மோகமந்திரம் சொல்லுடி ரதியே
18. போக மந்திரம் சொல்லடி ரதியே…
ஆனால் சீத்தாவின் மகளுக்கோ தன் வயதை விட சிறிது சிறியவர்களாக இருந்தாலும் பெண் பிள்ளைகளுக்கே உரிய ஆசையில் தான் நவீனா அப்படி கேட்டது.
அதற்கு செல்லுவின் பிள்ளைகள் சொன்ன பதில் தான் “எல்லாமே எங்க அப்பா தான் வாங்கி தந்தாங்க” என்றனர் பெருமையாக.
பத்மாவிற்கு இந்த வார்த்தையை வைத்து
அவர்களை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு சுற்றிலும் இருப்பவர்களை மறந்து தன் குரலை உயர்த்தி “எந்த அப்பா வாங்கி கொடுத்தது” என்று அவள் கூறி முடிக்கவும் “வாய மூடு” என்று கத்திக்கொண்டே தன் பிள்ளைகளிடம் விரைந்தார். அதேநேரம் “பத்மா” “அண்ணி” என்று ரகுவும் கதிரும் கத்தியே விட்டனர்.
தன் தந்தை கத்திய கத்தலில் பெரிய குட்டி பயத்தில் ஓடி வந்து தன் தந்தையை இடுப்போடு கட்டிக்கொண்டது. சீத்தாவின் மகன் சின்னக்குட்டி பயபடவும் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
சாந்தி வாயை விட்டு அழுகவும் ரதியும் சீத்தாவும் அவளை தாங்கி கொண்டனர்.
பெரியவர்களுக்கு என்ன கூறுவது என்றே தெரியாத நிலையில் நின்று விட்டனர்.
ரகுவின் கை தான் அவளை பதம் பார்த்தது. பத்மாவின் குணம் தெரியும் தான். ஆனால் இந்தளவுக்கு அவள் தரம் தாழ்ந்து போவாள் என்று நினைக்கவில்லை.
துரை ராஜ் பிள்ளைகள் நால்வரையும் அவ்விடம் விட்டு கூட்டி கொண்டு வெளியே சென்று விட்டார். அவரும் காலையில் இருந்து பார்க்கிறார் தானே செல்லு தன் குழந்தைகளின் வைத்த பாசத்தை, பிள்ளைகளும் இவரிடம் உணரும் தந்தையின் நேசத்தை இதை கண் கொண்டு பார்த்தவரால் பத்மாவின் அந்த கேள்வி கோபம் மூட்டினாலும் தான் அங்கு பேச கூடாது என்பதால் பிள்ளைகளை காரில் அழைத்து சென்றார்.
ரகு அடிப்பான் என்று மற்றவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை தான். பத்மா தன் கணவனா தன்னை அடித்தது அதுவும் அந்த பிள்ளைகளுக்காக கட்டிய மனைவியை அடிப்பதா? என்று கோபம் வரவும் ரகுவை பார்த்து “யாரோ பெத்த போட்டதுங்களுக்காக என்னையவே கை நீட்டுவீங்களா? என்று சொன்னது தான் தாமதம் “அது நான் பெத்த பிள்ளைகள் எனக்கு தான் பிறந்தாங்க அதுல உனக்கு ஏதும் சந்தேகமா?” என்று கண்கள் சிவக்க உடம்பு அதிர தன் வேட்டியை மடித்து கட்டி கையில் அரிவாள் இல்லாத குறையாக கோபம் கொண்ட காவல் ஐய்யனாராக நின்றார் நம் செல்லு.
செல்லுவின் கேள்வியில் இருக்கும் உண்மை தன்மையை அறிந்த பண்ணை குடும்பம் எப்போதும் சிரித்து பேசி, வம்பு செய்து, கலகலப்பாக இருக்கும் செல்லு இப்போது ருத்திரமூர்த்தியாக அவதாரம் எடுத்ததை பார்த்து ஸ்பித்தனர்.
சாந்தி இந்த கேள்வியில் கூனி குறுகி வாய் விட்டு அழுகுவும் உடனே தன் மனைவியின் அருகில் சென்று, ரதியிடம் இருந்து மனைவியை இழுத்து ஒரு கையால் அணைத்துக்கொண்டார்.
அவளுக்கு இப்போது தன் கணவனின் துணை தான் தேவை என்பதால் அத்தனை பேரின் மத்தியிலும் கணவனை கட்டி கொண்டு கதறினாள்.
பண்ணைக்கோ ஊருக்கே பஞ்சாயத்து பண்ணும் தான் இப்போது குடும்பத்தில் நடக்கும் இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு சொல்லுவது என்று தெரியாமல் தவித்தார்.
இந்திராம்பாளோ எப்போதும் பத்மாவிற்கு வாய் தான். முதலில் எல்லாம் கண்டித்து பார்த்தார். அப்போது தான் அவள் வீம்புக்கு செய்யவும் அவளை சற்று ஒதுக்கியே வைத்தார்.
இப்போது நடந்த விசயத்தில் எங்கே தன் தம்பி தன்னை விட்டு சென்று விடுவானோ? என்ற எண்ணத்தோடு தன் தம்பியை பார்த்து பயமும் வந்தது.
கதிருக்கு அவ்வளவு ஆத்திரம். அவன் எப்போதும் பத்மாவிடம் பேசியதே இல்லை. அவள் இந்த வீட்டில் தான் இருக்கிறாள் என்ற நினைவே இல்லாமல் தான் அவன் இருப்பான். அப்படி இருந்தவன் இன்று தன் மாமாவை கோப படுத்தியதை பார்த்ததும் ஆத்திரத்திரத்தில் முகம் கடுக்க நின்றான்.
சீத்தாவும் ரதியும் இவளின் பேச்சை கேட்டு வெறுப்பு வந்தது. அதே நேரம் செல்லுவை பார்த்து எங்கே குடும்பத்தில் பெரிய பிரச்சினை ஆகி விடுமோ? என்ற பயமும் வந்தது.
இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வித மனநிலையில் செல்லுவை பார்த்து, நினைத்து அவனின் புது அவதாரத்தில் நின்றனர்.
ரகு தான் தன் மனைவியின் பேச்சுக்கும், அதற்கு தன் மாமன் கேட்ட கேள்வியில் அவர் எந்தளவு காயபட்டார் என்று நொந்து அப்படியே அமர்ந்து விட்டான்.
அப்போதும் பத்மா தைரியமாக தான் நின்றாள். “தான் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது” என்ற திண்ணக்கம்.
அவள் நின்ற தோரனையிலே அவளின் எண்ணம் புரிந்து தன் மனைவியுடன் முன்னே வந்து நின்றார் செல்லு.
“இங்க பாரு உனக்கு ஏனோ என்னை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை.
அப்படி பிடிக்காமல் போனதுக்கும் நான் ஒன்னும் செய்யல. உன் மனதில் தான் மட்டுமே ஜமீன் வம்சம் என்ற நினைப்பு இருக்கிறது போல. நானும் ஜமீன் வம்சம் தான். ஆனால் நான் உன்னை மாதிரி அதை தலையில் தூக்கி கொண்டு நிற்கவில்லை. ஒருவனுக்கு தன்னம்பிக்கை இருக்கலாம். ஆனால் நீ தலைகணத்தோடு ஆடுற. நீ உன் அகங்காரத்தை ரகுவோடு நிப்பாட்டி இருந்தால் சரி. ஆனால் நீ நான் சாப்பிடும் சாப்பிட்டிலேயே மண்ணை போட்டவள் தானே? என்று கூறி கொண்டே வரவும் இந்த முறை பெரிய பண்ணைக்கே அதிர்ச்சி தாங்காமல் “செல்வா” என்று இத்தனை வருடங்களில் இன்று தான் தன் மச்சினனை பேரை சொல்லி உரிமையாக, அதே நேரத்தில் சாப்பாட்டு விசயத்தை கேட்கவும் பதறி போய் குரல் கமற அழைத்தார்.
அவரை கதிர் உடனே தாங்கி அமரவைத்தான். ஆனால் செல்லு பத்மாவை விடவே இல்லை.
“நீ அப்படி செய்யவும் தான் நான் தோட்டத்துக்கு வீட்டுக்கே சென்றேன். நான் ஒன்னும் அநாதை கிடையாது. சொந்த பந்தம் இல்லாதவன் கிடையாது.
காசு பணம் இல்லாத பிச்சை காரனும் கிடையாது. இன்னும் என் அப்பாவின் சொத்தும், அம்மாவின் நகைகளும் இருக்கு. உனக்கு இருக்குனு நினைக்கிறத விட பல மடங்கு இருக்கு என் கிட்ட. என்ன கேட்ட என் பிள்ளைகளை பார்த்து? இங்க பாரு இந்த உலகத்தில் எனக்கு யார் முக்கியம்னா அது என் பிள்ளைகள் மட்டும் தான். அவுங்க மனதில் தந்தை என்ற ஸ்னாத்தில் என்னை மட்டும் தான் வரி வடிவம் கொடுத்து வைச்சு இருக்காங்க.
என் உயிரில கலந்துவுங்க அவுங்க இருவருமே. நீ எனக்கு செய்த பாதகத்தை கூட நான் ஏன் தெரியுமா இவ்வளவு நாட்கள் சொல்லல? உனக்கு புத்தி அவ்வளவு தான் நினைத்து விட்டது தான்.
ஆனால் அதுவே என் பிள்ளைகள் கிட்ட வால் ஆட்டனும், அவுங்க மனச கலைக்கனும், அதன் மூலமா என்னை அவமானபடுத்தனும்னு உன் மனசில் நினைச்சா கூட போதும் உன்னை உரு தெரியாமல் அழுச்சுடுவேன். பரவாயில்லை என் அக்கா மகனுக்கு நல்ல பெண்ணா பார்த்து நான் மறு கல்யாணம் செஞ்சு வைக்குறேன்.
இது தான் உனக்கு முதலும் கடைசியும் இனி நீ என் பிள்ளைகள் கிட்ட ஏதாவது கேட்ட இன்னைக்கு மாதிரி நான் விட மாட்டேன். இனி நாங்க அடிக்கடி இங்கு வருவோம். இது என் வீடு எனக்கு பிறகு தான் உன் புருஷனுக்கே. அப்புறம் தான் நீ. எங்க இல்லைனு சொல்ல சொல் பார்ப்போம்? என்று தனது கோப குரலால் பிசிறு தட்டாமல் பத்மாவை ஒரு வழி ஆக்கினார் செல்லு.
செல்லு இப்படி பேசவும் கதிருக்கு விசில் அடித்து கை தட்ட கைகள் பரபரத்தது. இருந்தாலும் சூழ்நிலை கருதி அமைதி காத்தான்.
செல்லுவின் கடைசி கேள்வியில் தன் தம்பியிடம் வந்து அவனின் இன்னொரு கையை பற்றி கொண்டு “உன்னை வர கூடாது சொல்லுற அதிகாரம் இங்கு யாருக்கு இருக்குடா? நீ தானே டா முதல் பிள்ளை எங்களுக்கு. நான் செத்தா முதல் பொறந்தகொடி நீ போட்டு தானே டா இவுங்களே புகுந்தனா கோடி போடனும். அதுக்கே உனக்கு அடுத்து தான் டா இவுங்கனுங்க” என்று இந்திராம்பாள் அழுகவும் மற்றொரு கையால் தன் தமக்கையை அணைத்து கொண்டார்.
ஒரு கையால் மனைவியையும், மறு கையால் அக்காவையும் அணைத்தபடி நெஞ்சை நிமிர்த்தி தான் வானுயரம் என்று சொல்லாமல் சொல்லி நின்றார் நம் செல்லு.
