அனலி தேவதைகள்
6
கணவனின் முத்த யுத்தத்தில் சிந்தை மயங்கியதோ?
இல்லை புத்தி தன் இயக்கத்தை நிறுத்தியதோ?
பேதை தத்தலித்துக் கொண்டிருந்தாள்….தன் மாயக்கண்ணனின் சிலுமிஷத்தில்…..
நினைவலையின் தொடர்பின்மை சரி செய்யும் விதமாய் இளனும்… இன்பாவும்….
ஒருவர் பின் ஒருவர் துயில் களைந்து எழுந்து அன்னையை இருபுறமும் அணைத்துக்கொண்டு…முத்தமிட்ட வேலை…. சாரு தன் சுயநினைவை அடைந்தாள்…
கீழே வந்த ராகுல்..நேரே சென்றது தன் அன்னையின் அறைக்கு.
காலை வணக்கம் தெரிவித்தவன்… கற்பகத்தையும் உணவுண்ண அழைத்துக்கொண்டு உணவு மேசைக்கு வந்தவன்….மேலே தன் அறை வாயிலயே பார்த்துக்கொண்டிருந்தான்.
சிந்து தன் தொண்டையை செருமி….ராகுலை வம்பிழுக்க துவங்கினாள்…
என்ன அண்ணா @அத்தான்?
கண்ணு ரெண்டும் யார் வரவை தேடுதோ??? என ராகம் இழுதவள்…உணவை பரிமாறி விட்டு கரண்டியால் ஒரு தட்டு தட்டினாள்..
கற்பகம் நமுட்டு சிரிப்புடன்….சின்னவளே…வேலையை பாரு…அவன் வேலைய அவன் பாத்துக்குவான்.. என கூறிக்கொண்டே உண்டு முடித்தார்…
ராகுலுக்கு தொண்டையை விட்டு உணவும் இறங்கவில்லை…..விழியும் அறை வாயிலை விட்டு நகரவில்லை…
சிந்து தலையில் அடித்துக்கொண்டாள்…. இதுங்க எப்போ பேசி.. எப்போ பஞ்சாயத்து முடிஞ்சு….நான் இப்போ அத்துவை கைப்புடிக்கறது….
ரெண்டுங்களுக்கும் அறிவில்லை….சின்னஞ்சிறுசுகளை எவ்ளோ நாள் தான் இப்படி தவிக்க விடுறதுன்னு யோசிக்க வேணாம்….
செல்பிஷ் கூஸ்…. என சாருவையும் ராகுலயும் திட்டிக்கொண்டு முணுமுணுத்தாள்…
ராகுலின் ஏக்கத்தை குறைக்கும் வண்ணம் குழந்தைகளும்….தானும் தயாராகி உணவரைக்கு வந்த சாரு..ராகுலை நிமிர்ந்தும் பார்க்கவில்லை….
இறுகிய முகத்தில் ஒன்றும் அறியமுடியா ராகுலின் தவிப்பை சற்றே தணிக்கும் வண்ணம்…பிள்ளைகள் இருவரும்….அப்பா என கூவிக்கொண்டே அவனிடம் தாவினர்….
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
(அதிகாரம்:புதல்வரைப் பெறுதல்
குறள் எண்:0066)
தம் மக்களின் மழலை மொழி கேளாதவரே… யாழும்…. குழலும் இனிதுனு… சொல்வார்கள்….சத்தியமா நான் சொல்லலை….வள்ளுவர் தாத்தா தான் சொல்லிருக்கார்…
ராகுல் மட்டும் விதிவிலக்கா??
இன்பா பிறந்த இன்பம் அனுபவிக்கும் முன்பே சாரு பிரிவுக்கு தயாராகி விட்டது..
இன்று வரையிலும் ராகுலின் துன்பம் அறியாமலே…தன் சுயம்…தன் மகிழ்ச்சி…தன் தேடல்..என அறிவார்த்தமாய் எண்ணிக்கொண்டு…இதயத்தில் கத்தியை சத்தமின்றி அவனுக்கும்…இவளே தனக்கும் இறக்கிக்கொண்ட படிப்பறிவு மிக்க பேதை இவள்..
இரு மக்களின் அசுரத்தழுவலில் தினறிதான் போனான்…இன்பாவின் மழலை கேளா தந்தை அவன்..
ஸ்கைப் எனும் மென்பொருள் மட்டும் இல்லையேல்….
ராகுல் போன்று குடும்பத்தை பிரிந்தும்…விட்டும் வாழும் மக்களுக்கு….
ஆறுதலும் தேறுதலும் தர இறைவனே கண்முன் வந்தாலும் இளைப்பாறுதல் இல்லை மானுடத்திற்கு.
இன்பாவை ஸ்கைப் மூலமே அவள் பிறப்பிற்குப்பின் பார்த்தவன் அன்றோ?….இன்று ஆரத்தழுவி முத்தமிட்டு அணைக்கும் பொழுது நிறைவுற்றான்.
சாருவிற்கு கண் கலங்கியதோடு…சட்டென்று ஒரு உறுத்தல் முதன்முறையாய் மனதில் கீரலாய் குடியேறியது.
ராகுலோ இன்பாவையும்
