அழகே திமிரே
அண்ணா என்று ஓடி வந்த ஷாலினியை பார்த்த சக்திக்கு நினைவுகள் 15 வருடங்கள் முன்னோக்கி சென்றது….
15 வருடங்களுக்கு முன்பு….
அரசினர் மேல்நிலை பள்ளி….
சக்தி…. பெற்றோர் இல்லாமல் அரசு உதவி தொகையில் அரசு விடுதியில் தங்கி 8ம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறான்…”
அந்த பள்ளியில் deo (district education officer) இன்ஸ்பெக்ஷன் செய்வது வழக்கம்….
“வணக்கம் சார்….”- பணிவோடு வரவேற்றர் ஹெட்மாஸ்டர்
” வணக்கம். “- பதிலுறைத்தார் deo ஆஃபீஸ்ர் சேகர்….
ஒவ்வொரு வகுப்பாக இன்ஸ்பெக்ட் செய்து கொண்டு வந்தார்…. வகுப்பில் மாணவர்களிடம் அவர்களின் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்டார்…. எல்லாம் திருப்தியாய் இருக்கவே அடுத்த வகுப்பிற்கு சென்றார்….
இப்படியாக 8ம் வகுப்பிற்குள் வந்தார் deo… அங்கே ஒரு மூலையில் எதோ கோபத்தோடு அமர்ந்திருந்தான் சக்தி..
அவனை பார்த்த deo அவனிடம் வந்தார்….
“என்ன தம்பி ஏன் நீ மட்டும் தனியா உக்காந்துருக்க…”
“——————-“-அவனிடம் பதில் ஏதும் இல்லை….
“பதில் சொல்லுப்பா…”
“——————!”= மீண்டும் அமைதி…….
அவன் வகுப்பசிரியர் கோபத்தோடு அவனை அடிக்க வந்தார்…..
“ஏன் டா எவ்ளோ பெரிய ஆஃபீஸ்ர் கேக்குறாரு பதில் பேசாம உக்காந்துருக்க அவ்ளோ திமிரா உனக்கு…..”
அவர் அப்படி நடந்து கொண்டது deo க்கு கோபத்தை தந்தது…..
“நிறுத்துங்க…! இது தான் ஸ்டுடென்ட்ஸ் கிட்ட நீங்க நடந்துக்குற முறையா….. இப்படி இருந்தா ஸ்டுடென்ட்ஸ் எப்படி உங்ககிட்ட பிரியா அப்ரோச் பண்ணுவாங்க…..”
“இவங்க எப்போதுமே இப்படி தான்…. மாசத்துல பாதி நாள் கிளாஸ்க்கு வரமாட்டாங்க….. டவுட் கேட்டாலும் சொல்ல மாட்டாங்க…. ஒரு ஸ்போர்ட்ஸ் மீட் கூட கூட்டிட்டி போக மாட்டாங்க…. ” – உட்காந்த நிலையிலேயே சொல்லி கொண்டிருந்தான்….
“தம்பி இங்க என்ன நடக்குதுன்னு சொல்லு நான் ஆக்ஷன் எடுக்குறேன்…”
அவர் கையை பிடித்து இழுத்து கொண்டு போனான்…. இது தான் சத்துணவு கூடம்…. உள்ள பாருங்க…. எல்லாமே பழசு….. புதுசால்லாம் இதோ இவர் வீட்டுக்கு…. (அங்கிருந்த ஆசிரியரை காட்டினான்.)
என் friend சரவணன்…. இவர் வீட்டுக்கு தான் போனான் வீட்டு வேல செய்ய… அவன் இப்போ எப்படி இருக்கான் தெரியுமா…… அவன் விடுதிக்கு deo வை அழைத்து சென்றான்…. அங்கே தலையில் கட்டு போட்டப்படி ஒரு மாணவன் படுத்திருந்தான்….
“இவனை இங்க கொண்டுவந்து விட்டதோட சரி… அவர் மறுபடியும் இவன் என்ன ஆனானு கூட பாக்கல… நான் தான் இவனை பாத்துக்குறேன்… காலைல இவனுக்கு சாப்பாடு குடுத்துட்டு போக கொஞ்சம் லேட்டா ஆகிட்டு அதுக்கு என்ன எப்படி அடிச்சிருக்காங்க பாருங்க… “
அவன் கட்டிய இடத்தில்…. வரிகுதிரையின் கோடுகள் போல சிகப்பு நிறத்தில் அடியின் தழும்புகள்….
“நாங்கல்லாம் அனாதை சார்…. எங்கள அடிச்சாலும். கேட்க ஆள் இல்ல… நாங்க செத்தாலும் அழ ஆள் இல்லை…”- என்று அழ ஆரம்பித்தான் சக்தி….
“தம்பி அழாதப்பா…. நீ கவலையே படாத…. நான் இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன்…. “
. தவறு செய்த ஆசிரியர் மற்றும் மேற்பர்வை இடாத தலைமை ஆசிரியர் அனைவரையும் சஸ்பெண்ட் செய்தார்…..
சக்தியையும் சரவணனையும் தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்….. அங்கே deo சேகர் மனைவி தாரணி. மற்றும் மகள் 3ம் வகுப்பு படிக்கும் ஷாலினி…..
சக்தி, சரவணன் மற்றும் அவர்களை போல ஆதரவற்றோர்களுக்காக இல்லம். ஒன்றை ஆரம்பித்தார்…. (அது தான் இப்போது தாரணி ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் இல்லமாக உள்ளது…)
சரவணன் படிப்பை முடித்து ஒரு தனியார் மென் பொருளியல் (software ) கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து இப்போது வெளி நாட்டில் செட்டில் ஆகி விட்டான்…
சக்தி அவன் வளர்ப்பு தந்தை போலவே அரசு வேலைக்கு படித்து தேர்வாகி… இன்று
சக்திவேல் IPS….. INSPECTOR OF POLICE….
நினைவுகள் ஓய….. அருகில் கட்டி கொண்டு நின்ற தங்கையை பார்த்தான் சக்தி….
“என்ன இன்ஸ்பெக்டர் சார்… திடீர்னு இவ்ளோ தூரம்…” – என்றார் தாரணி கிண்டலாக…
“என்னம்மா என் மேல செம்ம கோவமா இருக்கீங்க போல…..”
“அட உன் மேல என்னப்பா கோவம்…. ரொம்ப நாளா நீ இங்க வரலேல அதன் அம்மா கிண்டல் பண்ற….”- அவனுக்கு பதில் கொடுத்தார் சேகர்…
“கொஞ்சம் டைட் ஒர்க் ப்பா….”
“அது சரி… இந்த தங்கச்சிய விட உனக்கு ஒர்க் முக்கியமா போச்சா…. என்ன பாக்க கூட வரல நீ….” -செல்லமாக கோவித்து கொண்டாள் ஷாலினி…
“உன்ன கடைசியா பாக்கத்தான் மா வந்துருக்கேன் “
“என்ன ” – அதிர்ந்தார் தாரணி..
“கடைசி யா பாக்க தான் வந்துட்டேனேன்னு சொன்னேன் மா…”
“சரி வாப்பா சாப்பிடலாம்… நாம எல்லாம் ஒன்னா சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு…” – என்றார் சேகர்….
சக்தியும் சரி என்று சொல்ல அனைவரும் ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தார்கள்… தான் செய்ய போகும் துரோகத்தை நினைத்த சக்திக்கு ஒவ்வொரு பருக்கையும் பாரங்கல்லை விழுங்குவது போல இருந்தது…. சிரமப்பட்டு கண்ணீரை மறைத்து சிரித்து கொண்டிருந்தான்…
தனது 5 ஸ்டார் வசதி கொண்ட வீட்டில் காஸ்ட்சிலியான மதுவை அருந்தி கொண்டு தான் செய்த பழைய பாவங்களை பட்டியலிட்டு கொண்டிருந்தான் மைக்கேல்…..
மெடிக்கல் காலேஜ் அவார்ட் function…
மேடையில் இந்தியா வின் மிக பெரிய டாக்டர்ஸ் மற்றும் காலேஜ் மேனேஜ்மென்ட் HR….. மருத்துவ கல்லூரி மேலாளர்கள் அதில் ஒருவராக மைக்கல் டேனியல் …. சுகாதார துறை அமைச்சர்… எல்லாரும் அமர்ந்ததிருக்க அந்த விழா இனிதே ஆரம்பம் ஆனது…. மருத்துவ துறையில் சாதனை செய்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா…. அங்கே தொகுப்பாளாராக இருந்தாள் மருத்துவ கல்லூரி மாணவி ஸ்வேதா…..
“அடுத்ததாக…. மருத்துவ கல்வி துறையில் முதல் முறையாக… மனிதர்களின் மூலக்கூறு(DNA) அமைப்பில் ஆராய்ச்சி செய்து அதில் வெற்றி பெற்று.. மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் பன்னாட்டு மருத்து ஆராய்ச்சி மையங்களில் பாராட்டு பெற்ற நமது கல்லூரி இறுதியாண்டு மாணவர்…
Mr. Dr. முகுந்த் “……
மேடை ஏறிய முகுந்தை ஆச்சர்யமாக பார்த்தான் டேனியல்… டேனியல் கையால் விருது வழங்க பட்டது முகுத்திற்கு…..
பத்திரிக்கையாளர்கள் கேள்விகள் கேட்ட பதில் அளிக்க ஆரம்பித்தான் முகுந்த்….
“Mr. முகுத்…. உங்கள் ஆராய்ச்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்…. அதோட முக்கியத்துவத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்க…”
“எல்லாருக்கும் வணக்கம்… ஆதி மனுசனுக்கெல்லாம் ஒரே ஒருவியாதி தான் வந்துச்சி ‘மரணம் ‘……. உலகம் தொடங்கியபோது இவ்ளோ உயிர் கொல்லி நோய்கள் இருந்துச்சா…. இல்லையே… ஆன இப்போ தினம் தினம் புதுசு புதுசா இவ்வளவு வியாதி எங்கெந்து வந்துச்சி…. Invention, pollution, papulation, இது எல்லாத்துக்கும் மேல பாலிடிக்ஸ்…. வியாதிய வச்சி கூட பாலிடிக்ஸ்…. இதுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா.. மக்களோட அறியாமை.. எதை எதையோ பத்தி மணிகணக்குல விளக்கம் குடுக்குறோமே…. ஒரு டாக்டரோட பிரிஸ்கிரிப்ஷன் ல என்ன இருக்குன்னு நம்மல கண்டுபுடிக்க முடியுமா..
முடியாது…. ஏன் ன்ன அது எல்லாம் மெடிக்கல் டெர்ம்ஸ்…. எல்லா வியாதிக்குமே மருந்து உண்டு மருந்தே இல்லாத வியாதியே கிடையாது…
ஆனா இந்த மருந்து எப்படி இருக்கனும்…. வியாதி வராம பாத்துக்குறதா இருக்கணும்…. ஆனா ஒரு வியாதிக்கு எடுத்துக்குற மருந்தால உடம்புல இருக்குற இன்னொரு உறுப்பு டேமேஜ் ஆகுதுன்னா அது எப்படி மருந்தா இருக்கும்.
..
இப்போ இந்த காலகட்டத்துல ரொம்ப முக்கியமானது immunity பவர்.. அப்பல்லாம் சாப்பிடுற சாப்பிட்டுலயே. அது கிடைக்கும்… ஆனா இப்போ சத்துக்கு தனியா மாத்திரை போடுற அளவுக்கு மனுசங்களுக்கு immunity பவர் குறஞ்சிகிட்டே வருது…. அதனால தன் இன்னைக்கு சாதாரண சளி ஜுரத்தை கூட பாத்து பயந்து ஓடிட்டு இருக்கோம்…..
என்னோட ஆராய்ச்சி மனுசங்களோட DNAவை தூண்டிவிட்டு immunity பவர் ah இன்க்கிரிஸ் பண்றது தான்….. இது மூலமா எல்லா கிரானிக்கல் டிசீஸ் அண்ட் கேன்சர் மாதிரி உயிர் கொல்லி நோய்களையும் களை எடுக்கணும்…. அது தான் என் இலட்சியம்….. நன்றி… “
எல்லாத்தையும் யோசிச்சி விட்டு கையில் மீதமிருந்த மதுவை குடுத்தான் மைக்கேல்….
“சார்….”- வந்து நின்றான் அவன் உதவியாளன்…
“ம்ம்….”
“நீங்க கேட்ட பொண்ணோட டீடெயில்ஸ்….”- அந்த கவரை நீட்டினான்….
கவரை பிரித்து பார்த்தான் மைக்கேல்….. உள்ளே ஷாலினியின் புகைப்படம்….
“இவ எங்க இருந்தாலும் இன்னைக்கு ஈவ்னிக்குள்ள இங்க இருக்கணும்…”
அழகான மாலை பொழுது….
மனதில் நிறைய ஆசைகளுடன் கையில் அழகான ரோஜா போக்கேவுடன் தனது பைக்கில் அமர்ந்து ஷாலினிக்காக காத்திருந்தான் கார்த்திக்….
ஒரு புறம் சக்தி,முகுந்த் ஷாலினியின் வருகைக்காக அந்த பஸ் ஸ்டாபிற்கு எதிர்புறம் உள்ள மரத்தின் பின்னால் மறைந்து காத்திருந்தனார்…..
இன்னோர் புறம் அதே பஸ் ஸ்டாண்ட் டில் மைக்கேல்ளுடைய ஆட்கள் ஷாலினியின் புகைபடத்தோடு அங்கும் இங்கும் அலைந்து தேடி கொண்டிருந்தார்கள்…..
இவ்வளவு ஆபத்துகளுக்கு மத்தியில்… வெள்ளை நிற சுடிதாரில் வானத்து தேவதையே இறங்கி வந்தது போல…. வந்து கொண்டிருந்தாள் ஷாலினி…..
சக்தி அவளை கண்டதும் முகுத்திற்கு சைகை செய்தான்….
அவளை தேடி கொண்டிருந்த ஆட்களில் ஒருவன் அவளை பார்த்து விட்டு மற்றொருவனுக்கு இவள் தான் என்பதுபோல காட்டி கொண்டிருந்தான்….
கார்த்திக்… முகம் முழுக்க சந்தோசத்தோடு ஷாலினியை நோக்கி நடந்தான்….
அவன் ஷாலினியை நெருங்குவதற்கும்….
“சரக்…… சரக்…..!!!!”- ஷாலினியும் வயிற்றில் கத்தியை இறக்கியது அந்த பர்தா போட்ட உருவம்…
