அன்பு vs அன்பு

This entry is part 1 of 5 in the series அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அன்பு vs அன்பு

அத்தியாயம் 11


“என் செல்லம் என் சிணுக்கு என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என் புஜ்ஜு குட்டி என் பூனக் குட்டி.” என்ற பாடல் ரீங்டோனாக ஒலிக்க, தூக்கத்திலிருந்து கண்விழித்தான் வசந்த் யுகேந்திரன்.


அவனை அழைத்தது சாட்சாத் மலர்விழி அம்மையாரே தான். கைகளால் கைப்பேசியைத் துழாவி எடுத்தவன்,


“குட் மார்னிங் டி அம்மு.” கொட்டாவி விட்டபடியே காலை வணக்கம் கூறினான்.


“என்ன வசு சார் இன்னும் எழுந்திரிக்கலையா? எக்ஸாமிற்குப் படிக்கனும் னு சொன்னீங்க ஹாங்.” உரிமையுடன் அதட்டினாள் மலர்விழி.


அப்படி ஒன்னும் புடலங்காய் படிப்பெல்லாம் அவனுக்கு இல்ல. இருந்தாலும் படிக்கனும், எக்ஸாம் இருக்கு, அசைன்மெண்ட் இருக்கு. வைவா இருக்கு னு ஏதாவது ஒரு சாக்குப் போக்கு சொல்லி அவளை எழுப்பிவிடக் கூறுவான், வேற ஒன்னும் இல்ல அவள் குரல் கேட்டு எழுந்திரிக்கனும் அவ்வளவு ஆசை அவள் மேல் அவனுக்கு.


அவளுக்கு மட்டும் என்னவாம் அவனைப் பார்க்கலைனப் பொழுது அடையாது. அவனுக்கு ஈ எறும்பு கடிச்சா கூட அவளுக்குக் கண்கலங்கிடும். இந்த அன்புக்குப் பெயர் என்ன? தெரியாது அவளுக்கு. ஒரு குழந்தைத் தாய் மீது கொண்ட பாசம் போல் அவள் அன்பும் தூய்மையானது. அப்படி ஒரு பெயர் இல்லா நேசம் அவன் மேல் அவள் கொண்டது.


“போறேன் டீ பொண்டாட்டி.” குறும்புடன் கூறியவன் கூறிய பின் நாக்கைக் கடிக்க, அந்நேரம் பார்த்து அவள் அறைத் தோழியின் கைப்பேசி சத்தத்தில் இவன் விளித்த “பொண்டாட்டி” அவளுக்குக் கேட்காமல் போக,
“வசு சார் வசு சார் என்ன சொன்னீங்க.” என்றாள் மலர்விழி ஒரு காதை மூடியபடியே.


காதிலிருந்து கைப்பேசியை எடுத்து அதைப் பார்த்தபடியே, “கேட்காதே இது மட்டும் கேட்கவே கேட்காதே. அச்சோ அச்சோ மக்கு பொண்டாட்டி டீ நீயி. அழகா இருக்கிற பொண்ணுங்க எல்லாம் அறிவா இருக்க மாட்டாங்க னு சும்மாவா சொன்னாங்க.” என்றவன் செல்லமாகக் கோபத்தில் நாக்கைத் துருத்திவிட்டு, மறுபடியும் கைப்பேசியைக் காதில் வைத்து, “போண்டா டீ சாப்பிட்டியா னு கேட்டேன்.” என்றான் சிரிக்காமல்.


“இல்ல வசு சார். இனிமே தான் பால் குடிக்கப் போகனும்.”


“ஹும். பாலுஊஊ. ஏன் டீ நாயே வளரனும் னு ஆசையே இல்லை உனக்கு.” நக்கல் தொனியில் அவன்.
“போங்க சார். எப்ப பார்த்தாலும் என்ன திட்டுறீங்க.” செல்லமாகச் சிணுங்கினாள் மலர்விழி.


“சரி டி காலேஜ் முடிஞ்சதும் ஒழுங்கு மரியாதையா ரீ-ரிகார்டிங் வர?” கட்டளையாக அவன் கூறவும்,
“வசு சார் இன்னைக்குமா? நேத்தே நாற்பது டேக் போயிடுச்சு. உங்க அம்மு பாவம் இல்லையா?” கெஞ்சினாள் மலர்விழி.


“பாவமா தா இருக்கு. ஆனா எனக்கு உன்ன பார்க்கனும் போல இருக்கே. உன் கூட சண்டைப் போடனும் போல இருக்கே. நான் என்ன பண்ண?.” என்று மனதில் நினைத்துக் கொண்டவன் வெளியே, “இங்க பாரு மலர் உனக்கே தெரியும் ல நான் வேலையில ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஹாங், அப்பறம் சொல்ல மறந்துட்டேன் பாரு இன்னைக்கு மீன் வாங்க போறேன். ஒழுங்கா வந்து சமைச்சு தர.” அதிகாரம் தூள் பறந்தது.
ஒரே ஒரு நாள் தெரியா தனமா, மீன் குழம்பு வச்சி குடுத்துட்டாங்க. மீனே சாப்பிடாதவன் அவள் மீன் மூள் எடுத்துப் பதமா கொடுத்து அவனுக்குப் பரிமாறவும் அதிலிருந்து வார வாரம் மீன் குழம்பு வை மீன் குழம்பு வை னு ஒரே அடம்.


“ஐய்யோ வசு சார் மறுபடியும் மீனா?” என்று அவள் மலைக்க மலைக்க, கைப்பேசியை அணைத்துவிட்டு அழகாக மென்னகைப் புரிந்தான் வசந்த்.


கடந்த ஒரு வருட காலமாக அவளிடம் தன் காதலைத் தெரியப்படுத்தாமல் அவளை அணுவணுவாகக் காதலிக்கிறான் இவன். சொல்ல அவனுக்குத் தயக்கமோ வெட்கமோ இல்ல. மாறாக அவள் இன்னும் சிறுமியாக இருக்கிறாளே எப்படிப் புரிய வைக்க, அந்த மலைப்பு தான் அவனுக்கு.


அதிரடியாக ஏதாவது செய்து புரிய வைக்கலாம். அன்று கடலுக்கு அழைத்துச் சென்றது போல் ஏதாவது. ஆனால் அவளுக்கு உணர்ச்சி வர வைப்பதற்குள் இவனுக்கு எக்குத்தப்பாக அல்லவா உணர்ச்சி வந்து தொலைக்கிறது. அதைக் கட்டுப்படுத்த இவன் படும் பாடு இருக்கே அதைச் சொல்லி மாளாது.


அதன் பொருட்டே பொறுமைக் காக்கிறான். ஆனால் அவள்? அவன் சும்மா இருந்தாலும் சண்டாளி நாலா பக்கமும் வந்து அவனை விடாமல் அவனைக் கேள்வி கேட்டே இம்சிக்கிறாள்.


அன்று ஒரு நாள் அப்படித் தான், எப்பவும் பாடல் கேட்டுக் கொண்டே எடிட்டிங் செய்வது அவன் வழக்கம். அதே போல் அன்றும் பாடல் ஒன்றை மிதமான சத்தத்தில் வைத்து விட்டு அவன் வேலைப் பார்க்க, அவன் அருகில் மயிலும், மலரும் இருந்தார்கள்.


பாட்டு இராவணன் படத்திலிருந்து. “கள்வரே கள்வரே” என்று ஒலித்துக் கொண்டிருந்தது.
“ஆஹா என்ன லைனு, உறவே என் உறவே, உடைக் களைவீரோ, உடல் அணிவீரோ.. ப்ப்பாஆஆ என்னம்மா பீல் பண்ணி எழுதியிருக்காரு.” வசுவின் தோள் தட்டி புளங்காகிதம் அடைந்தான் மயில்.


“டேய் அதுக்கு ஏன் டா என்ன அடிக்கிற?” எரிச்சலுடன் இவன் கத்த,


“பீல்ங் டா மச்சான் பீல்ங்.. ஐய்யோ ஐய்யோ முக்கியமாக இந்த லைன்ன கவனி டா, வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்குத் தெரிகிறதா?” ராகம் போட்டுப் பாடிய மயில், அடுத்து, “அப்பப்பா என்ன லைன்னு பாருடா பாரு இது மாதிரி எழுதுறதுக்கு எல்லாம் இனி ஒருத்தன் பொறந்து தான் வரனும். என்ன இருந்தாலும் கவிஞர்க் கவிஞர்த் தான். தமிழ் இலக்கணத்தையும் ஒரு பெண்ணையும் ஒப்பிட்டு என்னம்மா எழுதியிருக்காரு.” என்று அவன் சில்லறையைச் சிதற விட, “அடேய் இவளைக் கூட வச்சுக்கிட்டு இப்ப இந்தப் பேச்செல்லாம் தேவையா? இவ சும்மாவே இருக்க மாட்டாளே சந்தேகத்திற்குப் பொறந்தவ ஏதாவது கேள்வி கேட்டா நான் என்ன பண்ண?..” உள்ளுக்குள் புலம்பியபடியே வசு மலரைப் பார்க்க, அவன் நினைத்தது போலவே அவள் புருவம் சுருக்கி யோசித்துக் கொண்டிருந்தாள்.


“ஆச்சச்சோ.” என்றவன் பதற்றத்தில் ஐந்து விரலையும் வாயில் வைத்து நகம் கடிக்க ஆரம்பித்தான்.


அவன் நினைத்தது போலவே அவளும், “மதன்னா அது என்ன வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்?” என்றிட, இருவரும் ஒருவரை ஒருவர்ப் பார்த்துப் பேய் முழி முழித்தனர்.


“சொல்லுங்கன்னா அது என்ன வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்.” விடாமல் அவள் அங்கே நிற்கவும்,


அவள் கேள்வியில் பதறிய மயில், “இங்க பாரும்மா தங்கச்சி. இந்த மாதிரி டவுட்டெல்லாம் நீ இவன் கிட்டவே கேளு. இவன் தான் அதில் எக்ஸ்பர்ட்.” வசுவை நேக்கா கோத்துவிட்டுடு அவன் ஜகா வாங்கிக் கொள்ள, “விஷம் விஷம் மூடிட்டுப் பாட்டை மட்டும் கேட்கவேண்டியது தான? இப்ப இதெல்லாம் நான் கேட்டேனா? கேட்டேனா டா?” பற்களை நறநறவெனக் கடித்து இவன் உறும, வசுவின் கோப பார்வையைப் புரிந்து கொண்ட நண்பனோ, “அடியாத்தி என்ன இப்படி முறைக்கிறான்? ஆஹா சிக்கினோம் சிதைச்சிருவான்.” குறுகுறுப்பார்வையுடன் யோசித்து மயில், “அப்பறம் மச்சான் தாகத்துல தொண்டை அடைக்கிற மாதிரி இருக்கு. குடிச்சிட்டு வாறேன்.” உருண்டபடியே அவன் ஒடிவிட,


“வசு சார்ச் சொல்லுங்க வசு சார். தமிழ்ப் புணர்ச்சி விதிக்கும் பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்?”


“ஏதே புணர்ச்சி விதியா? இவ என்ன டபுள் மீனிங் ல கேள்வி கேட்குறா? தெரிஞ்சு தான் கேட்கிறாளா? இல்லத் தெரியாம தான் கேட்கிறாளா? ஒருவேளைத் தெரிஞ்சே என்ன அலைய விடுறாளோ?” என்று எண்ணியவன் வெளியே, அசடு வழிந்தான்.


இதை எல்லாம் நினைத்தபடியே உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற் கொண்டவன் பின் குளியலறைச் சென்றான்.


படிக்கட்டு தேகம் தெரிய துண்டை இடுப்பில் கட்டியபடியே வெளியே வந்தவன், தலையைத் துவட்டியபடியே அவ்வறையிலிருந்து அவர்களது புகைப்படத்தைப் பார்த்தான்.


ஆள் உயரம் இருந்த அப்புகைப்படத்தில் இருவரும் ஒருவர்த் தோளில் ஒருவர்ச் சாய்ந்தபடி நின்றிருந்தனர்.


முத்து நிற லெஹங்க சோளியில் அவளின் பளிங்கு இடைச் சிறிதாகத் தெரிய, அதை விரலால் இவன் வருட, அதே நேரம் அம்மெல்லிடையை இன்னொரு கையும் தடவியது. அக்கைக்கு உரியவன் தனஞ்செயன். பிரபல சினிமா இயக்குநர். பல மசாலா படங்களைத் தமிழ்த் திரை உலகிற்குக் கொடுத்துத் தனக்கென ஒரு ரசிகர்க் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவன்.


அக்காகிதத்தில் அப்படி அவனுக்கு என்ன தெரிந்ததோ, அவனது கண்கள் லஞ்ஞையின்றி அவளை மொய்த்தன.


“சார்ச் சார்..” விளித்தபடி அவ்வறைக்குள் வந்தான் அவனது அசிஸிட்ண்ட் ரமேஷ்.
“ம்ம்..” குரல் மட்டும் வந்தது ஆனால் அவன் கண்கள் அவ்விடத்திலேயே அப்புகைப்படத்திலேயே.


“அந்த நடிகை அட்ஜஸ்மெண்டிற்கு ஓகே சொல்லிட்டாங்க. எந்த ரூம் புக் பண்ணட்டும் சார்?”


“அவளை வேண்டாம் னு சொல்லிடு. எனக்கு இவ வேணும்.” கையிலிருந்த நாளிதழை அவன் முன் தூக்கிப் போட்டான் தனா.


“சார் இந்தப் பொண்ணா அந்த அன்பு vs அன்பு சீரிஸ்ல நடிச்சப் பொண்ணா?” புருவம் உயர்த்தினான் ரமேஷ்.


“ம்ம்.. இவ தான் இவளைப் பத்திய எல்லா டிடைய்ஸும் எனக்கு உடனே வேணும். டூ இட் இமிடியட்லி.” கட்டளையிட்ட தனாவின் கை விரல்கள் மறுபடியும் அவளின் புகைப்படத்தைத் தழுவ தொடங்கியது.


அந்நேரம் அதே நேரம் ராஜதுரையின் கையிலிருந்த நாளிதழுக்கு மட்டும் ஆயுசு குறைவு போல, அவர்க் கையில் சிக்கி கிழியத் தொடங்கியது.


“என்ன டி இது? என்ன நடக்குது அங்க? நான் ஒருத்தன் கூட இல்லனதும் தாயும் மவளும் இஷ்டத்திற்கு ஆடுறீங்களோ? ஹாங். சொல்லுடீ” ஏகத்திற்கும் கத்தினார் அவர்.


“இப்ப நாங்க என்னங்க பண்ணிட்டோம்? எதுக்கு இவ்வளவு கோபப் படுறீங்க.” பதில் கேள்வி அவர்க் கேட்க,


“போட்டேனா தெரியும். என்னடி ஜெயிலில் தானே இருக்காரு என்கிற மெதப்ப? என்னடி இதெல்லாம். எவன் டி அவன் அவன் கூடப் போய் மலரை நடிக்க விட்டுருக்க?” கர்ஜனையாக அவர்க் கூறவும், “ப்பு.. இது தான் உங்க பிரச்சனையா? அந்தப் பையன் நல்ல பையன் தாங்க. ஒரு நல்ல விஷயத்திற்காகச் சீரிஸ் ஒன்னு ஆரம்பிக்கப் போறோம். தயவு செய்து மலரை எங்க கூட நடிக்க வைக்க முடியுமானு எவ்வளவு தன்மையா கேட்டான் தெரியுமா?” என்றாள் பத்ரகாளி.


“ஓஹ் உன்கிட்ட வந்து அவன் பர்மிஷன் கேட்கவும் உங்களுக்கு உச்சி குளிர்ந்து போச்சுல. அதான் மேடம் பர்மிஷன் கொடுத்திருக்கீங்க, முத அவன் யாரு தெரியுமா டி? அந்தப் பொறுக்கி பய தான் என்ன ஜெயில தூக்கிப் போட்டது. அவனுக்கா டீ நீ சப்போர்ட் பண்ற?” கண்கள் சிவந்து பசி கொண்ட சிங்கமாய் அவர் கர்ஜிக்க,


“நீங்க ஜெயிலுக்குப் போனதுக்குக் காரணம் அவன் இல்ல, உங்க ஜாதி வெறி. அதுக்கு அவன் என்ன பண்ணுவான்? அப்புறம் என்ன சொன்னிங்க? ஹான் அவன் பொறுக்கியா? கடந்த ஒரு வருஷமா இரண்டு பெரும் ஒன்னா நடிச்சிருக்கங்க. ஒரு ஸீன் கூட மலரை அவன் தவற கட்டினதே இல்ல, இத்தனைக்கும் அது ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப் சீரிஸ். அதுல ஒரு கிஸ் ஸீன் கூட வைக்கல்ல, அவனைப் போயா பொறுக்கி னு சொல்லுறீங்க? உங்களுக்கு இன்னும் சந்தேகம் ன்ன நீங்களே பாருங்க? என்ற காளி அவரிடம் கைப்பேசியைக் கொடுக்க, அவரும் முதல் அத்தியாயத்திலிருந்து கடைசியாக வந்த அத்தியாயம் வரைப் பார்க்க, அத்தனையும் அவ்வளவு நேர்த்தியாக எடுத்திருந்தான் வசந்த்.
அவர்கள் காட்டும் ரொமான்ஸ் மொத்தமும் வெறும் பார்வையாலும், சின்ன சின்ன அணைப்பாலும், வசனங்களாலும் இருக்க, பார்க்கக் கொஞ்சம் கூட விரசமின்றி அதே நேரம் மிகுந்த காதலுடன் இருந்தது ஒவ்வொரு விழியமும்.


புருவம் சுருக்கி ஒவ்வொரு விழியமாகக் கழுகு பார்வைப் பார்த்தவருக்கு மட்டும் இதையெல்லாம் தாண்டி ஏதோ ஒன்று உள்ளத்தை உறுத்த, “நான் சீக்கிரம் வெளியே வரணும் ஏற்பாடு பண்ணு.” உரத்த குரலில் உருமினார் மலரின் அப்பா ராஜதுரை.


தொடரும்.. 

லைக் அண்ட் கமெண்ட்ஸ் பிளீஸ். 💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *