சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லத்தான் நினைக்கிறேன்… 3
அந்த கண்காட்சியை திறந்து வைப்பதற்காக CM வருகை புரிந்து இருந்தார். அதனால் நிற்க கூட நேரம் இல்லாமல் பறந்து கொண்டு இருந்தான் சத்யன்…
காலை பதினோரு மணிக்கு சரியாக முதல்வர் வந்து கண்காட்சியை திறந்து வைத்தார்…
அங்கிருக்கும் ஸ்டால்கள் ஒன்றிரண்டை மேற்பார்வை செய்து விட்டு அவர் கிளம்பிவிட எஞ்சிய ஸ்டால்களை மேற்பார்வையிட மெதுவாக சென்றான் சத்யன்..
ஒரு ஸ்டால் முன்னே நின்று ஒரு ரெட்வுட் வளையல் பாக்ஸை காட்டிக் கொண்டு இருந்தாள்.. மதி.
அவளை பார்த்ததும் உற்சாகம் பீறிட்டது சத்யனுக்கு…
என்ன இது நான் போற இடத்தில் எல்லாம் இவளும் இருக்கிறாள்.
இது கடவுளின் திருவிளையாடலா. இவள் எனக்காக படைக்கப் பட்டவள் என்று கடவுள் எனக்கு சொல்லாமல் சொல்வதற்காக அவளை என் கண் முன்னே காட்டிக் கொண்டே இருக்கிறார. அன்று என்னடா என்றாள் அம்மாவிற்கு கிஃப்ட் வாங்க சென்ற கடையில் இருந்தாள். இங்கே இந்த கண்காட்சி நடைபெறும் இடத்திலும் இருக்கிறாள்.
அப்படி என்னரால் இவள்
எனக்கே எனக்கா.. என்ற பாடல் வரிகள் போல மனமும் யோசித்தது.
யோசித்தபடியே அந்த ஸ்டாலை நோக்கி நடன்தான் சத்யன்..
கூட்டம் அதிகமாக இருந்தது.
மதி சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டு இருந்தாள்..
ஹாய் என்று அவளை அழைத்து கையாட்டினான் சத்யன்.
அவள் விழிகளில் வியப்பு மேலிட இங்கே எங்கே என்று சைகை செய்தாள்.
சத்யன் கலர் உடையில் இருந்ததால் அவன் போலீஸ் கமிஷனர் என்று அறியவில்லை..
சும்மா என்று தோல்களை குலுக்கினான் சத்யன்..
அவள் மயில் வண்ண புடைவையில் மிகவும் அழகாக மிளிர்ந்தது அவன் மனதை கொள்ளை கொண்டது.. அவன் அவன் நிலையை மறந்து அவளை ரசித்துக் கொண்டு நின்றிருந்தான்…
அவன் பார்வையால் தன்னை விழுங்குவதை பார்க்காமலே உணர்ந்து கொண்டாள் மதி.
முகம் அந்திவானமாக சிவக்க தலை குனிந்த படியே வந்திருந்த கஸ்டமர்களை கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் பாரவை அவளை தர்ம சங்கடப் படுத்தியது.
இருவர் உள்ளத்திலும் சொல்லாமல் எதோ ஒன்று தடம் புரல்வது போல இருந்தது..
ஒரு கஸ்டமரிடம் ஒரு பொருளை காட்டி அதை பற்றி விளக்கிக் கொண்டே அவனை லேசாக நிமிர்ந்து பார்த்தாள் மதி.
அவளின் பார்வையோ ஆயிரம் கதை சொல்லியது சத்யனுக்கு. ஆனால் அவளின் மனதோ எதையோ சொல்லத்தான் நினைக்கிறேன் உன்னிடம் ஆனால் சொல்ல முடியாமல் எதோ ஒரு தடை எனக்குள்ளே என்று புலம்பியது..
அவளின் தவிப்பை உணர்ந்த சத்யன் மேலும் அவளை கஷ்டப் படுத்தாமல் நான் சுற்றி பார்த்து விட்டு அப்புறமாக வருகிறேன் என்று விடை பெற்று சென்றான்..
அவன் போவதையே ஒரு ஏக்கத்தோடு பார்த்தாள் மதி..
மதியின் கடையில் அன்று கூட்டம் அலை மோதியது அவளிடம் இருந்து யுனிக்கான பொருட்கள் மக்களை கவர்ந்தது…
அவள் கடையில் கூட்டம் அலை மோத கன்னட இரு கண்கள் நெருப்பு துண்டங்களாக ஜொலித்தது..
மதியின் கடைக்கு எதிர் வரிசையில் ஆறு கடைகள் தள்ளி இருந்த கடையில் இருந்த ஒருத்தி தான் மதியை எரித்து விடுவது போல பார்த்து வெந்து கொண்டு இருந்தாள்..
உணவு இடைவேலை வந்தது.. கடையில் வேலை செய்யும் பெண்கள் உணவு கொண்டு வந்து இருக்க அவர்களின் பாது காப்பில் கடையை விட்டு விட்டு வெளியே சாப்பிடுவதற்காக சென்றாள். மதி.
சாப்பிட்டு முடித்து அந்த பெண்ணின் கடை வழியாக திரும்பி வந்து கொண்டு இருந்தாள் மதி..
அவளை பார்த்ததும் குரூறத்துடன் யோசித்து அந்த பெண் மதியை அழைத்தாள் எதோ டவுட் கேட்பது போல என்ன என்று கேட்க மதியும் எதார்த்தமாக கடைக்குள் நுழைந்தாள்..
அவள் அருகில் சென்றதும் அந்த பெண் சட்டென்று பெப்பர் ஸ்பிரேயை எடுத்து மதியின் கண்களில் அடித்தாள்..
மதி “ஏய் என்று கத்தியபடியே கண்களை கசக்க அந்த நேரத்தை பயன் படுத்திக் கொண்டு அவளும் அவள் கடை பெண்ணும் அவளை பிடித்து தர தர என்று இழுத்துக் கொண்டு போய் உள்ளே இருந்த அறையில் தள்ளி பூட்டினர்.
அவர்கள் கடை யாரும் இல்லாமல் காத்து வாங்கிக் கொண்டு இருந்ததால் இது அவர்களுக்கு வசதியாக போய் விட்டது தப்பு செய்வதற்கு…
“ஏய் கதவை திற ஏன் இப்படி பண்ற உனக்கு என்ன வேண்டும்” என்று உள்ளிருந்து கத்தினாள் மதி…
“எனக்கு என்ன வேணுமோ நீ யாருடி எனக்கு தருவதற்கு இங்கே எதுக்கு வந்து கடை போட்ட நான் நிரந்தரமாக இங்கே கடை வைத்திருப்பவள். ஒரு நாள் வந்து நீ கடை போட்டு என் கஸ்டமார்களை உண்பக்கம் இழுக்க பார்க்கிறாயா.?
பாரு உன்னால் என் கடைக்கு யாருமே வரவில்லை..” என்று பொரிந்தாள் அந்த பெண்
இது எல்லாத்துக்கும் காரணம் நீதாண்டி என்று ஆத்திர மிகுதியால் கத்தினாள்..
“ஏய் உன்னோட பொருட்கள் தர்மானதாவும் நியாமான விலையிலும் இருந்தாள் உன் கடையை தேடி எல்லோரும் வருவார்கள்.. அதில் நீ தவறு செய்து விட்டு என்னிடம் கோபப்படுவது என்ன நியாம்..” என்று கேட்டாள் மதி.
“என்னோட நியாத்தை பற்றி நீ பேசாத.. நீ இங்கிருந்து கடையை மூட்டை கட்டிக் கொண்டு ஓடும் வழியை பாரு அப்பா தான் விடுவேன் உன்னை” என்றாள்…
“வேண்டாம் இதெல்லாம் ரொம்ப தப்பு சொன்னா புரிஞ்சிக்க அப்புறம் நான் போலீஸை கூப்பிட வேண்டி வரும்…”
“நல்லா கூப்பிடு யாரு வேண்டாம் என்று எங்களுக்கும் மேலிடத்தில் ஆட்கள் இருக்காங்கம்மா உன்னை ஒன்னும் இல்லாமல் செய்து விடுவேன் தெரியுமா.? என்று கடுமையாக மிரட்டினால்…
அவளின் குரலில் இருந்த வெறி மதிக்கு புரிந்தது இவள் தன்னை இன்று லேசில் விட மாட்டாள் என்று..
அவளிடம் நயமாக பேசினாள்.
“உனக்கு என்ன வேண்டும் சொல்லு நான் செய்கிறேன்” என்றாள்..
“நீ ஒன்னும் செய்ய வேண்டாம் இன்னைக்கு மாலை வரியிலும் இங்கேயே கிடா அது போதும்” என்றாள் எகத்தாலமாக.
அவள் தான் என்ன சொன்னாலும் கென்ஜினாலுமே விட மாட்டாள் என்று நன்றாக புரிந்து விட்டது மதிக்கு..
இன்னும் சிறிது நேரத்தில் கடையை வேறு மூட வேண்டும்… நான் இல்லை என்றால் வேலை ஆட்கள் தடுமாறி போய்விடுவார்கள் என்ன செய்ய என்று குழம்பினாள்…
அதே நேரம் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு மதியின் கடையை நோக்கி வந்தான் சத்யன்.
அவன் கண்களில் ஏமாற்றம் தெரிந்தது..
“ச்சே எங்கே போய் விட்டாள்.? அவளை கடையில் காணவில்லையே .. என்று யோசித்த படியே கடையில் இருந்த பெண்ணிடம் விசாரித்தான்…
“மேடம் எங்கே?” என்று..
“சார் லஞ்ச் சாப்பிட்டு வரேன் என்று மதியம் போனவர்கள் இன்னும் வரவில்லை .. எங்கே போனார்கள் என்றும் தெரியல போன் பண்ணாலும் எடுக்க மாட்டிங்கிறாங்க எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல சார்” என்று சொல்லி கங்கலங்கினாள்…
சத்யன் யோசனையானன் ..
“சரி நான் பாத்துக்கிறேன் நீங்க பயப்படாம இருங்க” என்று சொல்லி விட்டு நகர்ந்தான்..
இப்படி பொது இடத்தில் எந்த சத்தமும் இல்லாமல் அவளை யாரும் கடத்திக் கொண்டு போயிருக்க முடியாது..
அதனால் அவளாகத்தான் எதாவது முக்கிய வேளையாக போயிருப்பாள் வந்து விடுவாள் என்று தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டு தன் போனை எடுத்து அவள் நம்பருக்கு ட்றை பண்ணினான்.. அவள் போனை எடுக்கவில்லை…
சிறிது யோசித்து போன் எந்த எல்லையில் இருக்கிறது என்று கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டான்… தகவல் கிடைத்ததும் அவன் நெற்றி சுருங்கியது…
வேகமாக சென்று அந்த கடையின் சாத்தியிருந்த கதவை வேகமாக தட்டினான்…
கடையின் உள்ளிருந்த இரண்டு பெண்களும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து மிரண்டனர்..
“யாரு அக்கா கஸ்டமர் யாராவது இருக்குமா” என்று கேட்டாள்..
“இருக்கும் நீ போய் கதவை திறந்து இப்பொழுது விற்பனை இல்லைன்னு சொல்லி சாத்தி விட்டு வா என்றாள்…
அந்த பெண் போய் கதவை திறக்க அவளை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான் சத்யன்..
“ஏய் யார் நீ என்ன கலாட்டா பண்ண வந்திருக்கியா” என்று கத்தினாள் அந்த பெண்…
“ம்ம் உன் மாமனார் வீட்டுக் காரன் மதி எங்கே.? அவளை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்” என்று கேட்டான்…
“மதியா அப்படி யாரையும் தெரியாது எனக்கு நீ முதலில் வெளியே போகவில்லை என்றால் நான் போலீஸை கூப்பிடுவேன்.” என்றாள்.
“அப்படியா கூப்பிடு பாக்கலாம் நானும் ஒரு போலீஸ்காரன் தான்” என்று சொல்லி கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்..
சாத்தியிருந்த அறை கதவு கண்ணில் பட்டது டக் என்று அதை எட்டி உதைத்து கதவை திறந்தான்..
உள்ளிருந்த மதி அவனை பார்த்ததும் சத்யன் என்று ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டாள்…
“பயப்படாத மதி ஒன்னும் இல்ல வா போகலாம் என்று அவளை வெளியில் அழைத்து வந்தான்…
“அந்த பெண்ணை பிடித்து உலுக்கி மிரட்டி கேட்டுக் கொண்டிருந்தான் சத்யன் ஏன் இப்படி செஞ்ச ” அவர்கள் இருவரையும் அறைக்குள் வைத்து பூட்டினான்…
“வா மதி போகலாம் அவங்க எதுக்கு உன்னை இப்படி பண்ணங்க” என்று கேட்டான்…
மதி அந்த பெண் தன்னை திட்டியதிலிருந்து தான் புரிந்து கொண்ட விசயத்தை அவனிடம் சொன்னாள் சொல்லும் போதே அவ்வளவு நேரமும் பூட்டிய அறைக்குள் அவள் பட்ட பாடு நினைவு வர கண்கள் கலங்க அழுகையில் தேம்பினாள்.. அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான் சத்யன்.. அவன் மார்பில் முகம் புதைத்தாள் மதியழகி…
சத்யன் கட்டி அணைத்து ஆறுதல் சொன்னதும் மதிக்கு காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து கடைசியில் அவளுடைய இடத்தை கண்டு பிடித்து வந்து அடைந்தது போல நிம்மதியாக உணர்ந்தாள்…
########################
தொடரும்…..
வணக்கம் தோழமைகளே,
இது தொடரை பற்றிய உங்களது மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.
நன்றி,
ரமணிதமிழ் 😊🙏💖
