உறவெனும் பொன் வீதியில்

This entry is part 14 of 29 in the series உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

உறவெனும் பொன் வீதியில்

13. உறவு…..

“என்ன மாறா ரொம்ப நேரமா நிக்குற?” செல்லப்பன் கணக்கு எழுதியபடியே கேட்டார்….

“அண்ணே நாளைக்கு ஒரு நாள் லீவு வேணும்”
“என்ன திடிரென்று?”
“இல்லை அண்ணே கொஞ்சம் வேலை இருக்கு”
“அப்போ இங்க பார்க்கிறது என்ன?” அவனுடைய குரல் உயர்ந்தது…

“இதுவும் வேலை தான் அண்ணே”
“இதுவும்னா என்ன அர்த்தம் இரண்டு இடங்களில் வேலை பார்க்குறீயா?” செல்லப்பனுக்கு அன்னைக்கு என்ன மனநிலையோ சாதாரணமாக லீவு கேட்டதுக்கு இவ்வாறு பேசினான்…

ஆனால் மாறன் எதுவும் வாயை விடாமல் பொறுமையாக பதில் சொன்னான்….
“உங்களை விட்டு எங்கே அண்ணே போக போறேன்”
“எங்க போய் தான் பாரேன். என்னை தவிர வேற எவனும் உனக்கு வேலை தர மாட்டான்” அந்நேரத்தில் தான் காக்கை வாகன ஈஸ்வரன் இவனுடைய நாவில் அமர்ந்து கொண்டார்…..

“ஏன் நான் என்ன கொலையாளியா?” இளமாறனுக்கு பொறுமை கற்பூரம் போல கரைய தொடங்கியது….

“தாலி கட்டாமல் தானே அடுத்தவன் பொண்டாட்டிய கூட்டிட்டு வந்து வாழுற” அதன் பிறகு செல்லப்பனின் முகம் பூராவும் ரத்த கரையும், வீங்கிய முகமும், கிழிந்த சட்டையும், அவிழ்ந்த வேட்டியுமாக தான் நின்றான்…..

“என்னடா சொன்ன நாயே” என்றபடி இளமாறன் அவன் மேல் பாய்ந்தது தான் தெரியும்…

அவனது குரலை கேட்டவர்கள் அவனிடம் ஓடினார்களே தவிர அவனை கட்டு படுத்த முடியவில்லை….

இவன் அடிப்பதை தடுக்க முடியவில்லையே தவிர, செல்லப்பனையும் பிரிக்க முடியவில்லை…

அவன் முரடன் அதெல்லாம் சென்னையோடு விட்டவன் இங்கு வெறும் மாறனாக, இரதியின் கணவனாக மட்டுமே இருந்தான்…

அன்னைக்கு பார்க்கும் போதே அவனுக்கு ரதியின் மேல் ஒரு கண் இருந்தது.. அதுக்கு தூபம் போட்டது போல அந்த முரட்டு மனிதரால் அடித்து துரத்த பட்டவன் முதல் வேலையாக இவனிடம் வந்து சில பல விசயங்களை கூட்டி சொல்லி மாறனை பழி வாங்குவதாக இந்த கேவலமான செயலை சொன்னதன் விளைவே இன்று செல்லப்பன் பேசியதன் காரணம்…

அந்நேரத்தில் செந்தில் அங்கு இல்லாததால் புதிதாக சேர்ந்த மாறனை தான் அனைவரும் குற்றம் சுமத்தினர்….

ஒரு வழியாக கூட்டத்தை விலகி கொண்டு வந்த செந்தில் “டேய் மாப்பிள்ளை விடு டா” அவனை கட்டி இழுத்து பிரித்தான்…

செல்லப்பனின் அவிழ்ந்த வேட்டியை ஒருத்தன் எடுத்து அவனுக்கு கட்டி விட்டான்….

செந்திலின் வலுவினால் மாறனை அடக்கவில்லை… செந்திலின் பாசத்தினால் மட்டுமே அவன் அடங்கி நின்றான்…

அதுவரை அவர்களை விலக்க வந்தவர்கள் இப்போது எல்லோரும் நாட்டாமை அவதாரம் எடுத்தனர்….

அந்த மாலை நேரம் என்பதால் மக்கள் கூட்டமோ, நடமாட்டமோ இல்லாததால் சில கடைகளின் ஓனர்களும் வேலை செய்பவர்கள் என சொற்ப ஆட்களே இருந்தனர்…

அதனால் இந்த விசயம் அப்போதைக்கு கலவரம் ஆகல….
“என்னப்பா செந்திலு உன் கூட்டாளி ரவுடி பயலா இருக்கான்”
“இதுக்கு தான் வேற ஊர் ஆட்களை இங்க சேர்க்கிறதே இல்லை”
“நம்ப செல்லப்பன் மேலேயே கை வைக்கிறான்”
“சம்பளம் கொடுக்கிற முதலாளிய கை நீட்டுறான்”

இப்படி நாலு பேர் நானூறு விதமாக பேசினர்… ஆனால் அந்த நானூறுமே மாறனை தான் குற்றம் சுமத்தியது…

செந்திலுக்கு ஏன் மாறன் அடித்தான் என்று தெரியவில்லை… ஆனால் அவன் காரணம் இல்லாமல் அடிக்க மாட்டான் என்று நம்பினான்…

“சொல்லுடா எதுக்கு அடுச்ச?”
சொல்ல கூடிய காரணமா இருந்தால் கைகலப்பு ஏன் வந்து இருக்க போகுது…
காரணத்தை கேட்டதும் செந்திலின் பிடியில் இருந்த மாறன் உடம்பு இறுகுவதை கண்ட செந்தில், அடுத்த நிமிடம் செல்லப்பனை தான் பார்த்தான்…

தனது வீங்கிய வாயை மேலும் சுழித்தை பார்த்து, “அந்த நாய் ஏதோ சொல்லி இருக்கு” அதை தான் நினைத்தான்…

அந்த இளிப்பே “எங்க சொல்லி தான் பாரேன்” என்ற மாதிரி தான் இருந்தது…
“என்ன செந்திலு வாயே திறக்க மாட்டேங்குறான்?”
“அண்ணே சங்க தலைவர் வரட்டும்” இப்போது பிரச்சினை பேசினால் மாறனை தான் குற்றவாளி என தீர்ப்பு எழுதப்படும்….

அவர் நியாயத்தின் பக்கமே பேசுவார்..
அதனால் தான் செந்தில் உடனே அப்படி சொன்னது…
“அவர் அடுத்த வாரம் தானே வருவார்” ஒருவர் சொல்லவும்,
“சரிங்க அண்ணே அப்போவே நாங்க வரோம்” அதாவது செந்தில் இந்த வார்த்தையை சொல்லும் போது எதார்த்தமாக தான் சொன்னது… மாறனை பிரித்து பேசி பழக்கம் இல்லாததால் சேர்த்து சொன்னது…

“உனக்கும் இங்கு வேலை இல்லைடா” அடிபட்ட நாய் குரைத்தது…
செந்தில் யோசிக்க கூட இல்லை..”உன்னிடம் நான் பார்ப்பேனு நினைச்சீங்களா” என்றான்…

மாறனுக்கு தான் அய்யோ என்றானது…
தன்னால் இவனுக்கு வேலை போனதே என்று….
“சரி நீ இவனை கூட்டிட்டு போ பா” கூட்டத்தை கலைத்தனர்….

“விக்கிற உனக்கு ஒரு கடை, வேலை செய்யுற எங்களுக்கு ஆயிரம் கடை டா” கெத்தாக கூறினான் மாறன்…

“நீங்க இனி எப்படி மார்க்கெட்ல காலை வைக்கிறீங்கனு நான் பார்க்கிறேன்” உறுமினான்….

“மதுரை பூராவும் மார்க்கெட்ல வந்து வாங்கி சமைக்குதா” செந்தில் கேட்டான்…

“வீணா என்னிடம் மோதாதீங்க”
“உன்னை மதிக்கவே இல்லை போவீயா” என்றபடி மாறனை இழுத்து கொண்டு வந்தான் செந்தில்…

இருவரும் மார்க்கெட் விட்டு நடந்தே வந்தனர்… அவர்களுக்கு மனதில் பாரம் இருந்ததால் நடையில் தொய்வு இல்லை…
சிறிது நேரம் பேசவே இல்லை…

“என்னை மன்னிச்சிடு மாமா” மாறன் பேசியபடி ஒரு மரத்தடியில் நின்றே விட்டான்…

செந்தில் அவனை நிமிர்ந்து அவனது கண்களை பார்த்தான்.. அதில் தன்னால் செந்திலுக்கு வேலை போனதே என்ற பரிதவிப்பு மட்டுமே இருந்தது…

அவனை பிடித்து கொண்டு ஒரு அங்கு இருந்த திட்டில் அமர்ந்தான்…
“மாமா அவன் ரதிய” மேற்கொண்டு பேச முடியாமல் குரல் தழுதழுத்தது…

“விடு மாப்பிள்ளை அதெல்லாம் நீ சொல்லி தான் எனக்கு தெரியனுமா” அவன் அந்த காரணத்தை கூட முழுதாக கேட்கவில்லை…

“என்னால் உனக்கும் வேலை போய்விடுமா மாமா” அவனுக்கு இப்போது அது தான் கவலையே…

“அதை விடு மாப்பிள்ளை.. பணத்துக்காக தன்மானத்தை இழக்க கூடாது. இப்போதைக்கு இரண்டு நாட்கள் எதுவுமே வீட்டில் சொல்ல மாட்டேன்.. அவ அம்மா வீட்டுக்கு போகனும்னு சொன்னா. அதனால் நிம்மதியா ஒரு நாலு நாட்கள் போயிட்டு வந்து பிறகு என்னனு பார்ப்போம்” செந்திலுக்கு உள்ளுக்குள் வேலை போனது வருத்தம் தான் என்றாலும் அதை வெளிகாட்டமால் இப்படி சொன்னான்….

மாறனுக்கு தான் பல யோசனைகள்…
“நாளைக்கு நாங்க மீனாட்சி அம்மன் கோவில் போறோம் மாமா” அதை மட்டும் சொன்னவன் வேற எந்த விசயத்தையும் சொல்லவில்லை… அவனுக்கே உறுதியாக எதுவும் தெரியாத போது என்னவென்று சொல்லுவான்….

“சரி வா மாப்பிள்ளை.நல்ல வேலை சம்பள காசு வாங்கியாச்சு” இருவரும் தங்களது வீட்டை நோக்கி சென்றனர்….

செந்தில் லீலாவிடம் “உங்க அம்மா வீட்டுக்கு போகனும்னு சொன்னீயே”
“ஆமா நீ தான் வரமாட்டீயே”
“இல்லை வா போவோம் நாலு நாளைக்கு”
“உண்மையாவா”
“நீ இப்படி கேட்டுட்டே இரு உன் ஊருக்கு போற கடைசி பிளைட் போயிடும்”
“ஆமா உங்க ஊருக்கு பிளசர் கார்ல தான் போவீங்க” அவள் ஊருக்கு போவதை நிறுத்தி விட்டு அவனுடன் வம்பு பேச ஆரம்பித்தாள்….

“இப்போ வாறீயா? இல்லை நான் மட்டும் போகவா?” கேட்ட நொடி வாயை மூடி கிளம்பினாள்….

“எப்படி இருந்தாலும் தூது வளை இலை அரைச்சு பாட்டு கேட்டுட்டே மினி பஸ்ல போற சுகம் இருக்கே அதெல்லாம் எத்தனை பிளைட்ல போனாலும் வராதுடி” அவனுடைய மனதை மாற்றவே அவளிடம் வாய கொடுத்தபடி கிளம்பினான்….

மாறன் வீட்டினுள் வந்தான்.. இரதியின் முகத்தை பார்க்கவும் அமைதியாக மனதை மாற்ற அவளை தனது கைக்குள் வைத்து கொண்டான்…

நடந்த பிரச்சினை எதையும் வெளியே சொல்லவில்லை… அவளிடம் சொல்லி அவளையும் கஷ்டபடுத்த விரும்பவில்லை…

அவளும் மழைக்கு தாய் கோழியின் இறக்கைக்குள் ஒண்டி நிற்கும் குஞ்சுகளை போல அவனது கைக்குள் அவள் அடங்கி தான் போனாள்….

தினமும் பூ கட்டி கொடுப்பவள் காம்பு சிறிதாக உள்ள பூக்களை ஒதுக்கி தான் அவர்களுக்கு கட்டி கொடுப்பாள்…
அந்த பூக்களை கூட வீணடிக்காமல் அதையும் இவள் ஊசி கொண்டு கோர்த்து அவளது நீள கூந்தலில் சிறிது அளவு தினமும் வைப்பாள்….

அவளை தனது மார்போடு அணைத்து நின்றவனின் நாசிக்குள் அந்த பூவின் வாசனை புகுந்து அவனது கவலைகளை அந்த நேரத்தில் மறந்து ஒரு இதம் பரவ தான் செய்தது….

“ஏங்க நாளைக்கு லீவு சொல்லிட்டாங்களா?” காலையில் அவன் சொல்லி சென்றதால் அவள் கேட்டாள்…

“ம்” அதற்கு மேல் அவன் பொய் பேச முடியாது என்பதால் அந்த பேச்சை தவிர்க்கும் பொருட்டு “நாளைக்கு சீக்கிரமா கிளம்பனும்” சொன்னவன் அவளை விடுத்து குளிக்க சென்றான்…

அவன் வரவும் இருவரும் சாப்பிட்டனர்…
அன்று மாறனின் பேச்சை குறைந்தது எனலாம்… குறைந்தது என்பதை விட இரதியின் பேச்சை மட்டுமே கேட்டான்…

“இன்னைக்கு பூ கட்டியதில் பணம் தந்தாங்க”…
“இன்னைக்கு ரொம்ப வெயில்…
நான் மரத்தடியில் கொஞ்ச நேரம் இருந்தேன்”
“நாளைக்கு கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்யலாம்”
இது மாதிரி பேசிக்கொண்டே இருந்தாள்…

அனைத்துக்கும் அவனது அதிக பட்ச பதிலே “ம் சரி” என்பதே…
அவளுக்கு நாளைக்கு கோவிலுக்கு செல்லும் ஆசையில் கணவனின் முகத்தை சரி வர கவனிக்கவில்லை…

“நாம இப்போ தான் முதன் முறையாக வெளியே போறோம்ல” அவளுக்கு அந்த சந்தோஷமே மனதில் நிறைந்து இருந்தது…

விரித்த படுக்கையில் படுக்காமல் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து இருந்தவனின் மடியில் பேசியபடி இவளும் படுத்து இருந்தாள்…

“ம் ஆமா” அவளின் சந்தோஷம் முகத்தில் தெரிந்ததை பார்த்தபடி அவளது முடிகளை ஒதுக்கியபடி தலை கோதலுடன் பேச்சை ரசித்தான்….

“நாளைக்கு கேட்டுட்டு வரலாம்” அவள் எத்தனை விசயங்கள் பேசினாலும் கல்யாணத்தை பற்றி பேசவில்லை…
அதை தானாக எப்படி பேசுவது என்ற வெட்கமா? இல்லை தனது கணவனே எல்லாம் செய்து விடுவான் என்ற நம்பிக்கையா? ஏதோ ஒன்று அவள் திருமணம் என்ற வார்த்தையை சொல்லவே இல்லை….

அவள் எதுவும் பேசாமல் அவனையே பார்த்தாள்…
“என்னடி இவ்வளவு நேரம் சல சலத்த இப்போ பேச்சை காணோம்” இப்போ அவனும் நடப்பது நடக்கட்டும் எல்லாம் நன்மைக்கே என்று இவளுடன் சகஜமாகினான்..

“நாளைக்கு கோயிலுக்கு போயிட்டு, அப்படியே வெளியே சுத்தி பார்த்துட்டு வரலாமாடி”
“எங்க போகலாம்”
“இப்போ மட்டும் இந்த வாய் பேசுதா?” உதட்டை பிடித்து இழுத்தான்….

“ஸ்… போங்க…. மாமா….” உதடுகளை இழுத்த வலியில் தன்னை மறந்து அவனை மாமா சொல்லி இருந்தாள்….

அவனுக்கு அதுவே நெஞ்சில் சாரல் வீசியது….
அதுவும் அவள் பேசிய விதம் சிணுங்கலாக இருக்கவும், மடியில் கிடந்த வளை, அள்ளி எடுத்து, கைகளில் அமுக்கி, தனது நெஞ்சோடு அணைத்து, அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான்….

சொல்லிய அவளுக்கு அது புரியவில்லை… அப்போதும் அவளுக்கு அந்த உதட்டில் வலி இருக்க தான் செய்தது….

“போங்க மாமா உதடே வலிக்குது….”
“இப்போ அமுக்குறீங்க” சின்ன குழந்தையாக அவன் செய்ததை அவனிடமே குற்றம் சொன்னாள்….

பிறகு தான் அவனுக்கு உரைத்தது…
தான் பரவசத்தில் அவளை செய்தது…
“வலிக்குதா டி” அவளை தனது நெஞ்சில் சாய்த்து, உதட்டை கைகளால் தடவினான்…

“ம்… இழுத்தா வலிக்காதா?” என்றவள் அவனது கீழ் உதட்டை பிடித்து இழுக்கவும், அவனுக்கு சிரிப்பு….
“இழுத்தா சிரிப்பாங்களா?”
“ஆமாடி என் செல்லம் யாராவது இதுக்கு சிரிப்பாங்களா” என்றான்…
“நீங்க தான் சிரிக்குறீங்க?”
“இல்லை இப்போ எனக்கும் வலிக்குது”
“அச்சோ மாமா ரொம்ப வலிக்குதா?” என்றவன் விரல் கொண்டு உதட்டுக்கு நீவினாள்….

அவள் தன்னை மறந்து தான் மாமா என்ற அழைப்பு வருவதை குறித்து கொண்டான்…
“இப்படி உத்தடம் தர கூடாதுடி” என்றவன் விரல்களுக்கு எதுக்கு வீணா வேலை என்று, அந்த வேலையை உதட்டுக்கும், உதட்டுக்கும் கொடுத்தான்….

தீடிரென இப்படி செய்வான் என்று எதிர்பாராதவள், கண்களை விரித்தாள்…
அவனது கை சிறைக்குள் அவள்,
அவனது உதட்டு சிறைக்குள் அவளது உதடு, இருவருக்கும் இது முதல் அனுபவம்….

அவள் கண்களை போட்டு படபடவென அடிப்பதை அவன் கண்கள் பார்த்து, அவனுக்கு தோன்றியது இது தான் அவளுக்கு பிடிக்கவில்லையோ??? என்று தான்….

ஆனால் அவளுக்கு இது முதல் தடவை என்பதாலும், அவன் தீடிரென இப்படி உதடுகளை கவ்வியதாலும், மூச்சுக்கு தான் தவித்தாள்……

அவளுக்கு மூச்சுக்கு சிரமபடுவதால் அவன் ஒரு நொடி விடுத்து, அவள் முச்சு வாங்கியவுடன், மறுபடியும் கவ்வினான்….
ஆனால் ஆக்ரோஷமாக இல்லை…
ஆரவாரமில்லாமல் மென்மையாக வலித்த உதடுகளுக்கு மருத்துவம் பார்த்தான்….

முன்னே படபடவென அடித்த கண்கள்,
இப்போது மயங்கி தான் போனது….
அவளுக்கு இப்போதும் மூச்சு காற்று தேவை பட்டது… அந்த காற்றை அவனிடம் இருந்தே அவளுக்கு எடுத்து கொண்டாள்…..

தன்னை மறந்து இருவரும் இருந்தனர்….
பின்பு நிதானதுக்கு வந்தவன், அவளை விடுவித்தான்… அவள் மயங்கியே அவன் மீது சாய்ந்தாள்…
“இதுக்கே இப்படினா மத்தது எல்லாம் எப்படி டி” அவன் மறைமுகமாக சொன்னது புரியாமல் இல்லை அவளுக்கு… ஆனாலும் பதில் பேசாமல் கண்களையும் திறக்காமல், அமைதியாக அவள் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டோம் என்ற நிம்மதியில் அமைதியாக சாய்ந்து விட்டாள்…..

பொள்ளாச்சியில் இருந்து கிளம்பினர் சுந்தரமும் செல்லம்மாவும், அவள் வேண்டியபடி கொடியோடு சேர்ந்து தாலி தங்கத்தில் செய்து வாங்கி, மீனாட்சியை தரிசிக்க கிளம்பினர்… மகன்கள் டிரைவரை வைத்து அனுப்பி விட்டனர்….

டிரைவர் இருப்பதால் செல்லம்மா பேசாமல் வந்தாலும், விடுவாரா சுந்தரம் எதாவது வம்பு செய்து அவளிடம் பகடி பேசியபடி மதுரை வந்தனர்…

வரும் வழியில் எல்லாம் அவளுக்கு ஏதாவது நுங்கு, இளநீர் வாங்கி கொடுத்தபடியே வந்தார்….
தேனி மாவட்டம் நெருங்கியதும், காரில் இருந்து இறங்கி மனைவியோடு சிறிது நேரம் இயற்கையை ரசித்தார்…
பின் அன்று இரவே ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து தங்கினார்கள்… கோவிலுக்கு அருகிலே எடுத்து இருந்தனர் அப்போ தான் சீக்கிரமா போகலாம் என்று….

அவர்கள் இரவு உணவை முடித்து விட்டு
ரூம்க்கு வந்தார்கள்…
வந்த பயணத்தின் களைப்பு இருக்க தான் செய்தது… ஆனால் இது மாதிரி தனியாக வந்து ரூம் போடவும் விடுவாரா சுந்தரம்…

கட்டிலில் படுக்க போன செல்லம்மாவை தடுத்து தான் வாங்கி வந்த மல்லிகை சரத்தை அவரே வைத்து விட்டார்….
“எப்போ வாங்கினேள்… எதுக்குன்னா இவ்வளவு பூ” தனது தலை பூராவும் மதுரை மல்லியால் அலங்கரித்தவரிடமே கேட்டாள்….

“நியாயமா கட்டிலை தான் முதல்ல அலங்காரம் செஞ்சு இருக்கனும் அது முடியாமல் தான் என் மாமிய அலங்கரிக்கிறேன்” சும்மாவே மாமியிடம் மயங்குபவர் இப்போது பூவின் வாசத்தோடு மயங்கி அணைத்தார்….

“ரொம்ப தான் ஆசை”
“அதெல்லாம் ஆசை நிறைய இருக்கு”
“நேக்கு தெரியுமே”
“தெருஞ்சும் ஏண்டி நிறைவேத்தல?”
இவ்வளவு பேச்சும் பேச்சாக இருந்தாலும் அவர் செயலில் சரியாக இருந்தார்….

ஆனால் பேச்சை மட்டுமே கவனித்த மாமி அந்த அறையின் ஏசி காற்று உடலை தாக்கவும் தான் பார்த்தார் தன் கணவனின் சேட்டையை….

“என்ன பண்ணுறேள்?” கோபமா கேட்ட தான் நினைத்தாள்… ஆனால் கேட்டது என்னமோ கொஞ்சியபடி…

“பார்த்தா எப்படி தெரியுது”
“அதெல்லாம் நேக்கு தெரியாது?”
“உனக்கு எதுவும் தெரிய வேணாம்”
“அச்சோ விடுங்கோன்னா?” குளிருக்கு போர்வையை தேடினாள்….

“இரு நானே போர்த்தி விடுவேன்” என்றவர் அந்த போர்வைக்குள் அவரும் தான் இருந்தார்….
“கோவிலுக்கு வந்துட்டு என்ன செய்யுறேள்”
“ஏன் செய்தா என்னவாம்?” அவளை பேச விட்டு இவர் அவளை ரசித்தார்….

“இன்னைக்கு வேணாம்னா” மனைவியின் கெஞ்சல் கொஞ்சம் கேட்டது…
“சரி நாளைக்கு கல்யாணம் முடிந்ததும் முதல் இரவு கொண்டாடிட்டு தான் போகனும்” டீல் பேசினார்…

“யாருக்கு கல்யாணம்”
“யாருக்கோ டி அந்த தாலி எப்படியும் ஒருவன் கட்டுவான்ல”
“அதுக்கு”
“நாம தானே தாலி வாங்கினோம்”
“அதனால் நீங்க கொண்டாடுவேளா”
“ஏண்டி உனக்கு பிடிக்கலையா” முகம் வாடியது சுந்தரத்துக்கு… அவளுக்கு விருப்பம் இல்லாததை அவர் என்றாவது செய்து இருப்பாரா? அதனால் அவளிடம் இருந்து விலகி தான் போனார்…

சுந்தரம் முகம் வாடலாமா? விலகி போனவரின் முகத்தில் பஞ்சு பொதிகள் மோதியது தான் அவருக்கு தெரியும்…
வேகமா இழுக்கவும், இழுத்த வேகத்தில், ஏற்கனவே சுந்தரம் செய்த செயலில் சுதந்திர பஞ்சு பொதிகள் அவரின் முகத்தில் பட்டது….

“எதுக்கு கோபம்?”
“முடியாதுனா சொன்னேன்”
“நாளைக்கு சாமிய சேவிச்சுண்டு பிறகு பார்க்கலாம் தானே சொன்னேன்” அவள் பாட்டுக்கு பேசினாள்…

பதில் சொல்பவர் தான் பஞ்சு பொதிகளில் ஐக்கியம் ஆனரே….
கணவனின் சுணக்கத்தை போக்க பேசியவள், எப்போதும் போல தன்னை மறந்தாள்….

மீசை அழுத்தவும் தான் முகத்தை விலகினாள்…. அந்த மீசையின் அழுத்தம் செங்காயா இருந்த அவளின் வெண்ணிற மேட்டை சிவந்ததாக மாற்றியது….

அவர் பல்ல பட்ட இடம் பச்சை கலரில் கண்ணி போய் இருந்தது….
வெண்ணிற மேனியில் மஞ்சள் போட்டு குளித்ததால், அந்த மீசையின் அழுத்தத்தில் சிவப்பும், பல் கடித்த இடத்தில் பச்சையும் சேர்ந்து உண்மையாக பச்சை காயும் இல்லாமல்,
மிகுந்த பழுத்து கனியும் இல்லாமல், செங்காயவே பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் இருந்தது….

இழுத்த முகத்தை பார்த்தவளுக்கு, பால் குடிக்கும் பாலகனின் பல் தடம் பதித்தால் உடனே இழுத்து அவனை பார்ப்பதற்கு பாவம் போல் இருக்குமே, கிடைத்த அமுது பாதியில் நின்றது போல பாவமாக இருந்தார்….

“உங்களை” என்றவள் இழுத்து அவர் செய்த வேலையை செய்ய அனுமதித்தாள்…..

இவ்வாறு இரு ஜோடிகளும் நாளை கோவிலுக்கு தான் போகிறோம் என்பதை மறந்து தங்களது உலகில் இருந்தனர்….

யார் என்ன செய்தாலும் உலகம் சுற்றுவது நிற்காதே… சூரியனும் வந்தார்…வெளிச்சத்தை தந்தார்…
இரு இணைகளும் கோவிலுக்கு வந்தனர்…..

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *