உள்ளம் கொள்ளை போனதடா
22
உள்ளம் கொள்ளை போனதடா…
மதியம் தானே காசுகொடுத்து சும்மா தயிர் சாதம் மட்டும் உண்ட நயனி…திரும்ப சாயங்காலம் பசி எடுக்க…ரொம்ப ஸ்னாக்ஸ் திண்ணு கெட்டு போய்ட்டேன் தானாய் புலம்பி… கேன்டீன் பாயிடம் சொல்லி
பிஸ்கட் வாங்கிக்கொண்டாள்…
சுசியிடன் விவரம் கேட்ட பின்பு..தானாய்…அந்த யூனிட் யை வலம் வர…அங்கங்கு ஒழுங்கின்மை…குப்பைகள் ..அடைசல்கள் சேர்க்கை…வேலை செய்யுமிடங்கள் அப்படி தான் இருக்கும்..தொடர்ந்து பொருள்கள் குவிக்கும் போது…செக்கிங் செஷன் உள்ளடங்கி மறைவாய் இருப்பது போல இருந்தது…அந்த பெண்கள் எந்நேரம் அவர்களுடைய சுபர்வைசரோடு அரட்டையில் ….ம்ம்ம்
இவள் சுற்றி பார்ப்பதை கூட கண்டு கொள்ளவில்லை.
ஐயன் ஆட்களுக்கு ..பீஸ் ரேட் தான் அதனால் போட்டி போட்டு வேலை நடக்கும்….யார் இன்று அதிகம் தேய்த்தது என்பதில்…அவர்கள் இடம் திருவின் கண் பார்வையில்…
பேக்கிங் எதிர் பக்கம்…அதிலுள்ள பசங்கள் விளையாட்டு தான்..கிண்டல் கேலி..செல் பார்ப்பது என்பது போல..
அவர்களின் தலையை மதிக்கல…ம்ம்ம்..
சரிதான்…பார்த்துக்கொண்டாள்… ஸ்டிச்சிங் செக்ஷன் போக..அது மட்டும் ஒரே போல….சீரா இயங்கிக்கொண்டிருந்தது….அதன் தலை…ஒரு பெண் ஷர்மிளா ன்னு மலையாள பெண்…அவர்தான் சுறு சுறுப்பாய் அங்கும் இங்கும் சுழன்று அலைந்து கொண்டிருந்தார்….
உருப்படி சேர சேர.. அட்டெண்டர்கள் கொண்டு..அதை சரியாக சி செஷன் அனுப்ப..சரியான உழைப்பாளி..அங்கிருந்த..300 பெண்களை கொண்டு செலுத்த..பார்த்த ஒரு மணி நேரத்தில்..அவரிடம் எந்த குறையும் இவளால் கண்டு பிடிக்க முடில…
தொழில் நுட்பம் தெரிலேன்னாலும்…வேலை நேர்த்தி பிடிபட்டது…யார் யார் எப்படி?…ஒரு உடம்பின் மொத்த உறுப்பின் இயைபு ..உடலை சமநிலையில் சீராக இயங்க உதவுவது….போல…இந்த யூனிட் உழைப்பு..பலதரப்பட்ட வித்தியாசமான மனிதர்களை கொண்டு திறம் பட ஓர்மை நோக்கி வேலை செய்கிறது…
சிற் சிறு முரண்பாடுகள் இருந்தாலும் திருவின் நறுவிசு அணுகுமுறை….நிஜமாவே சூப்பர்…
இவள் கலர் வாரேசன் சொல்லும் போது கூட…
அலட்டிக்காமல்…சரி பார்த்து…ஏற்றும் கொண்டு…முறையாய் அந்த தவறை எந்த உணர்ச்சிக்கு இடம் தராமல் மிகச் சரியாய் முறையாய் கையாண்டதும் பார்வையாளரா…நயனிக்கு ஒரு பாடமே…
திரு வாய் வழியே சொன்ன வட்டம் இப்ப புரிந்தது…
ஓல்ட் லுக் ஆக கம்பனி இருப்பது…இவளுக்கு பிடிக்கல…
தொழில் பண்ணுற இடம் பளிச்சுன்னு …கண்ணையும் கருத்தையும் ஈர்க்க வேணாமா?…
ஷர்மிளாவின் டேபிளில்…அவரின் இடத்தில் அமர்ந்து…இவள்…இப்படி யோசனையில் மூழ்கி இருக்க..திடீர்னு வெறும் மெசின்களின் ஓட்டம் மட்டும்..மட்டும் கேட்டு…. சுகந்த மணம் வீச…தூரத்தில் அவளின் கணவன்….
மோப்ப நாய் கண்டு பிடித்துவிட்டது…
இவளின் எதிரில் தான் தைப்பவர்கள் முகங்கள் தெரியும்…
எல்லோரும் வாசலில் பார்வை வைக்க…
இதோடா…இந்த காக்கா க்கு இத்தனை வடைகளா?….
நக்கலா சிரிச்சிட்டு…பெருமையாய்…டேபிளில் தலை கவிழ்ந்து…தூங்கிய மாறி..கண்ணை மூடிக்கிட்டா….என்ன சொல்றான் ன்னு பார்க்க…
ஷார்மீ பேச்சு குரல் கேட்க…திரு குரல் இல்லை…
தலை ஆட்டுகிறான்…. இவளா …கவுண்டர்…
அவங்களுக்கு என்ன? படுத்திருக்காங்க?…கணவன் குரல் தான்…வாசம் கிட்ட வர..திடீர்னு ஜுரம் கொண்ட உணர்வு… மூச்சு திணறினாள் மனைவி….
நயனி..!கூப்பிடுவான்..கூப்பிடுவான்…ஜெபம் செய்ய…
பார்த்துக்கோங்க… ஷர்மிமா….போய்ட்டான்…
முகம் வாடித்தான் போனது…பூவைக்கு…
அடுத்து…தானாய்…அங்கிங்கு அலைந்து… அடிக்கடி தன்னை திருத்தி…பிரஷ் ஆகவே..
முத ஆளாய் கிளம்பி வெளியில் நிற்க…வாடகை கார் காரர் நாளைக்கு வருவதாக ..செய்தி சொல்லிட…
ஆட்டோ க்கு வெய்ட் பண்ணா….இந்த ட்ரெஸ்ஸில் கண்டிப்பா பஸ் லாயக்கு படாது…புரிந்து…
பின்னே ஆளுமை ஆண்மை குரலில்…
திரு..வா ன்னு அழைப்பு…
எங்க போற
நம்ம வீட்டுக்கு தான் மாமா….ஜாக்கிரதையா முறைவைத்தாள்…. கூல் பண்ணும் நோக்கில்..
திரு ஏதும் பேசலை….கண்டே பிடிக்க முடில…
என்னதான் நயனி..ஆயிரம் திட்டம் போட்டு சாதிக்க எண்ணினாலும்…திருவின் மௌனம் அதை உடைத்து நொறுக்கியது….
திசை மாறி கார் போகும் போதும் ..நயனி சும்மா இருக்க…
கொண்டு அழகர் வீட்டில் தான் இறக்கினான்….அமைதியா…
அதும் இல்லாது…நயனியோடவே கூடவும் வர…
என்னடா சிங்கம் இங்கு தள்ளிட்டு வந்து அப்பா கிட்ட பாஞ்சாயத்தா???…ம்ம்ம்
கலை …இளைய ஜோடிகள் வரவு கண்டு பதறி..வாங்க வாங்க ன்னு ஸ்னாக்ஸ்…காபி என்று பரிமாற ஓட…சந்து மரியாதைக்கு புன்னகைத்து…வரவேற்க…மாமா ன்னு மதன் புன்னகையோடு திரு அருகில் பாசமாய் உக்கார்ந்து கொள்ள…
உங்கப்பாவ கூப்பிடு நயனி….திரு..
நினைச்சது சரிதான்…
ஸ்ரீராம் கடையில் தான் உக்கார்ந்திருப்பார்…சோ இவளே அவனுக்கு போன் பண்ணி வரச்சொல்ல..!
வாய் நிறைய பல்லோடு கை குவித்து…வாங்க வாங்க ன்னு அழகர்…செம்மையா வெட்கப்பட்டு மரியாதை பட்டு வழிந்தார் ….
நயனிக்கு இது ரொம்ப காமெடியா இருந்துச்சு…
இருந்தாலும் முகத்தை நல்ல பிள்ளையாய் வைத்துக்கொண்டாள்…
மதன் அம்மாவை அக்காவை கூட்டிட்டு வாப்பா…அனுப்பி அவர்களையும் வரவழைத்து…
போன முறையே நயனி செய்த காரியம் பிடிக்கல…எங்கம்மா சொன்ன ஒரே காரணத்துகாய்…விட்டு கொடுத்து படிப்பு முடிக்கட்டும் ன்னு சகித்து போனேன்..இப்ப என் ஆபிஸ் கே வந்து…இந்த மாதிரி உடைகள் எனக்கு அறவே பிடிக்காது னு தெரிஞ்சும்…எதிரில் நிற்கிறா…
இப்ப நான் என்ன செய்யட்டும்….
ஈவு இரக்கமே இல்லாமல்…பிராது பொதுவில் வைத்தான் திரு….
அவனுக்கு நயனி பிடிக்கும்…செய்கை பிடிக்கலை….மெய்
