அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

அன்பே!கொஞ்ச(சு)ம் காதல் கொடு…

காலையில்  கண்விழித்தவள்  எழும்புவதற்கு முயற்சி செய்ய முடியவில்லை, இறுக்கிப்பிடித்திருந்தான்…
ஹப்பா..தூக்கத்திலயும் பிடிவாதமா பிடிச்சி வச்சிருக்காங்க…எல்லாத்துலயும் பிடிவாதம் இந்த மீசைக்காரருக்கு… மீசையைப்பிடித்து இழுத்தாள்.
அவன் கைகளை விலக்கி  எழும்ப முயற்சிக்க..ம்ஹூம்…மெதுவா  மாம்ஸ்
என்க …தூங்குடி …ஆளில்லாத கடைக்கு நான் டீ  ஆத்தப்போகலை…ஸ்டுடன்ட்ஸ் இல்ல  அங்கப்போய் என்ன பண்றத…லீவ்  போட்டுட்டேன்டி…தூங்கு  என்றான்.
என்னது  லீவா…மிஸ்டர்  பெர்ஃபெக்ட் எப்படி இப்படி  காரணமே இல்லாமால்  லீவ்  போட்டாங்க…என்று நிலா ஆச்சர்யப்பட..
கதிரோ  “அதுவா ஒரு ஆட்டு வாலு என்  வாழ்க்கையில்  என்னைக்கு வந்தாளோ    அன்னையில் இருந்து  இந்த கதிர்  இப்படித்தான்  மாறிட்டான்…
இதைக்கேட்டு…என்னது  ஆட்டுவாலா…நானா…என்ன மாம்ஸ்…என்று சிணுங்கியவளை இழுத்து  தனது கைக்குள்
கொண்டுவந்தவன் தூங்குடி…என்று செல்லி  அவனும் கண்ணைமூடித்தூங்க ஆரம்பித்தான்…
சித்ரா அழைத்தப்பின்தான்  இரண்டுபேரும் மெதுவாக எழும்பி குளித்து கீழே சென்றனர்…
சாப்பிடும்போதுதான் சித்ரா “கதிரய்யா  நான் நாளைக்கு  ஊருக்குப்போகலாம்னு  இருக்கேன்யா…
 
இதைக்கேட்டதும் கதிரின்  முகமே  மாறிட்டுது…நிலாவும் ஏன் என்றுதான்  அவரைப் பார்த்திருந்தாள்…
இங்க இருந்து என்ன செய்ய , வீட்டுக்குள்ளவே இருக்கணும் அதுதான்
“நம்ம ஊருலவச்சு ஏழாவது மாசத்துல வளைக்காப்பு  நடத்தலாம்னு நிலாவோட  அம்மாக்கிட்டச் சொல்லிட்டேன்…
என் பிள்ளை  அந்த  ஊர்ல  தலைகுனிந்து அவமானப்பட்டு  நடந்தான்…அவங்க  எல்லாரும்  முன்னாடியும்  பாருங்கய்யா என் பிள்ளையும் குடும்பம்  குழந்தைனு வாழறான்; சந்தோசமா சொல்லனும்  அதுதான் என்  ஆசை…உங்கப்பாதான்  இந்த நல்லவிசயத்தை தெரிஞ்சிக்காமலயேப்  போயிட்டாங்க … என்றவரின் கண்கள்  ஈரமாகியது…
நிலா “பெரிய மாமாவுக்கு நான் கர்ப்பமாயிருக்க  விசயம் தெரியும் ”  என்றதும் …
கதிரும் சித்ராவும்  அதிர்ச்சியாகவும்  யோசனையாகவும்  நிலாவைப் பார்க்க…
அது  மாமா  ஹாஸ்பிட்டல்ல கடைசியாக இருக்கும்பேது  நம்ம எல்லாரும் உள்ளப்போயிப் பார்த்தோம்தானே  அப்பவே மாமாகிட்ட  சொல்லிட்டேன்…அவங்க  ஆசிர்வாதம்  செய்தபிறகுதான் … என்று நிறுத்தினாள்…
கதிருக்கு  இப்போ  அவங்கப்பாவே  செவுட்டுல  அறைந்து உணர்வு…எங்கப்பா  இறக்கும்போதுக்கூட  சந்தோசமா என்னைப்பற்றிய கவலையில்லாமல்தான் இறந்திருக்காங்க…என தகப்பனைப் பற்றிய 
சிந்தனையில் இருந்தவனை…நிலாதான்  கலைத்தாள்…
மாம்ஸ் என்ன யோசனை என்று  அவன் கையைப்பிடித்து உலுக்கினாள்…
கதிருக்கு  நிலாவின் முகத்தைப் பார்க்கவே ஒருமாதிரி  இருந்தது…சித்ராவோ சாகறவரைக்கும்  வேதநாயகமும் நிலாவும்   ஒருத்தொருக்கொருத்தர்  எவ்வளவு பாசத்துல இருந்திருக்காங்க…நாமாதான் புரிஞ்சுக்காம…என்னென்ன பிரச்சனைய இழுத்துவிட்டிருக்கோம்..என்றுதான் வருத்தப்பட்டார்.
சாகும்போதுக்கூட இந்த மனுஷன் அவளை ஆசிர்வத்திச்சுட்டுப்போயிக்காரு…நான்  அவள்மேல கொஞ்ச நாள்னாலும் கோபத்தைக்  காண்பிச்சிட்டனே… என்றுதான் சிந்தனை…
அன்று தூங்கும்போது எழும்பி நிலாவையேப் பார்த்திருந்தான்…
உன்னைப்போய்  எப்படி வேண்டாம்னு வெளியத் தள்ளினேன்…
அவளைத் படுக்கையிலயேத் தூக்கி அப்படி  முத்தம் வைத்தான் கொஞ்ச நஞ்சமாக இருந்த கர்வமும் நிலா என்ற அன்பின் தேவதையின் காலடியில்…
தூக்கத்தில்  முத்தமிட்டவுடன்  எழும்பியவள் அவன் தூங்காம என்ன பண்றீங்க மாம்ஸ் என்று கேட்கவும்…ஒன்னுமில்ல மொசக்குட்டி…சும்மா என்று  அவளது கழுத்தோடு  சேரத்துக்கட்டிக்கொண்டுப் படுத்தான்…
காலையில்  எழுந்ததும் கதிரை படுத்தி எடுத்துவிட்டாள்…
என் தூக்கத்தை கெடுதுட்டீங்க …தூங்காம இப்போ எனக்கு வாந்திவருது… என்று…
சித்ரா ஊருக்குச் செல்லுவதற்காக கிளம்பினவர் கதிரிடம் சொல்லிவிட்டு  நிலாவின் கன்னத்தை தடவிக்கொடுத்தவர் தலையாட்டி கிளம்பினார்…
இப்படியாக நாட்கள் நகர… வளைகாப்பு  ஊரில் வைத்து  நடத்தினர்…மணியரசுவிற்கு  கதிர் நிலாவின் வாழ்க்கை நல்லவிதமாக மாறியதில்  சந்தோசம்..
கதிரின்  வாழ்க்கையை எள்ளியவர்களும் இப்போது  வியந்துப் பார்க்கின்றளவிற்கு விழாவை நடத்திருந்தனர்…
எல்லாம் நல்லவிதமாக முடிந்ததும்…இப்பொழுது கதிர் பிடிவாதமாக  ” நீங்க எங்ககூடத்தான்  இருக்கனும்  இங்க வீட்டை யாருக்கிட்டயாவது சொல்லிப் பராமரிக்கலாம்…உங்களுக்கு  ஊர் நியாபகம் வந்தாள் , வந்திட்டுப்போங்க.
எனத் தன்னோடு  அழைத்துக்கொண்டான்…
இப்போது  தனதறையில்  தனியாகப் படுத்துக்கொண்டு நிலாவிற்கு  போனில்  அழைத்தவன் ” உன்னைப் பார்க்கணும்போல இருக்கு ” என்றதும்…
ஏதோ பொண்டாட்டியாப் பார்த்து  பலவருசம் ஆனமாதிரிய பேசறீங்க…சாயங்காலம் வரைக்கும்  காலேஜ்லதான இருந்தேன்…பார்த்திட்டு இப்போ பார்க்கனும்போல இருக்கா…
அடியே…பாரக்கனும்போலனா…  அந்தப் பார்க்கனும்போல  புரியுதா…வாயேன்  இங்கயே  இருந்துக்கோ…பிரசவ சமயத்துல மட்டும்..உங்க அம்மாவீட்டிற்குப்போ.
அது எப்படி  முடியும்…ஒன்னு செய்யலாம் நீங்க இங்க வாங்களேன்…நீங்க எங்ங வீட்டிற்கு  வர்றதில்லைனு  அப்பாவுக்கும் அம்மாவிற்கும்  வருத்தம் …
அமைதியாக இருந்தான்…நிலா கணவனிடம்  என்னைப் பார்க்ககூட வரமாட்டீங்களா? என்று  ஏக்கமாகப் பேசவும்…அவளிடம்  பேசிக்கொண்டே வெளியே வந்தவன்… 
” எனக்குத் தூக்கம் வருது  நான் தூங்கப்போறேன்…” என போனை வைத்துவிட்டான்…
நிலாவிற்கோ தனது வயிற்றில் கைவைத்து “வர வர உங்கப்பாவுக்கு  ரொம்ப  கூடிப்போச்சுடா…நீ வந்துதான்  அவங்கள  ஓடவிடணும் பாரு…என்று பேசியவள் அபபடியே படுத்துக்கொண்டாள்…
கொஞ்சநேரங்கழித்து  தனது  பக்கத்தில் யாரோ இருக்கற உணர்வு வர திரும்பிப்பார்த்தாள்  கதிர்.
கண்ணு இரண்டும்  நல்ல  குண்டுபல்பு மாதிரி  விரித்துப் பார்க்க…
“இது கனவில்லை  நிஜம்”என்று சிரித்துக்கோண்டே  சொல்ல …அவசரமாக எழவும்…அவளைப் பிடித்துக் கொண்டான்…
அவனது முகத்தையே  பார்த்திருந்தவளை நோக்கி… என்ன நான் எதுவும் வித்தியாசமா  இருக்கனா…இப்படி  பார்க்கற…எனக்கே  வெட்கம் வருதுடி…என்று  அவளது  கட்டிலில்  சரிந்து படுத்தான்…
நீங்க இங்கவருவீங்கனு எதிர்பார்க்கவேயில்லை…
இன்னும் பழைய விசயங்கள் மறக்கலையோனு நினைச்சேன்…
கதிர்  இங்க வந்தா  இனி பழச எதுவும் நியாபகம் வரக்கூடாதுனுதான்
வந்தேன்…அதுவுமில்லாமல் டெலிவரியாகிட்டுனா  பிள்ளையைப் பார்க்க  இங்கதான் வந்தாகனும்…அந்த நேரத்துல  நான் கூப்பிட்டப்போ வரலை…உங்க பிள்ளைன உடனே வர்றீங்கனு நீ  அதுக்கும் சண்டைப்பிடிச்சா என்ன செய்ய…அதுதான் என்று  சொல்லி சிரித்தான்…
நிலா ” இருங்க  குடிக்கதுக்கு எதாவது எடுத்துட்டு வர்றேன்” 
கதிர் ” ஒன்னும்  வேண்டாம் மாமியார்  நல்லக் கவனிச்சுத்தான்  மேலயே விட்டாங்க “…
அப்படியே  இருவரும் கட்டிக்கொண்டிருக்க…நிலாதான்  ரொம்ப நன்றி  அப்பவுக்கும் அம்மாவுக்கும்  நீங்க  இங்கவரலைனு  கொஞ்சம் வருத்தம்…அதுதான்…
“ஆமா  ஆமா  அவங்க  விழுந்து விழுந்து  கவனிச்சதுலயே நினைச்சேன்…” சரி சரி இவ்வளவுதூரம் வந்திருக்கேன்  இந்த  மாமானைக் கொஞ்சம் கவனிக்கறது…
நிலாவோ கவனிச்சிட்டாப் போச்சுது…என்றவள் அவனது கன்னத்தில் முத்தம்  வைக்க, இது போதாது  என்ன சின்னப்பிள்ளை மாதிரி  இங்கத்தர்ற…
நிலா கதிரின் உதட்டில்  தன் இதழை ஒற்றி  எடுக்க…நீ சரிவரமாட்டடி என்று  அவளது இதழ்களை தன்வாய்க்குள் கொண்டுவந்திருந்தான்…
அவனைத் தள்ளிவிட்டவள்  மாம்ஸ்  இது சரியில்லை…சும்மா இருங்க, இதுக்குத்தான்  பார்க்கனும்போல இருக்குனுச் சொன்னீங்களா…
  நாட்கள்  படுவேகமாக செல்ல…ஒரு நாள் இரவு  கதிருக்கு  போனில்  அழைப்பு வந்தது…நிலாவிற்கு  நிறைமாதமென்பதால் எப்போதும் விழிப்புடன்தான்  இருந்தான்…
அழைத்தது சித்தார்த்  என்றதும்  பதறிக்கேட்க…நிலாவை  மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்வதாகவும்  கதிரை அங்கு வருமாறு சொன்னான்.
எப்படி வந்து சேர்ந்தான் என்றுத் தெரியாது மனைவியைத் தேடி  ஓடிவந்திருந்தான்.
நிலாவோ வலி தாளாது  அழுது அழுது முகமெல்லாம் வீங்கியகருந்தது;  ஜோதி  அவளதருகில்  முதுகை நீவிவிட்டுக்கொண்டிருந்தார்.
கதிரைக்கண்டதும்தான்  அடக்கிவைத்த  அழுகையை  மீண்டும் தொடங்கிவிட்டாள்…
நிலாவைவிட  இப்போது  அதிகமாகப் பயந்தது கதிர்தான்…வலி தாங்குவாளா …எப்படி  சமாளிப்பா என்று …
கதிர் தன் அம்மவிற்கு அழைத்துச் சொல்லிவிட்டான்.
மருத்துவர்கள் நிலாவை நடக்கச் சொல்ல
… அவளோடுச் சேர்த்து  கதிரும் நடந்தான்…இரவு முழுவதம்  எல்லோரையும் படுத்தி எடுத்துவிட்டாள்…
கதிர் நினைத்தான்  ஐயோ இந்த ஒரு குழந்தையே போதும்டா  சாமி என்று( இதை நிலா சொல்லனும் …மாத்தி கதிரு நீ  சொல்ற…)
அடுத்தா நாள் எல்லோருக்கும் நல்ல நாளகவே விடிந்தது  குறிப்பாக கதிருக்கம் நிலாவிற்கும்… ஒரு வழியாக நிலாவை படுத்தி எடுத்து  இந்த உலகத்திற்கு  வந்தான் கதிர் நிலாவின் மகன்…
செவிலி  பிள்ளையைக் கொண்டுவந்துக்கொடுக்க  கதிர் நடுங்கும்  கைகளில் தனது மகனை முதன் முறையாகப்  பார்க்கும்போது  பூரிப்பு சந்தோசம், தனது தந்தையே தனக்கு மகனாகப் பிறந்திருக்கிறார் என்று  ஆனந்தக் கண்ணீர் என்று  எல்லாவிதமான கலவையான உணர்வுகளையும் உணர்ந்தான்…
அவன் கையிலிருந்த  பிள்ளையைத் தொட்டுப் பார்த்தனர் அனவரும்…அவனோ பூப்பந்தாக நெளிந்துக்கொடுக்க கதிருக்கு தன் மகனை திரும்ப செவிலியிடாம் கொடுக்க மனதேயில்லை…
கிட்டதட்ட மகன் பிறந்து ஒரு மூன்று மணிநேரம்  கழித்தே  அறைக்கு  நிலாவையும் பிளாளையையும் கொண்டுவந்திருந்தனர்.
முதலில் எல்லோரும் அவர்களை பார்த்துவிட்டு வெளியே வர கதிர் கடைசியாகச் சென்று அவளது அருகில்  அமர்ந்தவன் மனையாளின் நெற்றியில்  முத்தமிட கண்விழித்துப் பார்த்தவள்  சோபையாக சிரிக்க நெற்றியில்  முத்தம் வைத்தான்…
சைகையினாலயேக்  கேட்டாள் பிள்ளையைப் பார்த்தீங்களா  எப்படி  இருக்கான்…எனக்கு பக்கத்தில்  அவனை  எடுத்து படுக்கவைங்க  என்று…
தொட்டிலில்  இருக்கும்  பிள்ளையைத் தூக்குவதற்கு  அவன் பயந்து கைகள் நடுங்க அதைப்பார்த்தவள் சிரித்தாள்.
பயமாருக்குடி…நான்  அத்தையைக் கூப்பிடுறேன் என்று ஜோதியை அழைத்து சொல்லவும், அவர் குழந்தையை  லாவகமாகத்  தூக்கி நிலாவின் அருகே படுக்கவைத்தார்…தனது கைகளால்  அணைக்கொடுத்துப் பிடித்துக்கொண்டாள்..
எல்லோரும் வெளியே இருக்கவும் சிறிது நேரத்தில் மகன் பசியில் அழ ஆரம்பித்தான்…அவன் போட்ட சத்தத்தில் கதிர்  அரண்டுவிட்டான்…என்ன இப்படி அழறான் என்று…
மதியத்திற்கு மேல் சித்ராவும் மணியரசும் வந்திருந்தனர். குழந்தையை எடுத்துக் கையில் வைத்தவர்  கைகால்களைத் தொட்டுத் தொட்டுப்  பார்த்தார்…
தனது கணவனே பேரனாகப் பிறந்துவிட்டார் என்று  தோன்றியது  அவருக்கு…
மூன்று நாட்கள் கழித்து  நிலாவையும் குழந்தையையும் தாய்வீட்டிற்கு  அழைத்து செல்ல…கதிருக்கோ அவர்களுடனே சென்றுவிடுவோமா என்ற நிலை…மனைவியையும் மகனையும் இப்பவே  தனது வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவோமா என்றும் நினைத்தான் 
இருக் குடும்பத்தையும்  இணைக்கவந்தவன்  கதிர் நிலாவின் மகன். பழையவிசயங்களை கழைந்து  இப்போது இரு குடும்பத்தாரும்  குழந்தை விசயத்தில் ஒன்றாக இருந்தனர்…
தினமும்  மகனைப் பார்க்க  மாமியார் வீட்டிற்கு சென்று, மகனோடு சிறிது நேரம் இருந்துவிட்டு வருவான்..
நாட்கள் நகர ஒரு மாதம் முடிந்த நிலையில் குழந்தைக்கு  பெயர் சூட்டும் விழா வைக்க ஆலோசித்தனர்…நிலாவின்  உடம்புத் தேறுவதற்கே  நாட்கள் பிடித்தன…
வீட்டிலயே  விழாவினை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்து 
தென்னவன் வீட்டிற்கு முன் எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டது… 
பேயராசூட்டுவதற்கு நிலா கதிரிடம்  கேட்டாள்… பெயர் எதுவும் எடுத்து வச்சிருக்கீங்களா என்று அவனும்  ஆமா நான்  பெயர் எடுத்து வச்சிருக்கேன்:  அது உனக்குப் பிடிக்குதாப் பாரு என்க அந்தப் பெயர் அவளுக்கு  ரொம்பவும் பிடிச்சிருந்தது…
விழாவிற்கு எல்லாரும்  வர நிலாவின் தோழி இனியாவும்  வந்திருந்தாள்…
நிலாவின்  அருகில்  அமர்ந்திருந்தவளை எதோ நிலாவிடம் கேட்கவந்த சித்தார்த் பார்த்தவன்…
இதுயாருடா  புதுசாயிருக்கு  நிலா பக்கத்துல…என்று நினைத்தவன் இப்போ எதுவும் கேட்கமுடியாது என்று விட்டுவிட்டான்.
நிலாவும் கதிரும்  மகனின் காதில்  பெயரை மூன்று முறை சத்தமாக 
“வேதவிகாஷ்” என்று…  அழைத்து தொட்டிலில் போடவும்…
சித்ரா நெகிழ்ந்தேப் போனார்…
எல்லாருக்குமே அந்த பெயர் பிடித்திருந்தது…
இனியா  சாப்பிடுவதற்கு செல்ல சித்தார்த்  மறித்து… உங்க பரென்ன என்றுக் கேட்க…நிலாவின்  அண்ணன் என்று அவளுக்குத்தெரியும்…அவனுக்குத்தான் ஆவள் யாரென்றுத் தெரியாது…
” மகாகாளி வள்ளியம்மை” என்றாள்…
சித்தார்த் “என்னது” என்று  அதிர்ந்தவன் …
அவளை அனுப்பிவிட்டு  …ஆளுக்கும் பேருக்கும் சம்பந்தமேயில்லையே  என்றுதான்  யோசித்துக்கொண்டே சென்றான்…
இனியாவிற்கோ சிரிப்பு..யாருக்கிட்ட  எங்ககிட்டயேவா..என்று சென்றுவிட்டாள்…
விருந்து எல்லாம் முடித்து அனைவரும் கலந்துப் பேசினர். நிலாவை  எப்போது  அழைத்துக்கொண்டுச் சொல்லவென்று…
ஜோதி தீர்மானமாக சொல்லிவிட்டார்…இன்னும் இரண்டு மாசம் இங்க இருக்கட்டும்…அப்புறம் மருமகனுக்கும்  லீவு இருக்கும்   அப்போ கொண்டு விடுறோம் என்று…
கதிர் நிலாவைத்தான் பார்த்தான்…நான் என்ன செய்யமுடியும் என்று பதிலுக்கு  அவளும் பார்க்க…பெரியவர்கள் எல்லோரும்  அவர்களைப் பார்க்க…நிலாவோ  அம்மா சொல்ற மாதிரியே  இன்னும் இரண்டு மாசம் இங்கயே இருக்கேன் என்று முடித்துவிட்டாள்…
சித்ரவிற்கோ குழந்தையைவிட்டு   அசையக்கூட மனதில்லை  வேற வழி…கதிரும் சித்ராவும் வீட்டிற்கு  கிளம்பினர்.
வீட்டிற்குப்போய்ச் சேர்ந்தும்  நிலாவிற்கு  கதிர் அழைக்கவில்லை…நிலா  அழைக்க  அழைப்பை எடுக்கப்படவில்லை…திரும்ப  அழைக்க  அவன் போனை எடுத்து பேசாமல் இருந்தான்…
” ஹலோ இந்தப்பக்கம் நிலா  அந்தப்பக்கம் மீசைக்கார மாமாங்களா” என்றுக் கேட்டதும்…
சிரித்தவன் ஏன்டி வரமாட்டேன் சொன்ன…நம்மவீட்டைவிட உனக்கு அங்க இருக்கத்தான் பிடிச்சிருக்கா என்ன?
“யோசிக்கம பேசாதிங்க…இன்னும்  எனக்கு உடம்பு சரியாகலை…அதைவிட இப்போ நான்  அங்கவந்தா மாமா கையும்காலும் சும்மாவா இருக்கும்…மருகனைப் பத்தி தெரிஞ்சதுனாலதான்… அம்மா இன்னும்  நாள் கேட்டாங்க”…
அப்படி  என்னடி செயதிருவேன்  உன்னை  என்று கோபத்தில் கேட்க…
ம்ம்  அடுத்த  பத்தவது மாசத்துல வேதாக்கு  தம்பியயோ தங்கையோ பெறந்திரும்னு பயம்  போதுமா..
கதிருக்கு  அடக்கமாட்டாமல் சிரிப்பு…இந்த  மாமாவோட பெர்மான்ஸ்  அப்படிடி..என்க…
நிலாவோ…ரொம்பத்தான்…ஓவர் கான்பிடன்ஸ்  மாம்ஸக்கு  என்று  ஒன்றுமில்லாமலயே இரண்டு மணிநேரம் கணவனும் மனைவியும் பேசியிருந்தனர்…
தினமும்  கேட்பான்  எப்படி வருவ சீக்கிரம் வா..குட்டிபையனக்  கூடவே வச்சுக்கணும்போல இருக்குடி…இதே பல்லவியை  மூன்று மாதமாக பாடினான்..
இடையில்  தனது பரீட்சை எழுதுவதற்கும் சென்று வந்தாள்…யார் சொல்லியும் கேட்கவில்லை…இதுதான் கடைசி  பரீட்சை  முடிச்சுடுறேன் என்றவள் தனது படிப்பையும் முடித்திருந்தாள்..
மூன்று மாதம் முடிந்ததும் ஒரு நல்லநாளில் தனது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். சித்ராவும் நிலா இங்கேயில்லாத சமயத்தில் கதிருக்காக இங்கயே இருந்தவர்  இப்போது  பேரனைப் பார்த்ததும்…இங்கயே இருக்க முடிவு செய்து கதிரிடம் பேசிவிட்டார்.
நிலா சிலநேரம் மகனை சமாளிக்க முடியாமல் “அத்தை உங்கபேரனைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று அவரதுக் கையில் குடுத்துவிடுவாள்”
நிலா இப்போது சித்ராவிடம்  தானாகவே பேச ஆரம்பித்திருந்தாள், மறக்கவில்லைனாலும் மன்னிக்கத் தெரியும் நிலாவிற்கு…
அதுதான் அவளது வாழ்வில் கதிரினை இணைக்க காரணமாக இருந்தது…
கொஞ்சல் தொடரும்…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *