என் விரல் தேடும் மெல்லிசை நீ
அத்தியாயம் 32
அவனது ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒரு சிறிய மாளிகை முன் வந்து நின்றது. ஓட்டுநர்க் கார்க் கதவைத் திறந்து விட, அவனது மெய்க்காப்பாளர்கள் சுற்றி நிற்க, இருவரும் அக்காரிலிருந்து இறங்கினர்.
இரு பெண்கள் அவளுக்கு ஆரத்தி எடுக்க, பிரஜனோ தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாதவன் போல் அவ்விடத்தை விட்டு அறைக்குள் சென்று விட்டான். அவர்கள், “வாங்க மேடம்.” என்று கூறி விட்டு உள்ளே சென்று விட, சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடியே கூடத்தில் நின்றவளுக்குக் கண்ணைக் கட்டி நடு காட்டில் விட்ட உணர்வு.
போட்டிருந்த ரோஜா பூ மாலையும் கட்டியிருந்த கூரைப் பட்டும் அவளைப் புது பெண்ணாகக் காட்டிட, அவள் மனமோ, தாயில்லா சிறு குழந்தைப் போல் தவித்தது.
மெல்ல நடந்து ஒவ்வொரு அறையாக அவனைத் தேடியவள் இறுதியாக ஒரு அறையில் அவனைக் கண்டடைந்தாள்.
அது படுக்கை அறைப் போல, விலையுயர்ந்த மெத்தை அங்கே போட பட்டிருக்க, அதன் அருகிலிருந்த இருந்த சிவப்பு நிற மெது இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் பிரஜன் அவன் கையில் மது இருந்தது.
“வாங்க மிஸஸ் கீர்த்தி பிரஜன் பாரி வேந்தன்.” என்று அழுத்தி அழைத்தவன் கையிலிருந்த மது குவளையை அருகில் இருந்த டீ மேஜையில் வைத்து விட்டு, கீழிருந்து சில சீட்டு கட்டுக்களை எடுத்தான்.
அதை அடுக்கி வைத்த படியே, “வா வந்து உட்கார்.” என்றவன் முன் எந்த இருக்கையும் இல்லாமல் போகவே புரியாமல் அவனுக்கு அருகில் சென்றவள் அவன் அருகில் அமர போக,
“என் பக்கத்தில் உட்காரும் அருகதை உனக்கு இல்லக் கீர்த்தி. எனக்கு முன்னாடி மண்டியிட்டு உட்கார்..” என்று அவன் அழுத்தம் திருத்தமாக கட்டளையிட, “நான் மண்டியிட்டு உட்காரனுமா?” கோபம் பொத்து கொண்டு வந்தது அவளுக்கு. கோபத்தில் அவனை முறைத்த படி அவள் நிற்க,
“கீர்த்தி உனக்கு ஒரு கதைச் சொல்லட்டுமா? குட்டி கதக் குட்டியோண்டிக் கத.” என்று அவன் கூறி முடிக்கவும் அவள் முகம் கலவரமானது. (தக்காளி இவன் கதைச் சொல்ல ஆரம்பித்தாலே அது வில்லங்கமா தானே இருக்கும்.)
“இந்தக் கறையான் இருக்குல கறையான், அதான் இந்த டேபிள் சேர் எல்லாத்தையும் அறிக்குமே அந்தக் கறையான். அது கஷ்ட பட்டு மண்ணைக் குழைத்துப் புற்று கட்டி வைக்கும். ஆனா அதை இந்தப் பாம்பு இருக்குல பாம்பு. ஐ மீன் ஸ்னேக் ஸ்னேக்கு. அது என்ன பண்ணும் தெரியுமா? நோகாமா அந்தப் புற்றுக்குள்ள போய் படுத்துக்கும். இப்ப அந்தப் பாம்புக்கு ஒரு நிமிஷம் போதுமா அங்கே இருக்கிற அந்தனைக் கறையானையும் உருஞ்சி திங்க, அதுலேயும் அந்த ராணி கறையான் இல்ல, ராணி கறையான் அதுக்கு பயங்கரக் கொழுப்பு. சாப்பிட கூட ரொம்ப டேஸ்டா இருக்குமாம். யு நோ.” என்றவன் இதழோரம் கேலி புன்னகை.
“என்ன பாம்பு என்ன கறையான்?” என்று யோசித்தவளுக்கு ஒன்னும் விளங்கவில்லை. ஆனால் இதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகிவிட, புருவம் சுருக்கி அவனைக் கூர்ந்து விழித்தாள் அவள்.
“என்ன கீர்த்தி புரியலையா?” என்று கேலியாகக் கூறியவன் அவள் முன் சில கோப்புகளைத் தூக்கி போட, அவசரம் அவசரமாக எடுத்தாள் அவள்.
ஒவ்வொரு பேப்பராகப் புரட்டியவளுக்கு மயக்கம் வராத குறை.
அவள் நிறுவனத்தின் பங்குகள் கிட்டதட்ட அறுபது சதவீதம் அவன் பெயரில் இருக்க, அதிர்ந்து விழித்தாள் கீர்த்தி.
“இது இது எப்படி நடந்துச்சு?” என்று அரண்டவளுக்குத் தனது மூளையை எப்படிப் போட்டு கசக்கினாலும் விடைத் தான் கிடைக்க வில்லை. இதுவரைக்கும் அவள் வெளியிட்ட பங்குகள் ஐம்பதுக்கும் குறைவு தான். “எப்படி அறுபது அவனிடம் சென்றது?” புருவம் இடுக்கி அவள் அவனைப் பார்க்க,
“என்ன கீர்த்தி நாம நாற்பது ஐந்து ஷேர்த் தானே வெளியிட்டோம்? அதுவும் பார்த்துப் பார்த்துப் பல பேருக்கு வெளியிட்டோமே, எப்படி இவன் கையில் மொத்தமா போச்சு னு பார்க்கிறியா? அனிதா.” என்று அவள் பிஏ பேர்க் கூறவும், “அனிதா?” என்றாள் கீர்த்தி பதட்டத்துடன்.
“ம்ம். அவ தான் அவளே தான். அன்னைக்கு நான் ஒரு கோடி கொடுத்து அவகிட்ட உன்னுடைய டேண்டர் வேல்யூ கேட்டதா வந்து சொன்னாளே, ஹாங் அதுவே நான் சொல்லச் சொல்லித் தான். அவளுக்குக் கொடுத்தது வெறும் ஒரு கோடி இல்லக் கீர்த்தி. ஒயிட் ஃபீல்ட் ல ஒரு அபார்ட்மெண்டே வாங்கிக் கொடுத்திருக்கேன். (இன்றைய நிலவரப் படி ஒயிட் ஃபீல்ட்டில் ஒரு சதுரடி நிலம் பதிமூன்றாயிரம் ரூபாய்) அப்பவே உனக்கு நான் செக் வச்சுட்டேன் கீர்த்தி. நான் தான் அவ்வளவு தூரம் எச்சரிக்கையா சொன்னேனே நீ மோதிட்டு இருக்கிறது பிரஜூ கிட்ட இல்ல, பக்கா கார்ப்பரேட் கிரிமினல் பிரஜன் பாரி வேந்தன் கிட்டனு கேட்டியா? நான் நினைச்சா நீலா குரூப் ஆஃப் கம்பெனி என்ற ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஆள் அட்ரஸ் இல்லாம போய்டும்.” என்றவன் அவன் கட்டி வைத்த சீட்டு மாளிகையைத் தட்டி விட, அத்தனையும் ஒரு நொடியில் சரிந்து விழுந்தது.
“இப்ப சொல்லு டி, இந்தப் பாம்பு இப்ப என்ன செய்யட்டும்? கறையான் எல்லாத்தையும் காலி பண்ணிட்டு ராணி கரையானையும் சப்புக்கூடி திங்கட்டுமா? இல்ல அமைதியா ராணி கரையானை மட்டும் வச்சு வச்சு திங்கட்டுமா?” என்றவனை அதிர்ச்சியுடன் அவள் பார்க்க,
“என் முன்னாடி முட்டி போட்டு உட்காரு டி கழுத.” என்று அவன் உட்ச ஸ்தானதில் கத்த, சட்டென மண்டியிட்டு அமர்த்தாள் கீர்த்தி, அவள் கண்கள் முழுவதும் கண்ணீர்.
ஐந்து வருடமாக அவள் வயிற்றைக் கட்டி வாய்யைக் கட்டி சேர்த்த நிறுவனம் அது, ஒரு நொடியில் பறிபோனதை நினைக்க நினைக்க நெஞ்சு குமுறியது அவளுக்கு.
கோபத்தில் அவள் அருகில் வந்தவன் அவள் கழுத்திலிருந்த அவனது சங்கிலியைப் பிடித்த படி, “இதைப் போடுற தகுதி உனக்கு இல்ல.” என்று கூறி பறித்தான்.
“அன்னைக்கு என்ன சொன்ன என்ன சொன்ன? கீர்த்தி நீலகண்டனா? இப்ப நீ யாரு டி?” என்றவன் அவள் பிரடியில் கை விட்டு அவளின் தலைமுடியைப் பற்றி உலுக்க, “கீ கீர்க் கீர்த்தி ப்பிரஜன் பாரி வேந்தன்..” என்றாள் நா தழுதழுக்க.
“ஹாங் கீர்த்தி பிரஜன் பாரி வேந்தன், அது ஊருக்கு, எனக்கு நீ யாருனு தெரியுமா? அடிமை அதுவும் பாலியல் அடிமை.” என்று அவன் அழுத்தி கூற, “பிரஜூ பிளீஸ்..” என்று அவள் ஏதோ சொல்ல வர,
“டோன்ட் கால் மீ பிரஜூ. கால் மீ சார். பிரஜூ னு கூப்படுற தகுதி உனக்கு இல்ல. கால் மீ சார்.” என்று அவன் அழுத்தி கூறிட, கதறி அழுதாள் கீர்த்தி.
“ஹனி டிராப் பண்றல ஹனி டிராப், உன்னை நம்பி தானடி உன் பக்கத்தில் படுத்தேன், அன்னைக்கு அந்த மாதிரி இருந்துட்டு என்னைய உதறி தள்ளிட்டுப் போனவ தானே நீ. ச்சை நீயும் ஒரு பொம்பள?” என்றவன் அவள் கைப் பற்றித் தூக்கினான். அவன் அழுத்தி பிடித்தில் சிவந்து வலித்தது அவ்விடம்.
“நான் ஏதோ ஒரு வார்த்தைச் சொன்னதும் கோவிச்சுட்டுப் போன பாரு அது மாஸ்ஸு, வைராக்கியத்துடன் கெத்தா வந்த என் முன்னாடி நின்ன பாரு அது மாஸ்ஸு, ஹட்ஸ் ஆஃப் டி. ஆனா கடைசியா பண்ண பாரு? சீய்.. வெறும் கழுத்தா படுக்கும் போது எனக்கு விபச்சாரி போல இருக்கு னு சொன்னீயே. பொண்டாட்டி செய்ற வேலையா டி அதெல்லாம்.” என்று அவன் உறும,
“பிளீஸ் பிளீஸ் கொஞ்சம் ஏன் பேச்சைக் கேளுங்க..” கண்ணீரை மென்று விழுங்கி அவள் கெஞ்ச, “என்ன கேட்கணும்? சொல்லு என்ன டி கேட்கணும்? உன்னைப் பார்க்கப் பார்க்கக் கொல்லத் தோணுது. ஆனா சீய். நீ நீ எல்லாம் இதுக்குத் தாண்டி லாயக்கு.” என்றவன் அவளைப் படுக்கை மேல் எறிந்தான்.
மெத்தை அவளை உள்வாங்கி வெளியே தள்ள, அவள் மேல் அவனுக்கு இருந்த கோபமா? பிரிவால் வந்த ஆத்திரமா? இல்லை அவன் அருந்திய மதுவா? எதுவோ அவனை மிருகம் ஆக்கிட, அவள் மேல் விழுந்தவன் அன்று அவளுக்கு நரகத்தைக் காட்டினான்.
நடு ராத்திரி கண் விழித்தாள் கீர்த்தி.
உடல் அனலாய் கொதித்தது. அவன் கடித்து வைத்ததில் பால் வண்ண மேனி சிவந்திருந்தது. உதட்டியில் ரத்தம் கசிந்தது. மார்பு முழுவதும் அவன் பற்தடங்கள். அதன் மீதே கன்னம் வைத்து அவன் அசந்து தூங்கிட, உடலோ ரணமாய் வலித்து எரிந்தது.
மெல்ல இவள் அவனை விலகி தள்ளிட, அவளது கையை இறுக பற்றியிருந்தவன் அவள் விலகவும், முழித்துக் கொண்டான். மறுபடியும் மிருகமாகி அவளைப் பிடித்து இழுத்தவன் இரவு முழுவதும் அவளை நையப் புடைத்தான்.
அன்றிரவோடு அவள் வாழ்வு இருண்டுவிட, பொழுதோ மெல்லப் புலர்ந்தது.
இப்போதும் அவன் அவ்வாறே அவள் மார்பில் கன்னம் பதித்துச் சிறு குழந்தைப் போல் உறங்க, மெல்ல அவனை விலகி தள்ளியவள் மெத்தையை விட்டு எழ முயன்றாள், முடியவில்லை அவளால்.
தலைச் சுற்றிக் கண்கள் இருண்டது. மெஷினில் மாட்டிய கரும்பாக அவளை அவன் சக்கையாகப் பிழிந்திருக்க, எழுந்து நடமாடவே ஜீவன் இல்லை அவளுக்கு.
பலமின்றி பொதென்று மெத்தை மேல் அவள் விழ, காலால் மிதித்துத் தள்ளினான் பிரஜன் அவளை.
பொத்தென்று கீழே விழுந்து கிடந்தவளைப் பார்த்து, “போடி இனி எனக்கு ஆயா வேலை எல்லாம் நீ தான் பார்க்கணும். போ பிரஷ் பேஸ்ட் எல்லாம் எடுத்து வை.” என்று கட்டளையிட்டு அவன் படுத்து கொள்ள, தள்ளாடிய படியே குளியலறைச் சென்றாள் கீர்த்தி.
தண்ணீர்ப் பட்டு காயம் யாவும் வலித்திட, கலங்கிய விழி நீரைத் துடைத்த படியே குளித்தவள் அவனுக்கு அடிமை வேலைச் செய்யத் தொடங்கினாள். வேற வலி.
“டிரஸ் எடுத்து வை டி.” “எங்க என் வாட்ச்?” “ஃபீட் பண்ணு டி.” என்று ஸ்கூல் ஆயா ரேஞ்சிற்கு வேலை வாங்கி விட்டு அவன் ஆபீஸ் சென்று விட, அவள் வீட்டைத் தேடி கண்டு பிடித்து அவளைப் பார்க்க வந்தான் சர்வேஸ்வரன்.
தொடரும்..
பிளீஸ் ரீடர்ஸ் கொஞ்சம் லைக் பண்ணுங்க. கமெண்ட் கொடுங்க. உங்கள் ரிப்ளை எதிர்ப்பார்த்து நான். 💐💐💐💐💐💐
