சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொல்லத்தான் நினைக்கிறேன்…  5
சத்யன் போவதையே பார்த்தபடி நின்ற மதி இவன் எப்படி தன்னை டார்லிங் என்று கூப்பிட்டு தன் அனுமதி இல்லாமல் தன் கன்னத்தில் முத்தம் வைக்கலாம் என்று அவன் மீது கோபப்பட முயற்சி செய்தால் ஆனால் ஏனோ முடியவில்லை…
என் மனம் இவன் பால் அந்த அளவுக்கு ஈர்க்கப்பட்டு இருக்கிறதா.? என்னுடைய மனதின் மூலையில் நான் இவன் செய்வதை எல்லாம் ரசிக்கிறேன்.? இதுவரை எந்த ஆணிடமும் ஏற்படாத சலனம் ஏன் இவனிடம் ஏற்படுகிறது.?
அவள் மனக்கண்ணில் இறந்து போன பெற்றோர்கள் தோன்றினார்கள் கண்கள் கலங்கியது மதிக்கு..
தன்னை சமாளித்துக் கொண்டு தன் உதவியாளர்களுடன் ஸ்டாலை காலி செய்துவிட்டு வீடு நோக்கி வண்டியை செலுத்திய மதி வீடு வந்து சேர்ந்ததும் உடையை கூட கழற்ற தோன்றாமல் அப்படியே போய் படுக்கையில் விழுந்து அழுது குமரினாள்..
 மறக்க வேண்டும் என்று நினைத்த நிகழ்ச்சிகள் எல்லாமே மீண்டும் அவள் கண் முன்னே நிழலாடியது…
அழுது அழுது களைத்து போனவள் அப்படியே கண்ணயர்ந்தாள்…
போனின் மணி அழைப்பில் திடுகிடு கண் விழித்தாள்..
போனை எடுத்து காதுக்கு கொடுத்தாள்..
“ஹலோ..”
“மதி என்ன அழுதாயா குரல் ஒரு மாதிரி இருக்கு? என்று கேட்டேன் மறுமுனையில் இருந்து சத்யன்…
அவள் மௌனமாக இருப்பதை கண்டு அவனே திரும்பவும் பேசினான்..
“மதி சொல்லு மதி எதாவது பிரச்சனையா.? நான் உடனே புறப்பட்டு அங்கு வருகிறேன் என்றான்..
“இல்லை வேண்டாம் இந்த இரவு நேரத்தில் நீங்க எல்லாம் வர வேண்டாம் நான் நன்றாகத் தான் இருக்கிறேன்..” என்று மறுத்தால் அவசரமாக…
“இட்ஸ் ஓகே ரிலாக்ஸ் நான் வரல சொல்லு என்ன பிரச்சனை போன்லையாவது சொல்லு.! சொல்லவில்லை என்றால்  நேரிலேயே வந்துடுவேன்..” என்று மிரட்டினான்..
அவன் அக்கறையை கண்ட மதியின் மனம் நெகிழ்ந்தது யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தது தவறா சத்தியன் எனக்காக இருக்கிறான் அவன் என் மேல் காட்டும் அக்கறை எனக்கு பிடித்திருக்கிறது..
 “சத்யன் நான் உங்களை நேசிக்கிறேன்” என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள் ஆனால் வாய் விட்டு அவனிடம் சொல்ல மறுத்தாள்…
“மதி எதுவாயிருந்தாலும் சொல்லிடு அந்த கடையில் நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருக்கியா.?
“இல்லை சத்யன் விபத்தில் இருந்து போன என் பெற்றோர்களை நினைத்தேன் அழுகை வந்துவிட்டது வேறொன்றுமில்லை” என்று சொன்னால்…
“ஓ.. ரொம்ப சாரீமா” என்று வருத்தப் பட்டான்…
“பரவாயில்லை சத்யன் என்றோ முடிந்து போன விஷயத்திற்காக இன்று அழுது என்ன பயன்” என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள்…
“மதி உனக்காக நான் இருக்கிறேன் எதைப்பத்தியும் கவலைப்படாம நிம்மதியா தூங்கு ஐ லவ், யூ ஐ லவ் யூ டார்லிங், ஐ லவ் யூ..” என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு போனை கட் பண்ணினால் சத்யன்..
சத்யன் அன்பை நினைத்து மனது ஆறுதல் அடைந்தது மதிக்கு..
                ##############
பீலமேடு சிக்னலில் நின்று இருந்த மதியின் காதுகளில் பழக்கப் பட்ட என்ஃபீல்டு வண்டியின் சத்தம் விழ ஆர்வத்துடன் சத்தம் வந்த பக்கம் கண்ணை ஓட்டினாள்…
அங்கே எதிர் திசையில் போலீஸ் உடையில் கம்பீரமாக சென்று கொண்டு இருந்தான் சத்யன்…
அவனை முதன் முதலாக அப்பொழுதுதான் போலீஸ் உடையில் பார்க்கிறாள் மதி..
பார்த்தவன் கண்கள் அதிர்ச்சியில் நிலை குத்தி நின்றது..
இவன் போலீசா இவ்வளவு நாள் எனக்கு இது தெரியாமல் போனதே..
எவ்வளவு திமிர் இருந்தா என்னிடம் தான் ஒரு போலீஸ் அதிகாரி என்று சொல்லாமல் காதல் நாடகம் போடுவான்… என்று கொதித்தவளின்  கண்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு ஏறியது…
மனமும் உடலும் பதறா பதற எப்படியோ வண்டியை ஓட்டிக் கொண்டு கடைக்கு வந்து சேர்ந்தாள்…
அரை மணி நேரம் கழித்து அவனிடம் இருந்து போன் வர எடுக்காமல் கட் பண்ணி விட்டாள்.. திரும்ப திரும்ப அழைத்துக் கொண்டே இருந்தது போன்.. அவள் எடுக்கவே இல்லை…
ஒரு மணி நேரம் கழித்து கடையின் வாசலில் வந்து நின்றது சத்யனின் பைக்…
பைக்கை ஸ்டாண்டு போட்டு நிறுத்தி விட்டு போலீஸ் மிடிக்கில் கம்பீரமாக அந்த உடைக்கே உடைய நிமிர்வுடன் உள்ளே நுழைந்தான் சத்யன்….
அவனை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டு உள் அறை நோக்கி போனாள் மதி…
“மதி நான் எத்தனை முறை கால் பண்ணினேன்.? ஏன் நீ போனை எடுத்து பேசவில்லை.? என்று கேட்டுக் கொண்டே இயல்பாக அவளின் பின்னால் சென்றான் சத்யன்…
“நான் உங்களிடம் இனிமேல் பேசமாட்டேன்.. இனி நீங்கள் என்னை பார்க்க வர வேண்டாம்..”
“ஏன் திடீரென்று உனக்கு என்ன ஆச்சு.?” என்று புருவம் சுளிக்க அவளை பார்த்து கேட்டான்..
“நீங்க ஒரு போலீஸ் அதிகாரி…”
“சோ வாட்.”
“எனக்கு போலீஸை கண்டாலே பிடிக்காது..”
“இது என்ன சில்லி தனமான பேச்சு. மதி..”
“உங்களுக்கு வேணும்னா இது சில்லியா தோனலாம் ஆனா எனக்கு அப்படி தோன்றவில்லை.”
சத்யனுக்கு யோசானையானது.. இவள் ஏன் போலீஸை வெறுக்கிறாள்.. இவள் வாழ்க்கையில் போலீஸ் மீது வெறுப்பு வரும் அளவிற்கு அப்படி என்ன நடந்திருக்கும் என்று நெற்றி சுருங்க யோசித்தான்..
“மதி என்ன விசயம் என்று சொன்னால் தானே தெரியும் எனக்கு பிளீஸ் உன் மனதை பாதிக்கும் பாதித்த விசயம் என்ன என்று என்னிடம் சொல்லு அப்பொழுதுதான் அதை தீர்க்க என்னால் ஆனதை செய்ய முடியும் ” என்று கெஞ்சினான்.. சத்யன்.
ஒரு போலீஸ் அதிகாரி அவன். ஆனால் தன் காதலுக்காக எப்படி தன்னிடம் கெஞ்சுகிறான் என்று அவளுக்கு மனம் நெகிழ்ந்தது..
கண்கள் கலங்கியது மெல்ல தன் வாழ்வில் கடந்து போன கொடுமையான நாட்களை பற்றிய விசயங்களை சொன்னாள்..
மதியழகி. அவள் அப்பா அம்மா என்று மூன்று பேர் மட்டுமே அடங்கிய அழகான, அன்பான  குடும்பம் அவர்களுடையது.. அவள் கல்யாணத்திற்கு என்று ஒரு 50 பவுன் நகையை சேர்த்து வைத்திருந்தார்கள் மதியின் பெற்றோர்கள்..
மதி தனது காலேஜ் கடைசி நாள் பார்ட்டி முடிந்து இரவு 10 மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தாள். வீட்டின் கதவு திறந்து நிலையில் இருக்க கண்டு திகைத்து போனாள்..
அது இப்பொழுதுதான் வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதி அதனால் அங்கொன்றும் இங்கொன்றும் தான் வீடுகள்.. அவள் வீட்டை ஒட்டி வேறு வீடுகள் இல்லை கொஞ்சம் தள்ளி இருந்தது..
மெதுவாக பயத்துடன் கதவை தள்ளி திறந்து கொண்டே அம்மா, அப்பா என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே போனாள் மதி ..
அங்கே அவளுடைய அம்மாவும், அப்பாவும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ந்து போய் அலரிச் சரிந்தாள்..
பின்னர் ஒருவாரு சுய நினைவை அடைந்து அழுது கொண்டே போலீஸுக்கு போன் செய்தாள்..
போலீஸும் வந்தார்கள் வந்து பார்த்து விட்டு பணம் நகை என்ன ஏது என்று விவரம் கேட்டு எழுதிக் கொண்டு மதியின் பெற்றோர்களின் உடல்களை எடுத்துக் கொண்டு சென்றார்கள்..
அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியோடு போஸ்ட்மார்ட்டம் முடிந்து வந்த பெற்றோர்களின் உடல்களை அடக்கம் பண்ணி விட்டு அனாதையாக வீட்டில் அழுது கரைந்தாள் மதி..
வீட்டில் அவளுக்கென்று சேர்த்து வைத்திருந்த அனைத்து நகைகளும் கொள்ளையடித்து போய் இருந்தார்கள்… கொஞ்சம் பணம் மட்டும் பேங்கில் இருந்தது…
ஒரு வாரம் துக்கத்திலேயே கழிந்தது… துக்கத்திற்கு வந்த உறவுகள் எல்லாம் சொல்லக் கூடாது என்ற பார்மாலிட்ஸை சரியாக ஃபாலோ செய்து சொல்லாமல் கிளம்பினார்கள்.. எங்கே சொன்னாள் வயது வந்த பெண் பிள்ளை தன் தலையில் ஏறி அமர்ந்து விட்டாள் என்ன செய்வது என்று..
போலீஸ் ஸ்டேசன் போய் அம்மா அப்பாவை கொலை செய்தவர்களை கண்டு பிடித்தார்களா என்று பார்க்க போன மதியை அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் அவளின் முதுகை தடவி விகாரமாக இளிக்க தன் ஆதரவற்ற  நிலையை உணர்ந்த மதி உடனே அந்த இடத்தை விட்டு அகன்றாள்..
கொலையை பற்றி விசாரிக்க திருட்டை பற்றி விசாரிக்க என்று அந்த சாக்கில் இன்ஸ்பெக்டர், மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் சகிதம் அடிக்கடி வீட்டிற்கு வந்து தொந்தரவு கொடுத்தார்கள்..
அவர்களிடம் இருந்து தன் பெண்மையை காப்பாற்றிக் கொள்ள பெரிதும் போராட வேண்டியதாக இருந்தது…
ஒரு முடிவு செய்தவளாக பேங்கில் இருந்த பணத்தை முழுவதுமாக எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் சென்னையை விட்டு கோவைக்கு வந்து சேர்ந்தாள்…
இங்கே கலை பொருட்கள் விற்பனை செய்யும் கடையை துவங்கி இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறாள்…
சுருக்கமாக தன் கதையை சொல்லி முடித்த மதி தொடர்ந்து சொன்னாள்.
“இன்று வரை என் பெற்றோர்களை கொலை செய்தவர்கள் யார் என்று அந்த ஆள் கண்டு பிடிக்கவே இல்லை..” 
“ஐ ஆம் சோ ஸாரி.. யாரோ சில பேர்கள் தப்பு செய்தால் ஒட்டு மொத்த போலீஸ்காரர்களும் தப்பு செய்தவர்கள் என்று அர்த்தமா? மதி நீ மெச்சூர்ட் பொண்ணு அப்படி இருக்க ..”
“வேண்டாம் சத்யன் தேவை இல்லாமல் போலீஸுக்கு நீங்க சப்போட் பண்ணாதீங்க.. அந்த நிகழ்வு என் மனதை ரொம்பவும் பாதித்து விட்டது பொது மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய இடத்தில் இருக்கும் போலீஸ்ஸே இப்படி ஒரு பெண்ணின் அநாதரவான நிலையை பயன்படுத்தி அவளை நாசம் பண்ண முயற்ச்சி செய்தாள் அவள் யாரிடம் போய் பாதுகாப்பு தருமாறு கேட்டு நிக்க முடியும்… அதனால் அன்றிலிருந்து போலீஸ் என்றாலே எனக்கு அருவருப்பு பயம் தான் வருகிறது.. இவர்களுக்கெல்லாம் ஆன் என்ற திமிரோடு அதிகாரமும் கையில் இருக்கு அப்புறம் என்ன சொல்லவே வேண்டாம் இவங்க ஆட்டத்தை பற்றி..” என்று பொரிந்து கொட்டினாள்..
“உனக்கு இப்ப நான் என்ன சொன்னாலும் புரியாது ஆனா உனக்கே தெரியும் நான் அப்படி பட்டவன் இல்லை என்று அதுமட்டும் இல்லாமல் நான் உன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறேன் என்று உனக்கே தெரியும் சோ ஐ லவ் யூ சோ மச்.. உன் மன மாற்றத்துக்காக என் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டும் என்றாலும் காத்திருப்பேன்.. சோ உன் முடிவை சீக்கிரம் மாத்திக்கோ டார்லிங்..” என்று சொல்லி அவள் எதிர்பாராத நேரத்தில் அவளை இருக அணைத்து அவளின் கன்னங்களில் மாறி மாறி முத்தம் பதித்தான்… பின்னர் அவளிடம் இருந்து விலகி “பாய் சொல்லிவிட்டு சென்று விட்டான்..
அவனுடைய எந்த செய்கையையும், தடுக்க முடியாமல் ஏன் தடுக்கவும் தோனாமல் திகைத்து போய் நின்றிருந்தாள்.. ஏனோ அவனின் அணைப்பு அவளுக்கு மிகவும் தேவையாகத்தான் இருந்தது…
அவனின் உண்மையான காதல் அவளுக்கு புரிந்து தான் இருந்தது ஆனால் போலீஸ் மேல் உள்ள வெருப்பினால் இவனின் உத்தியோகம் அவனுக்கு எதிராக நின்று முடிவு எடுக்க முடியாமல் தடுத்தது அவளை….
              ###################
தொடரும்….
வணக்கம் தோழமைகளே,
இந்தத் தொடரை பற்றிய உங்களது கருத்துக்களை வரவேற்கிறேன்.
நன்றி
அன்பு தோழி,
ரமணிதமிழ் ,☺️💖🙏

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *