அன்பு vs அன்பு

This entry is part 2 of 5 in the series அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அத்தியாயம் 17

“ஆஸ்திரேலியா வரப் போய் விசாரிக்கனும் ன ரொம்பவே செலவாகுமே வசந்த் சார்..” தனியார்த் துப்பறிவாளர் அமுதன், நாற்பது வயது இருக்கும் தாடையைச் செறித்தபடியே பேச, தனது கோல்டன் டெபிட் கார்ட்டை எடுத்து டீ மேஜையில் வைத்தான் வசந்த் யுகேந்திரன்.

அதைப் பார்த்ததும் முப்பத்திரண்டு பற்களும் தெரியச் சிரித்த அமுதன், “அப்ப சரி சார். இன்னும் இரண்டு நாளில் அந்தப் பையனுடைய ஃபுல் டிடேயிலும் உங்க கையிலிருக்கும்..” என்றதோடு அல்லாமல் மலர்விழிக்கு ராஜரைப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் சுயவிவரங்களையும் வாங்கிக் கொண்டு செல்ல,

“மச்சான் என்னால உன்ன புரிஞ்சுக்கவே முடியல டா. இவ்வளவு நாளா அந்த ஆளு கொடுக்குற காசு என் கால் தூசிக்குச் சமம், அதை எல்லாம் என் கையால கூட தொட மாட்டேன் னு வைராக்கியமா இருந்த நீயடா இப்ப அந்தப் பணத்தை எல்லாம் எடுத்துத் தண்ணீர் மாதிரி செலவழிக்கிறது? அதுவும் அவளுக்காகவா? உன்ன வேண்டாம் னு விட்டுட்டுப் போன அவளுக்காகவா?” கண்கள் விரிய மயில் வினவ,

“இப்ப எனக்கு என்னுடைய ஸ்டபர்னஸா விட என் அம்முவோட வாழ்க்கைத் தான் முக்கியமா படுது. இப்ப என்ன அந்த ஆளு நான் மனி எடுத்ததைச் சாக்கா வச்சு சொத்து கொடுக்க மாட்டேன் னு சொல்லுவாப்படி. சொன்னா சொல்லிட்டுப் போகட்டும். அப்பா அம்மாவைத் தொலச்சிட்டு இதோ இவ்வளவு நாள் நான் வாழல்ல? அதே மாதிரி சொத்து சுகம் இல்லாமலும், என்னால வாழ முடியும், ஹான் விடு பார்த்தக்கலாம்.” பெருமூச்சுடன் நிமிர்ந்தமர்ந்தான் வசந்த்.

துப்பறிவாளர் அமுதனும் கொடுத்த வாக்குபடி, இரண்டு நாளில் அந்த ஆஸ்திரேலியா மாப்பிள்ளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அவனிடம் கொடுக்க, அதை அப்படியே இளமாறனுக்கு அனுப்பி வைத்தான் இவன்.

இளமாறனும் வசு கொடுத்துச் சென்ற கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருக்க, அந்நேரம் பார்த்து அவனது இல்லத்திற்குச் சிறு சிறு காயங்களுடன் வந்து சேர்ந்தான் தனஞ்செயன்.

அறிமுகப் படலம் எல்லாம் முடிந்ததும் இருவரும் மெது இருக்கையில் அமர்ந்து தேநீர் அருந்தியபடியே பேசத் தொடங்கினர்.

“மலரை எப்படி உங்களுக்குத் தெரியும்?” தேநீர்க் கோப்பையை மேஜை மேல் வைத்தபடி இளமாறன் கேட்க,

“என்னுடைய படத்தில் நடிப்பது சம்பந்தமா மலரை எனக்கு நல்லாவே தெரியும் சார். உண்மையிலேயே நல்ல பொண்ணு அவ. ஆனா என்ன சார், அவளுக்குப் போய் அப்படி ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து வைச்சிட்டீங்க? நான் விசாரித்த வரை அந்தப் பையன் பெரிய கிரிமினல் தெரியுமா? ஏற்கனவே அவனுக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு குடும்பம் இருக்கு. சரியான போதைப் பார்ட்டி. குடிச்சிட்டுத் தப்பு தப்பா பில்ஸ் எழுதி கொடுத்ததால ஆஸ்திரேலியா மெடிகல் கவுன்சில் அவனுக்குப் பயின் போட்டிருக்கு. இந்திய மதிப்புக்குக் கிட்ட தட்ட ஐம்பது கோடிக்கு மேல இருக்கும். கொடுக்கலைன, அவனுக்குப் போலிஸ் கேஸ்…” என்று தனா தனது வாக்கியத்தை முடிக்கும் முன்பே இளமாறன் தொடர்ந்தான்.

“மலர் வீட்டுல கொடுக்கப் போற டவுரிக்காகத் தான் மலரைக் கல்யாணமே பண்ணிக்கப் போறான்.” என்றிட,

“அப்ப உங்களுக்கு எல்லாமே தெரியுமா சார்?” ஆச்சரியத்துடன் வினவினான் தனஞ்செயன்.

“எனக்கும் இப்ப தான் தெரியும். இந்தா இந்த ஃபயிலைப் பார்த்துத் தான் நானும் தெரிஞ்சிக்கிட்டேன்.” என்றவன் கையில் வைத்திருந்த கோப்புகளை எடுத்துக் காட்டிட, டீ கோப்பையைக் கீழே வைத்துவிட்டு ஆர்வத்துடன் வாங்கினான் தனா.

கோப்புகளைப் புரட்டியபடியே, “யாரு கொடுத்தது சார்?” என்று இவன் கேட்க,

“வசந்த் யுகேந்திரன் சார்த் தான் கொடுத்தது.” பதிலுரைத்தான் இளா.

“வசந்த் யுகேந்திரன். யு மீன் அன்புக்கினியன் வசந்த்?”

“ஆமா அவர்த் தான். அவர் என்னுடைய கிளைண்ட். கிட்டதட்ட நாலு அஞ்சு வருசமா ஒன்னா தான் டிராவல் பண்றோம். அவர்க் கேஸா கூட நான் தான் எடுத்து நடத்துறேன்.”

“கேஸா? இஃப் யூ டோண்ட் மைண்ட், பிளீஸ் அது என்ன கேஸு னு சொல்ல முடியுமா?”

“என்ன சார்ச் சினிமாவில் இருக்கீங்க வசந்த் யாருனு தெரியாதா?” இளா புருவம் சுருக்கி விசாரிக்க,

“உஹூம்..” இதழ்ப் பிதுக்கினான் தனா.

“உங்களுக்கு ஏஜே சக்ரவர்த்தி தெரியும் ல. அவர் வீட்டுப் பையன் தான் வசந்த்.”

“யார சொல்றீங்க? பிரபல பிலிம் ப்ரோடியுசர் ஏஜே சக்ரவர்த்தியைப் பத்தியா பேசுறீங்க?” வாய் பிளந்தவன், மயிர்க்கால்கள் கூசத் தொடங்கின.

பின்ன சினிமாவைப் பொருத்தவரை அவர்த் தான் டான். அவர் ஒரு படத்தைத் தயாரிக்கிறார் என்றாலே அந்தப் படம் பாதி வெற்றி.

ஏஜே பிலிம் ப்ரோடக்சன் தயாரிக்கிற படம் ன நிச்சயம் நல்ல கதை அம்சம் கொண்ட படமா தான் இருக்கும் என்பது கோடான கோடி தமிழ் ரசிகர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை இம்மிளவு குறையாத வன்னம் தான் அவர்த் தயாரிக்கும் எல்லாப் படங்களும் அவ்வளவு தரமானதாக இருக்கும். சமீபத்தில் கூட அவர் எடுத்த ஒர் ஆங்கில படம் ஆஸ்கார்ப் பரிசு வென்றது.

அவருடன் வேலைப் பார்க்கனும், என்பதே அனைத்து இயக்குநர்களின் வாழ்நாள் லட்சியம். அதில் தனஞ்செயினும் விதி விலக்கல்லவே.

“வசந்த் அவர்ப் பையனா?” ஈ போகும் அளவிற்கு வாய் திறந்தான் தனஞ்செயன்.

“இல்ல தனா சார். வசந்த் ஏஜேயுடைய தம்பி பையன். ஏஜே யுகேந்திரன் பையன். பாவம் இப்ப அவர் உயிரோடு இல்ல. கிட்டதட்ட ஒரு அஞ்சு வருசத்திற்கு முன்னாடி ஒரு கார் ஆக்சிடண்ட்டுல அவரும் அவர் ஒய்ஃப் செத்து போயிட்டாங்க.”

“ஆமா சார் நானும் கேள்விப்பட்டேன். அப்ப யுகேந்திரன் சார்த் தனியா ப்ரோடக்சன் ஹவுஸ் ஆரம்பிக்கிறதா இருந்ததுல?”

“ஆமா அது உண்மைத் தான். அதனால தான் வசந்த் அவங்க பெரியப்பா மேல சந்தேகப்படுறாரு.”

“அது இயல்பு தான இளமாறன் சார்.”

“ம்ம்.. வசந்த் கோர்ட் வரப் போனாரு. பட், எவிடன்ஸ் இல்ல னு சொல்லிக் கேஸ் வித் ட்ராயல் ஆகிடுச்சு.”

“அச்சசோ.. பணம் பாதாளம் வரப் பாயும்.” இதழ்ப் பிதுக்கினான் இவன்.

“ஹான் அது என்னமோ உண்மைத் தான் சார். இப்ப கூட ப்ராபர்ட்டி டிஸ்ப்யூட்ஸ் போயிட்டு இருக்கு. அந்தக் கேஸா தான் நான் எடுத்து நடத்திறேன்..”

“ஓஹ்… ஆமா, இப்ப அந்தக் கேஸ் எந்த நிலைமையில் இருக்கு?”

“ஹியர்ங்ஸ் போயிட்டு இருக்கு. வசந்த் சார்ச் சொந்தப் பிரிச்சி கொடுக்கனும் னு கேட்கிறார். ஆனால் ஏஜே சார் ஒத்துக்கல்ல. மாசமாசம் பல கோடி ரூபாய் வசந்த் பேருல டிப்பாஸிட் பண்றேன். அத எடுத்துச் செலவு பண்ணிக்கட்டும். பட் இப்போதைக்கு சொத்தை மட்டும் பிரிச்சு தரமுடியாது னு ஸ்டிர்டா சொல்லிட்டாரு. இது தான் இப்போதைக்கு கோர்ட்ல ஒடிட்டு இருக்குது.”

“எவ்வளவு பெரிய மனுசங்களா இருந்தாலும் அவங்கிட்டவும் சின்ன புத்தி இருக்குது பாருங்க. சரி சார் மலர் விசயம், கோட்டை விட்டுடாதீங்க.” எச்சரிப்பாய் தனா சொல்லவும்,

“இதோ இப்ப கிளம்பிட்டேன் சார்..” சினேகமாய் புன்னகைத்தான் இளமாறன்.

*******************************
கையில் அர்ச்சனைத் தட்டுடன் வீட்டிற்குள் வந்தாள் மலர்விழி.

பாவாடைத் தாவணியில் செப்புச் சிலைபோல் அவள் இருந்தாலும் முகம் மட்டும் ஏனோ வாடியிருந்தது.

வாடிய முகமாய் மலர் வீட்டின் முற்றம் வர, அவள் காலடியில் வந்து விழுந்தது அவளின் துணிப்பை.

திடுக்கிட்டு மலர் நிமிர, பத்ரகாளி சாட்சாத் காளி ரூபத்தில் அவளுக்கு எதிரே நின்றிருந்தாள்.

“என்ன?” புரியா பார்வையுடன் மலர் விழிக்க,

“நீ இங்க இருந்தது போதும் பையைத் தூக்கிட்டுக் கிளம்பு.” ரௌத்திரமாய் தாய் நிற்க,

“ஏன், ஒருவேளை அம்மாவுக்கு வசு சார் விசயம் எல்லாம் தெரிஞ்சிப் போச்சோ?” குற்றம் உள்ள நெஞ்ச அது குறுகுறுக்கத் தொடங்கியது.

திருதிரு விழிவுடன் மலர்த் தாயைப் பார்க்க, “ஏய் நான் சொல்றது உன் காதில் விழலையா? வீட்டை விட்டு வெளியே போ டி..” தள்ளாத குறையாக அவர்க் கத்த,

“ஆச்சசோ போச்சு போச்சு எல்லாம் தெரிஞ்சி போச்சு போல..” பதறியபடி மலர்ச் சிலையாக நிற்க, காளிக்கு அருகில் வந்து நின்றனர் மலரின் தாய் மாமாக்கள் ருத்ர மூர்த்தியும் இளமாறனும்.

“ஏய் காளி ஏன் அவளைப் பயமுறுத்துற? பாரு மலர் நடுங்கிட்டா.” காளியை அதட்டினார் ருத்ரமூர்த்தி.

“மலர் நாங்க சொல்றதக் கேளு உடனே கிளம்பு இப்பவே சென்னைக்குப் போகலாம் வா.” துணிப்பைத் தூக்கி கொண்டான் இளமாறன்.

மலருக்கோ தலையும் புரியல காலும் புரியல.

“என்ன எனக்குப் புரியல, நாளை மறுநாள் கல்யாணத்தை வச்சிட்டு இப்ப போ போ னு விரட்டுறீங்க.” புருவம் சுருக்கி மலர் விசாரிக்க,

“வர வர நீ ரொம்ப கேள்வி கேட்கிற? இங்க பாரு மலர் இப்ப பேசுறதுக்கு டைம் இல்ல. உங்க அப்பா வரதுக்குள்ள தயவு செய்து போயிடு.” கையெடுத்துக் கும்பிட்டாள் காளி.

“அதான் ஏன்? எனக்கு இப்ப காரணம் தெரியனும். நீ வா ன்னா வருவதற்கும் போ ன்னா போவதற்கும் நான் என்ன கீ கொடுக்கிற பொம்மையா?” முதல் முறையாக மலர்க் கேள்வி எழுப்பிட, ஆச்சரியத்துடன் பார்த்தனர் அம்மூவரும். “இதுவரை இல்லாத சுயச் சிந்தனை எப்படி வந்துச்சு” ஐய்யம் அவர்களுக்கு.

அது என்னமோங்க முட்டா பீஸ் எல்லாம் முதல் இராத்திரி முடிஞ்சு வெளியே வரவும் முற்றும் உணர்ந்த ஞானியா மாறிடுறாங்க. ஆடவன் கை வன்னத்தில் சிலை உருக்குலைந்தாலும் அறிவு சீராகிடுது.

இவள் மட்டுமென்ன அதில் விதிவிலக்கா?

மலர்விழி இன்னும் கிளைமாக்ஸ் பார்க்கல தான் சொல்லப் போன இடைவெளியில் ஓடி வந்த கேஸு தான் அதற்கே மூளைப் பிரடி வழியாக வழிய ஆரம்பிச்சிடுச்சு.

கேள்வி ஞானம் மேலோங்க, தொடர்ந்து கேள்வி கனைகளை அவள் தொடுக்க, வேறு வழியின்றி உண்மை அனைத்தையும் அவர்கள் போட்டுடைக்க,

“சோ இதுக்குத் தான் போ போ னு விரட்டுறீங்களா? நான் போக மாட்டேன். இங்க தான் இருப்பேன்.” தீர்க்கமாகக் கூறியவள் அர்ச்சனைத் தட்டைச் சாமி அறையில் வைத்துவிட்டு நகல,

“லூசா டி நீ? நான் உன் வாழ்க்கை நினைச்சு கவலைப் படுறேன்?” ஆற்றாமையில் கத்தினாள் தாய்.

“நான் என் வாக்கைக் காப்பாத்தனும் னு நினைக்கிறேன்.” நிறுத்தி நிதானமாக மலர் உரைக்க,

“இங்க பாரு மலர் நான் உன் மாமா மட்டும் இல்ல உனக்கு ஆசானும் கூட நான் சொல்றதக் கேளு. இப்பவே இந்த நிமிடமே வீட்டை விட்டு கிளம்பு இளா உன்ன சென்னைக்குக் கூட்டிட்டுப் போவான்.” கெஞ்சுவது போல் பேசினார் ருத்ரமூர்த்தி.

“நானும் உங்க மருமகளா இல்லாம மாணவியாய் பதில் கொடுக்கிறேன். நீங்க தானே எனக்கு உயிரைவிட கொடுத்த வாக்கு தான் முக்கியம் னு சொல்லிக் கொடுத்தது. இப்ப நீங்களே அதை மீற சொல்றீங்க. இப்ப என்ன அந்த மாப்பிள்ளைப் பெரிய பிராடு என் வாழ்க்கையை நாசமாக்கிடுவான் அவ்வளவு தான? என்ன நடந்தாலும் பரவாயில்லை நான் அத பேஸ் பண்ணிக்கிறேன்.” உறுதியாக நின்றாள் மலர்விழி.

சேற்றில் விழுந்தாச்சு இனி ஜான் போனா என்ன முழம் போனா என்ன? வெந்ததைத் திண்ணுட்டு விதி வந்தால் சாவோம், துறவு மனப் பக்குவத்தில் மலர்விழி.

மூவரும் அதிர்ச்சியுடன் நிற்க, வீட்டிற்குள் வந்தார் ராஜதுரை.

அவரைப் பார்த்ததும் காளி, “வாங்க சார் வாங்க. இப்ப சந்தோசமா? வேண்டாத பிள்ளையைப் பலி கொடுக்கனும் னு முடிவு பண்ணிட்டீங்கல்ல.” கோபத்துடன் அவள் குற்றம் சாட்டிட, புருவம் சுருக்கினார் ராஜதுரை.

“இந்தாரும், நீர்ப் பார்த்து வச்சு பையனுடைய லட்சணத்தை.” என்ற இளமாறன், கோப்புகள் மொத்தத்தையும் தூக்கி அவர் முன்னால் போட, யோசனையுடன் அக்கோப்புகளை எடுத்துப் புரட்டினார்.

ஒவ்வொரு பக்கமாய் புரட்டிப் பார்த்தவர், “மலர்விழி..” என்று அழைக்க, கண்கள் கலங்கியது மலருக்கு. எத்தனையோ ஆண்டுகளுக்கு அப்பறம் தந்தையின் அழைப்பு அவளைத் திக்குமுக்காடச் செய்ய, ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவர் அருகில் ஓடினாள் மலர்விழி.

“இங்க பாரு மலர். இவங்க சொல்றது எல்லாம் உண்மைத் தான் அந்தப் பய பக்கா பிராடு தான், இருந்தாலும் அப்பா நான் சொல்றேன், நீ அவனைத் தான் கட்டிக்கணும் இப்ப சொல்லு. நீ அவனைக் கட்டிக்கிறீயா மாட்டியா?” அழுத்தி அவர்க் கேட்க, காதலா? தந்தைப் பாசமா? பட்டிமன்றம் அகத்திற்குள் ஓட, வலியில் கண்கள் கலங்கிட, இதழோ புன்னகையில் விரிந்தது மலர்விழிக்கு.

தொடரும்…

லைக் அண்ட் கமண்ட்ஸ் பிளீஸ்… 💐💐💐💐💐


Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *