அடைக்கலம் நான் உன் மார்பிலே 10

அடைக்கலம் நான் உன் மார்பிலே

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 1

அடைக்கலம் நான் உன் மார்பிலே 1

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 2

அடைக்கலம் நான் உன் மார்பிலே 2

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 3

அடைக்கலம் நான் உன் மார்பிலே 3

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 4

அடைக்கலம் நான் உன் மார்பிலே 4

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 5

அடைக்கலம் நான் உன் மார்பிலே 5

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 6

அடைக்கலம் நான் உன் மார்பிலே 6

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 6

அடைக்கலம் நான் உன் மார்பிலே 6

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 7

அடைக்கலம் நான் உன் மார்பிலே 7

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 8

அடைக்கலம் நான் உன் மார்பிலே 8

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 9

அடைக்கலம் நான் உன் மார்பிலே 9

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 10

அடைக்கலம் நான் உன் மார்பிலே 10

(32)

ஹாஸ்பிட்டலில்…
தான் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து திடுக்கிட்டுக் கண் விழித்தவளுக்கு, சிந்தனையில் இருந்தது எல்லாம் அவளது அன்புக் கணவன் விஷ்வாதினு.
அவளுக்கோ தான் எங்கே இருக்கிறோம் என்று கூட புரியாத நிலை!
மயக்கமருந்தின் வீரியத்தில் எதிரே நின்றிருந்த மனித உருவங்களைக் கூட ‘இன்னார்”தான் என்று சரிவர அடையாளம் காணப்படாத நிலை!!
இருப்பினும் அவள் கண்கள் விஷ்வாதினுவைத் தான் தேடியது. அவளது நாசியும் கூட.. அந்தக் காற்றிலே தலைவனின் வியர்வை நெடியை முகர்ந்திட யாசித்தது.
கட்டிலில் எழுந்தமர்ந்து.. தன்னைச் சூழ நின்ற நபர்களை.. ஏனோ தானோவென சுற்றி வரப் பார்த்தவள், அடுத்த நிமிடம் சடாரென தரையில் கால் பதித்து எழுந்து நின்றாள்.
தன் கையில் ஏற்றப்பட்டிருந்த ட்ரிப்ஸின் நினைவு கூட அற்று சடாரென எழுந்ததின் விளைவாக..ட்ரிப்ஸ் குழாயும் இழுபடவே,
சேலைன் தாங்கியிருந்த அந்தக் கம்பமும்.. அவள் முன்னே சலீரென்று சரிந்து விழலாயிற்று.
அதைக்கண்டு அச்சத்தில் ஓரெட்டு பின்வாங்கியவள், பின்பு நிதானித்து நின்றாள்.
புறங்கையில் இருந்த ட்ரிப்ஸ் குழாய் ப்ளாஸ்டரை.. வலியைக் கூட பொருட்படுத்தாது கழற்றியெறிந்தாள் அவள்.
இவளது செயல்களையெல்லாம் கண்டு விக்கித்துப் போய் நின்றிருந்தனர்… அவள் விழிக்கும் வரை அவளருகிலேயே அவளுக்காக காத்திருந்த அவளது அத்தையும், மாமாவும்!
மகள் தாராவை இழந்த வருத்தம் ஒருபுறம் இருந்தாலும்,
இப்போது தங்கள் கண் முன்னே இருக்கும் தாங்கள் பெறா மகளும்.. பைத்தியம் போல நடந்து கொள்ள பயந்து போயிருந்தனர் அந்த வயதான தம்பதிகள்!!
ட்ரிப்ஸ் ப்ளாஸ்டரை அவள் கழற்றிய வேகத்தில்.. இரத்தம் அவள் புறங்கையில் இருந்தும் எட்டிப் பார்த்து கீழே பூமியை “சட் சட்” என்ற ஒலியுடன் முத்தமிடலாயிற்று.
கையில் ஊன்றியிருந்த ஊன்று கோலுடனேயே இருக்கையை விட்டும் எழுந்த சதாசிவம், அவளை நாடி வந்தவராக, தழுதழுத்த குரலில், “அம்மாடி.. என்னமா பண்ணிட்டிருக்க? சூர்யா..”என்று அவளைத் தடுக்க முனைய,
அத்தை கோகிலாவும், குருதி வழியும் அவள் கையைப் பற்றியவராக, “என்னமா பண்ணிட்டிருக்க? பாரு கையில் இரத்தம் வருது”என்று பேசியதெல்லாம் அவள் கருத்தில் பதியவேயில்லை.
மாறாக, ஒரு பைத்தியம் போல, அத்தையிலிருந்தும் தன் கையை இழுத்துறுவிக் கொண்டு,
கண்ணீர் மல்க, “என்னை விடுங்க.. என்னை யாரும் தடுக்காதீங்க.. நான் என் தினுவைப் பார்க்கணும்.. என் தினுவைப் பார்க்கணும்” என்று திரும்பத் திரும்ப சொன்னதையே சொன்னவளாக அறையை விட்டும் வெளியே வந்தாள் அவள் .
அப்போது தான் அவளைப் பார்க்க வந்திருந்த டாக்டர் அஜய்யின் திண்ணிய உடலுடன்.. அவள் சென்று மோதிக் கொள்ள, ஓரெட்டு பின்னடைந்தவளுக்கு.. அதுவும் கூட கவனத்தில் இல்லை.
“நான் என் தினுவைப் பார்க்கணும்.. நான் என் தினுவைப் பார்த்தேயாகணும்” என்ற வண்ணம்.. முன்னேற முயல, அஜய்க்கோ அவளின் நிலை எண்ணி பரிதாபம் மிகுந்தது.
தன்னுடல் நிலையே கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்திலும் கூட, கணவனைத் தேடும் சூரியகாந்தி!!
அன்று.. அந்நொடி.. அவன் மனதில் பூத்தது “காதல்” என்று சொல்வதைக் காட்டிலும் “மரியாதை” பூத்தது என்று சொல்வது தான் சாலப் பொருந்தும்!!
இவள் அன்பைப் பெற்ற விஷ்வாதினுவின் மேல்.. சிறு பொறாமை மீதூறவும் செய்தது டாக்டருக்கு.
“யாரிது? என் முன்னே நின்னு தடுக்கிறது? வழியை விட்டுப் போங்க.. நா.. நா.. ன் என் தினுக்குட்டி முகத்தைப் பார்த்தேயாகணும்.. சொல்றது புரியலையா என்ன?” என்று கன்னங்களில் கண்ணீர் நதி பெருக்கெடுத்தோட.. கழுத்து நரம்பு இழுத்து இழுத்து அடங்க..
தன் முன்னே நின்றிருப்பது தன் சீனியர் டாக்டர் அஜய் தான் என்று அறியும் திறன் கூட அற்று கூறினாள் அவள்.
அவள்.. தன் தலைவன் சூரியனைக் காணும் வரை ஓயப்போவதில்லை என்பதை நன்கறிந்தான் மருத்துவன்.
அதே சமயம் அவள் மயக்கம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்பதையும், அதனால் தான் அவளுக்கு தன்னை அடையாளம் காண முடியவில்லை என்பதையும் பார்த்ததும் அறிந்து கொண்டான் அவன்.
ஆயினும் சூரியகாந்தியின் பிடிவாதம்??
அவன் நன்கறிந்ததாயிற்றே?
ஒரு டாக்டராக அவளிடம் பேசிப்பார்க்க நாடியவன், “உன் தினுக்குட்டி இஸ் பர்ஃபெக்ட்ளி ஆல்ரைட்… அவன் நல்லா தான் இருக்கான்..” என்றவன் இரு கைகளாலும் அவள் தோளைத் தொட்டான்.
பின்பு, அவள் மேல் உண்மை அக்கறை உள்ளவனாக, “முதல்ல கொஞ்சம் ரெஸ்ட் எடு சூர்யா… உனக்கு இன்னும் மயக்கம் தெளியலை.. அப்புறமா போய் தினுவைப் பார்த்துக்கலாம்” என்று கூறிய வேளை தான்..
அந்தக் குரலில் தன் எதிரே நின்றிருப்பது தன் சீனியர் டாக்டர். அஜய் என்றறிந்தாள் அவள்.
ஆயினும் அவள் மனமோ.. நிலை கொள்ளாமல் தவித்தது.
“இல்லை.. நான் அவனைப் பார்க்கும் வரை எனக்கு ஓய்வே தேவையில்லை.. நான்.. என் தினுவைப் பார்த்தாகணும் ” என்று அலறியவளாக, டாக்டரின் கைகளைத் தன்னிலிருந்தும் தள்ளி விட்டுக் கொண்டே வெளியேறி ஹாஸ்பிட்டல் கோரிடோரை அடைந்தாள் அவள்.
அவள் பின்னால் கண்ணீருடன் வந்து கொண்டிருந்தார் அவள் அத்தை கோகிலா.
தன்னை விடவும் வேகமாக ஓடும் சிறியவளை, எட்டிப்பிடிக்க முயன்று அதில் தோற்ற வண்ணம், அத்தையும் தழுதழுத்த கண்ணீர்க் குரலுடன், “யம்மாடி வந்துரும்மா.. டாக்டர் தம்பி தான்… சொன்னாருல? மாப்பிள்ளைக்கு ஒண்ணும் இல்லை.. அவர் நல்லாதான் இருக்காருன்னு… இப்போ நீ கர்ப்பமா வேற இருக்கேமா.. ப்ளீஸ்மா.. அத்தை சொல்றதைக் கேளுமா..”என்று கூறிக் கொண்டே அவள் பின்னால் வர.. அவள் பின்னால் ஓடி வர முடியாமல் அறையிலேயே நின்று போனார் மாமா சதாசிவம்.
அதுவெல்லாம் அவளது வேகத்தை கிஞ்சித்தும் குறைக்கவேயில்லை.
அவருக்கும் பெண்ணை இழந்த சோகம் உண்டு. தன் காதலனுடன் எங்கோ ஓர் மூலையில் சந்தோஷமாக தாரா வசித்துக் கொண்டிருக்கிறாள் என்ற நிம்மதியுடன் இருந்தவராயிற்றே அவர்?
இருப்பினும் தாரா விஷ்வாதினுவின் அண்ணனால் ஏமாற்றப்பட்டு, வயிற்றில் குழந்தை வாங்கி.. தீக்கிரையாகி இறந்து போயிருக்கும் விஷயம் கேள்விப்பட்டு கதறியழுத அழுகை…
அதைக் காணும் கல் நெஞ்சும் கரைந்து போயிருக்கக் கூடும்!!
ஆனால்.. அதே சமயம்.. கண் முன்னே குற்றுயிரும், குலையியுருமாக கிடக்கும் இன்னோர் மகளான சூரியகாந்தியையும் இழந்து விடுவோமோ என்ற பயம் தோன்ற,
தன்னைத் தானே தேற்றிக் கொண்டு.. ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருந்த சூரியகாந்தி விழித்தெழும் வரை காத்திருந்தவருக்கு.. விழித்ததும் இந்த போராட்டம்!!
அவள் கணவன் இருப்பது எந்த அறை என்று தெரியவில்லை? யாரிடமாவது நின்று விசாரிக்குமளவுக்கு அவளில் நிதானமுமில்லை!!
அந்த நேரம் பார்த்து.. ஓர் அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் அவள் கொழுந்தன் சஞ்சய்.
அவனைக் கண்டதும் சூரியகாந்தியின் வேக நடையோ சட்டெனத் தடைப்பட்டு நின்று போயிற்று.
அவள் பின்னால் வந்து கொண்டிருந்த அத்தை கோகிலாவின் கெஞ்சல் குரலும் தடைப்பட்டு நின்று போயிற்று.
மெல்ல அறைக்கதவை ஒலியெழுப்பாமல் மூடிக் கொண்டே திரும்பிப் பார்த்த சஞ்சய், அங்கே சோர்ந்து போன முகத்துடனும், களைந்து போன கூந்தலுடனும்.. கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்த அண்ணியைக் கண்டு,
அதிர்ச்சி அடைந்த குரலில், “நேநா.. நீ இங்கே எப்படி??” என்று கேட்க,
அவனை ஈரெட்டில் தாவி அடைந்தவள், பரபரப்பும், பதற்றமும் மேலோங்கப் பார்த்தாள்.
அவளது கலங்கியிருந்த மங்கலான விழித்திரைகள் மெல்ல மெல்ல நேர்ப்படத் தொடங்க,
தன் கொழுந்தனின் கையைப் பற்றிக் கொண்டவள், அழுகையுடன், “நான் என் தினுவைப் பார்க்கணும்” என்றாள் அவள்.
சஞ்சயின் கண்கள் ஒரு தரம்.. அண்ணியின் பின்னால் வாய் பொத்தி அழுது கொண்டிருந்த அத்தை கோகிலாவில் பதிந்து மீண்டது.
பின் நேநாவை உச்சாதி பாதம் வரை ஆராய்ந்தது. அப்படி ஆராய்ந்ததில் அவள் கையில் இருந்த இரத்தத்தையும் கண்டு கொண்டது.
அவன் நேநா.. தன் அண்ணனைக் காணும் வேகத்தில்..ட்ரிப்ஸினைக் கூடி கழற்றி எறிந்து விட்டு வந்திருக்கும் அண்ணியின் செய்கையில் மனம் நொந்து போனான் அவன்.
அண்ணி இருக்கும் சூழ்நிலையில் அண்ணனைக் கண்டாள் மனம் உடைந்து போகக் கூடும் என்று தெள்ளத் தெளிவாகப் புரிய,
அண்ணியிடம், சாந்தமான குரலில், “அண்ணாவுக்கு ஒண்ணுமில்லை நேநா… ஹி இஸ் ஆல்ரைட்.”என்று பேசிக் கொண்டிருந்த போதே இடையிட்டுக் கிறீச்சிட்டது அவள் குரல்!!
“நா.. நான் அவரைப் பார்க்கணும்!!!!!!!..” – விழிகள் விரிய அவனையே நோக்கினாள் அவள்.
அண்ணியின் கத்தலில்.. இரு புருவங்களும் இடுங்க.. அமைதியாக அவள் முகத்தையே பார்த்திருந்தான் அவன்.
பிறகு ஏதோ உள்மனம் உந்தவே, அவனாகவே கதவைத் திறந்து, தன் அண்ணியை உள்ளே விடலானான் சஞ்சய்.
புயல் வேகத்துடன் தன் காதலனை நாடி வந்த சூரியகாந்தி மலர், தன் காதலன் சூரியனை அண்மையில் கண்டதும் அமைதியாகி நின்று போனாள்.
அவன் படுத்திருந்த கோலம்.. தற்போது தெள்ளத் தெளிவாகத் தெரியலானது அவள் கண்களுக்கு.
கூடவே மயக்கம் தெளிந்த அந்த நொடி கால்கள் தள்ளாடவே, சமநிலையற்று விழப்போனவள், அந்தக் கட்டிலின் கால்மாட்டுக் கம்பிகளைப் பிடித்து நிதானித்து நிற்கவும் செய்தாள்.
நேற்று நள்ளிரவில் ஆபரேஷன் செய்யப்பட்டு.. சொற்ப நேரத்திற்கு முன்பு தான் இவ்வறைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தான் அவள் தினு.
இதோ படுத்திருக்கிறானே விஷ்வாதினு!!
இவன் என் மன்னவன்!!
என் தலைவன்!!
அவளுக்காக கற்களையும் தன் வெற்றுக்கற்களால் குடைந்தவன்!!
தன்னுயிர் தந்து அவளுயிர் காத்தவன் என்று தோன்ற.. பெண்மை தன்னையும் மீறி கண்ணீர் உகுத்தது.
மெல்ல அடிமேல் அடியெடுத்து வைத்து, அவனை அடைந்தவளின் கண்கள்.. அவனை தாய்மை சிந்தும் விழிகளுடன் ஆராய்ந்தது.
ஈரப்பசையேயற்று வெளிறிப் போன அவன் முகம்!!
காய்ந்து வரண்டு போயிருக்கும் அவன் அதரங்கள்!!
வயிற்றிலே ஓர் பெரிய பேன்டேஜ் கட்டு!!
அயர்வாக காற்றிலே ஆடிக் கொண்டிருக்கும் அவனது கேசம்!!
கற்களைக் குடைந்து தோல் கிழிந்து போன படியால்..அவனது வலிமை மிகுந்த விரல்களிலே குட்டிக் குட்டியாய் கட்டுக்கள்!!
அத்தனையும் பார்த்திருந்தவளுக்கு… இதயக்குழியில் வந்து அடைத்துக் கொண்டது ஏதோவொன்று.
அனிச்சையாய் மேலெழுந்த அவள் கைகளில் ஒன்று.. காற்றில் ஆடிக் கொண்டிருந்த கேசத்துக்குள் புகுந்து.. அவன் தலையை மெல்ல கோதி விடத் தொடங்கியது.
மற்றொரு கையோ அவனது தாடி குத்தும் கன்னங்களை.. காதலுடன் வருடிக் கொடுக்கலானது.
‘தினு..தனக்காக கற்களை அகற்றி.. தன்னுயிர் காத்த அவள் தினுக்குட்டி.’ என்று தோன்றத் தோன்ற காதல் பெருகியது அம்மாதுவுக்குள்.
அவளும், அவன் மேல் தப்பெண்ணம் கொண்டு எத்தனை துன்பங்கள் கொடுத்தாள்?
குழந்தையை அழிக்க முயன்றாள்;தன்னுயிரையே மாய்த்துக் கொள்ள துணிந்தாள்;நால்வர் முன்னிலையில் அவள் பலவீனம் சொல்லி அவமதித்தாள்;வஞ்சினம் கொண்டு தூற்றினாள்; இன்னும் ஏன்? கேவலம் பணத்துக்காகத் தானே இதையெல்லாம் செய்கிறான் என்றெண்ணி… சொத்தையும் கூட அபகரிக்க முயன்றாள்.
ஆனால் அத்தனையையும் விட.. அவன் காதலை அல்லவா உயிராகக் கொண்டான் அவன்?
தலை கோதியவாறே மெல்ல குனிந்தவள், கண்கள் மூடி.. அவனது அகலமான நெற்றியில் தன் ஈரம் தோய்ந்த இதழ்களை.. ஆழமாகப் பதித்தான்.
அந்த நேரம்.. அவள் ஒற்றைத் துளி கண்ணீரொன்று விழுந்தது அவனுடைய இரு இமைகளின் சந்திப்பின் நடுவில்.
அதில் பட்டென சுருங்கியது அவனது கண்கள்!! இமைகள் பின்னே இருந்த அவன் விழிகளின் கருமணிகளும் அங்குமிங்கும் ஓட.. மெல்ல கண் விழித்தான் அவன்.
சூரியனின் முன்னே சூரியகாந்தியின் முகம். அவன் எப்போதும் கண்டு கிறங்கும் அவளுடைய தேன்னிற அஞ்சனங்களின் தரிசனம்!!
அவன் உடம்பு பலவீனமாக இருந்த அந்நிலையிலும் கூட.. எல்லாவற்றையும் விட.. மனைவியின் கண்ணீர் தான் மிகவும் பலவீனமாக்கியது அவனை.
கஷ்டப்பட்டு காய்ந்த அதரங்களைப் பிரித்தவன், மென்மையான குரலில், “அழா.. தே ப்ளேக்பெ.. ர்ரி… எனக்கு ஒண்ணும் இல்லை.. நீ அழுதா எனக்கு கஷ்டமா இருக்கு.”என்று ஒற்றை வார்த்தை தான் பகன்றான் அவன்.
வைராக்கியமான முகத்துடன், கன்னங்களில் வழியும் நீரை அழுந்தத் துடைத்துக் கொண்டவள்,
“இல்லை நான் அழலை.. உ.. உனக்கு கஷ்டத்தைக் கொடுக்கும்.. எந்.. த செயலையும்.. நான் இனி செய்ய மாட்டேன்.. செய்யவே மாட்டேன்” என்றுரைத்த போதிலும் கூட.. தவிர்க்கவே முடியாமல் வழிந்தது ஒரு துளி கண்ணீர்.
அவன் கண்கள் அத்தனை அமைதியான சூழ்நிலையிலும் களேபரத்துடன் சுருங்கியது.
அவனது கைகளில் ஒன்று.. தன் கன்னம் ஏந்தியிருக்கும் அவள் கையைப் பற்றி.. இதழ்களுக்கு அருகில் இழுத்து வர,
தன் சூரியகாந்தி மலரின் முகத்தை காதலுடன் பார்த்த வண்ணமே முத்தம் வைத்தான் சூரியன்.
அவள் புறங்கையைத் தீண்ட அவன் குளுகுளு எச்சில்.. அந்த கண்ணீரிலும் சிறு புன்னகையை வரவழைத்தது அவள் முகத்தில்.
பின்பு… சற்றே கறுத்து வாடிப்போன முகத்துடன், “எ.. என் குழந்தை?” என்றவனின் கண்கள் அவளது வயிற்றைத் தழுவி விட்டு.. அவள் முகத்தைப் பார்த்தது.
அவள் எதுவுமே பேசவில்லை. வார்த்தைகள் உணர்த்தாததை மௌனம் உணர்த்திக் கொண்டிருந்தது.
கண்ணீர் மிளிரும் கண்களுடன்.. தன் தலைவனைப் பார்த்து புன்னகை முகமாகவே நின்றிருந்தாள் சூரியகாந்தி.
அவள் புன்னகையை அவன் சுருங்கிய விழிகளுடன் பார்த்திருக்க,
மீண்டும் அவனை நோக்கிக் குனிந்தவள், அவன் காதோரமாக ஹஸ்கி வாய்ஸில், “நம்ம குழந்தை.. என் கிட்ட தான் பத்திரமா இருக்கு”என்றுரைக்க, சிறுகச் சிறுக மலர்ந்தது அவன் முகம்.
“நம்ம குழந்தை” அந்த வாசகமே அவன் இதயத்தைக் குளிரச் செய்தது.
தன் கண்ணெதிரே அவனது அழகு மனைவி. ரொம்ப நாள் பிரிந்திருந்த ஏக்கமும், காதலும்… அவளை அருகில் பார்த்ததும் கிளர்ந்தெழுந்து கொண்டே இருந்தது அவனுள்.
அதிலும்.. அவள் உரையாற்றும் போது.. நுரையீரலைத் தீண்டும் அவள் வாசத்திலும்.. பலவீனமான அந்நிலையிலும் பித்தானது ஆண் மனது.
எங்கிருந்து தான் அந்தக் காதல் கள்வனுக்கு அசுர பலம் வந்ததுவோ?
அவள் உரைத்த நற்செய்தியில்.. அவள் அருகாமையில் நாடி, நரம்பெங்கும் புது இரத்தம் பாய, தன் காயம்பட்ட கையாலேயே.. அவளது பின்னங்கழுத்தோடு கையிட்டு அவளை இழுத்துக் கொண்டவன்,
காய்ந்து போன தன் கீழதரங்களால்.. அவள் மேலதரங்களைக் கவ்விக் கொண்டான்.
முதலில் அவன் அதிரடியில் காற்றில் கை விரித்து.. திணிறித் திமிறியவளுக்கு..
அவன் அதிரடியின் பின்னே ஒளிந்திருக்கும் அவனது தூய காதல் புரியவே.. அவனுக்கு வாகாக, தலையை சற்றே சரித்து.. தன் இதழ்கள் என்னும் ஏட்டில் அவன் கவிதை எழுத வழி சமைத்தாள் அவள்.
கணவனது எச்சிலும் கூட சுகமானதாகவே இருந்தது.
அவனது வரண்டிருந்த இதழ்கள் எனும் பூமி..அவளிடமிருந்து உறிஞ்சப் பெற்ற நீரில்… கொஞ்சம் கொஞ்சமாக ஈரலிப்புப் பெற்றுக் கொண்டிருந்தது.
பெண்ணவளுக்கோ..கணவனின் அருகாமை இன்னும் இன்னும் வேண்டும் என்று மனம் துள்ள… அவளது தோள் புஜங்களை காதல் உணர்ச்சி தாளமாட்டாமல் இறுகப் பற்றிக் கொண்டாள் அவள்.
அங்கே பெண்ணவளின் முத்த மழையில்.. வெந்து தணிந்து கொண்டிருந்தது ஓர் காடு.
************
ஏழு மாதங்களுக்குப் பிறகு…
பொலன்னறுவையில்…
பொலன்னறுவை வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவன் அணியும் காஸ்ட்யூம்மான காற்றோட்டமான தோட்டி மற்றும் பெனியனுடன்..
கைகளை பின்னால் கட்டிக் கொண்டு.. கம்பீரமான சக்கரவர்த்தியின் தோரணையில்..
அந்த காட்டை அண்மித்திருக்கும் மரங்கள் அடர்ந்த பிரதேசத்தில் நடை பயின்று கொண்டிருந்தான் அவளது சூரியன்.
அந்த இடம் முழுவதும் அவனதும், அவளதுமான முதல் சந்திப்பின் வாசத்தை உணர்த்திக் கொண்டேயிருந்தது.
அதோ தெரிகிறதே அந்தக் குழி!! மான் பிடிக்க வைக்கப்பட்டிருக்கும் குழி!!
அது இன்றும் அப்படியே இருக்கிறது. ஆனால் என்ன? அன்று மான் பிடிக்க பயன்படுத்தப்பட்டது. இன்று பயிர்களைத் துவம்சம் செய்ய வரும் காட்டுப்பன்றிகளைப் பிடிப்பதற்காக பயன்படுகிறது.

மெல்ல திரும்பி தன் இடது பக்கத்திலிருக்கும் பாரிய கற்பாறையைப் பார்த்தான் விஷ்வாதினு.
இந்தக் கல்லுக்கு பின்னே தானே… அவள்.. அவனது ‘ப்ளேக்பெர்ரி’ மறைந்திருந்து.. எதிர்பாராத விதமாக அவள் கையைப் பற்றி இழுத்தாள்?
அதை எண்ணும் போது.. அவன் முகத்தில் மெல்லிய புன்னகைக் கீற்று பரவியது.
தன்னை “விஷ்வா” வின் தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு பணியாளனாக எண்ணிக் கொண்ட அவளை எண்ணி மீண்டும் சிரிப்பு மேலோங்கியது அவனுக்கு.
யாராவது தான் தனியாக சிரிப்பதைப் பார்த்தால் என்ன எண்ணக்கூடும்? என்று எண்ணியவன், பின்னே கட்டியிருந்த தன் வலது கையை மட்டும் எடுத்து,
இருமுவது போல வாயில் வைத்து.. குரலைச் செருகிக் கொண்டு, கம்பீரமாக தன் மார்பை நிமிர்த்தி நிமிர்ந்த நேரம்,
அவனது வலிமையான வயிற்றோடு ஊர்ந்தது அவள் மெல்லிடையாளின் கரங்கள்.
அவளது ஸ்பரிசத்தில் என்றும் போல இன்றும் ஒரு நிமிடம் மூச்சடைக்க நின்றவன், அடுத்த நிமிடம் வாயெல்லாம் பல்லாக காதலுடன் இளிக்கவும் செய்தான்.
முன்பெல்லாம் தன் கணவனை இறுகி அணைத்து.. தனங்களை அவனது திண்ணிய புறமுதுகுடன் மோத விட்டு,
பெண்மையின் மென்மை சுகத்தை கணவனுக்கு உணர்த்தி.. அவன் உடலின் வன்மையை கள்ளத்தனமாக சுகிப்பவளுக்கு,
இப்போது இந்த மேடு தட்டிய வயிற்றினால் ஆசை நிராசையாகித் தான் போனது.
கணவனுடன் ஒன்ற விடாமல் தடுக்கும் மேடெழுந்த வயிற்றினை சுட்டிக்காட்டி, “இது வேற?”என்று அவள் எரிச்சல்பட்டுக் கொண்டிருந்த வேளை,
அவளை நோக்கி மெல்ல திரும்பினான் விஷ்வாதினு.
அங்கே தாய்மையின் பூரிப்பில் நிறைமாத கர்ப்பிணியாக நின்றிருந்த ப்ளேக்பெர்ரியைக் கண்டு மனமும், உடலும் இளகிப் போயிற்று அவனுக்கு.
ஒற்றை நெற்றிக் கூந்தல் கன்னத்தோடு விழுந்திருக்க.. மிக மிக மிருதுவாக காட்சி தந்து கொண்டிருந்த அவள் விழிகள்! அந்த விழிகளின் தேன் நிறம்!!
இன்றும் கிறங்கி மயங்கித் தவித்து நின்றான் இலங்கையின் சத்திரியன்.
பூரித்துப் போய் புஷ்டியடைந்திருக்கும் அவளது கன்னங்கள். கூடவே அவளது கள்ளூறும் இதழ்கள்.
தாய்ப்பால் சுரப்பிகள் செவ்வனே வேலை செய்வதன் விளைவாக நன்றாகவே பருத்திருந்த அவள் தனங்கள்.
மார்பகத்தின் முடிவிடத்தில் தொடங்கி.. அடிவயிற்றில் முடிவடைந்திருக்கும் அவளது முட்டை வயிறு.
அடி வயிற்றில் ஒரு கையும், மேல் வயிற்றில் ஒரு கையுமென வைத்து.. சிசுவை அணைத்தபடி நின்றிருக்கும் அவனது மனைவி!!
எல்லாவற்றையும் ஒன்று விடாமல் இரசித்தான் அவன்.
கூடவே.. கர்ப்பிணியான மனைவியின் ஒவ்வொரு அசைவுகளையும், சின்னஞ்சிறிய மாற்றங்களையும் கண்கூடாகப் பார்த்துப் பார்த்து சந்தோஷ பரவசத்தில் லயித்துப் போனவனாயிற்றே அவன்!!
தற்போது அவளது உயர்ந்திருந்த வயிறு.. நாட்கள் நெருங்க நெருங்க.. அடிவயிற்றை நோக்கி கீழிறங்கி தொங்கிக் கொண்டிருப்பது போல தோன்றியது அவனுக்கு.
மனதுக்குள் சிறு சந்தேகமும், பரிதவிப்பும் பிறந்தாலும்.. அதை வெளிக்காட்டிக் கொள்ள பிரியப்படவில்லை அவன்.
கூடவே தன் இரட்டைத் திமில்கள் இரண்டும் ஏறி இறங்க..பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்டுக் கொண்டே,
ஆயாசமாக நின்றிருந்த மனைவியைக் கண்டவனுக்கு, இவ்வளவு தூரம் வீட்டிலிருந்து.. மூச்சு வாங்க நடந்து வந்திருப்பவள் மேல் கோபம் போனது அவனுக்கு.
கோபம். அதுவும் ஒருவகையான அன்பின் வெளிப்பாடு தான். ஆனால் நம்மில் பலர் அதைப் புரிந்து கொள்வது தான் இல்லை.
அவளைக் குனிந்து நோக்கியவன், சற்றே இரைந்த குரலில், “ எப்படி மூச்சு வாங்குது பாரு.. இது எவ்வளவு பெரிய ஆபத்தான பிரதேசம் தெரியுமா?இங்கேயெல்லாம் நீ.. இந்த மாதிரி நேரத்தில் வரலாமா? ”என்று கேட்க,
அப்போதும் அவள் முகம் மலர்ந்து தான் இருந்தது.
தன் கணவனின் கண்களை மெர்ஸலானவளாக.. விடாமல் பார்த்துக் கொண்டேயிருந்தவள், மிருதுவான குரலில், “தெரியும்.. இங்கே தானே விஷ்வா எனும் ஆணாதிக்கம் நிறைந்த ஒரு மிருகத்துக்குள் இருக்கும்…”என்றவள்,
தன் பெருவிரலையும், சுட்டு விரலையும் சமாந்தரமாக காட்டி, கண்களை சுருக்கி, “ஒரு கு“ட்ட்” டி நல்லவன் தினுவைப் பார்த்தேன்” என்று மொழிந்த தினுசில்… அவன் கோபம் இருந்த இடம் தெரியாமல் போயே போயிற்று.
ஆயினும் அதைக் காட்டிக் கொள்ளாமல், அவளைப் போலவே கைகளால் செய்து காட்டி,” நான் உனக்கு கு “ட்ட்” டி நல்லவனா?” என்று கேட்டான் ஒற்றைப் புருவம் மேலுயர.
அவளோ, அதற்கு கிஞ்சித்தும் சளைக்காமல் பதில் சொன்னாள்.
தலையை மேலும், கீழும் ஆட்டி, “ம்.. ஆமா.. நானும் உன் கூட காலாற நடக்கலாம்னு இருந்தேன்.. நீ என்னை விட்டுட்டு தனியா வந்துட்ட?”என்று தற்போது இவள் குறைப்பட்டுக் கொள்ள,
பின்னாடி கட்டியிருந்த கைகளை எடுக்காமலேயே அவளை நோக்கி, “அதுக்காக.. த.. த்.. தனியாவா வந்த?”என்று கேட்டான் அவன்.
அவ்வாறு கேட்ட போது.. ஏறி இறங்கிய அவனது புருவங்களை இமைக்காமல் பார்த்து இரசித்தாள் அவள்.
அந்நிய ஆடவனைத் தானே கள்ளத்தனமாக சைட் அடிக்க வேணும். இது அவள் கணவன் அல்லவா? என்று தோன்றிய உரிமையோ? அதனால் தான் இந்த பகிரங்க ரசிப்போ?
அவனது முரட்டு கன்னங்களைத் தன் கையால் போலியாகப் பிய்த்து.. பிய்த்த கைக்கு முத்தம் வைத்த வண்ணம் அவனை நோக்கியவள், “அட என் ச்செல்ல தினுக்குட்டி.. இல்லையே.. நான் தனியா வரலையே?” என்றாள் அவள்.
மனைவியின் செய்கையில் சிறுகுழந்தை போல கசிந்துருகிப் போனான் தினுக்குட்டி.
அவளது ஆன்சரில் சுற்று முற்றும் தன் தலையைத் திருப்பி தேடியவனாக, “அப்போ யார் கூட வந்த? நானிம்மா கூடவா? இல்லை யாராவது சர்வன்ட்ஸ் கூடவா?”என்று கேட்டான் அவன்.
அவளோ தன்னிரு கைகளாலும் அவனை சுட்டிக் காட்டி, “உன் கூட தான்..”என்றுரைக்க,
தன் நெஞ்சில் கை வைத்து “என் கூடவா? பொய் சொல்றியா?”என்று சினந்து கொள்ளலானான் அவன்.
சட்டென தன் தொண்டைக்குழியைப் பிடித்து.. சிறு குழந்தைகள் போல, “சத்தியமா.. உன் கூட தான்.. உன் பின்னாலே தான்.. அடி மேலே அடி வைச்சு.. அமைதியா.. மெல்ல.. மெல்ல நடந்து வந்தேன் தினு”என்று கூறியதில்,
போலிக்கோபம் மேலோங்க, “அடீங்ங்…” என்ற வண்ணம்.. கை ஓங்கப் போனான் அவன்.
உயர்த்திய கை அந்தரத்திலேயே நிற்க, தன் இடுப்பில் கை வைத்து, நெஞ்சு நிமிர்த்தி நின்று, “எங்கே அடி பார்க்கலாம்?” என்றாள் அவள் தில்லாக.
அப்படி அவன் நின்ற தோரணையில்.. உயர்ந்து நின்று.. குத்தீட்டிப் போல கண்ணைப் பறித்த அவள் இரட்டை திமில்களில் சித்தம் கலங்கிப் போனான் அவன்.
அவன் கண்கள்.. அவனையும் மீறி.. அவளது தனங்களுக்கு இடம்பெயர.. கடினப்பட்டுப் பார்வையை இழுத்துக் கொண்டவன்,
அவளை நோக்கி,அழுத்தம் நிறைந்த குரலில், “என்னால அடிக்க முடியாதுன்னு நினைக்குறியா??” என்று கேட்டான்.
அவனது அல்லிராணியோ அவளது போஸை கொஞ்சம் கூட மாற்றவேயாமல், அப்படியே தெனாவெட்டாக நின்றவளாக, “ம்ஹூஹூம் முடியவே முடியாது.. எனக்கு கை நீட்டும் தினு.. இந்த ஊரை விட்டே போயாச்சு.. இந்தத் தினுவால் என்னை அடிக்கவே முடியாது.”என்று கூற,
அவனோ கேலிக் கூத்தாட பட்டென அரும்பு நகையொன்றை உதிர்த்தான்.
பின்னே கட்டியிருந்த கைகளுள் வலக்கரம் மட்டும் எடுத்து, சட்டென அவள் இடையூடு கையிட்டு தன்னை நோக்கி அதிரடியாக இழுத்தவன்,
அவளது அதரங்கள் நோக்கிக் குனிய அவனது மூச்சுக்காற்றின் வெப்பத்தையும், சுகந்தத்தையும் சுகித்துக் கொண்டிருந்தவளின் நயனங்கள் அகல விரிந்தது.
அவளது அதிர்ந்த முகபாவனையும் தான் ஆண்மகனின் தாபத்தை இன்னும் கூட்ட.. அவளது செவ்வரியோடிய ஈரம் தோய்ந்த அதரங்களை கவ்விக் கொண்டான் விஷ்வாதினு.
அவளது மென்மையான இதழ்களின் உறிஞ்சல் என்றும் போல இன்றும் அவனுள் மூட்டி விட்டது இளமைத்தீயை.
ஓயாது நடந்த முத்தத் தாக்குதலில் கொஞ்சம் துவண்டு போயிருந்தாலும் கூட.. அவளுக்கோ அது பிடித்திருந்தது.
உணர்ச்சிகளின் உச்சத்தில்.. அந்த செர்ரிப்பழங்களை அவன் கடித்து விட.. அவளது கைகள்.. ஆழப்புதைந்தது அவனது தோள் புஜங்களுக்குள்.
முத்த தாபம் ஓர் முடிவுக்கு வந்து விட..மெல்ல அவளை இவன் விட… சிவந்து வீங்கிப் போயிருந்தது அவளது கீழதரம்!
முகமும் கூட கூச்சத்தில் செந்தாமரையாக மலர, மெல்ல தலைகுனிந்து அவள் நாணி நின்ற வேளை..
அந்த வெட்கத்தை இரசித்துக் கொண்டே அவன் சொன்னான்,
கெத்தாக “இப்போ எப்படி அடிச்சேன் பார்த்தியா? கிஸ்ஸூ..”என்று.
அதில் இவளுக்கு இம்முறை போலிக்கோபம் இழையோட, கணவனைச் செல்லமாக அடிக்க கை நீட்டியவளாக, “யூ ச்சீட்!!” என்ற வேளை, இடுப்பில் கிடுக்கிப்பிடி போட்டாற் போன்று வலியெடுக்கவே,
இரு கைகளாலும் இடுப்பைப் பிடித்துக் கொண்டு.. “ஆஹ்..” என்று வலியில் முணகலானாள் அவள்.
வலியெடுத்ததோ அவளுக்கு. ஆனால் அதை அனுபவிக்கும் வேதனை இவனுக்கு.
ஓரெட்டில் தாவி மனைவியைப் பிடித்துக் கொண்டவன், “என்னாச்சுமா?”என்று கலவரத்துடன் கேட்டான்.
அவளுக்கோ தான் அணிந்திருந்த சேலையின் ஜாக்கெட்டில் முத்து முத்தாக வியர்த்தது போதாதென்று..
அவள் நெற்றியிலும், கழுத்தினோரத்திலும் விறுவிறுவென வியர்க்கவாரம்பித்தது.
கணவனின் கைகளை பொறுக்கவே முடியாமல் அழுந்தப் பற்றிக் கொண்டவள், விட்டு விட்டு மூச்செடுத்துக் கொண்டே,
“த்.. தெத்.. தெரியலை.. ரொம்ப வலிக்குது தினு… பப்.. பயமா இருக்கு தினு”என்றவனுக்கும் அவள் முகத்தில் தெரிந்த வலியில் என் செய்வதென்று புரியவில்லை.
பதறிய முகத்துடன் அவளைப் பார்த்து, தைரியம் சொல்லும் முகமாக, “ ஒண்ணும் ஆகாதுமா.. பயப்படாதே உனக்கு ஒண்ணும் ஆகாது.” என்றவனுக்கு,
அடிவயிற்றில் முட்டிக் கொண்டிருந்த.. கீழிறங்கிய வயிற்றுத் தோலினைக் கண்டவனுக்கு… உள்ளுக்குள் ஏதோ பிசைவது போல இருந்தது.
மனைவியை நோக்கி, “இன்னும் நாள் இருக்குல?..”என்று அச்சத்துடன் கேட்க,
அவளோ வலியில் கத்தித் துடைத்தவளாக, “ஆமா.. ஆனால் இந்த வலி… இது… என்னான்னு தெரிய…?”என்று மனைவி முழுமையாக கூறும் வரை பொறுமையற்ற அவளன்புக் கணவன்,
மனைவியைக் கையில் ஏந்திக் கொண்டான்.
இந்த மாதிரி ஓர் சூழ்நிலையில் காட்டை அண்டிய எல்லை பிரதேசத்தில் அவளுக்கு பிரசவ வலி எடுக்கும் என்று கனவில் கூட எதிர்பார்த்திருக்கவில்லை அவன்.
மனைவியைப் பார்த்து, தன்னம்பிக்கை நிறைந்த குரலில், “பயப்படாமல் இரு.. உன் தினுக்குட்டி உனக்கு ஏதும் ஆக விடமாட்டேன்” என்றவன்,
அந்த அடர்ந்த மரங்கள் வளர்ந்திருக்கும் பிரதசேத்தைத் தாண்டி..மனைவியை ஏந்திக் கொண்டு ஓடலானான்.
அவளோ வலியில் கண்களை மூடிக் கொண்டு, மூச்சு முட்ட “ஹெ.. ன்னால முடியலை தினு.. ர்.. ரொம்ப வலிக்குது.. ஆஹ்… முடிலை.. ஹூஹ்” என்று முணகிக் கொண்டு.. அவனது கைச்சந்தைப் பற்றி அழுத்தினாள்.
பிரசவ வலியில் அவள் அழுத்திய அழுத்தத்தில் என்பு உடைந்து போவது போல வலித்தது அவனுக்கு.
அப்படியானால் அவன் ப்ளேக்பெர்ரி எப்பேர்ப்பட்ட வலியை சுகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்ற, ஆண்மகனின் கண்களில் நீர் திரளவாரம்பித்தது.
அதே சமயம்.. அவன் பாதங்களின் வேகமும் கூடியது.
அடர்ந்த மரங்களைத் தாண்டி… பரந்த புல்வெளியில் அவன் ஓடவாரம்பித்த போது.. அவன் கைகளும், இடுப்பும், உடைகளும் ஈரத்தை உணரவாரம்பித்தது.
ஆம். விஷ்வாதினுவின் மனைவியின் பனிக்குடம் அந்த நேரம் உடைந்து போன நேரம். அவனே எதிர்பார்த்திராதது அது.
உள்ளுக்குள் மனைவிக்கு ஏதாவது ஆகி விடுமோ? ஆகி விடுமோ? என்று பதற்றம் வேறு!!
அதைக் கண்டு.. அவன் இதயம் திக் திக்கென்று துடித்துக் கொள்ள, ஓட்டத்தைத் துரிதப்படுத்தி வயல்வரப்பில் கால் பதித்தான் அவன்.
மனைவியின் முகத்தை ஓடிக் கொண்டே நோக்கி, “ப்ளேக்பெர்ரி.. உனக்கு ஒண்ணும் இல்லைம்மா… இதோ… வந்துட்டோம்”என்று கூறிக் கொண்டே அவன் ஓடுவதையும்,
அவளும் கண்கள் மூடி.. இடுப்பை பிடித்துக் கொண்டு, கண்ணீர் வழிய வலியில் கத்துவதையும் செவியுற்ற,
அங்கே வயலில் களை பிடுங்கிக் கொண்டிருந்த சிங்களப் பெண்மணிகள்.. வேலையை அப்படியே விட்டு விட்டு.. தங்கள் முதலாளியை நோக்கி ஓடி வரலாயினர்.
தங்கள் தலையில் கட்டியிருந்த முண்டாசுகளை அவிழ்த்த வண்ணம், விஷ்வாதினுவை நெருங்கிய பெண்மணிகளில், சற்றே வாட்டசாட்டமான பெண்ணொருத்தி,
“ஐயா என்னாச்சு?”என்று கேட்க,
மற்ற பெண்மணிகளுக்கோ… விஷ்வாதினு விஷயத்தை சொல்ல முன்னரே.. விஷயம் இன்னது தான் என்று புரிந்தது.
மனைவியை மெல்ல தரையிறக்காமலேயே, உயிர் நோகும் முகத்துடன், “தெரியலை.. பனிக்குடம் உடைஞ்சிருச்சி போல..”என்றான் அவன்.
அதற்கு மேலும் யாரும் பேசிக் கொள்ளவில்லை. அந்த தலைமைப் பெண்மணி..
வயலோரம் இருந்த மணல் மேட்டிலே கட்டப்பட்ட குடிசை வீட்டை நோக்கி நடக்க, அவனும் ஏதும் பேசாமல்..
அவர்களுடன் மனைவியை ஏந்திக் கொண்டு விரைந்தான்.
அது களிமண்ணாலும், தென்னோலையாலும் செய்யப்பட்ட சிறு குடில்! பெண்கள் அவ்வறையை ஓய்வெடுக்கும் அறையாகவும், குழந்தைகளுக்கு பால்கொடுக்கும் அறையாகவும் உபயோகிக்கும் சிறு குடில்.
அவசரமாக உள்ளே நுழைந்தவன், அங்கே கிடந்த கயிற்றுக் கட்டிலில் மனைவியைப் படுக்க வைத்து விட்டு,
பக்கத்தில் அமர்ந்து, அவள் கையைப் பற்றிக் கொண்டு,
தலையை கோதி விட்ட வண்ணமே, “ப்ளேக்பெர்ரி இன்னும் கொஞ்ச நேரம் தான்மா.. பொறுத்துக்கோமா..” என்றுரைக்க, அனிச்சை செயலாக அவன் நயனங்களில் இருந்தும் வழிகிறது கண்ணீர்!!
தங்கள் முதலாளி எதற்காகவுமே கலங்கி பயப்படாத கண்கள்.. இன்று கண்ணீர் சிந்துவதைக் கண்டு அவர்களுக்கும் தான் பாவமாகப் போயிற்று.
விஷ்வாதினுவை நோக்கிய தலைமைப் பெண்மணி, , “ஐயா பயப்படாதீங்க.. நாங்க பார்த்துக்குறோம்..நானும் பல பிரசவங்களைப் பார்த்தவள் தான்…நீங்க கொஞ்சம் வெளியே இருந்தீங்கன்னா…”என்று இழுக்க..
அவன் அங்கே நின்றிருப்பதன் சங்கடம் அவனுக்கு புரியவே.. எழுந்து வெளியே செல்லத் துணிந்தவனைக் கைப்பற்றி தடுத்தாள் அவள்.
உயிர் போய்.. இடுப்பு என்புகள் எல்லாம் உடையும் அளவுக்கு வலிக்கிறது அவளுக்கு.
இருப்பினும் விடாமல் கணவனின் கையைப் பற்றிக் கொண்டவள், முக்கி முணகிய வாய்ஸில், “தினு.. டாக்டர் எனக்கு ஸ்கேனில்.. ரெட்டைக் குழந்தைங்கன்னு சொல்லியிருக்காங்க…” என்று சொல்ல,
அவன் தலையோ, “தெரியும்” என்பது போல ஆடியது.
வலியில், “அஹ்.. ஆஹ்…” என்று கத்திக் கத்தி மூச்செடுத்தவளாக, அவனை நோக்கி, “ஒருவேளை.. நான் உயிருடன்..”என்று ஏதோ சொல்ல வர, அவள் என்ன கூற வருகிறாள் என்று புரிந்து போனது அவனுக்கு.
மனைவியின் பேச்சை முழுதாகக் கேட்க முடியாமல், உறுதியான குரலில், “இல்லை.. அப்படியேதும் நடக்காது..”என்றான் அவன்.
ஆனால் அவளோ அப்போதும் விடாமல்.. தன் மார்புகள் ஏற இறங்க மூச்சு வாங்கிக் கொண்டே, “ஹில்லை… இல்லை ஒருவேளை..”என்று ஏதோ சொல்ல வர,
அப்போதும் அவளை பேச விடாமல், “இல்லை.. நான் என் மூணு உயிரையும் திரும்பிப் பார்ப்பேன்..”என்றான் தன்னம்பிக்கையான குரலில்.
“இல்லை.. ஒருவேளை…”என்று அவள் மூன்றாவது முறையாக ஆரம்பித்த போதும் கூட.. அவளைப் பேசவிடாமல்.. அவன் வாய் திறக்க,
என்பை உருக்கும் அந்த கொடிய வலியிலும் கூட கோபம் போனது அவளுக்கு.
இருந்த வலியிலும், பயத்திலும் பேச விடாமல் தடுக்கும் கணவனின் கன்னத்துக்கு சப்பென்று ஓர் அறை வைத்தாள் சூரியகாந்தி.
அந்தப் பெண்மணிகள் எல்லாரும் அதிர்ந்து போய் நின்றிருக்க, இவளோ இரைந்த குரலில், பற்களைக் கடித்துக் கொண்டு,
“ட்டேய்.. என்னைக் கொஞ்சம் ப்பேச வ்விடுடா..!!” என்றாள் அவள்.
பின்னே இவளும் தான் உயிரைக் கடைந்தெடுக்கும் பிரசவ வலியிலும் கூட, அவனுடன் பேச விளையும் போது.. அதைக் கேட்காமல் இவன் இஷ்டத்துக்கு குறுக்கிட்டால் கோபம் போகாதா என்ன?
அவனுக்கு மனைவி அடியெல்லாம் பெரிதாகக் கருதாதவன், அவள் முகத்தையே ஓர் அப்பாவிக் குழந்தை போலப் பார்த்தான்.
அவளோ முகம் கறுத்து வாடி, மரணபயம் சூழ்ந்து கொள்ள, தொண்டைக்குழியில் சுவாசம் ஏறி இறங்க,
கடினப்பட்டு வாய் திறந்தவள், “ஒருவேளை நான்.. திரும்பி வரலைன்னா.. என் ரெண்டு குழந்தைகளையும் கண்ணும், கருத்துமா பார்த்துப்பேல்ல? ஏன்னா திரும்பவும் ஒரு விஷ்வாஜெய் உருவாகக் கூடாது..” என்று தன் மனதில் இருப்பதைக் கணவனிடம் சொன்னாள் அவள்.
திரும்பவும் ஒரு விஷ்வாஜெய் உருவாகக் கூடாது என்று நினைக்கும் மனைவி!!! அப்படியானால் இவள் தான் உயிருடன் மீளப்போவதில்லை என்று எண்ணுகிறாளாமா?
அவனது முகம் இளகியது எல்லாம் ஒரு செக்கனுக்குத் தான்.
பிறகு வைராக்கியம் சிந்தும் முகத்துடன் அவளைப் பார்த்தவன், “இல்லை.. நீ உயிருடன் திரும்பி வருவ!! இந்தத் தினுக்குட்டி உனக்காக காத்துட்டிருப்பேன்..”என்று மட்டும் மொழிந்தவன்,
அவளது இதழில்.. ஆழமாக இதழ்களை அழுத்தி எடுத்து விட்டு.. எழுந்த் வெளியே விரைந்தான்.
அடுத்த பல நிமிடங்களில் அவன் அவனாக இல்லை. குட்டி போட்ட பூனைப் போல..
அந்தக் குடிலின் மூடப்பட்ட கதவின் முன்னே.. டென்ஷனுடன் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் அவன்.
என்ன தான், ‘நீ திரும்பி வருவ!’என்று உறுதியாக மொழிந்த போதிலும் அந்த உறுதியான மண்தரை மனமும், அவளது கண்ணீர் என்னும் மழைத்துளிகளால் ஆட்டம் காணவே செய்தது.
அங்கே குடிலுக்குள் இருந்து அவளோ, “ஐய்யோ.. அம்மா.. ஆஹ்.. முடியலையே?” என்று அவள் கத்திய கத்தலில்… இங்கே போய்க்கொண்டிருந்தது அவன் ஜீவன்.
ஒரு கட்டத்தில் கதறியழுது விடுவோமோ என்று தோன்ற.. பற்களால் அழுந்த மூடிய உள்ளங்கையைக் கடித்துக் கொண்டு.. கண்ணீர் விட்டழுதான் அவன்.
அடுத்த இரண்டு மூன்று நிமிடங்களில் எல்லாம் தொண்டையைக் கிழித்துக் கொண்டு கத்தும் அவள் குரல்!
அதன் பிறகு மெல்லிய, “கீச்” ஒலி போல குழந்தையின் அழுகுரல்!!
அதன் பிறகு அமைதி! அவளுக்குத் தான் பிரசவமானது…. ஆனால் பாரத்தை இறக்கி வைத்தவன் இவன் போல பெருமூச்செறிந்தான் அவன்.
தாங்கவே முடியாமல் மனைவியை நாடிப் போக அடுத்த எட்டு எடுத்து வைத்த வேளை… அவளுக்கு ஆரம்பமானது அடுத்த பிரசவ வலி!!
ஆம். அவளுக்குத் தான் இரட்டைக் குழந்தைகள் அல்லவா?
இந்த முறை அவ்வளவாக எல்லாம் கத்தல் பலமாகக் கேட்கவில்லை. ஆனால் குழந்தையின் அழுகுரல் தான் ரொம்பவும் பலமாகக் கேட்டது.
வெளியே நின்றிருந்த ஓர் இரும்புப் பாறை.. தன் குழந்தைகளின் அழுகை ஒலியில் ஆனந்தக் கண்ணீர் விட்டுக் கொண்டே நின்றிருந்தது.
வெளியே வந்த தலைமைப் பெண்மணியும், பிற பெண்மணிகளும் மின்னல் வெளிச்ச முகங்களுடன் அவனை நோக்க, அவன் முகமோ கண்ணீருடன் பரப்பில் இருந்தது.
அவனை பவ்யத்துடன் பார்த்த தலைமைப் பெண்மணி, “ஐயா.. ரெண்டுமே ஆண்குழந்தைங்க” என்று மொழிந்தது எல்லாம் அவனுடையை புறமுதுகைப் பார்த்துத் தான்.
அதை நின்று கேட்க நிதானமற்று… உள்ளே நுழைந்திருந்தான் அவன்.
குறுகிய கயிற்றுக் கட்டிலில்… அவள்!! தன் குழந்தைகளுடன் அவள்!!
பாவாடை ஜாக்கெட் எல்லாம் இலேசாக களைந்து… பாவாடைக்கு மேலாக.. போர்வையாக சேலையை மூடி.. தன் அடி வயிற்றையும், அதன் ஈரலிப்பையும் மறைத்த வண்ணம் அவள்!!
ஒரு குழந்தை அவள் மார்பில் பால் அருந்திக் கொண்டிருக்க.. மறுகுழந்தை அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.
அமைதியாக அந்தப் பிரதேசத்தில் தன் தலைவனுடன் காதல் வித்தை பயின்று கொண்டிருந்தவள், இமைக்கும் நொடியில் மாற்றங்கள் நிகழ்ந்து.. அவனது குழந்தைக்கு தாயாக பரிணமிக்கிறாள்!!
சூரியகாந்திப் பெண் முகத்தில் துளிர் விட்டிருந்த அந்த மிருது.. அந்த மென்மை.. அந்தத் தாய்மை.. அவளது சூரியனை ரொம்பவும் பாதித்தது.
அவன் குழந்தைகளில் கூட அவன் கவனம் பதியாமல்.. இத்தனை நேரம் பிரசவ வலியுடன் போராடிய ஆசை மனைவிலேயே பதிந்திருந்தது.
மெல்ல தன்னருகில் அமர்ந்த விஷ்வாதினுவையே இமைகொட்டாமல் பார்த்தவள், மிக மிக மென்மையான குரலில்,
“நான் திரும்பி வருவேன்னு உனக்கு அவ்வளவு நம்பிக்கையா?” என்று கேட்க,
ஆனந்தக் கண்ணீரை உகுத்துக் கொண்டிருந்தவன் தலையோ, மௌனமாக ‘ஆமாம்’ என்பது போல ஆடியது.
“எப்படி அவ்வளவு கன்பார்ம்மா தெரியும்?” என்று கேட்டவள், சற்று நேரத்திற்கு முன் அறைந்த அவனது கன்னங்களை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அவனது கன்னத்தை வருடிய கையை.. இதழ்களுக்கு எடுத்துச் சென்று அழுத்தமாக முத்தம் வைத்தவனின் நாசி முகர்ந்தது அவளது தாய்ப்பால் வாசனையை.
குழந்தைக்கு தன் கைகளாலேயே எடுத்து.. முலைக்காம்பை வாயில் வைத்திருப்பாள் போலும் என்று எண்ணிக் கொண்டவன்,
“தெரியும்… ஏன்னா என் காதல் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை!!”என்றுரைத்தவனை.. தன் விழிச்சிறையில் சிறை பிடித்துக் கொண்டாள் சூரியனின் ஆண்டாள்.
பெண்ணாய் பிறத்தல் அரிது. அதில் தாய்மையை அடையும் பெண்களின் வலியை உணர்ந்து கொள்ளும் ஆண்கள் அரிதிலும் அரிது.
அவன் காதலை..அவள் உணர்ந்து கொண்ட நேரம். அவன் காதலை இவள் உணர்ந்து கொண்ட நேரம். ரம்மியமாகக் கழிந்தது விநாடிகள்.
தாயும், தந்தையும் கண்களாலேயே ரொமான்ஸ் செய்வதில்.. தன் பசி மறந்து விட்டார்களே என்று கோபம் கொண்ட இரண்டாவது குழந்தை.. தன் மெல்லிய குரலில் சிணுங்க.. அப்போது தான் பூவுலகம் மீண்டனர் இந்திரனும், இந்திராணியும்.
பால் அருந்தி முடித்த மூத்தவனை கைகளில் ஏந்திக் கொண்டான் விஷ்வாதினு. அந்த மதலை..அதுவொரு பூக்குவியல். அதைச் சுற்றி அவ்வளவு மென்மை.
தாயின் கிழிக்கப்பட்ட சேலைத் துணியில் சுற்றப்பட்டிருந்த அந்த பொக்கிஷத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டவன்,
மூச்சடக்கி.. மென்மையாக இதழ் பதித்தான்.
தந்தையின் இதழ்களின் குறுகுறுப்பில் பச்சக்கென்று ஒரு தரம் கண் திறந்தது மூடியது குழந்தை.
அதில் என்ன அதிசயங் கண்டான் இலங்கை சத்திரியன்?
உடம்பிலிருக்கும் கோடான கோடி மயிர்கள் சிலிர்த்துக் கொள்ள, மனைவியிடம் மென்மையான ஹஸ்கி வாய்ஸில்,
விழிகள் விரிய, “ப்ளேக்பெர்ரி.. இவனைப் பார்த்தியா…? அப்படியே உன்னுடைய கண்கள்.. ப்ரவுனிஷ் விழிகள்!! அப்படியே உன்னை மாதிரி!! ” என்றான் அவன்.
இரண்டாவதாக வந்த இளையவனுக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த சூரியகாந்தி மலரோ, இலேசாகத் தலையாட்டி, “இவனுக்கு மட்டும் என்னவாம்? சிரிக்கும் போது.. உன்னை மாதிரியே டிம்பிள் விழுது!! ”என்று கூறியதைக் கேட்டு…
அவன் தலை குனித்து சிரிக்க.. அழகாய் விழுந்தது அவன் கன்னத்தில் ஒற்றைக் குழி!!
புன்னகைக்கும் கணவனையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சூரியகாந்தி.

(33)

ஏழு வருடங்களுக்குப் பிறகு,
தங்கள் வீட்டு போர்ட்டிகோவில் நின்றிருந்த காரின் டிக்கியில் லக்கேஜ்களை ஏற்றிக் கொண்டிருந்த டிரைவர் மணியிடம்,
மூங்கிலால் வேயப்பட்ட கூடையொன்றைக் கொடுத்தவள், “மணியண்ணா.. இதையும் டிக்கியில் வைச்சிடுங்க.. கவனமா வைங்க மணியண்ணா.. ஏன்னா அனு பாப்பாவுக்கான பால் பவுடர் பாட்டில் அதில் தான் இருக்கு” என்று கூறிக் கொண்டிருந்த வேளை,
தன் குட்டி ட்ராவலிங் பேக்கினை எடுத்து வந்து கொண்டிருந்த.. இரட்டையர்களில் மூத்தவனான யாதவ்வை நோக்கினாள் சூரியகாந்தி.
சின்னவன் பேக்கினை கடினப்பட்டு தூக்கி வருவதைக் காணப் பொறுக்காத டிரைவர்,
விரைந்து வந்து பேக்கின் பக்கம் கை நீட்டியவராக, “கொடுங்க சின்னைய்யா… நான் எடுத்து வைக்குறேன்”என்று வாங்கிக் கொண்டார்.
பெரிய பாறாங்கல்லைத் தூக்கி அகற்றியது போல கைகளிரண்டையும் தட்டி விட்டுக் கொண்டே, இடுப்பில் கை வைத்து, தலையை முப்புறமும் சுழற்றியவனின் செய்கையில் , ஒரு கணம் விக்கித்துப் போய் நின்றாள் தாய் சூரியகாந்தி.
பின்னே மூத்தவனின் சின்னஞ்சிறு செய்கைகளும் கூட.. அவளது அன்புக் கணவனின் செய்கைகளை நினைவுறுத்தும் போது… அவள் அதிர்ச்சி அடைவதிலும் தான் ஒரு ஞாயமிருக்கிறது!!
கண்கள் மட்டும் தான் அவளைப் போல செங்கபில நிறக்கண்கள்.. ஆனால் செயல்கள்?
விஷ்வாதினு டூ பாயிண்ட் ஓ வெர்ஷன் அவன்.
தன் மூத்த புதல்வனை நோக்கியவள், “ யாதவ் கண்ணா.. உன் ஹேட்டை எடுத்து வைச்சியா? இல்லை மறந்துட்டியா?” என்று கேட்க,
“ஆமாம்மா… அதெல்லாம் எடுத்து வைச்சிட்டேன்..”என்றுரைத்தான் சின்னவன்.
“ஆமா தம்பியும், வைஷூவும் எங்கே?..” என்று பெரியவனை நோக்கி.. அவனது மற்ற சகோதரர்களைப் பற்றி சூரியகாந்தி கேட்க,
போர்ட்டிகோவின் முன் நின்ற வண்ணமே, வீட்டு வாசல்படி தாண்டி உள்ளே ஹாலை நோக்கிக் கை காட்டியவன்,
தன் ஜெராக்ஸான ஆதியையும், தங்கச்சி வைஷாலியையும் ஆளுக்கு ஒரு கையில் தூக்கிக் கொண்டு வரும் சஞ்சய் சித்தப்பாவை நோக்கி,
“அதோ.. Bபாப்பா(சித்தப்பா சிங்களத்தில்) தூக்கிட்டு வராரும்மா…”என்றவன், மீண்டும் ஏதோ ஓர் பொருளை எடுத்து வருவதற்காக வாசற்படி தாண்டி உள்ளே விரையலானான்.
வாசற்படி ஏறும் போதும் கூட.. தன் டெனிம் பாக்கெட்டுக்குள் இரு கைகளை இட்ட வண்ணமே சென்ற மூத்தவனின் செய்கையில் இருந்த..
அண்ணன் விஷ்வாதினுவைப் பிரதிபலிக்கும் க்யூட்னஸில் மெல்ல மிருதுவாக மாறியது சஞ்சயின் முகமும்.
குழந்தைகள் இருவரையும் தூக்கி வந்த சஞ்சயைப் பார்த்து முறுவலித்த சூரியகாந்தியின் கண்கள், தன் இளைய மகன் ஆதியின் மேல் பதிந்தது.
ஏழு வயதாகியும் தன் சித்தப்பன் மேல் தொற்றிக் கொண்டிருந்த இளைய மகனைக் கண்டு, சற்றே கண்டிக்கும் தொனியில்,
“என்ன இது ஆதி? .. இப்போ நீ வளர்ந்த பையன்!! .. ஏழு வயசாகுது.. இன்னும் Bபாப்பா மேல் தொத்திக்கிட்டு?என்ன பழக்கம் இது?” என்று கடிந்து கொள்ள, இடையே குறுக்கிட்டது.. அவளது மூன்றாவது வாரிசு வைஷாலி.
இரட்டையர்கள் இருவரும் பிறந்து.. இரண்டு வருட இடைவெளிக்குப் பின் பிறந்தவள் இவள்!
ஐந்து வயது தான் ஆனாலும், ரொம்ப வாயாடி !! எல்லாம் அவள் தந்தை கொடுக்கும் செல்லம் தான் என்று தோன்றும் இவளுக்கு.
பின்னே.. தாயுடன் பதிலுக்கு பதில் வாயாடி.. சில நேரங்களில் வாயடைத்துப் போய் நிற்கவும் செய்து விடும் இந்த வாண்டு.
அந்த நேரங்களில் எல்லாம் குபீரென்று சிரித்து விடும் கணவனைக் கண்டு முறைப்பவள்,
கோபத்துடன், “ஏன் தினு… என்ன சிரிப்பு? என்னை இப்படி வாயடைச்சுப் போய் நிற்க வைக்குதே.. இந்த வாண்டு.. இவளுக்கு, ‘அம்மாவுக்கு அப்படி பேசக்கூடாது’ன்னு சொல்லிக் கொடுத்தால் தான் என்னவாம்?” என்று கேட்பதுண்டு.
அதற்கு அவன் சொல்லும் பதிலோ விசித்திரமாக இருக்கும்.
வைஷூ காதில் விழாத வண்ணம் மெல்லிய குரலில், “என்னால முடியாததை.. என் பொண்ணால செய்ய முடியுதேன்னு நினைக்குறப்போ.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடி” என்பான்.
அதைக் கேட்டு இவளோ சண்டைக்கு சிலிர்த்துக் கொள்ளும் பூனை போல, “ஏன்டா.. நான் வாயடைச்சுப் போய் நிற்கிறது உனக்கு பெருமையா இருக்கா?”என்று சினந்து கொள்வதும் உண்டு.
ஆயினும், வைஷூவிடம் திரும்பி, “அம்மாவுக்கு இப்படியெல்லாம் பேசக் கூடாது வைஷூ”என்று புத்திமதி சொல்வதுடன் நில்லாது,
மனைவியையும் சமரசப்படுத்தும் முகமாக, “ப்ளேக்பெர்ரி… அவளும் தான் சின்னக் குழந்தை.. வளர்ந்து பெரியவளானதும் அவளே புரிஞ்சுப்பா..இதை நீ பெருசா எடுத்துக்காதேமா”என்று சொல்லவும் தவறுவதில்லை அவன்.
அதே போல இன்றும் சித்தப்பாவின் முன்னாடி தன் தாயை வாயடைத்துப் போய் நிற்க வைக்க நாடியதோ இந்த வாண்டு?
சின்ன அண்ணனை.. தாய் திட்டியது பொறுக்க மாட்டாமல் வாய் திறந்த வைஷூ, தன் கீச்சுக் குரலில்,
“அம்மா.. ஏன்மா.. வர வர சின்னச் சின்ன மேட்டருக்குலாம் சின்னண்ணாவைத் திட்டுற?”என்றதோடு நில்லாமல்,
“ உன்னை மட்டும் நேத்து ராத்திரி.. அப்பா தூக்கிக்கிட்டாரே? நீயும் அப்பா கூட ‘ஈஈ’ன்னு இளிச்சினு நின்னியே? …. நீ அண்ணாவை விட வளர்ந்த பொண்ணுல்ல?..உனக்கொரு ஞாயம்? சின்னண்ணாவுக்கொரு ஞாயமா?”என்று தலையாட்டிக் கேட்டாள் அவள்.
‘சித்தப்பா முன்னிலையில் கணவனும், அவளும் நின்றிருந்த விதத்தைக் கூறி விட்டாளே இந்த பொல்லாத வாண்டு!’ என்று தோன்ற திரு திருவென விழித்துக் கொண்டு நின்றிருக்க வேண்டியதாயிற்று அவளுக்கு.
சஞ்சயின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூச்சப்பட்டுக் கொண்டு, கண்களின் மணிகளின் அங்குமிங்கும் அலைபாய, “அது.. அது..” என்று அவள் இழுக்க,
சித்தப்பாவின் கைகளில் இருந்த வைஷூவோ, தாயை நோக்கி, சற்றே காண்டான குரலில், “மழுப்பாதேம்மா..” என்றாள் சின்னவள்.
அவனுடனான இந்த ரம்மியமான ஏழு வருட வாழ்க்கையில்,
அவள் மேல் அவன் வைத்திருக்கும் அன்பிற்கு ஆதாரமாக ஒற்றைப் பிரசவத்தில் முத்தாய் வந்து பிறந்தது இரண்டு சிங்கக்குட்டிகள்.
அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிறந்தவள் தான் இந்த வைஷாலி!! வயது ஐந்தாகிறது!
வைஷூ பிறந்து இரண்டு வருட இடைவெளியின் பின் பிறந்த கடைக்குட்டி அனுஷ்யா.
மூன்று வயது தான்.. ஆனால் அவள் செய்யும் அடாவடியில்.. விஷ்வாதினுவுக்கும் மூக்கில் வியர்க்கும் பரபரப்பு உண்டாவது ஏனோ உண்மை!!
ஆக, ஏழு வருடத்தில் நான்கு வாரிசுகளை அடுக்கடுக்காகப் பெற்றதன் பின்பு கொஞ்சம் கொழுக்மொழுக்கென்றாகி பார்ப்பதற்கு புஷ்டியாகத் தான் தெரியலானாள் சூரியகாந்தி.
நேற்றிரவு அதைப் பற்றி கணவனிடம் குறைப்பட்டுக் கொண்டிருந்தாள் அவள்.
குழந்தைகள் யாருமில்லாத அவர்கள் மாத்திரமே அனுபவித்த அழகிய தனிமை நேரம் அது.
வெறும் ஜம்பர் மற்றும் ஸ்லீவ்லெஸ் பெனியனுடன் கட்டிலில் அமர்ந்து செல்லை நோண்டிக் கொண்டிருந்தவனின் அருகில் வந்தவள்,
கட்டிலுக்கு எதிர்முனையில் இருந்த ட்ரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் உடலை இருபுறமும் திருப்பி, தன் பின்னழகை கண்ணாடியில் பார்த்த வண்ணம்,
“ஏன் தினு… நான் ரொம்ப குண்டாகி.. அசிங்கமாகிட்டேன்ல?”என்று கேட்டாள் அவனது ப்ளேக்பெர்ரி.
செல்லில் இருந்து தலை தூக்கியவனுக்கோ, கண்ணாடியில் தெரிந்த அவளது அழகில், இனிப்புத் தின்பண்டம் கண்டது போல நாவூறலானது.
கூடவே கண்களில் கிறக்கமும் கூட, அமர்ந்திருந்த நிலையிலேயே, அவளது பின்னழகோடு கையிட்டு தன்னோடு சேர்த்து அணைத்தவன்,
அவளது மெது மெது என்றிருந்த வயிற்றில் முகம் புதைத்தவனாக காதல் குரலில், “யாரு சொன்னா? அடி என் ப்ளேக்பெர்ரீஈஈ… என் கண்ணுக்கு எப்போவும் நீ அழகி தான்டீஈஈ..” என்றான் அவன்.
தான் அணிந்திருந்த சேலைக்கும் மேலாக.. வயிற்றில் குத்திய அவனது தாடி மயிர்களில், உடம்பு கூச்செறிய, அவனது பிடரி மயிரைக் கொத்தாகப் பற்றி,
தன்னிலிருந்தும் விலக்கியவள் கேட்டாள் , “ச்சீ போடா.. நான் மனசு கஷ்டப்படக் கூடாதுன்றதுக்காக பொய் சொல்றேல்ல?” என்று.
அதைக் கேட்டு அவனோ, தன் சூரியகாந்தி மலரை நோக்கி, “சத்தியமா இல்லைடீ” என்று சத்தியம் செய்ய,
இவளோ காதலுடன் அவளது தலை மயிரைக் கோதி விட்டவளாக, சின்னக் குரலில், “நான் வேணா.. உன் கூட சேர்ந்து.. நம்ம ஜிம்மில் வர்க் அவுட் பண்ணி என் உடம்பை குறைச்சிக்கட்டா?” என்று கேட்டாள்.
மனைவியின் தலை கோதும் சுகத்தை, அவள் வயிற்றில் கன்னம் பதித்து கண்கள் மூடி அனுபவித்துக் கொண்டு இருந்தவன்,
“உன் இஷ்டம்… ஆனால் இப்போ தான்… அது அது.. எல்லாம்.. நான் ஆசைப்பட்ட அளவா இருக்குன்னு மனசளவில் சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன்..” என்று ஓர் கணவனாக,
அவளுடலைப் பற்றி ஆண்மகன் அவன் கொண்ட ஆசைகளையும், டேஸ்ட்களையும் கூறினான் அவன்.
அதில் வெட்கமும், கூச்சமும் அவளைப் பிடுங்கித் தின்ன, மீண்டும் முன்பு போல பிடரி மயிரைக் கொத்தோடு பற்றி தன்னிலிருந்தும் விலக்கியவள், “ச்சீ ராஸ்கல்.. என்று சொன்ன வேளை,
அவளது பின்னழகில் முழு பாரத்தையும் கொடுத்து.. குழந்தைகளைத் தூக்குவது போல அப்படியே தூக்கிக் கொண்டான் விஷ்வாதினு.
அவளோ கணவன் திடீரென உயரத்தூக்கியதில் அச்சம் கொண்டு.. அவனது பின்னங்கழுத்தூடாக கையிட்டு, இறுக்கியணைத்துக் கொண்டாள்.
அவள் அணைத்த தினுசில், அவனது முகத்துக்கு நேராக வந்து குத்தி நின்றது அவளுடைய இரட்டைத் திமில்கள்.
சேலைக்கு மேலாகப் புடைத்துத் தெரிந்த தனங்களில் சிந்தை இழந்தான் அவன்.
அதன் மென்மையில் தன்னிரு முரட்டுக் கன்னங்களையும் புதைத்துப் புரட்டியவன், அவளை நோக்கி,
“நீ குண்டாகலைடி .. கும்முனு ஆயிட்ட?” என்று சிந்தை மயங்கிக் கூறிக் கொண்டிருந்த மந்தகாசமான வேளை அது.
அந்நேரம்.. படாரென கதவைத் திறந்த வைஷூ, கண்களை மூடி நின்று, உச்சஸ்தாயியில்,
“அப்பாஆஆ.. என் டெட்டி பெயாரை… அனு எடுத்துட்டு.. தரமாட்டேங்குறாப்பாஆஆ!! ” என்று அலறிய வண்ணமே கண்ணைத் திறக்க… பெற்றோர் இருவரும் இருந்த நிலையைக் கண்டு.. விழியகல நின்றாள்.
குழந்தை எதிர்பாராத நேரத்தில் நுழைந்ததைக் கண்டு திகைப்புற்றுப் போய் நின்றிருந்தனர் தலைவனும், தலைவியும்.
அவள் தான் பேயடைத்தது போல நின்றிருக்க, உடனே சுதாரித்துக் கொண்ட அவள் கணவன் தினுக்குட்டியோ,சட்டென மனைவியை இறக்கி விட்டான்.
பின்பு குழந்தையை கைகளில் ஏந்திக் கொண்டவன், “அது ஒண்ணுமில்லைடா வைஷூ.. அப்பா, அம்மா வெயிட் செக் பண்ணிட்டு இருந்தேன்..அம்மா செம்ம வெயிட்!!… பாரு..ஒயாவ உஸ்ஸன்ன ஈஸி (உன்னைத் தூக்க ஈஸி)” என்று மழுப்பத்தான்..
போன மூச்சு திரும்ப வந்தது போல இருந்தது சூரியகாந்திக்கு.
‘அதை பப்ளிக்கில், சித்தப்பா முன்னிலையில் கூறி விட்டாளே மகள்!’.. என்று அவள் மழுப்பும் வழிவகையறியாது நின்றிருந்தாள் அவள்.
அதைக் கண்டு பட்டென சிரித்து விட்ட சஞ்சய், “ஹஹஹா.. விடுங்க அண்ணி.. இந்த கால குழந்தைகளிடம் பெத்தவங்க பல்பு வாங்குறது புதுசா என்ன?..”என்றவனிடம் அசடு வழிய புன்னகைத்து வைத்தவள்,
சஞ்சயின் முகத்தைப் பார்க்க கூச்சப்பட்டவளாக, அவனுக்கு புறமுதுகிட்டு நின்று,
டிக்கியில் இருந்த பொருட்கள் எல்லாம் சரியா என்று கவனிப்பது போல பாவ்லா செய்யலானாள்.
அந்த கணம் ஆதியையும், வைஷூவையும் இறக்கி விட்டவன், அண்ணியின் புறமுதுகை நோக்கி,
“நேநா.. ஆதியையும் கூட்டிட்டுப் போகணுமா என்ன? அவனையாவது எங்க கூட விட்டுட்டுப் போகலாமே?.. நானும், சொனாலியும் நல்லா கவனிச்சிப்போம் நேநா.” என்றுரைத்தான் இளையவன் ஆதியை ரொம்பவும் மிஸ் செய்பவனாக.
கன்னங் குழி விழ சிரிக்கும் ஆதியின் மேல் ஒரு பர்சன்ட் எக்ஸ்ட்ரா பாசம் உண்டு சஞ்சய்க்கு. காரணம் அண்ணன் விஷ்வாதினுவின் அதே சிரிப்பு!!
ஆதி மற்ற எல்லாரையும் விட சமர்த்து. தானுண்டு, தன் வேலையுண்டு என அமைதியாக இருக்கும் ரகம் அவன்!!
அதனால் கர்ப்பிணியான தன் மனைவி சொனாலிக்கு பொழுது போவதுடன்.. வேறெந்த தொந்திரவும் ஆதியால் இருக்காது என்று கருதினான் சஞ்சய்!!
சஞ்சய் பேசிக் கொண்டிருக்க, தன் அழகான முட்டை வயிற்றைத் தள்ளியவளாக, இடுப்பைப் பிடித்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தாள் சொனாலி.
சொனாலியைக் கனிவுடன் பார்த்த பெரியவள் “இவளையே கவனிச்சிக்க இன்னொருத்தர் தேவை.. இதில் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆதியைக் கவனிச்சிக்க போறீங்களா?”என்று கேலி பேசியவளுக்கு.. அடுத்து பேசும் போது கண்கள் கலங்கவாரம்பித்தது.
ஒரு கையால் அமைதியான ஆதியையும், மறுகையால் வாயாடி வைஷூவையும் அணைத்துக் கொண்டே, தாய்மை சிந்தும் குரலில்,
“என்ன சொன்னாலும், என்னால முடியாது சஞ்சய்.. நானும், அவரும் தனியா போறதுக்கு ஏற்பாடாகியிருந்த பயணம் தான் இது.. இருந்தாலும் என்னால இவங்களை விட்டு இருக்க முடியாது சஞ்சய்…”என்றாள் அவள்.
பின் கவலை மீதூறும் குரலில், “நானும் என்ன என்னமோ செய்து.. இந்த இனம்புரியாத பயத்தை அகற்றப் பார்க்கிறேன்.. முடியலை.. ஆதியும், யாதவும் ஸ்கூல் விட்டு வர.. கொஞ்சம் டைமானாலே.. எனக்கு பதறுது..” என்றவளின்.. குழந்தைகள் மீதான அணைப்பு இறுக்கமானது.
“அவங்க என் கண் முன்னாடி இருக்கணும்னு ஆசைப்பட்றேன்..யார் மனசு எப்படி பட்டதுன்னு நமக்குத் தெரியாது சஞ்சய்.. அதுக்காக நான் உன்னைக் குத்தம் சொல்ல வரலை..உன்னை நான் என் சகோதரன் போல மதிக்குறேன்.. நம்புறேன்…
ஆனால் எப்படியாப்பட்ட சூழ்நிலையிலும்.. திரும்பவும் ஒரு விஷ்வாஜெய் உருவாகக் கூடாது.. அதான் கண்ணும், கருத்துமா பார்த்துக்கறேன்..”என்றவளின் கண்களில் நீர் துளிர்த்தது.
“என் குழந்தைகளுக்கு மனதளவில் கூட வேற்றுமை வரக்கூடாதுன்னு தான்.. ஒரு பென்சில் வாங்கிக் கொடுத்தாலும்.. இளையவனுக்கும் அதே மாதிரி பார்த்துப் பார்த்து செய்றேன்”
உன் கிட்ட அவனை விட்டுட்டுப் போனாலும்.. நொடிக்கொருதரம் மனசு…’ என் பையன் என்ன பண்றான்? என் பையன் என்ன பண்றான்?’னு தான் அல்லாடும்… எனக்கும் நிம்மதி இருக்காது.. நான் பண்ற எக்கச்சக்கமான ஃபோன் கோலிலே.. இங்கே உனக்கும் நிம்மதி இருக்காது..
அதனாலே அவன் நம்ம கூட வர்றது தான் கரெக்ட்டுன்னு படுது சஞ்சய்.. புரிஞ்சுப்பன்னு நினைக்கறேன்..”என்று சாந்தமான குரலில் அனைத்தையும் எடுத்துக் கூறலானாள் அவள்.
இறந்து போன.. மனம் பிறழ்வான தன் மூத்த அண்ணன் விஷ்வாஜெய், தன் அண்ணி மனதில் நிகழ்த்தியிருக்கும் தாக்கம் புரிந்தது அவனுக்கு.
அதனால் நேநாவை மேற்கொண்டு வற்புறுத்த மனமற்று, “புரியுது நேநா.. நீங்க அநாவசியமாக ஃபீல் பண்றதை விடுங்க” என்றான்.
தன் கொழுந்தனின் மனைவி சொனாலியிடம் சூரியகாந்தி, “ஆமா என் சின்ன வாண்டும், தினுக்குட்டியும் எங்கே? சத்தத்தையே காணோம்..” என்று கேட்க,
உள்ளிருந்து ஓர் ஏகாந்தமான குரல் கேட்டது.
அந்தக் குரல்.. யாருடையதாகத் தான் இருக்கக் கூடும்? அவள் ஆசைக் கணவன் விஷ்வாதினுவுடையதே தான்!!
கையில் சிறியவள் அனுவை ஏந்திக் கொண்டு, “ இதோ ரெண்டு பேரும் வந்துட்டோம்..”என்றவனாக மனைவியை அடைந்தவன்,
“ பேம்ப்பர்ஸ் போட மாட்டேன்னு ஒரே அடம்..நம்ம அனுக்குட்டிக்கு பேம்ப்பர்ஸ் போட நான் பட்ட பாடு!!..”என்று சலித்துக் கொண்டே மனைவியிடம் திரும்பினான் அவன்.
அன்னையைக் கண்டதில், குழந்தை கை நீட்டி அவளிடம் பாய, விஷ்வாதினுவின் மனமும் மானசீகமாக அவளிடம் பாயத் தொடங்கியது.
அடர்ந்த சிவப்பு நிற ப்ளேன் சேலையில்… அவளுடைய மென்மையான கழுத்துத் தெரிய, காலையில் பனியில் நனைந்த மலர் போல இருந்தவளைக் கண்டு.. ஏகத்துக்கும் காதல் ஹோர்மோன்கள் தாருமாறாக சுரக்கவாரம்பித்தது அவனுக்கு.
குழந்தையை கொடுக்கும் சாக்கில், யதேச்சையாக நிகழ்வது போல,
தன் மனைவியின் ஜிமிக்கிக் கம்மலை உரசி, காதோரம்,ஹஸ்கி வாய்ஸில், “செக்ஸியா இருக்கேடி” என்றான் அவன் .
அதைக்கேட்டு அவளுக்கு மயிர்க்கால்கள் எல்லாம் கூச்செறிய, முணுமுணுக்கும் தொனியில்,
பிறர் அறியா வண்ணம், “ம்ப்ச்சு.. குழந்தை இருக்கும் போது என்ன பேச்சு இது?”என்று கடிந்து கொண்டவளின் கண்கள் தான் முறைத்தாலும்,
கன்னக்கதுப்புகள் சிவந்து தான் போயிருந்தது நாணத்தில்.
அதைக் கண்டு அசடு வழிந்து.. தலை சொறிவது போல பார்வையைத் தாழ்த்திக் கொண்டவன், குழந்தைகளிடம், “வாங்க வாங்க செல்லங்களா.. வண்டியில் ஏறுங்க..” என்றவனாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு வண்டியை நோக்கிப் போனான் அவன்.
குழந்தைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டே திரும்பியவன், புருவங்கள் இடுங்க, “நானிம்மா எங்கே?..”என்று கேட்க,
அவரின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தான் மூத்தவன் யாதவ்.
பிக்னிக் செய்வதற்கு ஏற்றாற் போன்று.. கண்களில் கூலிங் கிளாஸூடனும், கையில் ஹேன்ட் பேக்குடனும் வந்தவர், சஞ்சயை நோக்கி,
“வர்றேன்பா..” என்று வாஞ்சையுடன் மொழிந்தவர்,
தன் இளைய மருமகளைக் கண்டதும் இதழ்கள் சுழிக்க நின்றார்.
சுருக்கமாக சொல்லப் போனால் இருவருக்கும் ஆகாது. அதற்காக ஒருவருக்கு ஒருவர் பிடிக்காது என்றில்லை. இருவரின் குணவியல்புகளும் ஒத்துப் போவதில்லை எனலாம்.
எந்த வீட்டில் தான் மாமியார் – மருமகள் சண்டை இல்லை?
அதே தான் இவர்கள் வீட்டிலும். அடிபிடி சண்டை என்றில்லா விட்டாலும், சின்னஞ்சிறிய வார்த்தை மோதல்கள் நிகழ்வதுண்டு.
சொனாலி கொஞ்சம் வெஸ்டர்ன் டைப். இருபத்தோராம் நூற்றாண்டின் புதுமைப் பெண்.
கணவன் வரும் வரை விழித்திருக்காமல்.. சாப்பிட்டு விட்டு உறங்குவது, ஒழிவு, மறைவு பார்க்காமல் அனைவர் முன்னிலையிலும் கணவனிடம் சரசம் புரிவது..
இந்த மாதிரி அவளிடம் சிற்சில விஷயங்கள்.. பழைய காலத்து மரபு பேணும் நானிம்மாவுக்கு பிடிப்பதில்லை.
சஞ்சய்க்கோ மனைவியின் போக்கில் கவலையும் இல்லை. ‘அவள் வயிறு. அவள் பசி அவளுக்கு. பசித்தால் சாப்பிடுவதில் என்ன தவறு!’ என்பான் அவன்.
சொனாலி கர்ப்பம் தரித்ததில் இருந்து… நானிம்மா கொஞ்சம் விட்டுக் கொடுத்து போனாலும்… அவர்களுக்குள் இருக்கும் பனிப்போர் சூரியகாந்தி நன்கறிவாள்.
இருப்பினும் மூத்த பெண்மணியையும், இளையவளையும் ஒன்றிணைக்கும் ஒரு புள்ளி. ‘நாடகங்கள் !!’.
நாடகம் பார்ப்பதில் இருவருக்குள்ள ஒற்றுமை.. ஸப்பாடா? அதை உருவகிக்கத் தான் உருவகங்களும் ஏது?
இவர் விட்ட எபிஸோடை.. அவள் கூறுவதும், அவள் விட்ட எபிஸோடை இவர் கூறுவதும்.. பார்ப்பதற்கு நன்றாகத் தானிருக்கும். அந்த நேரம் இருவரின் பூசலும் எங்கே போனது? என்று கேட்கவும் தோன்றும்!!
“நானிம்மா.. இன்னைக்கு அந்த லக்ஷமியுடைய அக்காவை பொண்ணுக்கேட்டு வந்த போலீஸ் காரன்.. “நம்ம” லக்ஷ்மியைப் பார்த்து ஓகே சொல்லிட்டானே?” என்று ஒரு கற்பனை கதாபாத்திரத்தை,
“நம்ம” லக்ஷ்மி என்று சொல்லும் நாடகங்களுடன் ஐக்கியமான மனநிலை சின்னவளது.
“ஐய்யோ அப்புறம் என்னாச்சு?”- இது நானிம்மா உண்மையாக நிகழ்வது போன்ற பதற்றத்துடன்.
“அப்பறம் என்ன? தொடரும்னு போட்டுட்டான்.. நாளைக்கு தான் பார்க்கணும்..”- இது சொனாலி கவலையுடன்.
இதையெல்லாம் பார்த்து சிரிப்பாக இருக்கும் சூரியகாந்திக்கு. இருந்தாலும் ஏதும் பேசாமல் கடந்து விடுவாள்.
பொலன்னறுவையிலேயே தன் கட்டை வேகட்டும் என்றுரைத்த நானிம்மா.. தன் அந்திம காலத்தில் பேரப்பிள்ளைகளுடன் தங்கும் சந்தோஷம் சூரியகாந்திக்கு.
சூரியகாந்தி நாடகம் பார்க்கும் ரகம் அல்ல. ஒவ்வொரு நொடியும், கணவன், குழந்தைகள் என்று யோசிக்கும் ரகம்!!
‘சன்டே இந்த டிஷ் செய்யணும்.. அவனுக்கு இந்த டிரஸ் வாங்கணும்.. தினுவுடன் அவுட்டிங்க் போகணும்.. குழந்தைகளுக்கு ஹோம்வர்க் சொல்லி கொடுக்கணும்’ இப்படி ஏகப்பட்ட வேலைகள் அவளுக்கு.
நானிம்மா , இளைய மருமகளைக் கண்டும் காணாதது போல கடந்து செல்ல முற்பட அவரை அழைத்த சொனாலி,
“நானிம்மா ஒரு நிமிஷம்!!” என்றுரைக்க, மெல்ல நின்று திரும்பிப் பார்த்தவர்,
“என்ன?” என்று கேட்டார்.
“எல்லாத்தையும் மறக்காமல்.. எடுத்து வைச்சிட்டீங்களா?”
“ஆமா..”
“கன்பார்ம்மா?..”
“ம்”- என்றார் நானிம்மா அமைதியாக.
இதுவரைத் தன் உள்ளங்கையில் வைத்திருந்த மாத்திரை அட்டையை எடுத்துக் காட்டியவள், மிடுக்கான குரலில், “அப்போ சரி.. இந்த ஷூகர் மாத்திரை… சமையல்காரம்மாவுடையது போல இருக்கு.. நீங்க போங்க நானிம்மா.. நான் தப்பா உங்களதுன்னு நினைச்சிட்டேன்..” என்றுரைக்க,
அப்போது தான் அதைப்பற்றி ஞாபகம் வந்தவராக, தன் ஹேன்ட்பேக்கைத் திறந்து பார்க்கலானார் நானிம்மா.
அங்கே அவரது ஷூகர் மாத்திரை இருக்கவில்லை.
சின்ன மருமகளை நோக்கி ஓடி வந்தவர், “அச்சோ என்னோடது தான்டியம்மா அது…மறந்துட்டேன் போல இருக்கு..” என்றவராக வாங்கிக் கொண்டார்.
அதைப் பார்த்து கேலிப்புன்னகை இழையோட சொனாலி, “நான் மட்டும் என்னுடைய ப்ரெக்னன்சி ரிப்போர்ட்டை மறந்தால்.. அது கவனயீனம்… ஒண்ணிலும் பொறுப்பில்லை.. ஆனால் நீங்க மறந்தால்.. அது மறதியா நானிம்மா?..” என்று கேட்டவள்,
“ஏன் நானிம்மா உங்களுக்கு வந்தால் மட்டும் இரத்தம்? .. எனக்கு வந்தால் தக்காளி சட்னியா?..” என்று மேலதிகமாக ஒரு டயலாக்கை விட்டு விட.. அங்கே ஆரம்பமானது பூசல்.
“ஏன்டி.. என் வயசென்ன? உன் வயசென்ன? இந்த வயசுல மறதி வர்றது சகஜம் தான்..” என்று இளையவளுடன்.. சமவயது தோழியைப் போல அவர் மல்லுக்கு நிற்க,
மற்றவர்களுக்கோ டாம் என்ட் ஜெர்ரி ஷோ பார்ப்பது போல முகத்தில் புன்னகையும், குதூகலமும் தோன்றலாயிற்று.
“ஆமா.. ஏதாவது சொல்லி சமாளிங்க..” என்றாள் சொனாலி முணுமுணுக்கும் தோரணையில்.
ஷூகர் மாத்திரையுடன் அங்கிருந்து நகர்ந்தவர், பின்பு திரும்பவும் சொனாலியை நோக்கி வந்து,
அவள் கையை மென்மையாகப் பற்றி,இலேசாக கண்கள் கலங்க, “பத்திரமா இருந்துக்க… அதிகம் வேலை செய்யாதே… ரொம்ப டீவி பார்த்து கண்ணைக் கெடுத்துக்காதே… நல்லா ரெஸ்ட் எடு.. என்ன புரிஞ்சுதா?” என்று சொல்லவும் செய்தார்.
இது தான் உறவுகள். என்ன தான் வாய்தர்க்கம் புரிந்தாலும், அன்பும், பாசமும் உள்ளுக்குள் இருக்கத் தான் செய்யும்!
“ம்.. சரி நானிம்மா..” – பவ்யமாக தலையாட்டினாள் திருமதி. சஞ்சய்.
பின்பு சஞ்சயை நாடிப் போனவர், “நீயும் அவள் கூடவே இருந்து பார்த்துக்க சஞ்சய்.” என்று புத்திமதி சொல்லவும் செய்தார்.
“நானிம்மா வாங்க கெளம்பலாம்.. டைமாச்சு..”காரிலிருந்து தலை நீட்டி எட்டிப் பார்த்து குரல் கொடுத்துக் கத்தியன வாண்டுகள்!
“இதோ வந்துட்டேன்” என்று அவர் சென்று ஏறிக் கொள்ள.. காரும் அந்த போர்ட்டிக்கோவை விட்டும் நகரலாயிற்று.
அண்ணன் குடும்பம் நகர்ந்ததும், மனைவியை வாகாக அணைத்துக் கொண்டு படியேறியவன், சொனாலியிடம்,
“அவங்க தான் பெரியவங்க… சொல்லிட்டுப் போறாங்க.. நீயும் தான் கொஞ்சம் அமைதியா இருக்கலாமே?..” என்றான் நன்மதி கூறும் முகமாக.
கணவனின் முகத்தைத் திரும்பிப் பார்த்த சொனாலியும், “இது எனக்கும், அவங்களுக்கும் நடக்குற..” என்று சொல்ல வர, சட்டென இடையிட்டான் சஞ்சய்.
“தர்ம யுத்தமா?”- புருவங்கள் உயரக் கேட்டான் அவன்.
அதைக் கேட்டு வாய் பொத்திக் கிளுக்கிச் சிரித்தவள், “ம்ஹூம்.. இல்லை செல்லச் சண்டை… இது எதுவும் இல்லாமல் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது மாமா..” என்று கூற,
அதில் எல்லாவற்றையும் விட அவளது “மாமா” என்ற ஒற்றையழைப்பில் இதயம் உருகிப் போனான் அவன்.
சொனாலி சிங்களப் பெண். சிங்களப் பெண்கள் கணவனை, “மாமா” என்றழைப்பதுமில்லை; தமிழ்ப் பெண்கள் கணவனை “மாமா” என்றழைக்கும் கதையும் இவளுக்குத் தெரிய வாய்ப்புமில்லை.
நானிம்மாவுடன் சேர்ந்து தமிழ் நாடகம் பார்த்து பார்த்துக் கற்றுக் கொண்டது தான் இந்த “மாமா” என்னும் அழைப்பு.
*************
அது இலங்கையின் தென்னகமான “காலி” என்னும் இடத்தில் அமைந்திருக்கும் அவர்களுக்கு சொந்தமான ரெஸொர்ட்.
விஷ்வாதினு என்னும் தேசாந்திரம் செல்லும் மகாராஜா.. தன் குழந்தைகளின் கோடை கால விடுமுறைக்கு அழைத்து வந்திருக்கும் இந்த இடம் தான் “Bபே ரெஸொர்ட்”.
கொழும்பின் ஹைவேய் வாயிலாக, காலியை அடைய இரண்டு, இரண்டரை மணித்தியாலங்கள் தான் எடுக்கும். எல்லாம் போக்குவரத்து வசதிகள் வளர்ச்சியடைந்ததன் விளைவு!!
காலி.. தன்னில் ஒரு பாகம் முழுவதையும் கடலால் சூழப்பட்ட தண்ணீர் தேசம்!!
அந்த ரெஸொர்ட்டும் தான் சுற்றிவர கடலால் சூழப்பட்ட ஓர் குட்டித் தீவு பிரதேசத்தில் அமைந்திருந்தது.
உரிய இடம் வந்ததும்.. அவர்களது காரை தரித்து விட்டு.. அந்த ரெஸொர்ட்டுக்குள் செல்வதற்கு..
படகுகள் விடப்பட்டிருக்க.. குழந்தைகளுக்கும், நானிம்மாவுக்கும் இன்னும் ஏன் அவளுக்கும் தான் குதூகலமாகவிருந்தது.
கடல்காற்று முகத்தில் மோத, கூலிங் கிளாஸினையும் அணிந்து, கூடவே லைஃப் ஜாக்கெட்டையும் அணிந்து கொண்டு,
படகின் அசைவுக்கு பயந்தவளாகவே..தன்னிடுப்பையே அணைத்துப் பிடித்துக் கொண்டு வந்த மனைவியைக் காணக் காண காதல் பெருக்கெடுத்தோடியது விஷ்வாதினுவுக்கு.
‘பயப்படாதே’ என்பது போல.. அவளது தோள்வளைவில் கையிட்டு தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான் அவன்.
அவனுக்கு சொந்தமான அந்த இடம். ரொம்ப ரம்மியமாகக் காட்சி தந்து கொண்டிருந்தது.
அங்கே கோடை கால விடுமுறையை கழிக்க வந்திருந்த பல வெளிநாட்டு பயணிகளைக் காண நேர்ந்தது அவளுக்கு.
இடத்தின் உரிமையாளரின் குடும்பமே வந்ததில்.. அந்த இடமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
அழகான நீல நிறக் கரையில்.. நுரையே இல்லாத அலைகள்! அலைகள் ஒதுக்கித் தள்ளும் உடைந்த சிப்பிகள். இவற்றைக் கண்டதும் குதூகலமாகிப் போயினர் குழந்தைகள்.
முதலாளியை நாடி வந்த மேனேஜர்.. அவன் தங்குவதெற்கு என்றிருக்கும் பிரத்தியேகமான வில்லாவொன்றுக்கு அழைத்துப் போய் விட,
அவன் புதியதாகக் கட்டியிருந்த அந்த இடத்தையே விழியகலப் பார்த்திருந்தாள் அவள்.
அந்த வில்லாவுக்கு முன்னிலையில் பத்தடி ஆழம் கொண்ட ஸ்விம்மிங் பூல்,
அதைச் சுற்றி புல்வெளி. அழகிய முற்றத்துடன் அமைந்திருந்தது வில்லா.
இடத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போய் நின்ற மனைவியைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டவன், “பிடிச்சிருக்கா ப்ளேக்பெர்ரி? ” என்று கேட்க,
அவள் பதில் சொல்லும் முன்னமே, டீஷேர்ட்டையும், டெனிமையும் கழற்றி விட்டு, வெறும் அன்டர்வேர்ஸூடன், நின்ற மூத்தவன் யாதவ்,
“ரொம்ப பிடிச்சிருக்குப்பா” என்ற வண்ணம் ஸ்விம்மிங் பூலில் தொபுக்கட்டீர் என்று குதிக்க,
தண்ணீர் தெறித்து நனைந்து போய் நின்றிருந்தனர் தம்பதிகள்.
அவளோ யாதவ்வைத் திட்டப்போக, சிரித்துக் கொண்டே, ‘வேண்டாம்’ என்று கைப்பற்றித் தடுத்தான் தினு.
அதன் பின் தானும் உடைகளைக் களைந்து விட்டு, பூலுக்குள் குதித்தவன் தான்.. மாலை மங்கும் வரை… குழந்தைகளுடன் நீரிலேயே கழித்தான் விஷ்வாதினு.
நானிம்மாவோ உள்ளே சென்று.. ரெஸ்ட் எடுத்துக் கொள்ள,
சின்னவள் அனுவை ஆழமில்லாத இடத்தில் வைத்து.. நீந்தச் செய்து கொண்டிருந்த மனையாளை நெருங்கிப் போனவன், தண்ணீர் என்றும் பாராமல் சில்மிஷம் புரியத் தான் செய்தான்.
முதலைப் போல அவள் அறியாமல் அவளிடம் நாடி வந்தவன், தண்ணீரில் நனைந்ததால் அப்பட்டமாகத் தெரிந்த அவள் அங்க லாவண்யங்களில் தன்னைத் தொலைத்து நின்றான்.
பின் அவளது மெல்லிடையூடுக் கையிட்டு.. அவள் தொப்புளை நிமிண்டியவண்ணமே,
அவளது பருத்த பின்னழகைத் தன்னோடு இறுக்கி அணைத்து,
அவளது பின்னங்கழுத்தில் தன் இதழ்களை உரசச் செய்ய, காதல்த்தீ கொழுந்து விட்டெறிந்தது அவளுக்கும்.
இதழ்களைக் கடித்து, கண்கள் மூடி சொக்கிப் போய் நின்றிருந்தவள், குழந்தைகளைக் கருத்தில் கொண்டு, “விடுங்க.. பசங்க இருக்காங்க” என்றவளாக அவனிடமிருந்து விலகவும் செய்தான்.
அதன் பின்னும் விட்டானா அவன்?
குழந்தைகள் அறியாமல் அவன் செய்த சிற்சில சேட்டைகளில்.. கொஞ்சம் மூடாகிப் போய்த்தான் நின்றிருந்தாள் அவள்.
அந்த வில்லாவின் வெளிப்புறச் சுவர் மாத்திரமே சிமென்ட்டில் கட்டப்பட்டிருக்க.. உள்ளே இருந்த ஹால், அறைகள், பாத்ரூம், கிச்சன், மேலே பால்கனி, டெராஸ் என அனைத்துமே கண்ணாடி.
இரவிலே….
தந்தை ஆர்டர் செய்த பாபிகியூவினையும், சிக்கன் கபாபினையும் ஒரு வெட்டு வெட்டி விட்டு, மாலை முழுவதும் ஸ்விம்மிங் பண்ண அயர்வில் அடித்து போட்டாற் போன்று உறங்கிக் கொண்டிருந்தனர் குழந்தைகள்.
குழந்தைகள் அனைவரையும் நடுவில் போட்டுக் கொண்டு, இரு மருங்கிலும் படுத்திருந்தனர் சூரியகாந்தியும், நானிம்மாவும்.
சூரியகாந்தியும் அனுவை அணைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த வேளை,
அவளை யாரோ உசுப்பிக் கொண்டே, ரகசியமான குரலில் “ப்ளேக்பெர்ரி.. ப்ளேக்பெர்ரி..” என்று அழைப்பது கேட்டு.. மெல்ல கண்விழித்துப் பார்த்தாள் அவள்.
அங்கே தன் கணவன் நட்டநடு நிசியில் நின்றிருப்பதைக் கண்டவள், கணவனைப் போலவே இரகசியம் பேசும் குரலில், “என்ன? இன்னும் நீ தூங்கலையா?” என்று கேட்டாள்.
அவனோ அவள் கேள்வியைக் கேட்டு பெருமூச்சு விட்டவனாக, “ என்னால தூங்க முடியலைடி.. எழுந்திரிச்சு.. என் கூட வா..” என்றவனாக.. மெல்ல அவள் கைப்பற்றி இழுக்கவும் செய்தான்.
கணவனைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்தவள், அனு துயில் களையா வண்ணம், சின்னத் தலையணையொன்றை வைத்து விட்டு,
கணவனின் அடியொற்றிப் பின்னால் சென்றாள்.
வெளியே வந்ததும், இரவு நேரக் கடல் காற்று உப்பு வாடையுடன் தூக்கலாக அவள் மீது பட்டு அவள் உடலைக் கூசத்தான் செய்தது.
மனைவி தன் சேலையால் தன்னுடலைப் போர்த்திக் கொண்டதைக் கண்டவன், அவள்மேல் கழிவிரக்கம் மிக,
அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு நகர்ந்தான் அவன்.
அவனது அணைப்பில் இருந்தவாறே, காலம் பூராகவும் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.
அது அழகான இரவு. தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் அணைத்துப் பிடித்துக் கொண்டு நடக்க,
அவர்கள் வெற்றுப் பாதங்களை அந்த குளிர்ந்த கடல் அலைகளும் முத்தமிட்டு நகர,
வான் நிலவும் அவர்களுக்கு வழித்துணையாக கூடவே வர.. அதுவொரு சௌந்தர்யமான இரவுப் பொழுது.
கணவனைப் பாராமல், நடைபாதையை வெறித்துக் கொண்டே, “இன்னைக்கு என்னாச்சு என் தினுக்குட்டிக்கு? தூக்கம் வரலையாடா?”என்று மையலுடன் கேட்டாள் அவள்.
“ம்” என்ற ஒற்றை வார்த்தையுடன் அமைதியாகிப் போனான் அவன்.
அந்தத் தனிமையில் தன் மனதிலுள்ள சின்னஞ்சிறிய விஷயங்களை எல்லாம் சொல் நாடியவள்,
அவனது முதுகைத் தன் கைகளால் வருடிய வண்ணம்,அவள் அமைதியாக நடக்க,
இவனோ மனைவியின் சிற்றிடையில் தன் கை விரல்களை அழுத்தமாகப் பதித்து, சுகம் தேடியவண்ணம்,
“குழந்தை பிறந்தப்பறம்… உன்னைக் கொஞ்சவே முடியலைடி.. எந்த நேரம்.. யார் வந்து “அம்மா”ன்னு குதிப்பான்னு நினைச்சு நினைச்சே.. ரொமான்ஸ் மூடே போகுது..” என்றான் சிறு கவலை தொனிக்க.
கணவனின் முகத்தைத் திரும்பிப் பார்த்து, அவள் கன்னத்தை இலேசாகத் தள்ளி விட்டவள், “ஐய்யே.. ரொமான்ஸ் மூடில்லாத சாரோட மூஞ்சைப் பாரு… என்னைக் கொஞ்சாமல் தான் ஏழு வருஷத்துல.. நாலு குட்டீஸ் வந்தாங்களா?..” என்று பேசிக் கொண்டே வர,
அவன் நடை தடைப்பட்டு நிற்க தானும் நின்றாள்.
அவன் கடற்கரை மணல்மேட்டுக்கு மேலே ஏற, தானும் கடலை விட்டு வந்தவள், கைகட்டி நின்று.. அவனுக்கு புறமுதுகிட்டு நின்று.. அலைகடலைப் பார்த்த வண்ணமே பேசவாரம்பித்தாள்.
“எப்போ பாரு..பூனை மீனை பார்க்குறது போல வைச்ச கண்ணு வாங்காமல் பார்க்குறது.. கிடைக்குற கேப்ல எல்லாம் வாயை வைக்குறது… அப்புறம் யாராவது பார்த்தால்.. எதுவுமே நடக்காதது போல.. அப்பாவி மாதிரி அமைதியா போறது..” என்று அவனது சில்மிஷங்களைப் பற்றிக் குற்றப்பத்திரிகை வாசித்தாள் மனைவி.
அவனோ அமைதியாக அவள் பின்னே வந்து நின்று.. கை கட்டி நின்றிருந்தவளின் கைக்கு மேலாகக் கை வைத்து, அணைத்து,
கன்னத்தோடு கன்னம் உரசி கிறங்கிய குரலில், “நான் என்ன அடுத்தவன் பொண்டாட்டியையா பார்த்தேன்? .. என் பொண்டாட்டியை வைச்ச கண்ணு வாங்காமல் பார்க்குறேன்.. இதில் உங்களுக்கு எங்க மேடம் குடையுது..?” என்று கூற,
அதில் கண்கள் மூடி சொக்கி நின்றாள் அவள்.
பின் சட்டென அவள் திரும்ப.. பச்சக்கென்று மோதிக் கொண்டது மெல்லினமும், வல்லினமும்.
அவனோ தன்னுடைய கண்களால்.. தீ மூட்டும் அடாவடிப் பார்வையைப் பார்க்க, அதைப் பார்க்க முடியாமல் உடம்பில் உஷ்ணம் அதிகமாகி கண்கள் கலங்கவாரம்பித்தது அவளுக்கு.
அவனது கன்னத்தைத் திருப்பி அதில் முத்தம் பதித்து எடுத்தவள், “நீ பார்க்குறப்போ.. எங்கே எங்கெல்லாமோ குடையும் தான்டா.. என் புருஷனோட பார்வை அப்படி!!” என்றாள் அவள்.
“ப்ளேக்பெர்ரி… இப்படி ராத்திரி முழுசும் பேசிட்டே இருக்கப் போறோமா?.. வந்த வேளையை பார்க்க வே…” என்று அவன் கூறிக் கொண்டிருந்த வேளை.. அவனது முரட்டு அதரங்களை அதிரடியாகக் கவ்விக் கொண்டாள் அவள்.
கணவனின் முரட்டுக் கன்னங்களைத் தன்னிரு கைகளில் தாங்கி.. சற்றே தலை சரித்து கண்கள் மூடி, அவன் எச்சிலின் குளிர்மையை சொற்பம் விடாமல் அனுபவித்துக் கொண்டிருந்தாள் அவள்.
இயற்கையுடன் ஒன்றி கூடல் புரிய விருப்பம் உள்ள தலைவனின் மனதை தலைவியா அறியாள்?
அன்று பொலன்னறுவை குகை; இன்று காலியின் கடற்கரை.
தன்னவன் இரசனைக்காரன் என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டவள், அவனது கையினைத் தானாகவே எடுத்து, தன்னிடையூடு சுற்றி வளைத்து, அழுத்தம் கொடுக்க,
அவன் கையும் அவளது இடையில் அழுத்தத்துடன் பதிந்தது.
ரொம்பவும் வேகமான அந்த முத்த உறிஞ்சுதலில்.. மொத்தமும் உருகி கரைந்துருகிப் போனான் விஷ்வாதினு.
பிறகு மெல்ல தன் தலைவனிலிருந்தும் விலகிக் கொண்டவள், தன் தனங்கள் ஏறி இறங்க பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்டுக் கொண்டே,
அவனை மிருதுவான கண்களுடன் பார்த்தவள், கேலி இழையோடும் குரலில், “நீ தான் ரொம்ப ஸ்லோவ் தினு…” என்றாள்.
அதைக் கேட்டு போலிக் கோபம் இழையோடியது அவன் முகத்தில்.
அவள் இடையை பெண்மை விரும்பும் விதத்தில் அழுத்திப்பிடித்து, தன் அடி வயிற்றோடு இறுக்கி அணைத்து,
தன் ஆசையின் உச்சியைக் காட்டியவன், “யாரு நான் ஸ்லோவா?.. நான் யாருன்னு காட்டுறேன்..”என்றவன் அவளை அலேக்காகக் தூக்கி.. தன்னிடது தோளின் மேல் போட்டுக் கொண்டு கடல் மண்ணில் கால்கள் புதையப் புதைய நடந்தான்.
அவளது பருத்த பின்னழகுகள் இரண்டும், அவன் கன்னத்தோடு மோதி.. அவனை இன்னும் கொஞ்சம் பித்தனாய் ஆக்கிக் கொண்டிருந்தது.
அதை அறியாத அவனது ப்ளேக்பெர்ரியோ திணறித் திமிறி, அவன் தோளில் இருந்து இறங்க நாடி, “ட்டேய்.. க்கீழே இறக்கி விடுடா.. யாராவது நம்மளைப் பத்தித் தெரியாதவங்க பார்த்தால்.. நீ என்னை ரேப் பண்ண போறதா தப்பா நினைச்சிப்பாங்கடா!!” என்று எவ்வளவோ கத்திப் பார்த்தும் அவன் இரும்புப் பிடி தளரவேயில்லை.
மாறாக அவனோ, அவளது தொடைகளைப் பற்றிப் பிடித்தவனாக, “இது எனக்கு சொந்தமான ஐலேண்ட்… என் அனுமதியில்லாமல் ஒரு கொசு கூட வர முடியாது” என்று ரொம்பவும் தெனாவட்டாக உரைத்தவன்,
அவன் செல்ல நாடிய இடத்தை வந்தடைந்தான்.
அது முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான கூடாரம். கூடாரத்திற்கே முன்னே கொழுந்து விட்டெறிந்து கொண்டிருந்தது ஓர் தீப்பந்தல்.
கூடாரத்தின் உள்ளே எல்லாம் அவன் முன்னேற்பாடு போல.. மெத்தையும், தலையணைகளும், போர்வையும் தயாராக இருக்க…
தீயின் விளைவால் அந்த இரவு நேர கடல் காற்றும் கதகதப்பாகவே இருந்தது.
அவளைக் கடத்தி வந்தவன் போல பாவ்லா காட்டியவனாக, அவளைத் தடாரென மெத்தையின் மீது போட்டவன்,
“என்னையா ஸ்லோனு சொன்ன? இப்போ பாரு.. உன் தினுக்குட்டி வேகத்தை” என்றவன்,
தனது பட்டன்கள் திறந்திருந்த ஷேர்ட்டைக் கழற்றியவன், அவள் மீது கவிழ்ந்தான்.
அவன் அவ்வாறு கூறிய தினுசில்.. தாய் மார்பைக் காட்டியதும் பால் குடிக்க ஓடி வரும் குழந்தை சந்தோஷத்தில் ஒருவகையாக கிளுக்கிச் சிரிக்கும் அல்லவா?
அதைப் போல அவளும் கிளுக்கிச் சிரிக்க.. அந்த சிரிப்பும் தான் அவனை காதல் கொள்ள வைத்தது.
கண்களில் காதல் தீ பொங்கி வழிய.. தன்னிரு கைகளாலும் அவளை அணைகட்டி நின்ற அந்த சாகரன்.. தன்னை வந்து சேர்ந்த தன்னாசை நதியின் அதரங்களைக் கவ்விக் கொண்டான்.
அந்தத் தாவிக் கவ்வுதலில்.. அவள் இதழ்கள் கடிபட்டு விட.. அதுவும் கூட சிவந்த செர்ரிப்பழங்களை சுவைப்பதைப் போல பிரம்மையை ஊட்டியது அவனுக்கு.
அதன் பின்பு அங்கே நடந்ததோ மாறனின் காதல் யுத்தம்.
அவள் ரதியானாள்.. அவன் மன்மதன் ஆனான்;அவள் ஏவாள் ஆனாள்;இவன் ஆதாம் ஆனான்.
இரவுத் தீயின் உஷ்ணத்தை விடவும்.. அங்கே சூட்டைக் கிளப்பிக் கொண்டிருந்தது இருவரின் உடல் தீயின் உஷ்ணம்!
அவளது உடலைத் தீண்டுவதற்காகவே இதழ்களையும், கைகளையும் படைத்தானோ பிரம்மன்!!
அவனது தீண்டலில் ஓர் மெழுகாய் உரைந்து போய்.. அவள் மோனச்சப்தங்கள் எழுப்ப.. அதுவும் கூட காதல் வெறியைக் கூட்டியது விஷ்வாதினுவில்.
கணவனை ‘ஸ்லோ’ என்று கூறி.. அவனை ரொம்பவும் உசுப்பேற்றி விட்டோமோ? என்று காலம் கடந்து வருத்தப்பட்டாள் அவள்.
அணில்குஞ்சியாக மாறி.. தன்னுடலின் எழுச்சிகள் மீது மூரல்கள் பதிக்கும் அவனது இம்சையான சுகத்தைத் தாங்க மாட்டாமல்,
அவனது பிடரி மயிரைக் கொத்தோடு பற்றி, உணர்ச்சிகளின் உச்சத்தில் கண்கள் மூடி விழிகள் சொக்கி,
இதழ்களைக் கடித்துக் கொண்டு, “என் தினுக்குட்டீஈஈ… ஹாஹ்.. ம்ஹூம்..” என்று மோனச்சப்தங்கள் எழுப்பவாரம்பித்தாள் அவள்.
அதுவும் கூட அவனது ஆட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, அந்த காதல் போர்க்களத்தில் தன் எதிராளியைத் தாக்கவாரம்பித்தான் அவன்.
“ப்ளேக்பெர்ரீஈஈ.. என் ப்ளேக்பெர்ரீஈஈ…” என்று ஒவ்வொரு அசைவுக்கும் பினாத்தும் அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்திருந்தாள் அவள்.
அந்நேரம்.. சமுத்திரனோடு.. கங்கை கலந்து கொண்டிருந்த சமயம், அவன் மேல் காதல் கூடியது அவளுக்கு.
இவன் ;எனக்கானவன்;தன்னுயிரைத் துச்சமாக மதித்து தன்னை காப்பாற்றியவன்; என் உயிர், என் சுவாசம் என் எல்லாமுமே அவன் தான் என்று தோன்ற, அவனுக்கு இணையான வேகம் காட்டினாள் இவளும்.
அவன் முதுகைக் கிடுக்கிப்பிடி பிடித்திருந்த அவள் கால்கள், அவனது வலிமையான தோள்புஜங்களில் ஆழமாகப் பதிந்து உணர்ச்சியில் கீறிய நகங்கள் என அனைத்திலும் இருந்தது காதலே!!
சீரான விசைப்படகில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணவளுக்கு… எதிரே ஓர் நீர்ச்சுழல் வந்து.. அவளை படகோடு உள்ளிழுத்துக் கொள்ள மொத்தமும் உயிர் கரைந்து போனாள் அவள்.

ஒரு நிமிஷம் இரத்த சிவப்பாகி.. பின் மெல்ல மெல்ல சாதாரணமடைந்தது அவனுடைய உடம்புத் தோல்.
வெற்றி எல்லையை அடைந்த திருப்தியுடன், தன் மகாராணியின் மார்புப் பள்ளத்தாக்கில் அப்படியே சரிந்தவன்,
அதன் மேட்டில் கன்னங்கள் அழுத்தி.. முகம் புதைத்துக் கொண்டான் அவளது சூரியன்.
அவள் மேனியும், இவள் மேனியும் காதலுடன் அப்போதும் உரசிக் கொண்டிருக்க, தன் கணவனின் வியர்வை மணத்தை ஆசையுடன் முகர்ந்து கொண்டே,
அவனது முதுகை ஆரத்தழுவித் தேற்றிக் கொண்டிருந்தாள் அவள்.
மனைவியின் மென்மையில்… சுகம் இருப்பதைக் கண்டவன்.. பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்டுக் கொண்டே, அவளை அணைத்தவாறே இருந்தான்.
பின் ஒரு நிதானம் கண்டவன், கூடாரத்தை நோக்கி மல்லாந்து படுக்க, அவனது இதயவோசை தடதடக்கும் அவனது நெஞ்சாங்கூட்டில் தலை வைத்துக் கொண்டாள் அவள்.
அவன் முகத்திலும், இவள் முகத்திலும் படர்ந்திருந்து காதல் திருப்தி.
அவன் கைகள் இவளை பாம்பாக சுற்றி வளைத்து அணைக்க, இவளோ கூடிக் களைத்ததால் விளைந்த மென்மையான குரலில்,
“ஏன் தினு?.. தாராவுடைய மரணம் வெளிச்சத்துக்கு வந்தப்போ.. உன்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு.. நான் உனக்கு எவ்வளவு தொல்லை கொடுத்திருப்பேன்.. அது எல்லாம்.. என் மேல நீ வைச்சிருக்கும் அன்பை.. கொஞ்சம் கூட.. பாதிக்கவேயில்லையா?..” என்று கேட்டாள் அவள்.
அவனோ குனிந்து அவள் நெற்றியில் காதலுடன் இதழ் பதித்து விட்டு அழகாக சொன்னான்,
“எல்லாத்தையும் விட உன் மேல நான் வச்சிருக்க காதல் பெருசு ப்ளேக்பெர்ரி…!!” என்று.
அதில் இவள் பெண்மை கிளர்ந்தெழ.. அமைதியாகப் படுத்திருந்தவனுக்கு… சிற்றின்ப சுகம் கொடுத்து.. பேரின்பத்துக்கு வழி விடுக்கலானாள் விஷ்வாதினுவின் மேனகை!!.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *