உன்னோடு நான்…

This entry is part 2 of 4 in the series உன்னோடு நான்

உன்னோடு நான்

உன்னோடு நான்…

உன்னோடு நான்…

உன்னோடு நான்…

உன்னோடு நான்…

உன்னோடு நான்…

உன்னோடு நான்…

உன்னோடு நான்…

உன்னோடு நான்…

காதல் 2

“எஸ்ஆர் கன்ஸ்ட்ரக்சன்” பொன்னிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பத்து மாடிக் கட்டிடத்திற்குள் தன் விலை உயர்ந்த “ரோல்ஸ் ராய்ஸ்” காரில் வந்திறங்கினான் சித்தார்த். அனைவரின் வணக்கதையும் சிறு தலைஅசைப்புபுடன். ஏற்று உள்நுழைந்தவன் அழைத்தது கேசவனைத்தான். கேசவன் சித்தார்த்தின் காரியதரிசி மற்றும் அவனது வலது கை போன்றவன்.

அனுமதியுடன் உள் நுழைந்தவன் வணக்கம் செலுத்தி எஸ் பாஸ் என்றவரிடம் நான் கேட்ட டீடைல்ஸ் என்ன ஆச்சு கிடைத்து விட்டதாதா? கண்களில் சிறு எதிர்பார்ப்புடன் கேட்டான்.

ஒவ்வொரு முறையும் கேட்டு கேட்டு ஏமாற்றமடையும் தன் முதலாளியை நினைத்து மனம் வருந்த இல்லை சார்… இன்னும் ஒரு வாரத்தில் விவரம் கொடுத்துவிடுவார்கள்.


கேசவன் ஒன் வீக்கில் கிடைக்கவில்லை என்றால் நானே நேரடியாக களத்தில் இறங்கவேண்டி இருக்கும்… அதில் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற கட்டளை இருக்க நிச்சயம் சார் யூ டோன்ட் ஒரி… என்றவாறே அன்றைய பணிகளைக் பட்டியலிட தொடங்கிவிட்டான்.


சார்…. என தயங்கியவினிடம் என்ன கேசவ் ஏதாவது பிரச்சனையா? சார் சதாசிவம் வந்திருக்கிறார். ஒரு அரைமணி நேரம் கழித்து உள்ளே அனுப்புங்கள் சரி சார் கேசவன்.வெளியே சென்றுவிட….


தன்னுடைய சுழற்நாற்காலியில் சுழன்றவன் மனமோ எங்கடி இருக்கிறாய்? இந்த மாமுவை பார்க்க மனம் வரவில்லையா? அந்த அளவு என்னை வெறுத்துவிட்டாயா? சீக்கிரம் என்னிடம் வந்துவிடு நீ இல்லாமல் செத்துவிடுவேன் போலடி? மனதோடு புலம்பிக்கொண்டிருந்தவனை கலைத்தது அவனது அலைபேசிஅவன் அழைப்பது யார் எனப்பார்க்க அழைத்தது அவனது அம்மா….


ச்சே… சின்ன சலிப்புடன் அலைபேசியைத் துண்டித்தான். இவர்களைத்தான் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தாயிற்றே பின்னர் ஏன் தினமும் அழைத்து உயிரை வாங்குகிறார்கள் கோபம் அனைத்தும் அவர்கள் மீது திரும்பியது.


தன்னவள் தன்னைவிட்டு பிரிந்ததற்கு தன் குடும்பம் மட்டுமே முழுமுதற் காரணம் என்று நினைத்தவனோ இந்த ஜென்மத்தில் அவர்களை மன்னிக்க தயாரில்லை. அடுத்தடுத்த வேதனைகள் மனதை அழுத்தி அவனை நிலைகொள்ளாமல் தவிக்க வைத்தது.


கதவை தட்டும் ஓசையில் தன் நினைவில் இருந்து மீண்டவன் இத்தனை நேரம் இருந்த மனகலக்கம் நீங்கி உணர்வுகள் துடைத்து கம்பீரமாய் அமர்ந்து எஸ் கமீன் என்றான். இத்தனையும் கதவு தட்டும் இடைவெளியில் நடந்து முடிந்தது.


வெள்ளை வேஷ்டி சட்டையில் தன் பெரிய வயிற்றை தள்ளிக்கொண்டு வாயெல்லாம் பல்லாக வணக்கம் தம்பி செளக்கியங்களா ? என்றவாறே நாற்காலியில் அமர்ந்தார் கவுன்சிலர் சதாசிவம்.

சொல்லுங்கள் சார்… என்ன விஷயம் ? எந்த முகபூச்சும் இல்லாமல் நேரடியாக விஷயத்தை ஆரம்பித்த சித்தார்த்தை மெச்சுத்தலுடன் பார்த்து தம்பி எங்க ஏரியாவுல பெரிய ஹோட்டல் கட்டறதா சேதி வந்தது.


சோ… வாட்… என்ன தம்பி அப்படி கேக்கீறீங்க? எங்க ஏரியாவில் ரௌடிங்க தொல்லை அதிகம் ஏதோ கொசுத்தொல்லை அதிகம் என்பது போல் பெரியவரை நிறுத்தி என்ன பணம் வேண்டுமா?


தம்பிக்கு கற்பூர புத்தி… அதான்… மினிஸ்டர்க்கு கொடுத்தாச்சே? அது வேற தம்பி இது லோக்கல் ஓஓ… கொடுக்கவில்லை என்றால்…?  என்ன தம்பி அரசியல்வாதியை பகைச்சா  என்ன ஆகும் தெரியும்ல… அது தெரியும்போது பார்த்துக்கொள்கிறேன் இப்ப நீங்கள் போகலாம்… வாசலை நோக்கி கைகாட்ட… தம்பி இதன் பின்விளைவுகளை சந்தித்து தான் ஆக வேண்டும் அதை வரும்போது பார்த்துக்கொள்கிறேன் நீங்கள்.இப்போது போகலாம்.


நீ எப்படி ஹோட்டல் கட்டுகிறாய் என்று நானும் பார்க்கிறேன் மனதில் வஞ்சத்துடன் அவ்விடத்தை காலி செய்தார்.


தலை வலிப்பதுபோல் இருக்க தன் அறையை ஒட்டிய சிறிய அறையில் நுழைந்து அங்கு அடுக்கிவைக்கபட்டிருந்த பாட்டில்களில் ஒன்றை எடுத்து.தன் தொண்டையில் சரித்தான்.

ஆத்திரம், கோபம், இயலாமை, தன்னவளால் எப்போதும் தூண்டப்படும் தாபம் அனைத்தும் தீரும் மட்டும் குடித்தான்.


தினந்தோறும் தன்னவள் நினைவுகளில் இருந்து வெளிவரமுடியாமல் குடிப்பழக்கத்தை கையில் எடுத்தவன்  சிறிது சிறிதாக நம்பிக்கை இழந்து எங்கே தன்னவளை இழந்து விடுவோமோ ? என்ற அச்சத்தில் பகலிலும் குட்டிக்க ஆரம்பித்து விட்டான். இதில் ஆச்சர்யப்பட வைக்கும் ஒன்று அவனது தொழில் மட்டும் எவ்வித தொய்வின்றி நடப்பதுதான்.


ஒருவேளை தான் இறந்தால் தன்னை தேடி வருவாளா? இறக்கும் தருவாயில் தன்னவள் மடி சாய்ந்து கண்களை பார்த்தவாறே இறக்கவேண்டும் என்ற எண்ணம் இப்போது எல்லாம் வெகுவாக தோன்றத் தொடங்கியது.

கேசவனிடம் யாரையும் தன் அறைக்கு அனுப்ப வேண்டாம் என்றும் மீட்டிங் அனைத்தையும் மதியத்திற்கு மேல் வைத்துக்கொள்ள சொல்லிவிட்டு தன்னவள் நினைவில் கண்ணயர்ந்தான். கனவிலாவது தன்னவள் கைசேரும் பாக்கியம் கிடைக்கட்டும் என்று….

 

சஞ்சயை பள்ளியில்.விட்டுவிட்டு தன் வீட்டிற்கு வந்த அபியை உண்ண அழைத்தார் சாவித்திரி. நான் ஜிட்டு வீட்டில் சாப்பிட்டேன் அந்த காய்ந்து போன ரொட்டியை உங்கள். ஆருயிர் கணவனுக்கு கொடுங்கள் மீ.. இன்று எஸ்கேப்… என்றவாறே மேலே சென்றவனை ஏண்டா… தினமும் இதே டயலாக்கை சொல்றதுக்கு பேசாமல் அங்கேயே இருக்க வேண்டியதுதானே? அடுத்த கட்ட நடவடிக்கை அதுதான் மை ஸ்வீட் மம்மி…. உனக்காக கஷ்டப்பட்டு சமைத்து வைத்தால் இப்படித்தான் கூறுவாய் என்று அங்கலாய்க்க… அதான் நீங்களே சொல்லிடீங்களே  கஷ்டப்பட்டு சமைக்கிறேன் என்று இனிமேல் இஷ்டப்பட்டு சமைச்சு தாங்க முக்கியமாக “சௌத் இண்டியன் டிஷஸ்” ஓகே விரைவாக தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.


இவனை… எனக்கே பாடம் நடத்துகிறான். தங்கள்.அறைக்குள் நுழைய சோபாவில் அமர்ந்து கணினியில் வேலை செய்து கொண்டிருந்தார் பிரதாப் மிஸ்ரா. தன் மனைவியின் முகம் பார்த்தவுடன் கணினியை அருகில்.இருந்த வேலைப்பாடு அமைந்த மேஜையில் வைத்துவிட்டு மனைவியை மடியில்.அமர்த்தி கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு கூந்தலில் வாசம் பிடிக்க ஆரம்பித்தார்.


ஏன் பேபி… பெண்களோட கூந்தலுக்கு இயற்கையாகவே மனம் இருக்காமே உண்மையா? ம்ம்ம்… என்ற முனங்கல் மட்டுமே வர கழுத்து வளைவில் முத்தமிட்டு அணைத்தவரிடம் இருந்து மெல்ல விலகியவாறே கல்யாண வயதில் பையன் இருக்கிறான் நியாபகம் இருக்கிறதா?


அவனுக்கு கல்யாணம் பண்ணி ஹனிமூன் அனுப்புவீங்களா? இப்பதான் புது மாப்பிள்ளை மாதிரி ரொமான்ஸ் பண்றீங்க என்று குறைபட்டாலும் அவரது முகமோ வெட்கத்தில் சிவந்திருந்தது.


திருமணம் முடிந்து இத்தனை வருடங்கள் ஆன பின்னும் முகம் சிவக்கும் மனைவியை கண்டு காதல் பெருக்கெடுக்க காதலுக்கு என்னடி வயது எத்தனை வருடங்கள் கடந்தாலும் காதலுக்கு வயதாகாது. போதும் போதும் உங்க பிலாசபி சாப்பிட வாங்க… எனக்கூறி அறையை விட்டு வந்தவர் மகன் வெளிச்செல்வதை கண்டு என்னடா இவ்வளவு சீக்கிரம் ஆமாம்மா ஜிட்டு சீக்கிரம் வர சொன்னாள்.


மதுமிதா கல்லூரிக்கு அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தவளை அலைபேசி தன் இருப்பை உணர்த்த புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர யார் என்ற கேள்வியுடன் போனை ஏற்று காதில் வைத்ததும் தான் தாமதம்….

டேய் கார்த்திக் எங்கடா இருக்க? இவ்வளவு நாள் ஏன் போனை எடுக்கவில்லை? சரமாரியாக கேள்விக்கனைகளை தொடுக்க ஹாலோ என்ற ஒற்றை வார்த்தையில் எதிராளியை வீழ்த்தி இருந்தாள் மது.

சார் இது ராங்நம்பர்  நீங்க வேறு யாரோ என நினைத்து பேசுகிறீர்கள் எனக்கூற அந்த காந்தக்குரலில் ஈர்க்கப்பட்டு இன்னைக்குத்தான் சரியான நம்பருக்கு கால் செய்துள்ளேன் என்று எண்ணியவாறே உங்கள் ஸ்வீட் நேம் ப்ளீஸ்… தன் குரலை அத்தனை குழைவாக வைத்துக்கொண்டு கேட்க 


மதுவுக்கு கோபம் தலைக்கேற ம்ம்ம்… காஞ்சனா….என போனை வைத்துவிட்டு அதே கோபத்துடன் கீழிறங்கி மீனாட்சி அழைக்க அழைக்க கேட்காமல் கல்லூரி சென்றுவிட்டாள்.


“ட்ரீம் பேஷன்ஸ்” ஹாய் ஷ்யாம்… என்னைக்கு என்ன ஒர்க்? ரக்க்ஷி கேட்க

ம்ம்ம்… பக்கத்து பில்டிங்குக்கு பெயிண்ட் அடிக்கனும் போவோமோ? ஏண்டி இந்த கொலைவெறி சரி சரி ஜோக்ஸ் அப்பார்ட் ஸ்கூல் கட்டுகிற ப்ராஜெக்ட் தான். 


எங்கே உன் அல்லக்கை சியாமளா கேட்க வாட்…. இல்லை  உனது வலதுகை எங்கே என கேட்டேன் உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை 

சோறுதான்…. எல்லாரும் ஆபிசில் பைலை பத்திரம் பண்ணுவாங்க ஆனால் இங்கே சாப்பாடை பத்திரபடுத்த வேண்டியுள்ளது. ரக்க்ஷிதா மெல்லிய சிரிப்புடன் வேலையை பார்த்தாள். சோறு என்ற வார்த்தை என்ன மந்திரம் செய்ததோ சரியாக அபியும் வர இதோ வந்துட்டான் “சோத்துமூட்டை”.

அபி முகம் கொள்ளா புன்னகையுடன் வந்து நாற்காலியில் அமர்வதை பார்த்து என்னடா? லைட் எரியுது பொண்ணு யாரு?


ஜிட்டுனா ஜிட்டுதான்… அவளை கொஞ்சிக்கொண்டே இன்னையில்.இருந்து நான் கமிட்டெட்… பெருமையாக காலரை தூக்கிவிட

பொண்ணு யாருடா? ரக்க்ஷி கேட்க 


என்ன சமையல்காரியா? சியாமளா கலாய்க்க ஷியாம்…. இங்கே ஒரு கொலை விழும் நீ வந்ததே கொலை விழுந்த இடம் மாதிரிதான் இருக்கு… மேலும் கலாய்க்க… இருவரையும் சமாதானம் செய்து


பொண்ணு பெயர் என்ன?

காஞ்சனா…. ஒன்னா, டூவா, த்ரீயா… அதிமுக்கிய கேள்வியை ஷியாம் கேட்க 


ஏய் நீ தொலைஞ்சடி… அடிக்க அவளை துரத்த பேய்க்கு பேய்தாண்டா ஜோடியா கிடைக்கும்… அவனிடமிருந்து தப்பித்து வெளியே ஓடிவிட்டாள்.

சித்தார்த் தன் வீட்டின் பின்னால் அமைந்திருந்த கடற்கரை மணலில் மல்லாக்க படுத்து வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.லேசான மெகா மூட்டதுடென் இதோ உன்னைத் தொடப் போகிறேன் என ஆர்ப்பரித்துக் கொண்டே பெரிய துளிகளாக மழைத்துளி விழா அம்மழைத்துளிகள் கூட அவனது உடலின் வெம்மையை அதிகரித்ததே தவிர குறைக்க வில்லை.



இதேபோன்ற மழைநாளில் தன்னவளுடன் இரண்டரக் கலந்த நினைவு எழுந்து உடலின் ஒவ்வொரு அணுவும் தன்னவளின் அணைப்பிற்காக வெகுவாக ஏங்கத் தொடங்கியது. அந்த உடலின் மென்மையும், இறுகிய அணைப்பும் எப்போதும் காதலாய் பார்க்கும் கயல் விழிகளும் இன்னும் வேண்டும்  என நாடி நரம்பெல்லாம் பேயாட்டம் போட தன் உணர்வுகளை கட்டுப்படுத்தும் வழி அறியாமல் இருசொட்டு கணீர் மழைநீரோடோடு கலந்தது.

தன் இளமை உணர்வுகளை அறியச்செய்தவள் அவளால் மட்டுமே அதனை அணைக்க முடியும். ஆனால் தன்னவள் எங்கே? மழையும் ஓய்ந்து சிறு தூறல் போட மன்னவனுக்கு ம்ங்கையவள் நினைவு மட்டும் என்றும் அழியாத பொற் சித்திரமாய் மனதை ஆக்கிரமித்தது.

மறுமாதம் இளம் தொழில் அதிபனுக்கான விருது சித்தார்த்திற்கு அறிவிக்கப் பட்டது.  இந்த விருது அவன் வாழ்வை வண்ணமயமாக்குமா? அல்லது வண்ணக்கலவையாய் மாறி குழப்பத்தில் வீழ்த்துமா?

நான் இருப்பேன்…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *