உன்னோடு நான்
நாயகன் : சித்தார்த்
நாயகி : ரக்க்ஷிதா
காதல் 1
ஓம் கண நாதா ஓம் கண நாதா ஓம்
கண நாதா கஜனானா
வேண்டும் வரங்களை வேண்டும் விதமாய் தந்தருள்பவனே கஜனானா
வேண்டி மிகா அழைப்பவருக்கே
விரைந்தருள்வாய்க ஜனானா
பூஜையறையில் அமரந்து கண்களில் கண்ணீர் வடிய வினைகளை தீர்க்கும் விநாயகனிடம் மனமுருக வேண்டிக்கொண்டிருந்தார் மீனாட்சி. என்றாவது தன் வேண்டுதல் பலித்துவிடும் என்ற அபார நம்பிக்கை. பூஜை முடித்து கைகள் அதன் வேலையை செய்தாலும் மனம் முழுவதும் தன் மூத்த பிள்ளையான சித்தார்த் பற்றித்தான்.
யாரையும் நெருங்க விடாமல் தனக்கென வேலி அமைத்து வாழ்பவனை நினைத்து பெற்ற மனம் துடிக்ககிறது. எப்படி இருந்த வீடு இன்று பொலிவிழந்து காணப்படுவதை நினைத்து கண்கள் கலங்கியது.இவை அனைத்தும் சீக்கிரம் சரியாக வேண்டும் என வேண்டி தன் கணவனை நாடி சென்றார்.
அங்கே படுக்கையில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த ஆதிநாதன் கண்களில் எதிர்பார்ப்புடன் சித்.. வந்தனா ? என கேட்க இல்லை என்ற பதிலே கிடைக்க மனம் சோர்ந்து போனது. தான் செய்த பாவத்தின் விளைவுதான் இப்படி கை கால்கள் செயல் இழந்து படுத்து இருக்கிறேன் என்று கலங்க மீனாட்சி சமாதானப்படுத்தி உறங்க வைத்தார்.
அம்மா ஜல்தி… கரோ… ஜல்தி… கரோ… அந்த வீடே அதிரும் வண்ணம் கத்திக்கொண்டிருந்தான் சஞ்சய். சஞ்சு இப்படி சத்தம் போட்டால் அம்மா செய்து தர மாட்டேன் என்று வளவளத்தபடி மிகப்பெரிய வீட்டினை தன் செல்ல மகனுக்காக செய்துகொண்டிருந்தாள் ரக்க்ஷிதா. அம்மா இரவே வேலையை முடிக்காமல் உறங்கியது உங்கள் தவறு ஏதோ முழுதவறும் அவள் மீதே உள்ளதுபோல் குற்றம் சாட்டிய மகனை செல்லமாக முறைத்தவாறே சரி நீயே செய்துகொள் என்றவாறு மிதப்பான பார்வை பார்க்க
எங்க அம்மா “ஆர்க்கிடெக்ட்” என பெருமையாக என் நண்பர்களிடம் கூறினேன் ஆனால் அதனை இப்போது வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் நீங்க ஆர்க்கிடெக்ட் இல்லை என்று அனைவரிடமும் கூறபோகிறேன் என்று வெளியே ஓடிவந்தவனை தாவி வந்து தூக்கிக்கொண்டான் அபிணவ் மிஸ்ரா.
அபி பாப்பா(அப்பா) என சஞ்சுவும் கட்டிக்கொள்ள தன் அன்னையை பற்றிய புகார் வாசித்தான். சஞ்சு உங்க அம்மா நேசமணியிடம் அப்பிரண்டிசா சேர்ந்து வேலை கற்றுக்கொண்டவள் அதனால் அவளுக்கு ஒன்றும் தெரியாது… பே.. பே… பெப்ப… பே… என அபி கிண்டலடிக்க அபி… உன்னை என்று பல்லை கடித்துக்கொண்டு அடிக்க வந்தவளிடம் ஆதி வாங்காமல் தப்பித்து சமலறையில் தஞ்சம் புகுந்தனர்.
டெல்லியின் ஒன் ஆப் தி பெஸ்ட் ஆர்க்கிடேக்ட் விருதுகள் பல வாங்கியவள் இன்று தன் மகன் கிண்டல் செய்வதை மனநிறைவுடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். சஞ்சய மட்டும் அவள் வாழ்வில் இல்லாமல் இருந்திருந்தால் இந்த பெயர், புகழ் ஏன் ரக்க்ஷிதா என்ற பெண் உலகத்தில் வாழாமல் போயிருப்பாள்.
பழையதை நினையாதே மனமே என நினைத்தாலும் வாழ்க்கையில் அடுத்த நிலையை அடைய உந்து சக்தியாக உள்ளதே பழைய ரணமான நினைவுகள்தான். போதிய விவரம் தெரியாத வயதில் பொல்லாத காதலால் ஏமாற்றப்பட்ட நிலையை நினைத்து இன்றும் மனம் அருவருத்து போகிறது.
“காதல்” இந்த ஒற்றை சொல் இல்லாமல் உயிர்கள் இல்லை என்கிறார்கள் ஆனால் இந்த பொல்லாக்காதல் தன் வாழ்வில் மட்டும் வசந்தத்தை வீசாமல் சூறாவளியை அல்லவா வீசியது.
ஜிட்டு (வெற்றியாளர்) சமயலறையில் இருந்து குரல் வர தன் நினைவில் இருந்து களைந்து உள் நுழைய இடியாப்பாதையும், சொதியயையும் ஒரு வெட்டு வெட்டி கொண்டிருந்தவனை பார்த்து
டேய்… நீ இதற்க்கு தான் தினமும் வீட்டிற்கு வருகிறாயா ? கோபத்துடன் கேட்க இதை கண்டுபிடிக்க உனக்கு இரண்டு வருடமாகி விட்டது. வயசான இப்படித்தான் ஆகும் போல…. இல்லமா… துணைக்கு ரட்ஷியின் தாய் அருந்ததியை கேட்க இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் ஒதுங்கிக் கொண்டார். பின்னர் அவர் தலைதான் உருளும் எதற்கு வம்பு.
சஞ்சய் இடது கையால் உண்பதை பார்த்தவுடன் பழைய நியாபகம் தலைதூக்கியது. மாமூ நீங்க லெப்ட் ஹாண்டா? ஆம்மாடி என் லட்டுக்குட்டி என்ன நான் லட்டா…. செல்ல கோபத்துடன் கேட்க பின்ன இல்லையா உன்னுடைய கன்னத்தை பார்க்கும்போதெல்லாம் எனக்கு லட்டு நியாபகமும் அத்துடன் அதை கடித்து சுவைக்க ஆசையும் எழுகிறது என்றவுடன் கடிக்கலாமே…. அப்படியா…. கண்களில் பரவசம் மின்ன கேட்க…. ம்ம்ம்…. கல்யாணத்திற்கு அப்புறம் என்றதும் அவனிற்கோ சப்பென்றானது.
மாமூ லெப்ட் ஹான்ட் எல்லாம் அறிவாளியா இருப்பாங்கலாமே, உண்மையா? யார் சொன்னது? எல்லாம் கேள்வி ஞானம் தான் அப்படி அறிவாளியாக இருந்தால் உன்னை எப்படி காதலித்து இருப்பேன் என்று கிண்டல் செய்ய
மாமூ… அவனை அடிக்க துரத்திய நினைவு பசுமையாய் வந்து தாலாட்டியது. அவன் அறிவாளிதான் நான்தான் அடிமுட்டாளாக இருந்துள்ளேன் என மனமும் முகமும் வேதனையில் சுருங்கியது.
என்ன… காலையிலேயே ட்ரீமா? உன் கம்பெனி பெயரில்தான் ட்ரீம் இருக்கு என்று நினைத்தேன் நீயும் இப்படி கனவில் அலைந்தால் என் நிலைமையை நினைத்துப்பார் என் வாழ்க்கையை உன் கையில்தான் ஒப்படைத்து இருக்கிறேன். அதில் எப்போதும் சாப்பாடு மட்டுமே வரவேண்டும் அதை தவிர்த்து வேலை, கண்ணீர் என்று எதுவும் வரக்கூடாது.
மிகவும் சீரியஸாக பேச அவனை அடித்து துவைக்கும் எண்ணம் எழுந்தாலும் சஞ்சயை பள்ளிக்கு அழசித்து செல்கிறாய் என்ற ஒரே காரணத்திற்காக உன்னை உயிரோடு விடுகிறேன்.
சஞ்சு முழுசா சந்திரமுகி ஆன உன் அம்மாவை பார் அவள் லக.. லக… சொல்வதற்கு முன் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டே அவனக்கு பள்ளிக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினர்.
இது தினம்தோறும் வீட்டில் நடப்பதுதான் கடந்த ஐந்து வருடமாக அபி இதைதான் செய்துக்கொண்டிருக்கிறான். அவளது கடந்த கால வாழ்க்கையை பற்றி அவனுக்கு தெரியாது அவளும் கூற விளையவில்லை.
ஒருவருக்கு ஆறுதல் கூறுவதாக நினைத்து பழையதை கிளறுவதை விட நிகழ்காலத்தில் அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்து கொள்ள வேண்டும் அதைத்தான் அபியும் செய்கிறான்.
ரக்ஷிதா இருபத்தைந்து வயது நிரம்பியவள். எம்.ஆர்க். படித்து டெல்லியில் “ட்ரீம் டிசைன்ஸ்” என்ற ஆர்க்கிடெக்ட் கம்பெனியை வைத்து திறம்பட நடத்துகிறாள். அப்பா ராமக்கிருஷ்ணன் தற்கொலை செய்து இறந்துவிட தன் தாயுடன் டெல்லிக்கு வந்தவளுக்கு சஞ்சய் என்ற நான்கு வயது மகன் இருக்கிறான்.
சிறிய அளவில் தொடங்கிய கம்பெனி இப்போது விருட்சமாய் வளர்ந்து பெயர் பெற்றதற்கு முதற்காரணம் ரக்க்ஷி என்றால் தவிர்க்க முடியாத மற்றொரு காரணம் அபிதான். என்னதான் விளையாட்டாக பேசினாலும் வேலை என்றால் அவன் அத்தனை நேர்த்தியுடன் செய்து முடிப்பான்.
சஞ்சய் முதன் முதலாக அபியை அப்பா என்று அழைப்பதை பார்த்து ரக்ஷிக்கு அதிர்ச்ச்சியே! அவளால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அபிதான் நம் ஊரில் சித்தப்பாவையும் அப்பா என்று அழைப்போம் தானே அப்படி வைத்துக்கொள். அவனுக்கு புரிந்துகொள்ளும் வயது வரும்போது நாம் சொல்லிக்கொள்ளலாம் என்று சமாதான படுத்திய பிறகுதான் ஒருவாறு சமாதானம் அடைந்தாள்.
இப்போது சஞ்சயிடம் கூறினாலும் அவனால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. போக போக சரியாகும் என்று விட்டு விட்டனர். சஞ்சயும் அபியிடம் தந்தையின் அன்பை விட மேலான அன்பை பெற்றுக்கொண்டிருப்பதால் தன் தந்தையை பற்றி கேட்டு தன் அன்னையை கஷ்டப்படுத்தவில்லை.
அதற்கு அபியும் ஒரு காரணம் எப்போதும் அம்மாவை கஷ்டப்படுத்த கூடாது என அன்பு கட்டளை இட்டிருந்தான்.
காலை உணவை முடித்து தன் அறைக்குள் இருந்த சிறிய அறையை திறந்து உள் நுழைந்தவளை வரவேற்றது அங்கிருந்த ஆளுயர புகைப்படம் கருநீல நிற ப்லேசர் வெள்ளை நிற சட்டை அணிந்து தன்னவளின் இடை அனைத்து மூக்கோடு மூக்கு உரசி நெற்றியில் அழுந்த முத்தமிட்டபடி நின்ற காட்சி அதனை தத்ரூபமாக இருந்தது.
எத்தனை கோபம் இருந்தாலும் ஐந்து வருடங்கள் கழிந்த பின்னும் இந்த ஒற்றை புகைப்படம் அவளை அடியோடு சாய்த்து வீழ்த்திவிடும். இப்போதும் அவன் மடி சாய்ந்து தன் ஐந்து வருட துக்கத்தையும் வேதனையையும் அழுது கரைத்துவிட மனம் எழுந்தாலும் தன்னவன் மடியும் மனமும் தனக்கு சொந்தமா? ஐந்து வருடத்தில் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்கள் போல் அவன் வாழ்க்கையிலும் நிச்சயம் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்ற எண்ணத்தோடு ” ட்ரீம் பேஷன்ஸ்” நோக்கி பயணப்பட்டாள்.
சென்னை கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மிகப்பெரிய பங்களாவில் எங்கும் நிசப்தம் நிலவியது. மாடியறையில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஆறடி உயரமும், முகத்தில் மழிக்காத தாடியும் உடற்பயிற்சியினால் விளைந்த முறுக்கேறிய உடலுமாக, உருண்டு திரண்டிருந்த தன் இரு புஜன்களை இறுக்கி தன் இரு கைகளின் விரல்களை மடக்கி “பஞ்சிங் பேக்கை” தன் ஆத்திரம், கோபம் மட்டும் குத்திக்கொண்டிருந்தான் சித்தார்த்.
யார் மீது கோபம் அவன் மீது மட்டுமே. கைக்கு கிடைத்த பொக்கிஷத்தை தவறவிட்டு கடந்த ஐந்து வருடங்களாக தேடிக்கொண்திருக்கிறான். அவனரிந்த வகையில் இன்னும் சிறிது காலம் போனால் பைத்தியம் பிடித்து விடுமோ? என்ற அச்சம் எழுந்தது.
இன்னொரு மனமோ அப்படியாவது பிடித்து தன்னவளுடன் கழித்த இனிய நினைவுகளுடன் வாழ்ந்து விட மாட்டோமோ? என மனம் துடித்தது. உயிரும் உடலும் தன்னவளின் ஸ்பரிசதிற்காக ஒவொரு அணுவும் துடிக்கிறத்தை அவள் அறிவாளா?
சித்தார்த் வயது இருபத்தி ஆறு கட்டுமான தொழில்கள் செய்து வருகிறான். வளர்ந்து வரும் இளம் தொழில் அதிபன். அப்பா ஆதிநாதன். அம்மா மீனாட்சி. தங்கை மதுமிதா. கல்லூரி முதலாமாண்டு மருத்துவம் பயில்கிறாள். தம்பி அஜய் வெளிநாட்டில் எம்பிஏ பயில்கிறான்.
தன் தந்தை விரித்த வலையில் சிக்கிய மீனாக பதின்ம வயதில் சிக்கி தன் வாழ்க்கையை இழந்து தவிக்கிறான். உண்மை அறிந்த பின்னரோ தனக்கு யாரும் வேண்டாம் என தன்னை தனிமைப்படுத்தி வனவாச வாழ்க்கை வாழ்கிறான்.
ரக்ஷிதாவை எவ்வாறு அப்புகைப்படம் உயிரோடு வைத்திருக்கிறதோ அதே புகைப்படம் தான் சித்தார்த்தையும் உயிருடன் நடமாட செய்கிறது. தன்னவளை எவ்வாரேணும் தேடி அடைவதே லட்சியம் என வாழ்கிறான் தன்னவன் முகம் கண்டதும் இந்த சூரியகாந்தி சூரியனின் பக்கம் சாயுமா? இல்லை மலரால் விலக்கி வைக்குமா?
திரிகோண சக்கரமாய் இருக்கும் இவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசுமா? காலம் தான் முடிவு சொல்ல வேண்டும்.
நான் இருப்பேன்…..
