அடைக்கலம் நான் உன் மார்பிலே 8

அடைக்கலம் நான் உன் மார்பிலே

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 1

அடைக்கலம் நான் உன் மார்பிலே 1

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 2

அடைக்கலம் நான் உன் மார்பிலே 2

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 3

அடைக்கலம் நான் உன் மார்பிலே 3

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 4

அடைக்கலம் நான் உன் மார்பிலே 4

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 5

அடைக்கலம் நான் உன் மார்பிலே 5

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 6

அடைக்கலம் நான் உன் மார்பிலே 6

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 6

அடைக்கலம் நான் உன் மார்பிலே 6

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 7

அடைக்கலம் நான் உன் மார்பிலே 7

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 8

அடைக்கலம் நான் உன் மார்பிலே 8

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 9

அடைக்கலம் நான் உன் மார்பிலே 9

அடைக்கலம் நான்  உன் மார்பிலே 10

அடைக்கலம் நான் உன் மார்பிலே 10

அப்பேர்ப்பட்டவன் என்ன செய்தாயினும் தான் நிரபராதி என நிரூபிக்கக் கூடும்?
ஆனால் தாரா? தாராவுக்கு நீதி கிடைக்குமா?..
உயிர் விடும் தருவாயில் தாரா மொழிந்த சொற்கள்… அவளை மேற்கொண்டு பேசவிடாமல் வாயடைக்க செய்தது.
“சூ.. சூர்யா… ஓடிப்போனவள்.. ஓ.. ஓடிப்போனவளாகவே இருக்கட்டும்… என் இறுதிப் பயணம்.. அவங்களுக்கு தெரியக் கூடாது.. இல்லீகலா.. என் வயிற்றுல குழந்தை இருந்தது அவங்களுக்கு.. தெரியவே கூடாது… எனக்கு இந்த நிலைமைன்னு தெரிஞ்சா.. அவங்க.. தா.. தாங்க மாட்டாங்க.. அவங்களைப் பொறுத்த வரையில்.. உலகத்தின் எங்கோ ஓர் மூலையில்.. என் காதலனோடு சந்தோசமா வாழ்றதாகவே இருக்கட்டும்… கடைசி வரை உண்மை என் அப்பா, அம்மாவுக்கு தெரியக் கூடாதுன்னு சத்தியம் பண்ணு!! சாகப் போறவளின் இறுதி ஆசை.. ப்ளீஸ் சத்தியம் பண்ணு!!”
தாராவின் இறுதி ஆசை!! அவள் ஏமாற்றப்பட்டது யாருக்கும் தெரியக் கூடாது என்பது!
உடம்பெல்லாம் ஓர் நடுக்கம் ஓடி அடங்க, கால்கள் தள்ளாட, கணவன் கையிலிருந்த செல்லைப் பறித்தெடுக்க முயன்று தோற்றவளுக்கு..
இலேசாக பூமி சுற்றுவது போல இருந்தது.
“வேணா.. வேணாம்.. எங்க பிரச்சினைக்கு நடுவுல.. அவங்களை ஏன் இழுக்..”என்றவளின் குரலும்… ஈனமாக ஒலிக்க…
தலைசுற்றி விழப்போனவளை,
“ப்ளேக்பெர்ரீஈஈ” என்று பதற்றத்துடன் அழைத்துக் கொண்டு.. பற்றிக் கொண்டான் அவன்.
அவளுக்கோ இதுவரை நிகழ்ந்த நிகழ்வுகளின் தாக்கம், ஏற்கனவே கர்ப்பமான நிலையில் ஏற்படும் “மோர்னிங் சிக்னஸ்’ எல்லாமும் சேர்ந்து.. அவளை அந்த கணம் உருக்குலையச் செய்தது.
ஆனால் அவனுக்கோ மனைவியின் உடல்நிலை கண்டு பரிதவிப்பாக இருந்தது.
முடியாமல்.. கணவனின் மாரிலேயே அவள் கண்கள் மூடி சாய, மெல்ல குனிந்து.. அவளைக் கைகளில் குழந்தையைப் போல ஏந்திக் கொண்டவன்,
மேலே மாடிப்படிகளை நோக்கி நகரவாரம்பித்தான்.
அந்த அரை குறை மயக்கத்திலும், அவனது கோர்ட் காலரை இறுக்கமாகப் பற்றியிருந்தன அவள் கை விரல்கள்.
அதே சமயம் அவள் இதழ்களோ மெல்லிய குரலில், “ப்ளீஸ் அத்தை, மாமாக்கிட்ட சொல்லிடாதே.. ப்ளீஸ்.. வேணாம்.. ப்ளீஸ்”என்று எக்கச்சக்க ப்ளீஸ் போட.. அவனிமைகள் மெல்ல இடுங்கின.
புரியாமல் ருத்திரதாண்டவம் ஆடும் மனைவியை அடக்க.. ஓர் அஸ்த்திரமாக.. “அத்தை, மாமா”அவனுக்கு தென்பட்டாலும்,
மனைவியின் குழப்பத்துக்கு மூல காரணம் தெரியாது குழம்பிப் போனான் அவன்.
அறைக்கு வந்ததும், மெல்ல பூப்போல அவளை மஞ்சத்தில் படுக்க வைக்க, அவளோ தலையணையில் தலை வைக்காமல்.. சடாரென எழுந்தமர்ந்து,
தலை சுற்றலுடன், குமட்டலும் வரவே… தரையில் அப்படியே வாந்தி எடுக்கவே,
சூரியகாந்தியின் உடல்நிலையில் இரங்கிப் போனான் சூரியன்.
சட்டென இரு கைகளாலும் அவன் நெற்றியை அழுந்தப் பிடித்தும், பின்பு முதுகைத் தடவி விட்ட வண்ணமும்,
அவள் அனுபவிக்கும் வலியை தானும் அனுபவித்தவனாக, “என்ன பண்ணுதுமா?.. ரொம்ப முடியலையா? ..”என்று கேட்டான் அவன்.
அவளுக்கோ இன்னொருவர் உதவி தேவைப்படும் அந்த நிலைமையிலும், வீண் வீம்பு மட்டும் போகவேயில்லை.
இயலாமையில் பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்ட வண்ணமே,
அவன் கையை உதறியவள், “விடு.. விடு… உன் போலி கரிசனத்தை…. வேறு எவள்க்கிட்டேயாவது காட்டு” என்று அவன் இதயம் சுட..
பதிலளித்தவளுக்கு மீண்டும் குமட்டவே, கட்டிலிலிருந்து நிலத்தை நோக்கி குனிந்து,
மீண்டும் வாந்தியெடுக்கலானாள்.
கண்களெல்லாம் இருண்டு, எதிரே இருப்பதெல்லாம் இரண்டிரண்டாகத் தெரிய ஆரம்பித்தது அவளுக்கு.
அவனோ அவள் வார்த்தை அம்புகள் தைத்ததை கணக்கில் எடுக்காது, சூடு சுரணையேயற்றவன் போல..
அவள் நெற்றியை மீண்டும் பிடித்து.. முதுகி தடவி விடத் தான் செய்தான்.
அந்த நேரம் பார்த்து.. அவர்கள் அறையை க்ளீன் செய்ய வந்த பணிப்பெண்ணொருத்தி.. தரையில் கிடந்த வாந்தியைக் கண்டு…
அதனை க்ளீன் செய்ய.. பொருட்கள் எடுத்து வர விரைந்தாள் மீண்டும்.
இங்கே இவளோ அதை அறியமாட்டாது, அவன் தந்த தண்ணீரை பருகமாட்டாமல், வாயை இறுக மூடி வீண் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த தருணத்தில்…
மீண்டும் வந்தாள் அந்த பணிப்பெண்.
அசுத்தம் நிறைந்த இடத்தை நாடி வந்து.. பணிப்பெண் குனிந்து.. அதை க்ளீன் செய்வதைக் கண்டவளின் குரல், அதிகாரத்துடன் ஒலித்தது.
“நில்லு”.
அந்த பணிப்பெண்ணோ.. நிலத்தில் முழந்தாளிட்டு அமர்ந்த வண்ணமே, தன் எஜமானியம்மாவை என்னவென்று புரியாமல்..
சிறு அச்சத்துடன் நோக்க,
சூரியகாந்தியோ கட்டளைத் தொனியில், “அதை.. அப்படியே வைச்சிட்டுப் போ..”என்றாள்.
பணிப்பெண்ணோ, அப்படியே வைத்து விட்டு செல்வதா? என்ற அதிர்ச்சியில் இருக்க,
சூரியகாந்தியோ சற்றே திரும்பி தன் பின்னால் அமர்ந்திருக்கும் தலைவன் முகத்தைப் பார்த்தாள்.
பின்பு அதே வன்மம் மாறாத பார்வையுடனும், குரலுடனும், தன் வயிற்றில் கை வைத்தவளாக, “இது உன் குழந்தை தானே? .. உனக்கு உன் குழந்தையை தக்க வைச்சிக்கணுமா?.. அப்போ போய்… நீ க்ளீன் பண்ணு..”என்றாள்.
அதைக் கேட்டு அவன் முகம் சுளிக்கவுமில்லை; ‘நானா? இதை க்ளீன் பண்ணனுமா?’என்று மறுத்து ஒரு வார்த்தைப் பேசவுமில்லை.
புன்னகை சிந்திய முகமாகவே மஞ்சத்தை விட்டு எழுந்தவனின் கண்கள் மட்டும் ஏகத்துக்கும் கலங்கியிருந்தது.
அவன் அந்த கணம் புன்னகைத்துக் கொண்டே.. கண்ணீர் சிந்தும் கலையைப் பயின்றான்.
கணவன் எழுவதைக் கண்டு.. அந்த பணிப்பெண்ணிடம்,
“என்ன பார்க்குற?.. நீ வைச்சிட்டுப் போ..”என்று மீண்டும் அவள் அதிகாரக் கட்டளையிட,
அந்த பணிப்பெண்ணோ திரும்பி தன் எஜமானன் முகத்தைத் தான் பார்த்தாள்.
தன்னை மதியாமல்.. அவன் கட்டளைக்காக.. விஷ்வாதினுவின் முகம் பார்த்த அந்த பெண் மேல் கோபம் பல்கிப் பெருக, “நான்… நீ வைச்சிட்டுப் போன்னு சொன்னேன்..”என்றாள் இரைந்த குரலில்.
கலங்கியிருந்த அவன் முகம் ஏதோ செய்தது அந்த பணிப்பெண்ணுக்கே!
கண்களால், ‘நீ போ.. நான் பார்த்துக்குறேன்’ என்றுரைத்தவன், இறங்கி வந்தவன் அதை க்ளீன் செய்ய ஆரம்பித்தான்.
அந்த கணம்.. அவன் இடது கண்ணிலிருந்து வழிந்த ஒற்றைத்துளி கண்ணீர் சரேலென வழிந்து சென்றதை.. குரூரமாக பார்த்து இரசித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவன்.. தன் தரம் இந்தளவுக்கு தாழ்ந்து விட்டதா என்றா கண்ணீர் சிந்தினான்? இல்லை நிச்சயமாக இல்லை.
இந்த மாதிரி கர்ப்பத்தின் முதல் பருவத்தில் இருக்கும் மனைவியை சகல விதங்களிலும் பார்த்துக் கொள்வது கணவனின் கடமை!
ஆனால் அவள் மனைவி கையாண்ட சொல்!! வார்த்தை!!
‘உனக்கு உன் குழந்தையை தக்க வைச்சிக்கணுமா?.. அப்போ போய்… நீ க்ளீன் பண்ணு!’என்று… குழந்தையை சொல்லி மிரட்டும் அவள் செயலில்..
ஒரு துளி கூட அன்பில்லாமல் போனதை எண்ணித் தான் கண்ணீர் சிந்தினான் அவன்.

(24)

அதுவோர் அழகான இராக்காலம்! நிலவென்னும் மங்கை.. தன் மேக சேடியர்களுடன் நகர் ஊர்வலம் வந்து கொண்டிருந்த அழகான இராக்காலம்!
மண்டூகங்களும், சர்ப்பங்களும் உடல் தினவெடுத்து.. தன் இணை தேடி போதையுடன் அலைந்து கொண்டிருக்கும் இராக்காலம்!
அந்த இராப்பொழுதில்.. தன்னறையின் அட்டாச்டூ பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள் சூரியகாந்தி.
முகத்தை தண்ணீரால் அடித்துக் கழுவியிருந்திருப்பாள் போலும், கண்ணிமை மயிர்கள் மேலேயும்,
காதோரம் கிடக்கும் கற்றைக்குழலோரமும்.. அழகாய் வடிந்து சென்று கொண்டிருந்தன நீர்த்துளிகள்!!
எப்போதும் சிரித்த முகமாகவே தெரியும் சூரியகாந்தி மலரின் வதனம், இன்று ரொம்பவும் சோபையிழந்து போய்..
அழுதழுது.. கண் மடல்கள் இரண்டும் சிவந்து வீங்கிப் போய் தெரிந்தமையானது,
சூரியனின் ஆண்டாளான சூரியகாந்திப் பெண்ணிவள்.. தற்போது இந்த உலகத்தில் இல்லாத தாராவைப் பற்றி எண்ணி எண்ணியே…
கண்ணீரில் ஓய்ந்து போயிருக்கிறாள் என்று புலப்பட்டது.
மெல்ல நடந்து வந்தவள், மஞ்சத்தில்.. சீலிங்கை அண்ணாந்து பார்த்த வண்ணம் படுத்துக் கொண்டாள்.
அந்த இரவு இருவருக்கும் சுமூகமான இரவாக அமையவில்லை.
இரவில் உறங்குவதற்காக அறைக்குள் நுழைந்தவனுக்கு, மூக்கு நுனி செர்ரிப் பழம் போல சிவந்திருக்க.. அழுத தடம் கன்னத்தில் தெரிய..
படுத்திருந்த மனைவியைக் காணவே நெஞ்சு பொறுக்கவில்லை.
விஷ்வாதினுவின் முகமும்.. மனைவியின் முகம் போலவே வெண்டாமரையாக வெளுத்துக் கூம்பிப் போனது.
நேரே வாட்ரோப்பை நாடிச் சென்று.. அதிலிருந்து பைஜாமாவை எடுத்து அணிந்து கொண்டவன்,
படுக்கையை நாடி வந்து அமர்ந்த போது,
மஞ்சத்திலிருந்தும்.. தலையணை மற்றும் பெட்ஷீட்.. கைகளில் ஏந்தி.. சட்டென எழுந்து கொண்டாள் சூரியகாந்தி.
தன் தலைவன் சூரியன் வந்தால்.. அவனை நோக்கி தன் மலர் முகம் காட்டுவது தானே.. சூரியகாந்தி மலரின் இயல்பு!
அந்த சுட்டெரிக்கும் சூரியனை.. சூரியகாந்தியால் பாராமுகம் காட்டவும் முடியுமோ? இதோ இங்கே முடிகின்றதே?
தான் வந்ததும் எழுந்து செல்லும் மனைவியின் செயலில், விழிகள் இரண்டும் சுருங்க,
அவளை மேற்கொண்டு நகர விடாமல் அவளது மென்மையான முன்னங்கையைப் பற்றிக் கொண்டான் அவளது தினுக்குட்டி.
“நில்லு.. எங்கே போற?”-அறியாமை, பதற்றம் மற்றும் அவசரம் மூன்றும் சரிசமமாக போட்டி போட.. வந்து விழுந்தது அவன் குரல்.
அவளோ தன் சூரியனை நோக்கி திரும்பவேயில்லை.
மாறாக தன் பக்கவாட்டு முகத்தை மட்டுமே காட்டி நின்றவள்,
கடனே என்று பதில் சொல்லும்.. சற்றே அலுத்துப் போன குரலில்,
“பெட்ஷீட்டும், தலையணையுமா ஜாகிங் பண்ணவா போவாங்க? சோபாவில படுக்கப் போறேன்.” என்றவள்,
தன்னில் பதிந்திருக்கும் அவனது கையின் தீண்டல் பிடிக்காமல்.. கையை உருவியெடுக்க முயன்ற வண்ணம்,
ரொம்பவும் அழுத்தமாக “க்கை.ய்ய..வ் விடு”என்றாள் அவள்.
தன் உஷ்ணமான மூச்சுக்காற்று அவள் மேல் பட.. ஏங்கிய அவன் மனையாள் தற்போது அவன் கை தீண்டுவதே தீது எனக் கொள்கிறாள்.
அந்த வலிய ஆண்மகனின் முரட்டு இதழரோம் கசந்த சிரிப்பொன்றை டக்கென்று உதிர்ந்து மறைந்தது.
மெல்ல கையை விட்டவன், அவளது பக்கவாட்டு முகத்தை அண்ணாந்து பார்த்த வண்ணமே,
ஆற்றாமையுடன் சொன்னான், “ஏன்.. இங்கேயே படுத்துக்கலாமே? பெட்ல தான் நிறைய இடம் இருக்கே?”என்று.
அவன் கேள்வியில்.. சூரியனைத் திரும்பிப் பார்த்த சூரியகாந்தியின் விழிகள்,
கொஞ்சம் அகல விரிந்து.. ஜலம் கோர்த்திருந்தது.
“இன்னுமா உனக்குப் புரியலை? இல்ல.. புரியாத மாதிரி நடிக்கிறியா?”என்று மின்னல் வெட்டினாற் போன்று தெறித்து விழுந்தது அவள் வார்த்தைகள்!
“ஐ டோன்ட் வோன்ட் டூ ஷேர் திஸ் பெட் வித் யூ..”என்று விட்டு முகம் திருப்பி.. முன்னேறிய மனைவியை..துக்கம் கலந்த இறுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வாதினு.
தாராவின் மரணம் கேள்விப்பட்டு.. அந்த வேதனையில்,
கர்ப்பத்தின் அசதியில்.. உழன்று உழன்று.. ரொம்பவும் சோர்ந்து போய் தெரிந்த மனைவியைப் பார்த்து..
அந்நேரத்திலும் கூட கழிவிரக்கம் பிறந்தது அவனுக்கு.
அவளது இனிய தூக்கத்தினை, அவனது தன்னிலை விளக்கத்தால் கெடுக்க பிரியப்படாதவன்,
போகும் அவளின் முன்னங்கையைப் பற்றி,
“இரு.. நீ இங்கேயே படுத்துக்கோ… நான் சோபாவில் படுத்துக்குறேன்..”என்றவனாய் மஞ்சத்தை விட்டும் எழுந்தவன்,
அவள் கையிலிருந்த தலையணையையும், பெட்ஷீட்டையும் எடுத்துக் கொண்டு,
அறையில் மஞ்சத்துக்கு நேராக போடப்பட்டிருந்த சோபாவை நாடிப் போனான் அவன்.
அவனது ஆறடி உருவத்துக்கு அந்த சோபா கொஞ்சம் குறுகலானது தான்.
இருந்தாலும் வயிற்றில் குழந்தை சுமந்து நிற்பவள்,
சோபாவில் உறங்குவது மனதுக்கு வலியைக் கொடுக்கவே தான், அவன் அவளைத் தடுத்து நிறுத்தி விட்டு,
தான் சோபாவில் உறங்குவதாக மனமுவந்து வந்தான்.
சோபாவில் வலப்புறமாக சாய்ந்து படுத்தவனின், கண்களிரண்டும்,
அங்கேயிருந்து, மஞ்சத்தில் கண்மூடி படுத்திருக்கும்.. தன் சூரியகாந்தி மலரையே இமைக்காமல் பார்த்திருந்தது.
இப்படியிருந்த ஆண்மகனா அவன்??
காதல் அவனை எவ்வாறெல்லாம் தான் ஆட்டுவிக்கிறது??
இதே பழைய விஷ்வாதினுவாக இருந்திருப்பின்.. “நான் நல்லவன் தான்னு.. யாருக்கும் ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை… நீ போறதுன்னா… என் குழந்தையை பெத்துக் கொடுத்துட்டுப் போ”என்று கறாராக சொல்லியிருக்கக் கூடும்!!
ஆனால் இவன் தான்.. சூரியகாந்தி மலரின் காதலுக்காக.. புதிய காதலனாக.. காதல் தலைவனாக உயிர்த்தவனாயிற்றே!
விஷ்வாதினுவின் மென்மையான பக்கம்.. சூரியகாந்திக்கு ப்ளஸ் பாயின்ட்டாகவே போனது.
‘என்ன சொல்லி தாராவுக்கும், அவனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை’ என்று புரிய வைப்பது என்று தெரியாமல் தவித்துப் போனான் அவன்.
தாராவும், அவனும் இருக்கும் புகைப்படத்தை யார் தப்பான கோணத்தில் படம் பிடித்தது?
அதுவும் எங்கே சென்று.. அவன் மனையாள் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தாள்?
தாராவுக்கு நிஜமாகவே என்ன தான் ஆனது? என்று பல கேள்விகளுக்கு அன்றிரவே விடை அறியும் ஆர்வம் அவனுள் நிலவியது.
உண்மையை தன் மனையாளுக்கு நிரூபித்து.. துக்கத்தில் உழலும் மனைவியைத் தோளோடு அணைத்துத் தேற்ற வேண்டும் என்று தோன்ற..
அவனையறியாமலேயே ஈரமாகியது அவன் கண்கள்.
ஈரம் தாங்கிய கண்களுடன் அமைதியாக தன் மனைவியையே பார்த்திருந்தான் அவன்.
அவளுக்கோ.. சீலிங்கை நோக்கி தன் முன்னழகுகளை காட்டிப் படுத்துக்கொண்டிருந்தாலும்,
கணவன் மூடிய இமைகளின் பின்னும் தன்னையே விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருப்பது புரிய,
அவள் தூக்கம் பறி போனது.
அவனின் கதிர்வீச்சுப் பார்வையைத் தாங்க மாட்டாத சூரியகாந்தி,
மெல்ல திரும்பி ஒருக்களித்துப் படுப்பது போல அவனுக்கு புறமுதுகிட்டுக் கொண்டாள்.
இதயம் எனும் ஊற்றில் கவலைப் பெருக்கெடுக்க.. கண்கள் வழியாக… வழிந்தது கண்ணீர்!!
தன்னுயிரைக் காத்த கணவன், நல்லவனாக இருக்கக்கூடாதா? என்ற நப்பாசை அவள் இதயம் முழுவதையும் ஆக்கிரமிக்க கண்ணீர் விட்டு அழுதாள் அவள்.
சோபாவில் இருந்து அவளையே பார்த்திருந்தவனுக்கு.. மனைவியின் தோள்கள் அழுகையில் குலுங்குவது புரிய…
எழுந்து சென்று.. அவளைத் தன் பரந்து விரிந்த மாரோடு சாய்த்து..
“அழாதேமா.. நீ அழுதா.. என்னால தாங்கிக்க முடியலை”என்று கூற வேண்டும் என்று தோன்றினாலும்,
தன் அணைப்பை மனைவி ஏற்க மாட்டாள் என்ற ஒரு காரணத்துக்காக தள்ளியே நின்று.. வேதனை அனுபவித்தான் அவன்.
அடுத்த நாள்.. முற்பகல் வேளை…
அஜய்யின் கிளினிக்கில்!!
அஜயின் கன்ஸல்டன்ஸி அறையின்.. கதவுகளை சடாரென திறந்து கொண்டு,
ஓர் புயல் போன்ற ஆவேசத்துடன் உள்ளே நுழைந்தான் விஷ்வாதினு.
விஷ்வாதினு Bபண்டாரநாயக்க.
அந்தத் தானியங்கிக் கதவில் ஒரு கையும், கதவு நிலையில் ஒரு கையுமாக வைத்து…
நாற்காலியில் அமர்ந்திருந்த அஜய்யையே கண்களில் துளிர்த்த வெஞ்சினம்.. அக்கினியாய் கொளுந்துவிட்டெறிய, பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வாதினு.
கண்களை சுருக்கி விஷ்வாவை நோக்கிய அஜய்யோ, சற்றே இரைந்த குரலில், “உன்னை யாரு உள்ளே விட்டா ஒரு டாக்டர் ரூம்க்குள்ளே எப்படி வரும்னு தெரியலை..? நீயெல்லாம்..” என்று எகிறிக் கொண்டிருந்தவன் வாயால் புயல் வேகம் காட்ட,
இவனோ தன் செயலில் புயல் வேகம் காட்டலானான்.
அஜய்யையே இடைவிடாது பார்த்தவாறே.. உள்ளே அசுர நடை நடந்து வந்தவனின் சீற்றத்தின் தாக்கம், எதிரில் இருப்பாரையும் பொசுக்க.. வல்லதாகவே இருந்தது.
விஷ்வாதினு உள்ளே வரவும் அந்தத் தானாய் மூடிக் கொள்ளும் கதவும்.. மெல்ல மூடிக் கொண்டதும் கூட..
இனி நடக்கப் போகும் அசம்பாவிதத்தை வெளியுலகத்துக்கு பறைசாற்றாமல்.. மூடி மறைக்க ஏதுவாகவே போயிற்று.
ஈரெட்டில் தாவி வந்தவனுக்கோ.. எவரெஸ்ட் அளவுக்கு கோபம் முளை விட்டது.
கழுத்து நரம்புகள் எல்லாம் புடைத்து வெளித் தெரிந்து.. விஷ்வாதினுவின் முகமே விகாரமாகிப் போயிருந்தது.
தனக்கும், அஜய்க்குமிடையிலான இடைவெளியில் இடையூறாக இருந்து டேபிளை..
ஒற்றைக் கையால் தூக்கி, வலப்புறமாக விட்டெறிந்து சாய்த்தான் தினு.
அன்று பொலன்னறுவை குகையில் வைத்து… சிறிதும் அஞ்சாமல் கறுஞ்சிறுத்தையுடன் மல்லுக்கட்டிய வீரன் அவனுக்கு..
அந்த டேபிள் எல்லாம் எம்மாத்திரம் தான்!
டேபிளும், டேபிள் மீதிருந்த பொருட்கள் சர்ரென்று விழுவதையும் பார்த்துக் கொண்டே…

நாற்காலியில் வெறுமனே அமர்ந்து..
கண்கள் மருள விஷ்வாதினுவைப் பார்த்த…
அஜய்யோ கோபத்துடன் நாற்காலியை விட்டும் எழுந்தான்.

இலங்கையின் பெரும் வர்த்தகனான விஷ்வாதினுவோ அஜயின் காலரை.. இடக்கையால் தூக்கி இழுத்துக் கொண்டு போய், சுவரில் சாய்த்து நின்று..
அடுத்த கணம்.. தன் வலக்கை முஷ்டி மடக்கி.. அஜயின் முகவாய்க்கே குத்து விட்டுக் கொண்டே போனான்.
விஷ்வாதினுவில் அடக்கப்பட்டிருந்த சீற்றம்.. அந்நொடி எரிமலையாகத் தான் வெடித்துக் கொண்டிருந்தது.
‘குழப்பத்தில் தவிக்குமளவுக்கு தன் மேல் வஞ்சனையை, மனைவி மீது புகட்டியவர் யார்?’ என்று தோன்ற,
இரவு முழுவதும் யோசித்தவன்,
காலை எழுந்ததும் முதல் வேளையாக தன் ஆட்களிடம், அந்த போட்டோவைக் கொடுத்து.. அது கழுவப்பட்ட ஸ்டூடியோவில்…
இந்த போட்டோவைக் கழுவக் கொடுத்த நபர் யாரென தேடச் சொன்னான் அவன்.
அந்த இடைவெளியில், மனைவியுடன் நேற்று வெளியே சென்று வந்த டிரைவரை அழைத்து,
“நேத்து மேடத்தை நீ தானே கோவிலுக்கு அழைச்சிட்டுப் போன? கோவிலைத் தவிர மேடம் வேற எங்கேயாவது போனாங்களா?” என்றும் கேட்டான் அவன்.
டிரைவர் கூறிய பதிலோ, “மோதர”வில் அமைந்திருக்கும் விஷ்ணு கோவிலைத் தவிர மேடம் எங்கும் செல்லவில்லை” என்பதேயாம் என்று வர,
அவன் புருவங்கள் இரண்டும் யோசனையில் ஒரு சேர இடுங்கலாயிற்று.
கொழும்பிலுள்ள “ மோதர”!! அந்த இடம் ஏனோ அவன் முகத்தைக் கொஞ்சம் சுருக்கத் தான் செய்தது.
அதே சமயம்.. போட்டோ கழுவக் கொடுத்த நபர் “ டாக்டர். அஜய்” என்று தகவல் வர,
அப்படியானால் கோவிலுக்கு செல்வது போல்,
அதே “மோதர”யில் இருக்கும் அஜய்யைக் காணத் தான் நேற்று மனைவி சென்றிருக்கிறாள் என்பது தெள்ளத் தெளிவாக புரியவே,
அழகான தம்பதிக்கிடையில்… ஊடலை மூட்டி விட்ட அஜய் மேல் கொலைவெறியே ஊற்றெடுக்கத் தான் அவன் அங்கே அஜய்யைத் தேடி வந்திருந்தான்.
இங்கே இந்நொடி அஜய்யோ, விஷ்வாதினுவின் இரும்பு பிடியிலிருந்து தன் இறுக்கப்பட்ட கழுத்தினை விடுவிக்கப் போராடிக் கொண்டே,
விஷ்வாதினுவின் அடிகளை வாங்கிக் கொண்டேயிருந்தான்.
என்ன மாதிரி முயன்றும் .. விஷ்வாதினுவின் அடிகளில் இருந்து தப்பிக்க முடியாமல் போனது மற்றவனுக்கு.
ஒரு கட்டத்தில் டாக்டரின் உதடுகளும், பற்களும் இரத்தக்கறையில் நனைந்து..
அஜயின் சட்டை முழுவதும் இரத்தக் கோலங்களான போதும் சரி…
விஷ்வா அணிந்திருந்த ரிங்க் முழுவதிலும் இரத்தம் படிந்த போதிலும் சரி…
சூரியகாந்தியின் புருஷனின் அடிகள் மட்டும் ஓயவேயில்லை.
தன் பிடியை இம்மியளவேனும் தளர்த்தாமல்,
கோபத்தில் பற்களை அழுந்தக் கடித்துக் கொண்டே“அடுத்தவ்வ.. ன்.. ப்.. பொண்டாட்டிக்கு ஆசைப்பட்ற.. உன்னை ம்மாதிரி.. ஆண்களை எல்லாம் கண்டந்துண்டமா வெட்டி நடுரோட்டில் போடணும்..”என்று விஷ்வா ஆத்திரத்தில் பொங்க,
அத்தனை அடிகளுக்கு மத்தியிலும் சலிக்கவேயாமல் வாய் திறந்தான் டாக்டர். அஜய்.
சற்று திரும்பி.. வாய் முழுவதும் நிரம்பி வழிந்த இரத்ததை.. வெற்றிலை துப்புவது போல துப்பியவனாக நிமிர்ந்த டாக்டர்,
“அதை ஒரு பொம்பளை பொறுக்கி.. நீ சொல்றியா? நானாவது ஒரு பொண்ணுக்கிட்ட மட்டும் தான் ஆசை வைச்சேன்.. ஆனால் நீ சொல்லவே கேவலமா இருக்கு..”என்று உரைத்து,
மற்றவனின் பல்ஸை ஏகத்துக்கும் எகிற வைத்தான்.
சினத்துடன், டாக்டரின் சட்டைக்காலரை மீண்டும் இறுக்கிப் பற்றிக் கொண்டவன்,
“என்ன நடிக்குறியா? .. உன் நல்லவன் வேஷத்தை என் கிட்ட போடாதே!!நான் பொம்பளை பொறுக்கியா இல்லையான்னு உன்கிட்ட அதை ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.. நான் நினைச்சா.. இந்த செக்கென் கூட உன்னை உண்டு இல்லைன்னு பண்ண முடியும்?” என்றுரைக்க,

அஜயின் முகத்தில்.. அத்தனை வேதனையிலும் ஏதோ ஹாஸ்யம் கேட்டு விட்டதைப் போல.. ஓர் நகைப்பொன்று படர்ந்தது.
“அதுக்கெல்லாம் நான் பயப்படுவேன்னு நினைச்சியா?” என்று திரும்பக் கேட்டான் அஜய்.
அஜயின் நகைப்பில்.. இன்னும் கொஞ்சம் சீற்றம் துளிர் விட,
அவன் கழுத்தை சற்று இறுக்கி,
“ரொம்ப எகிறாதே.. மரியாதையா வந்து ‘அந்த ஃபோட்டோஸ் உங்க ரெண்டு பேரையும் பிரிக்க.. நான் எடுத்த ஃபோட்டோஸ் தான்’னு .. சூரியகாந்தியிடம் வந்து ஒத்துக்க.. உன்னை ம்மன்னிச்சு விட்டுட்றேன்.”என்று சற்றே மலையிறங்கியவனாகப் பேசினான் தலைவன்.
தனக்கு நேரெதிரே நின்று சுட்டெரிக்கும் பார்வை பார்க்கும் விஷ்வாதினுவுக்கு…
எதிர்ப்பார்வை பார்த்தான் அஜய்.
அவனைப் போலவே விழிகள் பெரிதாக்கி நோக்கிய டாக்டர்,
“ப்ளேக்மெயில் பண்ணுறியா? சூர்யா கஸின் தாரா கூட பழகி.. காதலிக்குறது போல நடிச்சு… ஏமாத்தி… அவளை ஒரு குழந்தைக்கு தாயாக்கி… அவள் உயிருடன் விளையாடிட்டு.. எப்படி உன்னால சூரியகாந்தி கூட வாழ முடியுது? நீ எல்லாம் மனுஷன் தானான்னு தோணுது!!..”என்றான் வார்த்தைகளில் வெறுப்பு உமிழ.
அந்த பார்வையும், உதாசீன வார்த்தைகளும் விஷ்வாதினுவை இன்னும் கொஞ்சம் வெறியனாக்கவே செய்தது.
டாக்டரின் சட்டைக் காலரைப் பிடித்து ஏகத்துக்கும் உலுக்கியவன்,
“ஏய் ந்நீ ப்பார்த்தியா? நான் த்தாரா கூட ப்பழகி… அவளை ஏமாத்தி, குழந்தைக்குத் த்தாய்யாக்கியதை ந்நீ ப்பார்த்தியா..?”என்று கேட்க,
அவ்வளவு அடி வாங்கியும் கொஞ்சம் கூட பயப்படாமல் சொன்னான் அஜய்,
“ஆமா அதுக்கு ஆதாரம் தான்.. நான் எடுத்த இந்த ஃபோட்டோஸ்..”என்று.
டாக்டரை வெட்டிப் போட வேண்டும் போல ஆத்திரம் எழுந்தது தினுவுக்கு.
அஜய்யோ… தன் காலரில் இருந்த மற்றவனின் கைப்பிடி தளர்ந்திருந்த நேரத்தில்.. தன்னிலிருந்தும் விலக்கியவன்,
புறங்கையால் உதட்டிலிருந்து வழியும் குருதியைத் துடைத்துக் கொண்டே பார்த்தான்.
பின்பு அன்று அவன் பார்த்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்ல எண்ணங் கொண்டு, வாய் திறந்தான்.
“அன்னைக்கு.. என் ப்ரைவட் கிளினிக் விட்டு வரும் போது, உன் கார் இந்தப்பக்கம் போறதைப் பார்த்தேன்..”என்று ஏதோ சொல்ல வாயெடுத்த அஜய்யைப் பார்த்தவனின் கண்கள் யோசனையில் சுருங்கியது.
ஆமாம்.. அஜய் சொல்வது முற்றிலும் உண்மையானதாகவே இருந்தது.
அது ‘தாரா கொழும்பிலுள்ள ‘மோதர’ என்னும் இடத்தில் இருக்கிறாள்! ’ என்று உளவாளிகள் மூலம் அறிய வந்த நேரம்.
தாராவைக் காண அந்தப்பக்கம் காரில் விரைந்தவன்.. அஜயின் கண்களில் விழுந்து தொலைத்தது துரதிர்ஷ்டமே தான்.
சூர்யா கணவன் கார் எதற்கு இந்தப்பக்கம் செல்ல வேண்டும்?
அஜய் அறிய.. விஷ்வாதினுவுக்கு உற்றார், உறவினர்கள் யாரும் இந்தப்பக்கம் இருப்பதாகத் தோன்றவில்லையே என்று எண்ணியவன், தானும் அந்த காரைப் பின் தொடரலானான்.
ஆனால் விஷ்வாதினு சென்றது தாரா இருக்கும் வீட்டிற்கு.
கதவு சாத்தப்பட்ட ஒரு குச்சு வீட்டின் முன்.. தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையினை இட்டுக் கொண்டே.. கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் விஷ்வாதினுவை..
அவனறியாமல்.. இடைவெளி விட்டு.. நோட்டம் விடலானான் அஜய்.
அங்கே தாழ் திறக்கப்பட்ட கதவுக்கு முன்னால்.. வாய் நிறைய புன்னகையுடன்…
அழகான முட்டை வயிற்றுடன் வெளியே வந்த தாராவைக் கண்டு..
அதிர்ந்து போய் நின்றான் அஜய்!
சூரியகாந்தியைப் பற்றியும், சூரியகாந்தியின் குடும்பத்தினர் பற்றியும்,
சூரியகாந்தியின் வாழ்க்கைப் பற்றியும் எப்போதும் அதிக அக்கறை கொண்டிருந்த அஜய்…
தாரா ஓடிப்போன விஷயம் பற்றி… சூரியகாந்தி.. தன்னிலிருந்தும் பிரிந்த பின்னர்.. அறிந்து வைத்திருந்தமையால்..
ஓடிப்போன தாரா.. எப்படி இங்கே.. இந்த வீட்டில் என்று குழம்பிப் போனான் அஜய்.
விஷ்வாதினுவைக் கண்டதும் புன்னகைத்து.. பின் அதிர்ந்து விழித்தவளுக்கு…
தன் உடல் நிலை காரணமாக… இலேசாகத் தலைசுற்றி.. கால்கள் சரியப் போகவே,
மனதுக்குள் துளிர் விட்ட மனிதாபிமான நோக்கில்.. அவளைத் தன் தோளோடு தாங்கிக் கொண்டான் விஷ்வாதினு.
அவளை மெல்ல நடக்க வைத்து.. உள்ளே அழைத்து வர முயன்ற தினுவுக்கு…
அப்போது தான்.. அவள் நடக்க திராணியற்றிருப்பதுவும் புரிந்தது.
வயிற்றுக்குள் இன்னோர் உயிரை சுமக்கும் ஓர் தாயை… சக மனுஷியாக மதித்து…
கைகளில் ஏந்திக் கொண்டான் தினு.
அதை சற்று தொலைவில் இருந்து பார்த்து கொண்டிருந்த டாக்டரோ… தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக..
அங்கே நெஞ்சு வெம்மையில் உழல நின்றிருந்தான்.
தான் ஒரு காலத்தில் நேசம் வைத்திருந்த சூரியகாந்திக்கு, அவள் தலைவன் துரோகம் செய்யும் அவனின் செயலில் நெஞ்சு புழுங்கியது.
மெல்ல செல்லை வெளியில் எடுத்தவன், மறைவிலிருந்து நடப்பது அனைத்தையும் ஃபோட்டோஸ் எடுக்கலானான்.
அன்று தான் பார்த்ததை ஒன்று விடாமல் தற்போது… இந்த கணம் விஷ்வாதினுவிடமே அனைத்தையும் கூறிக் கொண்டிருந்தான் அஜய்.
அதைக் கேட்ட விஷ்வாதினுவின் வலிய கரங்கள், டாக்டரின் காலரிலிருந்தும்.. மெல்ல நீங்கி.. அவனை விடுவித்தது.
தினுவை முறைத்துப் பார்த்துக் கொண்டே மற்றவன்,
“அன்னைக்கே உன் சட்டையைப் பிடிச்சு… இழுத்து.. “எப்படிடா உன்னால சூரியகாந்திக்கு துரோகம் பண்ண மனசு வந்தது”ன்னு.. கேட்கணும்னு.. என் நாடி, நரம்பு எல்லாம் துடிச்சுச்சு…
‘பணம் பாதாளம் வரை பாயும்’ னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க… உன்னை நீ நிரபராதி ன்னு நிரூபிக்க.. என்னை நீ குற்றவாளியா மாத்திடுவியோன்ற ஒரு காரணத்துக்காகத் தான்.. எவிடன்ஸூக்காக.. அந்த ஃபோட்டோஸை பிடிச்சேன்..
அமைதியா அங்கேயிருந்து வெளியேறினேன்..தக்க சந்தர்ப்பம் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணேன்.. அன்னைக்கு உன் கார்டன் பார்ட்டிக்கு.. யாருக்கும் தெரியாமல் சுவரேறி குதிச்சு.. உன் ரூமுக்கு வந்தேன்..
உன் மனைவியை சந்திச்சேன்..
உன்னைப் பத்தின உண்மைகளை.. வெளிச்சத்துக்கு கொண்டு வர.. என் கிளினிக்கிற்கு வர சொன்னேன்… உண்மையை சூரியாவுக்கு புரிய வைச்சேன்.. ”என்று…
மெய்யாகவே நடந்தது அனைத்தையும் கூறினான்.
அந்நொடி .. அன்று பார்ட்டி நேரம் அறைக்கு.. செல்லை எடுக்க வந்த மனைவியின்.. “திருதிரு”முழியும், அவள் படபடப்பும்.. சட்டென மின்னல் வெட்டினாற் போன்று வந்து சென்றது அவனுக்குள்.
சற்றே சீற்றம் மட்டுப்பட.. அமைதியாக அஜயின் முகத்தையே பார்த்த வண்ணம் நின்றிருந்தான் வர்த்தகன்.
வர்த்தகன் அனைத்து திருகுத்தாளங்களும்.. அம்பலமாகி விட்டதே என்ற ஸ்தம்பிப்பில் நிற்பதாக டாக்டருக்கு தோன்ற,
தினுவின் கண்களோடு கண் நோக்கி,
“அநியாயமா.. தாராவுடைய வாழ்க்கையை அழிச்சிட்டியே? .. அவளுக்கு ஒரு குழந்தையையும் கொடுத்துட்டு.. எங்கே சோசைட்டியில் இது தெரிஞ்சா அவமானம்னு அவளை நெருப்பு வைச்சு கொளுத்தியிருக்க!!..”என்று தொடர்ந்து கொண்டே போக,
சட்டென அந்த சொற்களில் பழைய நினைவிலிருந்து வெளியே வந்தான் விஷ்வாதினு.
அஜய்யைப் பார்த்து.. தன் பழைய கம்பீரமான குரலில், “போதும்.. உன்னோட கதை கட்டலை எல்லாம்.. என் பொண்டாட்டி வேணா நம்பலாம். ஆனால் நான் நம்பத் தயாரில்லை.. நான் அவளை நெருப்பு வைச்சு கொளுத்தினேனா?..”என்று எகிறியவனாகக் கேட்டான்.
அப்போது.. டாக்டர் மொழிந்த பதில்.. வர்த்தகனை சற்று நிலைகுலையவே செய்தது.
“ஆமா தாராவே சொன்னாள்.. கடைசி கட்டத்தை நெருங்குறவள் எதற்கு பொய் சொல்லணும்?”என்றான் வைத்தியன் மனதுக்குள் எந்த விகல்பமும் இல்லாது உறுதியுடன்.
“என்ன? தாராவே சொன்னாளா?”-தினுவின் குரல் இம்முறை மிக மிக ஈனமாக ஒலித்தது.
அதைக் கேட்டு.. டாக்டரோ ஒரு சிறிதும் அச்சப்படவேயில்லை.
மாறாக நெஞ்சு நிமிர்த்தி நின்று.. தினுவை எதிர் கொண்டவன், “ஆமா என் இந்த நிலைமைக்கு காரணம் “விஷ்வா”ன்னு அவளே சொன்னாள்..”என்று கூறிய மறு விநாடி..
கண்களில் ஒரு கலக்கத்துடன் வைத்தியனைப் பார்த்த வர்த்தகன்,
முற்றிலும் குழம்பிப் போனவனாக, “விஷ்வான்னு என் பெயரை சொன்னாளா?”என்று கேட்டவனுக்கு.. இதில் ஏதோ குழப்பம் இருப்பதாகவே தோன்றியது.

“தாரா சாகும் போது.. என் பேர் சொன்னாள்னா.. அது மரண வாக்குமூலம் தானே? அப்போ ஏன் என் பேர்ல போலிஸில் கம்ப்ளைன்ட் கொடுக்கலை?”
“அது தாராவுடைய கடைசி ஆசை.. வீட்டை விட்டு ஓடி வந்தவள்.. எங்கேயோ ஒரு மூலையில் சந்தோஷமா.. தன் காதலனுடன் வாழ்றதாகவே.. கடைசி வரை.. தன்னைப் பெத்தவங்க நினைச்சிக்கட்டும்றதும்.. இதை தன் பெற்றவங்களுக்கு தெரியாமல் பார்த்துக்கணும்ன்றதும்.. தாராவுடையை கடைசி ஆசை..அப்புறம் எப்படி சொல்ல முடியும்? உனக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்? ”
இதை இமைகள் இரண்டும் இடுங்க கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு..
அடுத்து பேசும் போது குரல் ரொம்பவும் தணிந்து போயிருந்தது.
“தாரா பாடி எங்கே இருக்கு? .. நான் அதை பார்க்கணும்..”என்று கேட்ட விஷ்வாதினுவின் கண்களை..
நிமிர்ந்து பார்த்த அஜய்க்கு.. அவன் கண்களில் தோன்றிய ஏதோ ஒன்று…
அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் கட்டிப்போட்டது.
விஷ்வாவின் கண்களில் தெரிந்தது சோகமா? குழப்பமா? எல்லாவற்றிற்கும் மேலாக குற்றவுணர்வா?
எதுவென்று பிரித்தறிய முடியாத கண்களின் உணர்ச்சிக் கலவையில்…
டாக்டரும் அதற்கு இசைந்து தான் போனான்.
தாரா மரணம் இயற்கை மரணமாக அன்றி.. தீ விபத்து மரணமாக இருந்ததாலேயோ என்னவோ.. போலிஸ் வாக்குமூலம், போஸ்ட் மாட்டம்.. அது இது என்று பல பரிசோதனைகளுக்கு உள்ளாகி..
அங்கே மார்ச்சுவரியில் தான் கிடந்தது அவள் உடல்.
நண்பகல் வேளையில்,
வீட்டுக்குள் வெண்மை நிற ஷேர்ட்டும், கறுப்பு நிற பேன்ட்டும் முழுதும் தெப்பமாக நனைந்து,
உச்சாதி பாதம் வரை.. ஈரம் சொட்டச் சொட்ட உள்ளே வந்து நின்ற தன் தலைவன் சூரியனை புரியாமல் பார்த்தாள் சூரியகாந்தி.
அவளது ஆகாயச் சூரியன் மழையில் மாட்டிக் கொண்டானா?
காரில் பயணிப்பவன் மழையில் மாட்டக்கூடுமா என்ன?
நூற்றிலொரு வாய்ப்பாக அகப்பட்டுக் கொண்டாலும், கொழும்பில் இன்று மழை பெய்த அறிகுறி இருக்கக் காணோமே?
தன்னைத் தாண்டி உள்ளே செல்பவனின் புறமுதுகை வெறித்துப் பார்த்தவள்,
“நில்லு” என்றுரைக்க..
அந்த ஐந்தரையடி சூரியகாந்தி மலரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்றது ஆறடி உயர.. திடகாத்திரமான உருவம்.
அவன் நின்றானே ஒழிய.. திரும்பித் தான் பார்க்கவில்லை.
தன் தலைவனை நோக்கி முன்னே நடந்து வந்து, அவள் முகம் பார்த்து, குழப்பம் நிறைந்த குரலில், “எங்கே போய்ட்டு வர?..” என்று கேள்வி கேட்டாள் அவள்.
மனைவியைப் பாராமல்.. விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே, உணர்ச்சி மறுத்த குரலில், “காரியம் பண்ணிட்டு வரேன்..”என்றான் மொட்டையாக.
“யாருக்கு?..”-அதே புரியாத குரலில் அவன் மனையாள்!
தற்போது தான் ஸ்மரணை பெற்றவன் போல மனைவியின் விழிகளை நோக்கியவன், மென்மையாக “தாராவுக்கு..”என்றான்.
அதைக் கேட்டதும்.. மீண்டும் அவளுள்.. தன் கணவனின் துரோகமும், குற்றமும் தலை விரித்தாட,
“ ‘தன்னாலே தான் ஒரு பொண்ணு வாழ்க்கை கெட்டு போனதே’ன்ற குற்றவுணர்விலிருந்து தப்பிக்கத் தானே இது எல்லாம் பண்ணுற?”என்று அவனை வார்த்தையால் குத்தி குதறிவிடும் நோக்கில் கேட்டாள் அவள்.
அவனோ.. நிதானமாக தன் சூரியகாந்தி மலரைப் பார்த்தான்.
அவன் எப்போதும் கண்டு கிறக்கமுறும்.. அவளது தேன் நிற அஞ்சனங்கள்..
அவள் கொண்ட சீற்றத்தின் காரணமாக.. கடும் சாக்லேட் நிறம் கொண்டதை…
இரசனையற்ற முகத்துடன் கண்ணுற்றான்.
பின்பு மெல்ல வாய் திறந்தவன், “இல்லை.. அன்னைக்கு கார்டன் பார்ட்டிக்கு.. யாருக்கும் தெரியாமல் சுவரேறி குதிச்சு வந்த அஜய் சொன்னதை… என் மனைவியும் நம்பிட்டாளே.. அந்தப் பழியை எப்படி துடைக்கப் போறேனோன்னு தெரியலைன்ற கவலையில்.. இதை எல்லாம் பண்ணுறேன்!!” என்று கூறியவன்..
பதில் பேசாமல் அறை நோக்கி நடந்தான்.
அன்றிரவு நீ நடத்திய நாடகம் தெரியும் என்று கூறாமல் கூறி.. அவள் முகத்தை சற்றே இருளச் செய்தான் விஷ்வாதினு.
அவளுக்கோ.. கணவன் அன்று நடந்தது அனைத்தையும் கண்டு பிடித்து விட்டான் என்று தோன்றியதும்.. நினைவுக்கு வந்தது “அஜய்” பற்றித் தான்.
தன்னை விட்டும் முன்னேறிக் கொண்டிருந்த கணவனை நாடி விரைந்து.. முகமெல்லாம் வியர்வை பூக்க, பதற்றத்துடன், “அ… அஜய்.. அஜய்க்கு… என்ன ஆச்சு?.. சொல்லு அஜய்யை நீ என்ன பண்ண?”என்று கத்திக் கேட்டாள் அவள்.
அவனோ.. அதே நிதானம் தவறாமல் பதிலிறுத்தான்.
தன் மேல் மனைவி வைத்திருக்கும் நன்மதிப்பில்(?).. இலேசாக கண்கள் இரண்டும் கலங்க,
அடிபட்டுப் போன தொனியில், “ஹி இஸ் ஃபைன்.. நான் ஒண்ணும் அவ்வளவு மோசமானவன் கிடையாது!!” என்றவன்… விரைந்து மாடிப்படியேறலானான்.

(25)

பாத்ரூமிலிருந்து.. அறைக்கு வந்தவளின் வெளிர் நீல நிற கவுனும் சரி… உடலும் சரி.. உச்சாதி பாதம் வரை தெப்பமாக நனைந்திருந்தது.
கார்மேகம் மட்டுமே மழை பொழியும்! இது இயற்கை.
இன்றோ இயற்கைக்கு நேர்மாறாக.. அவளது கார்குழலும் மழைநீரை பொழிவித்துக் கொண்டிருந்தது.
அவள் அந்த வெண்மை டைல்ஸ் தரையில்.. தன் வெற்றுப்பாதங்கள் பதிந்து.. நடந்து வந்த கால் தடம் கூட.. ஈரத்தின் விளைவால் ஈரத்தடமாக உயிர்ப்பெறலானது.
சூரியகாந்தியின் விழிகளோ.. ஒரு வித வெறியுடன்.. விட்டத்தையே வெறித்துப் பார்த்திருக்க…
அவள் முகம் நிர்மலமாகவே காட்சி தந்து கொண்டிருந்தது.
அவளது இரு செவிகளோரமும்.. அன்று ஊனும், இரத்தமும் நெருப்பில் வெந்து போய்..கூந்தல் எல்லாம் உருகி..
பார்க்கவே பயங்கரமாக இருந்த அவளது உடன்பிறவா சகோதரி தாரா உரைத்த இறுதியுரைகளே ஓடிக் கொண்டிருந்தது.
“எ… எ.. என்.. இஇ.. இந்த நிலைமைக்கு காக்.. கார்… ணம்.. உ.. உன்.. வ்விவ்.. ஷ்வா…”என்று அந்த உயிர் போகும் நொடியிலும் திக்கித் திணறி உரைத்த தாராவின் ஈனமான குரல்!!
அந்தக் குரல்.. அவள் காதோரம்.. நில்லாமல் ஒலிக்க.. ஒலிக்க.. கர்ப்பகாலத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டியவளின் நிம்மதி போயிற்று.
மஞ்சத்தில் அமர்ந்து.. மாலையானதும் லைட்டை கூட போடாமல்.. இலக்கின்றி இருளையே வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு…
உள்ளே ஓர் பெண்குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது.
கோபமும்,வஞ்சனையும் தெறிக்கும் , மிக மிக இரைந்த குரலில்,
“எதுக்கு அமைதியா இருக்க ப்ளேக்பெர்ரி? அவனைப் பழிவாங்கணும்.. தாராவைக் கொன்ன அவனைப் பழிவாங்கணும்…. அவன் பெருசா நினைக்குற.. இந்த குழந்தையை நீ அழிக்கணும்.. ம்.. ஆமா அழிக்கணும்.. இன்னும் ஏன் யோசிக்குற? இந்தக் குழந்தையை அழிச்சிடு..” என்று அவள் இதயவறை எங்கிலும் கேட்க…
ஏற்கனவே தாராவின் உருக்குலைந்த முகம் பார்த்து.. மன உளைச்சலில் இருந்தவளுக்கு.. அந்த குரலுக்கு கட்டுப்பட வேண்டும் என்றே மனம் உந்தியது.
நேரே பாத்ரூம் சென்று ஈரமாகி வந்தவள், ஈரம் சொட்டச் சொட்ட ட்ராயரை நாடிப் போனாள்.
ட்ராயரில்.. அலமாரியிற்கான சாவிக் கொத்து இருக்க.. அதனை விழிகளில் சுரத்தையேயற்று கண்ணீர் ஓட… எடுத்தவள்..
அவ்வறையில் இருக்கும் “ப்ளக்”(plug) இனை நாடிப் போனாள்.
அன்று.. அந்நொடி.. அவள் சுயத்தில் இல்லை!!
தாராவின் உருக்குலைந்த முகமும், தாராவின் இறுதிக் கூற்றும், அவளது மோர்னிங் சிக்னஸூம், இன்னும் ஏன் அலுவலகம் சென்றிருக்கும் விஷ்வாதினு அருகில் இல்லாததால் கிடைத்த தனிமையும் என எல்லாமும் சேர்ந்து…
அவளை.. அவள் குழந்தை மீதே ஓர் வெறுப்பைத் தூண்டி விட்டிருந்தது மனரீதியில்!!
அவனைப் பழிவாங்க.. தன்னையும், ஒன்றுமே அறியாத ஒரு சிசுவையும் அழித்துக் கொல்ல முனைவது கூட.. அவளுக்கு அற்ப விஷயமாகவேப்பட…
சாவியினை.. அந்த ப்ளக்கின் துளையினுள் போடுவதற்காக…அவள் ப்ளக்கினை நாடிப் போய்க்கொண்டிருந்த நேரம்..
தெய்வாதீனமாக.. அறைக்குள் நுழைந்தான் அலுவலகம் விட்டு வந்திருந்த விஷ்வாதினு.
கதவின் பிடியில் கை வைத்திருந்தவனின் கூர்மையான கண்கள்,
அறைக்குள் நிலவிய இருட்டிலும் மனைவி நிகழ்த்தப் போகும் அசம்பாவிதத்தைத் துல்லியமாக கண்டு கொண்டன.
உடம்பு முழுவதும்.. அவனுக்குத் தான் தற்போது ஷாக் அடித்தது போல விறைக்க,
மனைவியின் செயலில் இன்ஸ்டன்ட்டாய் ஓர் கோபமும், நடுக்கமும், அச்சமும் ஒருசேர முளைக்க,
“ப்ளேக்பெர்ரீஈஈ”என்று கத்திக் கொண்டே.. தனது சூரியகாந்தி மலரை நாடிப் போனான் சூரியன்.
கணவன் அதிர்ந்த குரலில் கத்தியும் கூட.. அவள் சிந்தை களையவில்லையானால்.. அவள் மனது ஜனிப்பதை விடவும்,
மரிப்பதை அந்தளவுக்கு நேசிக்கிறதோ?
மனைவியின் பின்னாடி வந்து.. அவளது ஈரம் தோய்ந்த கையைப் பற்றி.. பின்னோக்கி இழுத்துக் கொண்டே,
பதற்றமான குரலில், “ப்ளேக்பெர்ரீஈஈ.. ப்ளேக்பெர்ரீஈஈ .. என்ன பண்றேன்னு தெரிஞ்சு தான் பண்றியா??”என்று கேட்டான் இவன்.
கணவன்.. தன்னை தடுப்பது புரிந்து.. மனமெங்கும் எரிச்சலும், வெறுப்பும் பரவ, அவன் கையைத் தன்னிலிருந்தும் உதறி விட்டவளாக,
“என்னை வ்விவ்.. விடு.. நான் த்தெர்.. ரிஞ்சு தான் பண்றேன்.. நான் சாகணும்.. என்னை விடு!!..”என்றவள்,
சற்றே திரும்பி.. அவனைத் தள்ளி விட்டுக் கொண்டே ப்ளக்கினை நோக்கி செல்லத் தொடங்கினாள்.
சாகத்துணியும் மனைவியை சமரசப்படுத்தும் வழிவகை அறியாது நின்றான் அந்த வர்த்தகன்!
இயன்றவரை அவளை அந்த ப்ளக்கினை அடைய முடியாத வண்ணம்,
அவளைப் பின்னாலிருந்து அணைத்து, அவள் கைகளை அணைப்பாலேயே கட்டிப்போட்டவன்,
அவள் காதோரம் கலங்கிய குரலில், “ப்ளேக்பெர்ரி.. வேணாம்டா.. உன் தினுக்குட்டி.. நா.. நான் சொல்றதை ஒரு தடவை கேளு..உன் வயிற்றில் நம்ம குழந்தையும் இருக்கு.. அதை நீ அழிக்கப் போறியா?” என்று கேட்டான் அவன்.
அதைக் கேட்டு.. கர்ண கொடூரமனா குரலில் வாய் திறந்தவள் தொனியும்,
சற்று நேரத்திற்கு முன்பு அவள் இதயவறை எங்கிலும் எதிரொலித்த வன்மையான அந்த அருவமான பெண்ணின் குரலும் ஒன்றாகவே இருந்தது.
“ஆமா ஒண்ணு அது அழியணும்!!.. இல்லை நான் அழியணும்!!… என்னை விடுடா..”என்று அவள் மீண்டும் அந்த கையணைப்பிலிருந்து வரத் துடிக்க..
அப்போதும் விடாமல்.. அவளை இறுகக் கட்டிக் கொண்டான் விஷ்வாதினு.
சாகத்துணிபவளிடம் வன்முறையை பிரயோகிப்பது தவறு என்ற ஒரு காரணத்துக்காக..
தணிந்த குரலில் பேச நாடியவன், “இப்போ.. ஏதோ உணர்ச்சி வேகத்துல.. நீ முடிவெடுத்தாலும், அதுக்கு அப்புறம் கவலைப்படப் போவதும் நீயா தான் இருக்கும்..”என்று கூற..
இம்முறை.. தன் சூரியனின் முகம் பார்த்துத் திரும்பினாள் சூரியகாந்தி.
தலையை மறுப்பாக ஆட்டியவளாக, “மாட்டேன்.. நிச்சயமா கவலைப்பட மாட்டேன்.. என் தாராவுடைய குழந்தையை.. கொன்னவன்.. குழந்தையை கொன்னுட்டேன்னு.. எனக்குள்ளே திருப்தி தான் இருக்கும்..”என்றவளின்..
கண்ணீர்த்துளி பளபளக்கும் கண்களில் மிளிர்ந்து கொண்டிருந்த வெறியைக் கண்டு ஸ்தம்பித்து நின்றான் விஷ்வாதினு.
பிறகு மீண்டும் அவள் ப்ளக்கினை நாடிப் போக.. பயந்து போனவன்,
அவளது முன்னங்கைப் பற்றித் தன்னை நோக்கித் திரும்பினான்.
அவள் கோபத்தில் உறுத்து விழிக்க, அதை எல்லாம் சட்டை செய்யாதவனின் முகம்.. பழைய அதிரடியான விஷ்வாதினுவின் முகமாக மாறிப் போயிருந்தது.
“ப்ளேக்பெர்ரி.. உனக்கெல்லாம் சொல்லதிகாரம் சரிப்பட்டு வராது.. செயலதிகாரம் தான்..”என்றவன்,
அவளே எதிர்பார்த்திராத நேரம், அவள் மறுக்க மறுக்க அவளைக் கைகளால் தூக்கிக் கொண்டவன், மஞ்சத்தை நோக்கி நகர்ந்தான்.
பழைய அதிரடியான விஷ்வாதினுவிடம் தான் அவளது மறுப்புக்கும், சொற்களுக்கும் மதிப்பில்லையே! இன்றும் அவ்வாறு தான்!
அவள் மறுப்பு, திணறல், திமிறல்கள் எல்லாம் பயனற்றுப் போக, அவளை மஞ்சத்தில் சென்று அமர வைத்தவன்,
விரைந்து சென்று டவலை எடுத்து வந்து,
அவள் தலையை மெல்ல துவட்டி விடலானான்.
மனைவிக்கு சளி பிடித்து விடக்கூடாது என்பதற்காக நன்றாகத் தலையைத் துவட்டிக் கொண்டே,
“நானும் கன்ஸீவா இருக்கிறவளை.. அடிக்கக் கூடாது.. அடிக்கக்கூடாது ன்னு கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்..ஆனால் நீ என்னை ரொம்ப தான் சோதிக்குற ப்ளேக்பெர்ரி”என்றவன்,
அவளை இங்குமங்கும் இம்மியளவேனும் நகர விடவேயில்லை அவன்.
அவனது வலிமையில்.. தோல்வி கண்டு அமைதியாக அமர்ந்திருந்தவளின் நாசி.. தன் முன்னே தெரியும்..
அவனது கோட்டில் விரவியிருக்கும் அவனது மேனி வாசனையையே முகர்ந்து கொண்டிருந்தது.
அவள் ஆர்ப்பாட்டம் ஓய்ந்ததை அறிந்து.. மனைவி எதிரேயே முழந்தாளிட்டு அமர்ந்தவன், அவளது மடியில் இருந்த கைகளைத் தன் கைகளால் பற்றிக் கொண்டான்.
இலேசாகக் கண்கள் கலங்க, நா தழுதழுக்க, “ப்ளே.. ப்ளேக்.. ப்ளேக்பெர்ரி.. அப்படி என் குழந்தையை கொன்னு தான்.. உன் பழியைத் தீர்த்துக்கணும்னா.. முதல்ல என்னைக் கொன்னுரு.. கமான் கில் மி ஃபர்ஸ்ட்..”என்றவன்…
அவள் கைகளைப் பற்றியெடுத்து வந்து.. அவனது கழுத்தில் அவனே வைத்தான்.
இதுவரை விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சூரியகாந்தி கண்கள்,
மெல்லக் குனிந்து தன் தலைவனை நோக்கியது.
அவள் கண்களில் கண்ணீருடன், வஞ்சமும், கோபமும் எட்டிப் பார்த்தது.
தாராவைக் கொன்றவன் என்ற வன்மம் அவளைப் பாடாய்ப்படுத்த… அகல விரிந்தது அவளது தேன் நிற அஞ்சனங்கள்!!
அவள் கைகளோ… அவனது வலிமையான கழுத்தினை நெருக்க முனைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முனைந்தது.
இருந்தாலும் முடியவில்லை!! அது அவளது தினுக்குட்டி!!
ஆயிரம் தான் இருந்தாலும்.. அவளுள் இருந்த ஆழமான நேசம் அவளை மேற்கொண்டு முன்னேற விடாமல் தடுத்தது.
அவளுயிரையும், இன்னும் ஏன் அவனைப் பழிவாங்க அவன் குழந்தையையும் கொல்ல துணிந்தவளுக்கு.. அவனைக் கொல்ல முடியவில்லை.
நெருக்க முனைந்த அவள் கைகள்.. அவனது தாடி மயிர் இலேசாகக் குத்தும் இரு கன்னங்களையும் தாங்கிக் கொண்டது.
கண்களோ உணர்ச்சி மிகுதியில்.. நில்லாமல் கண்ணீரை உகுக்க.. ஒரு முறை மௌனமாக விம்மி அடங்கியது அவளது தனங்கள்!
அவளது கன்னத்தை மெல்ல தாங்கிய வண்ணமே, கண்ணீர் விட்டு கதறியழுதவளைக் காணக் காண.. உள்ளே வலித்தது அவனுக்கு.
தன் கன்னத்தில் பதிந்த அவள் கையைத் தன் கைகளால் பற்றி,
வலி சுமந்த பார்வையுடனேயே அவளைப் பார்த்த சூரியன் சொன்னான்,
“நீ இப்படியெல்லாம் நடந்துக்குறப்போ… எனக்கு பயமா இருக்கு ப்ளேக்பெர்ரி.. தாயான உன்னை.. பிரதிபலிக்கும்.. என் குழந்தை… என்னை வெறுத்துருமோன்னு பயமா இருக்கு..”என்று.
அதைக் கூறியதும்.. அவள் அழுகை அதிகமானது.
அவனது தாடையைத் தன் பெருவிரலால் தடவிய வண்ணமே, மிகவும் இளகிப் போன குரலில்,
“ நீயேன் நல்லவனா இருக்கக்கூடாது??சொல்லு.. எனக்கு.. என் தினுக்குட்டி ஏன் நல்லவனா இருந்திருக்கக் கூடாது? .. தாராவுக்கும், அவள் வயிற்றில் வளர்ற குழந்தைக்கும் உனக்கும் ஏன் சம்பந்தம் இல்லாமல் இருந்திருக்கக் கூடாது?..” என்று..
தாராவின் மரணத்திற்காக அவனைப் பழிவாங்கவும் முடியாது, அவனோடு கூடி மகிழவும் முடியாது தவிக்கும்..
இரண்டுங்கெட்டான் மனதின் ஆதங்கத்தையெல்லாம் கொட்டி அழுதாள் அவளது ப்ளேக்பெர்ரி.
மனைவியின் கண்ணீர்.. அவள் மேல் அதீத அன்பு வைத்திருக்கும் ஒவ்வொரு கணவனதும் நெஞ்சை உருக்கும்!
அதே போல்.. அங்கே ப்ளேக்பெர்ரியின் கண்ணீரைப் பார்த்து.. உருகிக் கொண்டிருந்தது ஓர் இரும்பு!
இரும்பை உருக்கிய தீயைப் பார்த்தவன் கேட்டான்,
“நீ.. உன் தினுவை சந்தேகப்படுறியா ப்ளேக்பெர்ரி? .. தாராவை நான் ஏமாத்தியிருப்பேன்னு.. இன்னுமா நீ நம்புற? அந்த அஜய் சொன்னதை நீ நம்புறியா?”என்று.
அவள் முகமோ.. எந்தவிதமான உணர்ச்சி பிழம்பையும் காட்டாது மௌனமாகவே இருந்தது.
அது தான்.. தாராவின் இறுதி வாக்குமூலமே சாட்சியாயிற்றே!
அவள் துயருக்கு யார் காரணம் என்று?

அவனோ தரையிலிருந்து.. அண்ணாந்து தன் காதல் மலரை நோக்கும் சூரியன் ஆனான்.
மென்மையான மற்றும் தழுதழுக்கும் குரலில், “என் உயிரை விடவும்.. நான் மேலா மதிக்குற… உ.. உனக்கு.. உன் காதலுக்கு.. நா.. நான்… துரோகம் பண்ணியிருப்பேன்னு.. நீ.. நீ.. நினைக்குறியா ப்ளேக்பெர்ரி?..”என்று கேட்க,
அப்போதும் அவள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
சீதையை ராவணனின் சுண்டு விரல் கூட தீண்டாவிடினும் கூட.. ராவணன் ராமாயண இதிகாசத்தில் வில்லன் தானே?
அது அன்ன இந்த நவீன ராவணனின் நிலையும்!
சாட்சிகளும், ஆதாரங்களும் அவனுக்கு எதிராக இருக்க.. அவன் வில்லனாகவே தெரிந்தான் அவனது பதிவிரதையின் கண்களுக்கு!
அவள் இருந்த மன உளைச்சல் மிகுந்த.. இரண்டுங்கெட்டான் நிலையில்..ஒரு முறை கண்களுக்குள் மின்னல் வெட்டினாற் போல வந்து போனது தாராவின் உருக்குலைந்த முகம்!
அதற்கு காரணகர்த்தா தன் தலைவன் என்று தோன்ற.. அவன் கன்னத்தில் பதிந்திருந்த தன் கையை எடுக்க முயன்ற போது,
அதற்கு விடாமல் பற்றியிருந்தான் அவன்.
அவனிடமிருந்து தன் கையை சர்ரென்று உருவி எடுத்துக் கொண்டே,
அவளை வெறுப்பு கமழ முறைத்துப் பார்த்தவள்,
“தாரா இறக்கும் போது.. தாராவுக்கு.. ஏழு மாசம்.. அ… அதுவொரு முழு குழந்தை.. இந்த உல.. உலகத்துக்கு வரவிருந்த புது.. உயிர்…!!”என்றுரைத்த போது…
அவளது சிந்தையில் விரிந்தது உப்பிய வயிற்றுக்குள் கருகிப் போய் வெளித் தெரிந்த.. அந்த சிசுவின் பிஞ்சுக்கரங்கள்!
அதை எண்ணும் போதே நெஞ்சு துடிப்பின்.. கண்ணால் கண்டவளுக்கு எப்படி இருக்கும்?
நரக வேதனையை சுகித்துக் கொண்டே மீண்டும் வாய் திறந்தாள் அவள்!
ஆத்திரம் மேலோங்கும் குரலில், கண்ணீர் அது பாட்டுக்கு வழிந்தோட
“அப்படின்னா.. என்னை நீ உன் மனைவியா.. நீ ஏத்துக்க முன்னாலேயே… அவள் உன் வாரிசை சுமந்திட்டிருந்திருக்காள்னு அர்த்தம்! .. முறையானவனா இருந்திருந்தால்.. நீ அவளைத் தான் மனைவியா ஏத்துக்கிட்டிருக்கணும்.. ஆனால் நீ என்ன பண்ண?”என்று கத்திக் கேட்டவள்,
தன் நெஞ்சு மத்தியில் கை வைத்து, “என் மேலுள்ள மோகத்தில்.. அதை மூடி மறைச்சு.. என்னை கல்யாணம் பண்ணியிருக்க?..எங்கே உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வருமோன்னு அவளை உயிரோடு நெருப்பு வைச்சு கொன்னிருக்க!!…” என்றாள்.
மனைவியின் வலியும், அவளது கண்களில் தெரிந்த ஒருவித பகல் கனவு காணும்.. இந்த உலகத்திலேயே இல்லாத பிரம்மை போன்ற முகபாவமும்..
விஷ்வாதினுவின் கண்களை சுருக்கச் செய்தது.
மனைவி…பழைய நிலையில் இல்லை என்பதுவும் கூட அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
அவள் இமைக்கும் நேரத்தில்.. சட்டெனத் தாவி இறுக அணைத்துக் கொண்டான்.
“கட்டிப்புடி வைத்தியம்”. அதுவும் கொண்டானின் அணைப்பு வைத்தியம்!!
அந்த அணைப்பினூடாகவே அவள் காதோரம்.. “வேண்டாம்மா.. எதையும் ரொம்ப யோசிக்காதேமா.. ரெஸ்ட் எடு.. எல்லாமே சரியாகிரும்.. சரியாக்க வேண்டியது என் பொறுப்பு…”என்ற போதும் கூட.. நாசித்துவாரம் இரண்டும் விடைத்து விடைத்து அடங்க.. பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்ட வண்ணமே.. சுரத்தையற்றவள் போல அமர்ந்திருந்தாள் அவனது ப்ளேக்பெர்ரி.
(26)

“மாமா.. நான் என்னோட மேனேஜர் மூர்த்தியை அங்கே அனுப்பி வைக்குறேன்.. என்னை நம்பி.. அந்த பார்சலை கொடுத்தனுப்புங்க..”- என்று அலுவகத்தில், தன்னறையில் அமர்ந்து..
சூரியகாந்தியின் மாமாவுடன் செல்லில் பேசிக் கொண்டிருந்தான் விஷ்வாதினு.
“சரி மாப்பிள்ளை.. உங்க மேலே இல்லாத நம்பிக்கையா? நான் அனுப்பி வைக்கிறேன்”- இது சூரியகாந்தியின் மாமா, மறுமுனையிலிருந்து.
இவ்வாறு அவன் முக்கியமான அந்த பார்ஸலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நேரம்..
அவனது மேனேஜர் மூர்த்தி.. அறைக்குள் நுழைய.. தன் தீட்சண்யமான கண் கொண்டு மூர்த்தியைப் பார்த்த வண்ணமே செல்லில்,
“ஓகே மாமா.. ஐ வில் கோல் யூ பேக்..”என்றவாறு அழைப்பை துண்டித்து விட்டு,
பார்வையை நிமிர்த்தி.. மேனேஜர் மூர்த்தியைப் பார்த்தான் விஷ்வாதினு.
தனக்கு படியளக்கும் முதலாளி என்ற மரியாதையோடு.. பவ்யமும் சேர்ந்து கொள்ள.. பணிவாக..
தன்னிரு கைகளையும் அடிவயிற்றில் கோர்த்தவனாக.. நின்றிருந்தான் மேனேஜர் மூர்த்தி.
டேபிள் மீது தன்னிரு கைகளையும் கோர்த்து, அழுந்த மூடிய இதழ்களுடன்,
முதுகந்தண்டு கூனாமல்.. ரொம்பவும் ஸ்மார்ட்டாக அமர்ந்திருந்தான் விஷ்வாதினு.
அவன் குரலும் கூட.. சிறிதும் கட்டுக் குலையாமல், கம்பீரமாகவே வெளி வந்தது.

தன் டேபிளில் இருந்த ஒரு வெள்ளை என்விலப் கவரை.. மெல்ல ஒற்றைக்கையால் மூர்த்தி பக்கம் நகர்த்திய வண்ணம்,
“மிஸ்டர் மூர்த்தி.. இன்னைக்கே நுவரெலியாவில் இருக்கும்.. இந்த அட்ரஸூக்குப் போய்..அவங்க தர்ற பார்ஸலை எடுத்துட்டு வாங்க.. அதை பத்திரமா என் கிட்ட ஹேன்ட் ஓவர் பண்ண வேண்டியது உங்க பொறுப்பு!!..”என்றான் அவன்.
மேனேஜர் மூர்த்தியும்.. அந்த கவரை பணிவுடன் எடுத்துக் கொள்ள, மீண்டும் கம்பீரமாக ஒலித்தது விஷ்வாதினுவின் குரல்.
அதே அழுத்தமான குரலில், “வேறு யாரையும் அனுப்பாமல்.. மேனேஜரான.. உங்களை அனுப்புறேன்னா… அது எனக்கு எவ்வளவு இம்போர்டன்ட்னு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..”என்று அவன் கூறிய தினுசிலேயே புரிந்தது மேனேஜர் மூர்த்திக்கு…
நுவரெலியாவில் இருந்து தான் எடுத்து வரப்போகும் பார்ஸல்.. தன் முதலாளிக்கு எவ்வளவு முக்கியமானது என்று.
அந்நேரம் பார்த்து.. அவன் செல்லுக்கு மீண்டும் ஓர் அழைப்பு வர.. டேபிள் மீதிருந்த செல்.. வைப்ரேட் ஆகத் தொடங்கியது.
செல்லை எடுத்துப் பார்த்தவனுக்கு… தேன் நிற அஞ்சனங்களுக்கு சொந்தக்காரியான.. தன் மனைவி முத்து மூரல்கள் தெரிய சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் திரையில் விழ,
அழைப்பை மேற்கொண்டிருப்பது மனைவி என்பது புரிய..
இத்தனை நேரம் இறுகியிருந்த அவன் முகம் சற்றே.. மலரத்தான் செய்தது.
பின்னே.. அவன் மேல் ஊடல் கொண்டிருப்பவளாயிற்றே அவன் தேவி?
அவள் அழைத்தவுடன்.. அவ்வழைப்பில்.. அவனுள் தூறியது சாரல் மழை.
அழகான புன்னகை சிந்திக் கொண்டே, செல்லில் தெரிந்த பச்சை பட்டனைத் தள்ளி விட்டவனாக..அழைப்பை ஏற்கத் துணிந்தான் அவன்.
வலது கையால் செல்லை காதில் வைத்த வண்ணம், இடது கையால்.. மேசை மீதிருந்த தண்ணீர் கிளாஸினை எடுத்து, தண்ணீர் ஒரு மிடர் பருகியவனாக,
கிளாஸ் தாங்கியிருக்கும் அதே இடது கையின் சுட்டுவிரலால், தன்னெதிரே நின்றிருக்கும் மேனேஜரை.. ஒலியெழுப்பாமல்.. வெளியே போகுமாறு சமிக்ஞை காட்டவும் செய்தான் அவன்.
வெளியேறும் மேனேஜரின் புறமுதுகைப் பார்த்த வண்ணமே, தன் மனையாளிடம், ரொம்ப ரொம்ப இதமான வாய்ஸில், “சொல்லுமா..”என்றான் குழைவாக.
“இவ்வளவு நேரம் யார் கூட பேசிட்டிருந்த?..”- மறுமுனையிலிருந்து காரசாரமாக வந்து விழுந்தது அவள் வார்த்தைகள்!
ஓ.. மாமாவுடன் அவன் பேசிக் கொண்டிருந்த நேரம், இவள் அழைப்பெடுத்திருக்கக் கூடும் போலும்!
கம்ப்யூட்டர் பெண்மணியும், “நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தற்போது வேறொரு தொடர்பில் உள்ளார்” என்று கூறியிருக்க வேண்டு்ம்.
அதனால் தான் இந்த உஷ்ணம் என்று எண்ணிக் கொண்டவன்,
தணிந்த குரலில், “உன் மாமா கூட தான்..”என்றான் அவளது தினுக்குட்டி.
“மாமா” என்ற பெயரின் உச்சாடனத்தில்.. அவளுக்கு தாராவும், தாராவுக்கு தான் செய்து கொடுத்த சத்தியமும் நினைவு வர…
கணவன், மாமாவுக்கு அழைத்து அனைத்து உண்மைகளையும் கூறி விட்டானோ என்ற ஐயம் பிறந்தது அவளுக்கு.
எனவே குரலில் பதற்றம் மேலோங்க, “எ.. என்ன விஷயம் பேசிட்டிருந்த…?”என்று கேட்டாள் தேன் நிற விழியாள்!
மனைவியின் பதற்றம் கண்டு.. அவனுள்ளும் பதற்றம் உருவெடுத்தது.
அத்தோடு.. அந்த கணம்.. இத்தனை நாளாக மனைவியை விட்டும் தள்ளியிருந்த.. தனிமையுணர்வும்.. அவனை வாட்ட,
அவனுடைய பழைய “ஸ்டட்டரிங்க்” பிரச்சினை.. அவனையும் மீறி தலை தூக்கவும் செய்தது.
மனைவியை சமரசப்படுத்த வாய் திறந்தவனுக்கோ.. அந்தோ பரிதாபம்! அவனை சமரசப்படுத்துவாரோ யாருமிளர்!
“ரிர்ரிர்.. ரிலாக்ஸ்… நாந்.. நான்.. ஒர்..ஒரு விஷயத்தையும் சொல்லலை…”என்றான் அவன் திக்கித் திணறி.
“நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வா!!..”- என்று கட்டளையிடும் தொனியில் கணீரென உரைத்தாள் அவள்.
அவன் கண்ணால் இடும் கட்டளைகளை.. தலைமேல் கொண்டு செய்ய.. அவனுக்குக் கீழ் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணி புரிய…
அப்பேர்ப்பட்டவனுக்கும் கட்டளையிட்டாள் ஒருத்தி!
இயன்றவரை தன் திக்கலை.. பெருமூச்சு விட்டு சமாளித்தவன்,
“இப்போ நான் ஆஃபிஸ்ல இருக்கேன்மா..இன்னும் கொஞ்ச நேரத்தில் அர்ஜன்ட் மீட்டிங்க் வேற இருக்கு.. வீட்டுக்கு வர முடியாது ..ஏன் என்னாச்சு?” என்று… அவள் பேரிலுள்ள அன்பில்…
தன் நிலையை மென்மையாகவே எடுத்துரைத்தான் அவன்.
“ஓ!! .. நீ.. ஃபோன்ல என்ன விஷயம்னு சொன்னா தான் வருவியா?”-எகத்தாளம் தாண்டவமாடியது.. அவன் காதோரம் சரசரத்த அவள் குரலில்.
இப்போது தான் முருங்கை மரம் இறங்கி வந்தாற் போன்று.. கொஞ்சமே கொஞ்சம் தணிவாக பேசினாள் அவனது மங்கை.
அதற்குள் திரும்பவும் மரம் ஏறிவிட்டாளா? என்று தோன்ற.. அவளை சமாதானப்படுத்த எண்ணியவனுக்கு,
மீண்டும் திக்கலானது.
“அ.. அப்ப.. ட்டி.. இஇஇ.. ல்லை ம்மா…”என்று அவன் பேசிக் கொண்டிருந்த போதே..
சட்டென இடையிட்டவள், “அப்புறம் என்ன?”என்றான் காட்டமாகவே.
மனைவியின் அதிகாரத்தில் ஞாயமாகப் பார்த்தால், கோபத்தின் உச்சியிற்கு சென்றிருக்க வேண்டும் அவன்!
ஆனால், அது தான் நடக்கவில்லை. தன் சூரியகாந்தி மலர்.. தனக்கு அழைப்பெடுத்த சிறு மகிழ்ச்சியில் அந்த வலிமையான ஆண் மகன்,
அவள் பெண்மைக்கும், தாய்மைக்கும் மதிப்பளித்து பணிந்தான்;மண்டியிட்டான்.
“நா.. நான்.. இஇ.. இங்கே க்கொ.. ஞ்சம் வேலையா இருக்கேன்..”என்று தன் நிலைமையை திக்கித் திணறியாவது எடுத்துரைத்து விளக்கவும் செய்தான்.
அவளுக்கோ.. கணவனின், ‘வேலையாவது.. மண்ணாங்கட்டியாவது??’ என்றிருந்தது.
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல், “இப்போ நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வர முடியுமா? முடியாதா?”என்று கேட்டாள்.
“ப்ளேக்பெர்ரி.. ப்ளீஸ் ட்ரை டு அன்டர்ஸ்டேன்ட் மீ..”-இது அவன்… ரொம்பவும் கெஞ்சும் குரலில்.
என்றுமே.. யார் முன்னுமே பணிந்து போகாதவன், தன் மனைவியின் முன்.. மனைவி மேலுள்ள தீரா காதலின் நிமித்தம் பணிந்து தான் போனான்.
தன் மேல் மலையளவு நேசம் வைத்திருக்கும் ஆண்மகனை..
மின்சார உபகரணங்கள் ஏதுமின்றி.. ஷாக் அடித்தது போன்று அதிர வைக்கும் வித்தையை.. ஒவ்வொரு பெண் ராட்சசியும் நன்கறிவாள்!
அவளும் அறிந்து தான் வைத்திருந்தாள்.
“உனக்கு உன் குழந்தை உயிருடன் இருக்கணும்னா.. கிளம்பி வா..”என்றவள்,அதற்கு மேலும் அவனுடன் மறுபேச்சு பேசிக் கொண்டிருக்கவில்லை! அழைப்பை துண்டித்தும் விட்டிருந்தாள்.
ஆனால் இங்கே இவன் தான், “ஹலோ.. ப்ளேக்பெர்ரி.. ப்ளேக்.. பெர்.. ரி.. ப்ளீஸ்… நான் சொல்றதைக் கொ.. க்.. கொஞ்சம்.. கேக். கேளு… ஹலல்லோ..”என்று தனியனாக நின்று பேசிக் கொண்டிருந்தான்.
செல் ஏந்திய கையின் ஐ விரல்களையும் அழுந்த மடக்கி.. டேபிள் மீதே ஆத்திரத்தில் ஒரு குத்து விட.. டேபிள் மீதிருந்த பொருட்கள் யாவும்..
சற்றே எம்பி குதித்து.. அதிர்ந்து பழைய நிலையை அடையலாயிற்று.
மேசையில் இரு கையூன்றி நின்றிருந்தவனுக்கோ, கழுத்து நரம்புகள் எல்லாம் புடைத்து வெளித் தெரியுமளவுக்கு ஆத்திரம் மேலிட்டது.
அவளுதிர்த்த இறுதி வசனங்கள்! அவன் காதில் வண்டாய் ரீங்காரமிடத் தொடங்கியது.
“உனக்கு உன் குழந்தை உயிருடன் இருக்கணும்னா.. கிளம்பி வா..”என்ற அவளின் வார்த்தைகள்!
குழந்தையினதும், அவளினதும் உயிரைப் பற்றிய நினைவைத் தவிர வேறெதுவும் இல்லை அவன் சிந்தையில்!
டேபிள் மீதிருந்த கார்க்கீயை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் இட்ட வண்ணம், கதவை நோக்கி விரைந்த போது..அறைக்குள் வந்தான் தம்பி சஞ்சய்.
தம்பி முகத்தைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு, உடம்பெங்கும் பதற்றமும், அவசரமும் மேலோங்கி இருக்க,
தம்பியைக் கடந்தவாறு, “சஞ்சய்.. நீ ஆஃபிஸைப் பார்த்துக்க..”என்றவனாக செல்ல முற்பட்ட தமையனின்.. முன்னங்கையை சட்டெனப் பற்றிக் கொண்டான் சஞ்சய்.
தம்பியின் நிறுத்தலில்.. மெல்ல திரும்பி சஞ்சயின் முகம் நோக்கினான் விஷ்வாதினு.
அண்ணன் நெற்றியில் பூத்திருக்கும் வியர்வை மணிகளைக் கூட துல்லியமாகக் கண்டு கொண்ட சின்னவன்,
இடுங்கிய புருவங்களுடன், குழப்பமாக, “வாட் ஹேப்பன்ட் விஷ்வா..? என்னாச்சு? ஏதாவது பிரச்சினையா? ஏன் முகமெல்லாம் வியர்த்திருக்கு?.. நேநாவுக்கு ஏதாவது உடம்புக்கு முடியலையா?”என்று கேட்க,
அந்த இறுதி கேள்வியும் தான் பெரியவனுள் இலட்சோபலட்ச அதிர்வலைகளை கிளப்பி விட்டு.. அடங்கியது.
தன்னைத் தானே தேற்றிக் கொள்ளும் நோக்கில், “ச்சேச்சே.. அப்படியெல்லாம்.. ஏதும் இருக்காதுடா.. உன் அண்ணி ஃபோன் பண்ணி.. வீட்டுக்கு வான்னு கூப்பிட்டாள்.. என்ன விஷயம்னு தெரியலை.. அதான் நான் வீடு வரைக்கும் போய் வந்துட்றேன்..”என்றவன்,
தம்பியின் தோள் தொட்டு.. ஒரு முறை கண்களை மூடித் திறந்து, “மீட்டிங்க்கை.. என் சார்பா நீ அட்டென்ட் பண்ணு”என்றவன்,
தம்பியின் மறுபதிலுக்குக் கூட காத்திருக்காமல் விரையலானான்.
அறைக்கதவின் கைப்பிடியில் கை வைத்தவனை.. மேற்கொண்டு நகர விடாமல்..புறமுதுகுக்கு பின்னாலிருந்து கேட்டது சின்னவன் குரல்.
“அண்ணா நில்லு.”
அவன் நின்றானே ஒழிய.. தம்பியை திரும்பி தானும் பார்க்கவில்லை. அந்தளவுக்கு பதற்றமும், அவசரமும் ஓடிக் கொண்டிருந்தது அவனுள்.
அண்ணன் அமர்ந்திருந்த சேரில்.. மாட்டப்பட்டிருந்த அண்ணனின் கோர்ட்டை எடுத்தவனாக.. அண்ணனை நோக்கி விரைந்த சஞ்சய்,
“கோர்ட்டை மறந்து வைச்சிட்டுப் போற?”என்றவாறு
அண்ணன் முதுகில்.. அந்த கோர்ட்டை போர்த்தவும் செய்தான்.
தம்பியின் சின்ன அக்கறையான செயலில்.. பிற நாளாக இருந்தால்.. பெரிதாக இதழ்கள் வளைய புன்னகைத்திருப்பான் அவன்.
ஆனால் இன்று சந்தர்ப்பமும், சூழ்நிலையும்.. அவனை.. தம்பியின் சிறு பரிவை இரசிக்க விடாமல் செய்ய.. இறுக்கமான முகத்துடனேயே வெளியே வந்தவன்,
காரை நோக்கி அவசரமாக ஓடத்தான் செய்தான்.
ஏற்கனவே தற்கொலை எண்ணத்தில் திரியும் மனைவி! அதுவும் கர்ப்பிணியான மனைவி! ஓருயிர் அல்ல.. ஈருயிர்!!
காரை.. அதி உச்ச வேகத்தில் கண்மண் தெரியாமல் ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கோ..வீட்டை அடையும் ஒவ்வொரு நொடியும் “திக் திக்” நொடிகளாகவே கழிந்தது.
“ஒண்ணு நான் சாகணும்.. இல்லை இது சாகணும்”என்று தன் வயிற்றை உக்கிரமாகப் பார்த்துக் கொண்டு மொழிந்த.. ப்ளேக்பெர்ரியின் விரிந்த நயன முகமே.. மீண்டும் மீண்டும் வந்து அவனைக் கொன்றது.
ஒருவாறு.. கொழும்பின் ட்ராஃபிக்கில்.. வீட்டுக்கு வந்து சேர்ந்து.. காரை விட்டும் இறங்கி ஓடி வந்தவனுக்கு..
வீட்டு வாசற்படி ஏறும் போது.. பதற்றத்தில் தடுக்கவும் செய்தது.
கதவுநிலையைப் பற்றிக் கொண்டு..கீழே விழாமல் சமாளித்து நின்றவன் கண்கள்.. தன்னெதிரே.. நின்று.. தன்னையே ஏளனப் பார்வை பார்த்தவாறு.. கைகட்டி நின்றிருக்கும் மனைவியில் பதிந்தது.
அவன் இத்தனை தூரம் படபடப்பாக விரைந்து வந்ததால்.. சிந்திய வியர்வையும், பெருமூச்செறிவும்.. இன்னும் ஏன் தடுக்கி விழ நேரிட்டதும் கூட பெரிதாகத் தோன்றவேயில்லை அவனுக்கு.
மாறாக.. மனைவி அமைதியாக நின்றிருப்பதைக் காணவும் தான்.. இதயம் சீராகத் துடிப்பதை உணர்ந்தான் அவன்.
ஓரெட்டில் தாவி வந்து.. மனைவியின் கைச்சந்தினைப் பற்றிக் கொண்டவன்,
திக்கித் திக்கி, கண்கள் இலேசாக கலங்க, “உ.. உ.. உ. னக்கு ஒ.. ஒ… ஒஒ.. ஒண்ணும் ஆகலையே.. ஆர் யூ ஓல்ரைட்?”என்று கேட்க,
அவன் மனைவியோ அதைக்கேட்டு வித்தியாசமாக நகைக்க ஆரம்பித்தாள்.
அவள் நகைப்பின் அர்த்தம் தான் என்ன?
நீ வர முன் எல்லாமே.. கை மீறி போய் விட்டது.. உன் குழந்தையை என்னிஷ்டப்படி.. அழித்து விட்டேன் என்பதால் வந்த வெற்றி நகைப்பா?
அப்படியானால் அவன் குழந்தை?
அந்த மதியூகம் நிறைந்த வர்த்தகனுக்கு.. தன் மனையாளின் சிரிப்பின் அர்த்தம் புரியாமல்.. ஒரு நிமிஷம் தலையே சுற்றத்தான் செய்தது.
அவளோ வாயைப் பொத்தி..சிரிப்பை அடக்க முயன்று, தோற்றவளாக… குபீரென சிரித்தவளாக,
“ஹஹஹா.. எனக்கு ஒண்ணுமில்லை..”என்றவள் சிரிப்பை நிறுத்தி தலை சரித்து அவனைப் பார்த்து,
“சர்ப்ரைஸ்..!!”என்றவளாக இருந்த இடத்தை விட்டும் நகர.. அங்கே நின்றிருந்தார் அவனின் நானிம்மா.
நானிம்மாவைக் கண்டதும் தான்.. மனைவி தன்னோடு ஆடியிருக்கும் சதிராட்டம் புரிந்தது.
“மனைவிக்கு ஏதுமில்லை”என்று தெள்ளத் தெளிவாக புரியவும் தான்.. ஒரு கை இடுப்பில் வைத்து, மறுகையால் தலையை அழுந்தக் கோதியவண்ணம் பெருமூச்சு விட்டான் அவன்.
அதன் பிறகே நானிம்மா பற்றிய சிந்தனை மூளைக்கு வர.. அவரை நாடி முகம் மலர்ந்தவனாக வந்து, அவர் கையை அன்புடன் பற்றிக் கொண்டவன்,
“நீங்க எப்போ வந்தீங்க நானிம்மா..?”என்று விசாரிக்கவும் செய்தான்.
வெகுநாட்கள் கழித்து தான் வளர்த்த.. ஆறடி குழந்தையைக் கண்ட பூரிப்பில்.. நயனங்கள் கலங்கியது பெரியவருக்கு.
நரம்போடிய.. தோள் சுருங்கிப் போன.. மென்மையான கையால், விஷ்வாதினுவின் கன்னத்தைப் பற்றி வருடியவர்,
தாய்மை சிந்தும் குரலில், “இன்னைக்கு காலையில் தான்பா வந்தேன்.. உன்னையும், மருமகளையும் பார்க்கணும் போல இருந்தது.. அதனாலே நுவரெலியாவிலிருந்து கிளம்பி வந்துட்டேன்.. நான் உன்னை கூப்பிட தேவையில்லைன்னு தான்பா சொன்னேன். ஆனால் நீ உன் பொண்டாட்டி தான் சர்ப்ரைஸ் கொடுக்கலாமேன்னு சொன்னா…” என்றவருக்கு..
அவன் பெண்டாட்டி.. அவனை அலைபேசியில் இங்கே வருமாறு அழைத்த தினுசைத் தான் கேட்கவில்லை.
அப்படி கேட்டிருந்திருப்பின், அவனுக்கும், அவளுக்கும் இடையில் “ஏதோ” என்று அப்போதே புரிந்திருக்கும் அவருக்கு.
சூரியகாந்தியின் திருகுத்தாளங்களை அறிந்திராதவர் திரும்பி, அவளை நோக்கி,
மென்மையாக கண்டிக்கும் குரலில், “நீ ரொம்ப தான்மா.. என் விஷ்வாவை பதற வைச்சுட்ட.. என் பையனைப் பாரு.. உனக்கு என்னாச்சோ? ஏதாச்சோன்னு பதறிப் போய் வந்து நிற்கிறான்…”என்றுரைத்துக் கொண்டே..
மார்பு மேல் போர்த்தியிருந்த சேலைத் தலைப்பை எடுத்து.. அவனது நெற்றி வியர்வை மணிகளை.. மெல்ல துடைத்து விடவும் செய்தார்.
விஷ்வாதினுவோ.. நெற்றி வியர்வையைத் துடைப்பதற்காக.. சற்றே தன் கழுத்தைக் குனித்திருந்தாலும்,
அவனது பார்வை எல்லாம்.. சற்று தள்ளி கைகட்டி நின்று.. அவனையே ஏளனப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் அவளையே தான் பார்த்தது.
பார்வையாலேயே பேசிக் கொண்டனர் அந்த இளம் தம்பதிகள்.
“சிம்பிள் விஷயத்துக்காக.. உன்னை எப்படி பதற வைச்சேன் பார்த்தியா..?” என்ற எகத்தாளமான.. இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் வெற்றிப் பார்வை அவளிடமிருந்து.
“என் பதறலுக்கு பின்னாடி இருக்குற என் தூயகாதல் உனக்குப் புரியலையா?”- மனைவி செயலில் காயம்பட்டவனாக.. அவளையே இமைக்காமல் பார்த்த இரங்கல் பார்வை இவனிடமிருந்து.
அன்றிரவு…
நானிம்மாவும், சஞ்சயும் உணவருந்தி விட்டு அவரவர் அறைக்குப் போய் தஞ்சம் புகுந்த நேரம் அது.
மனைவி இப்போது சாப்பிட வரக்கூடும்.. இப்போது வரக்கூடும் என்று ஹாலில் அமர்ந்து..
டிவி பார்த்துக் கொண்டிருந்தவன்.. இரவின் முதல் சாமம் வரை காத்திருந்த போதும்..
கீழே டைனிங் ஹாலுக்கு உணவருந்தவே வராமல், அவன் பொறுமையை ரொம்பவே சோதித்தாள் சூரியகாந்தி.
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா?
பொறுமையின் கட்டுக்களை உடைத்தெறிந்தவன் இன்னும் சாப்பிட வராத மனைவியை, அறைக்குச் சென்று அழைத்து வர.. அறைக்கே விரைந்தான் விஷ்வாதினு.
மஞ்சத்தில் மல்லாக்காகப் படுத்தவளாக.. ஒரு கை வயிற்றிலும்,
மறு கையை நெற்றியிலும் என வைத்துக் கொண்டு..
ஸீலிங்கையே வெறித்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தவளின்.. கண்களுக்கும், காதுகளுக்கும் இடையில் வழிந்தோடிக் கொண்டிருந்தது ஓர் கண்ணீர் நதி.
தனியாக அறையில் அமர்ந்து.. அழுது கொண்டிருக்கும் மனைவியைக் காணக் காண நெஞ்சு பொறுக்கவில்லை அவனுக்கு.
மெல்ல சென்று அருகில் அவன் அமர, கணவனைக் கண்டதும், சட்டென இரு கண்களையும் துடைத்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள் அவனது ப்ளேக்பெர்ரி.

அவளோ அவனை உறுத்து விழிக்க, சூரியனோ அவள் பார்வையில் உள்ளம் துண்டானான்.
வருத்தம் அப்பட்டமாக இழையோடும் குரலில், “ப்ளேக்பெர்ரி… உனக்கு பசிக்கலையா என்ன? வா வந்து.. ஒரு வாய் சாப்பிடு”என்று வெறும் வயிற்றுடன் மனைவி உறங்கி விடக்கூடாதே என்ற நல்லெண்ணத்துக்காக சொன்னான் அவன்.
அவளோ கொண்டானின் மொழிகள் அனைத்தையும் கேட்டும், காது கேளாதவள் போல.. விட்டத்தை வெறித்துப் பார்த்த வண்ணமே பேசாமல் அமர்ந்திருக்க..
அவனுள் எட்டிப்பார்த்தான் பழைய அதிரடியான விஷ்வாதினு.
“உனக்கெல்லாம் சொல்லதிகாரம் சரிப்பட்டு வராது.. செயலதிகாரம்” என்று வழக்கமான தன் ட்ரேட்மார்க் டயலாக்கை அடித்தவன்,
அவள் அடித்தொடைகளூடு கையிட்டு ஒரு கை, முதுகோடு அணைத்து மறுகை என்று..
அதிரடியுடன் அவளை சட்டென்று கைகளில் ஏந்திக் கொள்ளவும் செய்தான்.
இவளோ கணவனின் ஏந்தலில் இருந்து வெளிவரத் துடித்து, அவனது வன்மையான மார்புக்கு ஓங்கி அடித்தவண்ணம்,
அழுதழுது ஞமஞமத்துப் போன குரலில், “என்னை வ்விடுடா..என்னை விடு”என்று போட்ட கத்தல் எல்லாம் அவன் செவியில் விழவேயில்லை.
டைனிங் ஹாலை நோக்கி நடந்து கொண்டே.. குனிந்து சூரியகாந்தி மலரின் வதனம் பார்த்தவன்,
“ரிலாக்ஸ் ப்ளேக்பெர்ரி.. இப்போ நீ வாயும், வயிறுமா இருக்க.. இந்த மாதிரி நேரத்தில்.. நீ சாப்பிடாமல் இருக்கக் கூடாது..” என்றவாறே அழைத்துச் சென்று,
அவளை டைனிங் டேபிள் சேர் மீது பூப்போல அமர வைத்து விட்டு…
அங்கே மூடியிருந்த பாத்திரங்களை.. மெல்ல திறந்து காட்டவும் செய்தான்.
பாத்திரத்தை திறந்ததும்.. அவளது நாசியை நிரடிச் சென்றது அவள் என்றென்றும் விரும்பும் “பொலஸ் கறியின்”வாசனை!!
அன்று அவள் இரசித்து ருசித்து.. உண்ணுவதை உணர்ந்து.. அவள் மணம் கவர்வதற்காக.. இன்றும் அது போல்.. அவளுக்காக சமைத்திருக்கிறானா?
இந்த மாதிரியெல்லாம் செய்தால், “தாராவின்”மரணத்துக்கு இவன் காரணமில்லை என்று ஆகிவிடுமா?
இல்லை இவளும் தான்.. அந்த மாபாதக தப்பை.. மறந்து.. அவள் கணவனை ஏற்றுக் கொள்வாளா?
ம்ஹூஹூம் ஒரு போதும் இல்லை. சூரியன் மேற்கில் உதிக்கலாம்.
ஆனால் சூரியகாந்தி மலர் அவளின் உள்ளத்தில் இருந்து.. சூரியனுக்கான மன்னிப்பு உதிக்கப்போவதில்லை!!
தன் சமையலை முன்னொருகால் ருசித்த மனைவியின்.. இரசனை பாவம்.. இன்றும் அவள் முகத்தில் தென்படுகிறதா? என்று ஆராய்ந்த வண்ணமே “உன் ஃபேவரிட் பொலஸ்!! உனக்காக நானே சமைச்சேன்.. சாப்பிட்டுப் பார்க்குறியா?”என்று கேட்டான் அவன்!!!
அவளோ அப்போதும் போல.. அப்போதும் ஏதும் பேசவில்லை.
தன்னெதிரே இருக்கும் அவன் சமைத்த உணவையும், அவனையும் உணர்ச்சி துடைத்த முகத்துடன் மாறி மாறிப் பார்த்தாள் அவள்.
அவள் இதழோரம் சிறு சுளிப்பொன்று பரவ, உணர்ச்சி மறுத்த குரலில்,
“எனக்குப் பிடிக்கலை..”என்றவளாய் அங்கிருந்து எழுந்து செல்ல முற்பட.. அதற்கு விடாமல்,
அவளது மெல்லிய மற்றும் மிருதுவான முன்னங்கையைப் பற்றிக் கொண்டான் அவன்.
அவள் வெறுப்புடன் திரும்பி.. தன் கையில் பதிந்திருந்த அவன் கையையும், அவன் முகத்தையும்.. சீற்றம் உமிழ, நாசித்துவாரம் இரண்டும் விடைத்து விடைத்து அடங்க பார்த்தாள்.
தன் தனங்கள் ஏறி இறங்க பெருமூச்சு விடவும் செய்தாள்.
அவனோ, புருவங்களிரண்டும் குழப்பத்தில் இடுங்க, “எதை பிடிக்கலை? என்னையா? இல்ல… நான் சமைச்ச சாப்பாட்டையா?”என்று கேட்டான்.
“இரண்டையும் தான்..”- ஒரு சிறிதும் தாமதியாமல், வெறுப்புடன் வந்து விழுந்தது அவள் வார்த்தைகள்.
அதைக்கேட்டு அவன் இதயத்தில் சுருக்கென்று முள் தைத்தாற் போன்று வலித்தது.
தன்னை பிடிக்கவில்லை என்றது.. அவனது காதல் மனைவி!
உள்ளே சோகம் மலையளவுக்கு கொட்டிக் கிடந்தாலும், அதை வலிநிறைந்த ஒற்றை புன்னகையில் மறைத்தவன்,
இளகிய குரலிலேயே, “சரி நான் சமைச்ச சாப்பாடு தான் பிடிக்கலை.. அப்போ வீட்டு சாப்பாடு இருக்கு.. அதையாவது சாப்பிடு..”என்றுரைக்க,
அவளுக்கோ.. அந்த சின்ன விஷயத்துக்கு மூக்குக்கு மேலே கோபம் போனது.
கோபம்! அது பொல்லாதது!
அதிலும் வெடிக்கும் கோபம்! வெடிக்கும் வெடிகுண்டை விடவும் ஆபத்தானது.
அங்கேயும் வெடித்தது ஓர் வெடிகுண்டு.
தன் கைகளால் டைனிங் டேபிளில் இருந்த உணவுகளை எல்லாம்.. புயல் வேகத்தில் தட்டிவிட்டுக் கொண்டே,
தன் தேன் நிற அஞ்சனங்களின் விழி வெண்படலத்தில் செவ்வரியோட .. உறுத்து விழித்துப் பார்த்தவள்,
அடித்தொண்டையிலிருந்து சீறிய குரலில், “எனக்கு தான் வேணாங்குறேன்ல???? ஒரு கப் விஷம் கொடுத்து.. என்னை ஒரேயடியாக க்கொன்னுரு..”என்றவள்,
அவனைத் தான் வார்த்தை விஷத்தினால் கொல்லத் துணிந்திருந்தாள்.
தனங்கள் ஏற இறங்க மூச்சு வாங்கியவள், அடுத்த கணம் அங்கு நில்லாமல் சென்று விட்டாள்.
அங்கே இலங்கையின் பிரபல வர்த்தகனான விஷ்வாதினுவோ, தன் பாதங்களுக்கு கீழ் சிதறிக் கிடந்த.. மனைவி வீணே.. வீணடித்த உணவினைக் கண்டு…
அவளின் செயல் கண்டு.. கர்ப்பவதியாக இருப்பவளை.. அடிக்க மனமற்று.. கை முஷ்டியை இறுக மடக்கிய வண்ணம் கோபத்தை அடக்கத் துடித்தவனாக.. இதழ்களை அழுந்த மூடி நின்றிருந்தான்.
அங்கே அவளோ டைனிங் ஹாலை விட்டு வெளியேறி.. மாடிப்படி ஏற நாடிய போது..
தத்தம் அறைக்கு வெளியே.. அரவம் கேட்டு.. துயில் களைந்தவர்களாக… நானிம்மாவும், சஞ்சயும் வந்து நின்று.. அவளது கூத்ததை பார்க்கக்கூடும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை அவள்.
அவர்களைக் கண்டு.. தன் ஆத்திரம் தலைக்கேறிய செயலில்.. வெட்கிப் போனவளின் முகம் வெளிறிப் போய்,
நடை தடைப்பட்டு நின்றது எல்லாம் சில நொடிகளுக்குத் தான்.
பிறகு சாதாரணம் போலவே முகத்தை மாற்றிக் கொண்டவள்.. நேர் கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையுமாக அறை நோக்கி விரைந்தான்.
அந் நொடியிலும் கூட சாப்பிடாமல் செல்லும் மனைவியின் மேல் கழிவிரக்கம் மிக.. வெட்கம், மானம் சூடு, சுரணை என எதுவுமே அற்று..
மனைவியை சமரசப்படுத்த அவன் செல்ல நாடிய போது..
கதவு அழைப்பு மணி அடிக்கப்பட்டது.
மனைவியின் பின்னால் போவதை விடுத்து, போய் கதவைத் திறந்த விஷ்வாதினுவின் முன்னால் நின்றிருந்தான் மேனேஜர் மூர்த்தி.
தன் கையிலிருந்த சின்ன பார்ஸலை, பவ்யமாக முதலாளியின் முன் நீட்டியவன்,
“ஸாரி பாஸ்.. வழியில கொஞ்சம் கார் டயர் பஞ்சர்.. அதான் லேட்டு.. இந்தாங்க சார்.. நீங்க கேட்ட பார்சல்” என்றவனிடமிருந்து பார்ஸல் வாங்கிக் கொண்டவன்,
உள்ளே என்ன தான் களேபரம் நடந்திருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
தன் மேனேஜரை நோக்கி, “ரொம்ப தேங்க்ஸ் மூர்த்தி… லேட் நைட்டாச்சுல? வாங்க.. சாப்பிட்டுக் கெளம்பலாம்”என்று சாப்பிட அழைத்தான் விஷ்வாதினு.
சாப்பிட அழைத்த முதலாளியின் கனிவன்பில்.. உள்ளம் நெகிழ்ந்து போன மேனேஜர்,
“இல்லை சார்.. வர்ற வழியில சாப்பிட்டேன்.. நீங்க உள்ளே போங்க சார்.. நாம காலையில் கம்பெனியில் மீட் பண்ணலாம்.. குட் நைட் சார்” என்றவாறு.. ஒரு சல்யூட் அடித்தவன்,
வாசல் படிகளை விட்டும் இறங்கி நடக்கவாரம்பித்தான்.
அவன் சென்றதும்.. நொடியும் தாமதியாமல்.. அந்த பார்ஸலின்.. கவரை அப்போதே பிரித்தவனின் கண் முன்னே இருந்ததுவோ… ஓர் பொக்கிஷம்!

(27)
அலுவலகத்தின் சிஇஓவின் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்து கொண்டே…
“விஷ்வா.. உன் மெயில்க்கு அனுப்பிய டாக்குமென்ட்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டியா?? இல்லையா?” என்ற வண்ணமே முற்றிலுமாக உள்ளே வந்தான் இளையவன் சஞ்சய்.
தமையனான இலங்கையின் சத்திரியன் விஷ்வாதினு Bபண்டாரநாயக்கவோ, புருவங்கள் இரண்டும் இடுங்க..பார்வையை வெறுமனே கணினித் திரையில் பதித்து..
ஒரு கையை கீ போர்டில் வைத்த வண்ணமும்,
மறுகையால் தாடையை தடவிய வண்ணமும் பொல்லாத யோசனையில் அமர்ந்திருந்தான்.
அக்கணம் கேட்ட தம்பியின் குரலில், ஏதோ கனவுலகத்திலிருந்து அப்போது தான் வெளியே வந்தாற் போன்று,
தன் கண்களை ஒரு தரம் சிமிட்டியவனாக, கணிணியிலிருந்து பார்வையை எடுத்து தம்பியைப் பார்த்தவனாக, “ம்.. என்ன கேட்ட?” என்று கேட்டான்.
அண்ணன் அமர்ந்திருந்த மேசையை நாடி நடந்து வந்து கொண்டிருந்த இளையவனுக்கோ.. அண்ணனின் கேள்வியில் ஒரு கணம் நடை சடன் பிரேக் போட்டது போல நின்றது.
பின் இடுப்பில் கை வைத்தவனாக, சலித்துப் போன குரலில், “போச்சுடா.. வர வர யூ ஆர் லேக்கிங் யோர் கன்ஸன்ட்ரேஷன்..” என்றவன் மீண்டுமொருமுறை தான் சொன்ன விஷயத்தை சொல்ல நாடி,
“மெயில்க்கு அனுப்பிய டாக்குமென்ட்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டியாஆஆ’ன்னு கேட்டேன்..” என்றான் சற்றே நீட்டி முழக்கி.
தம்பியின் ரிமைன்டரில் தான்.. அவன் செக் பண்ண வேண்டிய மெயில் பற்றிய நினைவே அவனுக்கு வந்தது.
இருப்பினும் அதை தம்பி முன்னிலையில் காட்டிக் கொள்ளாமல்.. உணர்ச்சிகளை மறைத்த.. இறுகிய முகத்துடன்,
“நோப். ஐ வில் செக் இட்..” என்றவனின் புருவங்கள் மத்தியில் மீண்டும் முடிச்சு விழ, அவன் பார்வை கணினியில் மீண்டும் தஞ்சமடைந்தது.
சஞ்சயோ.. அவ்வறையை விட்டும் நீங்காமல்.. அண்ணனையே இமைக்காமல் பார்த்திருந்தான்.
விஷ்வாதினு முகத்தில் தெரியும் அதிகபட்ச சோர்வு, சொற்ப நாட்களாக அவனில் தெரியும் யோசனை பாவம்.. எல்லாவற்றிற்கும் காரணம் யார்? என்று நன்றாகவே தெரியும் அவனுக்கு!!
அவன் தான் நேற்று.. அவனது “நேநா” அண்ணனுடன் நடந்து கொண்ட விதத்தை கண்கூடாகக் கண்டானே?
அவள் சாப்பிட வேண்டும் என்பதற்காக அண்ணன் கெஞ்சியதும்.. அவனது நேநா.. அண்ணன் கைப்பட சமைத்த சாப்பாட்டை தூக்கியெறிந்ததையும் தான் பார்த்தானே!!
என்ன பிரச்சினை என்று தெரியவுமில்லை;மீண்டும் புருஷன் – பொண்டாட்டி சண்டைக்குள் தலையிட்டு.. யார் பக்கமும் வாதாட நாடவுமில்லை அவன்.
எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தான் இளையவன்.
அதை எண்ணித் தான் அண்ணன் கவலையிலும், யோசனையிலும் மூழ்கிக் கிடக்கிறான் போலும் என்று எண்ணிக் கொண்ட சஞ்சய்,
தமையனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்!
எப்போதும் க்ளீன் ஷேவ் செய்து.. நீட்டாக இருக்கும் அண்ணனின் முகம்.. இன்று.. சரிவர சவரம் செய்யப்படாத வதனமாகக் காட்சியளிக்க..
சஞ்சயின் கண்கள் மிருதுவாகின;அதில் கழிவிரக்கம் சூழ்ந்து கொண்டது.
கீ போர்டில் தன் கை விரல்கள் நர்த்தனமாட எதையோ டைப் செய்து கொண்டிருந்த விஷ்வாவைப் பார்த்து, மென்மையாக, “அண்ணா… நீ இன்னைக்கு ஷேவ் பண்ணலையா என்ன?”என்று கேட்க,
அப்போது தான் அதைப்பற்றி ஞாபகம் வந்தாற் போன்று.. சட்டென கீ போர்டில் இருந்த கையை எடுத்து.. தன் கன்னத்தைத் தடவிப் பார்க்கலானான் விஷ்வாதினு.
ஓர் நாள் இரவில் முளைத்த சின்னஞ்சிறு புற்கள் போன்ற.. தாடி மயிர்கள்..அவன் உள்ளங்கையை மெல்லக் குத்தி..
தன் இருத்தலை உணர்த்தியது அவனுக்கு.
தன் தோற்றம் எப்படி போனால் என்ன? என்ற அலட்சியமான முகபாவம் அவன் முகத்தில் தோன்ற, அசிரத்தையாக, “மறந்துட்டேன்..”என்றவன்,
மீண்டும் கணனியிலேயே தன் கவனம் முழுவதையும் குவிக்கலானான்.
நேர்த்தியாக இருந்த அண்ணன்.. இன்று தன் தோற்றத்தைப் பற்றிக் கூட சிரத்தையெடுக்காமல் இருக்கிறான்!
ஆம். அதுவும் சரி. முன்பெல்லாம் ஷேவ் செய்து விட்டு வருபவனை..
விழியகல மையல் தகிக்கும் உஷ்ணப்பார்வை பார்க்கும் தன் சூரியகாந்தி மலரின்.. அந்த ஒற்றைப் பார்வைக்காக ஷேவ் செய்தான்.
அவள் இரசிப்பாளே என்பதற்காக ஷேவ் செய்தான்.
ஆனால்.. இன்று..அந்த ஐந்தரையடி சூரியகாந்தி மலர்.. இந்த சூரியனின் முகம் என்ன? நிழலையும் கூட கண்ணெடுத்துப் பார்ப்பதில்லையே? என்று கவலை தோன்ற…
அவன் முகம் இலேசாக கறுத்துத் தான் போனது.
ஏதோ தம்பியிடம் கேட்க வேண்டும் என்று தோன்ற, கணினித் திரையில் இருந்து பார்வையை எடுத்தவன்,
அறையை விட்டும் நகர்ந்து கொண்டிருந்த தம்பியை, “சஞ்சய்..”என்று அழைத்தான்.
“ம்? ..”என்றவனாக திரும்பினான் சஞ்சய்.
உள்ளே கேள்வி கேட்க எழும் தன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திய வண்ணம்,
வெளியே சாதாரணமான குரலில், “வந்து.. ஒரு சின்ன டவுட்!!..” என்று கேட்க,
சின்னவனின் விழிகள் இரண்டும் ஒருங்கே அகல விரிந்தது.
தன்னிடம் டவுட் கேட்க நாடுவது அவன் அண்ணனா?
தன்னைத் தானே நம்பாத குரலில், “நான் கேட்டது மெய் தானா? என்ன?? தி க்ரேட் விஷ்வாதினுவுக்கு டவுட்டா? அதுவும் நான் ஸோல்வ் பண்ற அளவுக்கு.. பிஸினஸ் டவுட்டா?”என்று கேட்க,
இத்தனை நேரம் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தவனின் முகத்தில்,
தம்பியின் விழிகள் அகல விரிந்த தினுசில்.. ஒரு மென்னகை அழகாய் படர்ந்தது.
அந்த நகைப்பினூடே இவனும் மென்மையாக, “நீ நினைக்குற மாதிரி இது பிஸினஸ் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை.. இது வேற!”என்றுரைக்க,
அதன் பின்னே.. தம்பியின் விழிகள் சாதாரண நிலையை அடைந்தது.
அண்ணன் புன்னகைத்ததில், தன் இதழ்களும் தானாக விரிய,
“அதானே நானும் பார்த்தேன்.. விஷ்வாவுக்கு பிஸினஸில் டவுட்டான்னு?” என்று கேட்டவன்,
டேபிள் மீது ஒரு கை ஊன்றி நின்று, இரு புருவங்களும் ஒரே நேரத்தில் ஏறி இறங்க,
“வாட்ஸ் த மேட்டர்?”என்று கேட்டான் சஞ்சய்.
கன்னம் தாங்கிய இடது கையை எடுத்து.. விரல்களை காற்றில் விரித்து, “இட்ஸ் நாட் அ பிக் மேட்டர்.. இப்போ ஒரு ஃபிங்கர் பிரின்ட் லாக் (lock) யூஸ் பண்ண ஒரு யூஸர் ஃபோனை.. அன்லாக் பண்ணனும்னா.. கண்டிப்பா அந்த யூஸருடைய ஃபிங்கர் பிரின்ட் தேவையா? அது இல்லாமல் அன்லாக் பண்ண முடியாதா?” என்று கேட்க,
இதை ஏன்? எதற்கு? என்னிடம் கேட்கிறான் என்று சிந்திக்கவேயில்லை இளையவன்.
மாறாக, அண்ணன் கேட்டால் அதன் பின் ஏதாவது விஷயம் இருக்கும் என்று மட்டும் தோன்ற,
அண்ணனுக்கு விளக்கம் கொடுக்க நாடி,
“ஆமாண்ணா.. டெஃபினிட்டா.. வி கான்ட் அன்லாக் அட் அன்லெஸ் யூஸர்’ஸ் ஃபிங்கர் பிரின்ட் இஸ் நாட் தேர்… இட் இஸ் வெரி இம்பார்டன்ட் டு அன்லாக்..”என்று சொல்ல,
கணிணியின் முன் அமர்ந்திருந்தவனின் இதழ்கள் குவிந்து, புருவங்கள் மேலுயர, “ஓஹ்… ஓகே..”என்றவனின் முகத்தில் மீண்டும் அந்த கொடிய யோசனை என்னும் தொற்று நோய் வந்து பரவத் தொடங்கியது.
அண்ணன் அதற்கு மேலும் பேசாமல் மௌனம் சாதிப்பதைக் கண்டு.. வேறு கேள்விகள் இல்லை போலும் என்று எண்ணிக் கொண்டவனாய்,
திரும்பிச் செல்ல நாடி திரும்பியவன், இடையில் யோசனை தடுக்க..
திரும்பி அண்ணனைப் பார்த்தான்.
சிந்தனையுடன் சுட்டுவிரலை இதழ்களில் வைத்து எடுத்தவனாக பெரியவனை நோக்கி,
“பட் அண்ணா… ஃபிங்கர் பிரின்ட் லாக் போட்றவங்க.. அது வர்க் ஆகாத தருணங்களில்.. யூஸ் பண்ணிக்க எதுக்கும்.. மாற்று வழியாக.. பாஸ்வேர்ட் வைச்சிருப்பாங்க.. சப்போஸ் ஃபிங்கர் பிரின்ட் இல்லைன்னாலும்.. அந்த பாஸ்வேர்ட் வைச்சு லாக்கை திறக்கலாம்.”என்று சொன்ன போது..
விழிகளில் மின்னல் தெறிக்கும் பளபளப்புடன், சிறு புன்னகையுடன், “ஓஹ்..!!” என்றான் தமையன் விஷ்வா.
அண்ணன் ஏதேதோ கேள்விகள் கேட்டதோடு நில்லாமல்.. அவன் முகம் வேறு.. அடிக்கடி தீவிர யோசனை பாவத்தைக் காட்ட,
தமையனை அழைத்தவன், “அண்ணா… ஆஃப்டர் லன்ச்.. சைனீஸ் கம்பெனியுடன் மீட்டிங்க் இருக்கு.. தெரியும்ல?..”என்று ஞாபகப்படுத்தும் நோக்கில் கேட்டான்.
பெரியவனின் தலையோ.. இயந்திரம் போல, ‘ஆமாம்’ என்பது போல ஆட,
இளையவனோ தொடர்ந்து,
“இல்லை.. இன்னைக்கு நீ… நீயா இல்லை.. ஏதோ மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருக்க..மெயிலை செக் பண்ணனும்னு கூட ஞாபகம் இல்லை.. அதான் இது ஞாபகம் இருக்கான்னு கேட்டேன்?” என்று கூற,
அப்போதும் சிறு புன்னகையுடன், “ஞாபகம் இருக்கு..”என்று ஒற்றை வார்த்தை மட்டும் பகர்ந்தவன், மீண்டும் கணினிக்குள் மூழ்க,
‘எல்லாம் நன்றாக நடந்தால் சரி தான்’என்ற தோரணையில் தோளை குலுக்கிக் கொண்டு வெளியேறினான் இளையவன்.
சஞ்சய் சென்றதும்.. அவனது சிந்தனை எல்லாம் அவனிடம் நேற்று வந்தடைந்த பொக்கிஷத்திலேயே குவிந்திருந்து.
ஆம். சூரியகாந்தியின் மாமா வீட்டிலிருந்து.. மேனேஜர் மூர்த்தி எடுத்து வந்த பொக்கிஷம் தான் அது!
வீட்டை விட்டு ஓடிப்போன தாரா.. வீட்டில் வைத்து விட்டு சென்ற அவளது செல்ஃபோன். அதுவும் ஃபிங்கர் பிரின்ட் லாக் கொண்ட அவளது செல்ஃபோன்.
அந்த செல்லில்.. இறந்த தாராவின் முகம் தெரியாத காதலனின் புகைப்படங்கள் ஏதும் இருக்கக்கூடும்!!
அதை வைத்து.. தனக்கும், தாராவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று இலகுவாக சூரியகாந்திக்கு நிரூபித்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டிருந்தவனுக்கோ..
அது ஃபிங்கர் பிரின்ட் லாக்கினைக் கொண்டிருக்கவும்.. அதைப்பற்றியே சிந்தனை ஓடிக் கொண்டிருக்கவே..
அவனால் ஒழுங்காக வேலையில் கூட கவனம் செலுத்த முடியவில்லை.
அதனால் தம்பியின் அதைப்பற்றி கேட்கவும் செய்தான்.
நேற்று கூட.. தன்னை நம்பாமல்,கண்களில் அனல் தெறிக்க, வெறுப்பு உமிழ தன்னைப் பார்த்து,
“ விஷம் கொடுத்து ஒரேயடியாக கொன்னுரு”என்று செப்பிய மனைவியின் சொற்களே.. திரும்பத் திரும்ப அவன் சிந்தைக்குள் வந்து போய்க் கொண்டேயிருக்கவே,
ஒரு வேலையும் செய்ய முடியாமல்.. கணினியை செயலிழக்கச் செய்தவன்,
அணைக்கப்பட்ட கணினியின்.. கறுப்புக் கண்ணாடித் திரையில்.. வலமும், இடமும் திரும்பி தன் தாடி படர்ந்த முகத்தைப் பார்த்தவனுக்கு.. ‘இதே முகத்துடனான.. சீனர்கள் முன்னிலையில் நிற்பது?’ என்று தோன்றியிருக்க வேண்டும்.
மெல்ல எழுந்து.. தன் அறையின் அட்டாச்ட் பாத்ரூமுக்குள் நுழைந்தான் விஷ்வாதினு ஷேவ் செய்வதற்காக.
அவனது அலுவலகத்தில்.. சொகுசு நாற்காலிகளையும், ஒரு பக்கத்தில் பத்து பேர் அமரத்தக்கவாறு நீளம் கொண்ட நீண்ட மேசையும்,
அந்த மேசையில் ஒவ்வொருத்தரும் உரையாட ஒலிவாங்கியும், கூடவே வாட்டர் பாட்டிலும் வைக்கப்பட்டு,
ஸ்லைட் ஷோஸ் ஒளிபரப்பாக்க ப்ராஜக்ட்டரும், ஸ்க்ரீனும் கொண்ட..
அதி நவீனமான கான்ஃபரன்ஸ் ஹால்.
அந்த அறையில் ஒரு முனையில் அமர்ந்திருந்த.. சீன வர்த்தகர்களாக இருப்பினும் சரி..
அடுத்த முனையில் அமர்ந்திருந்த இலங்கை வர்த்தகர்களாக இருந்தாலும் சரி.. அனைவரும் “பக்கா ஜென்டில்மேன்கள்” என்று கணிப்பிடும் படியாக,
கோர்ட் சூட்டில் இருக்க.. அதுவும் அந்த சூழ்நிலைக்கு இன்னும் சௌந்தர்யத்தையே கொடுத்தது.
அங்கே நீண்ட மேசையின் அகல முனையில் அந்த மீட்டிங்கினை அரேஞ் செய்திருக்கும் பிரதான சீட்டில், அமர்ந்திருந்த விஷ்வாதினு..
தானாகவே எழுந்து.. சீனர்கள் பாணியில் சற்றே குனிந்து பளைட்டாக வணக்கம் வைத்து வெல்கம் செய்தவன்,
தன் முன்னாலிருந்த ஸ்க்ரீனில் இருக்கும் விஷயங்களை.. நுனி நாக்கில் ஆங்கிலம் தாண்டவமாட.. விளக்கிக் கொண்டிருந்தைப் பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

அதுவொரு முக்கியமான மீட்டிங்க்.
இலங்கை- சீன கூட்டுறவின் பேரில்.. இலங்கைக்குள் நுழைந்திருக்கும் சீன பல்தேசிய கட்டுமான கம்பெனியும்,
விஷ்வாதினுவுக்குச் சொந்தமான “எக்ஸஸ் இன்ஜினியரிங்”கம்பெனியும் இணைந்து..
இலங்கையில் நிர்மாணிக்கப் போகும்..
“கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புணர்நிர்மானத்தின் புது வடிவம்” பற்றிய ப்ளேனிங்கே.. அன்றைய மீட்டிங்கின் கருப்பொருளாக இருந்தது.
விஷ்வாதினு விளக்கம் கொடுக்கக் கொடுக்க.. திரையில்.. வைத்தியசாலை கட்டிடங்களின் முப்பரிமாண த்ரீ டி வடிவ அனிமேஷன் கட்டிடம் தோன்றிக் கொண்டேயிருந்தது.
ஆங்கிலத்தில் சரளமாக தங்கு தடையின்றி பேசிக் கொண்டிருந்தவனுக்கோ..
உள்ளே மனைவியின் ஞாபகமும், அவளது தள்ளி வைப்பும், தனிமையும் அந்த நேரத்தில் மின்னல் போல வந்து அவனைத் தாக்க,
இலங்கையின் சத்திரியனுக்கு இலேசாகத் திக்கவாரம்பித்தது.
“அக்கோர்டிங்க்(according) டு தி.. ப்ளேனிங்.. அவுட் பே.. பே.. ப்.. பேஷ்.. ஷன்.. டட்…”என்று சொல்ல வந்தவனின்.. இதழ்களும், முகமும் திக்கலின் விளைவால்.. ஒரு மாதிரி கோண..
அங்கிருந்தவர்களின் முகங்கள் நிமிடத்துக்கும் குறைவாக சுருங்கத் தான் செய்தன.
அண்ணன் திக்குவதை முதன் முறையாக நேரில் கண்ட சஞ்சயும் புருவங்கள் இடுங்க நின்று அடுத்த விநாடி,
அண்ணன் முகத்தைப் பார்த்த வண்ணமே, முணுமுணுக்கும் தொனியில், “கமான் விஷ்வா.. கமான்.. யூ கேன் டூ இட்”என்று விடாமல் கூறிக் கொண்டேயிருந்தான்.
பேச்சை நிறுத்தி.. தன் இடத்தை நாடி வந்து.. மூடி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கிளாஸினை எடுத்து விஷ்வா பருகியதிலும்..
ஓர் ஸ்மார்ட்னஸ் இருக்கத் தான் செய்தது.
ஒரு பெருமூச்சு விட்டு.. தன்னைத் தானே சமரசப்படுத்திய வண்ணமே.. அங்குள்ளவர்களைப் பார்த்து ஃபாரமலாக புன்னகைத்தவன்,
“ஸாரி ஃபார் தி இன்டரப்ஷன்.. லெட்ஸ் கோ டு தி பாய்ன்ட்.”என்றவன்,
அதிலிருந்த அனிமேஷன் ப்ளேனிங்கில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி,
“அக்கோர்டிங்க் டு தி ப்ளேனிங்.. அவுட் பேஷன்ட் டிபார்ட்மென்ட் வில் கம் ஹியர்.. என்ட் டாக்டர்ஸ் பார்க்கிங் ஏரியா வில் கோ பேக் டு திஸ் ப்ளேஸ்..மோர்ஓவர் திஸ் எம்ப்ம்டி போர்ஷன் இஸ் ஃபோர் ப்ளான்டிங்க் ட்ரீஸ்.. டெஃபினிட்ளி.. இட் வில் பி அ ஹை-டெக்…”என்று அவன் பேசிக் கொண்டிருந்த போது..
அந்த நேரம் பார்த்து , அந்த கான்ஃபரன்ஸ் ஹாலின் அறைக் கதவு சடாரென்று திறக்கப்பட, அவன் பேச்சுத் தடைப்பட்டு நிற்க,
அவன் பார்வை மட்டுமல்ல. அங்கு அமர்ந்திருந்த அனைவரின் பார்வையும் .. திறக்கப்பட்ட கதவிலேயே பதிந்திருந்தது.

அங்கே நின்றிருந்தது வேறு யாராகத் தான் இருக்கக் கூடும்?
அவனது மனைவி சூரியகாந்தியே தான்.
சற்றே களைத்துப் போன தோற்றத்துடன், சேலையின் ஜாக்கெட்டில் ஆங்காங்கே வியர்வைத் துளிகள் திட்டுத் திட்டாக படிந்திருக்க..
கூந்தல் எல்லாம் கலைந்து போனவளாக, அங்கே வந்திருந்தவளின் கண்களோ..
தன் கண் பார்வையின் முன்னாடி நின்றிருந்த கணவனையே விழிகள் சிவக்க வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
பல்லாயிரம் கோடி ப்ராஜக்ட்டிற்கான கலந்துரையாடல்.. மிகவும் சீரியஸாகப் போய்க் கொண்டிருக்கும் போது.. அநாகரிமாக நுழைந்த மனைவியின் மேல் அவனுக்கு சீற்றம் தானே துளிர்க்க வேண்டும்?
அது தான் இல்லை!!
அவளது சூரியனின் கண்களில் தோன்றியதோ.. களைத்துப் போய் வந்திருக்கும் மனைவியின் மதிமுகத்தைக் கண்டு பரிதாபம்!! கழிவிரக்கம்!!
அவளது சோர்ந்த முகம்.. அந்த வலிய ஆண்மகனுக்குள் பொல்லாத வீண் எண்ணங்களைத் தூண்டி விட..
அவன் கண்கள் அவனையும் மீறி.. அவள் வயிற்றில் தான் பதிந்தது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலவீனம். இவனுக்கோ அவன் மனைவி.. அவன் பலவீனம்!
அவளைக் கண்டதும் சொற்கள் மறந்தான் அவன்;அந்த மீட்டிங்கின் அவசியம் மறந்தான் அவன்; சகலமும் மறந்தான் அவன்.
அவன் நினைவில் நின்றதெல்லாம் அவள்! அவள்! அவள்!!
அவசரமாக அவளை நாடி வந்து.. அவளது மென்மையான முன்னங்கையை அவன் பற்ற முனைய,
அதற்கு விடாமல், சட்டென தன் கையை அவள் உள்ளிழுத்துக் கொள்ள, அவன் பார்வை அவள் கைகளில் நின்றும் முகத்துக்கு மேலேறியது.
அவனை வெறுப்பு கமழப் பார்த்துக் கொண்டே, சுரத்தையே அற்ற குரலில், “நான் உன் கூட கொஞ்சம் பேசணும்..” என்றாள் அவள்.
அவனோ அனைவர் பார்வையும் தம்மில் இருப்பதைக் கண்ணுற்றவன்,
எதுவானாலும் மீட்டிங் முடிந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று தோன்ற,
மனைவியின் பிடிவாதம் அறிந்து பணிந்த மற்றும் தண்மையான குரலிலேயே,
அவளது ஷோல்டரை மெல்லத் தொட்டு, “ஓகே கண்டிப்பாம்மா.. இந்த மீட்டிங் முடிஞ்சதும் எவ்வளவு வேணாலும் நீ பேசலாம்.. அதுவரை நீ போய்.. என் ரூமில் வெயிட் பண்ணு ..”என்றவன்,
அங்கே தன் சேருக்கு பின்னாடி அடி வயிற்றில் கை கோர்த்து அமைதியாக நின்றிருந்த மேனேஜர் மூர்த்தியைக் கண்களாலேயே அருகே வருமாறு பணித்தான் அவன்.
மேனேஜர் மூர்த்தி விரைந்து வந்ததும், அவனிடம், “மூர்த்தி…மேடத்தை என் ரூம்க்கு அழைச்சிட்டுப் போங்க.. நான் மீட்டிங் முடிஞ்சதும் வந்துடறேன்..”என்றவன்,
மீண்டும் திரும்பி.. ஸ்க்ரீனை நாடிப் போன நேரம் அது.
முதலாளியைப் போலவே.. சூரியகாந்திக்கும் பணிந்த மூர்த்தி, பவ்யமாக வழியைக் காட்டி, “வாங்க மேடம்”என்றழைக்க,
மூர்த்தியுடன் செல்லாமல் வீண் பிடிவாதம் பிடித்தவள், தன்னை விட்டு நகரும் கணவனின் புறமுதுகையே வெறித்துப் பார்த்த வண்ணமே,
இரைந்த தொனியில்,பற்களைக் கடித்துக் கொண்டே, “நான் உன் கூட.. “இப்ப்போ” பேசணும்னு சொன்னேன்!!..”என்றுரைக்க,
அந்த தொனியில்.. நேநாவின் புது அவதாரத்தில் ஆடிப்போய் நின்றிருந்தான் சஞ்சய்!!
அநாகரிமாக.. அதிலும் வெளிநாட்டவர்கள் முன்னிலையில் அண்ணனை அவமதித்துப் பேசும்.. நேநாவின் செய்கையில்..
எரிச்சலும், கோபமும் மீதூற, நேநா மீதிருந்த நம்பிக்கை, மரியாதை எல்லாம் சில்லு சில்லாக தகர்ந்து போக..
தானும் வாய் திறந்தால்.. இன்னும் கொஞ்சம் அவமானம் என்பதால்..
தன் கையாலாகாத்தனத்தில்.. டென்ஷனில்.. தாடையைத் தடவிக் கொண்டே அமர்ந்திருந்தான் சஞ்சய்.
அந்தக் குரலில் சட்டெனத் திரும்பி மனைவி முகம் பார்த்த விஷ்வாதினுவின் முகம் அப்போதும் கோபத்திற்காட்படாமலேயே இருந்தது.
ஆனால் என்ன? அடுத்து மனைவி அவர்கள் முன்னிலையில் என்ன செய்து வைக்கக் கூடுமோ என்ற டென்ஷனில்,
அந்த ஏசி அறையிலும் வியர்த்துக் கொட்ட, முன்பு போல் அவன் நாக்கில் வந்து குடிகொண்டது சனி.
பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்ட வண்ணமே, “க்.. கொக்.. கொக்.. க்ஞ்சம்.. வெவ்.. வெயிட் பப்பண்.. ணுமா.. ந்நா.. நான் இப்.. இபோ.. வந்துடுவேன்”என்று திக்கித் திணறி..
சிரமப்பட்டேனும் மனைவியைத் தேற்றும் கணவனின் அன்பு அவள் இதயத்தை ஒரு துளியும் அசைக்கவேயில்லையா?
அவன் திக்கலை.. அவனது திணறலை..அவனது பலவீனத்தை,
அவனுக்கு எதிரான அஸ்த்திரமாக மாற்றினாள் அம் மங்கை.
தொண்டையில் அடைத்ததை விழுங்கிக் கொண்டு, அவனைப் பார்த்தவள், அவனைப் போலவே பேசி…
அவனைக்குத்திக் காட்டி.. அவமானப்படுத்த நாடி,
“இ.. இஇஇஇ. ந்த லட்சணத்தில் பேசி.. எஎஎஎன்னத்தை கிகிக் கிழிக்கப் போற?”என்று கேட்க,
அதைக் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சய்க்கு.. அண்ணனை அவமானப்படுத்தும் அண்ணி மேல் இன்ஸ்டன்ட்டாய் கோபம் ஊற்றெடுக்க,
அதை மறைக்க டேபிளுக்கடியில் கை முஷ்டி மடக்கி நின்றான்.
அமைதியாக நிற்கும் அண்ணனைப் பார்க்கையில்.. இன்னும் கொஞ்சம் ஆத்திரம் மேலிடவும் செய்தது அவனுக்கு.
அன்றொரு நாள் இரவில் மனைவியிடம் தான் கூறிய , தன் தனிமையையும், அது தந்த கொடூர ஸ்டட்டரிங்க் பிரச்சினையும்.. இன்று தனக்கெதிரான அஸ்த்திரமாக மாறியதை ஜீரணிக்க மாட்டாமல்,
நின்றிருந்தான் அவன்.
கல்லென நிற்பவனைக் கண்ட சூரியகாந்தி, ஆத்திரமும், கோபமும் கண்ணீராய் கண்களை விட்டும் இறங்க, “அப்படின்னா.. உனக்கு.. என்னை விட உன் பிஸினஸ் தான் முக்கியமா?”என்று கேட்டவளின் கன்னத்தில் வழிந்த கண்ணீர்த் துளிகள். அவனை ஏதோ செய்தது.
அவள் அவ்வாறே நின்றிருக்க, நேரே தன் இருப்பிடத்தை நாடி சென்றவன்,
அவைக்கு சிரம்தாழ்த்திய வணக்கமொன்று வைத்து விட்டு.. சீன வர்த்தகப் பிரமுகர்களை நோக்கி மென்டரின் மொழியில் உரையாடவாரம்பித்தான்.
இத்தனை நேரம் ஆங்கிலத்தில் தன் மொழிப்புலமையைக் காட்டிக் கொண்டிருந்தவன்,
திடீரென்று தங்கள் தாய்மொழியில் உரையாடுவது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்த அதே வேளை பிடித்திருந்தது.
அவன் சைனீஸ் மொழியில் அவர்களிடம் கூறியது எல்லாம் இவை தான்.
“இங்கே சுமூகமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த இந்த கலந்துரையாடல்.. என் மனைவியால் தடைப்பட்டு நின்றதை எண்ணி வருந்துகிறேன்.
உங்கள் அனைவரின் நேரமும் வீணானததற்கு மன்னிப்பும் கேட்டுக்குறேன்..
கர்ப்பிணியாக இருக்கும் என் மனைவி.. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் வந்து என்னை அழைக்கிறாங்கன்னா..
கண்டிப்பா அது முக்கியமான விஷயமாகத் தான் இருக்கும்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நம்பறேன்..
நான்.. எக்ஸஸ் இன்ஜினியரிங் சிஇஓ தான்.. இருந்தாலும்.. நான்.. முதலில் என் மனைவிக்கு ஒரு நல்ல ஹஸ்பண்ட்.. என்ட் என் குழந்தைக்கு நல்ல அப்பா.
சீனர்கள் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்னு கேள்விபட்டிருக்கேன்.. அதனால குடும்பஸ்தனா என் நிலைமையைப் புரிஞ்சிப்பீங்கன்னு நம்புறேன்..
இந்த தடங்கலால்.. எங்க ஒப்பந்தத்துக்கு எந்த பாதிப்பும் வராது அது உறுதி.. என் சார்பா.. என் தம்பி மிஸ்டர். சஞ்சய் பண்டாரநாயக்க இதை உங்களுக்கு எக்ஸ்ப்ளேன் பண்ணுவார்”என்றான் அவன்.
“ஆங்கிலத்தில் பேசிப்பார் அது அவன் மூளையை சென்றடையும். இதுவே அவன் தாய்மொழியில் பேசிப்பார் அது அவன் இதயத்தை சென்றடையும்”என்று அப்துல் கலாம் அவர்கள் கூறியதை..
யுக்தியாகக் கொண்டு.. சீன வர்த்தகளின் தாய்மொழியில் பேசியது அவர்கள் இதயத்தை சென்றடையவே செய்தது.
அவர்கள் அனைவருக்கும் பணத்தை விடவும் உறவினை..மேலாக மதிக்கும் விஷ்வாதினு மேல் தனி மரியாதை ஊற்றெடுக்க,
தங்களுக்குள்ளாகவே குழுமி குழுமி ஏதேதோ கிசு கிசுவென்று பேசிக் கொண்டார்கள்.
பின் அதில் முதன்மையாக அமர்ந்திருந்த ஒரு சீன வர்த்தகர் புன்னகையுடன், “வி கேன் அன்டர்ஸ்டேன்ட் யோர் சிட்சுவேஷன்.. யோர் ப்ரெக்னன்ட் வைஃப் நீட்ஸ் யூ மோர் தேன் அஸ்..”என்று கூற..
அதில் இடை வரை குனிந்து நன்றி கூறியவனாக, சஞ்சயை கண்களால் மீட்டிங்க்கை தொடருமாறு பணித்தவன்,
மனைவியை நாடி வந்து.. அவளை அழைத்துக் கொண்டு தன் அறை நோக்கி விரைந்தான்.
அறைக்குள் வந்ததும் தான் மனைவி கையை விட்டவன்,
அப்போது தான் சீலிங்கை அண்ணாந்து பார்த்த வண்ணம், இடுப்பில் கை வைத்துக் கொண்டே நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.
மனைவி தன்னைத் திக்குவாயன் என்று திட்டாமல் திட்டியதை எல்லாம் கொஞ்சம் கூட கணக்கில் எடுக்காதவன்,
தன் மனைவியிடம் இன்முகமாக வந்தான்.
அவள் மீட்டிங்கில் அநாகரிமாக நடந்து கொண்டதைப் பற்றி ஒருவார்த்தை கேட்கவில்லை அவன்.
தன் மனைவி உஷ்ணமாக தகித்து, அனைவர் முன்னிலையிலும் தன்னை இழிவுபடுத்தி,
சொற்களா? முட்களா? என்று ஐயுறத்தக்களவுக்கு வார்த்தைகளால் கொன்றாலும் கூட ஒருவனால் பொறுமையாக இருக்க முடியுமா என்ன?
இதோ இவள் எதிரில் நிற்பவனால் முடிகிறதே?
தன் ப்ளேக்பெர்ரி மேலுள்ள.. ஆழி அளவு காதலினால் அவனால் முடிகிறேதே!
அவளை நாடி வந்தவனுக்கு, மனைவி நின்றிருப்பது கூட வலித்தது.
அவளது தோளில் ஆதரவாக கையிட்டு அணைத்துக் கொண்டே நடந்தவன், “முதல்ல உட்காரு ப்ளேக்பெர்ரி.. ரொம்ப களைச்சுப்போய் தெரியுற?..” என்றவனாக நாற்காலியை நோக்கி நடக்க,
அவனின் தீண்டல் கூட பிடிக்காமல்.. அவனது கையணைப்பினை உதறிக் கொண்டு வெளியே வந்தாள் அவள்.
வழமையாக நடக்கும் அவளது உதறலில் என்றும் போல் இன்றும் வலித்தது அவனுக்கு.
நிமிடத்தில் தன்னைத் தானே தேற்றிக் கொண்டவனாக அவன் நின்றிருக்க,
அவளே போய் அங்கிருந்த சேரில் அமர்ந்து கொள்ள,
அவளது அதிகாரமான உரிமையில் அவன் முகம் மலர்ந்ததேயன்றி வாடவில்லை.
நடந்து வந்து மேசை மீது ஒர் தொடையை மட்டும் அழுத்தி அமர்ந்து, ரிசீவரைத் தூக்கி காதில் வைத்த வண்ணமே,
மனைவியைப் பார்த்தவன், “ முதன் முறையாக ஆஃபிஸ் வந்திருக்க.. என்ன சாப்பிடுற?” என்று கேட்க,
ஏற்கனவே அவன் இழைத்த துரோகத்தில் இன்னும் கோபத்தில் சுற்றிக் கொண்டிருப்பவளோ, நேற்றிரவு சொன்ன அதே டயலாக்கையே திரும்பிப் படித்தாள்.
“அப்போ ஒரு கப் விஷம் சொல்லு.. குடிச்சிட்டு ஒரேயடியா செத்துப்போயிட்றேன்..”என்று சொன்னது என்னமோ அவள்!!
அதைக்கேட்டு மரணவலி அடைந்ததோ இவன்!!
அவளது தேன் நிற அஞ்சனங்களைப் பார்த்த வண்ணமே அவன் ரொம்பவும் அடிபட்டுப் போன குரலில்,
“என்னை ஒவ்வொரு தடவையும் வார்த்தையாலேயே கொல்லணும்னு முடிவு பண்ணிட்டியா?”என்று கேட்டான்.
அவளுக்கு… அவனது துன்பம் துய்க்கும் முகம் ஏதேதோ செய்தது.
செய்வதை எல்லாம் செய்து விட்டு அப்பாவி போல முகம் வைத்து.. அவளை எந்நேரமும் குற்றவுணர்வுள்ளாக்கும் அவனை எரிச்சலுடன் பார்த்தவன்,
“தாராவைக் கொன்னவனை.. என்னாலே வார்த்தையால் மட்டுமே கொல்ல முடியுதுன்றப்போ.. எனக்கே என்னை நினைச்சு அவமானமாக இருக்கு..”என்று கூற…
விஷ்வாதினு எழுந்த ஆத்திரத்தை அடக்க, கை முஷ்டி மடக்கியவனாக, மேசையை விட்டும் எழுந்து தரையில் ஷூ பாதங்களை அழுந்த ஊன்றி நின்றான்.
அவனா இது? அவனது ப்ளேக்பெர்ரி வார்த்தை என்னும் சாட்டையால் சுழற்றி சுழற்றி அடிக்கிறாள். அதைத் தாங்கிக் கொண்டு அமைதியாக நிற்பது விஷ்வாதினுவே தானா?
அவளுக்காக பல்லாயிரம் கோடி லாபம் தருர் ப்ராஜக்ட்டினை விட்டு வந்திருப்பவன்.. பழைய விஷ்வாதினு அல்ல.
இவன் புதியவன்.
அவளுயிர் காக்க… தன்னுயிரையும் இன்னுயிராக உவந்தளிப்பவன்.
மீண்டும் புன்னகைத்த முகமாகவே, அவளைப் பார்த்து, “இங்கே பாரு.. நம்ம ஆஃபிஸூக்கு முதல் தடவை வந்திருக்க.. வா.. வந்து சி. இ. ஓ. சீட்டில் உட்காரு..”என்றவனாய் அவளை எழுப்ப முனைய,
அதற்கு விடாமல், கறாராக, “ஒண்ணும் தேவையில்லை” என்றவளாக,
தான் கையோடு கொண்டு வந்த சில பத்திரங்களை மேசை மீது போட்டு,
“இதில் கையெழுத்துப் போடு..” என்று அவள் உரைக்க, அதைக்கண்டு சற்றே பதறிப் போனான் அவன்.
“என்ன இது? நான் தான் உன்னை விட்டு விலகுறதா எனக்கு ஐடியாவே இல்லைன்னு தெள்ளத் தெளிவாக சொல்லிட்டேனே!! ”- புருவங்கள் சுருக்கி.. அந்த பத்திரத்தை கண்களால் காட்டி வினவினான் அவன்.
அவன் மனைவி.. அவனை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, துரோகி என பச்சைக்குத்தி.. சதாவும் அவனிடம் விவாகரத்து கேட்கும் மனைவி..
அப்படியாப்பட்ட மனைவி பத்திரங்கள் நீட்டி, “கையெழுத்துப் போடு” என்று உரைப்பின்.. அவன் மனதுக்குள் என்ன தான் தோன்றும்?
அவன் அச்சத்தை.. அவனது முகத்தின் தவிப்பை உணர்ந்தவள்,
இறுகிய முகத்துடனேயே, “பயப்படாதே.. நீ நினைக்குறமாதிரி.. இது டிவோர்ஸ் பேப்பர்ஸ் கிடையாது..”என்றுரைக்க,
அதை கைகளில் ஒரு நடுக்கத்துடன் எடுத்தவன், அதிலிருந்த பிரின்டட் எழுத்துக்களில் தன் பார்வையை ஓடவிட்டான்.
அதிலிருந்ததோ, “அவனுக்கு சொந்தமான சொத்துக்களின் பாதியை.. இவளது பெயருக்கு மாற்றியமைக்க.. இவன் முழுச்சம்மதம் தெரிவிப்பதாக எழுதியிருக்கும் பத்திரம்”.
அவன் பார்வையும் இவள் பார்வையும் ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொண்டன.
அதைக் கைகளில் பிரித்து வைத்துக் கொண்டே மனைவியைப் பார்த்தவன்,
ஒற்றைப் புருவம் மட்டும் உயர்த்தி, “இதில் நான் கையெழுத்துப் போட்டே ஆகணுமா?”என்று கேட்டான்.
அவளுக்கு பேசும் போது.. கண்கள் குளமாகி.. கீழிமை என்னும் பாத்திரம் பொங்கி வழிகிறது.
அதனுடனேயே நா தழுதழுக்க, “ஆ.. ஆ.. ஆமா.. இதை வைச்சுத் தானே நீ ஆடுற?இ.. இ.. இந்த சொத்தையும், பணத்தையும் வைச்சுத் தானே.. என் மாமா பிஸினஸ்ஸை லாஸாக்கி.. என்னை கல்யாணம் பண்ண? இ.. இப்போ.. இப்போ.. இதே பணத்தை வைச்சுத் தானே.. தாராவைக் கொன்னது நானில்லைன்னு நீ.. நிரூபிக்கவும் செய்ற?..அதனாலே தான் இது.. கையெழுத்துப் போடு..”என்றுரைக்க,
அவனோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் தன் ரதியையே பார்த்திருந்தான்.
அவள்.. அவனது நேசத்தை உணர்ந்தது அவ்வளவு தானா? என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும் அவனுள் பிறந்தது.
அந்த பத்திரத்தை.. மேசை மீதே வைத்தவன், அறையிலிருந்த அலமாரியை நாடிப்போய்..
அதைத்திறந்து அதிலிருந்து ஒரு நீல நிற ஃபைலை எடுத்து வந்து.. அவள் கைகளில் திணித்தான்.
அவள் என்னவென்று புரியாமல்.. அவனை அண்ணாந்து பார்க்க.. இவனோ தைரியமான குரலில், “இதைப் படிச்சுப் பாரு.. உனக்கே புரியும்!!”என்றுரைக்க,
அதிலிருந்த தாள்களை பதற்றத்துடனேயே திருப்பினாள் சூரியகாந்தி.
அந்தக் காகிதப்பக்கங்களில் இருந்த கறுப்பு மை அச்சு எழுத்துக்களில், அவனது முழு சொத்துக்களையும்.. அவள் பேரில் எழுதி வைத்திருக்கும்.. அத்தாட்சிப்பத்திரத்தைக் கண்டு.. சிலையாகிப் போய் நின்றாள் சூரியகாந்தி.
அந்த சூரியகாந்தி பெண்ணுக்குள்ளோ.. உள்ளே ஆயிரம் பிரளயங்கள் வெடித்துக் கொண்டிருக்க..
விஷ்வாதினுவுக்கோ, இத்தனை நாட்களும் அடக்கி வைத்திருந்த மனக்குமுறல்கள் வெளியே வெடிக்கலாயிற்று.
அவளை நோக்கி கண்கள் இரண்டும் கலங்க பார்த்தவன்,
சற்றே இரைந்த குரலில், “ஏன்.. என்னைப் புரிஞ்சிக்க மாட்டேங்குற ப்ளேக்பெர்ரி?”என்று கேட்ட தினுசில்,
இவளுக்கோ, இதயம் தூக்கிவாரிப் போட நிமிர்ந்து அவனைப் பார்த்தான்.
அவளது தூக்கிவாரிப்போடுதலில், சற்றே தன் கோபத்தை மட்டுப்படுத்தி நின்றவன்,
தழுதழுத்த குரலில், “நீ இவ்வளவு என்னை அவமானப்படுத்தியும் உன் பின்னாலேயே வர்றேனே.. அப்போவுமா என் அன்பு எனக்கு புரியலை?”என்று அவள் விழிகளை நோக்கிக் கேட்க,
ஏற்கனவே அவன் தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் அவள் பேரில் மாற்றியிருப்பதைக் கண்ட அதிர்ச்சியிலிருந்து வெளிவர முடியாமல் அதிர்ந்து நின்றிருப்பவள்.. இன்னும் அதிர்ந்தாள்.
அவனோ மேற்கொண்டு சொல்ல நாடி, “நான் உன்னை பார்க்க முன்பு வேணும்னா.. ஒரு பொம்பளை பொறுக்கியா இருந்திருக்கலாம்..
ஆனால் என்னைக்கு உன்னைப் பார்த்தேனோ.. அந்த நிமிஷத்துல இருந்து உன்னை நான் பொண்டாட்டியா அடையணும்னு ஆசைப்பட்டு கட்டிக்கிட்டேன்.
நான்..உன் தினுக்குட்டி.. உனக்கு துரோகம் செய்திருப்பேன்னு நீ நினைக்குறியா?”என்று கேட்க..
அந்த கேள்வி அங்கே கற்பாறையாய் அமர்ந்திருந்தவளின் இதயத்தில் உளியென பாய்ந்தது.
அவளது வெளிறிப் போன முகத்தை பார்ப்பதை விடுத்து.. தரையில் எதையோ துலாவியவனாக,
“சத்தியமா நான் எந்த பொண்ணு வாழ்க்கையையும் அழிச்சதில்லை..”என்றவன் அவளை நிமிர்ந்து நோக்கி,
“நான் நாடிப் போனதெல்லாம்.. அந்த மாதிரி பெண்களிடம் மட்டும் தான்.. இப்போ… தாரா அந்த மாதிரிப் பெண் தான் அப்படின்னு சொல்லப்போறியா?
இல்லை.. நான் குடும்பப் பெண்களோட வாழ்க்கையிலும் விளையாடியிருக்கேன்னு சொல்லப் போறியா?”என்று அவன் தன் பழைய கடந்த கால அந்தரங்கத்தைப் பற்றி..மனைவியிடம் வெளிப்படையாக வாய் திறக்க,
அவளோ.. அவனது ஒவ்வொரு கேள்விக்கும் அதிர்ந்து அதிர்ந்து தான் நின்றாள்.
மனைவியோ… எதிர்ப்பேச்சு பேசாமல் அமைதியாக இருப்பதுவும் கூட அவனை வெறுப்பேற்ற,
கழுத்து நரம்புகள் புடைத்து வெளித் தெரிய, பற்களைக் கடித்துக் கொண்டு, “ஒவ்வ்.. வொரு த்தடவையும், ‘உன் க்குழந்தை சாகணும்.. உன் க்குழந்தை சாகணும்’னு சொல்றியே.. அது என் க்குழந்தை மட்டுமல்ல.. உன்னில் இரத்தமும், சதையுமாக உருவாகுற உன் க்குழந்தையும் தான்னு உனக்குப் புரியவேயில்லையா?”என்று கேட்ட அந்த நொடி…
அவன் சொற்கள் சரியாக சென்று சேர வேண்டிய இடத்தைத் தாக்க..
முதன்முறையாக தாய்மையை உணர்ந்தது போல,
அனிச்சைச் செயலாக, தன் வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டது அவள் கரம்.
‘ஆமாம்..இது அவள் குழந்தை’-ஜிலீரென்று ஏதோ உள்ளுக்குள் தோன்றி மறைந்த உணர்வு அவளுக்கு.
அவனோ அதை உணராமல், முன்பிருந்த சீற்றத்துடனேயே,
“உன் வயிற்றில் வளர்ற என் குழந்தை.. சாகாமல் இருக்க… என் உயிரைக் கொடுத்து காப்பாற்ற நினைக்குறேனே!!.. அப்போ தாரா வயிற்றில் என் குழந்தை இருந்திச்சுனா.. அதுவும்.. எ.. என் குழந்தை தானே? … என்னால் உருவான குழந்தை.. என் குழந்தையை நான் எப்படி அழிப்பேன்???..”என்றவனுக்கு..
மேற்கொண்டு பேச முடியாமல் தொண்டையை அடைத்தது.
தொண்டையில் அடைத்ததை.. தொண்டைக்குழி ஏறி இறங்க விழுங்கிக் கொண்டு, முக வாட்டத்துடன்,
மென்மையான குரலில், “அதையும் நான் உயிரைக் கொடுத்து தானே காப்பாத்தியிருப்பேன்..” என்றவன், அவளை நாடி போனான்.
குனிந்திருந்த அவள் முகத்தின் நாடியை.. ஒற்றைக்கையால் அழுந்தப்பற்றி இழுத்து.. தன் முகத்தை அண்ணாந்து பார்க்கச் செய்தவன்,
சற்றே ஆவேசமாக, “என்னைப்பார்க்க குழந்தையை உயிருடன்.. அதுவும் தீ வைச்சு கொல்ற கொலைகாரன் மாதிரியா இருக்கு!!!..”என்று கேட்ட போது…
கலங்கிய விழித்திரை முன்னாடி இரண்டிரண்டாக தெரிந்த அவன் முகத்தை.. நிர்மலமாகப் பார்த்தாள் அவள்.
அவள் கண்ணீரில் மனம் வெம்பியவனுக்கு… அதுவும் கூட ஒருவகை எரிச்சலையும், சீற்றத்தையும் தான் கொடுத்தது.
ஆகையால் அவள் முகத்திலிருந்தும் கையை சட்டென விடுவித்துக் கொண்டவன்,
இடுப்பில் வலக்கை வைத்து நின்று.. முகம் திருப்பி.. பெரு மூச்சு விட்டு தலை கோதியவனாக ஒரு கணம் நின்றான்.
பின் அவளைப் பார்த்தான்.
“நான் உன் மாமா பிஸினஸ்ஸை லாஸாக்கினேன் தான்.. ஒத்துக்குறேன்.. ஆனால் எனக்கு வேணும்னா அதை உன்கிட்ட இருந்து மறைச்சிருக்கலாம்..
மாறாக நான்..நம்ம ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கே உன் கண்ணுக்கு நான் கெட்டவனாக தெரிந்தாலும் பரவாயில்லை ன்னு.. எல்லா உண்மையையும் சொன்னேனே ஏன்?”என்று கேட்க,
அவள் மனதுள்ளும் அதே கேள்வி எழுந்தது.
‘ஏன்?’
அந்த கேள்விக்கு விடை அறிந்தவனோ, காயம்பட்ட முகத்துடன், “ஏன்னா.. என் மனைவியான உன்கிட்ட எந்த உண்மையையும் மறைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணியதால் தான் எல்லாத்தையும் சொன்னேன்..
அதை சொன்ன நான்.. இந்த விஷயத்தை ஏன் மறைக்கணும்? ஏன்னா.. அந்த தப்பை நான் பண்ணல!!!”என்று உரத்துக் கத்தினான் அவன்.
சூரியகாந்தியோ.. அன்று எரிமலையாக வெடித்துக் கொண்டிருக்கும் தன் சூரியனையே விழியகல பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அவள் முன்னே தன் ஒற்றை சுட்டு விரலை மாத்திரம் காட்டி, “ஒவ்வொரு மனுஷனுக்கும் குற்றவுணர்வுன்னு ஒண்ணு இருக்கு.. தாராவுக்கு துரோகம் பண்ணிட்டு… உன் கூட என்னால் தாம்பத்யம் நடத்தியிருக்க முடியுமா? என் குற்றவுணர்வே என்னைக் கொன்னுருக்கும்.”என்றவன்,
பேசிக் கொண்டே போக.. இவளுக்குத் தான் இங்கே நா வரள ஆரம்பத்தது.
காய்ந்து போன உதடுகளுடன் அமர்ந்திருந்த மனைவியின் வெள்ளந்தி முகம் வேறு அவனை பாடாய்ப்படுத்த, மிக மிக தாழ்வான குரலில்,
“ஏன் இப்படி உன்னை வருத்தி.. என்னையும் வருத்துற?” என்று கேட்டான்.
புருவங்களிரண்டும் சுருங்க ஏதோ யோசனையுடன், நெற்றியை சொறிந்தவனாக,
“நீ அன்னைக்கு என்ன சொன்ன? ஆ!! மோகம்!! .. உன் மேலுள்ள மோகத்தினால் தான்.. உன் கிட்ட நான் வர்றேனா??” என்று கேட்டவன்,
தன் இதழ்களைத் தானே ஈரப்படுத்தியவனாக,
“நீ சொன்ன அதே மோகம் இருந்திருந்தால்..நீ என்னைத் தள்ளி வைச்ச இத்தனை நாள்ல.. நான் இன்னொரு பெண்ணைத் தேடி போயிருக்கலாமே? ஏன் போகலை?
‘என்னைப் புரிஞ்சுக்கோ.. என்னைப் புரிஞ்சுக்கோ’ன்னு உன் பின்னாலே தானே வந்தேன்..” என்றவன் மனது.. அன்று மடை திறந்த வெள்ளம் போலானது.
ப்ளேக்பெர்ரி என்னும் பெண் அவன் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவள் என்று சொல்ல நாடியவன்,
விழிகள் சுருங்க, “அன்னைக்கு ப்ளேக் சீட்டா அந்த பொலன்னறுவை குகையில் தாக்க வந்தப்போ.. நீ என்னை விட்டு ஓடி போனது கூட தெரியாமல்…
உன் உயிரைக் காப்பாத்தணும்னு தானே நெனச்சேன்.. அப்போ எனக்கு உன் உயிரைத் தவிர வேறு எதுவுமே நினைவில் இல்லை..” என்றவன் சட்டென் ஓரெட்டில் தாவி,
அவளது இரு கைச்சந்தையும் பற்றி இலேசாக உலுக்கியவாறு,
தன் ஒட்டுமொத்த உயிரிலும் இருந்து கடைந்தெடுத்த குரலில்,
“ஏன்னா.. நீ தான் என் உயிர்.. அதை புரிஞ்சுக்கோ…”என்று கூறியவன், சடாரென்று அவள் முன்னிலையில் மண்டியிட்டு அமர்ந்தான்.
அவள் தனக்கு மிக மிக அருகாமையில் தெரியும் தன் சூரியனின் முகத்தைப் பார்த்தாள்.
அவனது கண்களிலிருந்தும் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.
கண்ணீர் அவள் மனதை வெந்நீராகச் சுட்டது.
“ஏன் ப்ளேக்பெர்ரி.. ஒவ்வொரு தடவையும் நான் உன்னை நெருங்கி வர்றப்போ.. நீ துரோகின்னு பார்வையாலேயே கொல்றதை விடவும், நீ என்னை ஒரேயடியா கொன்னுரு…
நான் உன் வார்த்தைகளால் தினம் தினம் சாவதை விடவும்.. உன் கையால் ஒரு நொடியில் சாவுறதே மேல்னு போய் சேர்ந்துர்றேன்..”என்று கேட்டவனை… இமைக்காமல் பார்த்திருந்தாள் அவள்.
மனைவி முன் அழும் கணவன்!! ரொம்பவும் மனம் உடைந்து போய் அழும் கணவன்!!
அவனது வழியும் கண்ணீரைத் துடைத்து விட பரபரத்தது அவள் கைகள்.
அவளது ஏக்கப் பார்வையை தப்பாக எண்ணிக் கொண்டவன்,
ஜீவனற்றுப் போன தொனியில், “என்ன? … என் அழுகை உனக்கு வேஷமா தெரியுதா? இந்தக் கண்ணீரை விடு.. தினம் தினம் இரவில் நான் வடிக்கும் கண்ணீர்.
உனக்கெங்கே தெரியப்போகுது?.. என் பலவீனமும் நீ.. என் பலமும் நீ… நீ கண் மூடி தூங்குறதைப் பார்த்துட்டே கண்ணீர் சிந்திட்டு.. காலையில் விறைப்பு பேர்வழியா திரியுற இந்த விஷ்வாதினுவுக்குள் இருக்கும் கவலையும், உனக்கான அன்பும் எங்கே உனக்குத் தெரியப் போகுது?…” என்று சொன்ன விஷயம் அது புதிது.
இரவில் கண்ணீர் சிந்தி விட்டு.. காலையில் விறைப்பு பேர்வழியாக திரியும் கணவன்!!!
அவனது முகத்தையே புதுமையான உணர்வுகளுடன் அவள் பாத்திருக்க,
இவனோ.. இறுதியாக சொன்னான்,
“இந்த உலகத்திலேயே நான் மிகவும் நேசிக்குற ஒரு சொத்து நீ தான்.. உன்னை விட எனக்கு எதுவும் பெரிதில்லை.. எல்லாத்தையும் எடுத்துக்கோ..” என்றவன்,
அமைதியாக அமர்ந்திருந்தவளின் இரு கைகளையும் பற்றிக் கொண்டவன்,
“ஆனால் ப்ளீஸ்.. இனியொரு தரம்.. என் குழந்தையை அழிக்கணும்னு மட்டும் சொல்லாதே… என்னாலே தாங்கிக்க முடியாது ப்ளேக்பெர்ரி..”என்றவனாக,
ஒரு கட்டத்தில் தாங்கமாட்டாதவனாக.. அவள் மடியிலேயே முகம் புதைத்து குமுறிக் குமுறி அழுதவனின் பிடரி மயிரை… கோதி.. தேற்ற அலைபாய்ந்து கொண்டிருந்தது அவள் மனம்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *