Veg gravy

காய்கறி குழம்பு 

குழம்பு செய்ய தேவையானவை

கேரட், தக்காளி, கத்தரிக்காய், குடமிளகாய், பச்சைமிளகாய் தலா 1,
இஞ்சி ஒரு சிறு துண்டு,
பாசிப்பருப்பு ஒரு கப்,
சாம்பார் பொடி, சோம்பு , போட்டுக் கடலை , தேங்காய் அரைத்த பொடி 2 டீஸ்பூன்,
புளித் தண்ணீர் ஒரு கப்,
சின்ன உருளைக் கிழங்கு , பீன்ஸ் 6,
கடுகு ஒரு டீஸ்பூன்,
உப்பு , மஞ்சள் தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு,
எண்ணெய் அரை டீஸ்பூன்.
காய்கறி குழம்பு குழம்பு செய்வது எப்படி

முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும் . பின்பு பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரை கடாயில் விட்டு, சாம்பார் பொடி, சோம்பு பொடி ,உப்பு, மஞ்சள், நறுக்கிய காய்களைப் போட்டுக் கொதிக்க விடவேண்டும் .பின்னர் காய் ஓரளவு வெந்ததும், வேக வைத்த பருப்பை இதனுடன் சேர்க்கவும். குழம்பு நன்கு வெந்ததும், கடுகு தாளித்து கொட்டி, கொத்தமல்லி போட்டு இறக்கவேண்டும் . இப்பொழுது காய்களை சிறிது எண்ணெயில் வதக்கியும் சேர்க்கலாம். இட்லிக்கு பொருத்தமாக இருக்கும் இந்தக் காய்கறி குழம்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *