என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

என்னில் வந்துவிடு அசுரா

4. என்னில் வந்துவிடு அசுரா

போட்டோ ஷூட் சிறப்பாகவே நடைபெற்று கொண்டிருந்தது… ஆனால் அது வேந்தன் ஸ்கொயரில் இல்லாமல் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில்… இந்த முறை தலையை சுற்றி மூக்கை தொடாமல் செய்தி,  நேராகவே இவர்களுக்கே இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அனுவிற்கு தான் வந்திருந்து போட்டோ ஷூட் நடை பெறும் இடம் பற்றி…அதன் படியே அஜய்க்கும் சொல்லியாயிற்று… 

கதையின் களம் நடக்கும் இடத்தை இன்னும் தெளிவு படுத்த வில்லையோ… மன்னித்து விடுங்கள்… நம் தலைநகரில் தான்… புதுதில்லியில்… 

ஏழைகளின் வாசம் மட்டும் அல்ல, நடுத்தர வர்க்கத்தினரோ இன்னும் கொஞ்சம் மேல் மட்ட நடுத்தரவகுப்பினரோ எண்ணி கூட பார்க்க முடியாத ஒரு சொர்கலோகம் தான் இப்பொழுது வசி குறிப்பிட்டிருக்கும் இடம்… அங்கு அவனுக்கென்று தனி சூட்டே இருக்கின்றது… சில நேரங்களில் சில காரியங்களுக்காக… அவனின் சொந்தமான வேந்தன் ஸ்கொயரில் நடத்த முடியாத காரியங்களுக்காக… அதுவும் மிகவும் நம்பகமான இடமாக வேண்டும் என்றே… 

ஷூட் நடக்கும் இடத்தில் அனு நேஹா மற்றும் அஜய் வந்திருக்க வசி மற்றும் அவனின் இரு மெய்காப்பாளர்கள் மட்டுமே… 

நேஹாவிற்கு காலையிலேயே அவளின் தீப்புவிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது… ‘அண்ணா கூட பேசியாச்சு… காலைல டென் ஆர் டென் திர்ட்டிக்குள்ள முடியும்னு சொன்னாங்க பேபி… சோ அதுக்கப்புறம் என் பேபியோட அந்த டே எனக்கு மட்டும் தான்… இஸ் இட் க்ளீயர்…’ என்று… பார்த்தவுடன் சந்தோஷ ஊற்று பொங்கிற்று மங்கையவளுக்கு… பின்னே இருக்காதா… தன்னை உயிராக விரும்பும் துணை கிடைத்தால் வானத்தை வசப்படுத்திய உணர்வு வருவது இயற்கை தானே… 

அதை சொல்லவும் செய்து விட்டாள் அனுவிடம்… அன்று ஒரு நாள் அவளிடம் சொல்லாமல் சென்று வாங்கி கட்டியது இன்னும் பசுமையாக இருக்கிறதே… 

அனுவும் இதையெல்லாம் பெரிதாக எடுக்கும் ரகம் அல்ல… அவளும் தான் பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்ட படியால் ஷூட் முடியும் தருவாயில் இருக்க தீப்புவிற்கு மெசேஜ் செய்து விட்டாள்… பெண்கள் அவர்களுக்குள் சலசலத்து கொண்டிருந்தாலும் இங்கேயும் ஒரு கண் வைத்திருந்தனர்… 

“சர், இதுவரை எடுத்த போட்டோஸ்ல உங்க ஆட்டிடியூட் நல்லா வந்துருக்கு… இனி கொஞ்சம் ஸ்மைலிங் லுக் இருக்கிற ஸ்னாப்ஸ் எடுக்கலாம்… கொஞ்சம் சிரிச்ச மாதிரி போஸ் கொடுங்க…” என்று அஜய் எவ்வளவோ சொல்ல வசியோ ம்ஹூம்… கொஞ்சமும் அசைந்தானில்லை… “இட்ஸ் எனஃப் கைஸ்… இதுவே போதும்னு நினைக்கிறேன்…” அவனின் கூற்றில் இத்துடன் முடித்து கொள்ளுங்கள் எனும் செய்தி மறைத்திருந்ததை அனுவைத்தவிர மற்றவர்களால் புரியமுடியவில்லை போல… 

அஜய் விடுவேனா என்று வசியை சிரித்த மாதிரி இல்லாவிடினும் லேசாக உதடு வளைவுடனாவது எடுக்க வேண்டும் என்ற நோக்கம் கடைசியாக வசி சொன்ன வார்த்தையில் புஸ் என்று ஆக… ஒரு புகைப்படக்கலைஞனாய் சிறு ஏமாற்றம் மேலோங்க எப்படியாவது ஒரே ஒரு போட்டோவாவது எடுத்தே ஆக வேண்டும் என்ற சிறு பிடிவாதமும் தோன்ற… இறுதியில் அனு தான் நிலைமையை புரிந்து…

“இட்ஸ் எனஃப் அஜய்… இது போதும் நமக்கு… நம்ம கிளம்பலாம்… அவரோட டைம் நம்மால வேஸ்ட் ஆக வேண்டாம்” என்ற அவளின் கூற்றில் மட்டுமே சமாதானம் ஆக… இதுவரை வசியின் கவனம் போட்டோ ஷூட்டில் இருந்தாலும் பெரும்பான்மை நேரங்களில் அவளை மட்டுமே துளைத்த அவனின் விழிகள் இப்பொழுது அஜய் எனும் நபரை கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வைத்தது… 

இதனிடையில் நேஹாவும் சிட்டாக பறந்திருந்தாள் காதலனின் வருகையால்… அஜய்யோ மகுடிக்கு கட்டுப்படும் பாம்பு போல அனுவின் மொழியில் மட்டுமே கட்டுப்பட்டு தன்னுடைய பொருட்களை சேகரிக்க ஆரம்பித்தான் அங்கிருந்து புறப்படும் நோக்கில்… கிளம்பும் சமயம் வசியிடம் மரியாதை நிமித்தமாக விடை பெற்று அனுவை அவளின் கைபிடித்து சற்று தூரம் அழைத்து சென்று நாளை பார்ட்டிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று வலியுறுத்த… இருவரையும் சற்று நேரம் எந்த உணர்வும் இல்லாமல் துளைத்தது வசியின் கண்கள்… 

இந்த காட்சி வசியின் பார்வையில் அகப்படும் தூரத்தில் இருந்தாலும் அவர்களின் சொல்லாடல் எட்டவில்லை… ஆனால் அவனின் கத்தி முனை பார்வை அஜயின் கைகளில் கட்டுண்டு இருந்த அனுவின் கரங்களிலேயே பதிந்திருந்தது… அவள் கண்டிப்பாக வருவதாக உறுதி கூறி அவனின் பிடியில் இருந்து விலகினாள்…

எது உந்தியது என்று தெரியாமல் வசி அவர்களை நெருங்கிய நேரம்… 

அப்பொழுது அஜய் “கம் ஆன் அனு… நான் யூனிவேர்சிட்டி தான் போறேன்… ஐ’ல் ட்ராப் யூ” என்று கூற… 

சட்டென்று அனுவை அவளின் தோளில் கரம் பதித்து மென்மையாக தன் புறம் இழுத்தபடியே “இட்ஸ் ஓகே அஜய்… ஐ’ல் டேக் கேர் ஆஃப் அனா… யூ ப்ரோஸீட்” என்ற வார்த்தைகளும் அனுவின் தோள் மேல் பதிந்து இருந்த வசியின் கைகளும் அஜய்யின் நெஞ்சுக்குள் பூகம்பத்தை விளைவிக்க தவறவில்லை… 

இருந்தாலும் சமாளித்துக்கொண்டவன் அனுவிடம் விடைபெற்று சென்றான்… 

அஜய் விடை பெறுவதற்காக பொறுத்திருந்தாள், ஏனோ அஜய்யின் முன் வசியிடம் வீண் வாதம் புரிய மனம் இடம் கொடாமல் அமைதியாய் இருந்தவள்… இப்பொழுது வசியை பார்க்க… 

அவனோ எப்பவும் போல முகம் எந்த உணர்வும் இல்லாமலும் அவளின் விழியின் வீச்சை கவ்வி பிடிக்கும் லேசர் பார்வையோடும் மட்டுமே பார்திருந்தான்… ஆனால் கைகளோ இன்னும் அழுத்தமாக பதிந்திருந்தது அவளின் தோள் பட்டையில்… அவனின் முகத்தை விட்டு பார்வை இப்பொழுது அவனின் கைகளில் பட வசியோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்… “கம்  லெட்ஸ் ஹாவ் அ காஃபி அனா” என்று பிடித்த பிடி விடாமல் அழைத்து போனான்… 

அவனின் கையை உதறி விட்டு சண்டையிட்டு முறித்து கொண்டு செல்ல ஒரு நொடி ஆகாது… ஆனால் தேவையில்லாத கவன ஈர்ப்பை விரும்பவில்லை அவள்…

ஆனால் சூட்டிலிருந்து வெளியேறும் போது அவள் சொல்ல தேவையில்லாமல் வசியே விளக்கி கொண்டான்… விலகியும் நடந்தான் அவளின் கண்ணியம் காக்க… 

இதுவரை அழுத்தத்துடன் தோளில் பதிந்திருந்த கைகள் வெளியில் வந்ததும் விலக அவனை அவளால் சுத்தமாக புரியமுடியவில்லை… ‘டேய் நீ என்ன அந்நியனா ரெமோவா… இப்படி சட்டு சட்டுன்னு மாறிகிட்டே இருக்க… முடில டா உன் கூட… இது சரிவராது பேசிடுவோம்…’ என்று

அனுவும்  இன்றோடு முடிவு கட்டுவோம் இதற்கு என்று மறுப்பேதும் சொல்லாமல் உடன் நடந்தாள் செல்லும் அவனின் முதுகை பார்த்துக்கொண்டு… 

அந்த நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் காபி ஷாப்பிற்கு வந்து அமர்ந்தனர் இருவரும் எதிரெதிரே… 

சொல்லுங்க மிஸ்டர். வசி… என்ன வேணும் உங்களுக்கு… 

இப்பொழுதும் அவளின் கண்கள் இமை அதனில் இருக்கும் வளைந்த முடிகள் புருவம் அதன் மத்தியில் இருக்கும் பொட்டு  மேலே சிறிதாக இருக்கும் விபூதி கீற்று என்று பார்வை சற்று கீழிறங்கி அவளின் நாசியில் அதனில் மினுங்கும் கடுகளவே ஆன மூக்குத்தியில் உதட்டு வளைவில் இதழின் ரேகைகள் என்று மிச்சம் வைக்காமல் பருகி கொண்டிருந்தது அவன் விழிகள்… விழிகள் அவளை வெறித்து நோக்கியது போல தோன்றினாலும் ரசிக்கும் பாவம் வெளி தெரியாமல் ரசிக்கும் ரசிகனாய் வசி… 

“இவன் யாரு??” 

சட்டென்று அவனின் மொழி விளங்கவில்லை… 

“வாட்…” 

“தட் கேமரா கை?? உன் பாய் ஃபிரெண்டா…”

இதுவெல்லாம் எதற்கு இவனுக்கு என்று உள்ளுக்குள் தோன்றினாலும் வாய் தன்னால் பதில் சொல்லிவிட்டது… “நோ” 

“ம்ம்ம்… அந்த ஸ்டோர் கய்…” 

“யாரை கேட்குறீங்க…” அவனின் கேள்விகள் எரிச்சலூட்ட…  

“அன்னைக்கு மால்ல” என்று கேட்கவும் தான் இவளுக்கு அந்த அவனை பற்றிய ஞாபகமே வந்தது… 

“இப்போ உங்களுக்கு என்ன வேணும் மிஸ்டர். வசி… எனக்கு பாய் ஃபிரண்ட் யாராவது இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கனுமா…” 

“இதுவரை எனக்கு பாய் ஃபிரண்ட்ஸ் இல்ல… ஆனா நிறைய ஃபிரண்ட்ஸ் இருக்காங்க… அதுல பாய்சும் இருக்காங்க போதுமா… இன்னும் ஏதாவது வேணுமா…” 

அவளின் இந்த சிறு எரிச்சலுடன் கூடிய கோபமும் அவனை ரசிகனாக்கியது அவளுக்கு… நாசி விடைத்து அதன் நுனி சிவந்து படப்படவென பேசும் உதடுகள் எல்லாம் அவனுக்குள் தீ பற்ற வைத்தது… அந்த மிஸ்டர் வசி என்று சொல்லும் இதழ்கள் அவனுக்கு உணவானால் எனும் நினைவு நரம்புகளில் முறுக்கேற்ற இன்னும் பேச தூண்டினான் அவளை… 

“உங்க பேமிலி பத்தி சொல்லுங்க மிஸ் அனன்யா…” 

இருக்கும் கொஞ்சம் பொறுமையும் காற்றில் பறக்கும் போல இருந்தது அவளுக்கு… 

“அது எல்லாம் உங்களுக்கு எதுக்கு… உங்களுக்கு என்ன தான் வேணும்… என்ன ஃபிளர்ட் பண்றீங்களா… உங்களோட ஸ்டேட்டஸ் அண்ட் பொசிஷன்க்கு இது எல்லாம் நல்லா இல்ல மிஸ்டர் வசிஷ்ட வேந்தன்… ப்ளீஸ் லீவ் மீ…” என்று படப்பட பட்டாசாக பொரிந்து விட்டு அவள் எழ எத்தனிக்க…

எதிரில் இருந்த காபி கப்பின் விளிம்புகளில் விரல் மேய “அப்பா பேர் சுந்தரமணியம் விஸ்வநாதன்… ஈஸ்டர்ன் ரயில்வேஸ் ஜெனரல் மேனேஜர்…  அம்மா பேர் வைஷ்ணவி சுந்தரமணியம் தமிழ்நாடு சீஃப் செக்ரேட்டரி… அவங்களுக்கு ஒரே பொண்ணு…” என்று அவளின் முகம் நோக்கி “மிஸ் அனன்யா சுந்தரமணியம்…” என்று சொல்ல ஆரம்பித்து அவள் பிறப்பிடம் முதற்கொண்டு படித்த பள்ளி… அவளின் உயர்கல்வி மதிப்பெண் வரை சொல்லி முடித்தான் லேசான உதட்டு நெளிவுடன்… 

இவளின் குடும்ப வரலாறை சொல்ல ஆரம்பிக்கும் போதே அதிர்ந்து அமர்ந்தவள் அவனை இமைக்க கூட மறந்து பார்த்திருந்தாள்…  

‘எதுக்கு என்னை பத்தி இண்டு இடுக்கு விடாம விசாரிக்கணும்… அப்படி என்னை பத்தி தெரிஞ்சு இவன் என்ன தான் பண்ண போறான்… உள்ளுக்குள் சொல்ல முடியாத குறுகுறுப்பு தோன்றதான் செய்தது… என்னயா வேணும் உனக்கு…’ மனம் ஒரு பக்கம் கவுண்டர் கொடுத்து கொண்டிருந்தாலும்… 

“இவ்ளோ டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணியிருக்கீங்க…  வாவ் கிரேட்… இதெல்லாம் தெரிஞ்சு என்ன ஆக போகுது உங்களுக்கு… வெல்,  இதையும் தெரிஞ்சுக்கோங்க… அவங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ் பண்ணவங்க தான்… ஆனா அவங்களுக்கு லவ் விட அவங்க ப்ரொஃபஷன் தான் முக்கியமா இருந்துச்சு… என்னோட வாழ்க்கை இதுவரையிலும் ஹாஸ்டெலேயே தான்…” 

அவளின் வார்த்தைகள் ஏதோவொன்று தனக்கு பிடித்தமில்லாதது  வர போகிறதென்பது உறுதியாக தெரிய அப்பொழுதே உள்ளுக்குள் இவள் வேண்டாம் உனக்கு… விலகி விடு என்று கூப்பாடு போட ஆரம்பித்தது அறிவு… 

அவனின் எண்ணம் தெரியாமல் இவளும் தன் ஆசைகளை வார்த்தைளாய் வீசி கொண்டிருந்தாள்… ஏனென்று தெரியவில்லை… இதுவரை இது தான் தன் உள்மன ஆசையென்று யாரிடமும் பகிர தோன்றியதில்லை… ஆனால் இவனிடம் என்ன நேர்ந்தது என்று தெரியாமல் கொட்டி கொண்டிருந்தாள்… 

“ஆனா எனக்கு அப்படி ஒரு லைஃப் வேணாம்… லோட்ஸ் ஆஃப் லவ்வொட ஒரு பார்ட்னர் கிடைக்கணும்… அளவா சம்பாரிச்சு தேவைக்கு ஏத்த மாதிரி பிள்ளை குட்டியோட வாழனும்னு தான் என் ஆசை… அதுக்கு நீங்க சரி வர மாட்டீங்க… சோ இதோட என்னை விட்டுடுங்க…”  என்று அவள் சொல்லி கொண்டே இருக்க… 

ஓகே அனன்யா கிளம்பலாம்… என்று கூறி கிளம்பிவிட்டான் அவன்… இப்பொழுதும் அவனின் முதுகை தான் வெறிக்க முடிந்தது அவளால்…

‘இவனுக்கு என்ன கிருக்கா பிடிச்சுருக்கு இவ்ளோ நேரம் உன்னை பத்தி சொல்லு சொல்லுன்னு தொலைச்சு எடுத்தான்… இப்போ பேசிக்கிட்டே இருக்கும் போது கிளம்பலாம்னு சொல்றான்… இவ்ளோ பெரிய ஆள் பின்னாடி வர்ரதும் ஏதோ நல்லா தான் இருந்துச்சு… ஆனா அப்போ அப்போ இப்படி மூட் ஸ்விங் ஆகுரவன் கிட்ட குப்பை கொட்ட முடியாது…’ 

அவளுக்கு இன்னும் எரிச்சல் கூட உள்ளுக்குள் சரியான இம்சை என்று தான் தோன்றியது… 

அந்த ஹோட்டலின் பின்புற வாயில் வழியாக இருவரும் ஒவ்வொரு மனநிலையில் வெளியேற அந்த குறுகிய சாலையில் சட்டென்று ஒரு பைக் இவளை இடிப்பது போல வர… “அனா” என்ற கூவலுடன் இவளை இழுத்து அணைத்திருந்தான் வசி… 

அந்த அகல கைக்குள் புறா குஞ்சென சிறை பட்டிருந்தாள்… சிறை பட்டிருந்தாள் என்பதை விட ஏதோ பாதுகாப்பாக இருப்பது போன்ற மாயதோற்றம்… தன்னுடைய இடம் வந்து சேர்ந்த நிம்மதி… இவையெல்லாம் அவனின் கையணைவில் உணர்ந்தாள் பெண்… 

வசிக்கோ இதுவரை அறிவின் சொல்படி அவளை நீங்க வேண்டும் என்ற உறுதி அவளின் ஸ்பரிசத்தில் நெருக்கத்தில் தேகத்தின் உரசுதல்களில் காணாமல் போக… 

இடிக்க வந்த வாகனத்திடம் இருந்து தப்பித்த பாதிப்பில் மருண்ட விழிகளும்  துடித்துடிக்கும் இதழ்களும் படப்படப்பில் ஏறி இறங்கும் நெஞ்மும் என்று வசியை ஏறெடுத்து பார்க்க அவனும் அவளை தன் கை சிறையில் வைத்து பார்திருந்தான்… 

எது உந்தியதோ… அவளின் கன்னதின் ஸ்பரிசத்தை அவனின் கைகள் உணருமாறு முகம் தாங்கி ஒவ்வொரு பாகமாக வலம் வந்தது அவனின் விழிகள் அவளுக்கு ஈடான பதட்டத்துடன்… 

அவனின் ஸ்பரிசத்தில் சொல்ல முடியாத அவஸ்தை உள்ளுக்குள் நெளிய உதடுகள் இரண்டும் சங்கமிக்கும் நெருக்கத்தில் அவளின் உடல்  பெண்ணவளின் ஆணையின்றியே தலைவனின் கைகளில் குழைய என்னவோ ஒரு எதிர்பார்ப்பு நான்கு கண்களிலும்… எச்சில் கூட்டி விழுங்கினாள் வறண்ட தொண்டையை சரி செய்ய… 

கண்களின் மொழி வேறாக இருந்தாலும் உதிர்த்த சொற்கள்… “நான் வேண்டாம் உனக்கு… ஐம் நாட் தி மேன் ஃபார் யூ… ஸ்டே அவெ ஃபிரம் மீ… உனக்கான ஆள் நான் இல்ல…இனி என்னை நெருங்கி வராத… நீ போய்டு… என்னை விட்டு போய்டு… உன்னோட ஆசைய என்னால அழிக்க முடியும்னு தோணால… நிறைவேத்த முடியும்னு தோணால… நீ வேண்டாம் எனக்கு…” 

“இனி என்னை பார்க்க வேண்டாம்… என்னை விட்டு விலகி போய்டு… போ…” 

அவனின் வார்த்தைகள் அவளை சுடுநீராய் முகத்தில் அடித்து சுயம் திரும்ப வைக்க கண்மண் தெரியாத கோபம் தலைக்கேறியது அனுவிற்கு… 

‘என்னவோ இவனை தான் துரத்தி துரத்தி காதல் சொல்ல விரட்டுவது போல அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்… என்ன தான் இவன் நினைத்திருக்கிறான் மனதில்…’ 

“எனஃப்… போதும் போதும் நிறுத்துங்க வசி… நான் என்னவோ உங்க பின்னாடி வந்த மாதிரி பேசுறீங்க… குட் பை மிஸ்டர் வசி… இனி உங்களை பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறேன்…” என்று அவனை காய்ந்து விட்டு சென்று விட்டாள் பெண்… மொட்டாக மலரும் முன்னே கருகியது போன்ற எண்ணம் மேலோங்கத்தான் செய்தது… கண்ணிலும் நீர் துளிர்க்கும் போல் இருக்க முயன்று கட்டுப்படுத்தி அவ்விடம் விட்டு நீங்கினாள்… 

ஆனால் இந்த சொற்களை கேட்ட அவனுக்கு தான் உள்ளொன்று உடைந்தது போல இருந்தது… காதல்… குடும்பம்… இப்படியெல்லாம் வாழ்க்கை வாழ முடியுமா தன்னால்… என்னவென்று சொல்ல முடியாத சக்தி ஈர்க்கிறது அவள் பக்கம்… ஆனால் அவளின் ஆசைகள் கேட்ட பொழுது இதுவெல்லாம் தன்னால் ஒரு போதும் முடியாது… கனவிலும் நடக்க கூடிய ஒன்றல்ல… 

வேண்டாம் அவள் வேண்டாம் என்று அவனே அவனுக்கு கடிவாளம் இட்டு கொண்டான்… பூவிற்கு நிகரான பெண்ணை வதைக்க மனம் ஒப்பவில்லை… 

விடு… இதோடு அனா என்கிற அத்தியாயம் உன் வாழ்வில் வேண்டாம் என்று அவனுக்கு அவனே சமாதானம் சொல்லி… மீண்டு எழுந்தான் எப்பொழுதும் போல… வசிஷ்ட வேந்தனாய்… சிற்பமே தன்னை செதுக்கும் சிற்பியாய்… 

ரூமிற்கு வந்த அனுவிற்கு என்னவோ சக்தியெல்லாம் வடிந்தது போல இருந்தது… உள்ளினுள் பூத்த மெல்லிய சாரல் இசை மீட்டும் முன் மடிந்தே விட்டது… இருந்தாலும் தேறிக்கொண்டாள்… காலிங் பெல்லின் ஓசையில் கதவு திறந்து பார்க்க ஒரு கிஃப்ட் பார்சலுடன் அங்கு வேலை செய்யும் பெண்மணி நின்றிருந்தார்… 

“இந்தா பாப்பா இது உனக்கு வந்துச்சாம்… நம்ம மேடம் நீ வந்த உடனே கொடுக்க சொன்னாங்க…” என்று சொல்லி கொடுத்து செல்ல… 

கதவடைத்து வந்து அங்கிருந்த கவுச்சில் அமர்ந்து யாரிடம் இருந்து வந்தது என்று பார்த்தால் வசியிடம் இருந்து… 

‘இவன் என்னை விட மாட்டானா…’ என்று யோசித்திருக்கும் வேளையில் நேஹாவும் வந்து சேர்ந்தாள் ரூமிற்கு… 

“ஹே அனு டார்லிங்… என்ன கிப்ட் அது… யார் கிட்ட இருந்து வந்திருக்கு” என்று அவளும் ஆவலுடன் பார்க்க… அனுப்புனர் முகவரியில் ஆச்சர்யம் அடைந்தாள் அவள்… அதுவும் அனு சில மாதங்களாக தேடிய புத்தகங்கள்… அதுவும் முதல் எடிஷன்… மிகவும் விலை உயர்ந்தது… 

“ஹே இது நீ இப்போ கொஞ்ச காலமா தேடிக்கிட்டு இருந்த புக் கலெக்ஷன் தானே…” 

முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் ஆமாம் என்றாள்… 

“வாவ்… மிஸ்டர் வசி அனுப்பி இருக்கார் அனு…” 

“ம்ம்ம்… இது ஃபர்ஸ்ட்  எடிஷன்… ரொம்ப காஸ்ட்லி…” 

“சூப்பர் அனு… என்ன ஆச்சு அனு பேபி… சம்திங் சம்திங்…” என்று இழுத்து ராகம் போட்டு கேட்க… 

“உன் கற்பனை குதிரையை பறக்க விடாத… அதெல்லாம் எதுவும் இல்ல… புரியுதா… இதை எல்லாம் ரிட்டர்ன் போடணும் நாளைக்கு… 

இவ்ளோ பெரிய ஆளோட சங்காத்தமே வேணாம் நேஹா…” என்று கடுகடுக்க

“ஹே நீ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற… கூல் டா… இப்போ என்ன இந்த கிப்ட்ஸ் வேண்டாம் அவ்ளோ தானே… நாளைக்கு ரிட்டர்ன் போட்டுட்டா சிம்பிள் முடிஞ்சுபோச்சு… விடு இதுக்காக நீ ஏன் டென்ஷன் ஏத்திக்கிற…” 

என்று அவளை அமைதி படுத்தி விட்டு ஃபிரஷப் ஆக சென்றாள்… 

அனுவிற்கு எனோ இன்றைய சம்பவங்களை நேஹாவிடம் பகிர விருப்பம் இல்லை… தன்னுடனே போகட்டும்… யாருக்கும் தெரிவதிலும் விருப்பம் இல்லை… 

நேஹா வந்த பின் இவளும் ஃபிரஷப்  ஆகி இரவுணவு முடித்து உறங்க சென்றனர்… ஆனாலும் நேஹாவிற்கு ஏதோ உறுத்தியது அனுவின் மௌனம்… நேஹாவை போல கலகலப்பான பெண் இல்லை அனு… ஆனாலும் இந்த மௌனம்… 

அனுவாக சொல்லாத வரை அவளிடம் இருந்து ஒரு விஷயம் வாங்குவது என்பது இயலாத ஒன்று… எனவே அவளே தெளிவாள் என்று விட்டுவிட்டாள் நேஹா… 

மறுநாள் சந்தியா வேளையில் அஜய்யின் பார்ட்டிக்கு ரெடியாகி வந்த அனுவை பார்த்து தலையில் அடிக்காத குறையாக அவளிடம் எகிறி விட்டாள் நேஹா… 

“எப்பவும் என் கூட சும்மா துணைக்கு வருவ… கொஞ்சமா ஃபன் பண்ணுவ… பட் இன்னைக்கு அந்த மைதா மாவோட ஸ்பெஷல் கெஸ்ட் நீ தான்…” 

“நீ சொல்ற அந்த மைதா மாவுக்கு இது போதும் நேஹா…”

“அன்ன்ன்ன்னு…” என்று பல்லை கடித்தாள் நேஹா… 

“இப்போ ஒழுங்கா நான் சொல்றதை கேக்க போறியா இல்லையா…” என்று மிரட்டல் விட

“சரி ஓகே… என்ன பண்ணனும் சொல்லு” என்று மொத்தமாக சரணடைய… 

நேஹாவிற்குள் பரபரப்பு தொற்றி கொண்டது… விறுவிறுவென்று அனுவின் வார்டரோபை அலசி ஆராய்ந்து ஒரு அழகான டீ ஷிர்ட் மற்றும் ஒரு புத்தம் புது ஜெக்கிங்ஸ் எடுத்து போட சொல்ல மறுப்பு சொல்லாமல் போட்டு வந்தவளின் தோற்றம் நேஹாவையே மயங்க வைக்க “வாவ்” என்று வாய் பிளந்தாள்… மேலோடு ஒட்டியிருக்கும் டீ ஷிர்ட்டும் தோலோடு இன்னொரு தோலாய் இருந்த ஜெக்கிங்க்ஸும் அனுவின் அங்க லாவண்யங்களை அப்படியே எடுத்து காட்ட… 

“நேஹா திஸ் இஸ் டூ மச்… ஐ அம் கோன்னா(gonna) சேஞ் திஸ்…” கண்ணாடியில் இப்படியும் அப்படியுமாய் தன்னை திரும்பி பாரர்த்து… 

“ஹே நோ பேபி… வெய்ட்” என்று சொல்லி ஒரு லெதர் ஜாக்கெட்டை மேலுக்கு அணிவிக்க இப்பொழுது ஏதோ தேவலாம் போல இருந்தது… 

இப்படியே அனுவிடம் மல்லு கட்டி அவளை கிளப்பி விட்டு “டோன்ட் ஒர்ரி பேபி… நான் சீக்கிரம் உன் கூட வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்…” என்று அவளை வழியனுப்பி விட்டு நேஹாவும் தயாராகினாள் தீப்புவுடன் செல்ல அதே பார்ட்டி நடக்கும் பப்பிற்கு… 

நேற்று சம்பவத்திலிருந்து வெளி வந்து விட்டதாய் அனு நினைத்து கொண்டிருந்தாலும் அதன் பாதிப்பு இனி வாழ்நாள் முழுதும் தொடர போவதை அதையும் தானே அதுவும் இன்றே தொடக்கி வைக்க போவதை அறியாமல் அஜய்யின் பார்ட்டிக்கு சென்றாள் அனு… 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *