Inbox _ 2 by Deva

தேவாவின்…இன்பாக்ஸ் கதைகள்….வரிசையில்

சாந்தி யை தொடர்ந்து….இரண்டாவது சிறுகதை…

2.

கல்லுக்குள் ஈரம் …!!!

எனக்கு…..நிறக் குருடு பிரச்னை உண்டு…..

வண்ணங்களைத் துல்லியமாய் இனங் காண முடியாது…..நீங்கெல்லாம் ஃப்ளுல மட்டும் அத்தனை ஷேட் சொல்வீங்களே?…

எனக்கு ரெண்டே தான் தெரியும்…லைட்…டார்க்…ரெண்டே ஷேட்…

வாழக்கை கூட அப்படித் தான்…..இன்னதுன்னு இனம் பிரிக்காமயே…..ம்…வாழக்கைக் குருடு…!!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அந்த டர்ன்ல படுத்த மாதிரி திரும்பின போது விழுந்துட்டேன்னு தான் நெனைச்சேன்…..நாய் ஒண்ணு பின்ன நொடில விலகி ஆக்ரோசமா குரைக்க சந்தோசப் பட்டேன்…

ஆமா…..யாருமே சந்தோசமா இருக்கக் கூடாது…ஏன்னா.. நான் இல்லையே?…அந்த வீடு கிட்ட வர அலறலா ஹாரனடிச்சு கிளட்சப் பிடிச்சுத் திராட்டிலைத் திருகி புல்லட் சைலன்சரக் கதற விட்டேன்…எம் மனசோட கதறல் அது?

கிட்டப் போக அந்த ரெட்டை இரும்புக் கதவ அவசரமாத் தெறந்து புன்னகையோட ““உள்ள விட்ருங்க” ன்னு சொல்லிக்கிட்டே தள்ளி நின்னா…. புல்லட் அலறல அதிகப் படுத்திக்கிட்டே உள்ள போய் கடைசி மூச்ச விட்டு அடங்கவும் தான் காதுல ஏதோ இரைச்சல் அடங்கின மாதிரி ஆச்சு…எல்லாக் கோபங்களையும் சம்பந்தப் பட்டவங்க மேலயே காட்டிட முடியறதில்லையே?. சைடு ஸ்டாண்ட் தள்ளிக்கிட்டே அந்தக் கேள்வியப் போட்டேன்

“வண்டிச் சத்தத்துக்கே கதவத் தெறந்துட்டியே?”

“மனப்பாடமாயிடுச்சு….ஆனா இத இன்னுங் கொஞ்சம் முன்ன எதிர் பார்த்தேன்”

“எப்படி…?”

“அப்படித் தான்…சில பார்வைகள்.. சில பேச்சுகள்….எங்களுக்குப் புரிஞ்சுடும்.. பாக்கப் போனா எல்லா ஆம்பளை பார்வைலயுமே ஒரே அப்ளிகேசன் தான்….? ”வா… படு”…..ஆனா அதத் துணிச்சலா காரியமாக்கறவங்க கொஞ்சம் பேரு தான்”

சாவியை வண்டி டாங்க் கவரிலேயே போட்டு உள்ளிருந்து ஃபுல் பாட்டில் பிராண்டியை எடுத்து உள்ள போக கதவத் சாத்திட்டு பின்னாலயே வந்தா….நா சட்டையக் கழட்டி அவ கைல குடுத்துட்டு ஹால்ல வெறும் நெலத்துல உக்காரப் போக பதறினா….

“இருங்க….பாய் போடறேன்”

”நா ஒண்ணும் படுக்க வரல“

”ஓ….சாரி….உங்களுக்கு எப்படி இஷ்டமோ அப்படி இருங்க”

சொல்லிக்கிட்டே நவுந்து சட்டைய சோபா மேல போட்டுட்டு பிரிட்ஜத் தெறந்து ”மிக்சிங் எது வேணும்?“னு கேட்டா….நா அவசரமா மூடி திருகி அண்ணாந்து கால் வாசிய அடிச்சிட்டு வெறுப்பாச் சொன்னேன்…

“வெசம் இருந்தா குடு”

திரும்பிப் பாத்துச் சிரிச்சுட்டு பிரிட்ஜ்ல இருந்து ஒரு கூலிங் வாட்டர் பாட்டில எடுத்துக்கிட்டு கிட்ட வந்து உக்காந்துக் கிட்டே சொன்னா….

“ஆனானப் பட்ட நானே வாழத் துணியற போது உங்களுக்கென்ன?”

நா பதில் சொல்லாம சிகரெட் பத்த வச்சேன்…..நெருங்கி வந்து தலையப் புடிச்சு இழுத்து நெஞ்சுல சாச்சுக்கிட்டுக் கேட்டா…..

“என் தங்கத்துக்கு என்ன ஆச்சு?…வீட்ல வொய்ப் கூட சண்டையா?”

வேகமாய் அவளையுதறித் தள்ளி வெறுப்புடன் சொன்னேன்

“அவளப் பத்திப் பேசற யோக்யதை உனக்கில்ல”

என்னை விட வேகத்துடன் வந்தது பதில்

“உங்களுக்கிருக்கா…?”

எழுந்து தலை முடியைக் கொண்டை போடுபவளை வேதனையுடன் பார்த்தேன்….நாமும் சந்தோசப் படாமல் மத்தவங்களையும சந்தோசப் படுத்தாம….என்ன வாழக்கையிது?..நம்மை விட இவள் எவ்வளவோ மேல்….

மத்தவங்களையாவது சந்தோசப் படுத்தறா….நமக்கு சுகமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *