நினைவெங்கும் சுவாசமாய் நீயே
சுவாசமாய் நீயே 🌹
**** இக்கதையில் வரும் அனைத்தும் எனது கற்பனை மட்டுமே நிஜ வாழ்கையோடு இக்கதையை சேர்த்தோ (அ) இனைத்தோ பார்க்கவேண்டாம் இது என் அன்பான வேண்டுகோள் *** .
நினைவெங்கும் சுவாசமாய் நீயே 💖….
“ தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் என்று எந்த எல்லைக்கும் போக நினைக்கும் ஒருவன் …
அனைத்துமே மெய் அல்ல பொய்யான திரை என்று நினைக்கும் ஒருவள் … “
Hero : அமர் ஆர்திக்ஹர்ஷன்
Heroin : தாரா யாழினி.
_______________________________________
சிதம்பரம் ,
அக்ரஹாரத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பாக அழகான வண்ண கோலங்கள் போடப்பட்டு இருக்க , மடிசார் புடவை இழுத்து கட்டியிருந்த மாமி இருவர் தீவிரமாக எதை பற்றியோ பேசிக்கொண்டு தெருவில் நடந்து சென்றார்கள் ‘ நோக்கு தெரியுமோ இல்லையோடி நேக்கு நன்னா தெரியும் இந்த மாதிரி தான் நடக்கும்ன்னு ‘ அந்த காலத்து பழமை மாறாத பெரிய அக்ரஹாரத்து வீடு அவ்வீட்டின் வாசற்படியின் முன்பாக பெரிய அளவிலான அனைவரும் உட்காரும் வகையில் தின்னை அமைக்கப்பட்டிருக்க அதில் சில ஆட்கள் சோகமாக அமர்ந்திருந்தார்கள் அப்படியே உள்ளே நுழைந்தால் நடுஹாலில் கட்டப்பட்டிருந்த மர ஊஞ்சலுக்கு கீழே தரையில் உயிர் இருந்தும் எந்த ஒரு அசைவும் அல்லாமல் ஒரு மனிதர் அமர்ந்திருந்தார் .
இதோ பாரு “ஆனந்துராமா” இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்துண்ட்ருக்க போற அவ இந்த ஆத்து மானத்தை மட்டும் வாங்கல அக்ரஹாரத்தோட மானத்தையே வாங்கிண்டு போய்ட்டா என்று கோவமாக அவரை ஒத்த வயதுடைய ஒருவர் ஜலத்தை பாதத்தில் ஊற்றியபடி வருத்தத்துடன் கூறினார் . ஏன்டி நான் அவள குழந்தை மாதிரி தானடி வளர்த்தேன் இப்படி இவா முன்னாடி என்னோட மானத்தை வாங்கிண்டு போய் சேர்ந்துண்டாலேடி என வேதனையான குரலில் ஆனந்துராமன் வார்த்தைகள் வெளிவர , கல்யாணம் பிடிக்கல பிடிக்கலன்னு சொன்னாளே தவற ஏன் பிடிக்கலன்னு சொல்லவே இல்லையேண்ணா என்று கண்களில் கண்ணீர் வர அதனை முந்தானையில் துடைத்தப்படி தன்னுடைய ஆத்துக்காரரிடம் புலம்பிக் கொண்டிருந்தார் “சாவித்திரி” . இப்போ புலம்பி என்ன பன்றது அவா என்ன சாதியோ என்ன குலமோ என்ன கோத்திரமோ பெருமானே என்றபடி தன் கையை தலையில் அடித்தவாறே ஒரு மாமி கத்த , என்ன பன்றது பொண்ண ஒழுங்கா வளர்த்துண்ட்ருந்தா அவ இந்த நிலமைக்கு கொண்டு வந்து இருப்பாளா ஏற்கனவே அக்கா வாழாவெட்டியா ஆத்துல உட்கார்ந்துண்ட்ருக்கா இப்போ இது வேற கல்யாணம் முடிஞ்ச பிறகு ஓடிபோய் இருந்தா பெருமானே நினைக்கவே உடம்பெல்லாம் நடுங்குது என இன்னொருவர் தன் பங்கிற்கு பேச
‘ ஐயோ எல்லாரும் கொஞ்சம் நிறுத்தறேலா நான் தான் அவள அனுப்பி வச்சேன் ‘ என கண்களில் கோவம் வெளிப்பட நிறைமாத கற்பமாக உள்ள “காயு மாழினி” சொல்லிக்கொண்டே வயிற்றை பிடித்தபடி எல்லார் முன்பாக வந்து நிற்க அவள் கூடவே மூன்று வயது பெண் குழந்தை என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக்கொண்டு தன் அம்மாவின் முந்தானையை பிடித்து சுற்றியபடி நின்றது . என்னடி சொல்லுற நேக்கு எதுவும் புரியலடி என்பது போல் பார்வையை வீசி அவள் பக்கத்தில் வந்து நின்றார் சாவித்திரி . ஆமா நான் தான் அனுப்பி வச்சுட்டேன் என் தங்கச்சியோட வாழ்க்கை நல்லா இருக்கனும் ன்னு தான் அப்படி செஞ்சேன் …..சொல்லும் போதே கோவத்தின் எல்லைக்கு சென்றுவிட்ட சாவித்திரி ‘ நோக்கு என்ன பைத்தியம் பிடித்துடுத்தாடி என்றவாறே நிறைமாதம் என்றுகூட பாராமல் அவளை சரமாரியாக தன்னுடைய கைகளால் அடிக்க எதிர்த்து ஒன்றுமே பேசாமல் அடியை வாங்கிக்கொண்டு சிலையாக நின்றிருந்தாள் . சாவித்திரி நீ என்ன செய்ற நிறைமாசமா இருக்கவள போட்டு இப்படி அடிச்சிண்டு இருக்கவ அவசரமாக ஒரு மாமி கத்திக்கொண்டே வந்தவர் சாவித்திரியின் கையை பிடித்து இழுக்க .. என்ன விடுங்கோ என கையை உதறியவர் தன் மகளிடம் ” அங்க பாருடி உன் தோப்பனார் எப்படி மனசுடைஞ்சி உட்கார்ந்துண்ட்ருக்கார் ன்னு ஏன்டி இப்படி பன்ன நேக்கு சந்தேகமா இருக்கு நீ என்னோட வயித்தல தான் வந்து பொறந்தியான்னு என தலையில் அடித்துக்கொள்ள …
அவளும் அப்படி தான் சொன்னா என்னோட தோப்பனாரோட கௌரவம் தான் முக்கியம் இந்த ஆத்தோட மானம் மரியாதை தான் முக்கியம் ன்னு சொல்லிண்டு இருந்தா , நான் தான் ” இதோ பாருடி பிடிக்காத ஒருத்தர கட்டிக்கிட்டு வாழ்க்கை முழுசா என்ன மாதிரி கஷ்டபடறத விட மனசுக்கு பிடிச்சவன கட்டிண்டு ஒரு நாள் சந்தோஷமா வாழ்ந்தாலே போதும்டி ” அப்படின்னு சொல்லி அனுப்பிவச்சுண்டேன் . உங்க பேச்சை கேட்டு தான நீங்க கட்டிவச்ச மாப்பிள்ளையை என்னோட ஆத்துக்காரரா பிடிக்குதோ இல்ல பிடிக்கலையோ ஏத்துண்டேன் ஆனா எல்லாம் முடிஞ்ச அடுத்த நாளே அந்த ஆத்துல என்ன மாட்டு பொண்ணா நெனைக்காமா வேலைக்காரியா நடத்துனாங்க அதை கூட சகிச்சிண்டு வாழ்ந்தேன் .என்னோட தங்கச்சிக்கு ஒரு நல்ல அத்திம்பேராவோ இல்ல இந்த ஆத்துக்கு ஒரு நல்ல மருமகனாவோ நடந்துண்ட்ருக்காலா இல்லையே ஆனா நான் அந்த ஆத்துக்கு ஒரு நல்ல மாட்டுபொண்ணா தான் நடந்துக்கிட்டேன் எல்லாத்தையும் சகிச்சுக்கிறாளே இவள எப்படி வெளிய அனுப்புறது ன்னு யோசிச்சவ கடைசியா நீ என்னடி படிப்பு படிச்சிருக்க உனக்கு என்னடி தகுதி இருக்கு என்கூட வாழ்றதுக்கு ன்னு அனுப்பிவச்சிண்டா , நல்ல வேலை அவளையாவது படிக்க வச்சேலே அதுவரைக்கும் போதும் .இந்த மாதிரி ஒரு நிலமை என்னோட தங்கச்சிக்கும் வந்துரகூடாதுன்னு தான் அப்படி செஞ்சேன் .நானும் என்னோட குழந்தையும் இந்த ஆத்துல இருக்கறது உங்க எல்லாருக்கும் சிரமமா இருந்தா சொல்லுங்கோ எங்கயாவது கண்காணாத இடத்துக்கு போய் சேர்ந்துடுறோம் என் சொன்னவளின் விழி ஓரமாக நீர் துளிகள் கசிந்தது .
தாங்க முடியாத வேதனையில் இருந்த ஆனந்துராமன் மனதில் ஒரு முடிவோடு எழுந்தவர் நேராக சுவற்றில் மாட்டிருந்த பெரிய போட்டோவை வேகமாக கலட்டி ‘மேற்கூரை இல்லாமல் சதுரவடிவில் அமைந்திருந்த சிறிய இடத்திற்குள் அதனை விட்டெறிந்தார் , கீழே தரையில் விழுந்து கண்ணாடி உடைந்து நாளா புறமும் தெறித்தது “”” அப்போட்டோவில் இருப்பவள் , பெருமானே நேரில் பார்த்தால் காதல் கொள்ளும் அளவிற்கு தேவதையாக ஊஞ்சலின் மீது நீலநிற தாவணி பாவாடை அணிந்து அமர்ந்திருந்தவளின் விழிகள் இரண்டும் ஆயிரம் கதைகள் பேசிட பிறை போன்ற நெற்றியில் இரவுவானில் தோன்றும் நட்சத்திரத்தை பொட்டாக வைத்திருக்க ரோஜா பூவை போல் அழகாக சிவந்த சிறு இதழோர புன்னகை எப்படிபட்டோரின் மனதையும் பனியாக உருக வைத்துவிடும் அக்ரஹாரத்து அழகோவியமாக வரைந்திடாத பாவையவள் தாரா யாழினி “”” தன் மனைவியிடம் ஜலத்தை எடுத்துண்டு வா இத்தோட இவள தலைமுழுகிடுறேன் இந்த ஆத்தையும் அக்ரஹாரத்தையும் பொருத்தவரைக்கும் ரெண்டாவது பொண்ணு செத்துப்போய்ட்டாடி என்றபடி வெள்ளி குடத்தை வாங்கி அதில் நிறைந்திருந்த ஜலத்தை தலைமீது கோவம் தீரும் வரை ஊற்றிக்கொண்டார் . இவர் செயலால் அனைவரும் அதிர்ச்சியுடன் நின்றிருக்க சாவித்திரியோ தலையில் அடித்தப் படி எல்லாம் நம்பளோட தலையெழுத்துண்ணா என்று உணர்வில்லாமல் வார்த்தைகள் வெளிவந்தது .காயு தன் அம்மாவின் மீது சாய்ந்து ‘ என்ன மன்னிச்சிடு ம்மா ‘ என்றாள் .
ஹைத்ராபாத்
புறநகர் சாலை எப்போதும் போல் இயங்கிக்கொண்டு இருக்க திடிரென ஒருசில புறாக்கள் யாரோ ஒரு பெண் நடந்துவரும் போது உண்டான கொழுசு சத்தத்தால் பயத்தில் மேல் எழும்பி பறந்து வேறொரு இடத்தில் சென்று அமர்ந்தன . அவைகளின் செயலை பார்த்தவாறே கால்கள் இரண்டும் தானாக நடக்க ஒரு கையில் தன்னுடைய ட்ரேவல் பேக்கை பிடித்திருந்தவள் அடுத்த அடி எடுத்துவைத்து திரும்பிட
” எதிரே மின்னல் வேகத்தில் வந்துகொண்டிருந்த ஜாக்குவார் XJ கருப்பு நிற கார் ஒரு நொடி பொழுதில் அவளை அடித்து தூக்கி எறிய காற்றால் அந்தரத்தில் சுலற்றபட்டு காரின் பின்பகுதியில் பலமாக மோதி வாயில் இருந்து இரத்தம் தெறிக்க ரோட்டில் விழ பேக் ஒரு பக்கம் சென்று விழுந்தது பாவையவள் விழுந்த வேகத்தில் தலை அடிப்பட்டு இரத்தம் கசிய நாசியில் இருந்தும் இரத்தமானது வெளியேறியது இந்நிகழ்வால் அங்கிருந்த ஒட்டுமொத்த புறாக்களும் பயத்தில் மேல் எழும்பி பறந்து சென்றுவிட்டன . சுவாசமானது வேகமாய் இழுக்க விழிகளின் ஓரமாக இரத்ததுடன் கலந்து கண்ணீரானது துளி துளியாக தரையில் பட்டது கழுத்தில் அணிந்திருந்த மஞ்சல் தாலிகயிற்றின் ஈரம் கூட இன்னும் காயவில்லை ”
அங்கிருந்த ஒருவர் கூட அவள் அருகில் வரவில்லை சற்று தூரம் சென்றவாறு திடிரென நின்றது ஜாக்குவார் XJ கருப்பு நிற கார் உள்ளே அமர்ந்திருந்தவன் ஸ்டியரிங்கில் இருந்த இடது கையை எடுத்து தான் அணிந்திருந்த கூலிங் க்ளாஸை கலட்டிவிட்டு உள்ளிருந்த மிரர் வழியாக பின்னால் பார்க்க அங்கே ஒரு குட்டி நாய் அடிப்பட்டு கிடந்தவளை மறைத்தப்படி நின்றிருந்தது , தன்னால் ஏற்படுத்த பட்ட விபத்து என்று தெரிந்தும் கண்களில் அலட்சியம் மட்டுமே தெரிந்தது மீண்டும் கூலிங் க்ளாஸை அணிந்தவன் காரை புயல் வேகத்தில் ஓட்டிச்சென்றான் .உலகத்தில் உள்ள அனைவருடைய திமிரையும் கோபத்தையும் இவன் ஒருத்தனிடமே கொடுத்து அந்த கடவுள் படைத்திருப்பார் போல இரக்கம் என்றால் என்னவென்று கேட்கும் குணம் ஆறடியில் உள்ள இப்படி ஒருவனை பார்க்கும் ஆண்களோ அல்ல பெண்களோ பொறாமை கொள்ளும் அழகிற்கு சொந்தமான இருபத்தெட்டு வயதுடைய வேட்டையாடும் சிங்கம் . ஆனால் இவனை பற்றி முழுவதும் அறிந்தவர்கள் அவனின் நிழல் பக்கத்தில் கூட நெருங்கமாட்டார்கள் ஆம் “ அமர் ஆர்திக்ஹர்ஷன் “என்றால் இதயம் நடுங்கும் அளவிற்கு பயம் ஏற்படும் ! ஏன் தீர்ப்பு வழங்க கூடிய நீதிபதியே தன் மகன் அமர் ஆர்திக்ஹர்ஷனை பார்த்தால் பயத்தில் தள்ளி நின்றுகொள்வார் .
அது யாருடைய கார் என்பதை அறிந்திருந்தவர்கள் அக்காரானது அவ்விடத்தை விட்டு மறைந்தபிறகே அனைவரும் வேகமாக ஓடிச்சென்று அவளை பார்க்க ஒரு சிலர் விரைவாக ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்தார்கள் . சுவாசம் குறைந்து கொண்டே இருந்தது அவளுக்கு ஆம் “தாரா யாழினி” க்கு தான் . ஆம்புலன்ஸ் வந்ததும் அவளை தூக்கிக்கொண்டு போக கழுத்திலிருந்த மஞ்சல் தாலிகயிறு அறுந்து கீழே விழுந்தது .
ஆனந்துராமன் – சாவித்திரி இவர்களுக்கு இரண்டு மகள்கள் மூத்தவள் ” காயு மாழினி ” இரண்டாவது “தாரா யாழினி “ ( நம் கதையின் நாயகி)
நாகேஷ்வர ராவ் இவர் high court நீதிபதியாக உள்ளார் தன்னுடைய மனைவி இவ்வுலகை விட்டு போனபிறகு தங்களின் ஒரே மகன் “அமர் ஆர்திக்ஹர்ஷன்” தான் உலகம் என்று வாழ்பவர் .
சுவாசமாய் நீயே 💖…
பிடித்திருந்தால் படித்து பாருங்கள் ஃப்ரண்ட்ஸ் 🤗.
