அனலி தேவதைகள்
கதிரவனை ஒளித்து… நிலவு மங்கையை உலவவிட்டால் பூமித்தாய்….சாரு சற்றே குழம்பி.. தவித்து …முற்றுப்பெறா சிந்தனையோடு சிம்பொனி வாசித்த நேரம்..சிந்து வந்து சேர்ந்தாள்.
அக்கா இன்னும் தூங்களையா?…ரொம்ப யோசிக்காதீங்க….அத்தான் இப்போ வந்ததும் எப்படியும் உங்க எதிர்பார்ப்பை சொல்லுங்க அக்கா….முடிவு இல்லாத சிக்கல் வாழ்க்கையில் வருவதே இல்லை….நிச்சயம் நல்ல முடிவே உங்க பிரச்சனைக்கு கிடைக்கும்…சிந்து சொல்றேன் நம்புங்க…என ஆறுதலாக சாருவின் கரம் பற்றினாள்..
சாரு…சிந்துவின் பெரும்பேச்சுக்கு… பெருமூச்சை மட்டுமே பதிலாக தந்தாள்…
இந்த லூஸுக்கு போய் இவ்ளோ நேரம் கட்டுரை வாசிச்சேன் பாரு..என்னை செப்பல்ஸ் கொண்டு அடிக்கணும்…. எப்போ பாரு விட்டத்தை வெறிக்கிறது… இதுக்கு இவ அத்தானை வெறிக்க வெறிக்க வெறியோடு பார்த்திருக்க கூடாது….பக்கி அதை விட்டுட்டு இப்போ மூக்கு சிந்துது…சிந்து பட்டு ….உன் அளவுக்கு அறிவு உலகத்திலேயே யாருக்கும் இல்லை செல்லம்….வா நாம மூட்டையை கட்டிக்கிட்டு வீட்டுக்கு போவோம்…இவளும் இவ அத்தானும்…..ஹம்….லூசுங்க….குடும்பமே லூசு….இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தோம் நமக்கு வெறி பிடிச்சிடும்…எஸ்கேப்…என்று மனதோடு தன்னையே பாராட்டியவள்…. சருவிடம் விடை பெற்று கிளம்பினாள்.
பன்னிக்குட்டி பஞ்ச் பேசிட்டு போகுது பாரு…என்று சாரு தலையில் அடித்துக்கொண்டு…என்ன தாண்டா நமக்கு நம்ம ஆளோட பிரச்னை?!!!!….எதுக்கு மூன்று வருடம் இப்படி ஒற்றையாய் தவிக்கிறோம் என்று யோசிக்க துவங்கினாள்(நல்லா யோசிம்மா…. ரெம்பஆஆஆஆஆ சீக்கிரம் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க)
கல்யாணம் ஆச்சு….ஆச்சா??!!!….ஆச்சு ஆச்சு….
மாமா நல்லா பேசினாங்க….பேசினாரா?!!!…ம்ம்ம்ம்..
நல்லா தான போச்சு….போச்சா??!!!….போச்சு போச்சு…
அப்புரம் எப்போ முட்டிகிச்சு…முட்டிகிச்சா?!!!….ஆமா ஆமா…
இளா பிறந்த போது??!!…..இருக்குமோ….இல்லையே..
இன்பா பிறந்த போது?!!..அப்போ கூட ?மாமா தான் எல்லாம் பார்த்தாங்க…..
ஹ்ம்ம்….நியாபகம் வந்துடுச்சு…இப்படி நடுவுல பக்கத்தை காணோம் மாதிரி….தன் வாழ்வின் பக்கத்தை புரட்டிக்கொண்டிருந்தாள் சாரு….
சாரு ராகுல் இருவரும் திருமணம் முடிந்து …இரு பிள்ளைப்பேறு வரை பேச்சும் கேலியும் சிரிப்புமாய் தான் வாழ்ந்தனர்…..இன்பா பிறந்து சில மாதங்களில் துவங்கியது இவர்கள் இருவரின் வாழ்வில் இடைவெளி….
ராகுலின் எண்ணம் ….இரு குழந்தைங்க வந்தாச்சு…குடும்பத்தை சந்தோஷமாவும் சுகமாவும் வைத்துக்கொள்ள தன்னை வேலையில் மூழ்கடித்தான்….மோகத்தை மறந்து போனான்….மங்கையை மயக்கம் தெளியவிட்டு தத்தளிக்க வைத்தான்…
சாரு குழந்தைகளையும் குடும்பத்தையும் தனித்து சமாளிக்க முடியாமல் திணறிய நேரம்….அமர்ந்து பேச உண்ண கூட நேரம் இன்றி ராகுல் வளம்பெருக்க பிசினஸ் துவங்கி தொடர் ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தான்…அவன் செய்த பிழை துணைவியின் துணை இன்றி ஓடியது தான்… சற்றே நிதானித்து தன் ஓட்டத்தை பற்றி தெளியவைத்து தொடர்ந்திருக்க வேண்டுமோ??!!…என்று அவன் நினைக்க துவங்கும் போதே காலம் சதி வலையை அழகாக பின்னி விட்டது….ராகுல் மனைவியை நாடும் நேரம் அவள் உடலாலும் மனதாலும் அவனை கடந்து காலத்தின் சதி வலையில் வலிய விழுந்திருந்தாள்.
பிலைட் ஏறிய நேரம் முதல்…ராகுல் சாருவின் நினைவில் அமிழ்ந்து போனான்….தத்தை நடை பழகிய சாரு… பட்டுப்பாவாடை கட்டி தலை நிறைய பூமுடித்து சுற்றி சுற்றி வட்டமிட்டு கீழே சரிந்த சாரு…. திருவிழா நாட்களில் வடைக்கு அத்தையை பூஜைக்கு முன் முந்தானை பிடித்து சுற்றிய சாரு… பதின்ம வயதில் இவனைக் கண்டு கண்சிமிட்டிய சீமாட்டி சாரு…. கல்லூரி மாணவி…. இவன் ஜூனியர் சாரு….எங்கு போனாலும் இவன் பார்வை வட்டத்தில் வட்டமடிக்கும் வண்ணத்து பூச்சியாய் சாரு…. என ஆயிரம் சாருவை நினைவலையில் நிறுத்தி நிதானமாய் கண்மூடி ரசித்திருந்தான்….
இங்கோ சாரு நித்திரை தேவனின் சதியில் தூக்கம் தொலைந்து உருண்டு கொண்டிருந்தாள்….மணி 5 என்றதும் மைத்துனனை அழைத்துவிட்டாள்…
சொல்லு சாரு… இங்க பார்க்கிங்ல தான் இருக்கேன்….பிலைட் வந்தாச்சு…செக்கிங் முடிஞ்சு வெளிய வர முக்கால் மணிநேரம் ஆகும் என ஒப்பித்தவனை என்ன கேட்பது…அவனே எல்லாத்தையும் சொல்லிட்டானே …
ம்ம்ம் கொட்டினாள்.
டேய் மாமா வந்ததும் கூப்பிடு….அப்போ தான் நீங்க இங்க வரத்துக்குள்ள எல்ல வேலையும் முடிச்சு வைக்க முடியும் என வாய்க்கு வந்ததை கூறி பேசி வைத்தாள்…
சரி சொல்றேன்…பைவைத்துவிட்டான் அத்வைத்….
ஆமாங்க ஆமாம்….. இந்த அத்வைத் தன் சிந்துவுக்கு என்றே அளவெடுத்து பிறந்த
அப்பாவி….அடப்பாவியும் கூட…
செக்கிங் இம்மிகிரேஷன் முடித்து பெட்டி எடுக்க காத்திருந்த நேரம் ராகுல் நினைவும் யோசனையும் எப்படி …என்ன…எங்கே… சருவிடம் எதை பேசவேண்டும் என முடிவெடுத்துக்கொண்டான்….அவன் முடிவு இனி சாரு துணை இன்றி வாழ முடியாது….மூன்று ஆண்டுகளுக்கு முன் எதையெல்லாம் தர மறுத்து மறந்து போனானோ அவை அனைத்தையும் அவளுக்கு அளவின்றி கொடுக்க தாயகம் திரும்பி விட்டான் ராகுல்…தன் தொழில் மற்றும் அதை சார்ந்த அனைத்தையும் தம்பி
