அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு
கல்லூரியிலிருந்து வீடு வந்த கதிர் நிலாவைத் தேடினான்… நிலா வந்தவுடன் அவளை விசாரிக்க ஆரம்பித்தான்… உங்க காலேஜ்ல என்னடி பண்ணி வச்ச நீ வரதுக்கு முன்னாடியே என்கிட்ட செய்தி வந்துட்டு…
நிலாவோ பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள்…
இப்போ பதில் சொல்றியா என்ன?
அதுவா அந்த சொட்டைத்தலையன் எப்பவும் நான் எடுத்த தலைப்பை குறையா சொல்லிட்டிருந்தாரா…அதான்…
அவருக்கிட்ட கேட்டேன்…
என்னக்கேட்ட அவருக்கிட்ட?
உங்களுக்கு யாரு பி.எச்.டி பட்டம் கொடுத்தானுக் கேட்டேன்…அப்புறம் முதல்ல தலைப்பு காண்பித்து, எல்லாம் சரின்னு சொல்லும்போது கண்ணாடி மறந்து வீட்டுல வச்சுட்டு படிச்சுசொன்னீங்களானுக் கேட்டேன்…
அறிவு இருக்கா இப்படி பேசினா உன்னோடு தீசிஸ்க்கு உதவி பண்ண மாட்டாங்க.. பி. எச் .டி. முடிக்கவிடமாட்டாங்க..தெரியுமா உனக்கு..என்று தலையில் கைவைத்தான்…
போங்க மாம்ஸ்.. இதுக்கு தான் சொன்னேன் நம்ம காலேஜிலயே பிஎச்டி பண்றேன் நீங்க தான் கேட்கல.. இந்த சொட்ட மண்ட எல்லாம் என்ன கலாய்க்கிறார் …நான் என்னப் பண்றது என்றுக் கேட்டதும்..கதிர் கொஞ்சம் சமாதானமாகி இருந்தான்…
நிலாப்பஞ்சாயத்து முடிந்து, அவனுக்கு டீ போட்டுக் கொடுத்தவள் அவனருகிலயே அமர…
கதிரின் சீமந்தபுத்திரன் அடுத்த பஞ்சாயத்தோடு வந்தான்…
இப்போது வேதா பள்ளி விட்டு வீட்டுக்கு திரும்பி இருந்தான்; சித்ரா அவனை அழைத்து வந்திருந்தார்.
அவன் அழுதுகொண்டே வந்து, கதிரின் அருகில் இருந்தவன்… நான் இனி ஸ்கூலுக்கு போக மாட்டேன்..டீச்சர் காதை திருகிட்டாங்க என்று அழுது கொண்டிருந்தான்…
சித்ரா பேரன் அழுவதை கண்டு.. என்னன்னு கேழுயா…வர்ற வழியிலயே ஒரே அழுகை … அப்படின்னு சொல்லவும்….
கதிர் விசாரிக்க அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்…நிலாவோ மெதுவாக எழுந்து இனி இங்கயிருந்தா சரிவராது என்று சமயலறைக்குள் புகுந்துக்கொண்டாள்…
கதிர் வேதாவை எடுத்து தன் மடியில் வைத்து அவன் தலையை கோதி விட்டுக் கொண்டிருந்தான்.. என்னாச்சு எதுக்கு ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சொல்லுற என்று மகனை விசாரிக்க.. அவன் பதில் சொல்லாமல் அழவும் …
இப்போது கதிர் நிலா என்று சத்தமாக கூப்பிட தன் மகன் ஏதோ செய்து வைத்துவிட்டான் என்று ஓடி வந்து நின்றாள் …
கதிரோ முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். இதை கண்ட நிலா மெதுவாக கண்களால் மகனிடம் என்னவென்று கேட்க ,வேதாவும் அவளது தகப்பனை கண்களால் சுட்டிக்காட்டினான்…
என்ன அம்மாவும் மகனும் கண்களாலே பேசுறீங்க.. அவன்கிட்ட என்ன என்று விசாரித்து கேளு…எதுக்கு ஸ்கூலுக்கு போக மாட்டேனு சொல்றானுக் கேளு…
நிலாவோ குனிந்து வேதா விடம் கேட்டாள் என்னமா நடந்துச்சு? என்று. அவனோ மீண்டும் அழ தொடங்கினான்…டீச்சர் என்னை அடிச்சுட்டாங்க நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று.
நிலாவை முறைத்து பார்த்தவன்…உன்னை மாதிரியே வளர்த்து வச்சிருக்க என்று கோபத்தில் தனது அறைக்குள் சென்று விட்டான்…
சித்ராவும் நிலாவும் வேதாவை மெதுவாக சமாதனப்படுத்தி அவனுக்கு சாப்பாடு ஊட்டி அவனிடம் கதைகளை கேட்க ஆரம்பித்தனர் வேதாவும் மெதுவாக தன் மழலை மொழியில் பள்ளியில் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறியிருந்தான் அதை கேட்டு மாமியாரும் மருமகளும் வாய்விட்டு சிரித்தனர்…
அதாவது வகுப்பில் துக்கத்திற்கான நேரத்தில் நன்றாக தூங்கிட்டிருந்த ஒரு பையனின் காதில் சிங்கம் கத்துவதுப்போல கத்த அந்த பையன் அலறி அடித்துக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியே ஓடியிருக்கான்…அந்தப் பையனை சமாதனப்படுத்த முடியாமல் ஆசிரியர் திண்டாட வகுப்பில் பிள்ளைகள் எல்லோரும் சிரித்திருக்கின்றனர்…அதுதான் ஆசிரியர் காதைப்பிடித்து திருகி…அப்பாவைக் கூட்டிட்டுவரச் சொல்லிருககாங்க என்றான்…
மகனை தூங்க வைத்துவிட்டு மெதுவாக தனது அறைக்குள் நுழைந்த நிலாவோ கதிரின் அருகில் அமர்ந்து “வர வர இந்த மீசைக்கார மாமாவுக்கு ரொம்ப கோபம் வருது, சின்னவன் கிட்டயே ஏன் அவ்வளவு கோபப்பட்டீங்க என்று கேட்டாள்…
அது இல்லைடி “நான் அப்பாவுக்கு பிடித்த பிள்ளையா நடந்தேன்…ஆனா இவனை பாரு எல்லா இடத்துலயும் சேட்டைக்காரன்னு பெயர் வாங்கிட்டு வரான்” என்றுக் கவலைப்பட்டான்.
இப்பவே அவன அதை செய்யாதே இதை செய்யாதே என்று கட்டுப்படுத்தக்கூடாது, வளரும்போது சரியாயிடுவான் நீங்க எதுக்கும் டென்ஷன் ஆகாதிங்க…அப்படியே நிலா பேச்சை மாற்றி இருந்தாள்
நாளைக்கு ஊருக்கு போகணும் என்ன எல்லாம் எடுத்து வைக்கணும்… சொல்லுங்க எத்தனை நாள் அங்கு தங்கபோறோம் என்று நிலா கேட்டதும், ஒரு மூணு நாளைக்கு தங்க தங்க போறோம் அதுக்கு தேவையானது எல்லாம் எடுத்து வை என்று சொல்லி அவன் அப்படியே படுத்து விட்டான்…மெதுவாக மகனின் சேட்டையையும் சொல்ல…சிரித்தவன்…உன்னையும் மாத்தமுடியாது உன் பையனையும் மாத்தமுடியாது… அடுத்தப்பிஅளளை பெண்பிள்ளையா பிறந்து என்னைய மாதிரி சமத்தா இருக்கணும் கடவளே என்று வேண்டினான்…
ரொம்ப பண்றீங்க மாம்ஸ் அடுத்த பாப்பா பிறந்தா அவ என்னைவிட சேட்டை பண்ணப்போறா என்றதும்..
அவளது வாயைப் பொத்தியவன்..இந்தக் கதிர் தாங்கிக்கமாட்டான்மா…வேண்டாம் படுத்து தூங்கி என்று சொன்னவன்..அவளையும் சேர்த்திழுத்துப் படுத்துக்கொண்டான்
அடுத்த நாள் காலையில் நான்கு பேரும் கிளம்பி மதுரைக்கு சென்று சேர்ந்தனர்.
அங்கு சென்று திருவிழாவில் கலந்து கொண்டனர்.. கோவிலில் வேதநாயகத்திற்கு கொடுக்கக்கூடிய சிறப்பு மாரியாதை… அதை கதிருக்கு கொடுத்தனர்.
கதிருக்கு அவன் பிறந்த ஊரை ரொம்ப பிடிக்கும் அவனுடைய வாழ்க்கை இங்கேயே இருக்கணும் என்று ஆசைப்பட்டான். ஆனால் வாழ்க்கையோ அவனுக்கு வேறு விதமாக அமைந்திருந்தது.
கதிரின் மகனோ அந்த ஊரில் ஒரு இடம் விடாமல் சுற்றித் திரிந்தான்…அந்த இயற்கை சூழலும் அந்த ஊரும் அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது… தன் தகப்பனைப் போல அவனுக்கும் அந்த ஊர் சிறந்ததாகவே இருந்தது…
ஊருக்கு கிளம்பி வரும்போது சித்ரா வீட்டின் பின் பக்கம் இருந்த தோட்டத்திற்கு சென்று, பூக்களை பறித்து தொடுத்து நிலாவிற்கு வைத்துவிட்டார் எப்போதும் போல இப்போதும்… நிலாவிற்கு இருந்த கொஞ்ச நஞ்ச மன சஞ்சலங்களும் நீங்கிவிட்டது.
கதிரின் அத்தை மக்களும் தங்களது பகையை மறந்து, விரோதத்தை விட்டு அவனிடம் சொந்தம் பாராட்டினார்கள், எல்லாவற்றுக்கும் கதிரி தேடினார்கள்
கதிர் நிலா ஊருக்கு வந்திருந்த மூன்று நாட்களுமே மணி அரசுதான் அவர்களுக்கு விருந்து வைத்தார் .
அவருக்கு கதிர் நிலாவின் வாழ்க்கை நன்றாக அமைந்தது மிகுந்த சந்தோஷம் அதுவுமில்லாமல் அவரது நண்பனின் மகன் தன்னால் அவனுடைய வாழ்க்கை போய்விட்டதே என்று கலங்கி இருந்தவர் இப்பொழுது மிகுந்த சந்தோஷப்பட்டார்
மதுரையிலிருந்து கிளம்பி மீண்டும் சென்னை வந்து ஒரு வாரம் ஆகியது. முன்னறையிலிருந்து பேசிக்கொண்டிருந்த நிலா அப்படியே மயங்கி சரிய சித்ரா; பயந்து, பதறி விட்டார் உடனே கதிருக்கும் நிலாவின் தாய் ஜோதிக்கும் அழைத்து சொல்லிவிட்டார்.
மருத்துவமனைக்கு கொண்டுசென்று பரிசோதனை செய்ததில் இரண்டாவது கர்ப்பமாக இருக்கிறாள் என்று முடிவு வந்தது…
நிலாவிற்கு மிகுந்த சந்தோஷம்…அன்று இரவு கதிரின் நெஞ்சில் சாய்ந்திருந்தள் நிலா
கதிர் பேசினான் “இரண்டாவது பிள்ளையும் உன்னை மாதிரியே சேட்டை செய்தால், நான் எப்படி சமாளிப்பேன்டி..
“அதுவா மாம்ஸ் அது உங்கள் தலைவிதி சமாளிச்சுதான் ஆகனும், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” என்று சொல்லி சிரித்தாள்
அதுவும் சரிதான்… சமாளித்துதான் ஆகணும்.. உன்னையவே சமாளிக்கிறேன்… என் பிள்ளைகள் நான் சமாளிக்க மாட்டானா.. சமாளிகிறேன்…வேற வழி..என்று பேசியவன். அப்படியே இரு கரங்களாலும் அவளது முகத்தைப் பற்றி முத்தமிட்டான்
எப்பவும் இப்படியே சந்தோஷமா இருக்கணும் என் மொசக்குட்டி என்றவன் அப்படியே அவளை அணைத்துக் கொண்டான்…
அடுத்த நாள் கல்லூரியில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அவனுக்கு அழைப்பு வர எடுத்துப்பார்த்தான்…அது சித்தார்த்…
சித்தார்த் கல்லூரி வாயிலில் கதிருக்காக காத்திருந்தான்…கேன்டீன் அழைத்துச் சென்று என்னவென்று கேட்க …
சித்தார்த் “வீட்ல பொண்ணு பார்க்க வேண்டாம் என்று சொல்லுங்க கதிரத்தான்.. நீங்க சொன்னா அப்பாவும் அம்மாவும் கேட்பாங்க…
என்ன திடீர்னு இப்படி சொல்றீங்க காரணத்தை சொல்லுங்க நான் மாமா அத்தை கிட்ட விவரமா பேசுறேன் என்று கதிர் கேட்டதும் …சித்தார்த் பதில் சொன்னான்.
“அது நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்… அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்யணும்னு ஆசைப்படுறேன்”
கதிர் “ஓ அப்படியா சங்கதி.. அதுதான் இவ்வளவு நாள் தள்ளிப் போட்டுட்டு இருந்தீங்களா? “
அதுக்காக இல்லத்தான் அந்த பொண்ணு என்னும் சம்மதம்ம் சொல்லல..அதுதான் காத்திருக்கேன்..அவளுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் அதுதான்…என்றும்… சம்மதம் கிடைத்த உடன் உங்க எல்லார்கிட்டயும் வந்து சொல்லி கல்யாணம் பேசலாம்னு இருந்தேன்… அதுவரைக்கும் இந்த பொண்ணு பாக்குற விஷயம் எல்லாம் வேண்டாம்… வேற எந்த பொண்ணை நான் பார்க்கப்போக எனக்கு பிடிக்கலை தயவுசெய்து அப்பாகிட்ட மட்டும் பேசுங்கத்தான்…
சரி நான் பேசுறேன் இது நிலாவுக்கு தெரியுமா?
தெரியாது … அவ கிட்ட சொல்ல வேண்டாம் சொன்னா வேற மாதிரி ஆகிடும் வேண்டாம்..
நித்யா செய்த தப்பா நான் செய்திரக்கூடதுனு கவனமா இருக்கேன் கதிரத்தான்…என்னை புரிஞ்சுப்பீங்கனு நினைக்கிறேன் என்றதும்…கதிர் அவனுக்கு தைரியம் சொல்லி அனுப்பினான்
அடுத்த நாளே கதிர் தென்னவன் ஜோதிடம் பேசியிருந்தார் இப்பொழுது சித்தார்த்துக்கு பொண்ணு பார்க்க வேண்டாம் கொஞ்ச நாட்கள் போகட்டும் என்று…
மாதங்கள் கடக்க நிலாவை மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர் பிரசவத்திற்காக…
கதிர் நிலாவிற்கு பெண் குழந்தை பிறந்தது… கதிருக்கு அவ்வளவு சந்தோஷம்.. அவன் பெண் குழந்தையை தான் எதிர்பார்த்து இருந்தான்.. அதேபோல பெண் குழந்தை பிறக்கவும் அவ்வளவு சந்தோஷம் கொண்டாடினான்…
ஒரு ஆண் ஒரு பெண் என்று அவர்களது குடும்பம் இப்பொழுது பூரணமாக இருந்தது
இனி அவன் பிள்ளைகளும் மனைவியும் எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் கதிர் சமாளித்துக்கொள்வான்…அவளது மனைவி நிலா கொடுக்கும் காதலே… ஆரன் கதிருக்கு எல்லாவற்றையும் சமாளிக்கும் திறனைக்கொடுக்கும் என்று நம்புவோம்….
இருவரின் காதல் வாழ்வும் இனிமையாக சூரியனும்நிலவும்போல என்றென்றும் நிலையாக அமையட்டும்…
——————————
