எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே ❤
உயிர் ❤ First look
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே ❤
ஹீரோ : ஸ்ரீனிவாசன் நாராயணசாமி
ஹீரோயின் : பத்மாவதி / பத்மினி
நம் ஹீரோ ஸ்ரீனிவாசன் மாடர்ன் உலகின் சாம்ராட்… விரல்விட்டு எண்ணக்கூடிய பிசினஸ்மேன் தென் தமிழகத்தில் கொடிகட்டி பறக்கும் தொழில் அவனுடையது
நாம் நம் வீட்டிற்கு பயன்படுத்தும் அனைத்து வகையான அதி நவீன எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் ஸ்ரீனிவாசன் எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்சில் கிடைக்கும்
சென்னையில் மட்டும் ஐந்து இடங்களில் அவனுக்கு கிளை கள் உண்டு. அவனுடைய உடல் பொருள் ஆவி அனைத்தும் பிசினஸ் தான்
தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் அவனுக்கு பல இடங்களில் கிளைகள் உண்டு
மாநிற தேகம் அடர்த்தியான சிகை களையான முகம் ஆனால் முகத்தில் எப்போதும் ஒரு அழுத்தம் குடிகொண்டிருக்கும்
ஒரு மணி நேரத்தில் நான்கைந்து வார்த்தைகள் மட்டுமே பேசுவான் ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் மதிப்புமிக்கதாய் இருக்கும்
அனாவசிய பேச்சுக்கள் கிடையாவே கிடையாது எல்லாம் செயல் தான் அவனுக்கு…. டைம் மேனேஜ்மென்ட்டை கீப் அப் பண்ணுவதில் அவனுக்கு நிகர் அவன் தான்
எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கும் நேர்த்தியும் இருக்க வேண்டும் அவனுக்கு…. தான் நினைத்ததை எப்பாடுபட்டாவது சாதித்துக் கொள்வான்… பிடிவாதக்காரன் முன்கோபி அழுத்தக்காரன்
நம் கதாநாயகி பத்மாவதி @ பத்மினி… சுருக்கமாய் எல்லோருக்கும் மினி
ஹீரோவுக்கு அப்படியே நேர் ஆப்போசிட்….. நான் ஸ்டாப்பா பேசிக்கிட்டே இருப்பா
இன்னமும் விளையாட்டு புத்தி… கோடு போட சொன்னா ரோடே போடுவா…. என்ன அவ ஸ்டைலில் பூந்து விளையாடுவா….?? சுத்தி இருக்குறவங்களுக்கு தான் கிறுக்கு பிடிக்கும்
வாயாடி வம்பு பண்ணுவா மொத்தத்தில் வெள்ளந்தியான நம்ம வீட்டு பொண்ணு
இந்த ரெண்டு பேரும் ஒரு புள்ளியில் சந்திச்சா என்ன நிகழும்….??
1 : எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே❤
சென்னையின் வர்த்தக மையமான டி நகரில் 10 மாடிகள் கொண்ட அந்த பிரம்மாண்டமான ஸ்ரீனிவாசன் எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விற்பனைக் கூடம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நின்றது
தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த ஸ்ரீனிவாசன்நாராயணசாமி என்ற பெயர் பலகை நம்மை அழகாய் வரவேற்க
முழுவதும் குளிரூட்டப்பட்ட அந்த கட்டிடத்தின் வளாகத்துக்குள் அரக்கப்பரக்க தான் அணிந்து இருந்த ஷால் காற்றில் அசைந்தாட மின்னல் வேகத்தில் ஓடி வந்தாள் பத்மாவதி
சூப்பர்வைசர் கண்ணில் மாட்டக் கூடாது என்று சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து ஓடிவந்தாள்
சூப்பர்வைசர் கண்ணில் மிளகாய் தூவியவள்…. அந்தக் தொந்தி பாஸ்கர் கையில் வசமாய் மாட்டிக் கொண்டால்
தன்னுடைய மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடியே மினியை ஏற இறங்க பார்த்த 60 வயது மதிக்கத்தக்க பாஸ்கரன் சார்
எப்பவும் உனக்கு இதே வேலையா போச்சு மினி….? இப்படியே நீ பண்ணிக்கிட்டு இருந்தா ஒரு நாளைக்கு இல்ல ஒருநாள் உன்னுடைய சீட்டு கிழிய போறது உசிதம்
பெரிய முதலாளி நாராயணசாமி நிரந்தர ஓய்வு எடுக்கப் போறார் அவருடைய ஒரே மகன் கூடிய சீக்கிரம் இன்சார்ஜ் எடுக்கப் போறதா கேள்விப்பட்டேன்
அவர் ஒரு மிலிட்டரி ஆபிஸர் பெரிய முதலாளி மாதிரி கிடையாது rough & tough…. உன்னுடைய விளையாட்டுத் தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு ஒழுங்கா நாளையிலிருந்து கரெக்ட் டைமுக்கு கடைக்கு வர பாரு
உன் கூடவே சுத்திக்கிட்டு திரியுமே அந்த வாலு எங்க….??
நான் சொல்ற எதையாவது கவனிக்குதா பாரு…. இந்த காலத்து பசங்களுக்கு கொஞ்சமும் பொறுப்பே இல்ல என சலித்துக் கொண்டார்
நேரம் காலம் தெரியாம
இந்த கிழ போல்ட் ஏன் இப்போ lesson எடுத்துக்கிட்டு இருக்காரு ….?
அவர் தலைக்கு மேலே ஒரு கும்மிடு போட்டவள் நைசாக எஸ்ஸ் ஆகினால்
தான் வேலைப் பார்க்கும் 5ம் தளத்திற்கு வந்த மினி தான் கொண்டுவந்த ஹேண்ட்பேக்கை பத்திரமாக வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டு அப்பாடா என பெரு மூச்சு விட்டபடி தன்னுடைய இருக்கைக்கு வந்தால்
அங்கே அவளையே முறைத்தபடி தேஜ்வி நின்றுகொண்டிருந்தாள்
“என்ன தேஜு இப்படி பத்ரகாளி மாதிரி போஸ் கொடுக்கறே என்று தன்னுடைய தோழியை ஓரக்கண்ணால் பார்த்தபடி தான் செய்ய வேண்டிய வேலைகளை மினி பார்க்க தொடங்க
தன் தோழி தேஜ்வியோ தன் முட்டைக் கண்ணை உருட்டி உக்கிரமாய் மினியை பார்க்க
நீ எதுக்கு இப்போ காலையிலேயே உரண்டை இழுக்கிறவ .?
எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு மினி இன்னைக்கு நம்ம talk of show அந்த மிலிட்டரி ஆபீஸர் பற்றி தான்
அவர் வந்ததும் நம்மளுடைய bad ரெக்கார்ட் எல்லாம் பார்த்துட்டு வேலையை விட்டே நம்மளை தூக்கிடுவாரோ…?
இதுக்கு தான்இப்படி பயந்து நெளிஞ்சியா….?
நாம எல்லாம் யாரு…??நாராயணசாமிக்கு நாமம் போட்ட மாதிரி….வர மிலிட்டரி ஆபீஸருக்கும் பெரிய நாமமா போட்டிடுவோம்…. டோன்ட் ஒரி பீ கூல்….!!
அவனோ மிலிட்டரி ஆபீஸருக்கே சுளுக்கு எடுக்கக் கூடிய கிங் என்று பாவம் மினிக்கு அப்போது தெரியவில்லை
சென்னையின் பிரதான சாலையை வழிக்குக் கொண்டு அவனின் கறுப்புநிற ரோல்ஸ் ராய் கார் அதிவேகமாய் பறந்துகொண்டிருந்தது
அதன் உள்ளே அமர்ந்து இருந்தவன் தன் கண்களை மறைக்கும் படியான கருப்புநிற கூலர்ஸ் அணிந்து இருந்தான் அது கணகச்சிதமாய் அவனுக்கு பொருந்தி இருந்தது
முகத்தை மூடி இருந்த அவன் தாடி….அவன் முகத்தின் அழகை மறைத்துக் கொண்டிருந்தது கவசம் போல்
அவன் மடியில் லேப்டாப் இருக்க அதை இயக்கியபடி அவ்வப்போது தார்ச்சாலையில் தன் முகத்தை பதித்தான் அந்த புதியவன்
நெடு நெடு என்ற உயரம்….பணத்தின் செழுமை அவன் முகத்தில் தெரிந்தது
அவன் born வித் சில்வர் ஸ்பூன் தான்.அவன் பிறந்தது தமிழ்நாட்டில் என்றாலும் படித்து வளர்ந்தது எல்லாமே லண்டனில் தான்
அதிகாரத் தோரணை அவன் உடம்பில் தெறிக்க நுனி விரலில் தன்னுடைய தொழில் சாம்ராஜ்யத்தை வைத்திருந்தான் அவன்
ஸ்ரீ சீனிவாசன் நாராயணசாமி
யாருக்குமே அடங்காத ஜல்லிக்கட்டு குதிரை… இதுநாள் வரை பெங்களூரில் தன்னுடைய தொழில்களை கவனித்துக் கொண்டிருந்தவன் தந்தையின் ஓய்வு கருதிசென்னையில்உள்ள தன் தொழில்களை கவனித்துக் கொள்ள வந்து கொண்டிருக்கிறான்
தன் காரை ஸ்ரீசீனிவாசன் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்சின் பத்தடிக்கு முன்பாகவே நிறுத்த சொன்னவன் தன் கோட்டைக் கழற்றி தோளில் போட்டுக் கொண்டவனாய்….அந்த பத்து மாடி பிரமாண்டா கட்டிடத்தின் முன் பக்க வழியாக செல்லாமல் பின்பக்கமாக வேகயெட்டு வைத்து நடந்தான்
தன்னுடைய பாடிகார்ட்சை தன்னை பின் தொடர வேண்டாம் என்று சைகை கைகாட்டிவிட்டு தனியாக அவன் நடந்துவர
அங்கே நம்ம மினி அம்மணி வேலை நேரத்தில் டேக்கா கொடுத்து விட்டு தன்னுடைய இரண்டு கைகளிலும் இரண்டு ஐஸ்கிரீம் வைத்துக்கொண்டு ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் நாக்கில் எச்சி ஊற
வேகமாய் வந்தவன் அவளை கண்டு அப்படியே அவளிடத்தில் நின்றான்
தன்னை யாரோ குறு குறு என்று பார்ப்பது போல் தோன்ற வாயில் ஒழுகிக்கொண்டிருந்த ஐஸ்கிரீமை பற்றி சட்டை செய்யாமல் மெல்ல முகத்தை நிமிர்த்தி எதிரே பார்க்க
அங்கே நெடுநெடு என்று ஒருவன் நின்றிருந்தான் தன்னை வெறித்து பார்த்தபடி
காடு போல் அவன் தாடி அவன் முகத்தை மறைத்துக் கொண்டு இருக்க
யாருடா இவன் என்று தன் பார்வையை மீண்டும் அவன் மேல் செலுத்தினால்
பார்க்க ஏதோ சுமாரா இருக்கான் அதுக்காக இப்படியா நம்மளை வெறிச்சி பார்க்குறது என அவளுக்கு கோபம் எழ….
“என்ன உன் கேர்ள் பிரிண்ட் ஏதாவது காஸ்ட்லியான பொருளை வாங்கிட்டு பில்லை உன் தலையில் கட்டிட்டாலா…?
“உன்னை பார்த்தாலே தெரியுது….கோட்டு சூட்டை பந்தாவுக்காக நீ போட்டு இருக்கேன்…??
அவள் தன்னை பார்த்து இவ்வாறு சொல்லக் கேட்டு அவன் தன்னுடைய
கூலெர்சை கழற்ற
அவன் முகம் இறுக்கமாய் இருந்தாலும் அந்த கண்கள் ஒளி பொருந்தியதாய் வசீகரிப்பதாய் இருந்தன
கொஞ்சம் அழகன் தான் போல என்று தன் தலையை சிலுப்பிக் கொண்டவள்
“என்ன உள்ளே 50 % டிஸ்கவுண்ட் சொல்லியிருப்பாங்களே….எல்லாம் சுத்த ரீலு மேன்….?? அம்புட்டும் கல்லா கட்டத்தான்….??
” என்ன தான் இருந்தாலும் இங்க வேலை பார்த்துகிட்டு நானே கம்பெனி சீக்கிரெட்டை வெளியில் செல்லக்கூடாது இல்ல..?
கேஷ் கவுண்டரில் போய் மினி க்கு ரொம்ப வேண்டப்பட்டவன் சொல்லு…..அந்த ஜொள்ளு ஏகாம்பரம் கணிசமா மொத்த தொகையில் கொஞ்சம் குறைப்பான்…?
போ போ….? என ஐஸ்கிரீமை தன் கையில் வைத்தபடி அவனிடம் சொல்லிவிட்டு மீண்டும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதில் அவள் முனைய
அவனோ அப்படியே நின்ற வாக்கில் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்
என்ன இப்படி திருதிருனு முழிச்சிக்கிட்டு
என்ன பார்த்து லுக்கு வேற விடற….?
உன்ன பார்த்தா பர்சே கொண்டு வராதவன் போல தெரியுதே….?? என தன் கண்களை சுருக்கி கூர்மையாய் அவனைப் பார்க்க
நான் இங்கே உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தா அடிக்கடி ஏன் வாட்சை பாக்குற …??அவ்வளவு பெரிய அப்பா டக்கரா நீ…??
என்ன பாண்டி பஜாரில் மூணு பத்து ரூபானு கூவி வித்த வாட் சா…( மினி உனக்கு இனி ஏழரைச் ஸ்டார்ட் ஆயிடுச்சி )
பாடிகாட்ஸ் என்று அதிகாரமாய் அவன் ஒற்றைக் குரல் கொடுக்க….??
அந்த கடையில் வேலை பார்க்கும் எல்லா பெரிய தலைகளும் அவன் முன் ஆஜராகிய இருந்தன அடுத்த ஐந்து நிமிடத்தில்
ஐஸ்கிரீன் அவள் வாயை தாண்டி அவள் உடுப்பெல்லாம்
ஒழுக பிரீஸ் மோடுக்கு போனால் மினி
அந்த ஏசி அறையே மினி மாநாடு போல் இருக்க….??
சின்ன முதலாளி வந்த அன்னைக்கே இந்த மினி தன் அலப்பறையை கூட்டிட்டாளே என்று பெரிய தலைகள் எல்லாம்….பரிதவிப்போடு தலையை தொங்கப் போட்டபடி சின்ன முதலாளி என்ன சொல்லப் போறாரோ தெரியலையே என கதி கலங்கி கையை பிசைந்தபடி
ஸ்ரீனிவாசன் முன் நிற்க
தன் இருக்கையில் படு ஸ்டைலாக சாய்ந்தபடி ஸ்ரீனிவாசனோ தன் பார்வையை அவர்கள் புறம் செலுத்தி “சோ நீங்க எல்லாம் இந்த கடையை எப்படி நிர்வகிச்சிக்கிட்டு இருந்தீங்கனு ரொம்ப நல்லாவே புரியுது…??என்று தன் அதிர்ப்தியை காட்டினான்
Silent கில்லர் போல்
அதற்குமேல் எல்லோரையும் ஆங்கிலத்தில் கிழி கிழி என்று கிழித்து கொண்டிருந்தான் பாரபட்சம் பார்க்காமல்
இங்கே மினியோ …பாரு அவன் ஹீரோ மாதிரி இருக்கான்…அது தெரியாம உன் ஓட்ட வாய விட்டுட்டியே மினி…..முதலில் கண் டாக்டரை போய் பார்த்து பெரிய சோடாபுட்டி கண்ணாடி ஒன்னு போடனும்
ஸ்ரீ னிவாசனோ மினி அங்கு இருப்பதையே சட்டை செய்யாமல் எல்லோரையும் லெப்ட் & ரைட் வாங்கினான்
ஒரு வழியாய் தன் ரூல்ஸ் & ரெகுலேசஷனை அவர்கள் மனதில் பதியும் படி கட்டளைபோல் சொல்லி அனுப்பியவன் அவளை ஏற இறங்க பார்த்தான் அலட்சியமாய்
அப்போ ஒழுக்கினம் நம்பர் ஒன் நீ தானா….??
பத்மாவதி @ மினி…அவள் பயோடேட்டாவை அவன் எடுத்து வாசிக்க
காசு தான் அவ்வளவு கொட்டிக்கிடக்குது இல்ல போய் உன் தாடியை ஷேவ் பண்ணா என்ன மேன் என்று அப்போதும் அவள் தன் மனத்துக்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டிருக்க
என்ன பார்த்து என்ன சொன்ன…?? என தன் தலையைக் கோதியபடி ஸ்டைலிஷாக அவளைப் பார்த்து அவன் கேட்க…??
கொஞ்ச நஞ்சமா சொல்லி இருக்கேன் எல்லாத்தையும் தான் நான் வால்வ்ண்டியரா வாக்கு மூலம் கொடுத்துட்டேனே
கஷ்டபட்டு தான் வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்த ஐஸ்க்ரீம் போச்சே என்ற மனநிலையில் அவள் இருக்க
அவனோ அவளை கண்டுகொள்ளாமல் தன் வேலையைப் பார்க்க தொடங்கினான்
அவள் தான் அவன் முன் நிற்க முடியாமல் நெளிந்தபடி நின்று கொண்டிருந்தாள் கால்கடுக்க
இது தான் வச்சு செய்யறதோ…?? இப்படி சும்மா நிற்க முடியலையே சாமி என்று அவள் அலுத்துக்கொண்டு…ஓர கண்ணால் கெஞ்சும் பாவனையில் அவனை பார்க்க
சரியான மிலிட்டரி ஆபிஸர் கொஞ்சமா பொண்ணு தானேனு அசைந்து கொடுகாரனா பாரு
பத்மாவதி @ மினி துருதுருவென்று இளமை துடிப்புடன் இருக்கும் 22 வயதே நிரம்பிய பெண்
மிடில் கிளாஸ் B. Com முடித்திருக்கிறாள் …. ஒரு தம்பி அப்பா வரதராஜன் அம்மா சரோஜினி என்று அளவான குடும்பம்
தம்பி பிரவின் பிளஸ்டூ படிக்கிறான்…அவளின் அப்பா தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்க்கிறார் அம்மா ஹவுஸ் வைஃப்
காலையில் இந்த சரோ திட்டிகிட்டே இருந்துச்சா…அதான் இந்த காட்டு சிங்கத்திடம் வசமாக மாட்டிக்கிட்டேன்
சரோ வேறு யாருமல்ல அவளின் அம்மா சரோஜினி தான்
அடேய் கிராதகா கடங்காரா..கால்கடுக்க என்னை இப்படி நிற்க வைச்சி இந்த கன்னி பொண்ணுடைய சாபத்தை வாங்கிக்காத…?
கடலை போட உனக்கு எந்த கேர்ள் ஃப்ரெண்ட்மே இல்லையா இப்படி ஆபீசையே கட்டிகிட்டு அழற
எனக்கு மதியம் சாப்பாடு கட்டு ஈவனிங் தேனிர் கட்டு…. நைட்டு எட்டு மணி ஆயிடுச்சே இந்நேரம் நான் எல்லாருக்கும் டிமிக்கி கொடுத்துட்டு வீட்டுக்கு எஸ் ஆகி இருப்பேனே…. போச்சே அவள் முழி பிதுங்க
நீ shave பண்ணி ட்ரிம்மா வந்து நின்னு இருந்தா நான் ஏன் உன்ன பார்த்த அப்படி சொல்ல போறேன் ஆல் மிஸ்ட்டேக்கும் யூவர்ஸ் யூ know…??
அவள் தன் கண்களை சுருக்கி முகத்தில் அஷ்டகோணலை காண்பித்தாலும்… அந்த
ஸ்ரீனிவாசன் என்கிற இடிச்ச பிள்ளையார் அசையவே இல்லை
லேப்டாப்பில் தன் வேலைகளை முடித்தவன் தன் கையை மேலே உயர்த்தி நெட்டு முறித்தபடி அலட்சியமாய் அவளைப் பார்த்து நக்கல் சிரிப்பு ஒன்றை சிரிக்க
அதுவோ எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் அவளுக்கு இருக்க
என்னை பார்த்து நக்கலாவா நீ சிரிக்கற… ? இனி நீ
இங்க தானே இருக்க போறே மினி யாருனு உனக்கு காண்பிக்கிறேன் கூடிய சீக்கிரமே
ஸ்ரீனிவாசனோ தன் கோட்டைத் தோளில் மாட்டிக்கொண்டபடி let’s move என்றபடி போய் கொண்டே இருந்தான்
அவன் பின்னோடு மினி நடந்தால் இல்லை இல்லை…..? ஓடினால் அவன் வேகத்திற்க்கு ஈடு கொடுக்க முடியாமல்
அவனின் ரோல்ஸ் ராய் கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது
பிரவாயில்ல காலையிலிருந்து கால்கடுக்க நிற்க வைச்சவன் தன் வீட்டிலேயே டிராப் பண்ணிடுவான் போலவே என்று அவளோ அந்த சொகுசு காரின் செழுமையில் தன் இருக்கையில் மேலும் வசதியாய் சாய்ந்து கொள்ள
ஸ்ரீனிவாசன்
தன் ட்ரைவரை காரை ஓரிடத்தில் நிறுத்தச் சொன்னான்
அங்கே இறங்கியவளுக்கு சிலுசிலுவென்று கடற்கரை காற்று இதமாக முகத்தில் வீசியது
தன்னை மதியம் பட்டினி போட்டவன் சாப்பாடு வாங்கிக் கொடுக்கப் போறான் போல என்று ஆசையாய் அவள் அவன் முகத்தை பார்க்க
உன் பேர் என்ன சொன்னே மினி….??ஹாங்… மினி
இங்க பாரு மினி….? இப்படியே பொடி நடையா நடந்து போனா உன் வீடு வந்து சேர்ந்திடும் வரட்டா…?? திமிராய்
சொல்லிவிட்டு அவளை கண்டுகொள்ளாமல் அவன் தன் காரில் ஏறிக்கொள்ள
என்னது இங்க இருந்தா என் வீட்டுக்கா என்று வாயைப் பிளந்து கொண்டு அவள் நிற்க்க
அவன் காரோ படு வேகம் எடுத்து கிளம்ப
மினியோ காரின் பின்னாடியே தடதடவென்று ஓடினால் ….
ஏய் தாடி…..குறுந்தாடி….மிலிட்டரி நில்லு மேன்…??
கத்திக் கத்தி அவள் தொண்டை தான் வலித்தது… அவள் கையி லோ ஒற்றை பைசா இல்லை இரவில் தன்னை இப்படி தனியாக அவன் விட்டுப்போக….?
ஏய் டிரகுலா….?? என்ன இப்படி நடுரோட்டில் புலம்ப வச்சிட்ட இல்ல….
உன் கேர்ள் பிரண்டோடு சீக்கிரமே உனக்கு பிரேக்கப் ஆயிடும் எழுதி வச்சிக்கோ என்று தன் மூக்கை உறிஞ்சியபடி கத்தினால்…அந்த இரவின் குளிரில் தன் உடம்பு நடுங்க
பாவம் அவளுக்கு தெரியாது அவன் வாழ்வில் பெண்களுக்கு இடமே இல்லை என்று
அவன் உயிர் அவளுக்காக உருகுமா…??
என்றும் அன்புடன் உங்கள்
ஸ்ரீலதா
