உறவெனும் பொன் வீதியில்

This entry is part 21 of 29 in the series உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

20. உறவு….

மறுநாள் செந்தில் அவன் ஏற்கனவே வேலைக்கு சொல்லி இருந்த வேலைக்கு மாறன் ரெங்கனிடம் சொல்லி சென்றான்..

“மாறா நான் போயிட்டு சாய்ந்தரம் வந்திடுவேன்”
“நாங்களும் இன்னைக்கு எந்த பகுதியில் வைக்கலாம்னு ஒரு ரவுண்டு போகலாம்னு இருக்கோம்”
“சரி சைக்கிளிலில் போங்க. நான் பஸ்ஸில் போயிடுவேன்”
“எங்களுக்கு எந்த இடம்னு சரியா தெரியாதுல”
“நீ முதலில் மதுரையில் எந்த இடத்தில், அதாவது கடைகள் அதிகம் இல்லாத நிறைய இடங்கள் இருக்கும் ல. அதை பாரு. கடைய பேச நான் கூட வரேன்” என்றான்…

“சரி மச்சான் நீங்க கிளம்புங்க என்றான்”
இரதியிடம் சொல்லி விட்டு இவர்களும் அலைந்தனர்.. சில இடங்களில் கடைகள் அதிகம் இருந்தது. ஆனால் வீடுகள் குறைவாக இருந்தது…

இருவரும் இரண்டு நாட்கள் அலைந்து ஒரு இடத்தை பார்த்தனர்.. மிகவும் திருப்தியாக இருந்தது… அங்கு ஏற்கனவே பெட்டி கடையை வயதான தம்பதிகள் வைச்சு இருக்கிறார்கள்…
அந்த கடையின் பின் புறம் சமைத்து சாப்பிட்டு அங்கேயே ஒருவர் தாராளமாக தூங்குவது போல சின்ன அறை போல் வசதி இருந்தது.

“நீங்க ரொம்ப வருஷமா கடை வைச்சு இருக்கீங்களா?” ரெங்கனே பேசினார்..
“ஆமா பா. ஆனால் இனி எங்களால் முடியல. மளிகை கடையா வைச்சா இன்னும் நல்லா ஓடும்” அந்த வயதானவர் கூறினார்…

“எதுக்கு கடைய கொடுக்குறீங்க?” மாறனுக்கு அந்த சந்தேகம் இருந்தது..
குறைந்த விலைக்கு விற்பதால் எதாவது பிரச்சினை இருக்குமோனு..

“தம்பி எங்களுக்கு பிள்ளைகள் கிடையாது. இனி உழைக்கவும் தெம்பு இல்லை. அதனால் இதனை விற்று, முதியோர் இல்லத்தில் போய் சேர போறோம்” ஓய்ந்து போய் கூறினார்…

மாறனுக்கு யோசனை எடுத்த உடனே கடையை விலைக்கு வாங்கலாமா? முதன் முதலில் தொடங்கும் போது அகல கால் வைக்க வேண்டாம் என்று பல யோசனைகள்.. இவர்கள் ஏன் இந்த கட்டிடத்தை குறைந்த விலைக்கு விக்கிறார்கள் அதுல எதாவது வில்லங்கமா என்று பல ஆய்வுகள் மனதில்….
பெரியவர் கொடுத்த பதிலில் தான் அவன் நிம்மதியானான்…
மாறனுக்கு கடையில் எதுவும் வில்லங்கம் என்று தான் பயமே தவிர வேறு ஒன்றுமில்லை… அதனால் இப்போது பரம திருப்தி…

“தம்பி இன்னொரு விசயம்” அந்த பாட்டி இவர்களை பார்த்து கூறினார்..
“சொல்லுங்க அம்மா” ரெங்கன்.
“தம்பி எங்களுக்கு உதவியா ஒருத்தி வருவா. அவளுக்கும் யாரும் இல்லை.‌ உங்களுக்கு உதவியா அவளை முடிந்தால் வேலைக்கு அமர்த்திக்கோங்க” என்றார்…

“எங்களுக்கு தேவை பட்டால் வேலைக்கு வைச்சுக்கிறோம் அம்மா”
“ரொம்ப நன்றி பா. அவளை வந்து உங்களை பார்க்க சொல்லுறேன்” இப்படியாக அந்த கடையை பேசி முடித்தே வீடு வந்தனர்…

அடுத்த நாளே செந்திலோடு சென்று மறுபடியும் பார்த்து இடத்தை முடிவு செய்தனர்… எல்லோருக்கும் திருப்தியாக இருந்தது.. ஆனால் இவர்கள் இப்போ இருக்கும் ஊருக்கும் அந்த கடைக்கும் சற்று தூரமே…அது ஒன்று தான் யோசனை.. ஆனால் அதை அப்போது அவர்கள் பெரிய விசயமாக நினைக்கவில்லை….

“அந்த இடத்தை வாங்க பணம் போனால் சரக்கு வாங்க பணம் பத்தாதே?” ஒரு தொழில் தொடங்க எத்தனை யோசனைகள்..

“மாறா அந்த இடத்தை விட்டால் பிறகு அது மாதிரி இடம் நாம் பணம் வைச்சு இருந்தாலும் கிடைக்காது” ரெங்கன் கூறினார்…

“மாப்பிள்ளை அவர் சொன்னது சரிதான்.
நீ கவலை படாமல் அந்த கடையை வாங்கு”
“அப்போ சரக்கு வாங்க?”
“அதுக்கு நான் ஏற்பாடு பண்ணுறேன்”
“எப்படி மச்சான்”
“மாப்பிள்ளை எனக்கு தெரிந்தவர் ரொம்ப நம்பிக்கையான வர்களுக்கு குறைந்த வட்டியில் பணம் தருவார்”
“வட்டிக்கா?” அவனுக்கு மலைப்பு..

“மாப்பிள்ளை அது தினமும் கொடுக்கிற மாதிரி”
“வட்டியோடு சேர்த்தா?”
“ஆமா தினமும் அவுங்களே வந்து வசூல் செய்வாங்க. நமக்கு முழு பணமும் கையில். ஆனால் நாம தினமும் கொஞ்சமா கொடுக்கும் போது மலைப்பு தெரியாது”
“அண்ணன் சொல்லுறது சரியா இருக்குங்க” இரதிக்கு செந்தில் சொல்லுவது பிடித்து இருந்தது…

இவ்வாறு தொழில் தொடங்க அனைத்து ஏற்பாடும் நடந்தது…

சுந்தரம் கொடுத்த பணத்தை தான் முதலில் தொழிலுக்கு பயன் படுத்தினர்…

அடுத்து அந்த இடத்தை வாங்கினர்…
செந்தில் தான் இவர்களோடு மிகவும் அலைந்து சரக்கு கொள்முதல் செய்தான்…

இரதி இவர்களுக்கு சாப்பாடு கட்டி கொடுத்து விடுவாள்… மீதி நேரம் பூராவும் பூ கட்டி கொடுத்தாள்…

அந்த முதியவர்கள் அந்த கடையில் இருந்த சில பொருட்களோடு அவர்களுக்கே கொடுத்து விட்டு சென்றனர்…

கடைக்கு பின்னால் மரங்கள், சற்று தூரத்தில் சிறிய ஓடையும் ஓடியது…
கடையை புதுபித்தனர்…
வேலை அவர்களை நிற்க விடாமல் துரத்தியது…

மாறனும், ரெங்கனும் வேலை பார்க்கும் போது ஒரு பெண் வந்து நின்றார்…
மாநிறத்தில், தலையை படிய வாரி கொண்டை யிட்டு, கழுத்தில் ஒரு சிவப்பு கயிறோடு, அந்த புடவை நெய்த போது எந்த கலருக்கு இருந்ததோ, அந்த கலர் சாயம் போய் வெளுத்து ஆனால் முகத்தில் ஒரு அமைதியோடு வந்து நின்றார்…

இரு ஆண்களும் அவர்கள் கடைக்கு சாதனம் வாங்க வந்த பெண் என்று நினைத்து, “இரண்டு நாட்கள் ஆகும் கடை திறக்க” மாறன் தான் பேசினான்…

“நான் பொருட்கள் வாங்க வரல” அந்த வார்த்தை சொல்லவும், ரெங்கன் சட்டை பையில் இருந்து இரண்டு ரூபாய் எடுத்து கொடுத்தார்…. அவர் இருந்த நிலை அப்படி தான் தோன்றியது… சாதனம் வாங்க வரவில்லை… பிறகு அவர்கள் நினைத்ததில் தவறும் இல்லையே…

அந்த பெண் வேண்டாம் என்று தலையை ஆட்டியது…
“எங்களுக்கு வேலை இருக்கு என்னனு சொல்லு” ரெங்கனுக்கு வேலை இருக்கும் அவசரம்…

“அந்த பாட்டி சொல்லிட்டு போகலையா?” அவள் கேட்ட நொடி அதுவரை அவள் முகம் காணாத ரெங்கன் தான் செய்த செயலில் வெட்கி போனார்…

அவருக்கு அந்த பெண்ணை நிமிர்ந்து பார்க்க முடியவில்லையே… என்னவென்று கேட்காமல் தன்னுடைய அவசரத்தால் என்ன செய்து விட்டேன் என்று குற்ற உணர்வு.

மாறன் தான் நிலைமையை கையில் எடுத்தான்.. “உள்ள வாங்க” அவனுக்கு அந்த பாட்டி சொல்லும் போது கூட பிறகு பார்க்கலாம் என்று இருந்தவன், அவருடைய நிலையையும், ரெங்கன் செய்த செயலிலும் உடனே உள்ளே அழைத்தான்…

அப்போதும் அந்த பெண் மணி உள்ளே வரவில்லை.. ரெங்கன் எதுவும் சொல்லாமல் அந்த இடத்திலே நிற்கவும், தான் வந்தது அவருக்கு பிடிக்கவில்லை போல நினைத்து திரும்பி விட தான் நினைத்தார்…

அவருடைய கால்கள் திரும்பும் முன் “உள்ள வா” ரெங்கனின் குரல் அவரை தடுத்தது…

நிமிர்ந்தாள்…
பார்த்தாள்…
“உள்ள வா. ஏன் அங்கேயே இருக்க” ரெங்கன் ஒருமையில் பேசியதை அந்த பெண்ணுக்கு எதுவும் தோணவில்லை…
ஆனால் மாறன் தான் ஒரு நொடி பார்த்தான். அவரை விட சின்ன வயசா தான் இருக்கும் நினைத்து விட்டு விட்டான்..

“என்ன வேலை செய்த முன்னாடி”
“நான் எல்லா வேலையும் செய்வேன்”
“உன் பேர் என்ன”
“கமலா”
“பிறந்து வளர்ந்தது எல்லாம் இதே ஊர் தானா?”
“எங்க பிறந்தேனு தெரியாது. ஆனால் விவரம் தெரிந்த நாளில் இருந்து இந்த ஊர்ல தான் இருக்கேன்” இந்த பதிலில் மாறன் நினைத்தது நம்மை போல் ஒருவர்…

ரெங்கன் எதையும் நினைக்க வில்லை..
ஆனால் கேள்வி பூராவும் அவர் தான் கேட்டார்… அவருக்கு பதில் வாய் சொன்னாலும், அவர்களே சொல்லாமல் கைகள் தன்னால் வேலை பார்த்தது…
பொருட்களை ஒதுக்கி வைத்தார்…

“நீ எங்கே தங்கி இருக்க”
“அதோ தெரியுதே கோவில் அங்க தான்”
அதோ தெரியுதே வீடு என்பது போல் சர்வசாதாரணமாக கூறினார்…

அதன் பின் எந்த கேள்வியும் ரெங்கன் கேட்கவில்லை… மதியம் இரதி கட்டி கொடுத்த சாப்பாடு அவர்களுக்கு போதுமானது.. ஆனால் கமலாக்கு…

சாப்பிடும் நேரம் வரவும், “நீங்க சாப்பிடுங்க நான் கொஞ்ச நேரத்தில் வரேன்” அவரே சென்றுவிட்டார்…

“என்ன அண்ணே?”
“விடு மாறா” முதல் நாளே எந்த முடிவும் எடுக்க முடியாது அல்லவா??? ஆனால் ஒரே நொடியில் எடுக்கும் முடிவும் வாழ்க்கையை திசை திருப்பும்.. விதி வலியது…

இரண்டு நாட்கள் கழித்து கடையை திறக்க இரதியும் வந்தாள்…
கூடவே செந்திலும், லீலாவும்.
முதல் நாள் சொல்லி இருந்தான் மாறன் “நீங்க வந்திடுங்க கடை திறக்க” கமலாக்கு கண்ணீர் வந்தது..
“நான் தவறா எதுவும் சொல்லல?”
“இல்லையில்லை. என்னிடம் யாருமே பேச மாட்டாங்க. வேலை மட்டும் வாங்குவாங்க. இது மாதிரி யாரும் சொன்னதும் இல்லை. நான் போனதும் இல்லை. அது தான்” கமலா சற்று மெலிந்த தேகம் தான். குரலும் அந்த வாயை விட்டு வெளியே வராது… ஒரு பெண்ணாக தனியாக அந்த ஊரில் வசிப்பது கொடுமை தான்…

“இனி நீயும் எங்கள ஒருத்தி தான். நாளைக்கு வந்திடு” ரெங்கனின் பேச்சுக்கு தலையை ஆட்டி சென்றார்…

மறுநாள் இரதி தான் விளக்கு ஏற்றி, கடவுளை வணங்கி, முதல் வியாபாரம் செய்தாள்…

கமலா வந்தார்.. “வாங்க” என்று அனைவரும் வரவேற்று அவர்களோடு இணைந்து பேசியபடி இருந்தனர்…

“மாறா கடையை திறந்தாச்சு. இனி கொஞ்சம் விளம்பர படுத்து. ஊருக்குள் போய் சொல்லிட்டு வா. தரமான பொருளாக இருக்கவும் மக்கள் இங்கேயே வந்திடு வாங்க”

“இங்கு வேறு எந்த கடையும் இல்லை. நீங்க ஒரு முறை போய் சொல்லிட்டு வந்தா எல்லோருக்கும் தெரியும்” கமலா அவளுடைய யோசனையை கூறினாள்…

அதை பற்றி பேச்சு நீண்டது.. “வீடு தான் தூரம்” இரதிக்கு அந்த கவலை..
“தினமும் சமைச்சு கொடுத்து விடு” லீலா.

“இவுங்க வந்து போறதே கஷ்டம் தானே”
“பின்னாடி சமைக்கிற இடம் இருக்கே”
“அவுங்க கடைய தானே பார்க்க முடியும். சமைக்க முடியாதுல” இரதியின் கவலை தான் எல்லோருக்கும்…

“இங்கேயே வீடு பார்த்து வந்திடுங்க” கமலா. எல்லோரும் கமலாவை பார்த்தனர்… “நீங்க தானே கவலை பட்டீங்க” தான் அதிகமாக பேசிட்டோம் என்ற பயம் கமலாக்கு…

“அதுக்கு இல்லை. நல்ல யோசனை தான். ஆனால் அங்கே கொஞ்சம் டவுன் ஏரியா. அது தான் யோசனை” மாறன் மனதில் வேற யோசனை இருந்தது. ஆனால் அதை வெளியே சொல்லவில்லை…

“நீ கொஞ்சம் பாத்திரம் மட்டும் வாங்கி போடு இரதி. மளிகை கடை தானே. உன்னால் முடியாத நேரம் இவுங்க ஏதாச்சும் செய்து சாப்பிடட்டும்” செந்தில் கூறியது அனைவருக்கும் பிடித்தது…

“மாறன் தான் இனி அங்கு வருவான் தங்கம்”
“ஏன் மாமா?”
“ஏன் அண்ணே?”
“இரண்டு பேருமே எதுக்கு அலையனும். பின்னாடி தங்குற மாதிரி தான் இருக்கு.
நீ முடிந்தால் சமைச்சு கொடுத்து விடு. கடை வியாபாரம் சூடு பிடிக்கும் வரை இங்கேயே ஒரு ஆள் இருந்தால் நல்லா இருக்கும் ல” ரெங்கன் மனதில் உள்ளதை பேசினார்… அப்படி தான் அனைவரும் நினைத்தனர்.. ஆனால் அவர் மனதில் நினைத்தது வேறு..

அன்று அந்த ஊரில் உள்ளவர்கள் சிலர் பொருட்கள் வாங்க வந்தனர்…
இவ்வாறு ரெங்கனின் வாசம் அந்த ஊர் ஆனது… மாறன் தினமும் வந்து சென்றான்…

ஒரு நாள் இரவில் “ஏன் மாமா உங்களுக்கும் அலைச்சல் தானே” மாறனின் கால்களை மடியில் வைத்து அமுக்கி விட்டாள்…

“அதெல்லாம் ஒன்னுமே இல்லைடி”
“வாய் தான் சொல்லுது. காலை பாருங்க வீங்கி இருக்கு” சூடு பண்ணிண எண்ணெய் வைத்து நீவி விட்டாள்…
“போதும் விடுடி” அவளை தன் அணுப்பில் கொண்டு வந்தான்…

கடை அலைச்சலில் இருந்தவன் இப்போது தான் மறுபடியும் சற்று ஓய்வு கிடைக்கவும் அவளோடு சரசம் செய்தான்…

“மாமா” அவனது பிடி அவளை இறுக்கியது…
“சொல்லுடி”
“இங்கேயே இருக்கலாம்னு ஏன் சொன்னீங்க” அவள் கேட்ட நேரம் அவன் அவளது ஜாக்கெட்டை மீறி பிதுங்கி நின்ற சதைக்களுக்குள் முகத்தை புதைத்து இருந்ததால், “என் ஆயுளுக்கும் இங்கேயே இருப்பேன் டி” கடித்து வைத்தான்…

“இந்த வீட்டுல எதுக்கு ஆயுளுக்கும் இருக்கனும்?” அவள் கேட்டது வீட்டை பற்றி, ஆனால் அவன் பதில் சொல்லியது வேற…

“என் மக்கு பொண்டாட்டி” இப்போது அதை பிடித்து, சட்டி பானை செய்தான்…
“என்ன மாமா?”
“நீ எதை கேட்ட?”
“அன்னைக்கு சொன்னதை”
“நான் இதை பற்றி சொன்னேன்” மீசையை வைத்து குறுகுறுக்க செய்தான்…

“ச்சீ போங்க மா”
“போக மாட்டேன்” கடித்தான்..
“ஸ்… ஆ… மா…மா”
இந்த இசை அடுத்து கச்சேரிக்கு இழுத்து சென்றது…

கச்சேரி தாளம் தப்பாமல் மெல்லிசையாக இசைத்தது.. மாறனுக்கு வேகம் எடுக்கும் போதெல்லாம் “மாமா” என்ற அழைப்பு நிதானத்திற்கு வந்து விடும்…

கச்சேரியில் இவளது முனுங்கல் சத்தமே அவனுக்கு உற்சாக பானம்… அனுபவித்து ரசித்து செய்வான்….

அன்றைய கச்சேரி முடிந்து, இருவரும் பிரியாமல், அப்படியே கட்டுண்டு ஓய்வு எடுத்தனர்….

“மாமா” அவள் எப்போதும் போல சொன்னாள்…
“நமக்கு பிள்ளை பிறக்கும் வரை இங்கேயே இருப்போம் டி” அவன் மனதில் உள்ள யோசனை, ஆசை எல்லாம் அதுவாகவே இருந்தது….

(டார்லிங்ஸ் என்னால் அடிக்கடி மூடி கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும். அதுக்காக நிறைய பேர் படிக்கிறது இல்லை போல. யாருமே ஒரு வார்த்தை கூட கூறுவதும் இல்லை..
இந்த கதை முடிக்க தான் பார்க்கிறேன்.. ஆனால் இப்போது அது இன்னும் கிளை கதைகள் எல்லாம் வருது.. முடிந்த அளவு விரைவாக முடிக்க பார்க்கிறேன் டார்லிங்ஸ்)

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *