ரூப் ஆஃப் கம்பனீஸின் எம்.டி பதவியில் இருப்பவன்…அவனுடைய இந்த ஓட்டம் அவனின் வேந்தன் ஸ்கொயரில்… அவனுக்காக அவனே பார்த்து பார்த்து அமைத்த ஜிம்… அவனின் வீட்டில்… வீடு என்று சொல்ல முடியாது… வேண்டுமானால் ஒரு லக்சரி அபார்ட்மெண்ட் என்று சொல்லலாம்…

வேந்தன் ஸ்கொயர்… அவனின் முக்கிய நிர்வாக நிறுவனம்… தலைமையகம் மற்றும் அவனின் ஜாகை எல்லாம் வேந்தன் ஸ்கொயரில்  தான்… அது ஒரு பத்து மாடி கட்டிடம்… கீழே பேஸ்மெண்ட் மற்றும் அதற்கும் கீழே அண்டர்கிரௌண்டில் ஒரு தளம் பார்க்கிங் வசதிக்காக… 

அதேபோல் ஒன்பது மற்றும் பத்தாம் தளத்தில் ஒரு ஹை டெக் வீட்டின் அமைப்பை தன் வசதிக்கேற்ப வடிவைமைத்து  அவனின் வாசஸ்தலமாகவும் கொண்டிருக்கிறான் நம் நாயகன்…

படிகளில் இறங்கி  வீட்டின் முகப்பை கடந்து பெட்ரூமில் நுழைந்து அணிந்திருந்த உடையை களைந்து குளியலறை சென்று ஷவரை திறந்து சில்லென்ற நீர் மேனியில் பட ரோமானிய சிற்பமாய் நின்றான் வசி… பெயருக்கேற்றார் போல வசீகரம் தான்… பின்னிருந்து பார்த்தால் செதுக்கிய பாறை போன்ற தேகம்… ஆனால் அவனின் நெஞ்சின் தின்னத்தை மீறி அதில் இருக்கும் தழும்புகள் சொல்லும் அவன் வாழ்வின் இருண்ட பக்கங்களை… தினமும் செய்யும் உடற்பயிற்சி ஓட்டம் என்று உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஓர் இருபத்து ஒன்பது வயது ஆண் மகன்…

உடல் மட்டும் செதுக்கிய அமைப்பில் இல்லை… அவனையும் அவன் தான் செதுக்கி கொண்டான்… தன்னுடைய வாழ்க்கை முறை இப்படி தான் என்று வழிவகுத்து அதன்படி தான் இன்றுவரையும் ஒரே நேர்கோட்டில் வாழ்ந்தும் வருகிறான்… தன்னுடைய செயல்களுக்கு தான் மட்டுமே பொறுப்பு… யாரையும் எவரையும்  இவரால் தான் எனும்படி வராமல் தான் செய்யும் நன்மையும் தீமையும் தன்னுடைய வழியிலேயே அடக்கி ஆளும் வல்லமைபெற்றவன்… எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாத கல் போன்ற முகம்… அவனின் எண்ணங்களின் ஊர்வலம் அவன் மட்டுமே அறிந்த ரகசியம்…

அவன் குளித்து வருவதற்காகவே காத்திருந்தது போல அவனுக்கு உடை தேர்வு செய்ய ஒருவர் அருகில் நின்றிருந்தார்… அவனின் வார்ட்ரோபை திறந்து அவனுக்கு தேவையான உடைகளை அவனின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து வெளியேற… 

அந்த உடையில் மிக கம்பீரமாக தயாராகி வெளியில் வந்தான் வசிஷ்ட வேந்தன்…

இன்று ஒரு முக்கியமான நேர்காணல்… எந்த ஒரு மீடியா சம்மந்தப்பட்ட நபரும் அல்ல வருவது… இப்படியான நேர்காணல் தருவது எல்லாம் மிக மிக அரிது அவனுக்கு…

ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவனித்தின் முக்கிய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வர ஒப்புக்கொண்டுள்ளான்… அதுவும் அந்த கல்லூரியின் தாளாளர் இந்த சிறு வயதில் இத்தனை பெரிய பதவியில் அதுவும் அவர்களின் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும்  மிகவும் சிறப்பாக நடத்தி வரும் அவன் அவர்களின் மாணவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்வதாகவும் அதன்படி ஒரு சிறப்பு உரை ஆற்ற வருமாறும் கேட்டு கொண்டதின் அடிப்படையிலேயே இந்த நேர்காணல்… 

இதே நேர்காணலுக்காக ஒருத்தி மிகவும் பரபரப்பாக தயாராகி கொண்டிருந்தாள் அவளின் ஹாஸ்டல் ரூமில்… அது ஒரு பிரைவேட் ஹாஸ்டல்… சகல வசதிகளும் கொண்டது சகல சுதந்திரமும் கூட… அதன் தோற்றத்தை பார்த்தால் இது ஹோட்டலா இல்லை ஹாஸ்டலா என்கிற சந்தேகம் வரும்… வெறும் படுக்கை மட்டும் கொண்ட அறைகளும் இருக்கும்… ஒரு ஹால் போன்ற அமைப்புடன் கூடிய படுக்கை அறையும் இருக்கும்… அவரவர்கள் வசதி பொறுத்து எது வேண்டுமோ அதை தேர்வு செய்யலாம்… 

அப்படியான ஒரு அறையில்… கண்ணாடி முன் நின்று தன் தலைமுடியை கோதி கொண்டு தன் உடையை ஒரு முறை சரி பார்த்துக்கொண்டாள்… நல்ல தரமான ஒரு காட்டன் குர்த்தா உயர்ரக ஜீன் கழுத்தில் ஒரு மெல்லிய சங்கிலி தலைமுடியை ஒன்றாக கோர்த்து ஒரு பேண்டில் போனி டெய்லாக முகத்திற்கு கொஞ்சமாக கிரீம் மற்றும் லிப்க்ளாஸ்… நெற்றியில் ஒரு மெரூன் வட்ட பொட்டு… அதன் மேல் மெல்லிய கீற்றாக விபூதி…   தன் தோற்றத்தில் திருப்தியாகி… 

 ரூமில் இருந்து வெளி வந்தவளை ஹாலின் கவுச்சில் படுத்தபடியே சோர்வாக எதிர்கொண்டாள் நேஹா… “என்ன அனு ரெடியா… என்ன பா இது… இன்னைக்கும் குர்த்தா தானா… நீ எங்கே போக போற தெரியுமா… வேந்தன் ஸ்கொயர்க்கு மிஸ்டர் வசிஷ்ட வேந்தனை இன்டெர்வியூ பண்ண… ஒரு ஷீத் ட்ரெஸ் இல்லேன்னா ஒரு பென்சில் சூட் இப்படி ஏதாவது போட்டிருக்கலாம்ல”

“சோ வாட் நேஹா… நீயே சொல்லிட்ட அவரை இன்டெர்வியூ தான் பண்ண போறேன்னு… அதுக்கு இந்த ட்ரெஸ் போதும்…”

“உன்னை என்ன டிஸைன்னே என்னால புரிஞ்சிக்க முடியலடி அனு… உன் நெத்தியில இருக்க விபூதிக்கும் உன் ட்ரெஸ்ஸுக்கும் எப்படி தான் கனெக்ட் பண்ணாலும் நீ செட் ஆக மாட்டேங்குற… ஆனா உன்னை கேட்டா எனக்குன்னு ஒரு எதிக்ஸ் இருக்கு அப்படி தான் இருப்பேன்னு சொல்ற…வெள்ளிக்கிழமை கோவிலும் போற… சனிக்கிழமை  பார்ட்டி பண்ண கூப்பிட்டா கூடவும் வர…”

தோழி சொல்வதை காதில் கேட்டு முகமதில் புன்னகையை தேக்கி கொண்டே அவள் செல்ல போகும் இடத்துக்கு தேவையான பொருட்களை கைகள் சேகரித்து கொண்டே இருந்தது… “எனக்கு சாமி நம்பிக்கையும் இருக்கு… அதே மாதிரி என்னோட இந்த வயசுக்கான ஆசையும் இருக்கு… என் மனசுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்றேன்… அதனால் என்னை பத்தி யோசிக்கிறத விடு…”

” உன்ன…” பல்லை கடிக்க மட்டும் தான் முடிந்தது நேஹாவால்… “சரி… எல்லாம் கரெக்ட்டா எடுத்து வச்சுகிட்டியா…” 

“ஹூம்… எடுத்தாச்சு… மிஸ்டர் வசிக்காக ப்ரீபேர் பண்ண கொஷீனேர் ரெக்கார்டர் என்னோட மொபைல் அப்புறம் கார் கீ அவ்ளோ தானே… அப்புறம் என்னோட வாலட்  அதுவும் இருக்கு” என்று அவள் அணிந்திருந்த ஜீன் பாக்கெட்டில் இருந்து எடுத்து காட்டினாள்…

“ம்ம் ஓகே ஓகே… பத்திரமா போய்ட்டு வா…”

“நான் பத்திரமா போய்ட்டு வரது இருக்கட்டும்… நீ ஒழுங்கா பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டு மாத்திரை போட்டு ரெஸ்ட் எடு சரியா… பை…” என்று சொல்லி கீழே பார்க்கிங் வந்து கார் எடுத்து புறப்பட்டாள் வேந்தன் ஸ்கொயர் நோக்கி…

அனு கிளம்பும் வரை சோகை போல் படுத்து இருந்தவள்… அவள் கிளம்பிய நொடி இவளும் சுறுசுறுப்பாக கிளம்பி அட்டகாசமான ஒரு வெஸ்டர்ன் வேர் அணிந்து ஃபுல் மேக்ப்பில் கிளம்பிவிட்டாள் தன் பாய் ஃபிரெண்டுடன் டேட்டிங்கிற்காக… பின்னே இத்தனை நாள் வெறும் நண்பனாக மட்டும் இருந்தவன் இப்பொழுது அதில் ஒரு படி மேல் ஏறி இருப்பதாக கூறியிருக்கிறானே…

வேந்தன் ஸ்கொயரின் நுழைவாயிலில் காரில் இருந்தபடியே ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள் அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டத்தை… எத்தனையோ முறை பார்த்தது தான்… ஆனால் வெளியில் இருந்து மட்டுமே… இன்று தான் அதன் உள் செல்லவிருக்கிறாள்…மெல்லிய பதட்டம் வந்து ஒட்டி கொண்டது…

அங்கே நண்பியிடம் என்னவோ கெத்தாக பேசி வந்தாயிற்று… ஆனாலும் உள்ளுக்குள் ஒரு பயப்பந்து சுழல தான் செய்கிறது…

காரை பார்க்கிங்கில் விட்டு நேராக வரவேற்பில் இருக்கும் நபரை அணுகி அவளின் ஐடி காட்ட… இது ஏற்கனவே பிளான் செய்தபடியால் அவளை நேராக ஏழாம் தளம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது…

ஃலிப்டில் ஏழாம் தளம் வந்து இறங்க அந்த தளம் முழுக்க மரத்தினால் இழைத்து செதுக்கி இருந்தார்கள்… எங்குமே கண்ணாடி கதவுகளை காண முடியவில்லை… ஆனாலும் அவ்வளவு பளபளப்பாக மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்தது… 

அங்கும் ஒரு ரிசெப்ஷன் போல ஒரு டேபிள் இருக்க அவர்களை அணுகுவதற்குள்… ஒரு அறையில் இருந்து பென்சில் ஸ்கிர்ட் மற்றும் பெண்கள் அணியும் கோட்  கால்களில் பாய்ன்டெட் ஹீல் பளபள கட்ஷூவும் தூக்கி போட்ட கொண்டையுமாக ஒரு பெண் வந்து அனுவை நோக்கி அவளின் கல்லூரியின் பெயர் கேட்டு உறுதிப்படுத்தி இவளை அழைத்து சென்று

“வாங்க இந்த பக்கம் தான்… எம்.டி. ரெடியா இருக்கார் உங்களை மீட் பண்ண என்று   கதவை திறந்துவிட்டு இவள் உள் நுழையவும் கதவை சார்த்தி கொண்டு சென்றுவிட்டாள் அந்த பெண்…

முதல் அடி வசியின் ரூமில் எடுத்து வைக்கும் போதே கால் இடறி விழுந்துவிட்டாள் நம் நாயகி… 

கண்ணடியே சுவர்களாய் இருக்க அதன் வழி நகரத்தை பார்த்து கொண்டு நின்றிருந்தவன் இவள் விழுந்த சத்தம் கேட்டு திரும்பி பார்த்து அவளுக்கு உதவ முன் வந்து அவளின் அருகில் வந்தான்… 

கால் நன்றாகவே மடங்கி கொள்ள சட்டென்று அனுவாலும் எழ முடியவில்லை… விழுந்த வேகத்தில் அவள் மடக்கி வைத்திருந்த கொஷினெரில் இருந்த பென் எங்கு சென்று விழுந்ததோ…

அவளின் அருகில் வரும் போதே வசிஷ்ட வேந்தன் என்ற மனிதனின் முழு உருவம் கண்ணில்பட பார்த்து ஒரு நிமிடம் பிரமித்து தான் போனாள்… அப்படி ஒரு வசீகரிக்கும் தோற்றம்… அதுவும் கொஞ்சமும் சதைபிடிப்பிலாத உடலில் அவனுக்கு ஏற்றார் போல் இருக்கும் ஃபுல் சூட்டில் ஜெல் வைத்து படிய வாரிய தலையில் எதிலுமே ஒரு நேர்த்தி இருந்தது… 

இவளின் அருகில் வந்து கை கொடுத்து எழுப்பும் முன்னர் தானாகவே எழுந்து விட்டாள்… “வாங்க மிஸ். நேஹா மல்ஹோத்ரா… நான் வசிஷ்ட வேந்தன்” என்று கை கொடுத்து அறிமுகம் செய்து கொள்ள…

“சாரி… நான் அனன்யா சுந்தரமணியம்… நேஹா அவளால வர முடியல… ஷீ இஸ் சிக்…”

“ஒஹ்…  இட்ஸ் ஓகே… சோ நீங்களும் ஜர்னலிசம் தானா…”

“இல்ல நான் லிட்டரேச்சர்… நான் அவளோட ரூம் மேட்…”

“ஓகே மிஸ். அனன்யா சுந்தரமணியம்… வாங்க உட்கார்ந்து பேசலாம்” என்று அவளை அழைத்து உட்கார சொல்லி தானும் தன்னுடைய சீட்டில் சென்று அமர்ந்தான்…

“அனன்யா போதும்…” அவள் கூற

புரிந்து கொண்டதாக ஒரு தலை ஆட்டல் அவ்வளவே…

அவள் ரெகார்டெரை ஆன் செய்து தயாராக அப்பொழுதே கவனித்தாள் மடக்கி இருந்த பேப்பரில் இருந்த பென்னை காணவில்லையென்று… 

 அவனின் ஆஃபீஸ் டேபிளை பார்க்க… அப்படி ஒரு சுத்தம்… அப்படி ஒரு நேர்த்தி… அவனின் லேப்டாப் கோப்புகள் பென் ஸ்டான்ட் ஒரு பூ வாஸ் சில முக்கியமான பேப்பர்களாக இருக்க வேண்டும்… அதுவும் அழகாக அடுக்கி அதனுடன் ஒரு நோட்பேட்… பென்சில்கள் கூட சீவி தயாராக இருந்தது… 

அவளின் பார்வையை புரிந்து எழுந்து வந்து அவளுக்கு ஒரு பென்சிலை கொடுக்க…

நன்றி சொல்லி பெற்று கொண்டு…

“ம்ம்ம் ஓகே ஆரம்பிக்கலாமா” என்று கேட்க… 

“ஷியூர்” என்றான்…

“எந்த ஒரு தனிப்பட்ட பேட்டிக்கும் இது வரை நீங்க ஒத்துகிட்டது இல்ல… இப்போ மட்டும் ஏன்… அதுவும் ஒரு காலேஜ் மகசின்க்கு????”

“இந்த வருஷம் உங்க காலேஜ்க்கு வந்து நான் உங்களுக்கு அட்ரஸ் பண்ண போறேன்… அதனால என்னை பத்தி நீங்க தெரிஞ்சிக்கணும்னு தான் இந்த இன்டெர்வியூ…”

“எப்படி நீங்க இவ்ளோ சின்ன வயசுல இப்படி ஒரு போஸ்ட் அதுவும் இவ்வளவு திறமையா ஹாண்டல் பண்றீங்க???”

“நான் எப்பவும் மனுஷங்களோட தனி திறமையை தான் பார்ப்பேன்… அதை கன்சிடெர் பண்ணி தான் இங்கே இருக்கவங்க வேலை பார்க்குறாங்க… யார் யார் கிட்ட என்ன திறமை இருக்கோ அதை நான் எனக்கு எப்படி வேணுமோ அப்படி யூஸ் பண்ணிக்கிறேன்… அது கூட காரணமா இருக்கலாம்…”

“எந்த பேசிஸ்ன்னு தெரிஞ்சுக்கலாமா…”

“ம்ம்ம்… பிஸ்னெஸ் அப்படின்னா எல்லோராட கூட்டு முயற்சி தான்… அவங்களை நல்லா ஊக்கப்படுத்தி அவங்களுக்கு ஏத்த மாதிரி சலுகைகள் கொடுத்து அவங்க கிட்ட இருந்து என் வேலையை நான் வாங்கிக்கிறேன்…”

“உங்களை சுத்தி நல்ல மக்கள் ஐ மீன் ஒர்க்கர்ஸ் அமைஞ்சுருக்காங்க… அது உங்க அதிர்ஷ்டம்னு சொல்லலாம் தானே…”

“அதிர்ஷ்டம்… லக்…” இதழின் ஓரம் மெல்லிய வளைவு… “இதை நான் கன்சிடெர் பண்றதே இல்ல மிஸ். அனன்யா… கடுமையா உழைக்கணும்… கூட உழைக்கரவங்களுக்கு நல்ல மோட்டிவேஷன் அப்புறம் இன்சென்டிவ்ஸ் இந்த மாதிரி கொடுத்தாலே ஒரு நிறுவனத்தை நல்லா நடத்த முடியும்னு தோணுது…”

“அப்போ எல்லாமே உங்களோட கண்ட்ரோலுக்குள்ள தான் வச்சுறுக்கீங்க இல்லையா…” 

“எஸ்.. அஃப்கோர்ஸ்…”

“உங்களோட முதன்மையான தொழில் சாஃப்ட்வேர் தானே… இப்போ விவசாயத்திலயும் பால் உற்பத்திலேயும் உங்களுடைய இன்வெஸ்ட்மெண்ட்ஸ் இருக்கு… அதை பத்தி சொல்லுங்க…”

“பால்… மிக முக்கியமான அத்தியாவசிய தேவைகளில் ஒன்னு… அதனுடைய தேவை நாளுக்கு நாள் அதிகரிக்குது… அதே போல தான் உணவும்…”

“எதற்கு தேவை அதிகரிக்குதோ அதனில் முதலீடு செய்வது நல்ல லாபம் கொடுக்கும்… அதனால தான் இப்போ அந்த ஃபீல்ட்ல இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம்…”

அவனின் பதிலில் என்ன மனிதன் இவன்… எதிலுமே வியாபார நோக்கோடு மட்டும் தான் அவன் கண்கள் பார்க்குமா… அவளின் எண்ணத்தின் ஓட்டத்தில்…

“என்ன அப்படி பார்க்குறீங்க மிஸ். அனன்யா… நான் சொல்றது சரி தானே…”

“இல்ல… சாரி… எனக்கு இதை பத்தி அவ்ளோ ஐடியா கிடையாது…”

“பட் ஒன்னு சொல்வேன்… இவ்ளோ குறுகிய மனப்பான்மை இருக்க வேண்டாம்னு…”

ம்ம்ம்… அவளை நோக்கி மெச்சும் பார்வை ஒன்றை வீசி விட்டு… “ஆனா ஒரு சிலர் எனக்கு மனசே இல்லைன்னு சொல்லியிருக்காங்க… அவங்களோட காம்ப்ளிமெண்ட் கம்பேர் பண்ணும் போது உங்களது ஓக்கேன்னு தான் தோணுது…”

“ஏன் அப்படி…”

“அது அவங்கவங்க பார்வையை பொருத்து… அடுத்து போகலாமா….”

“உங்களுக்கு பிஸ்னெஸ் தவிர வேற என்ன இன்டெர்ஸ்ட்…”

“ஐ யூஸ் டூ ஃபிளை…”

அவள் புரியாமல் பார்க்க…

“நான் பைலட் லைசென்ஸ் வாங்கியிருக்கேன்… சோ எனக்கு பறக்க பிடிக்கும்… என்னோட ஃபிலைட்ல…”

“இன்னும் நீங்க ஒரு எளிஜிபிள் பாச்லர்… எப்போ உங்க கல்யாணம்… அப்புறம் உங்களோட ஆறாவது வயசுல தத்தெடுத்து வளர்த்துருக்காங்க… அதை பத்தி சொல்லலாமே…”

“நோ பெர்சனல் ப்ளீஸ்…”

தொண்டை செருமி… சாரி என்று சொல்லி அவள் அடுத்து இருக்கும் கேள்வியை அப்படியே கேட்டுவிட்டாள்… ஆம்… கொஞ்சம் விவகராமன கேள்வி… ஒரு ஆண் மகனிடம் கேட்க கூடாத கேள்வி…

“நீங்க ஒரு கே வா?????”

அவளின் கேள்வியில் வசி நெற்றியை சுருக்க…

அப்பொழுதே அவளின் கேள்வியின் சாராம்சம் அவளுக்கு புரிந்து பதட்டம் தொற்றி கொண்டது… நேஹா கொரங்கே…  என்ன பண்ணி வச்சிருக்க… இப்படி ஒரு கேள்வியா… ஒற்றையின சேர்க்கையாளனான்னு…

கடைசி கேள்வி கேட்க்கும் பொழுதே அவனின் சீட்டில் இருந்து எழுந்து வந்து இவள் அமர்ந்திருக்கும் பக்கம் டேபிளில் சாய்ந்த வாக்கில் நின்று விட்டான்…

“ஐ ஆம்… ஐ ஆம்…” பதட்டத்துடன் தடுமாற்றமும் சேர்ந்து கொள்ள வாயில் இருந்து வார்த்தைகள் வராமல் தொண்டைக்குள் சிக்கி கொண்டது…  “சாரி மிஸ்டர் வசி… இதுல என்ன இருந்ததோ அதை அப்படியே படிச்சிட்டேன்… நேஹா இப்படி தான் கொஞ்சம்…”

“சேட்டை… வம்பு… பண்ணுவங்களா…”

“அதுவும் தான்… அவளுக்கு கொஞ்சம் கியூரியாசிட்டி அதிகம்…”

“இல்ல…  மிஸ். அனன்யா… நீங்க கேட்ட கேள்விக்கு பதில்… இல்ல…”

” ஐ ஆம் நாட் அ கே… டூ யூ க்ளீயர்…”

 ஆமாம் என்று தலைஆட்டுவதை தவிர வேறு வழியில்லை… ஆனால் இப்படி ஒரு சர்ச்சைக்குரிய கேள்விக்கு எந்த ஒரு பதட்டமோ கோபமோ ஏன் வேறு ஏதோ ஒர் உணர்வு கூட முகத்தில் தெரியாமல் இப்படி கல் போல இருக்க முடியுமா… இவன் பயங்கரமானவன் அனன்யா… இனி இங்கிருப்பது சரியில்லை… சென்று விடலாம் என்று மூளை அறிவுறுத்த… அவனிடம் விடை பெறும் நோக்கோடு அவனிடம் நன்றி தெரிவித்து கிளம்புவதாக சொல்ல…

“உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட கேள்விகள் இருக்கா அனன்யா என்னை பத்தி…”

அவள் புரியாமல் முழிக்க… அவனின் கேள்வியை திரும்பி அழுத்தமாக கேட்டான்…

“ஏதோ ஒர் உந்துதல்… அவளை மீறி வார்த்தைகளை விட்டாள்… நீங்க சொன்னீங்க தானே… இந்த மாதிரி சில பேர் என்னை ஜட்ஜ் பண்ணியிருக்காங்கன்னு… அது எனக்கு என்னவோ பொய்ன்னு தோணுது…” 

இவள் சொல்லி முடிக்கவும் அவனின் ரூமின் கதவு திறக்கவும் சரியாக இருக்க இருவரின் பார்வையும் வாசலில் விழ… அங்கு இவளை அழைத்து வந்த பெண்… “சர், இட்ஸ் டைம் ஃபார் தி நெக்ஸ்ட் மீட்டிங்” என்று சொல்ல… “கான்செல் இட்… வீ டிடன்ட் யெட் ஃபினிஷ்ட்…” இவன் கூற்றை வேதவாக்காய் எடுத்து “எஸ் சர்” என்று கதவை மூடி விலகி சென்றாள் அப்பெண்…

“என்ன அவசரம் மிஸ். அனன்யா… இவ்ளோ நேரம் என்னை கேள்வி கேட்டீங்க… இப்போ நீங்க உங்களை பத்தி சொல்லலாமே…” என்று பேசிக்கொண்டே வாகாய் அவளுக்கு எதிரில் இருக்கும் சோஃபாவில் நிதானமாக கால் மேல் கால் போட்டு அமர…

அனன்யாவிற்க்கு தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை… சட்டென்று இப்படி கேட்கவும் அவளுக்கு ஏதோ சூழ்நிலை இறுக்கமாக தோன்ற… அவள் கையில் இருந்த பென்சில் பாடாய் பட்டது… உள்ளத்தின் தவிப்பை வெளியில் காட்டாமல் இருக்க  உதட்டை மடித்து கடித்து போராடினாள்… 

அவளின் ஒவ்வொரு அசைவையும் அவனின் லேசர் பார்வை வட்டமிட அவள் உதடு கடிக்கும் போது இங்கு அவன் சோஃபாவின் பிடியில் இருந்து கைகளில் அழுத்தம் கூட்டினான்… ஏதோ ஒரு வகையில் தன் முன் இருக்கும் பெண் அவன் மூளையில் சட்டமாக அமர்ந்து கொண்டாள்… அவன் சொன்னது போல மனம் என்ற ஒன்று இருந்தால் தானே மனதோடு சம்மந்தப்படுத்த…

“என்னை பத்தி சொல்ல அவ்ளோ ஒன்னும் ஸ்பெஷல் இல்ல மிஸ்டர். வசி… என்னோட வேலை முடிஞ்சுது நான் கிளம்பறேன்…” என்று நறுக்கு தெரித்தாற்போல போல் சொல்லி விட்டு விடைபெற…

இந்த தவிர்தலில் கூட அவள் ஈர்த்தாள் அவனை… அவளுடன் கூடவே வந்து லிப்டின் வாயில் வரை வந்து வழி அனுப்பி வைத்தான்…

இருவர் பார்வைகளும் ஒன்றோடொன்று சிக்கிக்கொள்ள லிஃப்டின் கதவு மூடும் வரையிலும் இருவரும் விலக்கி கொள்ளவில்லை அவர்களின் பார்வைகளை…

வாயில் தானாகவே வந்தது அவள் பெயர்… அனன்யா சுகித்துப்பார்த்தான்… அவளை சுகிக்கும் நாள் என்று வருமோ என்று…

சுகிக்க நினைப்பவள் ஸ்வாசமூச்சாய் மாறுவாள் என்று புரியும் நாள் எந்நாளோ…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *