திருமணம் பண்ற எத்தனை பேர் தங்க துணைக்கு உண்மையா இருக்காங்க. இப்பெல்லாம் வாழ்க்கை சந்தோசமா எத்தனை பேர்க்கு உண்மையா இருக்கு. எத்தனை பேர் சந்தோசமா இருக்கம்னு நடிச்சுட்டு இருக்காங்க.நாம ஒருத்தங்க மேல வைக்குற அன்பு ஏதோ ஒரு இடத்தில தோற்று போகும் போது அந்த வலி மரணத்தை விட கொடுமையா இருக்கும். உங்களையே நம்பி வாற உறவுக்கு மரியாதையை குடுங்க.
ஒரு உண்மை கதை.
வயசு போன அம்மா அப்பா தங்கட பிள்ளை வெளிநாடு போன நல்லா இருக்கும்னு அனுப்பி வைக்குறாங்க. அது ஒரு பையன். அங்கே போய் அவன் வேலை பார்த்து வீட்டுக்கும் அனுப்பி தனக்கான துணையை அங்கேயே தேர்ந்தெடுக்குறான். திருமணம் முடிந்தது.அவங்களுக்கு ஒரு பொண்ணு பிறக்குது. அந்த பிள்ளைக்கு தாய்ப்பால் குடுக்காம குழந்தைக்கான பால்மா கூட குடுக்காம பெரியவங்களுக்கு கொடுக்குற சாதாரண தேநீரை குழந்தை பருவத்தில் இருந்தே குடுத்துட்டு வாறாங்க.அந்த பையனும் மனைவி குழந்தையை பார்ப்பாள் என்ற நம்பிக்கைல வேலைக்கு போய் வாரார். வருடங்கள் 5கடந்தும் பிள்ளையால் பேச முடியேல. அழைத்து செல்லாத மருத்துவமனை இல்லை. அந்த பொண்ணும் அவனின் பெற்றோறுடன் நல்லா தான் அலைபேசியில் கதைத்து வந்தாள். தன் குடும்பத்தை அழைத்து கொண்டு ஊருக்கு வந்தான் மகன். அப்போது தான் அந்த மருமகளின் அடுத்த பக்கம் அவர்களுக்கு விளங்கியது.உணவு கொடுத்தால் பிள்ளைக்கோ கணவனுக்கோ கொடுக்காமல் தானே உண்டு மாமியாரை வேலை வாங்கினாள்.அவரும் ஒரே மகனின் மனைவி என பாசம் கொண்டு அவளை இருத்தி வைத்து எல்லா வேலையும் தானே செய்தார்.
குழந்தைக்கு உணவு ஊட்டுவது முதல் எல்லாமே செய்தார்.இப்படியே நாட்கள் போக அவர்கள் சென்றனர்.கொஞ்ச காலம் கழிய பிள்ளையை அழைத்து கொண்டு தன் அம்மா அண்ணனுடன் வந்த மனைவி ஊரில் ஒரு வைத்தியரிடம் பிள்ளையை குணமாக்க என சேர்த்து விட்டு சென்றனர் ஆறு மாதங்களுக்கு. அவனும் தன் பிள்ளை குணமானால் போதும் என்ற ஆசையில் போனில் வரும் பிள்ளையின் வீடியோவை பார்த்தே நாட்களை கடத்தினான். ஒருநாள் ஊரில் உள்ள சிறியதாய்க்கு அழைத்து நான் தோற்று விட்டேன் பிள்ளைக்காக தான் இருக்கிறேன் என்று அழுதான்.பின்னு எல்லாம் சரியாகி போனதென இவர்கள் நம்பும் வேளையில் அடுத்து……
பிள்ளை மருத்துவம் முடிகின்றது பிள்ளையை அழைக்க வருகிறேன் என வைத்தியரிடம் சொன்ன போது இப்போது என்ன அவசரம் இன்னும் சிறிது நாளில் பிள்ளையை அழைக்க வாருங்கள் என்கிறார் வைத்தியர். அங்கோ அவனின் மாமியாரும் இப்போது என்ன அவசரம் பிள்ளை நலமாக தானே உள்ளாள் நீங்கள் போகையில் நானும் வருகிறேன் அழைக்க என்று சொல்லி தடுத்த வண்ணம் இருந்தார். இது ஒருபக்கம் போக அவனின் மனஅழுத்தம் எதனாலோ அதிகரித்து சென்றது. பிள்ளையால் என ஊரில் உள்ளவர் சொன்னார்கள். இப்படியே போக ஒரு நாள் இரவு ஒன்றரை மணியளவில் அந்த பெண்ணின் அண்ணன் அவனின் பெற்றோருக்கு அழைத்து உங்கள் பிள்ளையை நான் அடித்து கொல்ல போகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான். பதறி போன பெற்றவர்கள் இங்கே உள்ள சகோதர வீட்டிற்கு அந்த நடுசாமத்தில் சென்று கூற அவர்களோ பயந்து போய் அங்கிருக்கும் உறவினருக்கு அழைத்து நடப்பதை அறிய சொன்னார்கள்…….
நடப்பதை அறிந்த அவர்கள் மீண்டும் ஊருக்கு அழைத்தனர். அந்த பெண் வீட்டாரால் சொல்லப்பட்ட காரணம் அவனிற்கு 10 வருடங்களாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு எங்களிடம் ஆதாரம் இருக்கு என்றதே. அதற்கு ஆதாரம் இருந்தால் அனுப்புங்கள் தப்பு செய்தது எங்கள் மகன் என்றால் தண்டனை உண்டு என இவர்கள் கூற அவர்களால் ஆதாரம் கொடுக்க படவில்லை. இவ்வளவு வருடங்கள் தெரிந்தும் ஏன் மௌனமாக இருந்தீர்கள் என கேட்ட போது கிடைத்த பதில்களும் சரியானதாக இல்லை…..
அவனிடம் கொடுங்கள் நாங்கள் கதைக்க என சொன்ன போது முதலில் கொடுக்க மறுத்தவர்கள் பின்னு ஸ்பீக்கர் இல் போட்டு கதைக்க சொன்னார்கள்.என்ன நடந்தது என கேட்ட அடுத்த நிமிடம் தொடர்பு துண்டிக்க பட்டது…..
ஓரிரு மணிநேரங்கள் கழிய அவன் தன் வீட்டிற்கு அழைத்து தான் நலமாக உள்ளதாகவும் கவலை வேண்டாம் எனவும் கூறினான்.ஆனால் அவனின் குரலில் ஏதோ சோகம்.
இவ்வளவு பிரச்சனைக்கும் ஆரம்ப புள்ளி குழந்தையை அழைத்து செல்ல அவன் வருவதா என்ற சந்தேகம் எல்லோரிடமும். அவனிடம் தான் தப்பு என்றால் சிறிது காலம் முதல் நான் தோற்றுவிட்டேன் என ஏன் அழுதான். இவனுக்கு இவ்வளவு நடக்கும் போது மனைவி எங்கே?………
