உன் துணை தேடும் என்னுயிர்
அத்தியாயம்.33
ஆயிற்று இன்றோடு அம்ருதா தன் கணவனை பிரிந்து….. அவள் அண்ணனுடன் அவளின் பழைய வாழ்க்கைக்கு திரும்பி 5 நாட்கள் சென்றிருந்தது…….இனி துன்பம் எல்லாம் கடந்து விட்டது என்று அவள் நினைத்திருக்க……
ஆனால் நடந்து முடிந்த எதுவுமே….அவளையோ அவள் மனதையோ விட்டுவிலகி செல்லாமல் மீண்டும் மீண்டும் கண்முன்…. தோன்றி நகரும் ஒவ்வொரு நொடியையும் நரகமாய்
மாற்ற…..
இனி என்றுமே தன்னால் கடந்து சென்ற கவலைகளற்ற….வாழ்க்கையை எண்ணிக்கூட பார்க்க முடியாது என்று அவளுக்கு தெளிவாய் புரிந்தது…….ஆனாலும் தன்னுடைய அத்தனை தவிப்பையும் தன் உள்ளே சேர்த்துப் பூட்டிமறைத்து வைத்தவள்……. தன் முகம் பார்த்து நிற்கும்
கண்ணாடியாய் அவள் உணர்வை பிரதிபலிக்கும் சகோதரனுக்காக…… உதட்டில் ஒட்டவைத்த போலியான புன்னகையோடு நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள்..…..
இந்த ஐந்து நாட்களில் அவள் வயிற்றின் கருவைப்பற்றி….. அவளும் பேசவில்லை ஏனோ வினோத்தும் அதை பற்றி….. ஒரு வார்த்தை கூட சொல்லவோ பேசவும் முயற்சிக்கவில்லை. எதற்கோ…… பயந்தது போல் அண்ணன் தங்கை இருவருமே ஒரு திரைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு……. ஒருவரின் மகிழ்ச்சிக்காக
ஒருவர் முயன்று கொண்டிருந்தனர்……
அன்று தலைசுற்றலும் வாந்தியும் அதிகமாக இருக்க…… எழுந்து அமர கூட திறனற்று படுக்கையில் சுருண்டிருந்தாவளின்…..அருகில் வந்து அமர்ந்த வினோத்….. அம்மு டாக்டர்கிட்ட போகலாமா…..
உனக்கு முடியலேன்னு நினைக்கிறேன்……என்றவன் ஒரு பெருமூச்சோடு…….சில விஷயங்கள் வாழ்க்கையில எவ்வளவு கஷ்டமானதா இருந்தாலும் அத நாம தாங்கி தாண்டி வந்து தான் ஆகணும்…..அம்மு …..
அவளின் தலை வருடி சொன்னவன் சரி இப்போ நானே கேட்கிற…… குழந்தையைப் பற்றி என்ன முடிவெடுத்திருக்க…… யாருக்கும் தயங்காமல் எதைப்பற்றியும் யோசிக்காமல் உன் மனசுல பட்டதை நீ சொல்லு……நீ எடுக்கிற முடிவு எதுவா இருந்தாலும்…….நான் எப்போதும் எந்த நிலையிலும் எனக்குத் துணையா இருப்ப…….
சொன்னவன் எழுந்துகொள்ள போக அவன் கையை எட்டிப் பிடித்தவள்….. நல்ல டாக்டர பாருண்ணா செக்கப்புக்குப் போக லாம்….. பேபி எப்படி இருக்குன்னு நான் பாக்கணும்…..
தலை குனிந்தபடி தன் கையை பிடித்துக்கொண்டு சொன்ன….. அம்ருதாவின் தலையில் கைவைத்து சிறிதாக ஒரு ஆட்டு ஆட்டியவன்…… அதெல்லாம் ஏற்கனவே பார்த்து வைச்சுட்டேன் இப்பவே கிளம்பி போனா சரியா இருக்கும்…..
அவனுக்குத் தெரியாத அவன் தங்கை என்ன விதமான முடிவை இந்த விஷயத்தில் எடுப்பாள் என்று……அந்த மருத்துவமனையில் அவளின் அனைத்து பரிசோதனைகளும்….. முடிய குழந்தை நார்மலான வளர்ச்சியோடு இருப்பதாய் சொன்ன மருத்துவர்……
அவளின் உடல்நிலை குறித்து சில தகவல்கள் கூறி அனுப்பி விட கடைசி வரை….. அம்ருதா பயந்தது போல் குழந்தையின் தந்தை பெயரை எவருமே கேட்கவில்லை…….
அத்தனை வினோத் கவனிக்கவில்லை என்றாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளை உந்தித் தள்ள……. அண்ணன் அறியாது தன் மருத்துவ ரிப்போர்ட்டை எடுத்து பார்த்தவளின் கண்களில்……. பட்ட குழந்தையின் தந்தை பெயர் என்ற இடத்தில் எழுதப்பட்டிருந்த ருத்ர பிரதாப் என்னும் எழுத்துக்களை…..
சில நிமிடங்கள் வெறித்து பார்த்தவளிடம் நிச்சயம் திகைப்போ அவன்…… பெயரை இதில் கண்டதார்கான அதிர்வோ துளிக்கூட இல்லை இதை அவள்….. நிச்சயம் எதிர்பார்த்தே இருந்தாள்…..
.சற்று நேரம் அந்தக் பெயரையே பார்த்திருந்தவள்……பிறகு சட்டென்று அதை மூடி வைத்தாள்…. சுற்றுப்புறத்தை விழிகளால் ஆராய சொன்ன மனதை அதட்டி எங்கும் திருப்பாமல் நேற்பார்வையோடு அமர்ந்து கொண்டாள் ……..
ஒருவேளை அம்ருதா பார்த்திருந்தால் கூட அவள் கண்களுக்கு ருத்ர பிரதாப் சிக்கி
இருக்க மாட்டான்…… மருத்துவமனையிலிருந்து வினோத்தின் வண்டி ஒவ்வொரு தெருவை தாண்டும் போதும் ……. அங்கிருந்த யாரோ ஒருவரின் தொலைபேசி அவர்கள் சம்பந்தமான தகவல்களை யாருக்கோ அனுப்பிக் கொண்டிருந்தது……. அம்ருதாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை…..
அதே சென்னையில் மற்றொரு மூலையில் மிகப் பிரம்மாண்டமாய் அமைந்திருந்த அரண்மனை போன்ற…… அந்த பங்களாவின் ஒரு அறையில் கண்களை மூடி தன் ஒற்றை இருக்கையில் …… அமர்ந்தபடி ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தவனை…..
பாஸ் என்ற குரல் கலைக்க கண் திறந்து பார்த்தவனின் முன்னால் வந்து நின்ற அரவிந்தன்…..பாஸ் மேடம் வீட்டுக்குப் போய்ட்டாங்க இது அவங்களோட மெடிக்கல் ரிப்போர்ட்…….தன் கையில் இருந்த காகிதங்களை அவன் முன் நீட்டியவன்…..
பேபி மதர் ரெண்டு பேரும் ஹெல்தியா இருக்காங்க…..எந்த பிரச்சனையும் இல்ல இனி மன்த்லி செக்கப் மட்டும் வந்த போதும்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க பாஸ்……..
அவனுக்குத் தெரிந்த தகவல்கள் ஒன்றுவிடாமல் சொன்னவனிடம்……ஏற்றுக்கொண்ட விதமாய் தலையசைத்து விட்டு மீண்டும்……. தன் இருக்கையில் ருத்ர பிரதாப் சாய்ந்துவிட…… ஆனால் அரவிந்தனோ அங்கிருந்து விலகிச் செல்லாமல் நின்றிருந்தான்……
என்ன கேட்கணும்ன்னு தோணுதோ கேளு அரவிந்த் அவன் இருப்பை உணர்ந்தவன் கேட்க……அது வந்து பாஸ் உங்களால மேடத்தை விட்டு இருக்க முடியாது…… எனும் போது எதற்காக அவங்கள வினோத் கூட போக விட்டீங்க…. பாஸ்…..
அது மட்டும் எனக்குப் புரியவே இல்ல பாஸ்…. அஞ்சு நாளும் நீங்க சரியா சாப்பிடலை ஒழுங்கா தூங்கல உங்களோட டெய்லி வொர்க் எதையுமே பார்க்கல……. இந்த ரூமை விட்டு கூட வெளிய வரல…..அவங்களோட விலகல் உங்கள இவ்ளோ பாதிக்கும் போது……
நீங்க ஏன் பாஸ் அவங்க போகும் போது தடுக்கல…….தன்னை போட்டு வெகுவாக குழப்பிய கேள்வியை கடைசியாய் கேட்டுவிட்டு ஒரு அசுவாச மூச்சை வெளியிட்டான் அரவிந்தன்…….
அவனின் கேள்வியை முழுவதுமாய் உள்வாங்கிய ருத்ர பிரதாப்பின் முகத்தில் ஒரு வெறுமையான சிரிப்பு தோன்றியது….. நான் ஏன் என்னோட பேபி என்ன விட்டுப் போகும்போது அவளை தடுக்க முயற்சி பண்ணல…..? ……
ஏதோ தனக்குத் தானே கேட்பது போல் சொன்னவன்……தெரியல அரவிந்த் என்பதோடு தன் பதிலை முடித்துக் கொண்டான்……என்னவோ பெரிதாய் விளக்கம் சொல்வது போல் இருந்த அவன் முகத்தை பார்த்து ஏமாந்த அரவிந்தன்…..
சந்தோஷமாக இருந்தாலும் கோபமாக இருந்தாலும் இல்ல…..சோகமாகவே இருந்தாலும் என்ன மண்டை காய வைக்கிறதுல மட்டும் எங்க பாஸ் தெளிவா இருக்காருப்பா……..
தலையை இடவலமாய் ஆட்டி புலம்பியவன் அவனின்…. தற்போதைய முழுமுதல் கடமையான கண்காணிப்பு பணிக்கு திரும்பிச் சென்றான்……..
சிவானந்தத்தின் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க கூட…… வினோத்திற்கு வெறுப்பாக இருந்தது இருந்தும் கடைசியாக அவன் தெரிந்து கொள்ள வேண்டிய…..ஒரு விஷயம் அதற்காகத்தான் இப்போது அவன் அங்கே வந்திருப்பது…..
தன் கோபத்தை முயன்று சரி செய்துகொண்டு அவன் வீட்டிற்குள் நுழைய…… அடுத்த வினாடி எங்கிருந்து வந்தாள் என்றே தெரியாமல் மாடியில் இருந்து….. ஓடிவந்த சாருலதா…..
அவன் மீது ஒரே பாய்ச்சலாய் தாவி தன் பலம் மொத்தத்தையும் உபயோகித்து…….மிக இறுக்கமாக அவனை அணைத்து அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்..……
எப்போதும் அவளின் அருகாமையில் தன்னை அறியாது….. தடுமாறும் வினோத்தின் மனதும் உடலும் இன்று அதற்கு மாறாக இரும்பாய் இறுகியது……. அவளைத் தன் மீதிருந்து அவன் பிரிக்க முயன்ற நேரம்…..
சாருலதா ..…. என்ற கூச்சலோடு அங்கு வந்த சிவானந்தம்….. வினோத்தை பொசுக்குவது போல் முறைத்து கொண்டே அவனை விட்டு பிரித்து….. சாருலதாவை அவர் புறம் இழுத்து நிறுத்தினார்……
அவரின் வெறுப்புக்கு சற்றும் குறையாத எதிர் பார்வை பார்த்த வினோத்தின்…… கோபத்தில் சற்று சுதாரித்தவர்…… உள்ள போய் வந்தவங்களுக்கு முதல்ல காபி எடுத்துட்டு வா மத்ததை அப்புறம் பேசலாம்……
என்று சொல்லி சாருலதாவை உள்ளே அனுப்பியவர்….. அங்கிருந்த சோபாவில் சாய்ந்து அமைத்து கால் மேல் கால் போட்டுக்கொண்டவர்…….என்ன வினோத் ஏதாவது முக்கியமான விஷயம் பேசணுமா……
வீட்டு ஹால் வரைக்கும் வந்திருக்க நக்கலாக கேட்டவரின்….. தோரணை சொல்லியது உன்ன மாதிரி வேலைக்கார எல்லாம் வீட்டு வாசலில் தான் நிற்க வேண்டும் என்று செய்தியை…..
சரி சரி இப்ப புரியுது நீ எதுக்கு இங்க வந்தேன்ற விஷயம்…… இத்தனை நாளா என் மகளுக்கு செக்யூரிட்டி வேலை பார்த்ததற்கு நீ கூலி வாங்கவே இல்லையே…… நான் கூட கொடுக்க மறந்து போயிட்ட …..
சொல்லு எவ்வளவு வேணும் நீ கேட்கிற அமௌன்ட் நான் உனக்கு தரேன்….. உன்னோட வேலையை சரியா செஞ்சதுக்காக உதாசீனமான பார்வையோடு கேவலமான வார்த்தைகளை அவர் பேச…..
அவரையே வெறித்துப் பார்த்திருந்தவன் இப்போது…… தானும் சென்று அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து அதில் கையூன்றி…… சிவானந்தத்தை பார்த்தவன்…. அந்தப் பணத்தை நான் உங்கள் வாழ்க்கைக்கு போட்ட பிச்சையை நினைச்சு நீங்களே வச்சுக்கோங்க மிஸ்டர் சிவானந்தம்……
நான் உங்க பொண்ணை காப்பாற்றியதற்கு ஒரே காரணம் மனிதாபிமானம்……எத வேணாலும் வித்து சம்பாதிக்கணும் என்கிற கேவலமான புத்தி எனக்கில்லை……
அன்னைக்கு என்ன செய்றதுன்னு தெரியாம நீங்க கலங்கி நின்னு என்கிட்ட உதவி கேட்ட அப்போ….. ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கை காப்பாத்தனும் நினைச்சு தான் நான் இதை செஞ்சேன்……அப்பக் கூட என் தங்கச்சிக்காக நான் யோசிச்சப்ப…….
நீங்க என்ன சொன்னீங்க என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கா மிஸ்டர் சிவானந்தம்……அவளும் என்னோட பொண்ணு மாதிரி தான் அவளுக்கு ஒன்றும் ஆகாமல் நான் கண்காணித்து பாத்துக்குறேன் ன்னு சொன்னிங்க…..
ஆனா உங்களால என்னோட தங்கச்சிக்கு எவ்ளோ பெரிய கஷ்டம் வந்தப்போ ஒரு சின்ன உதவி கூட அவளுக்கு நீங்க செய்யல….. நம்பிக்கைக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாத உங்கள மாதிரி ஒரு மனுஷனா நான் நம்புனா ஒரே காரணத்துக்காக…….
எனக்கு இந்த தண்டனை கண்டிப்பாக தேவைதான்…..அவர் பார்வையை நேராக சந்தித்து…. அழுத்தம் திருத்தமாக பேசியவன் இனி உங்களுக்கோ எனக்கோ இந்த வீட்டுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை இதற்கு மேல் பேசாமல் எழுந்து. வாசல் நோக்கி செல்ல…..
விநோ விநோ எங்க போறீங்க அவனை அழைத்துக் கொண்டே……. அவன் அருகில் வந்து கையைப் பிடிக்க முயன்ற சாருலதாவிடம் இருந்து. தள்ளி நின்றவன்……அவளை பார்த்து இடவலமாய் தலையசைத்து விட்டு அவள் கூப்பிடக் கூப்பிட அங்கிருந்து விருவிருவென்று விலகி சென்று விட்டான்……
வினோத்தின் அமைதிக்கு நேர்மாறாக அவனின் உள்ளம் தீயில் இட்டு உருக்கிய உலோகமாய்….. கொதித்துக் கொண்டிருந்தது…… சிவானந்தத்தை பற்றி நன்கு தெரிந்திருந்தும் கூட……..
அந்த மனிதனை அம்ருதாவின் விஷயத்தில் நம்பி அவளை விட்டு சென்றதற்கு ஒரே காரணம்….. சாருலதாவின் மீது அவன் கொண்ட காதல் மட்டுமே……
தங்கையின் இன்றைய நிலை கண்டு துடித்தவன்……தன்னோடு சேர்த்து தன் அறிவை மறைத்தல் அவனின் காதலையும் முழு மொத்தமாய் வெறுத்து விட்டான்…..
திரும்பி வந்தது முதல் எப்போதும் மிக விரைவில் வீடு திரும்பி விடும் வினோத் அன்று வெகு நேரம் வராமல் போக…… தன் உள்ளம் முழுவதும் தவிப்போடு அம்ருதா அண்ணனுக்காக காத்திருந்தாள்……
இரவு12 மணியைத் தொட்ட அந்த நள்ளிரவு நேரத்தில்……ஒரு மாதிரியாக தள்ளாடியபடி வினோத் வீட்டிற்குள் வர….. அவனின் நடவடிக்கை பார்த்து திகைத்து எழுந்து நின்றாள் அம்ரிதா….. அவள் அண்ணனா குடித்துவிட்டு வந்திருப்பது அவளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது….. இத்தனை ஆண்டுகளில் அவள் பார்க்காத அண்ணனை அன்று பார்த்தாள் அம்ருதா……
அம்மு….. இனி உ….னக்கு எந்த கவலை….யும் வேண்டாம் உன்ன கஷ்ட….ப்படுத்துன அந்த பாவிக்கு நா…ன் சரியான தண்டனை கொடுத்து விட்டேன்….. வண்டியில…… வே…..கமா போய் ஒரே இடி…..
இனி ஒரு நாளும் அவன் உன் வாழ்க்கையில் வரமாட்டான் ….. நீ இனிமே சந்தோஷமா இருக்கலாம்….. உன்னையும் குழந்தையையும் பாதுகாப்பா பார்த்துக்க காலம் முழுக்க உங்க கூடவே நான் இருப்ப….. எதற்கும் கலங்காத…..
உடல் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற குரல் குழற….. ஏதேதோ பேசி கொண்டே அங்கே தரையிலேயே படுத்து விட்டான் வினோத்…… அவன் என்ன சொல்கிறான் யாரைப் பற்றி பேசுகிறான் என்று புரியாமல் குழம்பி நின்றாள் அம்ருதா…..
அவளின் குழப்பத்துக்கு எல்லாம் விடை அடுத்த நாள் காலை அவள் வீட்டு வாசலின் முன் வந்து நிற்க…..மீண்டும் ஒருமுறை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்…… வாழ்க்கையில் இரண்டாவது முறையாக திகைத்து நின்றாள் அம்ருதா……….
உயிர் துணை சேரும்…….
உன் துணை தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
அத்தியாயம்.34
கடந்து சென்ற சில நாட்களைப் போலவே அன்றும் அம்ருதா விற்க இரவு தூக்கம் இல்லாமல் கடந்தது…… தன் கைகள் இரண்டையும் வயிற்றில் வைத்து…… மென்மையாய் வருடியவளின் கண்ணிலிருந்து கண்ணீர் மௌனமாக வெளியேறியது…….
இமை மூடினால் தோன்றும் கனவுகளும்…… அதில் வரும் காட்சிகளும் அவளை பயமுறுத்த அதற்கு பயந்து தூக்கத்தை தியாகம் செய்தவளின் ……. நினைவில் இன்று அண்ணனின் பேச்சும் அவனின் நடவடிக்கையும் அவளை வெகுவாக யோசிக்க வைத்தது……
எப்படி யோசித்தாலும் வினோத்தால் ருத்ர பிரதாப்பை ஏதும் செய்திருக்க கூடும் என்று அவளால் எண்ணிப் பார்க்க முடியவில்லை……… அவனின் பலத்தையும் சாதுரியத்தையும் பல நாட்கள் அருகில் இருந்து பார்த்தவள் அவள்……அவன் அருகில் கூட அண்ணனால் நெருங்கி இருக்க முடியாத போது எப்படி ருத்ராவை விபத்துக்குள்ளாக்க வினோத்தால் முடிந்திருக்கும்…..
அதிலும் அவனே ஒரு அசகாய சூரன். அன்று கூட நான்கு புறமும் அசுர வேகத்தில் வந்த கார் களை நொடியில் மிக சாதாரணமாக தட்டிவிட்டு போனவன் அவன்…… நடக்காத ஒன்றை யோசிப்பது கூட முட்டாள்தனமாகப் பட…..
முதல் முறை குடித்த…… அண்ணனின் உளறலாகவே அதை எடுத்துக்கொண்டு அதற்கு….. மேல் சிந்திக்காமல் உறங்க முயன்று அதில் வெற்றியும் கண்டாள் அம்ருதா ……
நாளை விடியல் தனக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது என்பதை அப்போது அவள் அறியவில்லை…….
அன்று மிக விரைவாகவே தன் வேலை முடிய வீட்டிற்கு கிளம்பிய வினோத்திற்கு… முன்னிரவு நடந்த எதுவும் ஞாபகத்தில் சரிவர இல்லை அம்ருதா சாருலதா அதைவிட சிவானந்தன் என்று…… பல சிந்தனைகள் அவனை கூடி குழப்ப….
அதை சமாளிக்க முடியாமல் வாழ்க்கையில் முதல் முறையாக குடித்து விட்டவனுக்கு…… அதன் பிறகு என்ன நடந்தது தான் என்ன செய்தோம் என்று ஒன்றும் புரியவில்லை……
அதைப் பற்றியே யோசித்துக் கொண்டு தன் வீடு வந்தவனுக்கு….. வாசலில் கருப்பு நிற உடை அணிந்து நான்கைந்து பேர் காவலாக நிற்க…… அது தன் வீடு தானா என்று மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டான்…..மிகச்சரியாக அது அவனது வீடு தான். ஆராய்தலான பார்வையோடு தன் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவனை உள் நுழைய விடாமல் வழிமறித்தன அந்த 5 பேரும்…….
ஹலோ யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும்
அவன் கேட்க வேண்டிய கேள்வியை அந்த ஐவரில் ஒருவன் கேட்க…… அதில் உண்டான கடுப்போடு அவனை பார்த்தவன்….. ஹலோ ஏஸ் க்யூஸ் மீ இது என்னோட வீடு…..
நீங்கள்லாம் யாரு…? இங்க என்ன பண்றீங்க என்றவனை பார்த்த அனைவரும் சட்டென்று மரியாதையான தூரம் தள்ளி நின்று சல்யூட் அடித்து….. சாரி சார் இங்கே யார் வந்தாலும் விசாரிக்காமல் உள்ள அலோவ் பண்ண கூடாதுன்னு எங்களுக்கு ஆர்டர்….. பணிவாக சொன்னவர்கள் அவனுக்கு வழி விட்டு நகர்ந்து நிற்க……
என் வீட்டு முன்னாடி காவல் காக்க சொல்லி யார் உங்களுக்கு ஆர்டர் போட்டது …..அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நட்டுவைத்த கரண்ட் கம்பம் போல் அனைவரும் விரைப்பாக நிற்க………தலையைப் முடியை பிய்த்து கொள்ளும் அளவுக்கு வந்த எரிச்சலை அடக்கியவன்….. வேகமாக வீட்டுக்குள் நுழைய…… அங்கு வரவேற்பறையில் இன்னும் இருவர் அமர்ந்திருந்தனர்……
அவர்களுக்கு எதிரில் சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த அம்ருதாவை கண்டவன் அம்மு என்று அழைக்க….. அந்த குரலில் திரும்பிப் பார்த்த அவன் தங்கையின் கண்களில் இதுநாள் வரை அவன் என்றுமே கண்டிராத அளவுக்கு ஆக்ரோஷமான நெருப்பு பொறி பறந்தது…..
அண்ணனை சுட்டு பொசுக்கி விடுவது போல் முறைத்தவளின்…… கோபம் எதற்கு என்று புரியாமல் விழித்தவன் என்னாச்சு அம்மு…? ஏன் அத்தனை பேர் வாசல்ல நிக்குறாங்க அவங்க எல்லாம். யாரு …..? . இவங்க ரெண்டு பேரும் யாரு……?
தன்னைப் பார்த்து கேட்ட வினோத்தை மீண்டும் மிதமிஞ்சிய கொலைவெறியோடு பார்த்த அம்ருதா….. தன் கையை மட்டுமாக வலது புறம் இருந்த படுக்கை அறையின் பக்கமாக திருப்பி காட்டினாள்…..
அங்கு யார் இருக்கா என்ற முணுமுணுப்போடு எட்டிப் பார்த்தவன்….. கண் முன்னால் பழைய படங்களில் வருவதுபோல்…. பூகம்பங்கள் வெடிக்க….. எரிமலைகள் பொங்க இடியும் மின்னலும் முழங்க…. தலையே ஒரு நிமிடம் சுற்றி விழுவது போல் தோன்றியது…………பிடிமானத்திற்காக கதவினைப் பிடித்து
தன்னை சரி செய்து கொண்டவன்
தான் காணும் காட்சி நிஜம்தானா என்பதை அறிந்து கொள்ள மீண்டும் ஒரு முறை கண்களை….. நன்றாக கசக்கி விட்டு அவன் பார்க்க……. இம்முறையும் அவனின் ஆசையை ஏமாற்றிய கண்கள் நீ காண்பது உண்மைதான் என்று எடுத்துரைக்க ……. அங்கிருந்த இரட்டைக் கட்டிலில் கை கால்களில் நன்றாக பரப்பி படுத்து கிடந்தான் ருத்ர பிரதாப்…….
அவனை முதலில் தங்கள் வீட்டின் படுக்கை அறையில் பார்த்து மிதமிஞ்சிய அதிர்ச்சிக்கு சென்றவன்…… ஆனால் அவன் உடலில் கை கால்களில் தலையில் என்று பலமான அடிப்பட்டு அதனால் போட்ட கட்டுகளோடு படுத்துக் கிடந்தான்……அவனின் அந்த நிலை வினோத்தை லேசாக உறுத்தினாலும். அதைவிட அதிகமாய் அவன் மீதிருந்த வெறுப்பிலும் கோபத்திலும் அதனை இடை தள்ளியவன்…….
உனக்கு இவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வந்து என் ரூம்ல படுத்திருப்ப எந்திரிச்சு வெளிய போடா அயோக்கிய ராஸ்கல்…..என்று கத்தியபடி ருத்ர பிரதாப்பை வினோத் நெருங்க எங்கிருந்து…… வந்தார்கள் என்று தெரியாமல் வாசலில் நின்ற அந்த ஐவரும் இப்போது அவன் முன்பு நொடியில் தோன்றி ருத்ர பிரதாப்பை மறைப்பதுபோல் வந்து நின்றனர்……..
டேய் என்ன அடியாட்களை கூட்டிட்டு வந்தா நான் பயந்துடுவேன்னு நெனைக்கிறியா இப்போவே எங்கள் வீட்டை விட்டு வெளிய போயிடு…… அதுதான் உனக்கு மரியாதை……
இல்லனா இப்போவே நான் போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ண வேண்டி வரும் …… அங்கு நின்றிருந்த எவரையுமே பார்த்து சிறிது பயம் என்பதே இல்லாமல் வினோத் மேலும் மேலும் கத்த…….
அதுவரை அங்கு அமைதியாக நின்றிருந்த அம்ருதா இப்போது வினோத்தின் அருகில் வந்து…… அவன் தோளில் தன் கைகளால் அடித்தவள்…… அவனை இழுத்துக் கொண்டு அங்கிருந்த மற்றொரு அறைக்குச்
சென்றாள்…..
என்ன அம்மு நீ எதுக்காக அந்தப் பொறுக்கிய உள்ள விட்டா …… வினோத் கோபமாக கேட்க அவனுக்கு மேல் கோபமாக அவனை முறைத்துப் பார்த்தவள்…..இதுக்கு மேல ஏதாவது பேசினா அண்ணனுக்கு கூட பாக்க மாட்டேன்….. உன் கழுத்தை நெரிச்சு இங்கேயே கொன்னுடுவேன்……
உண்மையாகவே சொன்னதை செய்து விடுவது போல் கைகளை தன் கழுத்துக்கு அருகே அம்ருதா கொண்டுவர…..அதில் மிரண்டு போனவன் எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டடி தள்ளி நின்று கொண்டு……….
நீ ஏன் என் மேல கோபமா இருக்கான்னு எனக்கு தெரியல அம்மு…. விஷயத்தை சொன்னாதானே தெரியும் . பாவம் போல் விழித்த அண்ணனை கண்டு அவளுக்கு அது வரை அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் கற்பூரமாய் கரைந்து விட……
நேத்து நீ பண்ணி வச்ச வேலையால் தான் இன்னிக்கி அந்தப் பிசாசு நம்ம வீட்டுக்குள்ள வந்து இருக்கு ….. அம்ருதா விளக்கம் சொல்ல……
நானா….? நான் என்ன பண்ணேன் அம்மு….? நேத்து வேலைக்கு போனேன் அப்புறம் வீட்டுக்கு வந்து படுத்துட்டேன் வேற ஒண்ணுமே நடக்கலையே…… தான் குடித்தது கூட தங்கைக்கு தெரிந்திருக்காது என்று உறுதியாக நம்பி வினோத் சொல்ல…..மண்ணாங்கட்டி என்று வெடித்தவள் அதன்பிறகு சரமாரியாக தன் தமையனை திட்ட ஆரம்பித்தாள்……
என் கூடப்பிறந்த எருமை மாடே நேத்து நீ புல்லா குடிச்சுட்டு ராத்திரி 12 மணிக்கு தள்ளாடிக்கொண்டே வீட்டுக்கு வந்த…..எவனையோ வண்டி ஏத்தி ஆக்சிடன்ட் பண்ணிட்டேன் இனி அவன் உன் வழிக்கு வர மாட்டான் அப்படி இப்படின்னு என்கிட்ட ஏதேதோ பொலம்பிட்டு வாசலையே படுத்து தூங்கிட்ட……
நீ நல்லா குடிச்சு இருந்ததுனால நானும் உன் பேச்ச பெருசா எடுத்துக்காம விட்டுட்ட…..ஆனா காலையில நீ கிளம்பி போய் கொஞ்ச நேரத்திலேயே இந்தக் கும்பல் வீட்டுக்கு வந்துடுச்சு……
நீ தான் வேணும்னு கார் கொண்டு போய் அந்த ருத்ரா ஓட வேண்டிய இடிச்சு ஆக்சிடென்ட் பண்ணி இருக்கியாம்….. உயிருக்கு ரொம்ப ஆபத்தான கண்டிஷன்ல இப்போ அந்த மனுஷன் இருக்காராம்……….
அவர் வீட்ல அவரை பாத்துக்க யாரும் இல்லையாம் …… அவர் முழுசா குணமாகிற வரைக்கும் நாம தான் இந்த வீட்டில் வைத்து பாத்துக்கணுமா….. அப்படி நாம செய்யாமல் போனால்….. உன்மேல கேஸ் குடுக்க வேண்டி வரும்னு சொல்றாங்க…… முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அம்ருதா சொல்ல…..
அம்மு நான் ஒன்னும் அப்படி எல்லாம் செய்யவே இல்லை எனக்கு அப்படி செஞ்சதா ஒரு ஞாபகம் கூட இல்லையே…… அவங்க பொய் சொல்றாங்க நினைக்கிறேன்…. வா நான் ஆக்சிடெண்ட் பண்ணதுக்கு என்ன ஆதாரம் இருக்குன்னு கேட்டு…… அவனை இப்போதே வீட்டை விட்டு துரத்தி விடலாம்…..
என்றவாறு தங்கையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு….. அறையை விட்டு வெளியே போக போன வினோத்தின் கையைத் தான்….. பிடித்து இழுத்து அவன் தலையில் நறுக்கென்று குட்டினாள் அம்ருதா…..
ஸ்..ஆ…. இன்று கத்தியவன் தலையைத் தடவிக்கொண்டே…..ஏன் அடிச்ச அம்மு இன்றவனைப் பார்த்து வந்த ஆத்திரத்தை அடக்கி…. தன் தலையில் தானே தட்டிக் கொண்டவள்…. அந்தக் கடவுள் தான் உன்ன காப்பத்தனும் அண்ணா……சலிப்போடு சொன்னவள்……
நீ அந்த ஆள பத்தி என்ன நெனச்ச…..? அந்த ருத்ரா ஒரு விஷயத்தை செய்யணும்னு முடிவு பண்ணிட்டா அப்புறம் லட்சம் பேர் சேர்ந்து முயற்சி பண்ணா கூட அவரை தடுக்க முடியாது……
அந்த அளவுக்கு பர்ஃபெக்டா பிளான் போடுவதில் கில்லாடி அந்த மனுஷன்….. நீ ஆக்சிடன்ட் பண்ணது உனக்கு வேணா ஞாபகம் இல்லாமல் இருக்கலாம்……ஆனா அவங்களுக்கு அப்படி இல்ல…..
ஃபுல் வீடியோ ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்காங்க அதுவும் எச்டி குவாலிட்டி……. புசு புசு வென கோபம் மூச்சு விட்டு….. அவனை பார்த்து உறுத்து விழித்தபடி அம்ருதா விளக்க….. ..
இப்போது தான் நிலைமையின் அழுத்தம் வினோத்திற்கு தெளிவாகப் புரிய இப்ப என்ன நாம…… அவனை வீட்டுக்குள்ள சேர்க்காமல் போனா நான் ஜெயிலுக்குப் போகணும் அது தானே …… நீ ஒன்னு இது பற்றி கவலைப்படாத அம்மு….
நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை அந்த ருத்ரா வின் பார்வை மட்டும் உன்மேல பட நான் நிச்சயம் விட மாட்டேன் …… இப்பவே அவங்க எல்லாரையும் வெளியே துரத்தி அடிக்கிறேன் அவனுக்கு என்ன முடியுமோ அதை செஞ்சுகட்டும்…….
வெளியே செல்ல திரும்பிய வினோத்தின் கை பிடித்து தடுத்த அம்ருதுவின் முகமும் இப்போது இருக்கமாக இருந்தது……. இல்ல அப்படி பண்ண முடியாது நீ இல்லாம போனா நான் என்ன பண்ணுவேன்…? அத கொஞ்சமாவது யோசிச்சு பாரு அண்ணனா…… என்றவள் அவனின் கை பிடித்து அழுத்தி. இப்போதைக்கு இதை அப்படியே விடு நமக்கும் இத விட்டா வேற வழியும் இல்லை…..
பொறுமையா அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலாம்…… அம்ருதா கூற ஆனா அம்மு இது எப்படி சரி வரும் அவனைப் கண்ணு முன்னாடி பார்த்துக்கிட்டே உன்னால எப்படி நிம்மதியாக இருக்க முடியும்…….
நான் ஒவ்வொரு முறையும் உன்னை கஷ்டப் படுத்திட்டே இருக்கேன் இல்ல…… குரலில் உண்மையான வருத்தம் இழையோட சொன்ன அண்ணனின் முகம் பார்த்து லேசாக புன்னகைத்தவள்……
விடுண்னா பாத்துக்கலாம் இது நம்ம வீடு நீயும் நானும் ஒன்னா இருக்கும்போது நமக்கு கஷ்டம் கொடுக்க அந்த ருத்ர பிரதாப் பால் ….. நிச்சயம் முடியாது……நான் இந்த முறை அந்த ருத்ராவை படுத்த போற பாட்டுல…. அந்த ஆளு இந்த வீடும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு அலறி அடிச்சுக்கிட்டு ஓடியே போய் விடுவாரு பார்….. இதைச் சொல்லும்போது அம்ருதாவின் முகத்தில் என்ன இருந்தது…… ?
மேலும் சிறிது நேரம் அண்ணனோடு பேசியவள் அறையை விட்டு வெளியேறி அங்கு அமர்ந்திருந்த அரவிந்தனிடம் வந்து நின்றாள்
நீக்க சொன்னதுக்கெல்லாம் ஒத்துக்குறேன் ஆனால் என்று….. இடைவெளி விட்டவள் எனக்கும் சில கண்டிஷன் இருக்கு அதுக்கெல்லாம்….. நீங்க அனுமதிச்சா…. உங்களோட பாஸ் குணமாக்கும் வரைக்கும் இந்த வீட்டில் இருக்க நானும் சம்மதிக்கிறேன்…..
கண்டிஷனா என்ன கண்டிஷன்….. நீங்க என்ன கண்டிஷன் போடுவீங்க….. அரவிந்தன் தடுமாற அதற்குள் அறையிலிருந்து இருமல் சத்தம் கேட்க…..இதோ இரண்டு நிமிஷத்துல வந்துடறேன்….. என்று விட்டு அங்கிருந்து ஓடி ருத்ர பிரதாப் இருந்த அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டவன்….. ஐந்து நிமிடங்கள் அமைதியாக செல்ல இப்போது மீண்டும் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தவன்…..
நீங்க என்ன கண்டிஷன் சொன்னாலும் அதுக்கு நாங்க ஓகே பன்றோம்…… என்ன எங்களுக்கு எங்க பாஸ் உயிர்தான் முக்கியம் அரவிந்தன் ஜம்பமாக அறிவிக்க……
அம்ருதாவின் இதழில் ஒரு வெற்றி புன்னகை உதயமானது…..
உயிர்த் துணை சேரும்………
உன் துணை தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
அத்தியாயம்.35
தன் முன்பு வைக்கப்பட்ட அந்த உணவுப் பாத்திரத்தை ஏதோ வினோத பொருளை பார்ப்பது போல் பார்த்து வைத்தான் ருத்ர பிரதாப்…… பொறியில் மாட்டிய எலியாயை அவன் பேய் முழி முழிக்க……. அதை அருகில் நின்று பார்த்த அம்ருதாவிற்கு உள்ளே ஊரும் சந்தோஷ ஊற்றில் முகம் முழுக்க உவகை பொங்கியது…..
மவனே யார்கிட்ட உன் வேலைய காற்றே கடைசியா நீ என்கிட்ட வந்து மாட்டிக்கிட்ட பார்த்தியா……. என்பது போன்ற ஒரு படு எகத்தாளமான லுக்கை ருத்ர பிரதாப்பின் மேல் செலுத்தியவள்…… அந்தக் கேப்பை கஞ்சி யை ஸ்பூனால் எடுத்து அவனுக்கு ஊட்ட தொடங்கினாள்……..
அதில் ஒரு வாய் கஞ்சியை கூட குடிக்க முடியாமல் அவன் திணறுவதும்…… பின்பு அரும்பாடுபட்டு அதை விழுங்குவதுமாக அவனின் திண்டாட்டங்களை….. ரசித்துப் பார்த்தவளுக்கு…… அவன் தானாக வந்து தன்னிடம் மாட்டிய நாளை….. மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கத் தோன்றியது…….
தன்னுடைய நிபந்தனைகளாக அம்ருதா முன்வைத்தது…..அவனுக்கு என்று யாரும் உதவுவதற்காகவோ அவனை பராமரிக்கவோ அந்த வீட்டிற்குள் வரக்கூடாது என்பதையும்……அவள் தருவதை உண்டு அவள் பராமரிப்பில் இருப்பதாய் ஒத்துக் கொண்டால் மட்டுமே அவன்…… அந்த வீட்டில் தங்க முடியும் என்பதாய் அவள் இட்ட நிபந்தனையில்……
அப்போது ஆழம் தெரியாது வந்து மாட்டிக் கொண்ட ருத்ர பிரதாப் இந்த ஏழு நாட்களாய் படும் அவஸ்தை…… சொல்லில் வடிக்க முடியாத அளவுக்கு அவனுக்கு கடுப்பையும் அவளுக்கு இனிப்பையும் சேர்த்து வழங்கியது…….
இதில் அவளின் எந்த கண்டிஷனையும் மறுக்காது ஏற்றுக் கொண்டவன்…….அரவிந்தன் மூலமாக எப்படி எப்படியோ பேசி இரு வேலையாட்களை……. அந்த வீட்டின் மற்ற பணிகளுக்கு அமர்த்த எவ்வளவோ முயன்று பார்த்தான்….. அண்ணன் தங்கை இருவருக்குமே அதில் சற்றும் உடன்பாடு இல்லாததால்…. அவனின் முயற்சிகள் அனைத்தும் பலனின்றி போனது……
அந்த உப்பில்லாத கஞ்சியை அவனுக்கு ஊட்டி முடித்தவள்…… தன் ஈரக் கையால் அவன் உதடு துடைத்து விட்டு அங்கிருந்து….. விலகி செல்ல அதுவரை அவளுக்காக அந்த உணவு பிடிக்காதது போல்….. நடித்துக் கொண்டே அவள் கைகளால் ஊட்டியதை எல்லையில்லா ஆனந்தத்தோடு உண்டு முடித்தவனின்……
அவனின் போலி நடிப்பை உண்மை என நம்பி அவனை வெற்றி கொண்ட குதூகலத்தோடு
செல்லும்…… தன்னவளின் மீதே பார்வையை நிலைக்க விட்டான்…… அவள் அவன் கண் மறைய இப்போது தன் படுக்கையில் வாகாய் சாய்ந்து கொண்டவன் ஒரு சுகமான பெருமூச்சை வெளியேற்றினான்……….
ஓய்வு என்றால் என்னவென்று கூட அறியாத கடிகாரத்தைப் போன்று….. நாளும் பொழுதும் நிற்காமல் சூழலும்… அவனின் பொழுதுகள் இன்று…….இன்பமயமான அமைதியின் பால் மூழ்கி சுகக் கடலில் ஆழ்ந்திருந்தது…..
இத்தனை இனிப்பான நேரத்தை அவனுக்கு வழங்கியவள் அவன் மனைவி…….
இலக்குகள் கில்லாத வரைமுறைகளுக்கு உட்படாத எங்கும் எதிலும் அடங்காத… செல்லும் இடமெல்லாம் அழிவுகளின் மொத்த உருவமாய் ஆர்ப்பரித்து ஓடும்….. காட்டாறின் வெள்ளமாய் ஆக்ரோஷ தன்மையை கொண்ட….. அவனுக்கு
தனக்கு என்ன தேவை என்றோ தான் எதை நோக்கி செல்கிறோம் என்றோ சற்றும் இதுநாள் வரை புரிந்ததில்லை……. சிறு பாலகனாய் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவன் அறியாத வயதில் அன்னையின் அன்பை மொத்தமாக இழந்து அவளையும் பறிகொடுத்து……..
அவனை சொல்லாலும் செயலாலும் நோகடித்து நொடிக்கு ஒருமுறை சித்திரவதை செய்யும் அவனின்….. குடும்பத்தினர் !!? என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்கள் மத்தியில் வாழக்கூடிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டபோது…..
கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு சிறுவனின் மனநிலையில் இருந்தவனை….. தன்னைப் பாதுகாக்க அடுத்தவரை பலிகொள்ளும் மிருகத்தின் நிலைக்கு அந்த சூழல் தானாகவே மாற்றிவிட……..அதன் பிறகு அவனை நோக்கி யாரேனும் சிறு எதிர்ப்பை காட்டினால் கூட அதை 10 மடங்காய் திருப்பிக் கொடுக்கும் முழு முரடனாய் மாறிப்போனான் அன்றைய 15 வயது ருத்ர பிரதாப்………
இனி மனிதர்களுக்கு மத்தியில் இவன் இருக்க லாயக்கு இல்லை என்று முடிவு கட்டி…… வெளி மாநிலத் திலும் வெளிநாடுகளிலும் இவன் படிப்பைத் தொடர வழி செய்ய……அதன் பிறகு வந்த நாட்களிலும்…… அவனின் முரட்டுத்தனமும் சுயநலமும்….. அடுத்தவரை நம்பாத தன்மையும் சிறிதும் குறையாததோடு……
அடுத்தும் வந்து சேர்ந்து கொண்டது….. புத்தி சாதுர்யமும் உடல் பலமும் நினைத்தது எதையும் சாதிக்கும் திறமையும்……அவனின் 22 வயதில் அவன் மீண்டும் தாய் நாடு திரும்பிய போது ….. அவன் முன்பு பெரும் எரிமலையாய் எழுந்து நின்று அவனை அச்சுறுத்திய ஒன்று……
அவன் பிறப்பைப் பற்றி அடுத்தவர்கள் உரைக்கும் இழி சொல்லை எப்படி மாற்றப் போகிறான் என்ற வினா……..தன் பிறப்பின் கலங்கத்தை போக்குவதற்கு அவன் தேர்ந்தெடுத்த வழி……
அந்த சமஸ்தானத்தின். ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றும் பிள்ளைகளின் அதிக……. திறன் படைத்தவன் முதன்மை வாரிசாய் முடி சூட வேண்டும் என்கிற வழக்கத்தின்படி……பணம் என்ற ஒன்றை அளவுக்கு மிஞ்சி எவன் ஒருவன் தன் வசப்படுத்துகிறானோ அவன் முன்பு இந்த உலகமே….. மண்டியிடும் என்ற தாரக மந்திரத்தை தன்னகத்தே கொண்டு…….
அவனின் தந்தை என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் மனிதர் ஆரம்பித்து அன்றைய நிலையில்…… படுபாதாளத்தில் போய்க்கொண்டிருந்த……. செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையின் மொத்த பொறுப்பையும்…….அவர்கள் பரம்பரையின் ஒவ்வொரு ஆண் பிள்ளைக்கும் வழங்கக் கூடிய தொழில் மூலதனமாய் பெற்றவன்………
அதன் பிறகு வந்த ஏழு ஆண்டுகளும் அவனின் ஒரே இலக்கான பணத்தை நோக்கிய….. ஓட்டத்தை……. ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஓடி கடந்து வெற்றி வாகை சூடி …..இந்திய தொழில் துறையில் பெரும் புரட்சி செய்த தன்னிகரில்லா தொழில் முதல்வனாய் எழுந்து நின்றான்……
அவனின் லட்சியத்தை நோக்கிய தன் பயணத்தில் முதல் முட்டுக்கட்டையால் தோன்றியது….. அவன் திருமணம்….. ஏனோ எந்தப் பெண்ணிடமும் காதல் என்கிற மயக்கம் அவனுக்கு அதுநாள் வரை தோன்றியதில்லை……எப்போதும் போல் இம்முறையும் தன் இலக்கை அடைய தடையாக நிற்கும் ஒன்றாய் மட்டுமே தன் திருமணத்தை நினைத்தவன்…….. பாட்டி சுபத்ரா தேவி அவனுக்கு இட்ட நிபந்தனையை. தகர்த்தெறிய அவன் வழக்கம் போல் குறுக்கு வழி தேடிய போது……
சில போலி உதிரிபாகங்களின் மூலம் அவன் தொழிலில் பெரிய இழப்பை உண்டு செய்ய முயன்ற….. சிவானந்தம் மீது அவன் ஆத்திரம் திரும்ப தன் முடி தொட்டவனை கூட அடி பாதாளத்தில் தள்ளும்….. தான் வழங்கும் தண்டனையும்…… கூட தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்ளும் ருத்ர பிரதாப்பின் இயல்பாய்………
சிவானந்தத்தின் பெண்ணை தன் மனைவியாய் 100 நாட்கள் திருமணம் என்ற பெயரில் உலகுக்கு அறிமுகப் படுத்துவதின் மூலம்…… அவன் லட்சியத்தையும் அவன் அடைந்துவிடலாம்….. சிவானந்தத்தின் தண்டனையும் அவருக்கு தாராளமாய் கிடைத்துவிடும்………
சற்று கூட அடி பிறழாது அவன் முழுமையான திட்டத்தில் முதல் சறுக்கல்…. சிவானந்தத்தின் மகளை காக்கவென்று உள்நுழைந்த வினோத் அவளை….. அழைத்துக்கொண்டு தலைமறைவானது…….
ஏற்கனவே அவனுக்கிருந்த பழி வெறியில்….. வினோத்தின் செயல் தூபம் போட….. இதில் கொதித்தெழுந்த அன்றைய ருத்ர பிரதாப்பின் வீறுகொண்ட…… பழி வெறி அப்படியே திரும்பியது தன்னை எதிர்க்கத் துணிந்தவனின் மீது…..
எது ஒன்று சிவானந்தத்தின் மகளுக்கு நடக்கக்கூடாது என்று வினோத்…….. ருத்ர பிரதாப்பை….. எதிர்க்கத் துணிந்தானோ அதையே அவன் ஆருயிர் தங்கைக்கு நடத்திக் காட்டி…… அவனை முழு மொத்தமாய் தோற்கடித்து தன் காலில் விழ வைக்க ருத்ர பிரதாப் மிகவும் விரும்பினான்……
தன் இரையை தவறவிட்ட சிங்கத்தின் ஆக்ரோஷ மன நிலையில்….. இருந்தவனுக்கு அப்போது வேறு யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் அந்த நொடிகளில்….. கவலை என்பது கிஞ்சித்தும் இருக்க வில்லை……தன் வெற்றியின் ஒரே ஒரு படிக்கல்லாய் தன் பழிவாங்கலில் ஆயுதமாய் மட்டுமே அம்ருதாவை … அவன் நினைக்க…..
ஆனால் விதியோ…… அவனின் அடி முதல் நுனி வரை அங்க அவயங்கள்……. அத்தனையிலும்….. ஓடும் குருதியாய் சுவாசிக்கும் மூச்சாய் நிற்காமல் துடிக்கும் அவனின் இதயம் ஓசையாய்….அவளே இன்று அவனின் அனைத்துமாய் மாறி நிற்கும் கோலம் விந்தையிலும் விந்தை….…..
இவ்வுலகத்தில் எதுவொன்றையும் விட ஏன் அவனையும் விடக் கூட…… அவன் மனைவி மட்டுமே…. இன்று அவன் முடிவிலாத் தேடலின் பொக்கிஷமாய்….. வாழ்க்கையின் வரமாய் அவன் அடையத் துடிக்கும்….. அவன் மனைவி அம்ருதா…..
அவனின் அலைபாய்ந்த மனதும் எங்கெங்கோ தாவி ஓடிய எண்ணங்களும் கடைசியில் ஒரே புள்ளியில் வந்து நிற்க….. சுக அயர்வில் கண்மூடி இருந்தவனின் இதழில் மட்டும் புன்னகை அரும்பியது……. அம்ருதா பட்டின் மென்மையாய் அந்தப் பெயரை அவனுள் முணுமுணுத்தான்…..
கட்டிலில் சாய்ந்தவாறு கண்முடி இருந்தவனின் அருகில் ஏதோ ஆரவாரம் கேட்க….. லேசாக இமை பிரித்துப் பார்த்தவன் அருகில் நின்றிருந்தாள் அவன் மனைவி…..அவள் கண்களில் அவன் எழுந்து விடக்கூடாது என்கிற கவனமும் அத்தோடு சேர்ந்து சிறு தவிப்பும்………
இத்தனை நாட்களில் அவன் அடிக்கடி பார்க்கும் ஒன்றுதான் அது….. அவளின் வருகை எதற்கு என்று தெரிந்தாலும்…… ஏனோ அவளுக்கு உதவ மனமின்றி இருப்பவன். இன்று என்ன தோன்றியதோ ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி விட்டவனாய்…. அசையாது அவன் செயலுக்கு அனுமதி வழங்கி அமைதி காத்தான்……..
அவன் முகத்தை மீண்டும் மீண்டும் உற்று கவனித்தவள் ஒரு வழியாய்…. தைரியம் வர பெற்று… மிக மெதுவாக அவன் அணிந்திருந்த சட்டையை…… விளக்கி பார்க்க அவன் பக்கவாட்டு இடை பகுதியில் ஒரு உள்ளங்கை அளவு பிளாஸ்திரி ஒட்டிய அவளால் அவனுக்கு ஏற்பட்ட அந்த காயம்……
அதையே சில நிமிடங்கள் பார்த்து இருந்தவள் அடுத்து….. மென்மையினும் மென்மையான தன் கைக்கொண்டு அந்த இடம் வருட……அதில் அவன் எவ்வளவு முயன்றும் முடியாமல் அவன் உடல் சிலிப்பை அவள் உணர்ந்து விட…..அடுத்த வினாடியில் அங்கிருந்து விரைந்து விலகிச் சென்றிருந்தாள் அம்ருதா……
ஐயோ வட போச்சே…….. உதட்டுக்குள் முணுமுணுத்தவனுக்கு அம்ருதாவின் மனம் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது மனதளவில் மென்மையானவள் யாருக்கும் தீங்கு செய்ய உள்ளத்தால் கூட எண்ணாதவள்…… அவன் மனம் அவள் பால் உருகி வழிய……
அம்மு பேபி நீ இன்னும் 100 தடவை கூட என்னைக் கத்தியால் குத்துடா அதுக்கு நான் தயாரா இருக்கேன்….. ஆனா என் கூடவே இருந்து. அந்த தண்டனையை எனக்கு கொடு பேபி…… மனதில் அவளோடு உரையாடியபடியே ருத்ர பிரதாப் உறங்கி விடான்…….
மதியம் அம்ருதா எழுப்பியதில் கண்விழித்தவன் முன்னால் வைக்கப்பட்ட உளுந்தங்களியை….. ஏறிட்டு பார்த்தவனுக்கு ஏதோ பேயை நேரில் கண்டது போல்…… அலற தோன்றிய மனதை பெரும்பாடுபட்டு அடக்கியவன் மிகப் பாவமாக தன் அருகில் இருந்த மனைவியை பார்த்தான்……
அவனின் எந்த மன்றாடல் பார்வைக்கும் சிறிதும் இழகாமல்….. தான் கொண்டுவந்ததை அவனுக்கு அவள் ஸ்பூனால் ஊட்டி விட அதை உண்ணும்…… அவன் முகத்தின் மாறுதல்களை காண ஆவலாய் அம்ருதா ருத்ர பிரதாப்பை தன் ஒரு விழியால் பார்க்க…..அவனோ தன் முன் நிற்கும் அந்த ஆளுயர ஐஸ்கிரீமை விழிகளாலேயே உண்டு முடிக்கும் உத்வேகத்தோடு……. அவளின் அடி முதல் நுனிவரை வரிக்கு வரி கண்களாலேயே ருசி பார்த்துக் கொண்டிருந்தான்……..
அவன் பார்வையின் வீரியம் தன் உதடுகளை தானே ஈரப் படுத்திக் கொண்ட அவன் செய்கை….. இவை அனைத்தையும் இரண்டு நொடியே கண்டவள் அடுத்த வினாடியில் துள்ளி குதித்து அங்கிருந்து விலகி நின்றாள்……
உடல் மொத்தமுமே நொடியில் விதித்து அடங்கியது…….என்ன மாதிரி பார்வை அது அவனோடு இருந்த நாட்களில் கூட இப்படியான பார்வைகள் அவளுக்கு சிறிதும் பரிச்சயம் மற்றவை…….உள்ளே தோன்றிய படபடப்போடு அவனை முறைத்துப் பார்த்தவளை ….. கண்டவன்…… என்னாச்சு பேபி…? ஏன் அங்கே போய் நின்னுட்ட…? எனக்கு பசிக்குது பேபி மீதி சாப்பாட்டையும் கொடுத்துவிடேன் ப்ளீஸ் பாவம் போல்….. முகம் வைத்து கள்ளனாய் தன் சிரிப்பை மறைத்து அவன் கேட்க……
மூஞ்சிக்கும் முழிக்கும் சம்பந்தமே இல்லை இவனெல்லாம் என்ன பண்றது……. மிளகாய் பொடி அள்ளி வெறிச்சு வெறிச்சு பார்த்து சைட் அடிக்கிர …..அந்த கண்ணுல போடணும்….. தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவன் அருகில் போக தயங்கி அம்ருதா நிற்க……..
அப்போது அம்மு என்ற அழைப்போடு உள்நுழைந்த வினோத் அவளின் கண்களில் பட்டான்…… நிமிட நேரத்தில் ஒரு ஐடியா அவளில் உதயமாக……. உன்னை இருடி மாப்பிள்ளை இப்போது என்ன பண்ணுறான்னு பாரு…… சைட் அடிக்கிற ருத்ர பிரதாப்பிற்கு ஒரு நக்கலான பார்வையை வழங்கிவிட்டு தன் அண்ணனிடம் வந்தவள்……
அண்ணா என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட அவனை விசாரித்தவள்…… சரி சரி இங்க பாரு சாப்பாடு வைத்து இருக்கேன் அதை நீயே அந்த மனுஷனுக்கு ஊட்டி முடிச்சிட்டு…. வந்தால் தான் உனக்கு இன்னிக்கு சாப்பாடு……கட்டளையாக சொன்னவள்…. ருத்ர பிரதாப் போடு சேர்த்து வினோத்தின் தலையிலும் இடியை இறக்கிவிட்டு அங்கிருந்து செல்ல…..
அந்த அறையில் தனித்திருந்த இரண்டு ஆண்களும் வேட்டை நாய்கள்….. ஒன்றை ஒன்று பார்த்து……முறைத்துக் கொள்வது போல் படுபயங்கரமான பார்வையை பரிமாறிக் கொண்டனர்……
அடிப்பாவி கிராதகி இதுக்கு தாண்டி உன் முன்னாடி நான் அமைதியா இருக்கிற மாதிரி நடிச்சேன்……. இப்படி இந்த கொம்பேறி மூக்கன் கிட்ட என்ன மாட்டிவிட்டு போயிட்டியே பொண்டாட்டி…….
உள்ளுக்குள் அலறினாலும் வெளியில் தன் அப்பாவி லுக்கை மெயின்டன் செய்தான் ருத்ர பிரதாப்……. குழந்தைப் போல் பாவனை செய்த
ருத்ர பிரதாப்பை கண்டு பல்லைக் கடித்து தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்திய… வினோத்……. அவனை எரிக்கும் பார்வையோடு ருத்ர பிரதாப்பின் அருகில் நெருங்கி……. உணவு பாத்திரத்தை கையில் எடுக்க……..
சட்டென்று நொடியில் சுதாரித்த ருத்ர பிரதாப் எழுந்து வினோத்தை தாண்டி ஓடி குளியல் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான்…….
ஆண்கள் இருவரிடமும் ஒரு விடுதலை பெருமூச்சு வெளியேறியது……..
உயிர்த் துணை சேரும்……..
தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
அத்தியாயம்.36
அன்று தான் பணி செய்யும் டிராவல்ஸில் வேலை முடித்து வெளிவந்த வினோத்தை வழி மறைப்பது போல்……… வந்து நின்றது ஒரு வாகனம். ஏறிட்டுப் பார்த்து வினோத்தின் கண்களில் ……..காரில் இருந்து இறங்கிய சாருலதா அவனை நோக்கி வருவது புரிய……
அவளை கடைசியாக பார்த்து வந்து இந்தப் பத்து நாட்களாக……. அவன் வீட்டின் ருத்ர பிரதாப்பின் வருகையால் அவள் பற்றிய நினைவின்றி இருந்தவன்…..அல்லது அப்படி இருப்பதாக தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டவன்……
இன்று தன்னவளை கண்ணெதிரில் பார்க்க அதுவும்.அவள் நிலை அந்த குறுகிய காலத்தில்….. உடல் இளைத்துப் முகம் கூட கலை இழந்து அவளே ஒரு கோலமாய் நிற்பதைப் பார்க்க காதலனாய் அவன் அவன் உயிர் ஒரு நொடி துடித்து அடங்கியது……..
ஆனாலும் அவள் மேல் இருக்கும் தன் காதலையோ அளப்பரிய அன்பையோ வெளிக்காட்ட. அவன் கிஞ்சித்தும் முயற்சிக்கவில்லை……. சாருலதாவின் மீது அவன் வைத்த நேசம் தான். அவன் தங்கை மீதான தன் கடமையில் இருந்து விலக்கி அவளை…… மாற்றான் ஒருவனின் கைப்பாவையாய் மாறும் அவல நிலைக்கு தள்ளியது…….
அப்படிப்பட்ட தன் கடமையை மறக்க வைக்கும் அவனின்……. காதலை தனக்குள்ளே புதைத்து கொள்வதே அவனுக்கு அவனே வழங்கிக் கொள்ளும் சரியான தண்டனையாகும்
அத்தோடு சாருலதாவின் தந்தையான சிவானந்தத்தின் நரியின் தந்திரம் நிறைந்த செயல்கள்…. வினோத்திற்கு நன்று பரிச்சயமானவை…… ஏற்கனவே ஒரு முறை அவனை கடத்தியது கூட அந்த மனிதராக இருக்குமோ…… என்ற ஒரு பலமான சந்தேகம் வினோத்திற்கு. உண்டு ……
தன் காரியம் நடப்பதற்கு எந்தவிதமான சூழ்ச்சியும் எளிதில் கையாளக்கூடிய சிவானந்த தால் அவனின் தங்கைக்கு….. எந்த ஒரு பாதிப்பும் வர இவனே வழி செய்து விடக்கூடாது என்கிற மற்றொரு காரணத்தால் சாருலதாவை…….. தன்னை விட்டு முழுவதுமாக விலக்கி வைக்க முடிவு செய்தவன்…..உள்ளத்தில் வற்றாத ஜீவநதியாய் பாய்ந்து வரும் நேசத்தை…….. தன்னுள்ளே மறைத்து…… முகம் இறுகி உடல் விரைத்து அவளை பார்ப்பதை தவிர்த்து மறுபக்கம் வண்டியை செலுத்தினான்………….
அவன் அப்படி சட்டென்று விலகிச் செல்வான் என்பதை அறியாத சாருலதா…. திகைக்க கண்களின் ஓரம் கட்டிய நீர் கன்னத்தில் வழிந்தது வினோ…. வினோ போகாதீங்க ப்ளீஸ் நான் உங்க கிட்ட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் பேசணும்…… மிதமிஞ்சிய தவிப்போடு அவன் பின்னால்….. அது நடுவீதி என்பதையும் மறந்து அவள் ஓடி வர…. அந்தக் காட்சி ஏற்படுத்திய தாக்கத்தால் உள்ளத்தில் உதிரம் கொட்டும்….. வலியை சகித்துக் அவள். குரலுக்கு நில்லாமல் தன் பைக்கை விரைந்து செலுத்தி அங்கிருந்து விலகிச் சென்று விட்டான்……
தன் கண்களை விட்டு வெகுதூரத்தில் மறைந்துபோன வினோத்தை தடுக்கும் வழி அறியாது…….. பொங்கி எழும் கதறல் வெளிப்பட்டு விடாமல் வாய் பொத்தி கண்மூடி நின்ற சாருலதாவின்…… கோலம் காண்பவர் எவரையுமே ஒரு நொடி பதைக்க வைக்கும்…….
எப்படியாவது அவனிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பேசிவிட வேண்டும்……என்கிற உத்வேகத்தோடு வந்தவள் பெரும் தோல்வியோடு அங்கிருந்து அமைதியாக தன் காரை நோக்கி நடந்தவளின் முன் வந்து நின்றான் அந்த மனிதன்……இதுநாள் வரையில் சாருலதா கண்டிடாத ஒரு புதியவன்………
இங்கே இரு காதல் நெஞ்சங்கள் வேண்டுமென்றே தங்களைத்…… தாங்களே குத்திக் கிழித்துக் கொண்டு ஆறா ரணத்தை உண்டாக்கி வேதனைப்பட……. அங்கே வீட்டிலோ தன்னை விட்டு விலகி ஓடும் தன்னவளின் இதயத்தை எப்படித் தன் வசப்படுத்துவது என்கிற. மிக முக்கியமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் ருத்ர பிரதாப்……
தன் முன்பு அலமாரியில் இருக்கும் பொருட்களை எடுப்பதும் மாற்றி வைப்பதுமாக அணிந்திருந்த சேலையை. இழுத்து சொருகிக் கொண்டு….. வீட்டை சுத்தப்படுத்துவதில் அம்ருதா மும்முரமாக இருக்க……..
அவள் எப்போதும் கண்ணியமாக கட்டியிருக்கும் புடவையானது வேலையின் காரணமாய் இன்று தன் கட்டுப்பாடு தளர்த்தி…… தாராளமாய் கவர்ச்சி காட்ட….. மூன்று மாதங்களே முடிவடைய போகும் தன் வாரிசை சுமக்கும் அவன் மனைவியின். வளைந்த இடையையும் ஒட்டிய வயிற்றையும் பார்வை விலக்காது பார்த்திருந்தான் அம்ருதாவின் கணவனானவன்……
அம்ருதாவை பார்த்திருந்த அவனில் முதலில் தோன்றியது….. பெரும் கவலையும் வருத்தமும் ஊரையே தன் ஒற்றை காலடியில் கட்டியாளும் பராக்கிரமம் படைத்த…… அவனால் தன் காதல் கண்மணிக்கு உதவியாய் ஒரு பணியாளை அந்த வீட்டில் பணி அமர்த்தக் கூட வழியின்றி……
இப்படித்தானும் வந்து அவள் வீட்டில் அமர்ந்திருப்பது அவனுக்கு துக்கமாக இருந்தது……….தன்னை விட்டு விலகி ஓடியவளை மீண்டும் விடாது பின் தொடர்ந்து…. தன் கண் பார்வைக்குக் கொண்டு வந்ததன் மிக முக்கிய காரணம் கூட….. அவள் பாதுகாப்பும் சவுகரியமும் சிறிதளவும் மாறாதிருக்க அவன் வெகுவாய் முயன்றும்…….. அவனால் அதில் பாதி மட்டுமே வெற்றி பெற முடிந்தது……..
எவராலும் தன் குறிக்கோளில் இருந்து சிறு அடி கூட தடுமாற வைக்க முடியா அவனை தன் உறுதியினாலும்……. மனவலிமையாலும் மிகச் சுலபமாக வீழ்த்தி விட்டாள் அவன் மனைவி முன்பு இதையே ……. பெரும் அகங்காரம் நிறைந்த கோபத்தோடு நினைத்தவன் மனம் இன்று…… அதே வார்த்தைகளை காதலின் இனிமையோடு நினைத்துப் பார்த்தது……
காலியான வெற்றிடமாய் இருந்த அவன் உள்ளத்தில்…… நிரம்பி ததும்பும் காதலில் மூழ்கிய தாபத்தோடு அவளை எப்போதும் காண்பவனின் பார்வையில் இன்று சிறு வித்தியாசம்…..
அவன் உரிமை பெண்ணை காணும் ஒவ்வொரு கணத்திலும்…… அவளின் அனைத்தையும் மொத்தமாய் அள்ளிப் பருகி அந்தப் பேரழகை கொள்ளையிட துடிக்கும் அவனுள்…… இப்போதும் அணையாத தீயாகக் கொழுந்துவிட்டெரியும். அவள் மீதான கட்டுக்கடங்காத காமம்……
இன்றைய பார்வையில் துளி அளவு கூட கலக்காத பரிபூரணமான ஒரு தந்தையின் பார்வையாய் ……. சிறு ஏக்கம் வாஞ்சை பூரிப்பு பெரும் கர்வம் இவை அனைத்தையும் கலந்த வருங்கால தகப்பனின் பார்வையால் அது இருந்தது…….
ஒரே ஒரு முறை தன் மகவு குடியிருக்கும் அந்த வயிற்றை தன் கரம் கொண்டு வருட முடிந்தால்…. அதில் தன் உதட்டை மென்மையாய் பதித்து 1,000 முத்தத்தை அவன் உயிரில் உண்டான தன் பிள்ளைக்கு தன்னால் வழங்க முடிந்தால்…..
வினாடிக்கு வினாடி மிகப்பெரும் வீரியத்துடன் அவனுள் எழும் ஏக்கத்தை பெரும்பாடுபட்டு அடக்கி…… அமைதி காத்தான்……..எங்கே தன் செயல் அவன் மகனின் அன்னையை காயப்படுத்தி விடுமோ என்கிற பயத்தின் காரணமாய்…….
ஏற்கனவே அவன் உயிரானவளை எவ்வளவு முடியுமோ அத்தனை தூரம் தன் அகம்பாவமான செயல்களின் மூலம் காயப்படுத்தி ஆகிவிட்டது……. எந்த நொடி அவள் அவனின் காதல் என்று அவன் தன் உயிரில் உணர்ந்தானோ…….அந்த நிமிடத்தில் இருந்து தன் சிறு அசைவு கூட அம்ருதாவை காயப்படுத்தவோ கவலை படுத்தவோ கூடாது என்பதில் அவன் மிக மிக தெளிவாக முடிவெடுத்திருந்தான்……..
அதன் காரணமாகத்தான் அவள் தன்னை விட்டு விலகி……… அவள் அண்ணனோடு செல்லும் போதும் அவளைத் தன் பிடியில் நிறுத்திக்கொள்ள……. தன் உயிரோடு இறுக்கிக் கொள்ள ஆண்மகனின் அங்கமெல்லாம் ஆர்ப்பரித்தாலும்…….
அம்ருதாவின் மனம் அறிந்து ஒரு கையாலாகாதவனாய் விலகி நின்று அமைதி காத்தான்…… ஆனால் அது அத்தனை சுலபமான காரியமா என்ன….? அவளைப் பிரிந்த….. அந்த ஐந்து நாட்கள் கூட தன்னுள்ளே தாள முடியாத வலியை அனுபவித்தவன் மீண்டும் அவளை சூழும்……. உயிர்க் காற்றாய் தான் மாற நேரம் பார்த்து காத்திருந்த ருத்ர பிரதாப்பின்…… வலையில் தானாக வந்து சிக்கிக் கொண்ட…….
தன் மைத்துனனை நினைத்தால் அவனுக்கு இப்போது கூட …….. அடக்க முடியா புன்னகை பொங்கி எழுகிறது…….அவன் செய்யாத ஒரு காரியத்தை அவனே செய்ததாய் ஆதாரம் காட்டி தானே மீண்டும் அவன் மனைவியின் அருகாமையை அவனால் பெற முடிந்தது…….ஆனால் அதன்பிறகு…??
அம்ருதா விடம் எப்படிப் பேசி என்ன செய்து தன் தவறுகளை மன்னிக்க வேண்டி மன்றாடி……. தன்னோடு வாழ்வதற்கு அழைப்பது என்கிற……. சிறு யோசனை கூட இத்தனை நாட்களில் அவன் மூளையில் உதயமாகவில்லை…… .
எதுஒன்று தனக்கு வேண்டும் என்றாலும் அதற்காக…… எத்தனை தூரம் முயன்றும் தன் சாதுரியத்தில் மூலமாக……. வியூகம் வகுத்து தனக்கு வேண்டியதை அடைந்த விடுவதில் கெட்டிக்காரனாய் திகழும் ருத்ர பிரதாப்பின் மூளையானது…….. இன்றைய நாளில் அம்ருதாவுக்கு எதிராய் சிறு திட்டமிடலைக் கூட நிகழ்த்த வலுவின்றி மயங்கிப் போய் கிடக்கிறது அவளிடமே………
. இதோ இப்போது கூட தன் முன்பு அமைதியாக நடமாடும் தன் கைக்கெட்டும் தூரத்தில் நிற்கும் அவன் மனைவி…….மனதளவில் அவனை விட்டு வெகுதூரமாய் அவனால் துரத்திப் கூட பிடிக்க முடியாத தொலைவில்…… நிற்பது போல் ஒரு பிம்பம் தோன்ற சட்டென்று சூழ்ந்துவிட்ட வேதனையில் முகம் கசங்க கண்மூடி தன் வலி பொருத்தான் அந்த தன் காதலியின் மனம் புரிந்து கொள்ள தெரியாத புதிய காதலன்………
அங்கே ஒருவன் தன் வாழ்நாளில் ஒரே கடமை என…… முடிவுகட்டி தன்னையே பார்த்திருப்பதை உணர்ந்தாலும்…… அந்தப் பார்வையால் அவளுள் . படபடப்பும் கோபமும் எரிச்சலும் மாரி மாரி தோன்றினாலும்…… ஓர விழிப் பார்வை கூட அவன் கண்களை பார்ப்பதை கவனமாய்….. தவிர்த்தபடி தன் வேலையை தீவிரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அம்ருதா…….
தன் மனமும் மூளையும் என்னதான் நினைக்கிறது…….என்னதான் எதிர்பார்க்கிறது என்று அவளாலேயே புரிந்து கொள்ள முடியாது ஒரு குழப்பமான மனநிலையில்….. அவள் இருக்க …….. எதைப்பற்றியும் ஒரு. முடிவுக்கு வரமுடியாமல் அவளுக்குள்ளேயே மிக மோசமான தடுமாறினாள்…….
அமைதியான நதிப்போல சென்று கொண்டிருந்த அவள். வாழ்க்கையானது திடீரென்று ஆர்ப்பரிக்கும்…… சூறாவளியாய் மாறி அவளையே முழு மொத்தமாய் சுழற்றி அடிக்க…… குறுகிய காலத்தில் நடந்துவிட்ட பலவற்றிலும்……. அதை முன்னின்று நடத்தியவனாலும்…..
கோரமான பயத்திலும் பரிதவிப்பிலும் சிக்கிக் கொண்டவளுக்கு அதை விட்டு….. மீண்டு வந்து தெளிவான முடிவுகளின் மூலம் தன் வாழ்க்கையை சீரமைக்க……. முடியாத பலவீனமான நிலையில் அவள் இருக்க……
இப்போதைய தன் மனநிலைக்கு அமைதிக் ஒன்றே…… ஏற்றது என்கிற முடிவு கட்டி மௌனத்தின் பின்னால் மறைந்து கொண்டாள்……… ருத்ரனின் திருவிளையாடில் சிக்கி மீண்ட அவன் உயிரில் சரிபாதியானவள்.……
அன்று மிக விரைவாக வீடு திரும்பி விட்ட வினோத் ……. கட்டாயத்தின் பேரில் புறக்கணித்துவிட்டு வந்த சாருலதாவை நினைத்து சிந்தனையில் இருக்க….. அந்த வீட்டில் இருக்கும் மற்ற இருவரும் கூட தங்கள் சிந்தனையில் மூழ்கி விட……. அந்த இடத்தில் சூழ்ந்த கிட்ட அமைதியைக் கலைக்கும் விதமாய் வாசலில் கேட்டது அழைப்பு மணி…….
தன் முன்பு சிரித்தபடி நிற்கும் அரவிந்தனை முறைத்துப் பார்த்தாள் அம்ருதா….. அவள் முகத்தில் கொஞ்சம் கூட இலக்கம் இல்லை நான் உங்ககிட்ட என்ன கண்டிஷன் போட்டேன் மிஸ்டர்…… உங்க பாஸை பிசினஸ் விஷயமா பார்க்க இந்த வீட்டுக்கு யாரும் வரக்கூடாது என்று…… நான் சொல்லி இருந்ததையும் மீறி நீங்க இப்போ வந்தா…… என்ன அர்த்தம் மிஸ்டர் அரவிந்த் இந்த நிமிஷமே உங்க பாஸை கூட்டிகிட்டு வெளிய போங்க…….
ஒரே முடிவாய் அம்ருதா முடித்துவிட அதில் அவள் அருகில் நின்றிருந்த…… வினோத்திற்கு கூட அந்த நேரம் மனதில் சிறு வருத்தத்தை தோற்றுவித்தது….. அவன் தங்கையின் பேச்சு
ருத்ர பிரதாப் பின் தகுதிக்கு கொஞ்சம் கூட பொருத்த மில்லா அந்த வீட்டில்…. அவர்களின் நிபந்தனைக்கு கட்டுப்பட்டு அவன் இருக்க வேண்டிய அவசியம்தான் என்ன……..???.
அடுத்தவரின் சிறு அலட்சிய பார்வையைக் கூட பொறுக்க முடியாத…… பணத்திமிர் பிடித்தவனாய் தான் நினைக்கும் ருத்ர பிரதாப்பிடம் …… இன்றைய நாட்களில் அந்த திமிரையோ அகம்பாவத்தையோ சுயநலமான ஒரு செயலையும் கூட அவன் இதுவரை காணவில்லை……
மிக அமைதியாய் அம்ருதா உணவு என்கிற பெயரில் தரும் எதையும்….. திருப்தியோடு உண்டு அவள் கண்ணசைவிர்க்கும் சிறு வார்த்தைக்கும் கட்டுப்பட்டு பெட்டிப்பாம்பாய் அவன் நடக்க…..
எங்கே அந்த ருத்ர பிரதாப் பால் தங்கைக்கு ஏதேனும்….. ஆபத்து வந்துவிடுமோ என்கிற காரணத்தோடு வீட்டில் இருக்கும் மொத்த நேரமும் அவனைத் தன் கண்காணிப்பில் வைத்திருக்கும் வினோத்திற்கு……
அவன் அம்ருதாவை பார்க்கும் பார்வையும் அவனின் ஒவ்வொரு நடவடிக்கையும் கூட வினோத்திற்கு மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தது……தன் தங்கை மீதான அவனின் கங்கு கரை காண முடியா காதலை தானே……. ஆனாலும் கூட…..ஏனோ ருத்ர பிரதாப்பின் காதலை ஒரு சாக ஆண்மகனாய் உணர முடிந்தது வினோத் தால் ஒரு சகோதரனாய் அவன் காதலை நம்ம தான் முடியவில்லை……..
இன்று தன் காதலி தன் கைக்கெட்டும் தூரத்தில் வந்து நின்று கூட ……. அவளை தன் விரலால் கூட தொட முடியாத துர்பாக்கிய நிலையோடு வீடு வந்து சேர்ந்தவனின்….. கண் பார்வையில் விழுந்த ருத்ர பிரதாப்பின் முகமும் அம்ருதா வையே பார்த்திருக்கும் கண்களும்………
இவன் வலிக்கு சற்றும் குறைவில்லாத வேதனையை ருத்ர பிரதாப்பின் வதனமும் பிரதிபலிக்க……இதோ இப்போது கூட ஏதோ இருக்க இடமின்றி தன் வீட்டில் ஒண்ட வந்தவனை விரட்டுவது போல் ….. அவன் தங்கை ருத்ர பிரதாப்பை வீட்டை விட்டு விரட்ட பார்க்க…….
ஆனால் அதில் சிறிது கூட பாதிப்பின்றி அப்போதும்….. என் கடமை உன்னை சைட் அடித்து கிடப்பதே…… என்பதுபோல் அம்ருதாவை பார்வையாலேயே பருகும் ருத்ர பிரதாப்பை கண்டு வினோத்திற்கு ஒரு நிம்மதி நிறைந்த புன்னகை எழுந்தது……..
தம்பதியர் இருவரின் விஷயத்திலும் ஒரு பொறுப்புள்ள அண்ணனாய்….. அவன் எடுக்க வேண்டிய முடிவு என்ன என்ற தெளிவு வினோத்திற்கு அந்த நேரம் வந்திருந்தது………
உயிர்த் துணை சேரும்……..
உன் துணை தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
அத்தியாயம்.37
உண்மையான காதலை உள்ளத்தில் கொண்டவனுக்கு தன் இனத்தை கண்டறிவது அத்தனை….. கடினமான காரியம் இல்லையே அதிலும் ருத்ர பிரதாப்பின் ஒவ்வொரு அசைவும் அவன் பார்வையில்…. ஒவ்வொரு பரிமாணமும் காட்டும் அபரிவிதமான காதலை……
யோசித்துப்பார்த்தால் தான் சாருலதாவின் மீது வைத்திருக்கும் காதலை கூட….. ருத்ர பிரதாப்பின் அவன் மனைவி மீதான உயிர் நேசம் தோற்கடித்துவிடும் என்று……அவனுக்குத் தோன்றியது….. அந்த எண்ணம் கூட வருத்தத்திற்கு பதிலாக. ……. பெரும் நிம்மதியும் சந்தோஷப் பூரிப்பையுமே தந்தது…..
நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறதா இல்ல மிஸ்டர் அரவிந்த் நான் போட்ட நிபந்தனையை நீங்க மீறிடிங்க அதனால நவ் ஜஸ்ட் கெட் அவுட்…….வார்த்தைகள் அரவிந்தனுக்கு இருந்தாலும் அம்ருதாவின் கண்கள் என்னவோ ருத்ர பிரதாப்பை தான் பார்த்தது……
இனி உன் ஆட்டம் என்னிடம் செல்லுபடி ஆகாது எனினும் சேதி அவள் கண்கள் வழி அவனுக்கு காணக் கிடைக்க……தன் மனைவியின் நிமிர்வும் தன்னை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்கிற அவளின் உறுதியும் எப்போதும் போல் அவனை இன்றும் மொத்தமாய்…… அவள் புறம் அடித்து வீழ்த்த கண்களில் தெறித்து விழும் மின்னலால் உண்டான ஒளியோடு அவளைக்……. மிதமிஞ்சிய காதல் போதையில் பார்வையிட்டான் ருத்ர பிரதாப்……
அங்கே அம்ருதா கோபமாக….. ருத்ர பிரதாப்போ காதலாக……..இவர்கள் இருவரின் இடையிலும் சிக்கி அரவிந்தனும் வினோதம் கந்தலாகி கொண்டிருந்தனர்…….
அம்ருதா விடம் மாட்டி முழி பிதுங்க விழித்துக்கொண்டிருக்கும் அரவிந்தன் எப்படியாவது தன்னுடைய….. பாஸ். தனக்கு துணைக்கு வர மாட்டாரா என்னும் நப்பாசையில் விதமாக…… குரங்கு போல் செய்கை செய்து ருத்ர பிரதாப்பின் கவனத்தை தன்னிடம் திருப்ப முயல…….
ஆனால் அப்படி ஒரு ஜீவன் அங்கு இருப்பதையே சற்றும் மதியாது…….. இப்படித் தன் மனைவியை பருகிப் பருகி என்று ருத்ர பிரதாப் பார்த்திருந்தால் அவனும் தான் என்ன செய்வான்……
மிகமிக பரிதாபமான பார்வையை அவன் வினோத்தை நோக்கி திருப்ப…… அதேநேரம் அரவிந்தனின் நிலையில் இருந்த வினோத்தும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்……. ருத்ர பிரதாப்பை அம்ருதா திட்டுவதை தடுப்பதற்காக தானும் எப்படி எல்லாமோ முயன்று பார்த்தும்…..அவனின் ஒரு அசைவைக் கூட கண்டு கொள்ளாமல்…. அவன் தங்கையும் தன் கணவனிடமே கண்களால் போர் புரிந்து கொண்டிருக்க……
அந்த வீட்டில் அப்போதைக்கு தேவையில்லாத அந்த இருவரும்…….தங்கள் நிலையை நினைத்து வருத்தப்பட்டு ஒருவருக்கு ஒருவர் கண்களாலேயே ஆறுதல் சொல்லிக்கொண்டனர்…….இதற்கு மேல் பொறுத்திருந்தால் தாங்காது என்று முடிவு கட்டி அரவிந்தனும் வினோத்தும் ஒரே நேரத்தில்…….
பாஸ்…… அம்மு……. என்று கத்தி அவர்கள் இருவரின் சங்கிலி முடிச்சான பார்வை பரிமாற்றத்தை உடைக்க……. இதில் மிதமிஞ்சிய கொலைவெறியோடு ருத்ர பிரதாப் அரவிந்தனை பார்க்க…… தன் கணவனை முறைத்த பார்வை சிறிதும் மாறாமல்…..அதே விழியால் அம்ருதா தன் அண்ணனை பார்த்தாள்……
என்ன அம்மு இது வீட்டுக்கு வந்த மா…….மாப்பிள்ளை என்று சொல்ல போனவன் அவன் தங்கையின் பார்வை கூர்மையாக தன்மீது விழுவதைக் கண்டு……வந்த வாக்கியத்தை. தொண்டைக்குழியில் அடர்த்தவன்…… என்ன இருந்தாலும் வீட்டுக்கு வந்தவங்கள இப்படி விரட்டி அடிக்கிறா மாதிரி பேசுறது தப்பு டா…… கொஞ்சம் அவர் வந்தது எதுக்குன்னு தான் காது கொடுத்து கேளேன் அம்மு…….
வினோத்தின் வார்த்தைக்காக தன் கோபம் குறைத்தாலும் அவன் மீதிருந்து தன் வித்தியாசமான பார்வையை திருப்பாமல்……தன் அண்ணனை இரு நொடிகள் கூர்ந்து கவனித்தவள்……. இப்போது கேள்வியாக அரவிந்தனை பார்த்தாள்…..
ருத்ர பிரதாப்பின் அனல் தெறிக்கும் பார்வையில் சிக்கி….. சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தவன். அம்ருதா தான் தன் புறம் திரும்ப….. மனதில் நன்றியை தெய்வத்துக்கு சொன்னவாறு அவளைப் பார்த்து பேச தொடங்கினான்…….உங்க அண்ணன் சொல்றது ரொம்ப கரெக்ட்டு மேடம்….. நான் எந்த பிசினஸ் விஷயமாகவும்….. பாஸ பாக்க வரல….. இது அதைவிட ரொம்ப முக்கியமான விஷயம்……
பாஸ் அவங்க அம்மா பெயரில் ஒரு டிரஸ்ட் நடத்திட்டு இருக்காங்க….. அது முழுக்க முழுக்க….. பெற்றோர்களால் கைவிடப்பட்ட ஆதரவில்லாத ஏழ்மை நிலையில் இருக்கும் சிறு குழந்தைகளிலிருந்து…. 20 வயதுக்கு உட்பட்ட. பிள்ளைகளோட படிப்பு சம்பந்தமான பல வகையான உதவிகள் புரியும் தொண்டு நிறுவனம்….. என்று நிறுத்தி அம்ருதாவை சற்று அழுத்தமாக பார்த்தவன்……
கிட்டத்தட்ட ஒவ்வொரு வருஷமும் எங்க பாஸின் ஆண்டு வருமானத்தில் இருந்து 30% அந்த ஆதரவில்லாத பிள்ளைகளுக்காக பாஸ் செலவு பண்றாரு……..இதை கூறும்போதே ஒரு சாதாரண தொழிலாளியை விட…… அதிகமாக தன் நெருங்கிய தோழனின் நல்ல குணத்தை பறைசாற்றும் பூரிப்பே அரவிந்தனின் முகத்தில் நிரம்பியிருந்தது……. அத்தோடு உன் கணவனிடம் நீ காணாத நன்மைகளும் உண்டு என்று அம்ருதாவுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு சகோதரனின் அறிவுரை சொல்லும் குரலும் கூட அதில் கலந்திருந்ததோ….??
அரவிந்தன் சொல்ல சொல்ல அதை அமைதியாக கேட்டு அம்ருதாவின் முகத்தை கூர்ந்து பார்த்திருந்த ……. அந்த வீட்டில் இருந்த மற்ற மூவராலும் அவள் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை துளிக்கூட அறிந்துகொள்ள முடியவில்லை…..
உணர்வுகள் தொலைத்த முகத்தோடு அனைத்தையும் கேட்டவள் அடுத்த நொடி அங்கிருந்து எழுந்து கொண்டாள்……. ஒரு வார்த்தை கூட பேசாது அவள் விலகிச் செல்ல…….அரவிந்தனுக்கு மட்டும் இல்லாமல் அவளின் மௌனமான விலகல் வினோத்திற்கும் வருத்தத்தை கொடுத்தது…….
அவன் அறியாது பார்வை ருத்ர பிரதாப் பின்புறம் செல்ல…… அவன் முக பாவத்தின் அர்த்தம் கூட வினோத்திற்கு புரியவில்லை போங்கடா…… நீங்களும் உங்க காதலும் என்று தலையில் அடித்துக் கொள்ள தோன்றினாலும்……. ஏனோ அதோடு சேர்த்து அவனுக்கு சிறு புன்னகையும் தோன்றியது……. இத்தனை சீக்கிரம் தன்னால் ருத்ர பிரதாப்பை ஏற்றுக்கொள்ள எப்படி முடிந்தது என்று அவனுக்கே ஆச்சரியமாகவும் கூட இருந்தது…….
தன்னைப் பார்த்து சிரிக்கும் வினோத்தை அப்போதுதான் ஏறிட்டுப் பார்த்த ருத்ராவின் கண்களிலும்….. இரு நொடி வந்த ஆராயும் பார்வை அடுத்த நொடியில் சினேகமாய் மாற தானும்……. அதே மகிழ்ச்சியோடு புன்னகைதான் ருத்ர பிரதாப்….. அந்த சிரிப்பில் இருந்தது நிம்மதியும் கூட………
அடுத்து அவனின் திட்டத்திற்கு வினோத்தின் உதவி மிக தேவையாயிற்றே……. யாருக்கும் எதற்கும் சற்றும் அடிபணியாத அவன் மனைவி சிறிது…… செவிசாய்ப்பது கூட அவள் அண்ணனின் வார்த்தைகளுக்கு மட்டும் தானே…….. தனக்குள் எண்ணிக் கொண்டவன்………
அரவிந்தன் தன் வந்த வேலையான. டாக்குமென்ட்களை ருத்ர பிரதாப் இடம் காட்டி சரி பார்க்க ஆரம்பிக்க……அதில் அங்கிருந்து விலக்க போன வினோத்தை நிறுத்தியது ருத்ர பிரதாப்பின் அழைப்பு…….. வினோத் எங்க போறீங்க. ப்ளீஸ் இங்கேயே இருங்க….. உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும் ஒரு சிறு விளக்கம் கூட இல்லாமல் சட்டென்று அவன் சகஜமாய் பேச அதற்கு பதிலளிக்க தெரியாமல் வினோத் தான் சற்று தடுமாற வேண்டி இருந்தது……
அவனும் இரு நொடியில் தன்னை சமாளித்து சொல்லுங்க ருத்….. அவன் பெயரை சொல்ல வந்ததை நிறுத்தி. தன் மனம் மாறிய விஷயத்தை துளிக்கூட சந்தேகமின்றி தெரிவிக்கும் விதமாக…….. சொல்லுங்க மாப்ள என்ன விஷயம்….. தெள்ளத் தெளிவாக தன் மனம் எடுத்துரைத்தான் வினோத்……
அவனுக்கு சற்றும் சளைக்காத ருத்ர பிரதாப்பும். அது ஒண்ணும் இல்ல மச்சான் இப்படி வந்து உட்காருங்க…… தன் அருகில் இருந்த இருக்கையை கை காட்டி அதில் அமர வைத்தவன்……
இது இந்த டிரஸ்ட் எங்க அம்மாவோட ஞாபகமா நான் நடத்திட்டு வர என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒன்னு……எந்தவொரு நேரத்திலும் தன் அன்னையைப் பற்றி சிறு வார்த்தை கூட எவரிடமும் பேச விரும்பாதவன் அன்று…… மிக லேசாக தன் மனம் திறக்க தொடங்கினான்……
எனக்கு ரொம்ப பிடிச்சதும் கூட இனி இதன் பொறுப்பு மொத்தத்தையும்…. நான் அம்ருதா பேர்ல எழுதி இருக்கேன்….. இனிமே இதோட வரவு செலவையும் யாருக்கு என்ன மாதிரி உதவிகள் செய்யணும்கிறதையும் உங்க தங்கச்சி மட்டும் தான் முடிவு பண்ண முடியும்………அதனால இத பேபி கிட்ட காமிச்சு அவளுக்கு ஓகேன்னு தோன்ற ப்ராஜெக்ட்ல சைன் பண்ண சொல்லுங்க……. ருத்ர பிரதாப் சொல்ல வருவது வினோத்திற்கு மிகத் தெளிவாக புரிந்தது….
அவனிடம் இருக்கும் பணத்திற்கு ருத்ர பிரதாப் நினைத்தால்….. பெரும் தொழிற்சாலைகளையும் பங்களாக்களையும் இன்னும் எண்ணற்ற விலைமதிக்கமுடியாத எத்தனை வேண்டுமானாலும் அவன் அம்ருதா வின் பெயரில் எழுதி வைக்க முடியும் ஆனால் அதை விடுத்து……
ஒரு தொண்டு நிறுவனத்தை அவள் பெயரில் அவன் எழுதிக் கொடுப்பது மூலமாக…… தன் பணத்திமிரையோ அதிகாரத்தையோ அவளிடம் காட்டாமல்….. அவள் அன்பை மட்டுமே பெற அவன் முயல்வதை ருத்ர பிரதாப்பின் செய்கையே….. வினோத்திற்கு கூறி விட மிக மகிழ்ச்சியோடு அவனிடமிருந்த பத்திரங்களை வாங்கிக் கொண்டான்……..
தன் முன்பு அண்ணன் நீட்டிய காகிதங்களை கண்ணுற்ற அம்ருதா வின் முகத்தில் வந்து போன பாவனைக்கு என்ன பெயர் என்று தெரியாமல் விழித்த வினோத்…….. இப்படி அமைதியா இருந்தா எப்படி அம்மு….? ஏதாவது பேசு……
அந்த மனுஷன் இத்தனை நாளா ரொம்ப மோசமானவர் என்று நாம நெனச்சுக்கிட்டு இருந்தோம்…… ஆனால் இப்போ அவரு நம்ம வீட்டுல வந்து இருக்கிறதையும் அவரோட அடுத்தவங்களுக்கு உதவும் குணத்தையும் பார்த்தா…… நாம நெனச்சது தப்புன்னு தோணுது…..
வினோத்தின் வார்த்தைகளுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்த அம்ருதா அதற்கு மேல் ஒன்றும் கூறாமல் மீண்டும் அமைதியாகிவிட……அப்போ இந்த பத்திரத்தில் கையெழுத்துப் போடு அம்மு நீ கூட முதலில் எல்லாம் என்கிட்ட ஒரு விஷயம் அடிக்கடி சொல்லுவ….. உனக்கு ஞாபகம் இருக்கா……..நாம நல்லபடியா நிறைய சம்பாதிக்க ஆரம்பிக்கும்போது நம்மள போலவே அப்பா அம்மா இல்லாத… கஷ்டப்படுற சில குழந்தைகளுக்காவது நம்மளால முடிஞ்ச உதவியை செய்யணும்னு நீ எவ்ளோ ஆசைப்படுவ அம்மு ……
கிட்டத்தட்ட நம்மள மாதிரியே தான் அவரும் யோசிச்சு இருக்காரு……. அப்படினா என்ன அர்த்தம். நாம நினைச்ச அளவுக்கு ருத்ரா கெட்டவர் இல்லை…..நீயும் யோசிச்சு பார்த்தா இந்த விஷம் உனக்கும் புரியும்….. என்றவன் தன் பேச்சை சில நொடி நிறுத்தி மாப்பிள்ளைய மன்னிக்க முயற்சி செய் அம்மு….. சற்று தயங்கினாலும் கூட தான் ருத்ர பிரதாப்பை மன்னித்து விட்டதை மிக அழுத்தமாக தங்கைக்கு உணர்வைத்தான் அண்ணன்…….
அவனின் அந்த வார்த்தைகளில் ஒரு சில நொடிகள்….. வினோத்தை ஏறிட்டுப் பார்த்த அம்ருதாவின் கண்களில்……தோன்றிய ஆயிரம் ஆயிரம் உணர்ச்சிகள் அதை சரிவர புரிந்து கொள்ள முடியாமல் அவன் விழிக்க. ….. ஒரு பெருமூச்சோடு சரி அவரை நான் மன்னிச்சிட்டேன் போதுமா ஆனால்…. இந்த பொறுப்பெல்லாம் எனக்கு தேவையில்லை அனல் தெறிக்கும் உறுதியோடு சொல்லிவிட்டு அம்ருதா படி இறங்கி செல்ல……அவள் மனநிலையை மாற்றும் வழி அறியாது தவித்து நின்றிருந்தான் அந்த பாசமான தமையன்…….
முற்றிலுமான தோல்வியோடு தலை குனிந்தபடி அந்த காகிதங்களை ருத்ர பிரதாப் இடம் கொடுத்து……அம்மு ரொம்ப பிடிவாதமா இருக்கா மாப்ள என்னால இந்த விஷயத்தில் அவ கிட்ட எதுவுமே பேச முடியல…. அப்போ நான் பேசும் போது அம்மு என்ன பாத்தா பாருங்க …….ஒரு பார்வை அதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேச முடியல…… வருத்தத்தோடு சொன்ன வினோத்தின் கையைப் பிடித்து அழுத்தி விடுவித்தவன்……
விடுங்க மச்சான் நம்ம அம்மு அவ கோபமோ வெறுப்போ அவ மனசுல எது இருந்தாலும் அதை……நம்ம கிட்ட தானே காட்ட முடியும் . அதுக்காக அவளைக் கட்டாயப் படுத்த மட்டும் கூடாது …… தன் தங்கைக்காக தன்னிடமே சமாதானம் பேசும் ருத்ர பிரதாப்பை எந்த வகையில் சேர்ப்பது என்று வினோத்திற்கு சிறிது கூட புரியவில்லை……
எப்படி இருந்த நீங்கள் இப்படி ஆயிட்டாங்களே மாப்பிள்ளை…… வினோத் சந்தோஷமாக ருத்ர பிரதாப்பை கேலி செய்து சிரிக்க…… அதில் தானும் சேர்ந்து சிரித்த ருத்ர பிரதாப்பின் முகத்தில் சிறிது வெட்கமும் கலந்து இருந்தது……. வினோத்தின் தன் மீதான நம்பிக்கை அவன் மனைவி விஷயத்தில் அவனுக்கு புதுத்தெம்பை அளித்திருந்தது……
அவர்கள் இருவரும் சேர்ந்து அம்ருதாவின் அவள் கணவன் மீதான கோபத்தை தணிக்கும் வழியை மிகத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க……. அதைக் கலைப்பது போல் அந்த இரவில் அலறியது ருத்ர பிரதாப்பின்…. தொலைபேசி அதை உயிர்ப்பித்து பேசி அவனின் முகம் அதுவரை இருந்த மகிழ்ச்சியைத் தொலைத்து மிக இறுக்கமாக மாற…… நான் உடனே அங்கு வர முயற்சி பண்றேன் பேசி விட்டு செல்போனை அணைத்து அவனின் முகம் பெரும் வருத்தத்தை பிரதிபலித்த…..
என்னாச்சு மாப்பிள ஏதாவது பிரச்சனையா அதில் முகம் பார்த்து கேட்ட வினோத்தை பார்த்தவன்…… பாட்டிக்கு உடம்பு ரொம்ப முடியலையாம் உடனே என்னை அம்ருதா வையும் கூட்டிக்கிட்டு கிளம்பி வர சொல்லுறாங்க……அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு….. ருத்ர பிரதாப்
சொல்ல ……
இதுல யோசிக்க என்ன இருக்கு ருத்ரா நீங்க அம்முவைக் கூட்டிக் கொண்டு உடனே கிளம்புங்க….. நோ வினோத் பேபிக்கு இதுல இஷ்டமான்னு தெரியல அவன் தயங்க இதுல யோசிக்க ஒண்ணுமே இல்ல…… என்றவன் அடுத்து வந்த நிமிடங்களில் அம்ருதாவை எப்படி எப்படியோ பேசி சமாதானம் செய்து புறப்பட தயார் படுத்தியவன்……அந்த இரவு நேர பயணத்தில் அடுத்தவரை நம்பாமல் தானே டிரைவர் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை ஓட்ட ஆரம்பித்தான்……..
அங்கே அரண்மனையில் சுபத்ரா தேவி உடல் சோர்வாலும் நோயின் தாக்கத்தாலும் துவண்டு போய் கட்டிலில் விழிமூடி உறங்கிக் கொண்டிருக்கும்……. தன் அன்னையை விழி எடுக்காது பார்த்திருந்தார் லிங்கேஸ்வரன் ருத்ர பிரதாப்பின் தந்தை……
.அவர் நின்ற நிலையிலேயே சில மணி நேரங்கள் செல்ல விழி மூடித் திறந்தவரின் கண்களிலிருந்து பொலபொலவென்று கொட்டியது கண்ணீர் துளிகள்……சுபத்ரா தேவியின் அருகில் வந்த….. லிங்கேஸ்வரன்….
அவரின் பாதங்களை தொட்டவர் உங்களுக்கு நான் நல்ல மகனா எப்பவுமே நடந்துக்காம போயிட்டேன் …. துயரத்தோடு பேசியவரின் மனதில் மின்னி மறைந்தது…… அந்த முகம்…..
மகாலட்சுமியின் கடாட்சத்தை அப்படியே பிரதி எடுத்து வைத்த அந்த சாந்தம் ததும்பும் முகம்……. அந்தக் கண்கள் ஒவ்வொரு முறை அவர் உள்ளத்தில் தோன்றும் போதும் அந்தப் பார்வை கேட்கும் கேள்விகள் இதற்கு பதில் சொல்ல முடியா அவரின் துரோகம்…….
நினைக்க நினைக்க என்றைக்கும் விட இன்று வலியும் வேதனையும் அதிகமாக இருக்க அதை தாளமுடியாது அருகில் இருந்த இருக்கையில் போய் விழுந்தவரின்……. கண்களுக்குள் தோன்றி காட்சியாய் விரிந்தது……அந்த நாட்கள்…….
உயிர் துணை சேரும்………..
உன் துணை தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
அத்தியாயம்.38
அன்றைய விடியலில் மற்ற நாட்களைவிட அரண்மனை சற்று பரபரப்பாக காணப்பட்டது…. வெளியே புறப்பட தயாராக நின்றிருந்த வாகனத்தை மேலும் இருவர் சுற்றி சுற்றி வந்து துடைத்து இன்னும் பளபளப்பாக்கி கொண்டிருந்தனர்…… அந்த அரண்மனையைச் சேர்ந்த உறவுப் பெண்கள் அங்கு நின்றிருந்த மற்ற கார்களில் முழு அலங்காரத்தோடு அமர்ந்திருக்க…….
ஆனால் யாருக்கு அன்று பெண் பார்க்க அவர்கள் செல்ல இருந்ததோ அந்த லிங்கேஸ்வரன் மட்டும்…… எப்படியாவது அந்த நிகழ்வை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற உத்வேகத்தோடு தன் அன்னையிடம் முறையிட்டு கொண்டிருந்தான்……..
அம்மா என்னைப் புரிஞ்சுக்கோங்க எனக்கு இப்போ இந்த கல்யாணமே வேண்டாம் அதுவும் அப்பா பார்த்து முடிவு பண்ற….. பொண்ண எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது…..நான் பார்த்து என் மனசுக்கு பிடித்த பெண்ணை மட்டும் தான் நான் பொண்டாட்டியா ஏத்துக்குவேன்…..
எப்போதும் முறைத்தபடி தான் நினைத்தது ஒன்று மட்டுமே நடக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு….. பிடிவாதத்தின்
மொத்த….. உருவமாய் இருக்கும் தந்தையிடம் தன் விருப்பத்தை பற்றி கூறினாலும் அதனால்….. எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது என்று தெரிந்த லிங்கேஸ்வரன்……
தன் ஆட்டம் செல்லுபடியாகும் இடமான அவன் அம்மாவிடம் அன்றைய பெண் பார்க்கும் படலத்தை…. நிறுத்த கோரி சண்டையிட்டு கொண்டிருந்தான்…….சுபத்ரா தேவிக்கும் தன் மகனின் மனது படி தான் அவனுக்குப் பெண் அமைய வேண்டும் என்கிற ஆசை…… இதயம் முழுவதும் இருந்தாலும் கூட……
கணவனின் ஆளுமையில் அடைபட்டிருக்கும் அந்த மனைவிக்கு அவரை எதிர்த்து ஒரு விரலை….. அசைக்கக் கூட அதுநாள்வரை தைரியம் வந்ததில்லை என்பதைவிட அப்படி வர…….. சுபத்ராவின் கணவனான ஈஸ்வரமூர்த்தி விட்டதில்லை என்பதே சரியாக இருக்கும்……அவள் வருத்தத்தோடு தன் மகனைப் பார்க்க அவன் கோபமாகத் தன் அன்னையை எதிர் பார்வை பார்த்தான்……. இந்த நாடகம் எல்லாம் ஈஸ்வரமூர்த்தி அங்கே பிரவேசிக்கும் வரைதான்…..
என்ன நடக்குது இங்க இன்னும் கிளம்பாம அம்மாவும் பிள்ளையும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க….. லிங்கேஸ்வர் போய் வண்டியை எடு….. தந்தையின் கட்டளையை வேறுவழியின்றி ஏற்று முகம் முழுவதும் அடக்கப்பட்ட கோபத்தோடு தான் அன்று லிங்கேஸ்வரன்……. தனக்கு நிச்சயிக்கப்படும் பெண்ணான சாந்தி தேவியை பார்க்க சென்றான்……..ஆம் இந்த பெண் பார்க்கும் படலம் ஒரு கண்துடைப்பு நாடகம் மட்டுமே ஏற்கனவே ஈஸ்வரமூர்த்தி முடிவு செய்ததை இன்று அனைவர் முன்னும் அறிவிக்க மட்டுமே அவர் அவனை அழைத்துச் செல்கிறார்…… தன் விருப்பத்திற்கு இடையூறாக மகனின் வாழ்க்கையில் ….. அவனுக்கென்று எந்த ஆசையும் இருக்கக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருப்பவர் அவர்……..
எவருக்கு வைத்த விருந்தோ என்று அந்த மாளிகையின் வரவேற்பறையில் அவன் அமர்ந்திருக்க…….. திடீரென்று தன் முன்பு தோன்றிய அந்த மருதாணி பூசி சிவந்திருந்த வெண் பாதங்களை கண்டு அவனறியாது லிங்கேஸ்வரன் கண்கள் மெதுமெதுவாக உயர்ந்து……
தன் முன்னே தலைகுனிந்து சாந்தம் ததும்பும் முகத்தில் சிறு வெட்கம் நிறைந்த புன்னகையோடு நிற்கும் சாந்தி தேவியை கண்டபோது……. விழிகள் ஸ்தம்பிக்க உணர்வுகள் பேதலிக்க அனைத்தையும் மறந்த பரவச நிலைக்கு சென்றான் லிங்கேஸ்வரன்……. முதல் பார்வையிலேயே ஒரு பெண்ணால் நீ இப்படி வீழ்த்தப்படுவாய் என்று…… இதற்கு முன்பு யாரேனும் சொல்லியிருந்தால் அவன் நிச்சயம் நம்பி இருக்க மாட்டான்…… ஆனா இன்று அவன் கண் முன்னால் அனைத்தும் நிகழும்போது அவனும் தான் என்ன செய்வான்……..
மென்மையின் மொத்த உருவமாய் பெண்மையின் இலக்கணமாய் தெய்வீக அழகு நிரம்பிய……… சாந்தி தேவி தன் விழிப்பார்வை கூட உயர்த்தாது….. அந்த ஆறடி உயர ஆண்மகனை தன்னைக் கண்ட சில நொடிகளில் தன் காலடியில் முழு சரணாகதி அடைய வைத்திருந்தாள்……அதுவும் அவள் சிறிது கூட அதை அறியாமலே…….
எப்போதும் தன் தந்தையின் அதிகாரத்திலும் ஆளுமையிலும் சிக்கி மூச்சுத் திணறும் லிங்கேஸ்வரன் கூட…… அன்று அந்த மென்மையான. தேவதையை தனக்கு சொந்தமானவளாய் நிச்சயித்த தந்தைக்கு மானசீகமாக தன் நன்றியை கூறிக் கொண்டான்……..
எந்த தந்தையால் தன் வாழ்வில் வசந்தம் வந்ததோ அதே ஈஸ்வரமூர்த்தியாள் அவன் வாழ்வில் புயல் அடிக்க போவதை லிங்கேஸ்வரன் அறிந்திருக்க வாய்ப்பில்லை…….
அவர்களுக்கு சற்றும் குறையாது வசதிபடைத்த கௌரவம் நிறைந்த பணக்கார குடும்பம் அது என்றும்……. அவன் சாந்தி தேவியை திருமணம் செய்வதன் மூலமாக வரப் போகும் சொத்துக்களை பற்றியும்…… ஈஸ்வரமூர்த்தி விடாமல் எடுத்துரைத்த எதுவுமே ……. காதல் மயக்கத்தில் மொத்தமாய் மூழ்கியிருந்த லிங்கேஸ்வரன் செவியில் கூட நுழைய முடியவில்லை……. சாந்தி சாந்தி என்று அவன் மனம் பிதற்றும் மயக்கத்தில் அவன் ஆழ்ந்திருந்தான்…….
அவன் பெண் பார்த்து வந்த நாளில் இருந்து அதன் பிறகு திருமணம் நின்ற நிச்சயித்த அந்த நீண்ட ஆறு மாதங்களை…… நினைத்து நினைத்து லிங்கேஸ்வரன் கோபப்படாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு……. சாந்தி தேவி உடனான திருமணத்தை வெகு ஆவலாய் எதிர்பார்த்தவன் தன் தந்தையை எதிர்த்து பேசி எதையும் சாதிக்க முடியாது என்கிற காரணத்தால்…….. மனதின் ஆசைகள் அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டவனால் …….
அவளைப் பார்த்துப் பேசும் ஆசையை மட்டும் எப்படி முயன்றும் தணிக்க முடியாமல்……. பல நாட்கள் முயற்சி செய்து பெண் வீட்டுக்கு சொந்தமான…… அவர்களின் தோட்டப் பகுதியில் சாந்தியின் தோழி ஒருத்தியின் உதவியோடு அவளை பிடித்தான் லிங்கேஸ்வரன்…….
தன் தோழியின் நச்சரிப்பு தாளாமல் அந்தத் தோட்டத்தில் நடந்துவிட்டு வரலாம் என்று வந்த சாந்தி முன்பு சட்டென்று தோன்றிவிட்ட லிங்கேஸ்வரனால் அதிர்ந்து போய் மொத்தமாய் திகைத்து நின்று விட்டாள் அவள்……..
முகத்தில் செஞ்சாந்து போல் அப்பிய வெட்கத்தோடு அவனை நிமிர்ந்து விழியோடு விழி பார்க்க முடியாமல் அந்தப் பெண் மயில் தயங்க……. பார்த்த நாளில் இருந்து தன் கண்ணையும் கருத்தையும் மொத்தமாய் கவர்ந்த …… தன் வருங்கால மனைவியின் கரங்களை எட்டிப் பிடித்தான் அந்த அவள் மீதான ஆசைகள் ஆர்ப்பரித்து கிடந்தவன்…….
அவன் கை தன் விரல் தொட பதறிப் போய் தன் கையை உருவிக் கொண்டு சாந்தி அங்கிருந்து ஓட பார்க்க…… இரண்டே எட்டில் அவளைத் தாண்டி சென்று வழிமறித்தது போல் நின்றவன்…… சாந்தி என்னை ஞாபகம் இல்லையா….? நான்தான் எங்கே அவளுக்கு தன்னை அடையாளம் தெரியாமல் போய்விட்டதோ….. என்ற வருத்தத்தோடு தன்னை உணர்த்த அவன் முயற்சிக்க…….அதுவரை நிலம் பார்த்து இருந்தவள் அவன் குரலின் மாறுபாட்டில் துடித்துப் போய் சட்டென்று நிமிர்ந்து அவன் கண்களைப் எதிர்கொண்டாள்……..
தன்னை மொத்தமாய் உள்ளிழுத்துக் கொள்ளும் அகன்ற அந்த மீன் விழிகள் சொன்னது அவன் அவளுக்கு எத்தனை முக்கியமானவன் என்று…….. தன் மனம் கவர்ந்தவளை தானும் பாதித்திருக்கிறோம் என்ற உணர்வு ஓர் ஆண்மகனாய் அவனுக்கு பெரும் கர்வத்தையும் கம்பீரத்தையும். பிரவாகமாய் வாரிவழங்க….
.அழகான புன்னகையோடு அவளை மீண்டும் நெருங்கி…… இப்போது சற்று அழுத்தமாக அவள் கரங்களைப் பிடித்து தன் கைகளோடு பொறுத்துக்கொண்டான் லிங்கேஸ்வரன்…….மறுபடியும் அவன் செயலில் அவள் மருண்டு விழித்தாலும் பயம் படபடப்பாக உணர்ந்தாலும் ஏனோ தன் கைகளை அவன் பிடியிலிருந்து விலக்க அவள் முயற்சிக்கவில்லை……
சாந்தி….. பட்டாய் குரல் மென்மையுற அவள் பெயரை உச்சரித்தவன் அப்போதும் அவள் தன்னை காண மறுக்க….. இப்போது இன்னும் சற்று நெருங்கி அவளையும் தன் பிடியில் இழுத்தவன்…….உன்கிட்ட பேசணும்னு நான் எவ்ளோ ஆசையா இங்க வந்தேன் தெரியுமா….? நீ என்னென்ன என் முகம் கூட பாக்க மாட்டேங்கற……என்னதான் வருத்தம் போல் அவன் சொன்னாலும் கூட முன்பு குரலில் தென்பட்ட கலக்கம் இப்போது அவனிடம் இல்லை…….
முதல்ல உன்னை பெண் பார்க்க வரும்போது எனக்கு பெருசா அதுல ஈடுபாடு இல்லை எங்க அப்பாவோட கட்டாயத்தில் தான் நான் அவங்க வந்தேன்…… ஆனா உன்ன பாத்த நிமிஷம் எல்லாமே மாறிப்போச்சு…… எப்படி இது நடந்துச்சு….. எதனால நடந்துச்சு ….உன்கிட்ட எந்த விஷயம் எனக்கு பிடிக்குது. இது எதுவுமே சரியா எனக்கு சொல்ல தெரியல…….
ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம், உன்னை பார்த்த நிமிசத்திலே இருந்து இப்ப வரைக்கும் இன்னும்…… என் ஆயுட்காலம் முழுவதும் நீ மட்டும் தான் என் மனசுல மனைவியா பதிஞ்சு இருக்க எப்பவும் இருப்ப…….தன் மனம் எடுத்துரைத்தவன்
உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு எனக்குத் தெரியல சாந்தி அதை….. நீ தான் சொல்லணும் அதுவும் என் கண்ணை பார்த்து உன் மனச சொல்லணும்……. அவன். குரலில் இருந்த ஆசையோடு பிடிவாதமும் அதிகமாகவே கலந்திருக்க சிறிது நேரம்……அமைதியாக முயன்றும் அவனிடம் இருந்து அவளால் விலக முடியாமல் போக…….
மொத்தமாய் சிவந்து போய் தகதகவென்று ஜொலிக்கும் முகத்தோடு பெரும்பாடுபட்டு அவனை நிமிர்ந்து கண்ணோடு கண் பார்த்தவள்…… எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு..…. தன் மனம் சொல்லி முடித்த வேலை சாந்தியின் இதழ்கள் லிங்கேஷ்வரனின் உதடுகளால் வன்மையாய் களவாட பட்டிருந்தது……
இதுவரை இப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் உணர்ச்சியை அறிந்திராத சாந்திக்கு மயக்கமே வருவது போல்….. தலை சுற்றியது அதைவிட அதிகமாய் சரசரவென்று கோபமும் பெருக முயன்று முயற்சி செய்து தன் இதழில் இருந்து அவனைத் தள்ளிவிட்டாவள்……
தன்னை மீண்டும் நெருங்க முயன்றவனை கண்களில் வழியும் கண்ணீரோடும். தன் கரம் நீட்டி அடிக்க முயல……அவள் செயல் புரிந்தும் அவளை சற்றும் தடுக்காது நின்றிருந்த லிங்கேஸ்வரனின்…….கன்னத்தில் அருகில் சென்று தயங்கி நின்றது சாந்தியின்
கரம்…….
தன் மீது அவனுக்கு உரிமையும் உறவும் எது இருந்தாலும் கூட அவன் செயல் தவறு என்று அவள் மனம் உறுதியிட்டுக் கூற……. இருந்தும் அவனை தண்டிக்க முடியாமல் அவள் மனம் தயங்க ….. ச்சீ…. அவன் முகம் பார்த்து சொன்னவள் அங்கிருந்து விலகி ஓட முயல மீண்டும் பின்னால் இருந்து அவளை கட்டி அணைத்து தன்னோடு சிறை செய்தவன்…….
சாந்தி தயவுசெஞ்சு என்ன தப்பா நினைக்காதே நான் ஒன்னும் பெண்கள் கிட்ட தப்பா நடந்துக்கறா மோசமானவன் கிடையாது . உன்ன….. எனக்கு நிச்சயம் ஆன பொண்ணுன்னு நான் நினைக்கல என் பொண்டாட்டியாவே மனசுக்குள்ள நிறைத்து வைத்து விட்டேன்…… அதுனால தான் நீ உன் மனசை சொன்னவுடனே என்னால என்னையே அடக்கிக்க முடியல….. சாந்தி என்ன மன்னிச்சுடு அவள் உச்சந்தலையில் முகம் புதைத்து அவன் வேண்ட…….
முதல்ல என்னை விடுங்க தள்ளி நில்லுங்கள் கட்டளையாய் சொன்ன சாந்தியின் குரலில் கட்டுப்பட்டு….. அவனும் விலகி நின்று பாவமாய் அவள் முகம் பார்த்தான்……. அந்தப் பார்வையும் அவன் நின்ற நிலையும் அவள் முகத்தில் சிறு புன்னகையைத் தோற்றுவிக்க…….நீங்க பண்ணுனது பெரிய தப்பு…… அவன் மனம் புரிந்ததாலோ என்னவோ அதுவரை இருந்த…… பெரும் தயக்கமும் நடுக்கமும் அவளிடம் இருந்து விடைபெற்று சென்றிருக்க…….
தன் உரிமையானவனிடம் பேசும் அந்நியோன்னியம் அவள் குரலில் வந்திருந்தது……. அதைக் கண்டு கொண்ட லிங்கேஷ்வரனின் மனமும் அவள் மீதான சொந்தத்தில் பொங்கி ததும்பியது…….அவ்ளோ பெரிய தப்பு பண்ண உங்களுக்கு தண்டனை. இனிமேல் என்ன பார்க்க இந்த மாதிரி…… திருட்டுத்தனமா வரவே கூடாது….. உறுதியோடு சொன்னவள்….. அடுத்த நொடி தன் முகம் தாழ்த்தி குரல் குழைத்து….. அடுத்து நம்ம சந்திப்பு நம்ம திருமண நாளில் தான் நடக்கும்……. தன் உள்ளத்து ஆசை அனைத்தும் குரலில் தேக்கி சொன்ன சாந்தி தேவியின் வார்த்தைக்கு அப்படியே ஏற்று……
கட்டுப்பட்டு நடப்பதாய் வாக்களித்து வரும் நாளில் கல்யாணக் கனவோடு பிரியா விடை கொடுத்து இருவரும் தங்கள் இடத்திற்கு விலகி நடக்க ……
ஆனால்…….இனி அவர்களின் அடுத்த சந்திப்பு எப்போது என்று தெரிந்த விதியானது கோரமாய் தன் பற்களைக் காட்டி சிரித்தது…….
உயிர் துணை சேரும்………..
உன் துணை தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
அத்தியாயம்.38.1
நடந்த விஷயங்கள் கேள்விப்பட்டு உயிர் துடிக்க…. உள்ளம் வெடிக்கும் பெரும் துயரத்தோடு தன் கண்மணியை காண விரைந்தான் லிங்கேஸ்வரன்……. எப்படி…. எப்படி இது நடந்தது இறைவன் என்று ஒருவன் இருந்தால்….? மலரை விட மென்மையான பெண்ணவளுக்கு இத்தனை பெரும் துன்பத்தை கொடுக்க அவனால் எப்படி முடிந்தது……
வினாடியில், பறந்து சென்றவது துன்பக் கடலில் மூழ்கியிருக்கும் தன்னவளை தன்…… கைகளுக்குள் பொருத்திக் கொண்டு மார்போடு அணைத்து ஆறுதல் அளிக்க அவன் அங்கமெல்லாம் துடிக்க……தான் செலுத்திக்கொண்டிருக்கும் காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்…….
இன்னும் திருமணத்திற்கு இரண்டு மாதங்களே மீதி இருந்த நிலையில்…… சாந்தி தேவியின் தாயும் தந்தையும் வெளியூர் சென்று விட்டு திரும்பும் வேளையில் ஏற்பட்ட விபத்தில் மாண்டு போக……. அந்தத் தகவல் அவளுக்குத் தெரிந்த உடன் அது கொடுத்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவள் அதன் பிறகு நடந்த எதுவுமே….. ஒன்றும் உணரமுடியாத பிரம்மை பிடித்த நிலையில்……. தன் தாய் தந்தையின் சடலத்தை வெறித்துப்பார்த்தபடி தரையில் சருகாய் கிடந்தாள் சாந்தி தேவி…….
மொத்தமாய் உயிரை உருவி எடுக்கப்பட்ட வெறும் கூடு போல தன் நினைவிழந்து கிடந்த அவன் உயிரை….. அள்ளி எடுத்து தன்மடியில் போட்டு ஆற்றும் தன் அனைத்து இச்சையையும் அடக்கி……. அங்கே தன் தந்தையோடு அமர்ந்திருந்த லிங்கேஷ்வரனின் கண்கள் மட்டும் சாந்தி தேவியின் மேலிருந்து அசையக்கூட இல்லை…….. ஈஸ்வர மூர்த்தியின் வார்த்தைகளும் அவன் மூளையில் சென்று சேரவில்லை…….
ஆயிற்று அனைத்தும் முடிந்துவிட்டது தன்னை உயிராய் காத்து வளர்த்த தன் பெற்றவர்களை அவர்களின் கடைசி யாத்திரைக்கு அனுப்பிவிட்டு சூனியம் நிறைந்த அந்த வீட்டின் தரையில் மயங்கிச் சரிந்தாள் சாந்தி
……அவளின் நிலை கண்டும் ஒன்றும் செய்ய முடியாத தன் நிலையை நொந்து கொண்டே அந்த ஊர்வலத்தை பின் தொடர்ந்து சென்றான் லிங்கேஸ்வரன்…….
முழு மொத்தமாய் பைத்தியம் பிடித்த கொடூரத்தின் கோர…… நிலையில் அந்த மணவறையில் அமர்ந்திருந்தான் லிங்கேஸ்வரன்……. குறித்த நாளில் குறித்த நேரத்தில் அவன் சுற்றம் மொத்தமும் சூல மிக பிரம்மாண்டமாய் அந்த நாளில் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது……
இன்னும் சிறிது நேரத்தில் பெண்ணை அழைத்து வந்து அவன் அருகில் அமர வைத்து விடுவார்கள்……. பொங்கும் உணர்ச்சிகள் யாவும் அவனை அளவுக்கு அதிகமாய் பாதிக்க தன் முன்பு பற்றி எறியும் அந்த ஓமகுண்டத்தில் மங்கள நெருப்பையே…….. புத்தி பேதலித்த நிலையில் வெறித்துக்கொண்டிருந்தான் ……லிங்கேஸ்வரன்
இது நடக்கக் கூடாது, இது தவறு அவன் தந்தை என்னும் அந்த மனிதரின் தான் என்ற அகம்பாவத்தின்…… வால் கொண்டு வெட்டி வீழ்த்தப்பட்ட அவன் மனமும்….. காதலும் தன் கடைசித்துளி ரத்தத்தையும் சிந்தி குற்றுயிராய் கிடந்தது……
மணவறையில் அமர்ந்திருந்தவனின் அருகே மணப்பெண்ணை அழைத்து வந்து அமர வைக்க லிங்கேஷ்வரனின் உடல் மொத்தமாய் இறுகியது…….அந்த இடத்தில் அவன் பக்கத்தில் அவன் மனைவியாய் அமர வேண்டிய சாந்தி. எங்கோ அவன் கண்ணை விட்டு மறைந்து சென்றிருக்க……ஈஸ்வர மூர்த்தி அடுத்து மிகுந்த பேராசையோடு பிடித்த பெரும் பணக்கார இடத்தைச் சேர்ந்த பெண் அவனுக்கு நிச்சயிக்கப்பட….. தன்னருகில்…… அமர்ந்திருப்பவளின் ஸ்பரிசம் கூட தன்னை தொட்டு விடாது இருக்க நகர்ந்து அமர்ந்தவனின் இதயமெல்லாம் அவன் காதல் தேவியின் பிம்பங்கள்…….. மட்டுமே……
அன்று சாந்தியின் பெற்றவர்களின் இறுதி காரியம் முடித்து அவள் வீடு செல்ல முயன்றவனை தடுத்து நிறுத்திய ஈஸ்வரமூர்த்தி……இந்த நேரத்தில அவங்க வீட்டுக்கு போனா அது சரிவராது….. லிங்கேஸ்வரா……. நான் சொல்வதைக் கேட்டு என் கூட கிளம்பு அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தகவல் வந்துச்சு……..
தன் கைப்பிடியாய் மகனை இழுத்துக்கொண்டு…..அன்று அவர்கள் அரண்மனை கிளம்பிவிட்டார் ஈஸ்வரமூர்த்தி……..ஒரு தேர்ந்த வியாபாரியாய் அவர் மனம் பல கணக்குகளை மிகத் தெளிவாய் போட்டிருந்தது………மகனை எங்கும் நகர விடாமல் அவன் அன்னையின் அருகிலேயே இருக்க வைத்தவர்…….அவனின் திருமண விஷயத்தில் ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தார்…….
பணம் பணம் பணம்….. பணம் ஒன்று மட்டுமே மனிதனை பெருமைப்படுத்தும் என்பதில்….. மட்டற்ற கருத்துடைய ஈஸ்வரமூர்த்திக்கு அன்றைய நாளில் மிகுந்த செல்வந்தனாய் தெரிந்த……..சாந்தி தேவியின் தந்தையிடம் தன் மகனுக்கு அவசர அவசரமாய் பெண் பேசி முடித்தார்…..கேட்ட வரதட்சனை அனைத்தும் கொடுத்து திருமணம் செய்ய அந்த மனிதர் தயங்கும்….. போதே தான் சுதாரித்திருக்க வேண்டும் என்று இப்போது ஈஸ்வரமூர்த்தி க்கு தோன்றியது……
திருமணத்தை சீக்கிரம் முடித்து விட்டால் பிறகு ஒரு ஆறு மாதத்தில் அவர் கேட்ட அனைத்து சீர்வரிசையும்…… செய்துவிடுவதாய் சாந்தியின் தந்தை கூறியதை ஏற்க மறுத்து…. ஆறு மாதம் கழித்தே…… திருமணம் என முடிவு செய்த தன் புத்திசாலிதனத்தை 1000 ஆவது முறையாக அவரே மெச்சி கொண்டார்……..இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும்….? ஒன்றுமில்லாத வீட்டின் வெறும் பெண்ணை தன் பிள்ளை தலையில் கட்டி வைத்திருப்பார்கள் பல்லைக் கடித்தார் ஈஸ்வரமூர்த்தி……
ஏற்கனவே தொழிலில் நஷ்டம் அதில்…. இருந்த அனைத்து சொத்துக்களையும் தம்பி தங்கைக்கு வேறு பகிர்ந்து கொடுத்து விட்டு….. மீது இருந்த சொத்துக் களின் மீதும் கடன் வாங்கி வைத்திருந்த ……. சாந்தியின் தந்தைக்கு எவ்வளவு மோசமான. குறுக்கு புத்தி இருந்தால் ஒன்றுமில்லாத தன் மகளை இத்தனை பெரிய செல்வம் நிறைந்த ராஜ பரம்பரையில் கட்டிக் கொடுக்க முயற்சி செய்வார்……. அதுவும் தன்னையே ஏமாற்றி…….அவர் மனம் சாந்தியின் தந்தையை பலவாறான வார்த்தைகளின் மூலம் திட்டித் தீர்த்தது
நிச்சயம் செய்த நாளைக்குப் பிறகு அவர்களின் பணப்பற்றாக்குறை நிலை கொஞ்சம் கொஞ்சமாய் ஈஸ்வரமூர்த்தி விசாரித்து தெரிந்து கொள்ள……. முன்பு இதனை விசாரிக்காமல் விட்ட தன் மடத்தனத்தை தானே நொந்து கொண்டார்……. அவருக்கு என்னமோ தன் சம்பந்தி வீடு தன்னை ஏமாற்றி விட்டதாக முழு மொத்தமாய் தோன்றிவிட……. எப்படி திருமணத்தை நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தவரின் கையில் இப்போது சரியான வாய்ப்பு கிடைத்துவிட்டது……. அதுவும் மகன் சென்று அந்த பெண்ணை பார்க்கும் முன்பாகவே தான் எண்ணியதை செய்து முடிக்க வேண்டும்…….அவர் ஒன்றை யோசித்த பின் அதை செயல்படுத்த ஏது தடை…..??
தன் முன்பு அமர்ந்திருக்கும் ஈஸ்வரமூர்த்தி க்கு வணக்கம் சொல்லி குடிக்க முதலில் தண்ணீர் கொண்டு வந்து வைத்தாள்….. சாந்தி தேவி…… தாய் தந்தையை இழந்து இந்த ஐந்து நாட்களில்…..அவள் மனதாலும் உடலாலும் மிகுந்த அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்பட்டு இருந்தாள்……
தன் வருங்கால கணவனை சந்தித்து அவன் நெஞ்சில் தன் துயர் மொத்தத்தையும் கொட்டி கதற……வேண்டும் என்று ஆவலை மனதில் தேக்கி தன்னவனுக்காக ஒவ்வொரு நொடியும் காத்திருக்க….. ஏனோ அவன் இதுநாள் வரை வரவில்லை….. அதனாலோ என்னவோ….இப்போது வந்திருக்கும் ஈஸ்வர மூர்த்தியின் வருகை அவளுக்கு ஏன் என்று அறியாத திகிலையும் பயத்தையும் ஏற்படுத்த……
இருந்தும் தன் உபசரிப்பில் குறை வைக்காத நிறைவேற்றியவள் அவர் வார்த்தைகளுக்காக பணிந்து விலகி நின்றாள்…….க்கு…ம்…தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவர் பேச ஆரம்பித்தார்……
இங்க பாரும்மா உங்க அப்பா அம்மா இப்படி இல்லாம போனது கேட்க ரொம்ப கஷ்டமான விஷயம் தான்……அதுக்காக ஆக வேண்டியதை பார்க்காமல் இருக்க முடியாது……கடன்காரன் எல்லாம் வந்து ரொம்ப கஷ்டப்படுறாங்க லாமே……? நீயும் இருக்க எல்லா சொத்தையும் கடன்காரங்க பத்திரத்திற்கு எழுதிக் கொடுத்துட்டியாமே……?
அவர் கூர்மையாக சாந்தியை பார்த்து கேட்க ஆம் என்ற தலைப்போடு நிறுத்திக்கொண்டாள் அவள்…… ஆமா ஆமா நல்ல குடும்பத்து பொண்ணுன்னா அப்படி தான் இருக்கனும்……என்று சொல்லி நிறுத்தியவர் இப்போது தன் முகத்தில் ஒரு தீவிரத்தோடு அவளை பார்த்தவர்…….
உன்ன மாதிரி நல்ல பொண்ணுக்கு எப்பவும் நல்லது தான் நடக்கும்…..என் மகன் என்ன தான் காசு பணம் இல்லாத ஒன்னை மாதிரி வெறும் பொண்ணு கட்டிக்க மாட்டேன்னு தட்டிக் கழித்தாலும் ……. எனக்கு மனசு தாங்காம உன் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தோடு….. எங்க தோட்டத்தில வேலை செய்யிற ஒரு நல்ல பையனுக்கு உன்ன கல்யாணம் பண்ணி வைக்கலாமென நினைக்கிறேன்…. நீ என்னம்மா சொல்ற……? கேள்வியோடு அவர் நிறுத்த…..
தாய் தந்தையர் இறந்த முதல் நாள் என்றால் சாந்தியை இந்த விஷயங்கள் எப்படியோ பாதித்திருக்கும்….. ஆனால் இந்த நான்கு ஐந்து நாள்களுக்குள்…….அவள் தன் குடும்பமாய் நினைத்த சொந்தங்கள் அவளிடம் இப்போது ஒன்றும் இல்லை என்ற காரணத்தால்…. விலகி ஓடி மறைய…… அவள் தந்தைக்கு கடன் கொடுத்தவர் அவள் ஒரு பெண் என்றும் பாராமல் கடனை வசூலிக்க தீவிரமாய் முயல என்று……நடந்து கொண்டிருக்கும் அனைத்து கூத்தையும் அவளும் பார்த்தபடி தானே இருக்கிறாள்…….
இருந்தும் லிங்கேஸ்வரனின் பற்றி ஈஸ்வரமூர்த்தி கூறியது எத்தனை அளவு உண்மை என்று அவள் மனம் கேட்க……அது எப்படி இருந்தாலும் இனி….. அவர்களின் திருமணம் என்பது பகல் கனவுதான் தன் மனதோடு சொல்லிக்கொண்டவள்…… உள்ளே சூட்டுக்கோலால் கோடுஇழுத்தது போல் இதயம் மரண வேதனையில் துடிக்க……
அதற்கு நேர்மாறாக கண்களில் சுடர் விடும் தன்மானத்தின் ஒளியோடு ஈஸ்வரமூர்த்தியை பார்த்தவள்……. உங்க அனுதாபத்துக்கு ரொம்ப நன்றி….. என்ன பாத்துக்க என்னால முடியும் நீங்க போகலாம்…..வாசல் நோக்கி சாந்தி தேவியின் கை திரும்ப அவள் செய்கை அவருக்கு …..சினம் முட்டினாலும் தனக்கு தேவையானதும் கூட இது தானே…. இனி இவள் தன் மகன் இருக்கும் பக்கம் கூட தலை வைத்து படுக்க மாட்டாள்……விறுவிறுவென்று நடந்து செல்லும் அவர் முதுகையே பார்த்தபடி சிலையாக நின்றாள் சாந்தி தேவி……
தன் தந்தையின் சாகச வியூகம் அறியாத லிங்கேஸ்வரன்….. எப்படி எப்படியோ முயன்றும் தேடியும் கூட சாந்தியை….. பற்றி ஒரு சிறு தகவல் கூட இல்லாமல் போக…… தன் உயிர் காற்றை தேடுவது போல் அவன் மனம் கவர்ந்தவளை அவன் தேடி அலைய…… அதன் பிறகு வந்த ஒரு நாளில் மற்றொரு பெண் படத்தை காண்பித்து இவளைத்தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்….. அதுவும் சாந்தியுடன் நிச்சயித்த அதே திருமண நாளில் என்று அவன் தந்தை சிறிதுகூட……குற்ற உணர்ச்சி இல்லாத குரலில் அவனை திருமணத்திற்கு வற்புறுத்த……
தன் வாழ்க்கையிலேயே முதல் முறையாய் அவன் தந்தையை எதிர்த்து அவன் ஆங்காரமாய் சண்டையிட்டது அந்த நாளாகத் தான் இருக்கும்…..தன் எப்படி பேசியும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாத மகனை தன் வழிக்குக் கொண்டுவரும்…. பொருட்டு அவன் அன்னையைத் துன்புறுத்த ஆரம்பித்தார் ஈஸ்வரமூர்த்தி……… அப்போதும் மனம் மாறாமல் அவன் உறுதி காட்ட….. கடைசியாய் தாயின் மன்றங்களில் அவன் உறுதியும் காதலும் மரித்துப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது……..
அப்போதுதான் முதல் முறையாக அவன் தன் குடும்பத்தை விட்டு மனதளவில் விலகி நின்றான்……. நடந்தவை அனைத்தும் கணநேரத்தில் கண்களில் ஓடி மறைய விழியில் தோன்றிய ஒரு துளி நீர்…… கன்னத்தின் வழியாக ஓடி மறைய கடமையே என்று….. அந்த தாலிக்கயிற்றை அவன் அருகில் அமர்ந்திருக்கும் அந்த பெண்ணிற்கு கட்டினான்…..எந்தவித ஒட்டுதலும் இல்லாத அந்த பொம்மை திருமணம் நடந்தேறியது……
அவன் திருமணம் ஹேமாவதியோடு முடிந்து ஒரு வருடம் ஆகிய நிலையிலும்…. சாந்தியை தேடும் லிங்கேஸ்வரனின் தேடல் மட்டும் ஒருபோதும் நிற்கவில்லை…… எப்படி எப்படியோ தேடிக் கண்டுபிடித்து அவளின் தூரத்து சொந்தம் ஒருவரின் தொழில் நிலையத்தில் அவள் வேலை பார்ப்பதாய் கண்டுபிடித்து…. இதோ அந்த இடத்திற்கு வந்து விட்டான்……
காலையிலிருந்து உணவு நீர் கூட இல்லாமல் அந்த ஆபீஸின் முன்பே அவன் தவம் கிடக்க….அவன் வாழ்நாளில் தேடல் ஒரு வழியாய் முடிவடைந்து சாந்தி அவன் கண்களில் பட்டுவிட்டாள்…….அடுத்த நொடி சாந்தி என்ற கூவலோடு அவன் சென்று அவள் முன்பு நிற்க……ஒரு திகைத்த பார்வையோடு அவளும் சிலையாய்ச் சமைந்த நின்று விட்டாள்……
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த நிலையில் அசையாது நிற்க….. முதலில் சுதாரித்தது சாந்தி தான்…..அடுத்து வந்த நிமிடங்களில் அவன் தந்தை பேசிய ஒவ்வொன்றும் படிப்படியாய் அவள் நினைவுக்கு வர…..என்னதான் அவன் மீது எந்தத் தவறும் இருக்காது என்று மனம் கூறினாலும்……இப்போது இருக்கும் நிலையில் அவர்களின் நேசத்தை புதுப்பித்துக்கொள்ள முடியாது என்று அவள் அறிவு தெளிவாக எடுத்துரைக்க…… தன் முகத்தைக் கடுமையாக வைத்தவள் அவனைத் தாண்டி செல்ல தொடங்கினாள்……
சாந்தி பட்டென்று விலகி செல்ல அதில் ஒரு நொடி தடுமாறியவன் அடுத்த வினாடியில் அவளை…… விட வேகமாகச் சென்று அவள் கரத்தை இறுகப் பிடித்தான்…..இனி உன்னால் என்னை விட்டு விலகவே முடியாது என்பது போன்ற தன் உயிரை தன்னோடு…. பதுக்கி கொள்ளும்…… மிக மிக இறுக்கமான பிடியில்….. அவள் கரங்கள் வலித்தாலும் கூட ஏதோ ஒரு வகையில் அனாதரவாய் இருந்தவளுக்கு.….. அது ஆறுதல் அளிக்க அடுத்த நொடியில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று வடிந்தது…….
சாந்தியின் கண்ணீரைக் கண்டு துடித்தவன் அதன்பிறகு சற்றும் யோசியாது…. அவள் பின் கழுத்தோடு கரம் பதித்து தன் மார்போடு அவள் முகத்தை இறுக்கிக் கொண்டான்…… வெகுநேரம் அவள் கதறி அழ…..அவன் மௌனமாக கண்களில் தேங்கிய கண்ணீரோடு நின்றிருந்தான் அவளுக்கு தன் கரங்களால் ஆறுதல் அளித்தபடி……
அந்தக் பிரசித்தி பெற்ற கோவிலில் உற்றார் உறவினர் தாய் தந்தையர் என்று யாரும் இன்றி வெறும்….. காதலை மட்டுமே துணையாய் வைத்து நடந்தேறியது லிங்கேஸ்வரன் சாந்தி தேவியின் திருமணம்…….தன் நெஞ்சில் சாய்ந்து ஆறுதல் தேடியவள் அடுத்து வந்த நிமிடங்களில் சுதாரித்து விலகி…..அவன் முகம் காணாது அங்கிருந்து செல்லத் தொடங்க…..சாந்தி நில்லு எங்க போற…? உன்னை தேடி கண்டுபிடிக்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேனு தெரியுமா…..?
கடைசியா ஒரு தடவை என்ன பார்த்து சில வார்த்தையாவது சொல்லிட்டு போகணும்னு உனக்கு தோணவே இல்லையா சாந்தி…..? அவள் தோளை பிடித்து உலுக்கியவன்….
நீதான் என்ன தேடவில்லை. இப்போ நான் வந்துட்டே இல்ல….. இனி உன்ன விட்டுப் போக மாட்டேன்……அவளின் மீண்டும் தன்னோடு அணைக்க முயல…..
அவன் பிடியில் சிக்காமல் நகர்ந்து நின்றவள்…… போது மிஸ்டர் லிங்கேஸ்வரன் இத்தோடு நிறுத்துங்கள்…..
உங்களுக்கும் எனக்கும் இப்போ எந்த சம்பந்தமும் இல்லை…… பைத்தியக்காரத்தனமா இதுவும் செய்யாமல் இங்க இருந்து….. என்னை விட்டு விலகிப் போங்க…..
இனி எப்பவும் திரும்ப வராதீங்க….. நம்ம உறவு எப்பவோ முடிஞ்சு போச்சு…. தீர்க்கமாக சொல்லி விட்டு தன் முகம் திரும்பியவள்….. இப்போது அவனின் ஸ்…..ஆ….. என்ற சத்தம் கேட்டு திரும்ப…..
தன் வைத்திருந்த கத்தியை கொண்டு தன் கையை ஒரு முறை கிழித்திருந்தவன் மீண்டும் தன்னையே காயப் படுத்திக் கொள்ள முயன்றான்……..
தாலி கட்டி முடித்து சாந்தியோடு அவள் குடியிருக்கும் வீட்டிற்கு அவளோடு ஒரு புது வாழ்க்கைக்குள் நினைத்தவனின்….. மனத்தில் சிறிதளவு கூட குற்ற உணர்ச்சி என்பதே இல்லை……
தன்னை திருமணம் செய்ய மறுத்தவளை தற்கொலை செய்து கொள்வதாய்….. மிரட்டி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்ததில் ஆகட்டும், இல்லை….. தனக்கு ஏற்கனவே ஒருத்தியுடன் திருமணம் ஆனதை மறைத்து….. சாந்தி மறுமணம் செய்து கொண்டதும் ஆகட்டும் அவனுக்கு சிறிதும் குற்றவுணர்ச்சி என்பதே வரவில்லை……
அவன் மனதில் அந்த நிமிடங்களில் இருந்ததெல்லாம்…. தான் காதலித்தவளை தனக்கு உரிமையானவளை தன் மனைவியாய் ஆக்கிக்கொள்ளும் வெறி மட்டுமே……அதன் பிறகு வந்த ஒவ்வொரு நாட்களும் உயிராய் விரும்பி ஒன்று சேர்ந்த இருவரின்….. திருமணத்தால்…… உண்டான இனிமையோடு தேன் துளியின் தித்திப்பாய் அவர்களுக்கு இன்பம் அளிக்க…..சொர்க்கத்தின் எல்லைகளைத் தொட்டு வந்தனர் தம்பதியினர் ……
அன்று வழக்கத்திற்கும் அதிகமாய். தன் மனைவியின்…… சௌந்தர்யம் தவழும் முகத்தில் அப்பியிருந்த வெட்கத்தையும் பூரிப்பையும் பார்வை….. விளக்காது பருகிக்கொண்டிருந்த லிங்கேஸ்வரருக்கு அது எதனால் என்று நன்றாகவே புரிந்திருந்தது………முகம் முழுக்க புன்னகையும் கர்வம் சேர்ந்து கொள்ள……
தன்னைக் கடந்து சென்ற மனைவியின் கையை பிடித்து தன் புறம் இழுத்தவன்…….அவர்கள் வம்சத்தின் முதல் வாரிசை சுமக்கும் தன்னவளின் தளிர் இடையை இருக்கை கொண்டு பற்றி அவள் வயிற்றில் தன் முகம் புதைத்து…..ஆயிரம் ஆயிரம் முத்தங்களை வாரி வழங்கி தன் மகிழ்ச்சி தெரிவித்தான்……. அவன் மகிழ்ச்சிக்கு சற்றும் குறையாத உற்சாகத்தோடு……தன்னை முத்தமிட்ட கணவனின் தலையை தன் வயிற்றோடு அனைத்து அவன் உச்சந்தலைக்கு…..அந்த முத்தங்களை திரும்ப வழங்கினாள் அவன் ஆருயிர் அன்பு மனைவி…..
சாந்தியை கண்டுபிடித்து அவளைத் திருமணம் செய்து அவளோடு வாழ்ந்த இந்த ஆறு மாதகாலத்தில்….. ஒருமுறை கூட அவன் தன் வீட்டைப் பற்றியோ அங்கிருப்பவர்கள் பற்றியோ சிறிதும் நினைக்கவில்லை…… அவர்கள் இருக்குமிடம் அறிந்து அவன் தந்தை வருவதற்கு முன்னால்……அந்த ஊரை விட்டு வேறு எங்காவது கண்காணாத இடத்திற்கு சாந்தியோடு செல்லும்…. வேளையில் லிங்கேஸ்வரன் மும்முரமாக இறங்கி இருந்தான்…….
மனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் விதி என்ற ஒன்றிற்கு வேலை இன்றி போய்விடுமே…..பொய்யின் மேல் கட்டிய அவன் குடும்ப வாழ்க்கை சிதையும் நாள் மிக விரைவிலேயே வந்து சேர்ந்தது…….
அன்று லிங்கேஸ்வரன் தன் வேலை முடிந்து வீடு திரும்ப இரவாகிவிட்டது…… உடல் வலியோ வேலையின் சோர்வோ சிறிதும் பாதிக்காமல்…… சாந்தியை காணும் ஆவலோடு வந்தவனை வரவேற்றது யாரும் இல்லாத வீட்டின் வெறுமை மட்டுமே…… குழம்பிப்போனவனுக்கு ஏதோ விபரீதம் என்று உள்ளம் உணர்த்த……
எதைத் தேடுகிறோம் என்றே… தெரியாமல் வீடு முழுவதும் தேடியவனை ஏமாற்றாமல் அவனுக்கு கிடைத்தது அவன் மனைவி கடைசியாக……அவனுக்கு என்று எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்……
எப்படி யார் சொன்னது என்று ஒன்றும் குறிப்பிடாமல்…. அவனுக்கு முதலில் திருமணமான உண்மை தெரிந்து…..திருட்டு தனமாக அவனோடு குடும்பம் நடத்த விருப்பமின்றி….. கண்காணாத இடத்திற்கு செல்வதால் இனி தேட முயற்சிக்க வேண்டாம்…… ஒருவேளை அப்படி தேடி வந்தால் அவள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற வாக்கியத்தோடு முடிந்து போன அந்தக் கடிதத்தை…….
வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த லிங்கேஸ்வரன்……. அடுத்த நொடி தரையில் மண்டி இட்டு அமர்ந்து தான் ஒரு ஆண்மகன் என்பதையும்…. மறந்து தலையில் அடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தான்……
அடுத்து வந்த மூன்று நாட்களும் ஊன் உறக்கமின்றி ……. அந்த வீட்டிலேயே கிடந்தவனை நான்காவது நாள்…..கதவை உடைத்துத் திறந்து வெளிக்கொண்டு வந்தன அக்கம்பக்கத்தினர்……. அடுத்து லிங்கேஸ்வரன் கண்விழித்த போது….. அவன் படுத்திருந்த பட்டுமெத்தையின் அருகில் சுபத்ரா தேவி அமர்ந்து தன் மகனின் தலையை வருடிக் கொண்டிருந்தாள்…….
அருகில் அந்தப் பெண்…..யாரையும் பார்க்க விருப்பமின்றி மறுபடியும் அவன் விழிகள் மூடிக்கொண்டது…… மூடிய இமைகளின் வழி காட்சிகளாய் அவன் சாந்தியோடு வாழ்ந்த சொர்க்கத்தின் நாட்கள்……
மீண்டும் ஒரு தேடுதல் படலம்….. இம்முறை என்ன முயன்றும் சாந்தியை கண்டுபிடிக்க முடியாமல் போக….. நாலாபுறமும் இருள் சூழ்ந்த நிலையில் அவன் துயரத்தின் வடிகாலாய் தேர்ந்தெடுத்த……. மதுவின் துணையோடு நாட்களை கடத்தியவனின் . சித்தம் தடுமாறிய ஒரு நாள் இரவின்…… பரிசாய் அந்தப் பரம்பரையில் இரண்டாவது வாரிசு அவன் முதல் மனைவி ஹேமாவதி யின் வயிற்றில் உருவானது…….
உயிர் துணை சேரும்………
உன் துணை தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
அத்தியாயம்.39
அன்று அந்த பிரம்மாண்ட அரண்மனை தோற்றம் விழாக்கோலம் பூண்டிருந்தது…. அவர்கள் பரம்பரையின் முதல் வாரிசுக்கு அன்று நான்காவது பிறந்தநாள்…….இரவில் விளக்குகளின் அலங்காரத்தோடு தங்கநிறமாய் தகதகத்த அரண்மனையினுள்….. அதைச் சேர்ந்தவர்களின் கலகலப்பும் சந்தோஷமான குரல்களும்….. நிறைந்திருக்க ஆனால் அங்கே ஒரு ஜீவன் மட்டும் நடந்த எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல்….. தனித்து தன் உலகத்தில் துனாபபட்டு கொண்டிருந்தது……
லிங்கேஸ்வரன் தன் முன்பு விளையாடும் தன் 4 வயது மகனை வெறித்து பார்த்திருந்தான்……அவன் உள்ளத்தில் சொல்லொணாத் துயரம் நிரம்பி தொண்டையை அடைத்தது……இவனுக்கு முன்பே உதித்த அவன் முதல் வாரிசு ஆருயிர் மனைவியின் வயிற்றில் தோன்றிய அவன் முதல் மகவை…..கண்களுக்குள் கொண்டு வந்து அதற்கு கற்பனையில் உருவம் கொடுக்க அவன் முயற்சித்தான்……
தன்னைப் போன்ற உருவத்தில் சாந்தியை போன்ற அழகிய கலவையாய் ஒரு பிள்ளை செல்வம்….. பிறந்து அதற்கு இன்று ஆறு வயதுக்கு மேல் ஆகியிருக்கும்…… இந்த ஏழு வருடங்களில் அவன் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள்…….அவன் தந்தை ஈஸ்வரமூர்த்தி மாரடைப்பால் இறந்து போக அதன் பிறகு அந்த மொத்த சாம்ராஜ்யத்தையும் கட்டி ஆள வேண்டிய கடமையில்……..
தன் சுயம் மறந்து அவன் தீவிரமாய் ஈடுபட வேண்டிய கட்டாய சூழ்நிலையிலும்….. சாந்தியை தேடுவதை மட்டும் அவன் இந்த நாள் வரை நிறுத்தவில்லை……. ஒவ்வொரு நாளின் விடியலிலும் இன்று அவன் மனைவி மக்களைப் பற்றி…..ஏதேனும் ஒரு சுபச்செய்தி தன் காதில் விழுந்து விடாதா என்கிற ஆசையோடு…. விழித்து….. அந்த நாளின் முடிவில் இனி அவர்களைத்தான் பார்க்கவே முடியாதோ என்று துக்கத்தோடு முடிந்து போக மனதளவில் மிகவும் தளர்ந்து …….. தன் குடும்பத்தினரிடம் இருந்து விலகி ஒரு ஜடப்பொருளாக அவன் மாறி இருந்தான்……
எங்கோ சூனியத்தை வெறித்த படி ஒழுங்காக உடை உடுத்தாமல் தலை கலைந்து தாடியோடு இருக்கும் லிங்கேஸ்வரனை…… பார்த்த ஹேமாவதி க்கு ஆத்திரத்தில் முகமே சிவந்து ஜொலித்தது……. அந்த சாந்தி அவள் கனவனை விட்டு சென்று இத்தனை வருடமாகியும் கூட அவளால், அவள் கணவனின் பார்வையை தன் புறம் திருப்ப முடியவில்லை…….
அவள் அந்த சாந்தியிடம் தோற்றுவிட்டதாய் தோன்றியது……லிங்கேஸ்வரன்னுக்கு சாந்தியின் மீது இருந்தது காதல் என்றால்….. ஹேமா வதிக்கும் லிங்கேஸ்வரன் மீது இருந்தது காதல் போன்ற ஒரு உணர்வுதான்……
சொந்தங்களாக இருந்தாலும் வேறு வேறு ஊர்களில் வசித்ததால் அதிக முறை…. பார்த்துக் கொள்ளவில்லை என்ற சூழ்நிலையிலும்…. திருமணம் என்று வந்தபோது அவர்கள் சுற்றுவட்டாரத்தில்…….
ஹேமாவதி குடும்பத்தின் அளவிற்கு வசதியும் அதை விட….. ராஜ பரம்பரை என்ற முத்திரையும் பெற்ற லிங்கேஷ்வரனின் குடும்பம்தான் அவள் வாழத்தகுதியான இடம் என்ற முடிவிற்கு ஹேமாவதி வந்தபோது…….அவளின் ஆசைக்கு வெட்டு வைப்பதாய் வந்த செய்தி….. இன்னொரு பெண்ணுடனான லிங்கேஷ்வரனின் நிச்சயதார்த்தம்…..
நியாயமாய் மற்றொரு பெண்ணாக இருந்திருந்தால் அந்த செய்தி கேட்டு அவள் தன் ஆசையை…. அத்தோடு மறந்திருப்பாள்….. ஆனால் ஏனோ ஹேமாவதி க்கு அப்போதுதான் அவனே தன் கணவனாக வரவேண்டும் என்கிற ஆசை தீவிரமாய் எழுந்தது…….
அதன் பிறகு மகளின் தூண்டுதலின்பேரில் ஈஸ்வரமூர்த்தியிடம்….. ஹேமாவதியின் தந்தை தங்கள் சொத்தை பற்றியும் தங்கள் மகளுக்கு தங்கள் கொடுக்கப்போகும் சீர்வரிசைகள் பற்றியும் பேசி……..அவர்கள் சந்திப்பு நிகழ்ந்த நேரம் எல்லாம் பேராசையின் கோரப் பிடியில் இருந்த அந்த மனிதனின் மனதை மிக இலகுவாக மாற்றிவிட அவளால் முடிந்தது…….
முகம் தெரியாத அந்தப் பெண்ணை வெற்றி கொண்டு…… மணவறையில் லிங்கேஷ்வரனின் அருகில் ஹேமாவதி அமர்ந்தபோது….. எதையோ சாதித்து விட்ட பெரும் உற்சாகத்தோடு அவள் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தாள்…… தான் வெற்றி பெற்று விட்டதோடு ஆட்டம் முடிந்து விட்டதாய் அவள் நினைக்க…….. விதியின் விளையாட்டே அதன் பிறகு தானே ஆரம்பித்தது…….
பணத்தைக் காட்டி ஈஸ்வரமூர்த்தி யின் புத்தியை மாற்ற முடிந்த அவளால் என்ன முயன்றும்….எதைச் செய்தும் லிங்கேஷ்வரனின் கடைக்கண் பார்வையைக்கூட……தன்புறம் விழ வைக்க முடியவில்லை….. அவனை எப்படி தன் வழிக்கு கொண்டு வருவது என்று அவள் தீவிர யோசனையில் நாட்களை கழிக்க……திடீரென்று காணாமல் போன கணவன் அடுத்து வந்த பல மாதங்களுக்கு எங்கிருக்கிறான் என்று….. கூட தகவல் இல்லாமல் போக……
லிங்கேஸ்வரன் மீது அதுநாள் வரை இருந்த சிறு மயக்கமும் தீர்ந்து அவன் மீது வன்மம் மட்டுமே அவளுக்கு மீதமிருந்தது……. இந்த முறை அவள் அவனைத் தேடியது தன்னைப் புறக்கணித்து சென்ற தன் கணவன் மீதான பழிவாங்கும் உந்துதலால் மட்டுமே…….
அவளைச் சேர்ந்தவர்கள் லிங்கேஸ்வரனை தேடி அலைய ஆறு மாத அலைச்சலுக்குப் பிறகு…..அவளுக்கு கிடைத்த தகவல் ஹேமாவதியின் தலையில் இடியை இறக்குவதாய் இருந்தது….. முதல் முறையாக தான் வாழ்க்கையில் தோற்கடிக்கப்பட்டதை அவள் உணர்ந்த தருணம் அது….. அதுவும். பணமும் அதிகாரமும் எதுவும் இல்லாத ஒரு சாதாரண அன்னக்காவடி பெண்ணிடம் அவள் தோற்றுவிட்டதை ஹேமாவதியால் எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை…….
இம்முறை அவளை தான் விரட்டியடிக்கும் அடியில்…….எந்தக் காலத்திலும் அந்த சாந்தி லிங்கேஸ்வரன் இருக்கும் பக்கம் கூட திரும்பிப் பார்க்கக் கூடாது என்கிற வன்மையான வன்மத்தோடு…….ஏற்கனவே குறுக்குப் புத்தியின் உறைவிடமாய் இருக்கும் ஈஸ்வரமூர்த்தியின் துணையோடு சாந்தியை சந்திக்க கிளம்பினாள் ஹேமாவதி……
அந்த குச்சி வீட்டின் உள்ளே ஒன்றும் இல்லாத ஏழ்மை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாந்தியிடம்….. அத்தனை அழகையும் முகத்தின் தேஜசையும் ஹேமாவதி எதிர்பார்க்க வில்லை என்றே சொல்ல வேண்டும்……… அதுவும் அவள் ஐந்து மாத கருவோடு நின்ற அழகிய கோலம்……
இவள் மனதில் ஆசிட்டால் அபிஷேகம் செய்ததுபோல் தகதகவென்று ஆத்திரத்தில் எரியச்செய்ய……. அதில் தோன்றிய அகங்காரத்தோடு வேகமாய் சாந்தியை நெருங்கிச் சென்றவள் தன்னை கேள்வியாய் ஏறிட்டவளின் கன்னத்தில் ஓங்கி அறைய…….
சற்றும் சுதாரிப்பு இல்லாத அந்த நிலையில் ஹேமாவதியின் தாக்குதல் சாந்தியை நிலை குலையச் செய்ய…… தடுமாறி விழுந்தவளின் தலை அங்கிருந்த இரும்பு நாற்காலியில் நச்சென்று இடிக்க…… கண்கள் இருள தலை சுற்றிக் கொண்டு வர மயக்கத்தில் விழுந்தாள் சாந்தி……. அப்போதும் தன் கோபம் அடங்காமல் மயங்கிக் கிடந்தவளின் தலை முடியை பிடித்து மீண்டும் ஹேமாவதி அடிக்க முயல…… அவளை தடுத்தார் ஈஸ்வரமூர்த்தி…….
இதில் ஆத்திரத்தோடு செயல்படும் நேரம் அல்ல யோசித்து காய்களை நகர்த்த வேண்டிய முக்கியமான கட்டம்…….ஒருவேளை இவர்கள் சாந்தியை கொன்றுவிட்டால் அதன் பிறகு லிங்கேஷ்வரனின் கோபத்திற்கும் , பழி வெறிக்கும் அவர்கள் ஆளாக நேரிடும்…….
தந்திரம் நிறைந்த குள்ளநரியின் புத்தி கூர்மையோடு மருமகளை தடுத்தவர்……மனதில்…. அங்கு மயங்கி கிடப்பவளும் தன் மருமகள் தான் அவள் வயிற்றில் வளர்வது தன் குடும்ப வாரிசு தான் என்கிற எண்ணம் எழாமல் போனது……தலையில் பட்ட அடியில் வலி அதிகம் இருக்க முயன்ற தன்னை சுதாரித்து மயக்கத்தில் இருந்து……
எழுந்து அமர்ந்த சாந்தி இப்போதும் புரியாமல் யார் இந்த பெண் என்று பார்க்க……. அப்போது சாந்தி என்று அழைத்து ஈஸ்வரமூர்த்தி தன் மகனுக்கு நடந்த முதல் திருமணத்தையும் அவன் முதல் மனைவி ஹேமாவதி பற்றியும்….. இன்னும் தன் கற்பனையில் சேர்த்த பல விஷயங்களையும் உண்மைபோல் எடுத்துக் கூற…….
போன முறை போன்றே இப்போதும் கூட அவர்கள் லிங்கேஸ்வரனை பற்றி கூறுவதை ஏற்றுக்கொள்ள அவள் அறிவு ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும்……..அவள் கணவன் தனக்கு முன்பே மற்றொரு பெண்ணை திருமணம் செய்து இருக்கிறான் என்ற செய்தியே அவள் உயிரை உருவி ஏறிய போதுமானதாய் இருக்க……. ஒரு விரக்தி சிரிப்போடு அவர்கள் சொன்னதையெல்லாம் பதுமைபோல் செய்தவள்…….
தன் ஐந்து மாதக் கருவை சுமந்தபடி வாழ்க்கையை வாழ்வதற்கு கடைசித்துளி நம்பிக்கையை கூட கைவிட்டு நடைப்பிணம் போல் அங்கிருந்து விலகி நடந்தாள்……..
அதன் பிறகு தாங்கள் வந்த சுவடே தெரியாமல் அந்த இருவரும் சென்றுவிட ….. அடுத்து லிங்கேஸ்வரனையும் அவர்கள் தீவிரமாய் கண்காணிக்க…..சாந்தி விட்டுச் சென்ற அந்த வீட்டிலேயே மூன்று நாட்கள் உணவு நீர் கூட இன்றி மயங்கிக் கிடந்த அவனை அதே நிலையில் தங்கள் அரண்மனை கொண்டு வந்து சேர்த்தனர்……..
அப்போதுகூட ஹேமாவதியின் மனதில் அகங்காரம் அடங்க மறுத்தது……. சாந்தியின் கர்ப்பவதியான தோற்றமே அவள் கண்முன் வர…… அது அவளுக்கு வேண்டும் என்று தோன்றியது……ஒரு நாள் குடித்துவிட்டு வந்தவன் நினைவிழந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு….. அவளு தான் நினைத்ததை சாதித்து விட்டாள்…….
அனைத்தும் தன் திட்டப்படி நடந்தாலும் அன்று சென்றவள்….. இந்த நாள் வரை அவள் வாழ்க்கையில் குறுக்கிட வில்லை என்றாலும் கூட ……நிம்மதி என்கிற ஒன்று…. மட்டும் இத்தனை ஆண்டுகளில் அவளுக்கு கிட்டியதில்லை…….. கடந்த காலத்தில் அவள் நடத்தி முடித்த அத்தனை வஞ்சகத்தையும் அடுக்கடுக்காக எண்ணிப் பார்த்த படி தன் கணவனை பார்வையில் சுட்டெரித்துக் கொண்டிருந்த…… ஹேமாவதியின் கண்களுக்கு…… அரண்மனை வேலையால் வந்து போன் வருவதாய்க் கூறி அழைக்க திடீரென்று ஒரு வித பரபரப்போடு எழுந்து சென்ற லிங்கேஸ்வரன் சந்தேகத்தை விதைத்தான்…….
கண்களில் அடிக்கடி தோன்றி மறைந்த கண்ணீரை இருக்கைகளாலும் மாறி மாறி துடைத்துக் கொண்டு தன் முன்பு அந்த மருத்துவமனை கட்டிலில்…….தூசு படிந்த ஓவியமாய் கந்தல் துணியாய் தன் சௌந்தர்யம் அனைத்தும் இழந்து….. கருத்து மெலிந்து போன தோற்றத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்….. சாந்தியை பார்த்தபோது யாரோ சம்மட்டி கொண்டு அவன் இதயத்தையே இரண்டாகப் பிளந்ததுபோல் ….. உதிரம் கொட்டுக்கு கொடூரமான வலியில் லிங்கேஸ்வரன் துடிதுடித்துப்போனான்……
அவள் அருகில் அமைதியாக அமர்ந்து மற்ற சிறுவயதுப் பிள்ளைகள் போல் குதித்தோடி விளையாடாமல்….. எந்த சத்தம் எழுப்பாமல் தன் அன்னையின் வயிற்றில் புறம் கைகள் போட்டு அமைதியாய் இருந்த…… தன் மகனைக் கண்டு போது…..கோடிக்கணக்கான துப்பாக்கி குண்டுகள் ஒரே நேரத்தில் சல்லடை கண்ணாக அவன் உடலை துளைப்பது போல் தோன்றியது…….
சிறுவன் போல் தன் முன்பு நின்று அழும் அந்த ஆறடி உயர ஆணை வித்தியாசமாய் பார்த்தான் தன் அன்னையின் அருகில் அமர்ந்திருந்த சிறுவயது ருத்ர பிரதாப்……ஆனால் ஏனோ அவனிடம் ஒரு வார்த்தை கூட பேச அந்த சிறுவனுக்கு தோன்றவில்லை…….தந்தை மகன் இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று தழுவி நிற்க தந்தையின்….கண்களில் வழியும் கண்ணீர் ஏதோ ஒரு வகையில் மகனையும்…. பாதிக்க சிறுவனின் கண்களும் அவன் அறியாது கலங்கியது……
எ….ப்ப…டி டா…க்டர் இப்ப…டி ஆச்சு அவ…ளுக்கு என்ன பிரச்சனை….. இரண்டு வார்த்தைகளைக் கூட திக்கித் திணறி பேசியவனை அமைதியான முகத்தோடு பார்த்த மருத்துவர்……
இதுக்கு பதில் உங்க மனைவி தான் சொல்லனும் , எப்போதோ தலையில்… அடிபட்ட ஒரு காயம்…..அந்த இடத்தில ரொம்ப சின்ன அளவுல ரத்தம் உறைந்து இருந்திருக்கு இவங்க அப்போ கவனிக்காமல் விட்டு…….அப்புறம் ஒரு ரெண்டு மூணு வருஷத்துல அவர்களுக்கு அடிக்கடி தலைவலி மயக்கம் என்ற மாதிரி பிரச்சனைகள் வந்துட்டு இருக்கு……
நான் எப்போ இருந்து சொல்லிக்கிட்டு தான் இருக்கேன்…. இதுக்கு சரியான ட்ரீட்மென்ட் எடுக்கணும் சென்னை பக்கம் போனா சரியா இருக்கும் அப்படின்னு…….. ஆனா இவங்க அத பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவில்லை……டாக்டர் கூற…… அவரை ஒரு மன்றாடும் பார்வை பார்த்தவன்…..
ப்ளீஸ் டாக்டர் சாந்தியை எப்படியாச்சும் காப்பாத்தனும்….. அதுக்கு ஏதாவது பண்ணுங்க…. இல்லன்னா இந்த உலகத்துல வேற எங்க அவள கூட்டிட்டு போனா…. என் மனைவிக்கு குணமாகும் சொல்லுங்கள் நான் அங்க போக தயாரா இருக்கேன்…… படபடவென்று பேசியவனை கண்டு அந்த மருத்துவருக்கு பரிதாபம் தோன்ற…..அதற்காக உள்ள நிலையை மறைத்து அவரால் பொய் கூற முடியாதே…… சாந்தி உயிர் பிழைக்கும் வாய்ப்பு இனி இல்லை என்று திட்டவட்டமாக அந்த மருத்துவர் சொல்லிவிட……
அதன் பிறகு என்ன செய்வது என்று ஒன்றும் புரியாத நிலையில்…… வெகு நேரம் அமர்ந்து இருந்த லிங்கேஸ்வரன் மனதில் ஏதோ தோன்ற…… அடுத்து வந்த நேரங்களில் அவன் மனைவி பிள்ளையோடு மருத்துவமனையில் இருந்து தங்கள் அரண்மனை…. நோக்கி ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்தவனின் மனம் முழுக்க…… தன் உயிரான கண்மணியின் இறுதி நிமிடங்கள் அவர்கள் குடும்பத்தின் மருமகளாக அந்த அரண்மனையில் தான் போக வேண்டும் என்கிற உறுதியே நிறைந்திருந்தது……
தனக்கு புதிதாக கிடைத்த தந்தையோடு அவன் என்ன கூப்பிட்டும்….. கொஞ்சம்கூட அசையாமல் உறங்கிக் கொண்டிருக்கும் அன்னையோடு தன் உரிமையான அரண்மனைக்குள் நுழைந்தான் ஏழு வயது சிறுவனான ருத்ர பிரதாப்……அவ்வளவு பெரிய மாளிகையை கண்டு ஏனோ அந்த சிறுவனின் நெஞ்சில் பெரும் பயம் சூழ்ந்தது……ஒருவேளை இனி வரும் நாட்களில் துன்ப நிலை அவனுக்கு முன் கூட்டியே புரிந்து விட்டதோ……????
லேசாக கண் விழித்த சாந்திக்கு தான் எங்கிருக்கிறோம் என்று சிறிதும் புரியவில்லை கண்களை… சுழற்றி அவள் இருந்த அறையைச் சுற்றிப் பார்க்க அதன் பிரம்மாண்டமும் பண செழுமையும்… அவளுக்கு உறுதியாய் ஒன்றை உள்ளத்தில் உணர்த்த…… தான் புரிந்து கொண்ட உண்மை ஒரு நிமிடம் மனதிற்கு பெரும் நிம்மதி அளிக்க அதை விழிமூடி அனுபவித்தவள் அடுத்த நொடியில் அங்கிருந்து செல்லவே விரும்பினாள்……
தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவளின் காலைக்கட்டிக்கொண்டு அம்மா என்று அழைத்த ருத்ரனை…. ஒரு சில வினாடிகள் பார்த்திருந்தவள் அன்று….. கடைசியாய் ஈஸ்வரமூர்த்தி எச்சரித்த வார்த்தைகள் அவள் மனதில் தோன்றி பயத்தை உண்டு செய்தது……
மறுபடியும் என் மகன் வாழ்க்கைல வர முயற்சி பண்ணினா உன்ன மட்டும் இல்ல…. என் மகனோட சேர்த்து உன் வயிற்றில் வளருதே அந்தப் பிள்ளையும் மொத்தமா அழித்து விடுவேன்……வேட்டை நாயின் தீவிரத்தோடு அன்று அந்த மனிதர் சொன்ன வார்த்தைகள் இன்று அவள் காதில் கேட்க……
தன் காலைப் பிடித்து இருந்த மகனை தூக்கி மார்போடு அணைத்தவள்….. அந்த அறைகளில் இருந்து வெளியேறி வேகமாக நடந்தாள்……வேலையாட்கள் தடுத்ததை கூட அவள் சிறிதும் சட்டை செய்யவில்லை…..ஒருவன் வந்து கூற அதில் விஷயமறிந்து பதறிக் கொண்டு ஓடி வந்த லிங்கேஸ்வரன்….. பார்த்தது தன் பிள்ளையை தூக்கி கொண்டு அந்த அரண்மனையை விட்டு வெளியேறும் அவன் மனைவியை தான்……
சாந்தி என்ற கூவலோடு அவன் அவளிடம் விரைந்து செல்ல…….அவன் அவளை நெருங்கும் சமயம் பிள்ளையோடு மயக்கம் வர மகனை தரையில் இறக்கி விட்டவள்…. தானம் மொத்தமாய் நினைவிழந்து ருத்ரனின் காலடியிலேயே விழுந்தாள்…….
தன் கண் முன்னே தரையில் வேரோடு பிடுங்கி எறிந்த கொடி போல் விழுந்து கிடந்த அன்னையின் உருவம் அந்தப்…… பச்சிளம் பாலகனின் சிறு நெஞ்சில் கல்வெட்டாய் பதிந்து போக…….ஏனோ அந்த நிமிடத்தில் அந்த அரண்மனை அதில் சேர்ந்த மக்கள் அவன் தந்தை என்று அந்த மனிதர் என எவரையுமே அவனுக்கு சற்றும் பிடிக்காமல் போனது…….
தன் அன்னையின் அறையில் அமர்ந்திருந்த லிங்கேஸ்வரருக்கு அவன் இதய வீணையின் ஒளி நாதமாய்….. என்றும் வியாபித்திருக்கும் காதல் மனைவியின் எண்ணங்கள் அடுக்கடுக்காய் தோன்ற………. நான் பாவி சாந்தி நான் பாவி….. உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணி…. உன் வாழ்க்கையை கெடுத்து சீரழித்த துரோகி….. இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் எனக்கு மன்னிப்பு மட்டும் கிடைக்கவே கிடைக்காது…..மனதோடு தன் மனைவியிடம் பிதற்றினான் வாழ்க்கையை தொலைத்து விட்டு எங்கோ சூனியத்தில் தேடும் பாவப்பட்ட அந்த மனிதன்……..
அங்கே அரண்மனையில் தன் தந்தை அவன் அன்னையைப் பற்றி நினைத்து துன்பக் கடலில் மூழ்கி இருக்க…….இங்கே காரில் அமர்ந்து அரண்மனை நோக்கி பயணப் பட்டுக் கொண்டிருந்த ருத்ர பிரதாப் தூக்கத்தில் உளற ஆரம்பித்தான்……
தன் அருகில் அமர்ந்திருக்கும் கணவனிடம் அசைவும் ஏதோ முணுமுணுப்பும் கேட்க அவன் திரும்பி பார்த்த அம்ருதாவின்….. நெஞ்சில் அதே வினாடியில் சாய்ந்தவன் உதடுகள் அம்மா அம்மா என்று தூக்கத்தில் உலர ஏதோ அவளிடம்தான் தன் பாதுகாப்பு இருப்பது போல்……
மேலும் மேலும் தன் நெஞ்சில் புதையும் கணவனை விளக்க வழி தெரியாது தவித்த அம்ருதாவின் கரங்கள்…..சில நிமிட தாமதத்திற்குப் பிறகு அவன் முதுகை வளைத்து தலைமுடியை….. ஆறுதலாய் வருடி விட்டது…..
அவள் ஸ்பரிசம் தந்த எல்லையில்லா பாதுகாப்பில் அமைதியாய் அவள் மீது மொத்தமாய் படர்ந்து உறங்கிப் போனான்…… ருத்ர பிரதாப்….. அவனுக்கு நேர்மாறாய் கண்களில் தேங்கிய நீரோடு விழித்தபடி அமர்ந்திருந்தாள் அவன் மனைவி……
உயிர்த் துணை சேரும்…….
உன் துணை தேடும் என்னுயிர் by ஷர்மிளா பானு
