உன் துணை தேடும் என்னுயிர்
அத்தியாயம்.40
பாட்டி என்ற ருத்ராவின் மென்மையான அழைப்பில்….. கண்விழித்த சுபத்ரா தேவியின் படுக்கையில் அவர் அருகே அமர்ந்து பாசம் ததும்பும் விழியோடு தன்னை பார்த்திருக்கும் பேரனை…… தானும் விழிகளில் அரும்பிய நீரோடு பார்த்தார் சுபத்ரா தேவி…..
என்றுமே ருத்ர பிரதாப் தன் உள்ளத்து உணர்வுகளை ஒரு இமை அசைவில் கூட எவருக்கும் இது நாள் வரை உணர்த்தியதில்லை…….அவரிடமே கூட அவன் ஒரு புன்னகையோ ஒரு ஆறுதலான வார்த்தைகளையோ பேசியதில்லை……கற்பாறையின் கடினத்தை உடலிலும் மனதிலும் கொண்டவன்…….
அப்படிப்பட்ட இரும்பு முகமூடி கொண்டு தன்னுணர்வு மறைப்பவனின் இன்றைய…..இந்த இலகு நிலைக்கு காரணமான தன் பேரன் மனைவியை கண்களில் பொங்கும் வாஞ்சையோடு பார்த்த சுபத்ரா தேவி அவள் புறம் தன் கரங்களை நீட்டினார்….
பாட்டியின் செய்கை உணர்ந்து அம்ருதா அருகில் வர……. அவள் கைபற்றி அதில் ருத்ர பிரதாப்பின் கரத்தினை வைத்தவர்…… காய்ந்து போன தன் உதடுகள் பிரித்து……என் ருத்ராவை இனிவரும் காலம் எல்லாம் நீதான் பத்திரமா பாத்துக்கணும் அவனோட அம்மா மாதிரி……..
என்றோ தன் கணவனால் அவரின் பேரனுக்கு பறிக்கப்பட்ட….. அவன் அன்னையின் அன்பை ருத்ர பிரதாப்புக்கு வழங்கி விடும் வேகம் அவரின் குரலில்…….
பாட்டியின் வார்த்தைகளின் வீரியம் இருவரையுமே பலமாய் தாக்க……சட்டென்று கலங்கி விட்ட கண்களோடு ருத்ர பிரதாப்பின் பார்வை தன் மனைவியின் மீது ஒரு ஏக்கத்தோடு பதிந்தது……. அவனுக்கு நேர் எதிர் பதமாய் விழியில் மின்னும் ஜொலி ஜொலிப்போடு….. அம்ருதாவின் கண்கள் மிக தீர்க்கமாய் தன் கணவனை பார்த்திருந்தது…..
தன் வாய் திறந்து சரி என்ற சொல்லைக்கூட அந்த வயதான பெண்மணிக்கு வழங்காத….. அவளின் மௌனம்….. ருத்ரா உடன் சேர்த்து வினோத்திற்கும் மிகுந்த வருத்தத்தை அளித்தது…….
இங்கிருந்து செல்வதற்குள் தம்பதிகள் இடையில் அனைத்தும் சரியாகி…. தன் கணவனோடு ஒரு இன்பமான வாழ்வை அவன் தங்கை வாழ்வதை…… காணாமல் அங்கிருந்து செல்லக் கூடாது என்னும் தீவிர முடிவை வினோத் அந்த நிமிடம் எடுத்திருந்தான்…….
அம்ருதாவை பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாமல் மனம் அலை புற குழப்பத்தோடு தன் மனைவியை பார்த்திருந்த….. ருத்ர பிரதாப்பின் தோளில் வினோத்தின் கைகள் ஆறுதலாய் பதிந்தது….. உனக்கு நான் இருக்கிறேன் என்று…… தங்கையால் தோன்றிய மனக்குழப்பம் மைத்துனனால்….. நொடியில் மாயமாக தானும் வினோத்தை பார்த்து புன்னகைத்தாவன் …….. சற்று சுதாரித்து தன் பாட்டியின் கைகளை அரவணைப்பாய் பிடித்தான்……
பாட்டி உங்க விருப்பப்படி எல்லாம் நடக்கும் அந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அம்ருதா வையே ….. பார்த்தபடியே கூறிய ருத்ர பிரதாப்பை கண்டு அவள் முறைக்க…… அதைக் கண்டு கொள்ளாது பாட்டியின் புறம் திரும்பியவன்……
நிஜமா பாட்டி நீங்க சொன்ன மாதிரி என்ன கண் கலங்காம என்னோட பேபி பார்த்துக்குவா…. என்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு……. கண் சிமிட்டிக் கூறி….. அவரின் கையில் பாசமாய் முத்தம் பதித்த தன் பேரனின் கன்னத்தைத் தொட்டு அவரும் தன் இதழில் ஒற்றிக் கொண்டார்…….
அங்கு நடந்த அந்தப் பாசமான உறவுகளின் உரையாடலை…….இருவிழிகள் கண்ணில் தோன்றிய நீரோடு மகிழ்ச்சியும் நெகிழ்வுமாய் கண்டு பூரிப்படைய……. மற்ற இரு விழிகளோ பிணம் தின்னும் வல்லூறு வின் கண்களாய் அவர்களைக் கொத்திக் குதறும் வெறிகொண்டு பார்த்தது………
அந்த அரண்மனையில் வினோத் திற்காக ஒதுக்கப்பட்ட அறையில் அவனோடு சேர்ந்து ருத்ர பிரதாப்பும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருக்க……. சட்டென்று மாப்பிள்ளை இப்படி பண்ணினா எப்படி இருக்கும்…? என்று வினோத் கேட்க…….
அவனை ருத்ர பிரதாப் ஆவலாக பார்க்கும்போதே……இல்ல, இல்ல மாப்ள அப்படி பண்ண சரிவராது அம்மு கல்லைத் தூக்கிப் போட்டு நம்ம ரெண்டு பேர் மண்டையும் உடைக்க வாய்ப்பு இருக்கு…… சலிப்போடு வினோத் சொல்ல……
ஏன் மச்சான் இப்படி….? அம்மு பேபிய என்கூட சேர்த்துவைக்க ஒரு ஐடியா கேட்டா. நீ நம்ம ரெண்டு பேரையும்….. உன் தங்கச்சி சேர்த்து அனுப்பி வைக்க ஐடியா சொல்றேன்னு சொல்ற….. என்று பாவமாக சொன்ன ருத்ராவை கண்டு சமாளிப்பாக அசடு வழிய சிரித்த வினோத்…..
. ஏன் மாப்பிள நீங்க தான் பெரிய ஜீனியஸ் அச்சே…. அம்முவை எப்படி சமாளிக்கிறதுன்னு உங்க மூளையில் ஒரு ஐடியா கூட வா வரல…..
இந்த மனுஷன் நம்ம புகழ்ந்து பேசுறானா..? இல்ல நக்கலடிக்கிறானா…..? வினோத்தை சந்தேகமாக பார்த்த ருத்ரா…..
அதை ஏன் மச்சான் கேட்கிற உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணதுல இருந்து என் மூளை சுத்தமாக வேலை செய்ய மாட்டேங்குது……இதை சொல்லும் போது தான் அவன் குரலில் எத்தனை காதல் எத்தனை கர்வம்………
தன் மனம் கவர்ந்த காதலியிடம் தோற்றுப் போனது கூட ஒரு மனிதனுக்கு இத்தனை மகிழ்ச்சியை தர முடியுமா….? தன் தங்கை பற்றிய ஒரு வார்த்தையில் அவன் கண்களில் தோன்றி மறையும்….. காதலையும் கனிவையும் கண்டு மகிழ்ச்சியில் புன்னகைத்த வினோத்…….
இதுக்கு மேல நாம அமைதியா இருந்தா ஒன்னும் சரிவராது…..நான் அம்முகிட்ட உங்கள பத்தி பேச தான் போறேன் அவ மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கான்னு தெளிவா கேக்க போறேன்……
அம்மு ஒத்துக்கலைன்னா கட்டாயப்படுத்தி யாவது உங்க கூட நான் அவள சேர்த்து வைக்கிறேன்…… அதுக்கப்புறம் போகப்போக உங்கள பத்தி அம்மு கண்டிப்பா புரிஞ்சுக்குவ…….. ஒரு அண்ணனாய் தன் தங்கையின் வாழ்வு சிறக்க வேண்டிய அவசரம் அவனிடம்……….
இல்ல வினோத் அது மட்டும் நடக்கவே கூடாது என்னுடைய மனைவியை நான் என் உயிரை விட அதிகமாக நேசிக்கிறேன்……. அவ லேசா முகம் சுளித்தால் கூட அதை என்னால தாங்க முடியாது…….ஒருவேளை இந்த உலகத்தையே நான் புரட்டிப் போட்டால் தான் அவள் முகத்தில் ஒரு சிரிப்பு வரும்னா…? நான் அதைச் செய்யவும் ரெடியா இருக்கேன்…… உருக்கமாக சொல்லிக் கொண்டே வந்தவன் சட்டென்று ஏதோ நினைத்து புன்னகைக்க…….
அவன் சிரிப்பைக் கேள்வியாக ஏறிட்ட வினோத்தை பார்த்தவன்……..இல்ல அம்மு கிட்ட சொல்ல வேண்டிய காதல் வசனங்களையெல்லாம் அவ…. அண்ணன் கிட்ட சொல்லுறத நினைச்சேன் சிரிப்பு வந்துருச்சு……
அதுதான் மாப்பிள நானும் சொல்றேன் நீங்க ஏன் டயத்தை வேஸ்ட் பண்றீங்க…… உங்க மனசுல இருக்க காதலை அப்படியே அம்மு கிட்ட சொல்லிடுங்க எல்லாம் சரியாயிடும்…. அவ உங்கள மன்னிச்சு ஏத்துக்குவா……வினோத்தின் கூற்றை தலையசைத்து மறுத்தான்….. ருத்ர பிரதாப்……
நிச்சயம் அப்படி ஒரு விஷயம் நடக்காது . நான் மட்டும் போய்…… நான் உன்னை விரும்புகிறேன் நான் செஞ்ச தப்பு எல்லாம் மன்னிச்சுடு…….
நாம இனிமே சேர்ந்து வாழலாம்…. அப்படின்னு மட்டும் பேபி கிட்ட சொன்னேனா….? அதுக்கப்புறம் ஒரு நிமிஷம் கூட தாமதிக்காமல் அவ…. இந்த இடத்தைவிட்டு மட்டுமல்ல….. இனி நாம் பார்க்கவே முடியாத தூரம் போய்டு வா……
உங்க தங்கச்சியை பத்தி எனக்கு நல்ல தெரியும் மச்சான் …… அவ ரொம்பவே புத்திசாலி…. அவளுக்கு என் மனசை நான் என்னோட செயல் மூலம் உணர்த்தாமல்……
வெறும் வார்த்தையால் மட்டும்…. என் அன்பை சொன்னால் நிச்சயம் அதுக்கு அம்ருதா கிட்ட எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடும்……. தன் மனைவி பற்றிய முழுவதுமான புரிதலோடு சொன்னவன்……..
தன்னை பாவமாக பார்த்திருந்த வினோத்தை கண்டு…. ஒற்றை கண்ணடித்து சிரித்தான்….. அதனால தான் மச்சான் நான் ஒரு சூப்பர் பிளான் வச்சிருக்கேன்……அப்ப பாருங்க என் பேபி எப்படி துள்ளி குதிச்சு என்கிட்ட வந்து அவள் காதலை சொல்ல போறான்னு……
வினோத் திற்காக வெளியில் சிரித்துப் பேசியவனின் மனதிற்குள் அவன் எடுத்த முடிவை நினைத்து…. ஓரத்தில் மனதின் மூலையில் சிறிது வலிக்கத்தான் செய்தது…..
ஆனாலும் அதைத் தவிர தன் காதலை ஐயம் திரிபுற தன்…… உயிரின் சரிபாதியனவளிடம் புரியவைக்க வேறு வழி இல்லை என்று அவன் நினைத்தான்……
அத்தோடு அவளுக்குத் தான் செய்த அநியாயத்திற்கு….. தண்டனையாகவும் தனக்கு இது தேவை என்கிற முடிவுக்கு வெகு தீர்க்கமாய் அவன் வந்திருந்தான்……. இவ்வுலகத்தில் அவன் எதை இழக்க நேர்ந்தாலும் அவனால் அதை தாங்கிக்கொள்ள முடியும்…..
ஆனால் இனி எந்த நாளிலும் தன் மனைவியோ பிள்ளைகளோ இன்றி வாழ ….. அவனால் ஒருபோதும் முடியாது……
செய்த தவறுக்கு தண்டனை ஏற்க துணிந்த நேர்மையின்….. உறைவிடமாய் அந்தக் கணம் அவன் நிமிர்ந்து நின்றிருந்தான்…..
அவர்கள் அரண்மனை வந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் பாட்டியின் உடல் சிறிது தெறி வர….வெகு நாட்களாய் அவர் தள்ளிப் போட்டிருந்த விடயத்திற்கு ஒரு தீர்க்கமான முடிவெடுக்க…… அந்த அரண்மனையை சேர்ந்த அனைவரும் அவர் அறையில் கூடியிருந்தனர்………
தன் முன்பு அமர்ந்திருந்த குடும்பத்தினர் அனைவரையும் கண்டு ஒரு நிறைவான புன்னகை சிந்தியவர்….. நம் பரம்பரையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தவறாமல் கடைபிடிக்கப்பட்ட….. பழக்கத்தின் படி….
நம் ராஜ வம்சத்தின் பெருமையை காக்கும் விதமா தொழில், மரியாதை, அந்தஸ்து….. குடும்பம் பிள்ளைகள் என்று……ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து எல்லாருக்கும் முன்னுதாரணமா இருக்க என் மூத்த பேரன் ருத்ர பிரதாப்பை……
இந்த சமஸ்தானத்தின் முதன்மை வாரிசா…… இந்த அரண்மனையும் அதைச் சேர்ந்த அனைத்து….. அசையும் அசையா சொத்து களுக்கும் அதிபதியா ருத்ர பிரதாப்பையே அறிவிக்கிறேன்…….
நம் குலதெய்வம் கோயிலில் அவனுக்கு உண்டான மரியாதைகள் செய்யப்படும்……தீர்க்கமாய் கம்பீரமாய்…..ராஜ பரம்பரைகளின் ராஜமாதாவாக சுபத்ரா தேவி தன் அறிவிப்பை வெளியிட….. அவரின் அறிவிப்பு அங்கிருந்த சில பேரின் வயிற்றில் தீயை பற்ற வைத்தது……
தங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட ஆத்திரத்தோடு…. சுபத்ரா தேவியை எதிர்த்துப் பேச ஹேமாவதி யோடு அவள் பிள்ளையும் மருமகளும்…… முயன்றபோது….. அவர்கள் சிறிதும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து அவரின் வார்த்தைகளுக்கு….. மறுப்பு கிளம்ப தாங்கள் காண்பது கனவா என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டானது……..
தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்ற ருத்ர பிரதாப்….. என்ன மன்னிச்சிடுங்க பாட்டி இந்த பதவியும் சொத்தும் எதுவும் எனக்கு வேண்டாம்….. அவனின் மறுப்பு அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை….. திகைப்பை இன்னும் ஒரு சிலருக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்த……
ஆனால் அம்ருதா மட்டும் தன் கணவனின் ஒவ்வொரு வார்த்தைகளையும் மிக உன்னிப்பாய்….. கவனித்து…..அவனைப் பார்த்தபடி அதை தன்னுள் கிரகித்து கொண்டிருந்தாள்…….
என்ன ருத்ரா ஆச்சு உனக்கு….? நீ எப்போதுமே விரும்பின ஒரு பதவி……இது உனக்கு கிடைப்பதற்காக நீ எப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருக்க எத்தனை தடைகளை தாண்டி வந்து இருக்க…… சுபத்ரா தேவி படபடவென்று பேச…… அவரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட அவனின் பார்வையும்…… கண்களும் இப்போது நிலையாக அம்ருதாவின் கண்களோடு கலந்திருந்தது…….
கண்களில் சுடர்விடும் நேர்மையோடு கூடவே சிறிது குற்ற உணர்ச்சியும் கலந்து…. தீர்க்கம் நிறைந்த தன் மனைவியின் விழிகளை அதற்கு சிறிதும் குறைவில்லாத துணிவோடு பார்த்தவன்….இந்தப் பதவிக்கு நான் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன் பாட்டி……..
என் வாழ்க்கையில் எனக்கு என்ன தேவை என்கிற….. ஒரு தெளிவில்லாமல் ரொம்பப் பெரிய முட்டாளா ஆங்காரத்தோடு திமிரோடு பல தவறுகள் செய்து அரக்கத்தனமா நடந்துகிட்டேன்…… பதவியும் பணத்தை விட எனக்கு உண்மையா என்ன தேவை என்கிற தெளிவு இப்போ கிடைச்சிருக்கு……
இந்தப் பதவி அரண்மனை அதை சேர்ந்த சொத்துக்கள் நான் பாடுபட்டு வளர்த்த என்னோட பிசினஸ்….. இது எல்லாத்தையும் விட…… என் மனைவியும் என் பிள்ளையும். மட்டுமே எனக்கு போதும்….. நான் இந்த உலகத்திலேயே சந்தோஷமான மனிதனாக வாழ்வதற்கு.…..
தன் மனதின் அவள் மீதான அளப்பரிய காதலை தன்னவளுக்கு உணர்த்திவிடும் உத்வேகம் கொண்டவனாய்…….தன் எடுத்த முடிவில் நிலைப்பாட்டோடு ஒரு துளி கூட வருத்தமின்றி…..
அம்ருதாவின் முகம் பார்த்து உறைத்தவனின் கண்கள் மட்டும் அவளிடம் மன்னிப்பை யாசகமாக வேண்டி நின்றது……..அது நேரம் வரை சற்றும் சளைக்காமல் அவன் விழி பார்த்து நின்றவள்…… கடைசியாக அவன் சொன்ன வார்த்தைகளில் அவன் கண்களை விட்டு அவசரமாக தன் பார்வையை நகர்த்தியவள்…….
வருத்தம் ததும்ப இருண்டுபோன முகத்தோடு எங்கே தன் குலப் பெருமை காக்க முடியாமல்…… போய்விடுமோ என்கிற வேதனையில் தவிக்கும் பாட்டியின் அருகில் சென்று அவர்…….கரங்களை தன் கையோடு சேர்த்து அழுத்திக் கொடுத்து அவருக்கு…….. ஆறுதல் அளித்தவள்……….
இப்போது தன் கணீர் குரலில் பேச ஆரம்பித்தாள்…….நீங்க எதுக்கும் வருத்தப்படாதீங்க பாட்டி நீங்கள் சொன்னபடி சொன்ன நேரத்துல எல்லாம் நடக்கும்…… இது நான் உங்களுக்குக் கொடுக்கிற வாக்கு…..
இந்தப் பரம்பரையில் அடுத்த முதன்மை வாரிசாக… முடி சூட போவது…… என்னோட புருஷன் தான்……. அதில் எந்த சந்தேகமும் இல்லை. என் விருப்பம்தான் என் கணவருடைய விருப்பமும் கூட……. நீங்க ஆக வேண்டிய ஏற்பாடுகளை பாருங்கள்……. ஒரு மகாராணியை கம்பீரத்தோடு அங்கிருந்த அனைவரையும் பார்த்து கட்டளையாக சொன்னவள்…….
மற்றவர்களோடு சேர்ந்து ருத்ர பிரதாப்பும் அவளை திகைத்துப் பார்க்கும் போதே……அத்தோடு அந்தப் பேச்சு முடிந்ததற்கான பாவனையோடு அந்த அறையில் இருந்து வெளியேறினாள்……..
அனைவரும் அவரவர் சிந்தனையில் கலைந்து செல்ல எதையோ யோசித்தபடி நடந்தவனின் கை பிடித்து தடுத்த வினோத்……. கங்கிராஜுலேசன் மாப்ள நீங்க பேசாமலே உங்க காதல் அம்முக்கு தெரிஞ்சிருச்சு….. என நினைக்கிறேன்……
அதனாலதான் நீங்க அவளுக்காகவே இந்தப் பதவியை மறுக்கிறீர்கள் என்று தெரிஞ்சுக்கிட்டு……. உங்களுக்காக பேசிட்டு போறா….. முகத்தில் சந்தோஷம் ஒளிர பேசிய வினோத்திற்கு மறுப்பாய் தலை அசைத்தவனின் மனதில் ஏதோ ஒரு நெருடல்……
உண்மையாகவே அம்ருதா அவனை மன்னித்து விட்டாளா….?????
உயிர்த் துணை சேரும்………
.உன் துணை தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
அத்தியாயம்.41
அன்றைய நாளின் பகல் தொடங்கி இரவு வரை ருத்ர பிரதாப் போடு அலைந்து திரிந்து அவனுக்கு……… சொந்தமான இடங்களை பார்வையிடுவது வரும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதுமாக…… வினோத்தின் நேரமும் ருத்ர உடன் சேர்ந்து இறக்கை கட்டி பறக்க…… இரவு வெகு தாமதமாக வீடு வந்தவர்களை…… வரவேற்றது பத்ரகாளி போல் முறைத்து கொண்டு ……. அங்கு வரவேற்பறையில் அமர்ந்து இருந்த அம்ருதா தான்…….
அவள் பார்வையின் உஷ்ணம் இருவருக்கும் பயத்தைக் கொடுத்தாலும் அதை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு……. அவளைப் பார்த்து ய்யி…… என்று அசடு வழிய சிரித்து வைத்தார்கள் மாப்பிள்ளையும் மைத்துனனும்……. அந்த சிரிப்பு அவளுக்கு இன்னும் கடுப்பைக் கிளப்ப…… போதும் போதும் , பார்க்க சகிக்கல…… என்று கடுகடுத்தவள்….
காலையில் எப்ப போனீங்க ரெண்டு பேரும்..? எப்போ வீட்டுக்கு வறீங்க….? .மத்தியானம் என்ன சாப்டீங்க….? இப்போ பதினோரு, மணி இதுதான் ராத்திரி சாப்பாட்டு கான நேரமா…..? கேட்க ஆள் இல்லை என்றால்….. எப்படி வேணாலும் ஊர் சுத்தலாம் என்று நினைப்பு…..சிறிது கூட பாரபட்சமின்றி அவர்கள் இருவரையும் நிற்க வைத்து அம்ருதா சரமாரியாக திட்ட ஆரம்பித்து அரை மணி நேரம் ஓடிப்போக……
என்னமோ அவள் மல்லிகைப் பூக்களால் தனக்கு அர்ச்சனை செய்து…… தன்னை நோக்கி காதல் கீதம்…. இசைப்பது போல் ஒரு பூரித்த புன்னகையோடு……. தன் மனைவியை அள்ளி அணைத்து . விடாமல் அசையும் அந்த இதழில் தன் உதடு சேர்க்கும் வேட்கையோடு பார்வையிட……. ருத்ரா வின் பார்வையை பார்த்து அதிர்ந்தான்…. வினோத்……
அடப்பாவி..!!! அம்மு என்ன உன்னிடம் கொஞ்சிய பேசிகிட்டு இருக்கா…..கேட்ட…கேட்ட வார்த்தையால…… கழுவி, கழுவி….. ஊத்திக் கிட்டு இருக்கா……நீ என்னடான்னா அவ கண்ணே மணியே ன்னு காதல் வசனம் பேசுறாமாதி……பருகு….பருகுன்னு பாக்குறியே…. மாப்பிள்ளா….. என்று மனதிற்குள் நொந்து போனவன்….. ருத்ராவை நினைத்து தலையில் அடித்துக் கொள்ளும் ஆசை அவனுக்கு தோன்றிய போதும்….. தன் தங்கையின் முறைப்பை கணக்கில் கொண்டு தன்னைக்……. கட்டுப்படுத்தி சிவனே என்று அங்கு நின்றிருந்தான்………வினோத்……
தானாகவே திட்டியது போதும் என்ற முடிவிற்கு பெருந்தன்மையாக வந்தவள்….. ரெண்டு பேரும் சாப்டீங்களா என்று , அரும்பெரும் கேள்வியை ஆர அமர கேட்டாள்……இப்பவாவது இந்தக் கேள்வியைக் கேட்க உனக்கு தோனிச்சே அம்மு மா அது போதும்டா அண்ணனுக்கு….. என்று வராத கண்ணீரை துடைத்துக்கொண்டே கூறியவன்…… மிச்சம் மீதி ஏதாவது இருந்தா போடு தாயே வயிறு பசிக்குது…….அவன் அந்த வார்த்தையை முடிக்கும் முன்னே அம்ருதா அவர்களுக்கான……உணவை சாப்பாட்டு மேசையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்……
அதுவும் அப்போதுதான் சமைத்தது போல் சூடான உணவு….. சாப்பிடும் போது அதன் தங்கையின் கைமணம் தெரிய…. ஏன் அம்மு இவ்வளவு நேரம் விழித்திருந்து எங்களுக்காக காத்திருக்கணும் என்ன அவசியம்….. உனக்கு உன் உடம்பை பத்தி கொஞ்சம் கூட அக்கறையே இல்லையா……
நீ இப்போ ஒரு ஆள் இல்ல ரெண்டு உயிர் ன்னு உனக்கு அடிக்கடி நான் ஞாபகப்படுத்தனுமா….? அவர்கள்……..உண்ண ஆரம்பித்து உணவு காலியாக ஆக தட்டில் பார்த்து பார்த்து அம்ருதா பரிமாறிக் கொண்டே தன் அண்ணனின்……. வார்த்தைகளை சிறு மறுப்பு கூட இன்றி அமைதியாக வாங்கிக் கொண்டாள்……..
ஏனோ அந்த சூழ்நிலை இதுநாள் வரை அனுபவித்திராத. அவனின் வாழ்நாளில் எந்த வெற்றியுமே அவனுக்கு அளித்திடாத ….. ஒரு மகிழ்ச்சி நிறைந்த ரம்யமான மனநிலையை அவனுக்கு……. அறிமுகப்படுத்த சிறு கண் சிமிட்டல் கூட இன்றி. அவர்களுக்காக தானே சமைத்து அவர்கள் வரும்…… நேரம் வரை காத்திருந்து…. அருகில் நின்று பரிமாறும் தன் மனைவியின் ஒவ்வொரு செயலையும்….. ஏன்….. தன் மைத்துனன் பேச்சுக்களையும் கூட அவன் மிக அழகாய் ரசித்து தன்னுள் சர்க்கரைப் பாகின் இனிப்போடு…….. துளித்துளியாய் பருகிக்கொண்டிருந்தான்………..
ஆனால் அம்ருதாவோ அவன் புறம் திரும்பியும் பார்க்கவில்லை…… கைகள் மட்டும் அவன் தேவையை அறிந்து செயல்பட்டது எப்படி என்று தான் அவனுக்கு புரியவில்லை …… அவர்கள் உண்டு முடிக்க பாத்திரங்களை அந்த இடத்திலேயே சிறிது ஒதுக்கி வைத்தவள்……என் மேல் அவ்வளவு அக்கறை இருந்தா இனிமே டயத்துக்கு வீட்டுக்கு வர பாருங்க…….பொதுப்படையாக இருவரையும் பார்த்து சொன்னவள் அங்கிருந்து வேகமாக விலகிச் சென்றுவிட்டாள்……
அங்கு வந்ததில் இருந்தே மற்றவர் பார்வைக்கு ஒரே அறையில் இருப்பது போல் தெரிந்தாலும் தன்…….. மனைவியின் மனநிலை உணர்ந்து இரவை வினோத்தின் அறையில்…. கழிப்பவன்…அன்று சரி மச்சான் நீங்க போய் தூங்குங்க நான் வேற கெஸ்ட் ரூம் ல படுத்துகிறேன்……என்றவன் வினோத் கூப்பிட கூப்பிட நிற்காமல் வேகமாக மாடியேறி அறைக்குள் நுழைந்து கொண்டான்……..
போகும்போது அவனின் கண்களில் இருந்த விஷமமும் உதட்டில் இருந்த கேலி புன்னகையும் எதற்கு…… என்ற யோசனையோடு உறங்கச் சென்ற வினோத்திற்கு…….. அதற்கான விடை விடியற்காலையில் அவன்……. கண்விழித்தபோது கிடைத்தது……
காலைக் கதிரவனின் உஷ்ணம் இல்லாத சுகமான வெதுவெதுப்பான வெளிச்சம் கண்களை….. தீண்ட உடல் முறுக்கி சோம்பல் முறித்து படுக்கையில் இருந்து எழ தோன்றாமல் புரண்டவன் எதன் மீதோ மோத……. கண்களை பிரிக்க மனமின்றி கைகள் கொண்டு அதை உணர முயன்றவனின்………
கரங்களில் ,பட்டு நூலை விட மென்மையான ஏதோ தட்டுப்பட அதை….. தடவிக்கொண்டே கீழ் செல்ல…. அவன் ஸ்பரிசத்தால் அது சிறிது அசைய விடாமல் அழுத்திப் பிடிக்க…. அவன். கைகளில் அழுத்தத்தால் குழைத்து பிதுங்கும் மென்மையான பாகம் தந்த சிலிர்ப்பை …… உடல் மொத்தமும் வாங்கியவன் உதடுகள் தானாய் முணுமுணுத்தது….. செல்லம்மா என்று……
அதுவரை அவன் வருடலில் மயங்கி கிடந்த பெண்ணவள்….. வேறொருத்தியின் பெயர் அவன் வாய்மொழியாய் கேட்டதில்…. அதிர்ந்து போய் அங்கம் பதற அவன் கைகளை தட்டி விட…….
பட்டான பெண்ணுடல் தந்த போதை வலுக்கட்டாயமாய் ….. தெளிய வைக்கப்பட்ட தில் வினோத் கண்விழித்து பார்க்க அவன் முன்பு கண்களில் தேங்கிய நீரோடு சாருலதா நின்றிருந்தாள்…….. சிறிது நேரத்திற்கு அவனால் ஒன்றுமே புரிந்துகொள்ள முடியவில்லை…..
எப்போதும் தான் கனவில் கண்டு கூடிக் களிக்கும்………தன்னவளின் கற்பனைப் பிம்பத்தையே தொடுவதாய் எண்ணியிருந்தவனுக்கு தன் கண்முன்னால்….. அவனின் செல்லம்மா நிற்பதும்….. அதுவும் அவளின் இந்தக் கண்ணீர் கோலமும் எதற்கு என்று புரியாமல் அவன் விழிக்க…….
நான் உங்களை எப்படி உயிரா காதலிக்கிறேனோ….. அதே மாதிரிதான் நீங்களும் என்ன விரும்புறீங்க…. ஆனாலும் எங்க அப்பாவோட கெட்ட குணமும் உங்க தங்கச்சியோட….. வாழ்க்கைக்காகவும் தான் நீங்க என்ன விட்டு விலகி விலகி போறீங்க ன்னு இதுநாள் வரைக்கும் நினைச்சிட்டு இருந்தேன்…… கிட்டத்தட்ட சாருலதா அவனைப் பற்றி சரியாகவே கணித்திருக்கிறாள் என்பதில் கண்களில் காதல் வழிய தன் செல்லம்மாவை அவன் ஆசையோடு பார்க்க…… அவளோ….. அதை சிறிதும் கண்டு கொள்ளாமல்…..
ஆனா இப்போ…..என்றவள் பொங்கி வந்த அழுகையை இதழ் கடித்து அடக்கியபடி…… என்ன தொடும்போது கூட செல்லம்மா ன்னு யாரோ ஒரு பொண்ணோட பேர் சொல்லி நீங்க கொஞ்சுவதில் இருந்தே எனக்கு புரிஞ்சுருச்சு…….. உங்க மனசுல என் மேல கொஞ்சம் கூட காதல் இல்லைன்னு…. என்றவள் அதை சொல்ல ஆரம்பிக்கும் போதே அடக்கியும் முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அவள் மார்பு சேலையில் நனைத்தது……
சாருலதா வின் வார்த்தைகளை புருவம் சுருக்கி கேட்டவனுக்கு அவள் அழுகையின் காரணம் புரிந்து விட…பொங்கிய சிரிப்பில் உதடுகள் விரிய துடித்தது…… அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் சாருலதா விலகிச் செல்ல.……
தன்னை தாண்டிச் சென்றவளின் இடது கையை பிடித்து சுண்டி இழுத்தவன்……தன் மார்பில் வந்து விழுந்தவள் சுதாரிக்கும் முன்னமே அவளை…… புரட்டி படுக்கையில் தள்ளி அவனைத் தடுக்கும். பொருட்டு உயர்ந்த கைகளை ஒரு கை கொண்டு….. வளைத்து மேல் நோக்கி பிடித்து படுக்கையோடு வைத்து அழுத்திவன்….. தன்னை பார்க்க பிடிக்காது முகம் திருப்பியவளின் தாடை பற்றி முரட்டுத்தனமாய் தன் புறம் இழுத்தவன்…….
அவளை கண்ட நாள் முதலாய்…. தன் பார்த்து பார்த்து ஏங்கிய பல இரவுகளின்…… இன்பமான கனவுகளில் நூறாயிரம் முறை அவன் வாய் வழி…. அமுதம் அள்ளி அள்ளி குடித்த பெண்ணவளின் பூவிதழ்……. இன்று நிஜத்தில் அவன் வசம்…… வசமாய் சிக்கிக் கொள்ள…….
அன்நாள் வரை சேர்த்து வைத்த அனைத்து தாபமும்…அனையாத மோகமும் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு……. மிக மிக வன்முறையாய் அவள் இதழில் இறங்கினான் தன் செல்லம்மாவிற்காக நெடுங்காலமாய் காத்திருந்த அந்த காதல் யோகி…….
இதழ் கொண்டு உறிஞ்சி பற்கள் கொண்டு கடித்து தன் நாவை கொண்டு சுழற்றி…… என்று….. தன் இதழ் முத்தத்தில் மொத்தமாய் அவன் வர்ண ஜாலம் காட்ட…… அவனிடத்தில் இப்படி ஓர் ஆழிப்பேரலையின் ஆக்ரோஷ வடிவம் தாங்கிய……..இதழ் தாக்குதலை சாருலதா நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை….
வினோத்தின் வேகம் தாங்காது மூச்சுக்காற்றிர் காய் மிக மோசமாய் தவிர்த்தவள்……..தன் கைகளை முயன்று அவன் பிடியில் இருந்து உருவி அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டு……
உயிர் காற்றை அவள் வேக வேகமாய் உள்ளிழுக்க……அவள் புரட்டித் தள்ளியவனோ அடுத்த இரண்டாவது நொடியில் மீண்டும் அவள் பின்புறம் இரு மடங்கு…… வேகத்தோடு அவள் உடலோடு….மொத்தமாய் படர்ந்து அவளை அப்படியே படுக்கையில் சாய்த்தவன்…….
இப்போது கழுத்தையும் காதினையும் தோல்களையும்……. தன் எச்சிலால் ஈரப்படுத்தி பற்களால் பதம் பார்த்து நாவால் வருடிக் கொண்டிருந்தான்……. அவன் கைகளோ சிறிதும் நாகரீகம் இன்றி……. அவள் உடலின் அனைத்து பாகங்களிலும் தன் விரல் தடத்தை பதித்து கொண்டிருந்தது……..
அவன் ஆளுமையில் சிக்கி திணறியவள் அதற்கு மேல் போராட முடியாமல் அவன் கைகளின்…….. போக்கிற்கு தன்னை கொடுத்துவிட்டு கண்கள் சொருக உதடு பிளந்து போதை கொண்ட மயக்க நிலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்…….. அவள் எதிர்ப்பு காட்டிய வரை தானும் அசுரத்தனமாய் ஆடித் தீர்த்தவன்…… அவள் தன்னை ஒப்புக் கொடுத்த நொடி தன் வேகம் தணிந்து அவளை அணைத்தபடி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அமைதியாக கிடந்தான்…….
அங்கிருந்த அமைதியை குலைப்பது போல் அவன் அணைப்பில் இருந்தவளின் உதடுகள் ஏதோ முணுமுணுக்க…… அதில் அவள் முகத்தை லேசாக விலக்கி பார்க்க….. இப்போது இதழ் சேர்ந்த வெட்க புன்னகையோடு அவனைப் பார்த்து……. சரியான பொறுக்கி ராஸ்கல் என்று செல்லமாக திட்டியவள் தன் கை கொண்டு அவன் மார்பில் அடிக்க ……..
அவள் கையை பிடித்து தடுத்தவன்… ஏய் அங்கே மட்டும் அடிக்காதே என்னுடைய செல்லம்மா அங்க தான் இருக்கா….. அவளுக்கு வலிக்க போது தன் மார்பை மென்மையாய் நீவியபடி அவளைப் பார்த்து குரும்பு சிரிப்போடு வினோத் கூற……..
மீண்டும் முகம் வாடி பிதுங்கும் இதழோடு அழுவதற்கு தயாரான சாருலதாவின் முகத்தை கைகளில்…….ஏந்தி நெற்றியில் முத்தமிட்டவன்……. இந்த மக்கு மங்கம்மாவிற்கு அவளோட பேரு தான் செல்லம்மா என்று கூட தெரியல……
அவள் மூக்கை பிடித்து திருகிய வரே சொல்ல….. நிஜமாவா…? என் பேரு தான் செல்லம்மாவா…. ? இன்று விழி விரித்தவள் ஆனா இதுக்கு முன்னாடி நீங்க எப்பவும் என்னை அப்படி கூப்பிட்டதே இல்லையே….? அவளின் கேள்வியில் ஒரு வேதனையான பெருமூச்சோடு…… இமை மூடித் திறந்தவன்……
வெளியில் அப்படி கூப்பிட வில்லை ஆனால் என் மனசுக்குள்ள கோடி முறையாவது அந்தப் பெயர் சொல்லி….. உன்னை நான் கொஞ்சி இருப்பேன் தெரியுமா….. முதல் முறை தன் மனம் திறந்து அவள் மீதான தன் காதலை சொல்ல தொடங்கினான்…..
உன் மேல் எனக்கு எப்போது காதல் வந்தது எதுனால் வந்தது. இது எதற்குமே என்கிட்ட பதில் இல்லை…… அது விட அந்தக் காதலை நான் வெகுநாட்கள் உணரக்கூட இல்லன்னு தான் சொல்லணும்….. ஆனால்….. என்று சொல்லி நிறுத்தியவன்……
விலகியிருந்தவளை மீண்டும் தன் கைகளில் கொண்டுவந்து தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டு……. என்றைக்கு உனக்கு ஒரு பிரச்சனை என எனக்குத் தெரிய வந்ததோ……அந்த நிமிஷம் எப்பாடுபட்டாவது எதை வேண்டுமானாலும் செய்து……
உன்ன பாதுகாக்கணும் உனக்கு எதிராக யாராவது ஒரு விரல் அசைத்தால் கூட…… அவங்கள மொத்தமா அழித்து விட வேண்டும் அப்படிங்கற அளவுக்கு……. வெறித்தனமான ஒரு எண்ணம்…….எனக்கு வந்துச்சு பாரு அப்ப புரிஞ்சுகிட்டேன் டி உன் மேல எனக்கு இருக்க என் அளப்பரிய காதலை…..
இதில் ஒன்றுமே மறைக்க இல்லை என்ற ஒரு இலகு தன்மையோடு சரளமாக தன் காதல் சொன்னவன்……. ஆனாலும் அப்போ கூட உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் உன் கூட வாழனும் என்கிற ஆசை…… இருந்தாலும் தகுதி இல்லேன்னு புரிஞ்சிக்கிட்டு…… உன்னை விட்டு விலக தான் பார்த்தேன்…… ஆனா உன் அப்பா வினால் அம்முக்கு நடந்த அநியாயம்……அதுவரை அவளை அணைத்தபடி பேசிக் கொண்டிருந்தவன் இப்போது அவளை விட்டு விலகி எழுந்து அமர்ந்திருந்தான்…….
உன் மேல உள்ள காதல் உனக்காக எதையும் செய்ய என்னை தூண்டிய போதும்……என்னோட அம்மு எனக்கென்று இருக்க ஒரே சொந்தம் அவளையும் நம்மோடு கூட கூட்டிட்டு….. போகலாம் நான் நினைச்சப்போ உங்க அப்பா தான் அதைத் தடுத்தார்……
அம்முவை அவர் பார்த்துக் கொள்வதாய் எனக்கு வாக்கு கொடுத்தார்…… அவரை நம்பி நான் அம்முவ விட்டுட்டு போனதுக்கு அவளுக்கு எவ்வளவு பெரிய அநியாயம் நடந்துடுச்சு…….தன் கண்களை இறுக மூடி உடல் விரைக்க தன்னுள்ளே துன்பப்படுபவனின் தோற்றம் சாருலதாவின்…….. மனதையும் வருத்தப்பட வைக்க அவன் அருகில் நகர்ந்தவள் அவன் முதுகோடு ஒன்றி அவன் நெஞ்சை நீவி விட்டாள்…….
ஆனால் பாவம் அவன் தான் அதை உணர்ந்தது போல் தெரியவில்லை……. எந்த தப்பு உனக்கு நடக்க கூடாதுன்னு நான் துடித்தேனோ….. அதே கொடூரம் என்னோட தங்கச்சிக்கு நடந்துடுச்சு……. அம்மு அந்த நேரம் எப்படி துடித்திருப்பாள்……. எத்தனை தூரம் கஷ்டப்பட்டிருப்பாள் என்னுடைய அரவணைப்பிற்காக வும் பாதுகாப்புக்காக வும் எப்படி ஏங்கி இருப்பாள்…….
அதெல்லாம் நினைச்சா உங்க அப்பாவை என் கையாலேயே கொல்லனும் என்கிற அளவு எனக்கு ஆத்திரமா வருது……அம்ருதா செஞ்ச புண்ணியம் . ருத்ர பிரதாப் அவள உண்மையாக நேசிக்கிற….. மனுஷன….. கிடைத்துவிட்டார் இல்லன்னா என் தங்கச்சியோட கதி…….
இது எல்லாத்துக்கும் ஒரு வகையில் உங்க அப்பா காரணமாக இருந்தார்னா…… மறுவகையில் நானும் கூட காரணம் தான். உங்க அப்பா மேல இருந்த கோபத்தாலும் என் மேல இருந்த வெறுப்பாலும் தான் மொத்தமா. உன்னை விட்டுப்பிரிய நான் நினைத்தேன்…….
தன் முதுகுப்புறம் முகம் புதைத்திருந்தவளை இழுத்து…. முன் பக்கம் கொண்டு வந்தவன் மென்மையாய் அவள் இதழ் தீண்டி….. ஆனா என்னால முடியல டி…. நீ என் மனசு முழுக்க நிறைந்து இருக்க அதனால தான்…. உன்னோட கற்பனையில் குடும்பம் நடத்த ஆரம்பிச்சது இன்று புன்னகைத்தவன்……
தன் உதடுகளை அவள் காதருகே கொண்டு சென்று செவி மடல்களை உரசியவாறு….. கனவில் இப்போது நமக்கு ரெண்டு பசங்க கூட இருக்காங்க தெரியுமா…… அத்துடன் நீ ஆறு மாசம் கர்ப்பம் வேறு கிசுகிசுப்பாய் சொன்னவன் தன் உள்ளங்கையை அவள் வெற்று வயிற்றில் வைத்து அழுத்த…….
ஏதோ அவன் பிள்ளையை அந்த நொடியை தான் சுமப்பது போல்…… உடல் முழுவதும் குறுகுறுக்க அவன் கையோடு தன் கைகள் பதித்து அழுத்தி கொண்டவள்……. அவன் மார்பில் வெட்கம் ததும்பிய முகத்தை புதைத்துக் கொண்டாள்…….தானும் புன்னகையோடு அவள் உச்சியில் உதடு பதித்து கூந்தலில் முகம் புரட்டி சிறிது அமைதி காத்தவன்…….. அப்போதுதான் ஞாபகம் வந்தவனாய் தன்னை விட்டு அவளைப்பிரித்தவன்…….
செல்லம்மா நீ எப்படி இங்க வந்த….? இந்த அரண்மனை உனக்கு எப்படி தெரிஞ்சது…? யார் உனக்கு என்னோட ரூம் வரைக்கும் வழி சொன்னது…..இது எல்லாத்தையும் விட உங்க அப்பா எப்படி உன்னை வெளியில் விட்டார்….. இல்லனா சொல்லாமல் ஓடி வந்துட்டியா….??? தன்னை கேள்வியால் துளைத்து எடுத்த வினோத்தை கண்டு கண் சிமிட்டியவள்……
அவன் சந்தேகமாய் பார்க்க….. என்னோட அண்ணன் மிஸ்டர் சிவானந்தத்தை நான் பாத்துக்கிறேன்னு…… எனக்கு உறுதி கொடுத்து இங்க கூட்டிட்டு வந்தாரு…. சொல்லி சிரித்தவளின் முகத்தில் உண்மையான சகோதர பாசத்தின் சாயல்……அவள் சொல்லாமலே புரிந்தது சாருலதாவின் அந்த சகோதரன் யார் என்று…..
தன் மாப்பிள்ளையை நினைத்து ஒரு பெருமையான…… புன்னகையோடு மீண்டும் தன் செல்லம்மாவிடம் காதல் பாடம் படிக்கத் தொடங்கினான்……வினோத்……
இங்கே வெகு காலம் காத்திருந்த காதல் பறவைகள் ஒன்று கூடி இனிப் பிரிவே இல்லை என்கிற மகிழ்ச்சியில் திளைக்க……ஆனால் அதே அரண்மனையில் மற்றும் இரு காதல் பறவைகள் சேர முடியாமல் தங்கள் காதலை சேர்க்கும் வழியும் தெரியாமல்….. தத்தளித்துக் கொண்டிருந்தனர்…….
காதல் கைகூடும் காலம் எப்போதோ…..?????
உயிர்த் துணை சேரும்…….
உன் துணை தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
அத்தியாயம்.42
அன்றைய விடியலின் ஆரம்பம் சிலருக்கு சுகமான பொழுதாகி போக….. சிலருக்கோ தூங்கா இரவின் மிஞ்சிய எச்சங்களை சிந்திக்கும்….. தொடராகிப்போனது . இரவு முழுவதும் தூங்காத இமைகள் சுமையாய் கனக்க……
சிவந்த கண்களோடு படுக்கையில் படுத்திருந்தாள் அம்ருதா….. இதற்கு முன்பு அவள் அங்கே வந்த போது கணவன் மனைவி இருவரும் தங்கியிருந்த அதே அறை….. அவள் வாழ்க்கையை முற்றிலுமாய் மாற்றிப்போட்ட பல திருப்பங்கள் அங்கே நிகழ்ந்திருக்கிறது……நினைவுகளின் ஆதிக்கத்தில் எழுவதற்கு தோன்றாமல் படுத்து கிடந்தவளின்….. வயிற்று பிள்ளைச் சுறுசுறுப்பாய் செயல்பட்டதால் மசக்கையின்….. அறிகுறியாய் உமட்டல் எடுக்க வேகமாய் குளியலறை நோக்கி…. ஓடினாள்…..
இரவு உண்டது அனைத்தும் வெளியே வந்து விட தலை சுற்றலும் சேர்ந்து கொள்ள முயன்று குளித்து விட்டு…… குளியலறை இருந்து வெளிவந்தவளுக்கு பசி வயிற்றைக் கிள்ள……
இருக்கும் சோர்வில் கீழே இறங்கிப் போய் உணவு உண்ண கூட தெம்பில்லாமல் மீண்டும் படுக்கையிலேயே அமர போனவளின் கவனத்தை ஈர்த்தது…… அறைக் கதவைத் தட்டும் சத்தம்…அதில் அவள் உள்ளே வரும்படி உத்தரவிட கதவைத் திறந்து கொண்டு வந்த ருத்ர பிரதாப்பின் கைகளில்…. அவளுக்கான காலை உணவுகள் இருந்தது…..
உணவு தட்டுடன் உள்ளே வந்தவன் அவள் பார்வையில் இருந்த கேள்வியை படித்து…காலையில் மணி 8 ஆயிருந்துச்சு அதான் பசியோட இருப்பியோன்னு நானே கொண்டு வந்துட்டேன் இங்கேயே சாப்பிட்டு விடு பேபி….அந்த நிமிடம் அவளுக்கும் அது மிக அவசியமாக பட………
அவன் கொண்டுவந்து…. வைத்ததைப் சிறிதும் மறுப்பு சொல்லாமல் அமைதியாக உன்ன ஆரம்பித்தவளின் பசி சிறிது சிறிதாக அடங்கி…… முகத்தில் ஒரு தெளிவு உண்டாவதை கண்களில் வாஞ்சையும் கனிவும் போட்டி போட மகிழ்வோடு…… பார்த்திருந்தான் அந்த இரண்டு பிள்ளைகளின் தகப்பன்…..
காலை உணவறைக்கு வந்தவனுக்கு தானாக கண்கள் தன் கண்ணம்மாவை தேட…. அவள் இல்லாமல் ஒரு வாய் தேனீர் கூட அவனால் அருந்த முடியவில்லை……பிள்ளை உண்டானது முதல் பிறக்கும் காலம் வரை என்னென்ன மாற்றங்கள் ஒரு பெண்ணிற்கு ஏற்படும் என்று…..அவன் மனைவி உண்டான நாளிலிருந்து படித்து…. பயிற்சியின் மூலம் கற்று முழுவதுமாய் தேர்ந்தவனுக்கு இப்போது மனைவியின் நிலை அவளைப் பார்க்காமலே புரிந்தது…… அதற்குமேல் நொடி கூட தாமதிக்காமல் உணவோடு கிளம்பிவிட்டான்…..
தன் மகவு அவன் அன்னையை படுத்தும் பாட்டை புரிந்தவனுக்கு……என்னைப்போல் நீயும் ஏனடா உன் அம்மாவை…. படுத்துகிறாய் என்று தன் பிள்ளையிடம் கேள்வி கேட்க தோன்றியது….. அந்த எண்ணம் கொடுத்த புன்னகை முகம் முழுவதும் பரவி இருக்க…..
உண்டு முடித்தவள் நிமிர்ந்து பார்க்கும் போது….. அவள் கண்ணில் பட்ட அவனின் புன்னகை முகம் என்றைக்கும் விட அன்று அம்ருதாவை மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாக்க……இருந்தும் அமைதியாக எழுந்து சென்று அவன் முகம் காணாது ஜன்னலின் வெளிப்புறம் பார்வையை செலுத்த ஆரம்பித்தாள்…..
தன் பேபி யின் அந்த செய்கைக்கும் ரசிப்பான ஒரு புன்னகை சிந்தியவன்…… மீண்டும் கதவு தட்டும் சத்தத்தில் திரும்பி வெளியே நின்றவர்களை உள்ளே வருமாறு அனுமதி அளிக்க……. அவன் கொண்டுவரச் சொல்லி இருந்த அனைத்துப் பொருட்களையும்…. அங்கிருந்த கட்டிலில் பரப்பி வைத்தவர்கள் மீண்டும் ருத்ரா பிரதாப்பின் அனுமதி பெற்று அங்கிருந்து வெளியேறினார்…..
அவர்கள் செல்லும் வரை காத்திருந்தவன் இத்தனை…. ஆரவாரத்தில் வேண்டுமென்றே திரும்பிப் பார்க்காமல் நின்ற மனைவியின் கோபம் சிறு பிள்ளையின்……விளையாட்டாய் தோன்ற……. அவள் பின்புறம் சென்று இரு கண்ணத்தையும் பிடித்து கிள்ளி விட்டு. உதட்டில் ஒரு சிறு கடி கடிக்க தோன்றிய உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி….. பேபி என்று அழைத்தான்……
அமைதியாக அவன் புறம் திரும்பி நின்றவளின் கண்களைப் பார்த்து சிரித்தவன்….. இன்னும் ரெண்டு நாள்ல கோவில்ல ஃபங்ஷன் இருக்கு அதுக்காக…. எல்லாருக்கும் டிரஸ் ஆக்சஸரீஸ் எல்லாமே வாங்கியாச்சு உனக்கும் நானே நேத்து ஃபுல்லா செலக்ட் பண்ணி பிடிச்சது எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்……
அதனாலதான் நேற்று அவ்ளோ நேரம் ஆயிடுச்சு.……. நீயும் பார்த்துட்டு இதெல்லாம் பிடிச்சிருக்கான்னு சொன்னேனா எனக்கும் சந்தோஷமா இருக்கும் பேபி…… இப்போ உன் உடம்பு இருக்கிற நிலைமையில அவ்ளோ நேரம் ஷாப்பிங் இப்போதைக்கு உன்னால முடியாதுன்னுதான்…… நானே உனக்காக எல்லாத்தையும் தேர்ந்தெடுத்திருக்கேன்……..
மிக ஆடம்பரமான விலை உயர்ந்த நகைகளையும்…. துணிமணிகளையும் அவள் பார்வை படும்படி வைத்தவன்….. பதிலுக்காய் அவள் முகம் பார்க்க…… தான் நின்ற இடத்திலிருந்து சிறிது கூட அசையாமல் அவன் விழிகளை பார்த்தவள்…… பொறுமையாக மிக அமைதியான தெளிவோடு பேச ஆரம்பித்தாள்…….
இதெல்லாம் எப்பவும் நடக்குறதுதானே மிஸ்டர் ருத்ர பிரதாப்…… நான் உங்களை சந்திச்ச இந்த 98 நாள்ல எனக்கென்று எந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் மனசுக்குப் பிடிச்சாலும் பிடிக்க வில்லை என்றாலும்………
ஒரு விஷயத்தை நான் விரும்பினாலும் இல்லை என்றாலும் அது எவ்ளோ கொடுமையானதா இருந்தாலும்…….இந்த வார்த்தைகளைப் பேசிய போது அவளின் கண்கள் அங்கிருந்த பட்டு மெத்தையின் மேல் நிலைத்திருந்தது……..
எனக்கு வேற எந்த ஆப்ஷனையும் நீங்க கொடுத்ததில்லையே….? மீறி உங்களுக்கு எதிராக செயல்பட்ட நீங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி எனக்கு தண்டனை கொடுப்பீர்கள் இல்லையா…..??
அன்றைக்கு கொடுத்தீங்களே இந்த ரூம்ல வச்சு நான் துடித்தையும், தவித்ததை கதறி அழுததையும் கூட…… கொஞ்சமும் மதிக்காமல்….. நீங்க கொடுத்த தண்டனை தான் இன்றைக்கு என்றவள்……
அத்தோடு பேச்சை நிறுத்தி தன் கை கொண்டு அவளின் வெளி தெரியாத பிள்ளை வயிற்றை…… வருடியவளின் கண்களிலிருந்து கண்ணீர் தானாக அருவி போல் கொட்டியது……
தன் அம்முவின் அந்த நிலை காண சகிக்காது அவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தவன் தன்னவளின்….. கனல் கக்கும் விழிகள் கட்டிய உணர்வினை மதித்து அசையாது அப்படியே நின்றான்…….
தள்ளி போட்டாலும் தண்டனைகள் ஏற்காமல் பாவங்கள் தீராது மனதோடு எண்ணிக் கொண்டவன்…….. அவன் மனைவியின் வார்த்தை எனும் தீ கங்குகளை உள்ளத்தில் வாங்க தயாராய் நின்றான்…….
தன் விழிகளில் வழிந்த கண்ணீரை கோபமாக சுண்டி எறிந்தவள்…..உங்களோட பணபலத்தையும் ஆள் பலத்தையும் வெச்சு ஒரு அப்பாவிப் பொண்ண….. எப்படி வேணாலும் சித்திரவதை பண்ணி……
நீங்க நினைத்ததை சாதிக்க உங்களால் முடியும் போது……. இப்போ என்ன சார் தேவை வந்துச்சு என் விருப்பத்தை கேட்க…..?? நக்கலாக கேட்டவள் இது உங்க கேரக்டருக்கு கொஞ்சம் கூட சூட்டாகலையே……?
பணக்காரங்க தான் நேரத்திற்கு தகுந்த மாதிரி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி…… பொய் வேஷம் போட்டு இன்னும் , இன்னும் பணத்தையும் பொருளையும் சேர்க்க….. கொடுத்த வாக்கையும்… சொன்ன வார்த்தையும்…மறந்து நாடகம் ஆடுவாங்க……
ஆனால் நான் ஆஃப்டர் ஆல் ஒரு சாதாரண டிரைவரோட தங்கச்சி…..என்றோ அவன் சொன்ன வார்த்தைகள்… சிறிதுகூட அடி பிசகாமல் இன்று சம்மட்டி அடியாய் அவன் நெஞ்சில் விழுந்தது……
எங்கள மாதிரி ஒன்னுமில்லாத மிடில் கிளாஸ் ஆட்களுக்கு…… சொன்ன வார்த்தையும் பேசிய வார்த்தைகளும் ரொம்ப ரொம்ப முக்கியம்…… நமக்கு இடையில் உள்ள அக்ரிமென்டை நீங்கள் மறந்து போயிட்டிங்கன்னு நினைக்கிறேன்……
ஆனா…. நான் இன்னும் எதையுமே மறைக்கல இன்னும் இரண்டு நாளில் வரப்போற முடிசூட்டு விழாவோடு….. நம்மளோட 100 நாள் அக்ரீமென்ட் கல்யாணம் ஒரு முடிவுக்கு வருகிறது……
நீங்க சொன்ன மாதிரி உங்க மூலமா எனக்கு கிடைக்க போகும் பதவி சொத்து எல்லாத்தையும் உங்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு……. வெறும் ஓரு ட்ரைவரோட தங்கச்சியா தான் நான் இந்த வீட்டை விட்டு வெளியே போவேன்…. கண்களில் தெறித்து விழும் உறுதியோடு சொன்னாள்…அம்ருதா….
கலங்கிப்போன….. ருத்ர பிரதாப் பின் கண்களோ மௌனமான பரிதவிப்போடு அவள் வயிற்றை தொட்டு தொட்டு நகர…..அவன் பார்வைய் மொழி உணர்ந்தது போல் இந்தப் பிள்ளை எனக்கு நஷ்டத்தில் கிடைச்ச ஒரு லாபம்……. ஆனா இதை கூட நீங்க கேட்டீங்கன்னா உங்க கிட்ட கொடுத்துட்டு போங்க நான் தயாராக இருக்கேன்…..
என்னுடைய இந்த முடிவை….. நான் தவிர இந்த உலகத்தில் வேறு யார் நினைத்தாலும் மாற்ற முடியாது…..சிறிதுகூட கண்களில் சலனமின்றி நிமிர்ந்து நின்று பெண் சிங்கமாக கர்ஜிக்கும் தன்னவளின் திமிரையும்…… துணிவையும் தைரியத்தையும் கண்டு தனக்கு சரி ஜோடியாக நின்றவளை….. அந்த நேரத்திலும் கூட ஒரு கணவனாய் காதலனாய் அவனுக்கு ரசிக்கவே தோன்றியது…….
தன் மனதில் இருந்தவை அனைத்தையும் பேசி முடித்தாவள் அமைதியாய் நிற்க…..வேகு வேகுவாய் முயன்று பார்த்தும் தொண்டைக் குழியில் இருந்து….. ஒரு சத்தம் கூட எழும்பா முடியாத அளவிற்கு ஏதோ ஒன்று பந்தாய் உருண்டு அவன் தொண்டையை அடைக்க……
சில நிமிடங்கள் கண்மூடி தன்னுணர்வை கட்டுப்படுத்திவன்……. சரி பேபி உன்னோட முடிவு எதுவாக இருந்தாலும் அதுக்கு நான் முழுமனதோடு கட்டுப்பாடுவேன்…… உன்னுடைய விருப்பம் தான் என்னோட விருப்பம்….. உணர்ச்சியற்ற குரலில் சொல்லியவன் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் விடுவிடுவென்று வெளியே நடந்துவிட்டான்……
வேதனையோடு விலகிச் சென்றவன் முதுகையே வெறித்து பார்த்தபடி இருந்தவளின் கண்களிலும், முகத்தில் இருந்த உணர்விற்குப் பெயர் என்ன……. நிச்சயமாக அது வெறுப்பல்ல……
அறையை விட்டு வெளியே வந்தவன் தன் முகம் காட்டும் வேதனையை…… அடுத்தவர் படிக்க முடியாதபடி அதுநாள்வரை பயின்று வந்த பயிற்சிகளின் மூலம் உணர்ச்சியில்லா முக பாவனைக்கு மாறி தன் கம்பீரம் சிறிதும் குறையாமல்…….
சிம்மத்தின் பிடரியாய் காற்றில் பறக்கும் தன் நீண்ட முடியை கோதி விட்டபடி கடகடவென்று படியிறங்கி.. வந்தவனை எதிர்கொண்டனர்….. முகம் எங்கும் நன்றியோடு பூரிப்பும் நிறைந்திருக்க வினோத்தும் சாருலதாவும்…….
அவர்களைப் பார்த்து தானும் புன்னகைத்தவன் என்ன மச்சான்……1000 வாட்ஸ் பல்பை முகத்தில் மாட்டி விட்ட மாதிரி எவ்வளவு பிரகாசமாக இருக்கீங்க….. . வினோதை கேலி செய்தவன். சாருலதாவை பார்த்து…..
என்னமா என் மச்சானை உனக்கு பிடிச்சிருக்கா அவரை கல்யாணம் பண்ணிக்க…… சம்மதமா…? பிடிக்கலைனா சொல்லு உடனே வேற சூப்பர் மாப்பிள பார்த்துடுவோம்…….. அட்டகாசமாய் சிரித்தபடி கீழிறங்கி வந்தவனை………
தாவிச் சென்று அணைத்துக் கொண்டான் வினோத்…… நன்றி மாப்ள அதற்கு மேல் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை வினோத்தின்….. நெகிழ்ச்சி உணர்ந்து முதுகை தட்டிக் கொடுத்து விலகியவன்…..இன்னும் காதல் மயக்கம் தெளியலன்னு நினைக்கிறேன்….. நான் உங்கள் செல்லம்மா இல்ல உங்க தங்கச்சியோட புருஷன்……
தொடர்ச்சியான ருத்ராவின் சீண்டலில் சிலிர்த்தெழுந்த வினோத்……அது எப்படி மாப்பிள நீங்க முந்தா நேத்து ராத்திரி கூட அம்மு ன்னு நெனச்சு….. என்ன கட்டி கட்டிப் பிடிக்கப் வந்தீங்களே அப்படியா…..? அவர்கள் இருவரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் கேலி பேசி தங்களுக்குள் வாரிக்கொள்ள……
போதும் போதும் நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டது…. சலித்துக் கொள்வது போல் சந்தோஷமாக சிரித்தவள்…… அம்மு எங்க அண்ணா…? நான் போய் அவங்களை பார்த்து விட்டு வருகிறேன்….. என்றவளுக்கு….. மாடியில் அம்ருதா இருக்கும் அறையை சுட்டி காட்டிய ருத்ர பிரதாப் வினோத் தோடு பேச ஆரம்பித்தான்…….
சாருலதா அம்ருதாவை காணச் சென்று சிறிது நேரத்திலேயே…. படபடவென்று இறங்கி வந்தவள். வினோ….. அம்மு அவங்க ரூம்ல இல்லை நான் முதலில் வெளியே நின்று கூப்பிட்டு பார்த்தேன்…. அவங்க கதவை திறக்கவில்லை சரின்னு உள்ளே போய் பார்த்தபோதும் அங்கேயும் அவங்க இல்லை…..
சாருலதா சொல்ல அப்போது கூட வினோத் அவள் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்….. நீ சரியா பாத்து இருக்க மாட்டேன்னு நான் நினைக்கிறேன்….. நீ வேற ரூம்ல போய் கதவை தட்டிட்டு வந்திருக்க……
வா போய் அம்முவை பார்க்கலாம்….. என்ற தோடு மூவரும் அம்ருதாவின் அறைக்கு அருகில் வர……. இந்த அறையில் தான் நான் கதவைத் தட்டினேன் அவங்க இங்கே இல்லை……வேணும்னா நீங்க வந்து பாருங்க என்றவாறு சாருலதா சென்று கதவை திறந்தாள்…….
திறந்த கதவின் வழியே புயலின் வேகத்தோடு உள்நுழைந்தவர்கள்……அந்த அறையில் தாங்களும் தேட அவர்களுக்கும் தோல்வியே மிஞ்சியது…….அவர்களின் பிரியத்திற்குரிய அம்மு…… சில கயவர்களால் கடத்தப்பட்டது சற்று தாமதமாய் இருவருக்கும் புரியவர…….
அடுத்து வந்த ஒரு மணி நேரத்தில் அந்த அரண்மனை , அதைச் சுற்றிய தோட்டப்பகுதி அனைத்தும் சல்லடைப் போட்டு தேடி முடித்தும்……அம்ருதா எங்கே யாரால் கடத்தப்பட்டாள் என்று ஒன்றும் புரியாமல்…….
அவள் மீது உயிரையே வைத்திருக்கும் அம்முவின் அண்ணனும் கணவனும்……அடுத்து செய்வதறியாது….. கைகளைப் பிசைந்தபடி ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்த்தவாறு நின்றிருந்தனர்…….
உயிர்த் துணை சேரும்……..
உன் துணை தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
அத்தியாயம்.43
அடுத்து என்ன செய்வது எங்கே போவது எதை பற்றி சிந்திப்பது….. இது எதுவுமே தெரியாத முழுமையான சூனியத்திற்கு மூழ்கியது போல்…….. மூளை செயலிழந்து போக….
திக்குத் தெரியாத காட்டில் தன் அன்னையின் அரவணைப்பை தேடி தவிக்கும்….. சிறுவனாய் தன் வாழ்வில் முதல் முறை ருத்ர பிரதாப் என்னும் சூறாவளி செயல் இழந்து நின்றது…….
முன் ஜாக்கிரதை என்பது அவனின் உடன்பிறந்த குணமாகும் , எதுவொன்றையும்…… மற்றவர்கள் நூறு முறை யோசித்தால் ருத்ரா ஆயிரம் முறை யோசித்து தான் ஒரு காரியத்தில் இறங்குவான்…. அதன் பிறகு அவனின் வெற்றி என்பது உறுதிப்பட்ட ஒன்றாகிவிடும்……
அப்படிப்பட்ட திட்டமிடலில் சிறந்து விளங்கும், ஒருங்கிணைப்பில் முதன்மையானவனாக திகழும்…….ருத்ர பிரதாப்பின் மனைவியை . அவன் இருக்கும் அரண்மனையில் புகுந்து அவளுக்கு கெடுதல் ஏற்படுத்த….. அத்தனை துணிவு யாருக்கு உண்டு….???? இதுதான் அவன் நினைத்திருந்தது……
ஒருவேளை இந்த அதிகப்படியான தலைக்கணம் தான் இன்று அவன் கண்மணியை தொலைத்துவிட்டு….. தேடுவதற்கு காரணமாகிப் போனதோ……. ஆனாலும் அவன் அப்படி ஒன்றும் கண்காணிப்பை தளர்த்தி விடவில்லையே……
என்று அவளை முதல் முறை தன் எல்லைக்குள் அனுமதித்தானோ….. அன்றிலிருந்து இன்றுவரை அம்ருதா விற்கும் அவள் சகோதரனுக்கும்……. மிக பலமான பாதுகாப்பும் கண்காணிப்பும் ருத்ர பிரதாப் பால் வழங்கப்பட்டு வருகிறதே……பிறகு எப்படி…..??????
அதுவும் அவன் அவளைப் பார்த்து விட்டு கீழே இறங்கி வந்து ஒரு மணி நேரம் கூட ஆகி இருக்காது……வெளியாட்கள் வந்து கடத்துவதற்கு சிறு வாய்ப்பு கூட இல்லாத போது….? அந்த அரண்மனையை மொத்தமாய் தலைகீழாக புரட்டிப் பார்த்தும் ,அங்கிருப்பவர் ஒருவரை விடாமல் விசாரித்தும் எந்தப் பலனும் ஏற்படாமல் போக……
எங்கு சென்று எப்படி தன்னவளை மீட்டு வருவது என்று புரியாமல் அப்படியே அரண்மனைத் தோட்டத்தில் புல் தரையில் அமர்ந்து விட்டான் ருத்ர பிரதாப்…… இப்போது அவனுக்குத் தேவை மன அமைதி….
சஞ்சல படுவதாலோ தவித்து துடிப்பதாலோ நடக்கப் போவது என்று பார்த்தால் ஒன்றும் இல்லை…….. தன் மனதை ஒரு நிலைப்படுத்தி…… யோசிக்க ஆரம்பித்தான்…..
ருத்ர பிரதாப் உடன் சேர்ந்து உள்ளம் பதறப் பதற தன் தங்கையைத் தேடி ஓய்ந்த போதும் கூட…… தன் தேடலை நிறுத்த மனமில்லாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான் அந்த பாசமிகு சகோதரன்……. இவர்கள் அனைவரின் கவனத்தையும் ஒரு நொடியில் தன்புறம் திருப்பியது ருத்ர பிரதாப்பின் செல்போனுக்கு வந்த அந்த அழைப்பு…….அந்த அழைப்பு கூட அந்த நிமிடம் பெறும் திகிலை அனைவர் மனதிலும் விதைத்தது…….
மிக அமைதியோடு தன்னுள்ளே ஆக்ரோஷத்துடன் பொங்கும் அனைத்து உணர்வையும் கட்டுப்படுத்தி….. ஒளிரும் செல்போன் திரையை இரு நொடி வெறித்துப் பார்த்தவன்….. அதை அமைதியாக உயிர்ப்பித்து காதுக்குக் கொடுத்தான்…….
இவனின் ஹலோ என்ற நிதானமான குரலே எதிராளியை சிறிது குழப்பமடைய வைத்திருக்கும்…. என்பது அவன் இரு நொடி அமைதியாகி மறுபடியும் பேசியதிலேயே ருத்ர பிரதாப் பால் உணர்ந்து கொள்ள முடிந்தது……..
என்ன ருத்ர பிரதாப் உன்னோட உயிருக்குயிரான பொண்டாட்டிய தேடித்தேடி கலைச்சு போய்ட்டா போல இருக்கு…… எதிர்முனை நக்கலடிக்க தன் மூச்சுக்காற்றில் கூட வித்தியாசம் காட்டாது அமைதி காத்தான் ருத்ர பிரதாப்……
அவன் கதறுவதை யும் கெஞ்சுவதையும் தன் மனம் குளிர கேட்டு அனுபவிக்க நினைத்த அந்த ஜீவனுக்கு ஏமாற்றமே….. மிஞ்சியது போலும் இவன் என்ன மனுஷன் தானா…? என்று தன் மனதில் எழுந்த ஆற்றாமையை மறைத்துக் கொண்டு…….
நீ உன்னோட பீலிங்ஸ்ஸ…. வெளியே காட்டாமல் பேசினா….? நான் உனக்கு அவ முக்கியம் இல்லன்னு நினைத்து அவள விட்டுருவேன் மட்டும் தப்பு கணக்கு போடாத ருத்ரா….
உன்னோட ஸ்மார்ட்னஸ்ச என்கிட்ட காட்ட நீ முயற்சி பண்ணா….? அப்புறம் உன் பொண்டாட்டி உனக்கு முழுசா கிடைக்கமாட்டாள் துண்டு துண்டா தான் உன் கைக்கு வந்து சேருவா…….
அந்த வார்த்தைகளில் அதுவரை இருந்த நிதானமும் அமைதியும் பறிபோக…… தன்னை மீறி……நோ…..என்று அலறியவன்….
டோன்ட் டாக் ரப்பிஷ்…. இப்போ உனக்கு என்ன வேணும்னு மட்டும் சொல்லு……
அவனை பொறுமை இழக்க செய்துவிட்ட எதிராளியின் முகத்தில் தோன்றிய வக்கிரம் நிறைந்த திருப்தி புன்னகையை ருத்ர பிரதாப் அறிந்திருக்க வாய்ப்பில்லை……
வெரி ஹாப்பி ருத்ரா , அந்த சாதாரண லோ க்ளாஸ் பொண்ணுக்காக நீ இவ்வளவு தூரம் இறங்கி வருவேன்னு….. நான் எதிர்பார்க்கவே இல்லை……
எப்பவும் எல்லாரையும் ஆர்டர் பண்ணிய பழகின த கிரேட் பிஸினஸ் மேக்னட் மிஸ்டர் ருத்ர பிரதாப்……. தன் வாழ்க்கையிலேயே ஃபர்ஸ்ட் டைம்…
என்கிட்ட அவன் பொண்டாட்டிக்காக கெஞ்சுரதை…..கேட்க எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா……இப்போதும் ருத்ர பிரதாப் அமைதியாக இருக்க…..
வேற ஒன்னும் பெருசா தேவை இல்லை ருத்ரா ரொம்பச் சின்ன விஷயம் தான்….. உன்னோட உயிர்…..!!! . நீ மட்டும் உன் உயிரை விட்டுட்டேனா….? உன்னோட பொண்டாட்டி ரொம்ப பாதுகாப்பா திரும்ப வந்துருவா…..த சாய்ஸ் இஸ் யுவர்ஸ்…..
உனக்கு உன் பொண்டாட்டியும் அவ வயித்துல வளர்ர….. உன்னோட குட்டி பேபியும் வேணுமா…? இல்ல அவங்க ரெண்டு பேரும் எப்படி போனாலும் பரவாயில்லை…… பீஸ் பீஸா ஆனாலும்…. எனக்கு ஒன்னும் இல்லன்னு நீ இருக்க போறியா…….இதை மறுபடியும் நான் கால் பண்ணும்போது முடிவு பண்ணி சொல்லு….. என்றதோடு எதிர்முனை கட்டாக……
அதுவரை தரையில் அமர்ந்திருந்தவன் வினோத் என்று கத்தி அழைத்தபடி… வேகமாக எழுந்து நடந்து கொண்டே அரவிந்தனுக்கு அழைத்தான்…… ஹலோ பாஸ் சொல்லுங்க….
லிசன்… அரவிந்த் இப்போ ரெண்டு நிமிசத்துக்கு முன்னாடி என்னோட போன் க்கு. ஒரு கால் வந்துச்சு…. அது எங்கிருந்து வந்துச்சு யாருட நம்பர் எல்லாமே எனக்கு தெரியணும்……..டோன்ட் பீ லேட்….. சீக்கிரம் கட்டளை இட்டவன் அவனருகில் வந்த வினோத்தை கண்டு ஒரு நொடி நிதானித்து……
அம்ருதாவுக்கு எதுவும் ஆகாது…. நான் ஆகவும் விடமாட்டேன்….. தனக்குத்தானே உறுதிப் போல் சொல்லிக்கொண்டான்…… இவன் பேச்சின் தீவிரம்…… அவனை குழப்பம் அடையச் செய்ய என்னாச்சு மாப்ள இப்போ யார் போன் பண்ணா…. அவன் என்ன சொன்னான்……வினோத்தின் பதட்டத்திற்கு நேர்மாறாக……
எதுவும் இல்லை…. அத்தோடு அந்தப் பேச்சை முடித்து கொண்டவன்…… அமைதியாக அங்குமிங்கும் நடக்க…. அடுத்த ஐந்தாவது நிமிடம் ருத்ராவை அழைத்திருந்தான் அரவிந்தன்…..
பாஸ் அந்த நம்பர் மும்பையில் இருக்க ஒருத்தரோட….. பெயரில் ரிஜிஸ்டர் ஆயிருக்கு அங்கிருந்துதான் உங்க கிட்டேயும் ஃபோன் பேசியிருக்கான் நம்ம…. ஆளுங்க அங்க போய் இருக்காங்க அது யாருன்னு தெரிஞ்சுக்க………நோ….
அரவிந்தனின் பேச்சில் குறுக்கிட்டவன் நோ அரவிந்த் அந்த ஆளு மும்பையில் எல்லாம் இல்லை…… இங்க தான் !! இங்க தான் எங்கேயோ இருக்கான் என்னோட உள்மனசு அது நல்லா உணருது……
இரண்டு நிமிடங்கள் கண்மூடி தன் வலது கை கொண்டு பின்னங்கழுத்தை வருடியவாறு யோசித்தவன்…….. அடுத்து கண்கள் திறந்த போது….. அதில் தெரிந்த ஜொலி ஜொலிப்பு அவனின் வேட்டையை அவன் கண்டு கொண்டதை உறுதிப்படுத்தியது…….
என்னிடமே விளையாட உனக்கு அவ்வளவு தைரியமா……!!..?? நான் ருத்ரன் என்பதை மறந்து விட்டாயே நண்பா… மனதோடு பேசியவன்…….
அரவிந்தனிடம் ஒரு பெயரை சொல்லி அவன் இந்த நிமிஷம் எங்க இருக்கான் என்ன பண்ணிட்டு இருக்கான்னு….. எனக்கு தெரியணும் அரவிந்த்……தன் கணிப்பு மட்டும் சரியாக இருந்தால்…? இன்னும் ஒரு சில….. நிமிடங்களில் எந்த பாதிப்பும் இன்றி அவன் மனைவி அவன் கைகளுக்குள் இருப்பாள்…… இருக்க வேண்டும்……
அரவிந்தனுக்கு மேலும் சில உத்தரவுகள் பிறப்பித்தவன் அடுத்து போனது அவன் பாட்டி சுபத்ரா தேவியின் அறைக்கு……
அடுத்து வந்த நிமிடங்களில் அவன் கணக்கிட்டது…… அனைத்தும் சரியாக பொருந்திப்போக….. கிளம்பி விட்டான்…. ருத்ர பிரதாப்…..
தேவையின்றி சிங்கத்தின் பிடரியைப் தொட்டுப் பார்க்க முயன்றவர்களுக்கு சரியான வெகுமதி அளிக்க……
சிறிது சிறிதாக மயக்கம் தெளிய தன் உணர்வு பெற்ற அம்ருதா தன் விழி திறந்து எங்கிருக்கிறோம் என்பதை அறிய முற்பட்டாள்…… ஒரு நாற்காலியோடு அவளைப் கயிறுகள் கொண்டு கட்டிப் போட்டிருக்க……
அவள் முன்பு நின்று இளக்காரமாக தன்னைப் பார்க்கும் அந்த இருவரையும் சற்று தன் புருவம் சுருக்கி….. பார்த்த அம்ருதாவிடம் அதைத் தவிர பயமோ, பதட்டமோ அதுபோன்ற வேறு உணர்ச்சிகளோ சிறிதும் இல்லை……அதுவே அவளை கடத்தியவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது…….
அந்த ருத்ர பிரதாப் தான் தாங்கள் எண்ணியதற்கு மாறாக அமைதியாய் நடந்து கொண்டு அவர்கள் உயிரை எடுத்தான்
என்றால் …..
அவன் மனைவி இந்த பிச்சைக்காரி கூட இப்படி அவர்கள் அவளை கடத்தி வந்தவர்கள் என்று துளி கூட பயமின்றி எப்படிப் பார்க்கிறாள் பார்…… ஹேமாவதி க்கு பற்றிக் கொண்டு வந்த ஆத்திரம்….. இன்னும் பற்றி எரிய….. அதில் எண்ணெய் ஊற்றுவது போல் அம்ருதா பேச ஆரம்பித்தாள்…….
என்ன டூப்ளிகேட் மாமியாரே பெரிய வில்லி மாதிரி வேலை எல்லாம் பாக்குறிங்க போல இருக்கு…..? . என்றவள்……. இவங்க என்ன கடத்தின அதுல ஒரு அர்த்தம் இருக்கு…. ஆனா மிஸ்டர் முகுந்தன்…!!! ??
நீங்க எதுக்காக இப்படி…? இந்த ஹேமாவதி கூட சேர்ந்து என்ன கடத்திட்டு வரணும்னு நான் தெரிஞ்சுக்கலாமா……. அம்ருதாவின் கேலியான குரலும் பேச்சும்….. முகுந்தனை உசுப்பிவிட……
அதுவரை நின்றிருந்தவன் ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அம்ருதாவை மிக நெருங்கி அமர்ந்தான்…… என்னதான்…… நீ ஒன்னும் இல்லாத மிடில் கிளாஸ் பொண்ணா இருந்தாலும் உன் கிட்ட என்னமோ ஒரு அட்ராக்ஷன் இருக்கு….. ரகசியம் போல் சொன்னவன்……
அப்படி இல்லாமலா ருத்ர பிரதாப் மாதிரி ஒரு ஆளை உன் முந்தானையில் முடிச்சு வைத்திருக்க…… உன்னால் தான் எங்களோட எல்லா சூழ்ச்சியில் இருந்தும் அவங்க ரெண்டு பேரும் தப்பிக்க முடிந்தது…… என்றவன் இன்னும் சற்று அவளருகில் நெருங்கி…..
தன் மூச்சை ஆழ்ந்த உள்ளிழுத்தவன் ரொம்ப வாசனையா இருக்கியே அம்ருதா…. அந்த ருத்ரா இதில் தான் உன்னிடம் மயங்கிட்டானோ….அவனின் எந்த பேச்சிற்கும் சிறிதுகூட பதில் பேசாது கல்லைப்போல் அமர்ந்திருந்த அம்ருதா……. முகுந்தன் வாய்வழி சற்று முன்னால் அவன் கூறியதின் விலக்கம் அறிய விரும்பினாள்…….
என்னோட அண்ணா உனக்கு நல்ல நண்பன் அது மட்டுமில்லாம ருத்ராவும் உன்னோட பேஸ்ட் ஃப்ரெண்ட் அப்படி இருக்கும் போது எதுக்காக நீ என்ன கடத்தனும்…..? எனக்கு புரியல முகுந்த்……. அப்பாவி போல் முகம் வைத்து அம்ருதா கேட்க……
அவளின் கேள்விக்கு பேய்போல ஆங்காரத்தோடு கடகடவென்று சிரித்தவன்…… உன் அண்ணன் என்னோட நண்பனா….??? ருத்ரா எனக்கு பேஸ்ட் ஃப்ரெண்டா…?? நக்கல் இழையோடும் குறளில் கேட்டவன்…. அவங்க ரெண்டு பேரும் என்னோட பரம எதிரிங்கன்னு சொன்னா உன்னால நம்ப முடியுமா அம்ருதா……..
ஆணவத்தோடு கேட்டவன் அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்து அதைத்…..தூக்கி சுவற்றில் அடித்து உடைத்தவன்….. தன்னோடு அவர்கள் இருவருக்கான விரோதத்தை சொல்ல ஆரம்பித்தான்…..
என்னோட வாழ்க்கையில எனக்கு ரெண்டு விஷயம் ரொம்ப பிடிக்கும்……ஒன்னு கார் ரேசிங்…. ரெண்டு பிஸ்னஸ் சின்ன வயசிலேயே எனக்கு பிடித்த….. கார் ரேசிங் பண்ண எங்க அப்பா எனக்கு அனுமதி கொடுத்ததே இல்லை…….அவர் மட்டும் மனசு வெச்சிருந்தா இன்னைக்கு நான் ஒரு பெரிய கார் ரேஸரா உலகம் முழுவதும் பிரபலமானவனா இருந்திருக்கலாம்…..
தன் மனதோடு பேசுவது போல் முகுந்தன் பேச ஆரம்பித்த அவனிடம் ஏதோ ஒரு மாற்றம்……. அவனையே பார்த்துக்கொண்டிருந்த அம்ருதா விற்கு திடிரென்று அப்படி தோன்றியது…. இந்த முகுந்தன் சற்று மனநிலை சரி இல்லாதவனோ….?
எப்பவும் பிசினசை பத்தி மட்டுமே படிக்கணும் அதைப் பத்தியே பேசணும்…. பிசினஸ் செய்வதற்காகத்தான் நான் பொறந்திருக்கேன்னு சொல்லி சொல்லியே என்னை வளர்த்தார்…… ஆனாலும் எனக்கு கார் ரேசிங் மேலே இருந்த வெறி மட்டும் போகவே இல்லை……
அதுக்காகத்தான் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாய்…… சென்னையில் நடக்கிற இல்லீகல் நைட் கார் ரேஸில் கலந்துக்க ஆரம்பிச்சது……அதுல கிடைச்ச வெற்றி….. என்னை பார்த்து கைதட்டிய ரசிகர்கள்…. நான் ஆசைப்பட்டது எல்லாமே எனக்கு கிடைச்சது….. அதாவது உன்னோட அண்ணன் எனக்கு போட்டியா வர்ற வரைக்கும்…….
என்னோட ஸ்டேட்டஸ் முன்னாடி நிக்க கூட தகுதி இல்லாத ஒரு சாதாரண டிரைவர் வேலை பாக்குற ஒருத்தன்…..என்னை கார் ரேஸில் வின் பண்ணும்போது எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா….? அவளிடம் திரும்பி கேட்டவன்……..
காரை ஏற்றி அவன் கதையை முடித்துவிடலாம் என்று தோணும்……. அவள்முகத்திற்கு மிக அருகில் வந்து சொன்னவன் மீண்டும் ஒரு வெறி சிரிப்பை வெளியிட்டான்…….
அதற்கும் அம்ருதா அவனை கூர்மையாக பார்த்ததைத் தவிர முகத்தில் வேறு வித்தியாசங்கள் காட்டவில்லை……. ஆனா எனக்கு இந்த வன்முறையில் எல்லாம் நம்பிக்கையே இல்லை……நன்றாக வேலை செய்யும் வேலைக்காரனை எப்பவும் நமக்கு அருகில் வெச்சுக்கணும்னு எங்க அப்பா அடிக்கடி சொல்வார்……
என்னை எதிர்த்து ஜெயிச்சவன் அதுக்கப்புறம் கார் ரேசிங் பண்ணவே கூடாது என்கிற காரணத்துக்காக தான்….. சிவானந்தம் கிட்ட அவனுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து வினோத்த காலம் முழுக்க ஒரு சாதாரண வேலைக்காரனாக இருக்க வச்சேன்……..இதை கூரும் போது…. எதையோ சாதித்து விட்ட பெருமை அவன் குரலில்…..
பற்றிக் கொண்டு வந்த ஆத்திரத்தை அடக்கிக் மேலும் அவனிடம் இருந்து விஷயங்களில் வாங்க முயன்றாள் அம்ருதா…. அவளுக்கு அந்த முகுந்தனால் தன் வாழ்க்கையில் நடந்தது என்னென்ன என்கிற தெளிவு தேவைப்பட்டது……
நீ சொல்றதை பார்த்தா எங்க அண்ணன் மேல உனக்கு பொறாமை மட்டும் தான் இருந்திருக்கு….. அது சரி அப்போ ருத்ர அவருக்கும் உனக்கும் என்ன பிரச்சனை……அதுவரை கூட சற்று அமைதியாக இருந்தவன் ருத்ராவின் பெயரை அவள் உச்சரித்த நொடியே பற்றிக் கொண்ட தீக்கங்குகள் போல்……. அவன் கரு விழிகளில் பல பலத்தது……
அந்த வினோத் என்ன கார் பந்தயத்தில் தோற்கடித்தான்னா……. இந்த ருத்ரா என்னோட வாழ்க்கைல்லையே என்ன மொத்தமா தோற்கடித்து விட்டான்……இதைக் கூறும்போது அவன் முகத்தில் வந்து போன சிறுவனின் சாயலைக் கண்டு திகைத்தாள் அம்ருதா……
எங்க அப்பா உடன் நானும் பிசினஸ்ல இறங்கி கொஞ்சம் கொஞ்சமா எங்களோடு தொழிலை முன்னுக்குக்…. கொண்டு வந்து கொண்டு இருந்த காலகட்டத்தில்தான் உன்னோட ருத்ரா ஏன் வழியில குறுக்க வந்தான்…….22 வயசுல பிஸ்னஸ் வேர்ல்டு உள்ளே தனியாளா இறங்கி….
அவன் அடைந்த ஒவ்வொரு வெற்றிலையும் என்னுடைய தோல்வி எழுதப்பட்டிருந்தத அவன் கவனித்திருக்க…..வாய்ப்பில்லை ஆனால் என்னோட அப்பா ஒவ்வொரு நாளும் அந்த ருத்ரா கூட….. என்ன கம்பேர் பண்ணிப் பண்ணி அவர் சொன்ன ஒரு வார்த்தையும் அதை கேட்டு நான்….. அனுபவித்த சித்ரவதைகளையும் என்னால் எப்போதும் மறக்க முடியாது…….
அவன மாதிரி ஒரு மகனைப் தான் பெற்று இருக்கணும்….. உன்னை எல்லாம் பிறந்தவுடனேயே சாகடித்து இருக்கணும்….. என்று எங்க அப்பா அடிக்கடி என்கிட்டே சொல்லுவார் தெரியுமா……பாவம் போல் அவள் முகம் பார்த்து கேட்டான் முகுந்தன்……அப்போ முடிவு பண்ணினேன் ஏதாவது செஞ்சு அந்த ருத்ராவ……வாழ்க்கையில் ஒரு தடவையாவது நான் ஜெயிக்கணும்னு……
சிவானந்தத் கூட சேர்ந்து அவனுடைய பிசினஸா மொத்தமாய் இழுத்து மூட ஒரு பெரிய பிளான்…… ரொம்பவே யோசிச்சு யோசிச்சு பொறுமையா நான் செஞ்ச அந்த பிளான்…… மட்டும் வெற்றி பெற்றிருந்தால் இன்னைக்கு ருத்ர பிரதாப் அப்படின்னு ஒரு பிசினஸ்மேன் இருந்திருக்கவே மாட்டான்…….
ஒருவகையில் என்னோட இந்தப் பழிவாங்கும் நாடகத்தில் நீ உள்ளே வந்ததும் இந்த நேரத்தில் தான்…….. அவன் சொல்ல சொல்ல தன்னோடு சேர்த்து மற்றவர்களும் எப்படிப்பட்ட ஒரு சதி வலையில் சிக்க வைக்கப் பட்டு இருக்கிறோம்….. என்று நினைத்து அம்ருதாவுக்கு பகிர் என்று இருந்தது…….. ஒரே அடியில் எத்தனை மனிதர்களின் வாழ்க்கையை சிதைக்க முயன்றிருக்கிறான் இந்த முகுந்தன்……
ஆனா என்னோட திட்டம் எல்லாம் சக்சஸ் ஆகுற கடைசி நேரத்தில் கண்டுபிடித்து மொத்தமாக அழித்து விட்டான் அந்த ருத்ரா……அப்படி அவன் பண்ணதால எனக்கு எவ்ளோ பணம் நஷ்டம் ஆச்சுன்னு உனக்கு தெரியுமா 350 கோடி…… பணம் மட்டுமா போச்சு என்னோட அப்பா என்கிட்ட இருந்த எல்லா அதிகாரத்தையும் பிடுங்கி….. எங்க ஃபேக்டரிலையே என்ன ஒரு சாதாரண வேலைக்காரனா அப்பாயிண்ட் பன்னி அவமானப்படுத்தினார்…… இது எல்லாத்துக்கும் காரணம் அந்த ருத்ர பிரதாப்……
முகுந்தன் சொல்வதைக் கேட்க, கேட்க அம்ருதாவிற்கு அவனைப் பார்த்து அடப்பாவி…. பண்றது எல்லாத்தையும் நீ பண்ணிட்டு…. தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய புருஷன….நீ தப்பு சொல்லுவியா….. என்று கேட்கத் தோன்றினாலும் தான் இருக்கும் நிலை உணர்ந்து….. தன் நாவை கட்டிப் போட்டாள்….
அவளுக்கு தன் கணவன் மீது வேறு அந்த நேரம் பயங்கர கோபம் வந்தது…… இந்த முகுந்தன் அவளைக் கடத்தி வந்து எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகியிருக்கும்…… இன்னும் அவள் இருக்கும் இடம் கண்டுபிடித்த வந்து சேராமல் என்ன பண்ணிட்டு இருக்கான் முட்டாள்….. மனதிற்குள் கணவனை திட்டியவள்…… முகத்தில் எந்த பாவனையும் காட்டாது முகுந்தனை பார்த்தபடி இருந்தாள்…..
அவனோ தன் வெற்றி கதையை தொடர்ந்தபடி இருந்தான்…… அப்போதுதான் சிவானந்தம் பிளான் பின்னாடி நான் இருக்கேன்னு தெரியாமல் அவனுக்கு தண்டனை தருவதாக நினைச்சு….. சாருலதாவை அக்ரிமென்ட் போட்டு கல்யாணம் பண்ண ருத்ரா முயற்சி பண்ணான்…..
ஆக்சுவலி எங்களால அப்போ ருத்ராவை எதிர்த்து ஒண்ணுமே பண்ணல முடியல… ஏன்னா….? அந்தப் போலி பொருள் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் மொத்தமா அவன் கையில இருந்துச்சு….
ருத்ரா மட்டும் நினைச்சா சிவானந்தம் மேல கேஸ் போட்டு அவரை வாழ்க்கை முழுக்க ஜெயில்ல வைக்க முடியும்……. சிவானந்தம் பிரச்சனையில் சிக்கி கிட்ட நானும் மாட்டிக்குவேன்……என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் ரெண்டு பேரும் முழி பிதுங்கி நிற்கும்போதுதான்……
உன் அண்ணன் தானா வந்து தலையைக் கொடுத்து… இந்தப் பிரச்சினையில் இருந்து எங்களை வெளியே கொண்டு வந்து உன்னையும் இதில் சிக்க வைத்தான்…… அப்போது உருவானதுதான் எங்களோட மாஸ்டர் பிளான்…… என்னோட இரண்டு எதிரிகளையும் மோதவிட்டு ரெண்டு பேரையும் ஒரே நேரத்தில் க்ளோஸ் பண்றது……
ருத்ர பிரதாப் ,அம்ருதா ,சாருலதா, வினோத் இவர்கள் நால்வரின்…. வாழ்க்கையிலும் நடந்த சதி வேலையின் பின்னணியை ஒவ்வொரு பாகத்தையும் விவரிக்க ஆரம்பித்தான் முகுந்தன்…….
உயிர்த் துணை சேரும்………
உன் துணை தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
அத்தியாயம்.44
வினோத் சாருலதாவை காப்பாற்றிக் கூட்டிட்டு போனதை…… கூட அவனுக்குத் தெரியாமல் அவங்க ரெண்டு பேரும்….ஓடிப் போற மாதிரி வீடியோ செட் பண்ணி அது ருத்ரா கைக்கு கிடைக்கிறா மாதிரி சேர்ந்தோம்…….
அம்ருதாவின் முகம் பார்த்து அவளுக்கும் அவளை சேர்ந்தவர்களுக்கும் தன் செய்த சதி வேலைகள்….. அனைத்தையும் பெருமையாய் கூற ஆரம்பித்தான் முகுந்தன்…..அந்த வீடியோ ருத்ரா கைல கெடச்ச உடனே நாங்க நினைச்சது எல்லாமே அடுத்தடுத்து வெற்றிகரமாக நடக்க ஆரம்பிச்சுது……..
எங்க மேல இருந்த பார்வையை உங்க அண்ணன் மேல் கொண்டு வந்தான் ருத்ர பிரதாப்……எங்களோடு திட்டப்படி அவன் உன்னை கடத்தி கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி , 100 நாள் கழிச்சு……. வினோத் வரும்போது நீ இருக்க நிலைமை,….. ஒரு பாசமான அண்ணனா வினோத் என்ன செய்வான்…….
அந்த ருத்ர பிரதாப் பை மொத்தமாக அழித்து விட்டு அவனும் ஜெயிலுக்கு போயிடுவான்……… நாங்களும் கேஸ்ல இருந்தும் தப்பித்து விடுவோம்…… என்னுடையது பரம எதிரிகள் ரெண்டு பேரும் என் கண்ணு முன்னாடியே அழிந்து போய்டுவாங்க…….. எப்படி அம்ருதா என்னோட மாஸ்டர் ப்ளான்……
கண்கள் பளபளக்க ஒரு சிறுவனின் குதூகலத்தோடு அவளை அழிக்க தான் போட்ட திட்டத்தை….. தன்னிடமே கூறும் அந்த மனிதனின் மனநிலையை சரிவரப் புரிந்துகொள்ள முடியாமல்….. அவனையே பார்த்திருந்தாள் அம்ருதா…….. நாங்க நெனச்சபடி எல்லாமே சரியா தான் போய்கிட்டு இருந்துச்சு…….
நீ ருத்ரா கைல கிடைச்சதுக்கு அப்புறம் உங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியல…… தெரிந்து கொள்ளவும் எங்களால் முடியலை……ருத்ர பிரதாப்பை கண்காணிக்கிறது நடக்கவே நடக்காத ஒரு விஷயம்…….தன்னை யாராவது சில நிமிஷம் அதிகப்படியா கவனிச்சா கூட அவன் யாரு என்னன்னு முழு சரித்திரத்தையே தோண்டி எடுத்து விடுவான் அந்த அளவுக்கு ருத்ர பிரதாப் திறமைசாலி……..
அதனாலதான் நண்பன் என்கிற போர்வையில் நான் உங்க ரிஷப்ஷன் அன்னைக்கு அங்கே வந்தேன்……. ஆனா என்னால உங்க ரெண்டு பேரோட முகத்தைப் பார்த்து பேசி கூட எந்த ஒரு சின்ன விஷயத்தை…… தெரிந்து கொள்ள முடியவில்லை தோல்வியோடு அங்கிருந்து வந்திட்டேன்………
உங்க கல்யாணம் நடந்த பிரம்மாண்டம் ரிசப்ஷன் நடந்த ஆடம்பரம் உங்க ரெண்டு பேரின் ஜோடி பொருத்தம்….. எல்லோரைப் போலவே…… எனக்கு கூட நீங்க ரெண்டு பேரும் உண்மையா விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட ஜோடி தானோன்னு தோன ஆரம்பிச்சிருச்சுனா பார்த்துக்கோயேன்……
உங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன நடக்குதுன்னு தெரியாம நாங்க திணறிக் கொண்டு இருந்தபோதுதான் மறுபடியும் உங்க அண்ணன் கிட்ட பேசுற வாய்ப்பு கிடைச்சது…….நான்தான் அவனுக்கு நடக்கிற எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தெரியாமலே……
என்கிட்டயே உன்னை பத்தி சொல்லி உன்னிடம் பேசணும்னு உங்க அண்ணன் உதவி கேட்டான்……. முகுந்தன் கிண்டலாக கூற தன் அண்ணனை சுற்றி பின்னப்பட்ட சூழ்ச்சியை நினைத்து ஒரு தங்கையாய் அவள் மனம் மிகுந்த வருத்தத்தை உணர்ந்தது……….
வினோத்துக்கு உதவி செய்வதாய் நடித்து மறுபடியும் நான் அரண்மனைக்கு வந்து உங்களை சந்தித்தேன்…..ஆனா இந்த தடவ நான் நினைத்தத்துக்கு மாறாக நீ கொடுத்த ஒத்துழைப்போடு….. உனக்கே தெரியாமல் உன் கூட நெருக்கமா இருக்கா மாதிரி ருத்ர பிரதாப் பார்க்க நான் நடித்தது ரொம்ப நல்லாவே வேலை செஞ்சுச்சு…….அன்றைய ருத்ர பார்த்தபின் கோப முகத்தை இன்று பார்த்து ரசிப்பது போல் கண்களை மூடி சொன்னவன்…..
அது மட்டும் இல்லாமல் உன்னை அரண்மனைக்குள்ள அனுப்பிவிட்டு அவனிடம் வந்து உன்ன….. பத்தி ஏதாவது பேசி உங்களுக்குள்ள பிரச்சினையை உண்டு செய்ய நான் நினைக்க……. என்னை கஷ்டப்படுத்தாமல் அந்த மயூரியே ருத்ரா கிட்ட என்னுடன் நீ வந்ததை சொல்லி….. நீ எல்லாம் ஒரு ஆம்பளையா !! அப்படிங்கிற மாதிரி பேசுவதைக்…. கேட்டு சந்தோஷமா அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன்…….
இம்முறை முகுந்தனின் வார்த்தைகள் அவளுக்கு……. எதை எதையோ ஞாபகப்படுத்த சட்டென்று தன் விழி மூடி துளிர்த்த கண்ணீரை அடக்கினாள் அம்ருதா….. எந்த நிலையிலும் இவர்கள் முன் கண் கலங்க கூடாது….. மனதிற்குள் உறுதியாகச் சொல்லிக் கொண்டவள்…….. யாரோ இருவரின் பொறாமையாலும் பழி வெறியாலும் அவளும் அவள் கணவனும் பட்ட பாடுகள் தான் எத்தனை……. கடந்த கால நிகழ்வுகள் இன்னும் கூட நினைக்கும் போதே மனதிற்கு வேதனையை கொடுத்தது……
ஆனா அதுக்கு அப்புறமும் , கூட உங்களுக்கு நடுவுல பெருசா எந்த பிரச்சனையும் நடந்த மாதிரி தெரியல……. திடீர்னு ஒரு நாள் உங்க கல்யாண அக்ரிமென்ட் வெளிய மீடியாவுக்கு லீக் ஆயிடுச்சு…..இந்த உலகத்துக்கு முன்னாடி அந்த ருத்ரா அசிங்கப்பட்டு நிக்கப் போறான்னு நான் சந்தோஷமா நினைச்சப்போ…… அடுத்த அரை மணி நேரத்தில் அவன் அந்தப் பிரச்சனையை சரி செய்து விட்டான்……இப்போது முகுந்தனின் குரலில் அளவுக்கு அதிகமாகவே பொறாமையோடு சேர்ந்த எரிச்சலும் எட்டிப் பார்த்தது…….
உங்கள் இருவரின் இடையிலும் என்ன நடக்குது தெரியாம நாங்க திணறும் போது……. அந்த தலை வலி பத்தாது என்று…. இந்த சாருலதா உங்க அண்ணனை விரும்புகிறேன், கல்யாணம் பண்ணனும் அப்படின்னு சிவானந்த திடம் கேட்டு குதிக்க ஆரம்பித்து விட்டாள்……..
அப்போது தான் நாங்க எங்க திட்டத்தில் ஒரு சின்ன வித்தியாசம் பண்ணலாம்னு முடிவு பண்ணோம்….. வினோத்தை கடத்தி கொலை பண்ணிட்டா அந்தப் பழி ஆட்டோமேட்டிக்கா ருத்ர மேல விழுந்து விடும்…… யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பும் சாருலதாவை வைத்து அவனுக்கு எதிராக சாட்சி ரெடி பண்ண நாங்க நினைச்சோம்…….
அந்த நேரத்தில் தான் நீயே எனக்கு போன் பண்ணி உன்னோட பிளானுக்கு என்கிட்ட உதவி கேட்ட….. எனக்கும் அங்கு என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டது……நானும் வந்தேன்…..
ருத்ராவை வெறுப்பேற்றுவது போல் உன்கூட சேர்ந்து டான்ஸ் ஆடினேன்…… பட் அன்னைக்கு எனக்கு பெரிய ஷாக்….. நீ மயங்கி விழுந்ததும் அந்த ருத்ர பிரதாப் கண்ணுல தெரிஞ்ச வலி காதல்….. உன்ன அணைச்சுக்கிட்டு அவன் துடித்த துடிப்பும்….. என்னால கொஞ்சம் கூட நம்ப முடியல…….
நாங்க போட்ட எல்லா ப்ளானும் மொத்தமாக சொதப்பி….அவன் உன்னை விரும்ப ஆரம்பித்து விட்டான்னு எனக்கு அப்போதுதான் முழுசா புரிய வந்துச்சு……. அடுத்து என்ன செய்வது என்று நான் யோசிக்கும் போதுதான் என் கூட கூட்டணி போட்டு அந்த ருத்ராவை அழிக்க ஹேமாவதி கிடைச்சாங்க……
தற்செயலா உங்கள் ரெண்டு பேரையும் பத்தியும் அவங்க பேசிக்கொண்டிருந்ததை கேட்டு…. நானே அவங்க கூட கூட்டணி வைக்க முடிவு பண்ணிட்டேன்……நாங்க எல்லாரும் சேர்ந்து வினோத்தை சாகடித்து அந்தப் பழியை ருத்ரா மேல போட முடிவு செய்த அந்த நேரத்தில் தான்……
நீ கர்ப்பமாகி உனக்கு அடியும் பட்டு உன்ன அந்த ருத்ரா சென்னைக்கு கொண்டு வந்தது……. அதுக்கப்புறம் எங்க பிளான் எல்லாமே மொத்தமா கொலாப்ஸ்……நாங்க வினோதை கடத்தி வைத்திருந்த இடத்தில் இருந்து அவனை அடுத்த ஒரு மணி நேரத்தில் காப்பாற்றி விட்டான் அந்த ருத்ரா……
ஒரு உயிரை கொல்ல நினைத்ததை சிறிதும் வருத்தம் இன்றி முகுந்தன் கூற……. அம்ருதாவிற்கோ மயக்கமே வருவது போல் தலை சுற்ற ஆரம்பித்தது……. எப்படிப்பட்ட கொடூரமான ஜென்மங்கள் என்று அவளுக்கு ஆத்திரமும் வந்தது…….. அதுவரை அமைதியாக இருந்தவள் வினோத்தை அவர்கள் சொல்ல நினைத்ததை தாங்கிக் கொள்ள முடியாமல்…….
ஒரு உயிரை சாகடிக்க நினைச்ச நீங்க எல்லாம் என்ன மனுஷங்க….? ..உங்களுக்கெல்லாம் எப்படிப்பட்ட தண்டனை கொடுத்தாலும் அது ரொம்ப குறைச்சலான தான் இருக்கும்…..என் புருஷனுக்கு மட்டும் இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சதுனா நீங்க ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டீங்க……
ஆத்திரமாக முகுந்தனையும் அவன் அருகில்…..அப்போதுதான் வெளியே போய்விட்டு வந்த ஹேமாவதியும் பார்த்து முறைத்த படி அவள் ஆத்திரமாக கூற… அவர்கள் இருவருமே அம்ருதாவை பார்த்து ஏளனத்தோடு சிரித்தனர்…….
இங்க இருந்து நீயும் உயிரோடு போகப் போறது இல்லை….. உன் புருஷனும் இனி உயிரோடு இருக்கப் போவதில்லை …… என்னா உன் உயிருக்கு விலையா நாங்கள் கேட்டிருக்கிறது அவனுடைய உயிர்…. பல ஆண்டுகளாக குரோதத்தையும் பலி வெறியிலும் ஊறிப்போன உள்ளத்தின் பிரதிபலிப்பாய் பளபளக்கும் கண்களோடு…… ஹேமா பதில் சொல்லிவிட்டு……. தனக்காகவும் தன் கணவனுக்காகவும் பயந்து கெஞ்சி கதறி அழும் அம்ருதாவை காணும் ஆவலோடு….. அவள் முகம் பார்க்க…..
அம்ருதவோ ஹேமாவதியின் வார்த்தைகள் தன்னை சிறிதுகூட பாதிக்காத……. தன் கணவனின் தீரம் உணர்ந்த காதலியாய் கம்பீரமாக ஹேமாவதியை பார்த்து. உதட்டில் தோன்றிய கேலி புன்னகையோடு அவள் அமர்ந்திருந்த கோலம்…..அவளை மோசமாய் தூண்டி விட…..
அங்கு சுவற்றில் இருந்த அலமாரியில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து வந்தவள்…. அம்ருதா விற்கு நேராக உயர்த்திப் பிடித்தபடி இப்போ சிரிடி….. பார்க்கலாம் என்று வெறி பிடித்தவள் போல் கத்திய ஹேமாவதி…….
அந்த சாந்திய என் வாழ்க்கையில் இருந்து நான் ஓட ஓட விரட்டினா மாதிரி…… உன்னையும் இந்த உலகத்தை விட்டே விரட்டி அடிக்கிறேன்டி என்றபடி…. அம்ருதாவை சுட முயன்ற ஹேமாவதி இடம் இருந்து…… நொடியில் துப்பாக்கியை பறித்துக் கொண்டான் முகுந்தன்…….
எதுக்காக இப்போ அம்ருதாவை கொலை பண்ண பாக்குற ஹேமாவதி , உனக்கு அறிவே இல்லையா…? . அவள் பாவம் என்றவன் இப்போது அம்ருதவின் புறம் திரும்பி…… நிஜமா அம்ருதா…..எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் உன்னோட இந்த அழகான கண்ணு நீ எப்பவும் சிரிச்சுக்கிட்டே பேசுற உன்னோட பேச்சு….. இது எல்லாமே எனக்கு ரொம்பவே பிடிக்கும்…….
அதனால நான் உன்னை ஒண்ணுமே பண்ண மாட்டேன்……. ஆனா அந்த ருத்ராவை…..? எனக்குப் பிடிக்கவே பிடிக்காது…..அவனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் அதனால அவனோட குழந்தையை மட்டும் நான் கொல்லாமல் விட மாட்டேன்………
நல்லவன் போல் பேசிக் கொண்டே போனவன் இப்போது துப்பாக்கியை அம்ருதாவின் வயிற்றுக்கு நேராக குறிப்பார்த்து பிடிக்க…….அதில் அதுவரை முகுந்தனின் செயலை எரிச்சலாக… பார்த்துக் கொண்டிருந்த ஹேமாவுக்கு ஒரு கொடூரமான திருப்தி உண்டானது…….
முகுந்தனின் மகாபாதக வார்த்தைகள் அளித்த அதிர்ச்சியில்…. அம்ருதாவின் முகத்திலும் முதல் முறை பயத்தின் சாயல் தோன்ற தன்னிச்சையாய்….. தன் உடல் குறுக்கி அவன் பார்வையில் இருந்து அவள் வயிற்றுப் பிள்ளையை மறைக்க அவள் முயல…….
அதற்கு அவசியமே இல்லை என்பதுபோல் அந்தத் துப்பாக்கிக்கும் அவளுக்கும் இடையில் வந்து நின்றது ஆஜானுபாகுவான ஒரு உருவம்…….
வந்தது ருத்ர பிரதாப் தான் என்ற ஆவலோடு அம்ருதா நிமிர்ந்து பார்க்க……என்னை தாண்டி உனக்கு தைரியம் இருந்தா என் மருமகளை தொட முயற்சி பண்ணி…. பாருடா என்றவாறு….. அந்த அறையின் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து அவளை மறைத்தவாறு நின்றிருந்தார் லிங்கேஸ்வரன்…….. அவரை அம்ருதா மிகுந்த ஆச்சரியமாக பார்க்க மற்ற இருவரும்…..
அதிர்ச்சியும் பயமும் ஆத்திரமும் கலந்த கலவையான பார்வையால் லிங்கேஸ்வரனை பார்த்திருந்தனர்…… இதில் முதலில் சுதாரித்தது ஹேமாவதி தான் எப்படி இந்த மனிதர் அந்த இடத்தை கண்டுபிடித்து வந்தார் என்கிற யோசனையோடு…… லிங்கேஸ்வரனினை பார்த்திருந்தவளின்….. கோபம் அவர் உதிர்த்த வார்த்தைகளில் அதிகரிக்க…….
உங்களால் எங்களை ஒண்ணுமே பண்ண முடியாது….. ஏன்னா இந்த ரூம்ல இருந்து நீங்க கூட உயிரோடு வெளியே போக போறது இல்லை…… இளக்காரமாக சொன்னபடி முகுந்தனிடம் திரும்பி…… என்னப் பார்த்து முழிச்சுக்கிட்டு இருக்க போட்டுத்தள்ளு…. அந்த ஆளை…. ரொம்ப வருஷமா என் மனசுல எரிஞ்சுக்கிட்டு இருக்க பழிவெறி அப்பதான் தீரும்…….
அவளின் வார்த்தையில் சற்றுகூட தன் மருமகளை விட்டு அசையாது….. தீக்கங்குகள் தெறிக்கும் விழிகளால் ஹேமாவதியை பொசுக்கிவிடும் பார்வை பார்த்தவர்…….எனக்கு என்ன ஆனாலும் அதைப் பற்றி கவலை இல்லை…..எப்போ என் சாந்தி என்ன விட்டுப் போனாளோ அப்பவே நான் மனதளவில் செத்துப் போயிட்டேன் ஹேமாவதி…….
ஆனாலும் எங்களோட மகன் ருத்ரா ஒரு நல்ல வாழ்க்கையை வாழனும்…. அதைப் பார்க்காமல் சாகக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் தான்….. இத்தனை வருஷமா நான் வாழ்ந்துட்டு இருக்கேன்…….. இப்போ அந்த ஆசையும் நிறைவேறி விட்டது…..
இனி எனக்கு வாழ்க்கையில எந்த ஆசைகளும் இல்லை நான் சாக தயாரா இருக்கேன்……. ஆனா என் மகனோட மனைவியும் பிள்ளையும் உங்ககிட்ட இருந்து காப்பாற்றாமல்…… நான் சாக மாட்டேன் உள்ளத்தின் உறுதி வார்த்தையில் தெறிக்க பேசியவரை……. கண்டு ஆங்காரமாக சிரித்த முகுந்தன்….
நான் இருக்க வரைக்கும் அந்த ருத்ரா நல்ல வாழவே முடியாது மிஸ்டர் லிங்கேஸ்வரன் முதலில்….. நீங்க போங்க… பின்னாடியே உங்க பிள்ளையும் பேரப்பிள்ளையும் சேர்த்து பரலோகத்துக்கு நான் அனுப்பி வைக்கிறேன்…….
என்றவாறு தன் துப்பாக்கியின் விசையை அவன் அழுத்த முன்னைய……. சரியாக அதே நொடியில் அவன் மீது சட்டென்று பாய்ந்து அந்தத் துப்பாக்கியை பிடுங்க லிங்கேஸ்வரன் முயல…… இருவருக்கும் அங்கே ஒரு பெரும் யுத்த உருவானது……அந்த இளைஞனின் பலத்திற்கு சற்றும் குறையாத திடத்தோடு சண்டையிட்டார் ருத்ரனின் தந்தை…….
அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கியை பறிக்க முயன்று கொண்டிருக்க…….. நாற்காலியில் கயிறு கொண்டு பிணைக்கப்பட்டிருந்த அம்ருதாவும் தன் கட்டுகளை அவிழ்க்க முயன்று கொண்டிருந்தாள்……… இவை அனைத்தையும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்த ஹேமாவதிக்கு……
லிங்கேஸ்வரன் அவர்கள் இடத்தை கண்டுபிடித்து வந்தது போல்…. எந்த நேரத்திலும் ருத்ர பிரதாப்பும் அங்கே வந்து விடும் அபாயம் இருப்பது நன்கு புரிய அதற்குள் அம்ருதாவை…. கொன்றுவிடும் எண்ணத்தோடு…..
அங்கிருந்த ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு அவள் அம்ருதாவை மிகவும் நெருங்கி………அவள் மீது கத்தியை பாய்ச்ச போன கடைசி வினாடியில்….. டோம்…..என்ற துப்பாக்கி சத்தம் கேட்டது……அதுவரை கட்டுகளை அவிழ்க்க முயன்று கொண்டிருந்த அம்ருதா….. அந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க…..
அவளின் கண் முன்னால் கத்தியோடு நின்றிருந்த ஹேமாவதி வெட்டி வீழ்த்திய மரம்போல் உயிரற்று வெறும் உடலாக தரையில் விழுந்தாள்……. எப்படி என்று தெரியாமல் லிங்கேஸ்வரன் முகுந்தனும் சண்டையிட்டுக் கொண்டு இருக்க……. அனிச்சை செயலாய் இருவரின் விரலில் ஏதோ ஒன்று துப்பாக்கியின் விசையில் பட்டு…. அதனால் வெளிவந்த கொண்டு ஹேமாவதியின் உயிரை குடித்து இருந்தது……..
நடந்துவிட்ட நிகழ்வில் அம்ருதா வீல்….. என்று அலற….. ஒரு வினாடி லிங்கேஸ்வரனும் சண்டையிடுவதை தாமதிக்க அதை பயன்படுத்திக்கொண்ட முகுந்தன்… அவரை தள்ளிவிட்டு துப்பாக்கியை வெற்றிகரமாய் கைப்பற்றினான்…….
ஆட்டம் முடிஞ்சது மிஸ்டர் லிங்கேஸ்வரன் என்று வெற்றி சிரிப்பு சிரித்தவன்….. அம்ருதாவை நோக்கி துப்பாக்கியின் விசையை அழுத்தி விட…..நொடி நேரத்தில் சுதாரித்து அந்தக் குண்டு தன் மருமகளின் மேல் பட்டுவிடாமல்……. குறுக்கே பாய்ந்து அதை தன் தோள்களில் வாங்கிக்கொண்டு தரையில் விழுந்தார் லிங்கேஸ்வரன்……தன்னைக் காப்பாற்ற அவர் செய்துவிட்ட செயலில்…….மா…..மா….. அம்ருதா அலறித் துடித்தாள்…….
இப்போது மறுபடியும் அவள் புரம் துப்பாக்கியை நீட்டிய முகுந்தனின்…… கேம் ஓவர் என்றவாறு அவளை சுடுவதற்கு முயல……அதே நேரம் எங்கிருந்தோ பறந்து வந்த கத்தி ஒன்று அவனின் கையை பதம் பார்க்க…… ஆ…..என்ற அலறலோடு துப்பாக்கியை நழுவ விட்டு தரையில் விழுந்து துடித்தான் முகுந்தன்…….
கத்தி வந்த திசையை அம்ருதா திரும்பிப் பார்க்க ருத்ர மூர்த்தியாய்……. கோதிக்கும் எரிமலையாய் பிரம்மாண்டமாய் எழுந்து ஆர்ப்பரிக்கும் கடலின் அசுர அலையாய் அந்த அறையின் வாசலில் நின்று இருந்தான் ருத்ர பிரதாப்…….
கண்களில் வழியும் கண்ணீரோடும் தன்னவன் வந்துவிட்டதால் மனதில் உண்டான பெரும் நிம்மதியோடு அம்ருதா தன் கணவனையே பார்க்க…….. ஆனால் ருத்ர பிரதாப்பின் கண்களோ தரையில் குண்டடிப்பட்டு ரத்தம் கொட்டும் அந்த நிலையிலும் கூட பாசம் ததும்பும் விழிகளால் தன்னையே இமை கூட அசைக்காது …. பார்த்தபடி தரையில் கிடந்த அவனின் தந்தையின் மேல் ஆணி அடித்ததுபோல் நிலைத்திருக்க….. அவன் உதடுகள் மெதுவாக முணுமுணுத்தது அப்பா…….
உயிர்த் துணை சேரும்………
உன் துணை தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
அத்தியாயம்.45
அன்று அரண்மனையே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது….. எங்கு பார்க்கினும் நிறைந்திருந்த சொந்தங்களின் பேச்சும் சிரிப்பும் கலகலப்பும் அந்த அரண்மனைக்கு உயிர்ப்பைத் தர…… பெரும் நிமிர்வோடு பல நூறு ஆண்டுகள் கடந்தும் , கம்பீரமாக தன் மெருகு குலையாமல் பாரம்பரிய…..பெருமைகொண்ட வம்சத்தின் அடையாளமாய் ஜொலித்தது அந்த அரண்மனை………
ஒவ்வொரு தலைமுறையிலும் மிகச்சிறந்த திறமையுள்ள அந்த குடும்பத்து வாரிசான ஆண்மகனை…. முதன்மை வாரிசாய் ஏற்றுக் கொள்ளும் அவர்கள் வம்சத்தின். பாரம்பரிய முடிசூட்டு……. விழாவிற்கான ஆயத்தங்கள் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்க…..
அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் நிற்க நேரமில்லாமல் ஆட்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்….. அவர்கள் அனைவரையும் அனைத்து ஏற்பாடுகளையும்…..தங்கள் வசம் பொறுப்பேற்று வினோத்தும் அரவிந்தனும் பம்பரமாய் சுழன்று செயல்பட்டுக் கொண்டிருந்தனர்…….. சில நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய ருத்ர பிரதாப் பின் மூடி சூட்டு விழாவானது…..
திடீரென்று நடந்துவிட்ட அசம்பாவிதங்களால் இத்தனை நாட்கள் தள்ளி….. வைக்கப்பட்டு இருக்க……. முன்பை விட வெகு பிரம்மாண்டமாய் அனைத்து ஏற்பாடுகளும் நடந்தேற அரண்மனையே களைகட்டி இருந்தது……..
அங்கும் இங்கும் நடந்து அனைத்தையும் ஒன்றுக்கு நூறு முறை சரி பார்த்துக் கொண்டிருந்த……. வினோத்தின் கண்களில் மாடிப்படியிலிருந்து, துள்ளும் புள்ளி மானைப் போல் பிரமாதமான அலங்காரத்தோடு…… குதித்து ஓடி வரும் அவன் செல்லம்மா பட்டுவிட அவளின் அசரடிக்கும் அழகை கண்டு ஒரு நொடி இமைக்கவும் மறந்து போனான்…….
இப்பொழுதே சென்று தன் செல்லம்மாவை வலுவாக அணைத்து அவள் முகமெல்லாம் முத்தமிட்டு….. வெகு சிரத்தையோடு அவள் செய்து இருக்கும் அலங்காரத்தை கலைத்து விட……. அவன் கைகள் இரண்டும் பரபரக்க கள்ளனாய் மாறி தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே…… சாருலதா சென்ற அறைக்குள் அவளை பின்பற்றித் தானும் புகுந்து கொண்டான்……..
அவன் வரவை உணர்ந்து கூட தலையை திருப்பியும் பாராது தன் வேலையைக் ஒன்றே குறியாக இருந்த…. சாருலதாவின் பின் சென்று நின்றவன் அவளின் கைப்பிடி இடையில் தன் விரல் கொண்டு பலமாய் கிள்ளிவிட……ஸ்…..ஆ….என்று கத்திக்கொண்டே துள்ளி விழுந்தவளை அசைய விடாமல்….. தன் கை வளைவில் கொண்டு வந்து அவள் கழுத்தில் செல்லக் கடி கடிக்க ஆரம்பித்த வினோத்திடம் இருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள….. சாருலதா செய்த அனைத்து செயல்களும் வீணாகிப் போக பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள்…..
இப்போ என்ன விட போறீங்களா இல்லையா…? நீங்க மட்டும் இப்போது தள்ளி போகலைன்னா…..? உங்க மண்டையிலேயே பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு மண்டையை உடைக்க போறேன்…….உறுதியாகச் சொன்ன சாருலதா வின் வார்த்தைகள் கொடுத்த அதிர்ச்சியில்…. அவளிடம் இருந்து தள்ளி நின்ற வினோத் அவளை முறைத்துப் பார்க்க…….
அவனுக்கும் மேல் கண்களில் பொங்கும் கொலைவெறியோடு….. வினோத்தை முறைத்துக் கொண்டிருந்தாள், இன்னும் சில நாட்களில் அவன் மனைவியாகப் போகும் சாருலதா……..ஏய் என்னடி வாய் ரொம்ப நீளுது கல்யாணம் பண்ணிக்கப்போற புருஷன் மண்டையில் கல்லத் தூக்கிப் போடுவியா நீ….?
பின்ன என்ன..? இதோட மூன்றாவது தடவையாக நான் டிரஸ் பண்ணிட்டு வந்து இருக்கேன்…….. இதுக்கு மேல டிரஸ் பண்ண டைம் இல்ல கோவிலுக்குப் போக நேரமாச்சு ,, முதல் தடவை சரி….. ரெண்டாவது தடவை கூட பரவாயில்லை…. இப்பவும் இப்படி பண்ணினால் நான் என்ன பண்றது….? ஏற்கனவே எல்லாரும் எப்படி கிண்டல் பண்றாங்க தெரியுமா…? வெளியே தலை காட்ட முடியால போங்க எல்லாம் உங்களாலதான்…….
கோபமாய் ஆரம்பித்து சிணுங்கலோடு சாருலதா சொல்லி முடிக்க…….பொங்கும் புன்னகையோடு எட்டி நின்றவளை கைப்பிடித்து தன்னிடம் இழுத்து மென்மையாக அவள் கண்ணத்தில் தன் இதழ் பதித்து….. நான் என்னடி பண்றது உன்னை பார்த்தாலே என்னால சும்மா இருக்க முடியல தெரியுமா…..? சும்மா தள தளன்னு தக்காளிபழம் மாதிரி நீ இருந்தா நான் எப்படி டி சும்மா இருக்கமுடியும்..? . நீ யே சொல்லு அப்பாவி போல் அவளிடமே கேள்வி கேட்டவன்…….
தன் உதடுகளை இப்போது சாருலதாவின் பின்கழுத்தில் உறவாட விட்டிருந்தவனின் கைகளோ…. அவளின் இடையை ஒவ்வொரு அங்குலமாக அளந்து பார்த்து மேலும் ….. கீழே இறங்க……… அதற்கு மேல் நகர விடாமல் எட்டி அவன் கைகளை பிடித்தவள்…….. போதும் போதும் தள்ளிப் போங்க….
நாம இந்த ரூம்குள்ள வந்து கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆயிடுச்சு….. சொன்னதோடு அவனை தள்ளிவிட்டு வெளியே ஓடிய சாருலதாவின் முகத்திலும்…. அவளையே பார்த்தபடி நின்றிருந்த வினோத்தின் முகத்திலும் எல்லையில்லா சந்தோஷத்தை ரேகைகள்…….. ருத்ர பிரதாப்பின் விரல் அசைவில் கட்டுப்பட்ட சிவானந்தம் எந்த ஒரு தடங்கலும் செய்யாமல் அந்தத் திருமணத்தை ஒத்துக் கொள்ள…….. அவர்கள் மகிழ்விற்கு இனி என்ன குறை…….
கட்டிலில் சாய்ந்து ஓய்வாக அமர்ந்திருந்த லிங்கேஸ்வரனுக்கு…… அவருக்கென்று வாங்கிய புதிய உடையை அவரின் தோளில் பட்டிருந்த காயத்தில்……படாமல் மிகவும் எச்சரிக்கையோடு அணிவித்தான் ருத்ர பிரதாப்……குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்தவர் முழுவதுமாக குணமாகி அரண்மனைக்கு வந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தது…….ஹேமாவதியை பற்றி அரசல் புரசலாக பேசக்கூட அங்கு யாரும் விரும்பவில்லை…….. அன்னையின் சதிவேலை தெரிந்து தன் மனைவியோடு அமைதியாய் ஒதுங்கிக் கொண்டான் யோகேஸ்வரனை …….
தனக்குப் பணிவிடை செய்யும் மகனின் ஒவ்வொரு அசைவையும் உதட்டில் உறைந்த சிறு புன்னகையோடு… ரசித்து கொண்டிருக்கும் தகப்பனின் வருடும் பார்வை கண்டு மகனுக்கு சிறிது வெட்கமுண்டாக…டாட் போதும்…!! ஏன் இப்படி பாக்கறீங்க சிறு வெட்கத்தோடு கூறும் மகன்……. தான் முதன் முதலில் கண்ட 7 வயது சிறுவனின் பால்நிலா முகமாய் அவருக்குத் தோன்ற……
அவன் ஒரு வளர்ந்த முழுமையான ஆண் மகன் என்பதை மறந்து இத்தனை… ஆண்டுகள் தனக்குக் கிடைக்காமல் போன தன் பிள்ளையின்……… ஸ்பரிசத்தை உணரும் விதமாய் ஒரு தந்தையின் ஆவலோடு……..தன் கையால் எட்டி அவன் கன்னம் தொட்டு…… உதட்டில் ஒற்றி கொண்டவர்…… அப்படியே உங்க அம்மா கண்ணு உன்கிட்ட இருக்கு தெரியுமா…..? என்று சிலிர்ப்பாக கூறி விழிமூடிவரின் கண்களுக்குள்….. அவர் காதல் மனைவியின் கருணை ததும்பும் அன்பு முகம் தோன்றி அவரைப் பார்த்து கனிவாய் சிரிப்பது போல் தோன்றியது……
அன்னையின் பெயரை தந்தை உச்சரித்ததில் அவனுக்கும் நெஞ்சில் தாளமுடியாத ஒரு வலி உண்டாக….. அம்மா நம்ம கூட இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் இல்லப்பா….? ஆகப் பேரும் ஏக்கத்துடன் கேட்டவன்……. அவங்க மட்டும் இருந்திருந்தால்…? நம்ம குடும்பம் எவ்வளவோ அழகா இருந்திருக்கும்….. இல்லப்பா….? அவன் வாய்மொழி வார்த்தைகளின் உன்மை நிலையை கண்களுக்குள்….. காட்சிகளாக காண்பவனாய் இமைகளை இறுக மூடி பேசிய…… மகனின் கைகளை பாசமாய் தட்டி கொடுத்து அவனுக்கு ஆறுதல் அளித்தவர்…….
சாந்தி எங்கேயும் போகல ருத்ரா எப்பவும் நம்ம கூட தான் இருக்கா……உன்னோட ஒவ்வொரு வளர்ச்சியையும் மகிழ்ச்சியான நேரங்களையும் பார்த்து ஒரு அம்மாவா சாந்தி ரொம்ப சந்தோஷப்படுவா உணர்ந்து….. சொன்ன தந்தையின் கூற்றை ஆமோதிப்பாய் தலையசைத்தவன்……. தன் பெற்றவர்களில் அன்பை உணர்த்த பெருமிதத்தோடு புன்னகைத்தான் ருத்ர பிரதாப்…….
என்றோ இந்த மண்ணை விட்டு சென்றாலும் இன்றும் , என்றும் , அவர்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பாள் சாந்தி தேவி…… லிங்கேஷ்வரனின் காதல் மனைவியாக , ருத்ரா வின் பாசமிகு அன்னையாக……. அந்த அரண்மனையின் ராணியாக…….
தந்தை மகன் இருவரும் தங்கள் உலகத்தில் மூழ்கி இருக்க……அறிவிப்பாய் கதவை இருமுறை தட்டி விட்டு உள்ளே வந்த அம்ருதாவின்…. வருகையால் தங்கள் சோகத்தில் இருந்து மீண்ட இருவரில் லிங்கேஸ்வரன்…….. உள்ளே வாம்மா அம்ருதா கண்களில் பொங்கும் வாஞ்சையோடு தன் மருமகளை……… அறைக்குள் அழைத்தார் அவருக்கு ஒரு மகிழ்வான புன்னகையை பரிசளித்த படி……
தன் வருகையை உணர்ந்தும் கூட தன்னை சிறிதும் கண்டுகொள்ளாமல்…….. எதிர் திசையில் முகம் திருப்பி அமர்ந்திருந்த ருத்ர பிரதாப்பை ஆராய்ச்சி பார்வையால் தொடர்ந்தபடி உள்நுழைந்த அம்ருதா…… என்ன மாமா ரெடி ஆயிட்டீங்களா உங்களுக்காக பிரேக் பாஸ்ட் கொண்டுவந்திருக்கேன் சீக்கிரம் சாப்பிட்டு கோவிலுக்கு கிளம்புங்க…… சொன்னபடி உணவை லிங்கேஸ்வரன் உண்ணுவதற்கு ஏதுவாக….. வைத்தாள்……
மருமகளின் அக்கறையும் கனிவும் மனதிற்கு நிறைவை அளிக்க……. நீ சாப்டியா மா என்று அக்கறையாகக் கேட்டு விட்டு உணவு உண்ண
ஆரம்பித்தார்……அவருக்கு குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வைத்தவள் ஓரக்கண்ணால் அங்கே அருகில் அமர்ந்திருந்த ருத்ர பிரதாப்பை பார்க்க……. அவனும் தன் கண்களை எங்கோ வைத்திருந்தாலும் காதுகள் வழி அவர்களின் உரையாடலைத்தான் கவனமாய்க் கேட்டு கொண்டிருந்தான்…….
அவனின் இந்த பாராமுகம் ஏன் என்று ஒரு யோசனை அம்ருதா விற்கு இருந்தது…….அன்று அந்த முகுந்தனும் ஹேமாவதியின் அவளைக் கடத்திச் சென்று அடைத்து வைத்திருந்த…… அவர்கள் அரண்மனையின் ரகசிய அறையை கண்டு பிடித்து வந்து அவளைக் காப்பாற்றிய நாள் முதலாய் தான்……. அவள் கணவனிடம் ஒரு அசாத்திய அமைதி குடி கொண்டிருப்பதை அம்ருதா கவனிக்க தவறவில்லை……..
முதலில் அது அவள் மேல் அவனுக்கு ஏற்பட்ட கோபம் என்று நினைத்திருந்தாள் அம்ருதா . ஏனென்றால்……அவர்களை காப்பாற்றிய கையோடு அந்த முகுந்தனை துவம்சம் செய்து விட்டு பயங்கர வெறியோடு….. அவனை நெருங்கிய ருத்ர பிரதாப் முன்பு அவனை மறைத்தது போல்….. வந்து நின்றவள் வேண்டாம் என்று மறுப்பாய் தலையசைத்தவளை…….
நெருப்புப் பொறி பறக்கும் தீ பார்வையால் முறைத்து பார்த்தவன்….. தன் கைகள் கொண்டு அவளை நகர்த்தி விட்டு முகுந்தன் அருகில் செல்ல எத்தனித்த……. தன்னை தொட்ட கணவனின் கைகளை தன் இரு கரங்கள்……. கொண்டு அழுத்தமாக பிடித்து அவன் மார்புக்கு அருகில் நெருங்கி நின்றவள்….. நான் சொன்ன என் புருஷன் கேட்பாரு தெரியுமா….? கிசுகிசுப்பாக சொன்னவளின் இதழ்கள் அவன் இதயத்தில் முத்தமிட்டதோ….? அப்படி இருந்தாலும் அதை உணரும் மன நிலையில் அந்த நொடி அவன் இல்லை……..
எப்போதும் அவள் சிறு ஸ்பரிசத்தில் கூட மயங்கி விடும்…… அந்தக் காதல் காரன் இன்று தன் மார்போடு ஒன்றியிருக்கும் தன்னவளின் அருகாமை கூட அவனை அமைதிப்படுத்தாமல் போக…….இளகாத இரும்பு போல் கடினமாய் நிற்பவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாது….. இரு நொடி யோசனையில் தான் பிடித்திருந்த அவன் கைகளை விடாமல் பற்றி சற்று கீழிறக்கி தன் வெற்று வயிற்றில் வைத்து மென்மையாய் அழுத்தி கொண்டவள்……
தன் செயலால் உண்டான சிறு அதிர்ச்சியோடு அவளை நோக்கும் கணவனின் பார்வையோடு தன் விழிகளை கலக்க விட்டவள்……..என்னோட பிள்ளைக்கு அவங்க அப்பாவை கொலைகாரனா பார்க்க விருப்பம் இல்லையாம்……. ஒவ்வொரு வார்த்தையாய் அம்ருதா உதிர்க்க அதன் தாக்கத்தில் சட்டென்று உடலில் ஓடி மறைந்த ஒரு சிலிர்ப்பை தவிர…… தானே முழு மொத்தமாய் சிலையாக்கி விட்டது போல் அவள் விழி பார்த்தது பார்த்தபடி அசையாது நின்றவன்…….
பிறகு ஒரு வேக பேரு மூச்சோடு தன் விழிகளை இருக்கமாய் மூடித் திறந்தவன் தன் மார்பில் ஒன்றிய படி நின்றவளை….. மெதுவாக தள்ளி விட்டு அங்கிருந்து விறுவிறுவென்று நடந்து வெளியே சென்றுவிட்டான்……. அதன் பிறகுதான் அவனிடம் இந்த பாராமுகமும் ஒதுக்கமும் என்று சரியாகக் கணக்கிட்டாவள்……
இத்தனை நாட்களில் தன் கண்களில் கூட அதிகம் படாமல் விலகி ஓடிய கணவனை இன்று எப்படியும் வசமாய் பிடித்து விடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தவள்……. தானும் அவனைக் கண்டு கொள்ளாதது போல் முகம் திருப்பிக் கொண்டாள்…….
அரண்மனையில் இருந்து கிளம்பியது முதலே சம்பிரதாயங்கள் ஆரம்பித்துவிட யானையின் மேல் சிம்மாசனம் இட்டு அதில் அமர்ந்தபடி ஊர்வலமாய் ருத்ர பிரதாப் கோவில் அருகில் வர……அரண்மனைக்கு சிறிதும் குறைவில்லாத வகையில் கோவிலும் அலங்காரத்தில் ஜொலித்தபடி நின்றது……
யாகங்களும் அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் மிகவும் விமரிசையாய் நடந்தேற…… அவர்கள் ராஜ பரம்பரையின் வருங்கால அரசனுக்கு பட்டாபிஷேகம் செய்து செங்கோல் கொடுத்து அரசனாய் அறிவித்து……. சொந்தமும் சுற்றமும் மக்களும் சூல தம்பதி சமேதராய் அனைத்து மரியாதைகளையும் ருத்ர பிரதாப்பும் அவன் மனைவியாய் அந்தப் பரம்பரையின் ராணியாய் நின்று அம்ருதாவும் பெற்றுக்கொள்ள……
கண்கொள்ளா காட்சியாய் கண்முன் விரிந்த அற்புதங்களின் நெகிழ்ந்து போய் ஒரு சகோதரனையும்…….. தாண்டிய தகப்பன் பார்வையோடு தன் அம்முவை பெருமிதமாய் பார்த்து கண் கலங்கி நின்ற வினோத்தை பொறுப்பான மனைவியாய் அணைத்து ஆறுதல் படுத்தினாள் சாருலதா…..
உடல்நிலை காரணமாக கூட்டத்தை விட்டு சற்று தள்ளி அமர்ந்திருந்த சுபத்ரா தேவியின் அருகில் அமர்ந்து…….தன் பிள்ளையின் முடிசூட்டு விழாவை , வெகு காலத்திற்குப் பிறகு உள்ளத்தில் பொங்கி எழும் பூரிப்பு நிறைந்த மகிழ்ச்சியோடு பார்த்திருந்தார் லிங்கேஸ்வரன்……. தன் அருகில் சந்தோஷ மிகுதியில் விசும்பும் தன் அன்னையை ஆறுதல் படுத்தவும் அவர் மறக்கவில்லை……..
காலையிலிருந்து சுற்றி சுற்றி சுழன்ற அனைத்து சொந்த பந்தமும் அழகான முறையில் முடிவடைந்த அன்றைய விழாவைப் பற்றி தங்களுக்குள் விவாதித்த படி அவரவர் அறையில் அடங்கிவிட……வினோத்தும் தன் தங்கைக்கும் அவள் கணவனுக்கும் தனிமை கொடுத்து ஒரு தலை அசைவோடு தன் அறைக்கு சென்று விட…….
என்னதான் தன் அருகில் அன்று முழுவதும் இணை பிரியாமல் இருந்தது போல் தோன்றினாலும்……. அவளிடம் ஒரு விலகல் உடனே சுற்றிய ருத்ர பிரதாப் , இப்போதும் அந்த இடத்தில் இருந்து அம்ருதா அறியாது விலகிச் செல்ல பார்க்க……. ருத்ராவை வையே கவனித்துக் கொண்டிருந்த அவன் மனைவியின் கண்களில் அது தவறாமல் விழுந்தது…….
உதட்டில் ஒரு கேலிப் புன்னகையோடு அவனின் நடவடிக்கையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தவள்……எங்கிட்டயே உன் வேலையை காட்ட பார்க்கிறாயா….. ருத்ரா…? நான் என்ன பண்றேன்னு பாரு……மனதுக்குள் சிரித்து கொண்டாள் அவன் மனைவி…..
கிட்டத்தட்ட அனைவரும் அங்கிருந்து சென்றிருக்க…… தானும் எழுந்து சிறிது தூரம் நடந்தவள் அடுத்த எட்டில் நிலைத் தடுமாறி விழப் போக…… வினாடி நேரத்தில் சுதாரித்து கீழே விழாமல் அம்ருதாவை தன் கைகளில் தாங்கி இருந்தான்…… காற்றை விட வேகமாய் அவளின் அருகில் வந்திருந்திருந்தவன்…….
அவனின் வேகத்தையும் பதட்டத்தையும் கண்டு சிரிப்பால் விரியும் தன் உதடுகளை மறைக்கும் பொருட்டு அவன் கழுத்தடியில் அவள் முகம் புதைக்க………அவள் தொடு உணர்வில் இளகுவதர்கு பதில் இறுக்கினான் ருத்ர பிரதாப்………
பூப்போல தன் கரத்தில் இருந்தவளை அள்ளிச் சென்று……தங்கள் அறையில் கட்டிலில் மென்மையாய் வைத்தவன்……. அவள் விழி மூடி இருக்க மயக்கமோ…? என்று நினைத்து மிக மென்மையாய் அவள் கண்ணங்களை
பற்றி மெதுவாய் பேபி என்று அழைக்க……இப்போது தன் விழி திறந்தவள் தீர்க்கமான பார்வை யோடு தன் கணவனை பார்த்திருந்தாள்……. அவள் விழித்ததை கண்டு கொண்டவன் அங்கிருந்து போக பார்க்க…….
நில்லுங்க என்ற அம்ருதா வின் கட்டளை குரல் அவன் கால்களைக் கட்டிப் போட, அசையாமல் நின்றா ருத்ர பிரதாப்……உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் நம்ம வாழ்க்கையை பத்தி….. வேகு உறுதியோடு அவள் பேச முயல……. அதுவரை அவளுக்கு முதுகு காட்டி நின்றவன் இப்போது…. போதும் என்னும் விதமாய் அம்ருதா வின் புறம் கைகளை நீட்டி அவள் பேச்சை தடுத்திருந்தான்………..
அவன் முகம் காட்டும் உணர்ச்சியையும் உடல்மொழியையும் அவதானிக்க முயன்று கொண்டிருந்தவளை……காண விரும்பாதது போல் தன் முகம் திருப்பிக் கொண்டவன் தெரியும்….!! நீ என்ன பேச நினைக்கிறேன்னு எனக்குத் தெரியும்… பே…,,
பேபி என்று அழைக்க வந்து அந்த அழைப்பை உதட்டோடு……..நிறுத்திக் கொண்டவன் உன்னுடைய விருப்பப்படி , நீ என்னை விட்டுப் பிரியவும் , உனக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கையை அமைத்து கொள்ளவும் நான் எந்தவிதத்திலும் தடையாக இருக்க மாட்டேன்…….. அவளைப் பாராது திரும்பி நின்று சொன்னவன்……அதற்கு மேல் அங்கு நிற்கவும் முடியாமல் அறையை விட்டு வெளியேறி இருந்தான்…..
கணவனின் வார்த்தை கொடுத்த அதிர்ச்சியில் சில நொடிகள்……. சிலையாக்கி நின்றவளின் முகம் சிறிது சிறிதாக இயல்புக்குத் திரும்பி பிறகு மகிழ்ச்சிக்கு செல்ல…….. அவள் கண்களோ விஷமப் புன்னகையில் மின்னியது……..
உயிர் துணை சேரும்………
உன் துணை தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
அத்தியாயம்.45.1
அந்த நீளமான ஒற்றை சாலையில் புயல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த வாகனத்தை கண்டு…….. சாலையின் ஓரத்தில் நடந்து சென்றோர் கூட பீதியில் நிலைத்தடுமாறி அங்கிருந்த வாய்க்கால் பரப்பில் சென்று விழும் அளவிற்கு….. ஆக்ரோஷத்தோடு தன் வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தான் ருத்ர பிரதாப்…….
ஒருகை ஸ்டியரிங்கை பிடித்து இஷ்டத்திற்கு வளைக்க மற்றொரு கையினால் காதோடு தொலைபேசியை பிடித்தபடி……..தன் கோபம் பதட்டம் அனைத்தையும் சேர்த்து அரவிந்தனை போனில் வறுத்தெடுத்து கொண்டிருந்தான்…..
என்ன சொல்ற அரவிந்த் உனக்கு அறிவே இல்லையா……ஒரு தடவை நடந்த தவறை இன்னொரு தடவை நடக்க விட்டால் அவன் பேரு என்ன தெரியுமா முட்டாள்……ஆர் யூ ஃபுல் அரவிந்த்……உன்கிட்ட இருந்து இவ்வளவு ஒஸ்டான பிஹேவியர நான் எதிர்பார்க்கவே இல்ல…….யூ டிஸபாயிண்ட் மீ அரவிந்த்…….
தன் காதிற்குள் கடப்பாறையை விட்டு குடைவதை போல் ஹை டெசிபலில் கத்தும் தன்னுடைய முதலாளியை….. எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல்….. பேய் முழி முழித்து கொண்டிருந்தான் அரவிந்தன்…….. பின்பு அவனும் தான் என்ன செய்வான்….?? அவன் ஜாதகம் அப்படி , இடியும் அடியும் அவன் ஒருவனே வாங்க வேண்டும் என்று எழுதியிருக்கிறதே…..
யாருடைய போதைக்கோ அவன் ஊறுகாய் ஆன……தன் விதியை நொந்தபடி ருத்ராவின் வசவுகளுக்கு காதை கொடுத்துவிட்டு அமைதி காத்தான் அந்தப் பாவப்பட்ட ஜீவன்……
ஓகே லீவ் இட் இப்போ உன்னை திட்டுவதால் எந்த விஷயமும் மாறப்போவது கிடையாது….. உங்க யாரையும் நம்பி நான் என் பேபியை விட்டுவிட்டு போயிருக்கக் கூடாது…… மனம் முழுவதும் நிறைந்திருந்த பயத்தாலும் வேதனையாலும் அங்கே அரண்மனையில் இருக்கப் பிடிக்காமல் அல்லது முடியாமல்…… ஒர ஒருநாள் தன் அனைத்து உலக தொடர்பையும் விட்டுவிட்டு……. எங்கோ சுற்றி அலைய ருத்ர பிரதாப் கிளம்பிய போதும் கூட அவன் மனைவியின்………. அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரவிந்தனிடம் மட்டுமே முழுப் பொறுப்பாக கொடுத்து சென்றிருந்தான்……..
அப்படி அவன் நம்பியிருந்த அரவிந்தன் சற்று நேரத்திற்கு முன்பு அவனுக்கு தொலைபேசியில் அழைத்து….. பாஸ் மேடம் மிஸ்ஸிங் அரண்மனை ஃபுல்லா தேடிப்பார்த்தும் அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல…… ஆனால் மேடம் ஓட போன் சிக்னல் நம்ம பண்ணை தோட்டத்தில் தான் இருக்கா மாதிரி ட்ராக்கிங் டிவைஸ் காமிக்கிறது பாஸ்…….
திக்கித் திணறினாளும் தான் சொல்ல வந்ததை அவன் சொல்லி முடிக்க……. யூ இடியட்….. கிட்டத்தட்ட அலறியவன் அடுத்த நொடி தன் காரை அவர்கள் பண்ணை தோட்டத்தை நோக்கி பறக்க விட்டு இருந்தான்…….
முதல் முறை கூட யாரோ எவரோ அவனுக்கு எதிரியாய் இருக்க முடியும் என்று தோன்றியது ஆனால் இப்போது…!! ? அப்படி ஒருவர் கூட இல்லாத போது யார் அம்ருதாவை கடத்தி இருக்க முடியும்……அது யாராக இருந்தாலும் அவன் பேபி மீதே கைவைக்க துணிந்த அவர்களை….. கொன்று போடும் ஆத்திரத்தோடு எப்போதும் தன் பாதுகாப்பிற்காய் காரில் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து தன் இடைப்பகுதியில் சொருகி கொண்டவன்……
அவர்கள் பண்ணையை அடைந்து….. இரண்டு பக்கமும் திறந்திருந்த கதவுகளைக் கூட கவனிக்க பொறுமையின்றி…….. காரை பாய்ந்தோடும் சிறுத்தையின் வேகத்தில் உள்ளுக்குள் செலுத்தியவன் , சிறிது தூரம் செல்ல அங்கு கண்ட காட்சியில்…… பிரம்மித்து அதிர்ந்து பின்பு சுதாரித்து வெகுவாக முயன்று தன் காரின் வேகத்தை குறைத்து சடன் பிரேக் போட்டு நிறுத்தியவன்…… காரில் இருந்து இறங்கி நின்றான்…..
அதுவரை இருந்த பதட்டமும் பயமும் போக தன் காரின் மீதே சாய்ந்தபடி மூச்சு வாங்கிக்கொண்டே…….எதிர்திசையில் பார்வையைச் செலுத்திக் முறைத்தான் ருத்ர பிரதாப்……. அவன் பார்வையின் பற்றி எரியும் உஷ்ணத்தை சிறிதும் சட்டை செய்யாத ஒரு அலட்சிய பாவனையோடு…….. அங்கு போடப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஒற்றை இருக்கையில் கால் மீது கால் போட்டு மிகக் கம்பீரமாய்…….. ஒரு பெண் சிங்கத்தைப் போல் அமர்ந்திருந்தாள் , அந்த உலகாளும் ருத்ரனின்…….. திமிருக்கும் ஆணவத்திற்கும் சற்றும் குறையாது ஈடுகொடுக்கும் அவன் மனைவி அம்ருதா……..
அவள் அமர்திருக்கும் தோரணையே அவனுக்கு சொல்லாமல் , சொல்லியது அந்தக் கடத்தல் நாடகம் அவள் அமைத்த திட்டமிடல் தான் என்று……அன்று போலவே இன்றும் மலர்களால் அலங்கரித்த கட்டில் ஒன்றும் அங்கே இருக்க அதைக் கவனிக்கும் நிலையில் அவன் அப்போது இல்லை……. அம்ருதாவின் பொய்யால் உண்டான கட்டுக்கடங்கா உணர்ச்சிக் கொந்தளிப்பில் ருத்ர பிரதாப் அப்போது இருந்தான்….
அதுவரை அவளைக் காணாது தவித்தவனுக்கு இப்போது அம்ருதாவை இங்கு கண்டவுடன் நிம்மதி ஏற்பட்டிருக்க வேண்டும்…… ஆனால் அதற்கு மாறாக சொல்லான ஒரு உணர்வு தோன்றி கோபத்தோடு சேர்ந்து அவனை உள்ளுக்குள் திகுதிகுவென எரிய வைக்க……
உனக்கு என்ன பைத்தியமா டி…?? எதுக்காக இப்படி எல்லாம் செஞ்சு மனுஷனை சாகடிக்கிற…… உனக்கு என்னமோ ஏதோன்னு உயிர் பதறப் பதற ஓடி வந்து இருக்கேன் டி ராட்சசி…..அவளைப் பார்த்து அடிப்பட்ட சிங்கமாய் அவன் கர்ஜனை செய்ய…….
எத்தனை கோபம் வெறுப்பு ஆத்திரம் வந்தாலும் தன் உணர்வுகளை……. சிறுமுக மாற்றத்தில் கூட அடுத்தவருக்கு வெளிக்காட்டாது திமிரின் இலக்கணமாய்….. கம்பீரத்தின் எடுத்துக்காட்டாய் நிற்கும் தன் கணவனின் இன்றைய பயமும் படபடப்பும் தனக்கானது…..தன் பாதுகாப்பை குறித்தது மட்டுமே என்கிற பெருமிதத்தில் உண்டான பூரிப்போடு……
மிகவும் ரசித்து ஐஸ்கிரீமை உண்ணும் சிறு குழந்தையின் இனிப்பான பார்வையால் கணவனை பருகிக் கொண்டிருந்த அவன் மனைவியின் சிரிப்பு….. அவனை மேலும் வெறியேற்ற , சிரிக்காத டி எனக்கு பத்திகிட்டு வருது….. அவள் முடியை பிடித்து உலுக்கிவிடும் ஆத்திரத்தை அவன் கண்களில் கண்டு கொண்டவள்……சற்றும் அலட்டிக் கொள்ளாமல்……
அவன் கொதிப்பிற்கு முற்றிலும் எதிர் பதமாய்….. இதழில் தோன்றிய ஒரு வகையான சிரிப்போடு….. அதில் கொஞ்சம் ஏளனமும்
கலக்க….. எதுக்கு இவ்ளோ கோபமும் , பதட்டமும் நான் தெரிஞ்சுக்கலாமா மிஸ்டர் ருத்ர பிரதாப்…… அமைதியாக கேட்ட அவளின் முக பாவனை அவன் கோபத்தை அம்ருதா கேலி செய்வதாய் தோன்றிவிட…….
எதற்கா….?? சட்டென்று தோன்றிய ஆத்திரத்தில் வேகமாக அவள் அருகில் சென்றுவன்…….. என்னுடைய பயமும் பதட்டமும் உனக்கு சிரிப்பா இருக்கா….? உன்னை யாரோ கடத்திட்டு போயிட்டாங்கன்னு அந்த அரவிந்தன் போன்ல சொன்னப்போ……நான் எப்படி பயந்து போயிட்டேன்னு தெரியுமா டி….? …..
இருக்கையில் அமர்ந்திருந்தவளை ஒற்றைக் கையால்…..அவள் பின்னலை வலிக்கும் அளவிற்கு அழுத்தமாக பற்றித் தூக்கி தன் முன்பு நிறுத்தியவனின் மறு கை அவள் இடையை….. பூவை போற்றி எடுக்கும் காற்றாய் சூழ்ந்து அரவணைப்பது போல் பிடித்து தன் உடலோடு அணைத்துக் கொண்டது……ஒருகை அவளுக்கு தண்டனை கொடுக்க மற்றொரு கரமோ அன்பையே கொடுக்கும் விந்தை என்னவோ…..
அவன் கைப்பிடியில் உண்டான வலி கலந்து எரிச்சலோடு அம்ருதா….. ருத்ரா வை பார்க்க மீண்டும் தன் பிடியில் சிறிது அழுத்தம் கொடுத்து…… அவள் முகத்தை தன் புறம் நெருக்கமாக இழுத்தவன்……. எதற்காக இவ்வளவு கோபம் என்றா கேட்கிறாய்…? கொதிப்பாக கேட்டவன்….
நான் கோபப்படாமல் , நான் பதட்டப்படாமல் வேறு யாரடி உன் பாதுகாப்பை நினைத்து வருத்த படுவார்கள்………நான் உன்னுடைய புருஷனை நம் பிள்ளையோட தகப்பன் உங்கள் இருவரின் நலன் மட்டுமே எனக்கு. இந்த உலகத்தில் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது…….
அவன் பிடியில் நெறிப்பட்ட தலைமுடியால் வலி எடுத்தாலும்…… அதை துளிகூட முகத்தில் காட்டாமல் அவனுக்கு சற்றும் சளைக்காத பார்வை பார்த்தவள்….. நீங்கதான் எனக்கு விடுதலை கொடுக்க சம்மதித்து விட்டீர்களே பிறகு…. எப்படி எங்கள் இருவரின் பாதுகாப்பு உங்களை சேரும்…?? .நாங்கள் இப்படிப் போனால் தான் உங்களுக்கு என்ன……
நிறுத்தி நிதானமாக அம்ருதா கேட்ட கேள்வியில் ஒரு கணம் புரியாததுபோல் அவளைப் பார்த்து விழித்தவன்…… அடுத்த நிமிடம் தன் சக்தி அனைத்தும் வடிந்துவிட்டது போல பிடி தளர்த்தி…. தன்னால் கலைந்த அவள் கூந்தலை ஒதுக்கி விட்ட படி……அ…அது….. பேச்சு வராமல் தடுமாறும் தன் குரலை சரி செய்து….. உனக்காகத்தான் நீ எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்கணும்……. உன் நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டும்தான் எனக்கு முக்கியம்….தப்பித் தவறிக்கூட பேபி என்கிற விழித்தல் அவனிடம் இருந்து வரவில்லை………
ஒ…. அப்போ நான் சந்தோஷமா இருக்க வேண்டும் காரணத்துக்காகத்தான் என்னை விட்டுப் பிரிந்து போக நினைக்கிறீர்கள் இல்லையா…?? அப்போ நாளை நான் உங்களை விட்டு பிரிந்த பிறகு…… எனக்கும் என்னுடைய பிள்ளைக்கும் ஏதாவது ஆபத்து வந்த அப்போ என்ன செய்வீங்க……
எக்கெடொ கெட்டு ஒழியட்டும் என்று உங்க வேலையைப் பார்க்கத் போய்விடுவீர்கள் அப்படித்தானே…….நாங்கள் என்ன ஆனாலும் அதைப் பற்றி உங்களுக்கு எந்த கவலையும் இல்லை…… அவனின் அமைதியான ஒப்புக்கொடுத்தல் போன்ற விளக்கத்திற்கு எள்ளி நகையாடும் பதில் கொடுத்தவளை சடுதியில்…. கண்களில் தோன்றிய தீச்சுடர் போல் பற்றி எரியும் விழியால் முறைத்தவன்……. ஏய்…. என்று அலறியபடி
அவளை அப்படியே தன் இரு கரம் கொண்டு இடைபற்றி ஒரே உச்சதூக்காக தூக்கி அங்கிருந்த……. படுக்கையில் போட்டவன் அத்தனை கட்டுக்கடங்காத கோபத்திலும் அவள் மேலே பாரம் ஏற்றாமல் மென்மையாய் படர்ந்தவன்……. வலது கை கொண்டு அவள் கழுத்தில் சிறிது அழுத்தம் கொடுத்து அவளுக்கு மூச்சு திணறலை உண்டாக்க……..
சுவாசத்திற்காய் அவள் படும் அவஸ்தையைக் கண்டு சிறிதும் கலங்காமல்…… உதடுகளை அவள் செவிமடலை உரசும் அளவிற்கு கொண்டு சென்றவன்……. என்றைக்கு உன்னை முதல் முறை பார்த்தேனோ அந்த நிமிஷத்திலிருந்து……. என் வாழ்வில் கடைசி நொடி வரை உன் பொறுப்பு அனைத்தும் என்னைச் சேர்ந்தது…….
என் முகம் பார்க்க பிடிக்காத என்னுடன் வாழ விரும்பாத….. உனக்கு நான் தரும் விடுதலை என் அருகாமையில் இருந்து மட்டுமே……உன் கண் பார்வையிலிருந்து நான் மறைந்து போவேனே தவிர….. என் பார்வை வட்டத்தில் இருந்து நீயோ நம் பிள்ளையோ என்றுமே விலகப் போவதில்லை……. என்னுயிரின் மறுவடிவம் நீங்கள்……என் கண்கள் இறுதியாய் மூடும் நாள் வரை அது உங்கள் மீது மட்டுமே நிலைத்திருக்கும்……..அவன் சொல்லி முடித்த வார்த்தைகளில் அம்ருதாவின் உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு தோன்றி அவளை மெலிதாய் நடுங்கச் செய்தது……
அதிக ஆத்திரத்தோடு அவள் கழுத்தை நெரிக்க ஆரம்பித்த அவன் கைகள் எப்போது….. அவள் உடல் முழுவதும் ஊற ஆரம்பித்ததோ..? அனல் கக்கும் உஷ்ண மூச்சோடு அவள் காதுமடல்களை….. தீண்டிய அவன் உதடுகள் எப்பொழுது இறங்கி அவள் கழுத்தில் புதைய ஆரம்பித்ததோ அவளுக்கு தெரியவில்லை……
கண்கள் அவளது கட்டுப்பாடு இன்றியே சொக்கிக் சொருக.…… முதல் முறை அவன் தொடுகை உணர்ந்து கணவனின் கைகளில் குழைய ஆரம்பித்த மனைவியின் இசைவு….. அவன் மூளை உணரும் முன்னமும் அவன் மனம் உணர்ந்து கொண்டதோ……அவளைக் சுருட்டி மடக்கி தன்னுள் மென்மையாய் புதைத்துக்கொள்ள அவன் கைகள் வெகுவாய் முயன்று கொண்டிருக்க…….
இவ்வுலகத்தில் எதனோடும் ஒப்பிட முடியா உயிர் காதலை உன் மீது கொண்ட எனக்கு அதை….. உன்னிடம் புரிய வைத்து… இறக்கும் வரை ஒன்றாய் இணைந்து வாழும் அதிர்ஷ்டமில்லாத துரதிஷ்டம் பிடித்தவன் நான்……. நம் உதிரத்தால் உருவான நம் உயிரின் பாதியை…..
சிறிதும் இரக்கம் அற்ற அரக்கத்தனமான செயலாய் என் பிள்ளையின் அன்னையே தன் கருவை அழிக்கும் மிக மோசமான முடிவை எடுக்க அவளைத் தூண்டிய…… பயங்கரவாதியான எனக்கு மன்னிப்பு என்கிற வார்த்தையின் வரிகளை உச்சரிக்கக் கூட தகுதி இல்லாத போது……. நான் எப்படி உன்னிடம் காதலை யாசிப்பது பேபி….. தன் ஆக்ரோஷ உணர்ச்சிகள் அனைத்தும் விடுத்து…….
தன் அன்னை வெறுக்கும் பெரும் தவறு செய்துவிட்ட சிறு பாலகனாய்……. தாயின் விழிகளை கூட பார்க்க அஞ்சும் சிறு குழந்தையாய் அவள் மார்பில் முகம் புதைத்து தன் தவறுகளின் முழு பரிமாணத்தையும் முழுதாய் உணர்ந்து……. அவளிடம் மன்னிப்பையோ காதலையோ வேண்டுவதற்கு பயந்துபோய் விலகிச் செல்லும்……. தன் கணவனின் அந்த சிறு பிள்ளை தனமான செயல் அம்ருதாவிற்கு….முகத்தில் எல்லையில்லா புன்னகையும் பொங்கி எழும் தாய்மையையும் ஒரே நேரத்தில் உண்டாக்க……..
அதுவரை அவன் பிடியில் காதல் மயக்கம் கொண்டிருந்தவள்…… இப்போது தன் கரம் கொண்டு அவன் முதுகை வளைத்து மறு கரம் கொண்டு….. தன் மார்பில் புதைந்திருக்கும் தன் முதல் பிள்ளையின் தலை முடிக்குள் விரல்விட்டுக் அமைதியாய் வருடிக் கொடுக்க……
அவளின் அரவணைப்பு உணர்ந்த கணவனின் உடல் ஓர் நொடி விரைத்து அடுத்த நிமிடமே சுகமான நிம்மதியில்….. மொத்தமாய் தளர்ந்து… அவள் உடல் மீது பரவிப் படர்ந்தவன் இதுவரை தான் கூறிய அனைத்து வார்த்தைகளும் மறந்து போக……
காதலனாய் இருந்தவன் கணவனாய் மாறி தன் இணைப் பெண்ணின் அங்கம் எல்லாம் அணுவும் விடாமல்….. அலைந்து திரிந்து அங்கங்கள் இரண்டும் உரசிக்கொண்டதில் மூன்டுவிட்ட மோக நெருப்பை அணைக்க முற்பட்டு….. முடியாமல் தன்னோடு அவளையும் அதே கலவி நெருப்புக்கு இரையாக்கி இத்தனை மாத…. தன் காத்திருப்பை மென்மையிலும் வன்மையாய்…… அன்போடு கலந்த அரக்கத்தனமாய் மலையளவு தன் காமத்தை ஏதோ சிறிது தனித்து கொண்டவன்…….
அவளோடு அந்த உறவு போதாமல் போனாலும் அவன் கண்மணியின் நிலை உணர்ந்து மென்மையாய் அவளைத் தன் மீது தூக்கி போட்டு கொண்டவன்…… முழுதாய் மயங்கிவிட்டது போல் அவனின் இன்பமான ஒவ்வொரு அசைவிற்கும் இணக்கமாய் இசைந்து கொடுத்து……. கணவன் கை பம்பரமாய் சுழன்ற மனைவியின் மீது அபரிமிதமான காதல் பொங்கி எழ……
அவள் மௌனம் கொடுத்த தைரியத்தில் தன் தயக்கம் விட்டு ….. பேபி உன்னால என்னை மன்னிக்க முடியுமா…? என் காதலை ஏற்றுக் கொண்டு என்னை மனிதனாய் வாழவைக்க என்னுடைய காலம் எல்லாம் சேர்ந்து வருவாயா அம்மு….. தயக்கத்தோடு என்றாலும் தன் மன்னிப்பை கேட்டுவிட்டான்……..
அவன் வேண்டுதலுக்கு எந்த பிரதிபலிப்பும் இன்றி சிறிது நேரம் அமைதியாக செல்ல…..எனக்கே தகுதி இல்லாத போது நான் இப்படி உங்களை மன்னிக்க முடியும் ருத்ரா…..தன் மார்பில் உணர்ந்த அம்ருதாவின் கண்ணீரில் பதறிப்போய் அவள் முகம் பற்றி பார்க்க முயல……. அவன் கண்களை நேராக சந்தித்தவள் நான் ஒன்னும் ரொம்ப நல்லவள் இல்லையே ருத்ரா……
நீங்க என் அண்ணனுக்காக என்ன பழிவாங்க நினைச்சீங்க….. நான் உங்கள் மேல் இருந்த பழி வெறியை தீர்த்துக்க ஒரு பாவமும் அறியாத……என் குழந்தையின் உயிரையே எடுக்கத் துணிந்த அரக்கி ருத்ரா….. நீங்க எனக்கு செய்தது மன்னிக்க முடியாத பாவம் சொன்ன…… நான் உங்களுக்கு செய்ய நெனச்சதும் மகா பாதகம் தான்……. உறுதியாக சொன்னவள்…..
ருத்ர பிரதாப் தன் முகத்தில் மறுப்பை காட்டி அவளுக்கு சமாதானமாக ஏதோ பேச முயல…..அவன் விழி பார்த்து வேண்டாம் என்பது போல் தலையை அசைத்து மறுத்தவள்…… பண்ணின தப்புகளை நியாயப்படுத்த முயல்வதால் எந்த ஒரு நன்மையும் ஏற்படாது ருத்ரா…… அன்றைக்கு அந்த சில நிமிஷத்திலேயே நான் செய்ய நினைத்தது இப்படிப்பட்ட குற்றம் எனக்கு புரிஞ்சுருச்சு……
அதுக்கப்புறம் உங்க மேல கோபப்படவோ பழிவாங்கவோ எனக்கு எந்த தகுதியும் இல்லாம போயிடுச்சு…….. உங்க மேல இருந்த அத்தனை வெறுப்பையும் பழிவாங்கும் எண்ணத்தையும் மொத்தமா மறந்துவிட்டு தான் நான் வினோத் கூட உங்களை விட்டு போனேன்…….. அத்தோடு பாட்டி மூலம் தெரிந்த உங்களின் வேதனை தரும் கடந்த காலம்…….. ஒரு சிறுவனின் கொடூரமான வளர்ப்பு நிலை , அதைக் கேட்ட போது உங்கள் மீது இருந்த அத்தனை காழ்ப்புணர்ச்சியும் என்னை விட்டுச் சென்றுவிட்டது……. இனி நமக்குள் எந்த கணக்கும் இல்லன்னு உங்கள முழுசா மறந்துட்டு முழுமனதாக மன்னித்து விட்டு ஒரு அமைதியான வாழ்க்கை வேண்டி நான் போனது……..
ஆனா என்னால அதுக்கப்புறம் ஒரு நிமிஷம் கூட உங்க ஞாபகம் இல்லாமல்….. என் பிள்ளையை நானே அழிக்க நினைத்த குற்றவுணர்ச்சி இல்லாம என்னால இருக்க முடியல…… வீட்டிற்குள் வெளியே ஹாஸ்பிடல் இப்படி எங்க போனாலும் எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து நீங்க என்ன பார்த்துக்கொண்டே இருப்பதாய் ஒரு உணர்வு……. உண்மையை சொல்லனும்னா என் மனசு உங்களை எதிர்பார்த்து இருந்துச்சு……அந்த ஹாஸ்பிடல் டாக்குமென்ல உங்க பேர் கண்டிப்பா இருக்குன்னு என் மனசுக்குள்ள ஒரு உறுதி……
நான் நினைச்ச மாதிரியே நீங்க மறுபடியும் என்கிட்ட வந்தீங்க……. உண்மையை சொன்ன அன்னைக்கு எனக்கு உங்கள நினைச்சு கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா…….. கொஞ்சம் கோபம் இருந்துச்சு தான்…… ஆனால் அதைவிட சந்தோஷம் தான் அதிகம்……. நீங்க உடம்பு முழுக்க காயம் பட்டு இருக்குன்னு பொய் சொன்னது தெரிஞ்சும் அதை கண்டுபிடித்து வெளியே விரட்டி அடிக்க ஏனோ எனக்குத் தோன்றவே இல்லை……
அம்ருதா சொல்ல சொல்ல முதலில் வருத்தமாக கேட்டிருந்தவனின் முகம் அடுத்தடுத்த அவள் வார்த்தைகளில் குதூகலத்திற்கு போக …….
என்ன சொல்ற பேபி அப்போ எனக்கு ஆக்சிடென்ட் ஆகலைன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா….? தெரிந்தும் கூட என்ன உங்க வீட்டுக்குள்ள வர்ற நீ அனுமதி கொடுத்தியா….? அப்போ,, அப்போ என் மேல உனக்கு கோபமே இல்லையா….? அப்புறம் ஏன் பேபி என் மேல கோவமா இருக்கா மாதிரி என்ன பிடிக்கவே பிடிக்காத மாதிரி… நடந்துக்கிட்ட…..? கேட்டபடி அவன் அவளைப் பிடித்து உலுக்க…….
சும்மாதான் நீங்க என்னை ஏமாற்ற முயற்சி செஞ்சீங்க ….. நானும் உங்ககிட்ட கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம்னு எனக்கு தோணுச்சு…… நம்ம கணக்கு வேறு பாக்கி இருக்கே என்னை எவ்வளவு கஷ்டப்படுத்துநிங்க பதிலுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டாம்மா…….
அம்ருதா வின் பதிலில் போலியான கோபத்தோடு அவளை முறைத்தவன் ராட்சசி ராட்சசி எப்படி எல்லாம் என்ன ஏமாத்தி இருக்க நீ….?? இது தெரியாமல் நானும் இத்தனை நாளா வேஸ்ட் பண்ணிட்டேன் பாரு……சலிப்போடு சொல்லியபடி அவளை தன் மடியில் இருத்திக் கொண்டவன் அவளின் பின் முதுகில் இதழ் ஒற்ற ஆரம்பித்தான்…….
ஆனா அன்னைக்கு அப்படிப் திட்டின பேபி உனக்காக மணிக்கணக்காக பார்த்து பார்த்து டிரஸ் ஜுவல்ஸ் எல்லாம் செலக்ட் பண்ணிட்டு எவ்ளோ சந்தோஷமா வந்தேன் தெரியுமா…..?? அதுவரைக்கும் கூட ஏதோ ஒரு வகையில உன்னை சரி பண்ணிடலாம்னு நெனச்சிட்டு இருந்த…… எண்ணம் எல்லாம் மாறிப்போய் இனி வாழ்நாளில் நீ என்னை மன்னிக்கவே மாட்டாய் என்கிற முடிவுக்கு நான் வந்து விட்டேன் பேபி……??
நீ என்னை பலமாக கிள்ளிவிட்டாய் என்பது போன்ற சிறு குழந்தையின் சண்டையிடும் பாவனையில் தன்னிடமே குற்றப்பத்திரிக்கை வாசித்த……… தன் கணவனின் கன்னத்தில் அவன் புறம் திரும்பி அழுத்தமாக தன் இதழ் பதித்து….. அன்னைக்கு எனக்கு ரொம்ப எதுவோ பிடிக்காத மாதிரி மனசெல்லாம் வருத்தமா கோபமா இருந்தது….. என்னோட கோபத்தை நான் வேற யார்கிட்ட காட்ட முடியும் சொல்லுங்க…?? அதனால எதோ கொஞ்சமா ரெண்டு வார்த்தை திட்டினேன்…… தப்பித் தவறிக்கூட முகுந்தனை பற்றியோ மற்ற யாரைப் பற்றியோ அவர்கள் இருவரும் பேச விரும்பவில்லை……
ருத்ர பிரதாப்பின் இரண்டு கன்னங்களையும் குழந்தையை கொஞ்சுவது போல் பற்றி இழுத்து முத்தமிட்டு கொஞ்சும்….. தன் மனைவியின் காதல் சேட்டைகள் அவனுக்கு மிகுந்த இன்பத்தை கொடுக்க……தன் இரு கையாலும் அவள் கன்னத்தோடு சேர்த்துப் பிடித்து….. தன் முகத்தருகே அவள் முகத்தை கொண்டு வந்தவன்……
ஐ லவ் யு பேபி….. ஐ லவ் யூ சோ மச்…. இந்த உலகத்துல இருக்க எல்லாத்தையும் விட உன்ன மட்டும் தான்…… எனக்கு ரொம்ப பிடிக்கும்….
முதல் முறை தன் மனம் திறந்து தன் காதலை ருத்ர பிரதாப் சொல்லிவிட இத சொல்ல உங்களுக்கு இவ்ளோ நாள் ஆச்சு என்ன….. போலியாக அவனை முறைத்துப் பார்த்தவள் நானும் ஐ லவ் யு ருத்ரா…. என் புருஷனை எனக்கும் ரொம்ப பிடிக்கும் கத்தி சொன்னபடி அவன் கழுத்தை பாய்ந்து கட்டிக்கொண்டு அவன் மார்பு முழுவதும் கடிக்க ஆரம்பித்தாள் அம்ருதா……இது என்னடி குட்டி நாய் மாதிரி இப்படி கடித்து வைக்கிற…… அவளைக் கேலி பேசியவன்.…..
எனக்கு என்ன தேவை என்று கூடத் தெரியாமல் ஏதோ ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருந்த என்னிடம்…… உன் உயிரின் தேவை நான் தான் என்று எனக்குப் புரிய வைத்த என் தேவதைக்கு என் காதல் பரிசு…….சொல்லிவிட்டு அவள் சுதாரிக்கும் முன் தன் மீது கிடந்த அவளை மறுபடியும் கட்டிலில் தள்ளி……. தன் காதல் யுத்தத்தை அவள் மேனியில் அவன் ஆரம்பிக்க……
வழக்கம் போல் தன் கணவனுக்கு சரிக்குச் சரி ஈடுகொடுத்து தானும் யுத்தத்தில் இறங்கி சண்டையிட ஆரம்பித்தாள் அந்த காதல் ராட்சசனின் சண்டைக்காரி……..
இருவர் செய்த தவறுகளும் மற்றவரால் முற்றிலுமாய் மறக்கப்பட்டுவிட்ட அதன் பிறகு இருவரின் செயலுக்கும் எந்த விளக்கங்களும் தேவையின்றி போக….. அங்கு காதலை அன்றி வேறு ஏதுவும் இனி அவர்களுக்குள் வர வாய்ப்பில்லை…….
வாழ்வின் துணை தேடி அலைந்த ருத்ரனுக்கு அவன் உயிராய் வாழ அவன் அம்மு கிடைத்துவிட்டாள்…….. காற்றுக் கூட அவர்களின் ஆலிங்கணத்தை கலைக்க விரும்பாத தென்றலாய் வீசி தம்பதியரை தழுவி சென்றது…..
உன் துணை தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
எபிலாக்
அன்று அரண்மனை மீண்டும் ஒருமுறை பிரம்மாண்டமான அலங்காரத்தில் ஜொலி ஜொலித்தது…… பிரதான வரவேற்பறை இருந்த அனைத்து இருக்கைகளும் அப்புறப்படுத்தப்பட்டு இருக்க இயற்கையான வாசனை மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த அறை தேவலோகம் போல் காட்சி அளித்தது……
வரவேற்பறையின் மையப்பகுதியில் கலைநயம் மிக்க நுண்ணிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒற்றை இருக்கை போடப்பட்டிருக்க…… அதை சுற்றிலும் தட்டுகளில் வளையல்களும் பூக்களும் இன்னும் மங்களப் பொருள்களால் நிறைந்திருக்க……. அந்த அரண்மனையின் அரசிற்கு இன்று வளைகாப்பு….. விழாவிற்கான முகூர்த்தம் குறிக்கப்பட்ட சரியான நேரத்தில்………
9 மாத பிள்ளை சுமந்த வயிற்றை அழுத்தாத மிக மென்மையாய் பல கலைஞர்கள் சேர்ந்து நெசவு செய்த மென்மையான பட்டை மிகப் பாந்தமாக உடுத்தி……. வைரங்கள் மின்னும் நகைகள் கொண்டு அலங்கரித்து தங்கத்தேர் போல் அசைந்து வரும் அம்ருதாவை…….அம்மன் சிலையோ என்று அங்கிருந்த அனைவருமே இரு நொடிகள் பிரமித்துப் போய் பார்க்க நேர்ந்தது……..
அனைவரும் அவளைப் பார்க்க விழா நாயகியின் கண்களோ தன் நாயகனை சுற்றியே இருந்தது…… வினோத்தும் அரவிந்தனும் ருத்ர பிரதாப்பை சுற்றி நின்று ஏதோ பேசி கொண்டிருக்க அவர்கள் இருவரையும் மனிதராய் கூட மதிக்க தோன்றாமல்……
கண்களில் நட்சத்திரங்கள் மின்ன அவன் பெண்மையின் பூரித்த தாய்மை அழகை அணு அணுவாய் அமிர்தத்தின் துளியாய் ரசித்துப் பார்க்கும் பார்வை பார்த்திருந்தான்…….
அத்தனைபேர் மத்தியிலும் ரகசியமான ஒரு கண் சிமிட்டலோடு பறக்கும் இதழ் முத்தமும் என சேட்டை செய்யும் தன் கணவனை போலியாக முறைத்தபடி இருக்கையில் அமர்ந்தாள் அம்ருதா……..
அங்கும் இங்கும் அலைந்து அழகாக பழங்கள் அடுக்கப்பட்ட தட்டினை எடுத்துக்கொண்டு தன் ஐந்து மாத பிள்ளை வயிற்றை சுமக்க முடியாமல் சுமந்து படி…….. தன்னைக் கடந்து செல்லும் மனைவியை பார்த்த அடுத்த நொடி அரவிந்தனின் பேச்சை செவிமடுக்க அங்கு வினோத் நிற்கவில்லை……..
மாப்பிள்ளை மைத்துனன் இருவரும் அங்கிருந்து சென்று இருக்க….. அதைக் கவனிக்காமல் தானாக புலம்பிக் கொண்டிருந்த அரவிந்தனை…… பாவம் யார் பெற்ற பிள்ளையோ என்று மற்றவர்கள் பார்த்து செல்வதை பாவம் அவன் அறியவில்லை…….
இந்த வேலை உன்னை யாரு செய்யச் சொன்னது நீ வெயிட்டான பொருள் எதையும் தூக்கக் கூடாது டாக்டர் சொல்லி இருக்காங்க செல்லம்…….மென்மையாய் அவளைக் கடிந்தபடி கையிலிருந்த பாரத்தை வாங்கி கீழே வைத்துவிட்டு நிமிர்ந்த வினோத்தை…… கண்டு கேவி சிரிப்பை சிந்தியபடி அமர்ந்திருந்த தங்கையின் அலங்காரத்திலும்…… அவள் முகம் காட்டும் தெய்வீகத்திலும் ஒரு நொடி சிலையாகி நின்றவன்……..
அம்மு அழகா அம்சமா ராஜாத்தி மாதிரி இருக்க டா …. சொன்னதோடு அவள் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவன் தன் விழியில் தோன்றிவிட்ட ஒரு துளி கண்ணீரை பிறர் அறியாமல் துடைக்க……. உன்னை நான் அறிந்து கொண்டேன் என்னும் செய்தியோடு அவன் தோள்களை ஆதரவாய் அழுத்தின மனைவியின் கரங்களை மென்மையாய் பிடித்து தன்னோடு இறுக்கிக்கொண்டான்…….
அனைத்து பெண்களும் பெரியவர்களும் நலங்கு வைத்து முடிக்க…… கடைசியாய் ருத்ர பிரதாப் வந்து அவளின் தாய்மைப் பெருக்கில் சிவந்து ஜொலிக்கும் இரண்டு கன்னங்களிலும் சந்தனம் பூசி…… தான் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த வைர வளையல்களை அவள் கைகளில் அணிவித்து…… நெற்றி வகிட்டில் நெகிழும் நெஞ்சோடு முத்தமிட்டவன் நிமிர….
ஆனால் அவனை விடாமல் அவன் சட்டையைப் பிடித்து கசக்கியபடி……. என்னமோ வலிக்குதுங்க என்ற அம்ருதாவின் மெல்லிய முனகல் கேட்ட அடுத்த வினாடியில்….. தன் மனைவியை கைகளில் அள்ளியபடி வாசலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான் ருத்ர பிரதாப்……. அவனுக்கு சற்றும் சளைக்காத வேகத்தில் வினோத் பாய்ந்து சென்று காரினை எடுக்க…….. மருத்துவமனை நோக்கி சீறி கிளம்பியது அவர்கள் வாகனம்……..
அம்ருதா வின் ஒவ்வொரு அலறலின் போதும் அங்கிருக்கும் மருத்துவர்களை….. கேள்வியால் முறைக்கும் பார்வையால் ருத்ர பிரதாப் அலற வைக்க….. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் இங்க இருந்து வெளிய போங்க…. போய் அமைதியா சத்தம் போடாமல் இருக்கனும்…… எச்சரித்து அவனை விரட்டி விட…….
ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி வெளியே அம்ருதாவின் சத்தம் கேட்கும் போதெல்லாம் உடலின் ஒடும் நடுக்கத்தை….. மறைத்தபடி வினோத்தும் ருத்ர பிரதாப்பும் அமர்ந்திருக்க……..அவன் தோளை ஆறுதலாய் தட்டிக் கொடுத்த படி லிங்கேஸ்வரர் அமர்ந்திருந்தார்…….அவர்கள் இருவரின் அழிச்சாட்டியத்தை கண்டு தலையில் கை வைத்தபடி பொறுக்க முடியாமல் சற்று தள்ளி அமர்ந்து இருந்தாள் சாருலதா……
சிறிது நேர இடைவெளியில் கதவு திறக்கப்பட வெண்மையான மெல்லிய துணியால் சுற்றப்பட்ட…… ரோஜாப்பூ குவியல் ஒன்றை கைகளில் கொண்டு வந்த மருத்துவ….. மிஸ்டர் ருத்ர பிரதாப்….. உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. என்றபடி அவன் கைகளில் கொடுக்க……. இமய மலையை கூட தன் புஜத்தில் தாங்கும் வலிமை பெற்றவனுக்கு காற்றைப்போல் மென்மையான தன் பிள்ளையை சுமக்க முடியாமல் உடல் துவள……
அப்படியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து…..உலகின் அனைத்து சந்தோஷத்தையும் மொத்தமாய் தானே கொண்டு வந்தது போல் பொக்கை வாய் திறந்து சிரிக்கும்……. தன் மகளின் அழகை ஆனந்த கண்ணீரோடு பார்த்தவன்……
சிறு வயதில் தன்னை விட்டுப் போன அவன் அன்னையே திரும்பக் கிடைத்து விட்டதாய் உள்ளமெல்லாம் பூரிக்க மென்மையாய் தன் உதட்டை அவள் பூ பாதத்தில் ஒற்றி எடுத்தான்……. இவ்வுலகத்தையே வென்றுவிட்ட பெருமை நெஞ்சில் பூத்தது……
******************************************”
அம்மா என்ன பண்ணிட்டு இருக்கீங்க அங்க அக்காவுக்கு மேட்ச் ஆரம்பிக்கப் போகுது சீக்கிரம் கிளம்புங்க….. கத்தியபடி வந்து நின்ற தன் 17 வயது இளைய மகன் உதய பிரதாப்பை….. பார்த்த அம்ருதா போதும்டா கொஞ்சம் அடங்கு……
பொம்பளைங்கன்னா கிளம்ப நேரம் ஆகத்தான் செய்யும்…… அதட்டியபடி அறையை விட்டு கிளம்பி வெளியே வர……எட்டி அவள் கண்ணத்தில் அழுத்தி முத்தமிட்டவன் கோபப்பட்டு போது…… ரொம்ப அழகா இருக்கிங்க மாம்…. சொன்னதோடு தன் அன்னையை பாசமாக அனைத்தும் கொண்டான்…..
என்ன அம்மாவுக்கும் மகனுக்கும் கொஞ்சல் அதுவும் என்னை விட்டுட்டு…..என்றபடி அந்த வயதிலும்….. தன் கம்பீரம் சிறிதும் குறையாத ஆணழகனாய் மிளிரும் ருத்ர பிரதாப்பை கண்டு சிறிது சொக்கி தான் போனாள் அவனின் இரு பிள்ளைகள் தாய்……மனைவியின் தனக்கான மயக்கத்தை அவள் விழிகளில் படித்தவன்……உதய் போய் மற்ற எல்லாரும் ரெடியான்னு பாரு…..
மகனை அங்கிருந்து விரட்டி விட்டு தன்னருகில் வரும் கணவனைப் பார்த்து கேலியாக அம்ருதா சிரிக்க…… என்னடி இளிப்பு…? என் பிழைப்பை பார்த்தா உனக்கு சிரிப்பு வரத்தான் செய்யும்… இவன் பிறந்ததில் இருந்து நீ என்ன உன்கிட்டயே சேர்க்க மாட்டேங்கிறா…….
எனக்கு எதிரியே உன் மகன் தான்டி…… திருமணமான இத்தனை வருடம் ஆகியும் புதுமாப்பிள்ளையாய்….. என்னேரமும் காதல் செய்து திரிபவனின் இந்தத் தன் மகனிடம் இருக்கும் பொறாமை கூட அவள் மேல் வைத்திருக்கும் காதலியே காட்டியது…….
போலியாக மனைவியை முறைத்தவன் அவளை அணைக்க முற்பட…… மாமா அத்தை கிளம்பிட்டீங்களா என்று கோரஸாக கத்தி கொண்டு அறைக்குள் ஓடி வந்தனர்…… வினோத்தின் இரு பிள்ளைகளான 20 வயது அமுதாவும் 15 வயது சந்துருவும்…….
கட்டின பொண்டாட்டியை கணநேரம் கூட தொட்டுப்பார்க்க முடியவில்லையே ஈஸ்வரா இது என்ன வாழ்க்கைடா அம்ருதா காதருகே ருத்ர பிரதாப் முணுமுணுக்க…… அவனை எச்சரிக்கும் பார்வையோடு தள்ளிவிட்டு நகர்ந்தவள்…….
நாங்க ரெண்டு பேரும் ரெடி செல்லங்களா கெளம்பலாமா….. சொன்னபடி அறையிலிருந்து வெளியேறி இருந்தாள்……என்ன அண்ணா கிளம்பலாமா……
நான் அப்பவே ரெடி அம்மு உன் அண்ணி தான் இன்னும் வெளியவே வர மாட்டேங்கறா…… வயசான காலத்துல எதுக்கு இவ்ளோ மேக்கப் ன்னு நீயே கேளு……மனைவி அருகில் இல்லை என்ற தைரியத்தில் அவளைக் கேலி பேசிய கணவனை…….
முறைத்தபடி வந்த சாருலதா….. நானும் தயார் அண்னி வாங்க போகலாம் அம்ருதா விடம் சொன்ன படி நடந்தவள்…… ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே ரெடியாகி வந்த என் புடவை கலைத்து விட்டதும்…. இல்லாம நான் லேட் பண்றேன்னு என்னை குறை சொல்றீங்களா…….
ராத்திரி இருக்கு உங்களுக்கு….தன் அருகில் அமைந்து காரை ஒட்டும் வினோத்தை சாருலதா மிரட்ட….. ஐயையோ…. அப்படியே எதுவும் பண்ணிடாத டி உன் புருஷன் ரொம்ப பாவம்…. என்று மனைவியிடம் சரண் அடைந்தான் வினோத்……….
அந்த ஆடிட்டோரியமே மக்களால் நிறைந்திருக்க நடுவில் இருந்த போட்டி நடைபெறும் மேடையில் முக்கால் பாகம் உடலை கவ்விப் பிடித்த ரப்பர் வகை உடையோடு….. கடைசிக்கட்ட உடற்பயிற்சியில் இருந்த 20 வயது சாந்தி தேவி தன் குடும்பத்தின் வருகையை அறிந்து அங்கு ஓடி வந்தாள்……
டாட் என்று ஓடி வந்த மகளை முன் சென்று அணைத்து….. முதுகில் தட்டிக்கொடுத்தவன்…. குட்டிமா ஆல் த பெஸ்ட் டா…. ருத்ரா வாழ்த்த தேங்க்ஸ் டாட்……என்றவள் தனக்கு வாழ்த்து சொன்ன….. அன்னையிடம் திரும்பி அவளை அணைத்துக்கொண்டாள்…..
அக்கா வாழ்த்துக்கள் நீதான் கலக்கணும் கோரஸாய் கத்திய….. இளையவர்கள் மூவரையும் அனைத்து விடுவித்தவள்….. வினோத்திடம் ஆசீர்வாதம் பெற்று மறுபடியும் போட்டி நடக்கும் மேடைக்கு சென்றாள்………
போட்டி தொடங்கும் முதல் மணி அடிக்க பெண்களுக்கான மல்யுத்தம் முதல் சுற்று ஆரம்பம் ஆனது……போட்டியாளர்கள் இருவரும் அடுத்தவரை அளவிடும் பார்வையோடு மெதுமெதுவாய் ஒருவரை ஒருவர் நெருங்கி சண்டையிட ஆரம்பிக்க ……
தன் கால்களை கிடுக்கிப்பிடி போட்டு முதுகை வளைத்து தரையில் அழுத்த முயன்ற எதிராளியிடம் இருந்து…….. லாவகமான ஒரு அசைவில் தன்னை விடுவித்து கொண்டவள்…… அந்த மேடையை ஒரு சுற்று சுற்றி……..
மறுபடியும் தன்னைத் தாக்க வந்த பெண்ணின் இரு கைகளையும்……அவள் முதுகுப் புறம் மடக்கிப் பிடித்து மொத்த உடலையும் பந்து போல் அழுத்தி…… அவள் துள்ளி குதித்தோம் அசைந்தும் சாந்தியிடம் இருந்து…… தப்பிக்க பார்க்க…… விடாமல் அழுத்திப் பிடித்து அவளை தரையிலேயே சில நிமிடங்கள் வைத்திருக்க……
மூச்சு விட முடியாமல் தவித்த பெண் தன் தோல்வியை கையசைவின் மூலம் தெரிவிக்க அப்போதுதான் அவளை விட்டாள் சாந்தி தேவி…….
மூன்று சுற்றுகள் கொண்ட ஆட்டத்தை ஒரு சுற்றில் எதிராளியை டக் அவுட் செய்து தோற்கடித்த….. சாந்தி தேவியின் வெற்றிக்கான ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் அந்த அரங்கமே அதிர்ந்தது…….
இந்திய அளவில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் முதல் பரிசு வென்ற சாந்தி தேவியை பேட்டி எடுக்க பத்திரிக்கையாளர்கள் குவிந்திருக்க……தன் குடும்பத்தோடு அவர்களை சந்தித்தவள்……. இந்த சின்ன வயசுல இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறீர்கள் உங்க வெற்றியின் ரகசியம் என்ன மேடம்……
பத்திரிகையாளர்களைப் பார்த்து புன்னகைத்தவள்….. என்னோட குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருத்தரும் என்னுடைய இந்த வெற்றிக்கு காரணமானவர்கள் தான்…..
இன்னும் நான் எவ்ளோ பெரிய சாதனைகள் செய்தாலும் எனக்கு ஊக்கமாய் இருப்பது என் பெற்றவர்களும்…… உடன்பிறந்தவர்களும் தான்…….
சாந்தி மேடம் உங்களுடன் வருங்கால திட்டம் என்ன நாங்கள் தெரிஞ்சுக்கலாமா…..?? தாராளமா….. பெண்களுக்கான மல்யுத்த பயிற்சி கலம் உருவாக்குவது தான் என்னுடைய வருங்கால லட்சியம்…….
இந்திய மண்ணை சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் தைரியத்தைப் பெற வேண்டும்….. அதற்கு என்னால் ஆன முயற்சி செய்வதே என் வாழ்நாள் இலக்கு…….தன் குடும்பத்தின் ஒத்துழைப்போடு வெற்றி பெண்ணாய் மிளிர்ந்தாள் சாந்தி தேவி…….
நாமும் விடை பெறுவோம்…….. அவர்களை வாழ்வாங்கு வாழ என வாழ்த்தி…….
உயிர்த்துணை சேர்ந்தது……..
