அழகே திமிரே
விஜய் RVR மருத்துவமனையை வந்து அடைந்தான்…. அவசர அவசரமாக ICU வார்டு நோக்கி ஓடினான்…. அவனது அவசரத்தில் எதிரே வந்தவனை கவனிக்க தவறினான்…..அவன் எதிரே முகுந்த் நிதானமாக கடந்து சென்றான்……
. ICU வில் நுழைந்த விஜய் இறந்து போன பரந்தாமனையே பார்க்க நேர்ந்தது…. அவனுக்கு பின் சாவகாசமாய் வந்தான் தீனா…..
“என்ன மச்சான் முடிஞ்சிட்டு போல….”
“டேய் கடுப்பேத்தாத…”
“ஓகே நெஸ்ட் என்ன ஃபார்மாலிட்டிஸ் தானே..”
என்று அந்த கட்டிலின் விளிம்பில் அமர்ந்து தன் வாக்கி டாக்கியை கட்டிலின் விளிம்பில் வைத்தான்.
“டேய் எரங்குடா…. உனக்கு எல்லாம் விளையாட்டா இருக்குல்ல….. போடா போய் ஸ்டாப்ஸ்…. Cctv எல்லா பார்மலிட்டிசும் பாரு….”- தான் இவ்வளவு முயன்றும் கொலைகாரன் வென்றதை விஜய்யால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை…. தன் கோபத்தை தீனா மீது காட்டினான்..
“இதுக்கெல்லாம் அசருற ஆளா நான்.”… என்பது போல அசால்ட்டாக இறங்கி சென்றான் தீனா…. இறங்கும் வேகத்தில் அந்த வாக்கி- டாக்கியை தவறுதலாக தட்டிவிட்டான்….
“சாரி மாப்ள…. எடுத்துக்கோ…” – என்று அவன் பதிலை கூட எதிர்பாராமல் ஹாஸ்பிடல் ஸ்டாப்ஸ் தேடி சென்றான் தீனா….
“இவனை வச்சிக்கிட்டு….” என்று தலையிலேயே அடித்துக்கொண்டு குனிந்து அந்த வாக்கி – டாக்கியை எடுத்தான் விஜய்… அந்த கட்டிலின் அடியில் காலியான மருந்து பாட்டில் கிடந்தது…..
ஒரு பிரைவேட் ரன்வே…… அங்கே கோர்ட்சுட்டுடன் 5,6 பேர் கையில் போக்கேவுடன் காத்திருந்தனர்…..
அந்த பிரைவேட் aircraft வந்தது அதிலிருந்து 45 வயது மதிக்க தக்க ஒரு மனிதர் கோர்ட் சுட்டுடன் வந்து இறங்கினார்……. டாக்டர் மைக்கல் டேனியல்….
இவர்கள் அனைவரும் அவரை வரவேற்று போக்கேவை கொடுக்க வாங்கி தன் செக்யூரிட்டியாக வந்திருந்த அந்த வெள்ளையனிடம் கொடுத்தார்…. மரியாதை நிமித்தம் அனைவரிடம் இன்முகம் கொடுத்து பேசிவிட்டு… தன் செக்கிரேட்டரியுடன் தனது காஸ்டலியான BMW காரில் ஏறினார்….
. காரில் ஏறிய அடுத்த நொடி அவன் முகம் மிக கொடூரமாக மாறியது…..
“What the hell is going on here.?? ரெண்டு மர்டர் அதும் நம்ம ஹாஸ்பிடல் ல… ஹாஸ்பிடல் லோட ரேபிடேஷன் என்ன ஆகுறது… You know how many corers inverse to these ஹாஸ்பிடல்ஸ்…??? இந்த ரேபிடேஷன் போய்டுச்சுன்னா மொத்தமா எல்லாமே போய்டும்… அதிக பணம் குடுத்தா தான் அதிக நாள் உயிர் வாழ முடியுங்குற நம்பிக்கை ஜெனங்களுக்கு இருக்குற வரைக்கும் தான் நீயும் நானும் இப்படி வசதியா வாழ முடியும்… அது போச்சுன்னா 5க்கும் 10கும் பில் கிழிக்க வேண்டியது தான்…. “
இவனுடையை கோபத்திற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவித்தான் உதவியாளன்…..
“Who are the victim….???”-,மீண்டும் அவனே தொடர்ந்தான்…
“சார் இண்டஸ்ட்ரிஸ்ட் புருஷோத்தமன் அண்ட் சீனியர் லாயர் பரந்தாமன்…” -என்றான் செக்கிரேட்டரி
“வாட்..?”- அந்த இரண்டு பெயர்களையும் கேட்ட அவனுக்கு இந்த ஏசி காரிலும் வியர்க்க ஆரம்பித்தது…..
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி 4 நாட்கள் ஆனது வேறு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தான் கார்த்திக்… மகன் வீட்டிலேயே இருந்தாலும் அந்த பாழாய்போன போதை பழக்கம் இல்லாமல் இருப்பது நிம்மதியாய் இருந்தது கார்த்திக்கின் அம்மாவிற்கு….
ஆனால் கார்த்திக்கின் நிலை வேறாக இருந்தது… திடிரென்று போதை பழக்கத்தை நிறுத்தியதால் கை நடுக்கம் தலைவலி… தேவை இல்லாத கற்பனை… கோபம் எல்லாமே அவனுள் வர.. முதல்முறையாக தன் அன்னையின் மகிழ்ச்சிக்காக அதனை எல்லாம் வெளிகட்டாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தான்…
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல்… “இன்னைக்கு மட்டும் நாளைலேந்து வேண்டாம் ” என்ற முடிவுக்கு வந்து கை நடுக்கதோடு தன் சட்டையை எடுத்து போட்டான்… வெளியே அவனுக்காக அடுப்படியில் சமைத்து கொண்டிருந்த அம்மாவிடம்… நண்பர்களை பார்க்க போவதாக பொய் சொன்னான்… அது அவனுக்கே சங்கடமாக இருந்தது..
அவசர அவசரமாக வெளியே வந்தான்…. வந்தவனை….
“இவ்ளோ பாஸ்ட் ah எங்க போற கார்த்திக்…?”- என்ற ஷாலினியின் குரல் தடுத்தது…. திரும்பிய அவனுக்கு தனது ஸ்கூடியில் கையை கட்டி கொண்டு நின்ற ஷாலினியை பார்த்ததும் அதிர்ச்சி…. அதே நேரம் அவமானமாகவும் இருந்தது….
“மறுபடியும் அந்த போதையை தேடி போறியா…???”
பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றான் கார்த்திக்…
“சொல்லு கார்த்திக்..”
“என்னால முடியல ஷாலினி… இன்னைக்கு ஒரு நாள் மட்டும்… நாளைலேந்து கண்டிப்பா விட்டுடுறேன்….”
“இன்னைக்கு உன்னால முடியாத விஷயத்த நாளைக்கு எப்படி செய்வ கார்த்திக்…”
“ஷாலினி புரிஞ்சிக்க… இந்த போதைல நான் 2 வருஷம் இருந்துருக்கேன் இப்படி திடீர்னு வெளிய வர முடியாது….”
“உனக்கு என்ன போதை தானே வேணும் என் கூடவா நான் கூட்டிட்டு போறேன்…”
.
தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள் வேறு வழியின்றி அவனும் பின்னால் ஏற…. அவர்கள் வந்து நின்ற இடம்…. தாரணி ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் இல்லம்…
பெயர் பலகையை பார்த்தவனுக்கு எதுவுமே புரியவில்லை….
“இறங்கு கார்த்திக்…”
“இங்க எதுக்கு ஷாலு..”
“போதை வேணும்ன்னு கேட்டல உள்ளவா…”
உள்ளே செல்ல அது ஒரு புது சூழ்நிலையாக இருந்தது கார்த்திக்கிற்கு….
அனைவரும் ஷாலினியிடம் உரிமையாகவும் அன்பாகவும் நடந்து கொண்டனர்… கார்த்திக்கை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்…. புதிதாய் வந்தவன் என்று கருத்தாமல் அனைவரும் கார்த்திக்கை…. பேரனாக, மகனாக, அண்ணாக, தம்பியாக, நண்பனாக ஏற்றுக்கொண்டர்கள்… கார்த்திக்கிற்கு ஆச்சர்யமாக இருந்தது….
“ஷாலு என்ன இவங்க இப்போ தான் பாக்குறாங்க அதுக்குள்ள எப்படி இவ்ளோ உரிமையா பழகுறாங்க… இப்படியும் வாழ முடியுமா…”
” அன்பு மட்டுமே இருக்குற இடம் கார்த்திக் இது…. நீ எடுத்துக்குற போதைக்கு எவ்ளோ வேலை குடுப்ப 5000 ₹இல்லை 10000₹ நீ எவ்ளோ விலை குடுத்தாலும் கிடைக்காத ராஜபோதை ஒன்னு இருக்கு ‘ பாசம் ‘ அனுபவிச்சு பாரு வேற போதையே உனக்கு தேவப்படாது.. உனக்கு எப்பல்லாம் அந்த போதை தேவைப்படுதோ அப்போல்லாம் இங்க வா….இந்த போதை உன்ன எப்படி மாத்துதுன்னு மட்டும் பாரு…… “
. ஆசிரம கிரௌண்டில் இருவரும் பேசிக்கொண்டு போகையில் ஒரு கிரிக்கெட் பால் வந்து கார்த்திக் மீது விழுந்தது..
“அண்ணா அந்த பால் கொஞ்ச போடுறிங்களா என்று வந்தான் அந்த சிறுவன்…”
பாலை கையில் எடுத்து பார்த்தான் கார்த்திக்.. ஷாலினியை ஒரு பார்வை பார்த்தான்.. ‘போ’ என்பது போல கண்களாலே சைகை செய்தாள் ஷாலினி…. கார்த்திக்கும் அந்த சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட தொடங்கினான்… மீண்டும் அவன் வாழ்வு மலர ஆரம்பித்தது…..
முகுந்த் வீடு…
“அந்த மூணாவது ஆள் பத்தி இன்னுமா டீடெயில்ஸ் கிடைக்கல…. சக்தி….” – கோபமாக கத்தினான் முகுந்த்…
“ஸ்வேதா டீடெயில்ஸ் கொண்டு வரேன்னு சொல்லிருக்கா. கொஞ்சம் வெயிட் பண்ணுடா முகுந்த்….”
அவர்கள் பேசி கொண்டிருந்த நேரம் ஸ்வேதாவின் ஸ்கூட்டி அந்த வீட்டின் வாசலில் வந்து நின்றது…..
‘வந்துட்டா ‘ என்று கண்களாலே சொன்னான் சக்தி….
“என்ன ஸ்வேதா இவ்ளோ லேட்டா “- என்றான் முகுந்த்….
“சாரி பா… டீடெயில்ஸ் கிடைக்க லேட்டா ஆகிடுச்சு…”
“சரி குடு….”
அந்த ஃபையிலை வாங்கி பார்த்தான்…. அவன் கொல்ல வேண்டிய அந்த மூன்றாவது நபரை… முதல் இரண்டு காகிதங்கள் தாண்டி மூன்றாம் காகிதத்தில் ஒட்டப்பட்டிருந்தது “ஷாலினியின் “புகைப்படம்…..
