8-என் மழை மேகமாய் நீ ஆகினாய்

8-என் மழை மேகமாய் நீ ஆகினாய்

8-என் மழை மேகமாய் நீ ஆகினாய்

8-என் மழை மேகமாய் நீ ஆகினாய்

8-என் மழை மேகமாய் நீ ஆகினாய்
வீட்டின் மூத்தவராய் தாத்தா சூழ்நிலைகளை கையிலெடுத்து பேசியவரை அனைத்தும் சரிதான்.. ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது?? என்பதுதான் பாட்டியின் மிகப்பெரிய பிரச்சினை… 
ஏனெனில் வியாவிற்கு அனைத்தையும் சொல்லித்தருவதற்காக நியமித்த பிராண்ட் அம்பாசிடர் பாட்டிதான்.,அதனால் தான் இந்த கவலை….
கரிகாலன் பேசிய அனைத்திற்குமே எதிர்ப்பதமாக பேசியதோடு, அவள் விருப்பப்படி இருக்க அனுமதியும் கேட்டாள் வியா. 
இப்படியே  பேசினால் இருவரும் நேரடியாக சண்டை போட்டுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை கூட வரலாம் என்று யோசித்த தாத்தா  எழுந்து பேச ஆரம்பித்தார்…
“உங்களுடைய கருத்துக்களை நீங்கள் இருவரும் கூறிவிட்டீர்கள் இந்த வீட்டிற்கு  மூத்தவனாக இந்த பிரச்சனைக்கு முடிவை நான் கூறுகிறேன் அதை நீங்கள் இருவரும் கட்டாயம் பின்பற்றித்தான் ஆகவேண்டும்..
இங்கே  நமது காலேஜிலேயே இந்த பாப்பா  படிக்கட்டும் அங்கிருந்து டிசி வாங்கிட்டு வந்துருங்க..
 
தம்பி   நீங்க ரெண்டு பேரும் போய் வாங்கிட்டு வந்திருங்கப்பா,  நீயும் உன்னோட  கடைசி செமஸ்ட ரை  இங்கேயே  எழுதிக் கொள்..மற்றபடி இந்த பாப்பாவுக்கு எல்லா பழக்க வழக்கங்களையும்  உன் அம்மா சித்திகள் என்று அனைவரும் சொல்லித் தரட்டும் பாட்டியின் மேற்பார்வையில்..
நீங்க ஆளுக்கு ஒரு பக்கமாய் இப்படி இருந்தீங்கன்னா உங்க  ரெண்டு பேருக்குள்ள எப்படி   ஒற்றுமை வருவது??
 வாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல.. உங்களுக்கு இது கடவுள் போட்ட முடிச்சு, இதை  முழுதாய் மனதார ஏற்றுக்கொண்டு நீங்கள் இருவரும் வாழ்கையை நல்லபடியாக வாழ வேண்டும்.. அதற்கு பிரிந்து இருப்பது சரியான முடிவு அல்ல…
உங்களுக்குள்ள ஒரு ஒத்துமை வரவேண்டுமென்றால் முதலில் உங்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் முறையாக செய்ய வேண்டும்..
 நாளைக்கு காலையில ரெண்டு பேரும் விடியும் நேரத்தில் கிளம்பி வாங்க, கோவிலில் போய் பூஜை போட்டு விடலாம். அதன் பின் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சுபமாய் நடக்கட்டும் என்று கூறி முடித்து விட்டார்..
மியாவை பார்த்து  பாப்பா நீயும் பெரியவங்க சொல்வதைக் கேட்டு புரிந்து நடந்து கொள், யாரும் உன்னை திட்டும்படியோ கடிந்து கொள்ளும்படியும் நடந்து கொள்ளாதே…
 கரிகாலன் ஏதாவது சொன்னால் உனக்கு பிடிக்கவில்லையென்றால் எங்களிடம் சொல்லு நாங்கள் அதை தீர்த்து வைக்கிறோம், அதைவிட்டுவிட்டு  சண்டை போடாதே, அன்பாய் அனுசரணையாக பழகுவதற்கு முயற்சி செய்…
 படித்த  பெண் நீ ,உனக்கு ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்து புரிய வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை, கற்பூரம் போல சொல்வதற்கு முன்னே புரிந்துகொண்டு செயல்பட பழகிக்கொள்..
தம்பி,  இந்த வாரமே நமது காலேஜில் அட்மிஷன் போட்டு விடுங்க”.. என்றவாறு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்..
கேகே வின் ஃபேமிலி செய்யும் தொழில்கள் நமக்கு தெரியாதல்லவா??  இப்போது தெரிந்து கொள்ளலாம்,
திருச்சியில் பெரிய தனியார் ஆர்ட்ஸ் காலேஜ், இன்ஜினியரிங் காலேஜ் மற்றும் ஸ்கூல் வைத்து நடத்துபவர்கள்..
விஜயாலயனும் அவரது தம்பிகளும் தான் அனைத்தையும் பொறுப்பாய் பார்த்துக் கொள்பவர்கள்..
வியாவின் அனைத்து பொறுப்புகளும் இப்பொழுது கரிகாலன் வசம்.. 
“உன் மனைவியின் அனைத்து கடமைகளும் உன்னுடையது தம்பி.. என்று அவள் முன்னரே  கூறியதோடு,இனிமேல் எதுவென்றாலும் நீ கரிகாலனைக் கேட்டுவிட்டு முடிவுசெய்தபின்னர்தான் எங்களிடமே கலந்தாலோசிக்க வேண்டும்” என்று இவளுக்கும் அறிவுரை கூற  பகீரென்றது வி யாவிற்கு
இதுவரை ஒத்த வார்த்தை நல்லபடியா என் கிட்ட பேசினது இல்ல, இவரு கிட்ட  ஸ்கூல் பிள்ளையாட்டம் போய் பர்மிஷன் வேர கேக்கனுமா?? அட கடவுளே வியா உன் நிலைமை இப்படியா ஆகவேண்டும்…
  ஒரு ஹீரோயினை டம்மி பீஸாக்க வேண்டுமென்று   நினைக்கிறார்களே பல உள்நாட்டு சதி வேறு இதற்கு.. நம்ம  யாரு? கெத்து இல்ல…இதுக்கு வேற ஏதாவது ஐடியா  கிடைக்காமலா போய்விடும் என்று மனதை தேற்றிக் கொண்டாள்..
ஒருவழியாக படித்த காலேஜிலிருந்து டீசி வாங்கி வந்தனர், அப்பொழுதுதான் கரிகாலனுக்கு தெரிந்தது இவள் படிப்பில்  புலி அல்ல எலி என்று..
சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் தான் திரும்பிச்செல்ல வேண்டும் இவர்கள் இருவரும் மட்டும்தான் காரில்..
 அவனே வண்டியை டிரைவ் செய்து வந்தால் ஒரு பெரிய பைநிறைய கொறிப்பதற்கு தின்பண்டங்கள் வாங்கி அடிக்கி,  தானுண்டு தன் வேலையுண்டு என்று சாப்பிட்டுக்கொண்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டும்  வந்த வியா எதேச்சையாக கரிகாலனை பார்த்தாள்..
சாலையில் கவனமும் ஏதோ ஆழ்ந்த சிந்தனையுமாக இருந்தான் அவன்….. .
இப்பொழுது தான் அவனை இவ்வளவு அருகில் பார்க்கிறாள்,அடர்ந்த சுருள் சுருளான சீராக வெட்டப்பட்ட தலைமுடி, சற்று கருத்த தேகம், வைரம் போல் ஜொலிக்கும் பெரிய கண்கள்..
  அவன் அறிவைப்போலவே கூர்மையான நாசி, சற்று தடித்த உதடுகள், வரிசைப் பற்கள், முறுக்கு மீசை, மொழு மொழுவென்று சவரம் செய்யப்பட்ட கண்ணங்கள், சீராக வெட்டப்பட்ட நகங்கள் என்று அவனை சற்று ரசிக்கத்தான் செய்தாள் வியா…
முழுக்கை சட்டை அவன் உடலில்  மிக கச்சிதமாய் பொருந்தியிருந்தது.. அளவான உடல் கட்டமைப்பு அவனுக்கு.. அதிகப்படியான சதைகள் கிடையாது, தொப்பை என்பது சுத்தமாக கிடையாது..
 அவனது உடலமைப்பும்,  அங்க இலாவண்யங்களும்  அவனை இயற்கையாகவே ஒரு அரச தோரணையுடன் தான் காட்டியது..
இது தானே நம் மண்ணின் நிறம்.. பார்ப்பதற்கு உண்மையிலேயே மிகவும் வசீகரமாகவும் ஆணழகனாகவும் தெரிகிறானே??..
இவனை எந்த பெண்ணுமே திரும்பிப் பார்க்காமல் இருந்திருப்பா?? இவனும் யாரையும் சைட் அடிக் காமல் இருந்திருப்பானா??   என்னம்மா கதை விடுகிறார்  சீனியர் எல்லோரிடமும்..
இருடா மகனே நீ சைட் அடிப்பதை கையும்  களவுமாகப் பிடிக்கிறேன் என்று மனதில் பேசிக்கொண்டிருக்க,
“ரொம்ப நேரமா என்னையே பாத்துட்டிருக்கிறியே என்ன விசயம்??
சைட் அடிக்கிராயா? இல்லை எப்படி என்னை ஏதாவது ஒரு விசயத்தில் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம் என்று நினைக்கிறாயா? இல்லை….. சிறு புன்னகையுடன், சாப்பிட ஏதாவது வேண்டுமா”?
தன் பட்டையான ஒற்றை புருவ த்தினை ஏற்றி இறக்கி அவன் என்னமோ  சாதாரணமாகத்தான் கேட்டான், பாருடா  இவனை.. நம்மகிட்டயே  ஸ்டைல் காண்பிக்கிறான் என்று இவள் எதிர்ப்பதமாக நினைத்தாள்..
“எதுவும் வேண்டாம் சீனியர் ரெஸ்ட் ரூம் போக போக வேண்டும்”..இவன் நினைக்கிற மாதிரி பதில் சொன்னா நம்ம கெத்து என்னாகிறது மனதில் காலரை தூக்கிக்கொண்டு வியா..
ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தியவன்,அவள் சென்று வருவதற்காக    காத்திருக்க அரைமணி நேரமாகியும் வியா வராததால் என்னவென்று பார்க்கலா மென்று  போனால்…
அது ஃபுட் கோர்ட், ஷாப்பிங் ஏரியாவுடன் இருக்கும் பெட்ரோல் பங்க்..எங்கு தேடியும் காண வில்லையே என்று பார்த்தால் உள்ளே அமர்ந்து ஐஸ்கிரீமை  இரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் வியா…
கரிகாலனுக்கு வந்ததே  கோபம்.. தன் வேகநடையுடன்   அவளருகில் சென்றவன்,” ஒரு மனுஷன் இங்க  உன்னை காணோமே என்று தேடிட்டிருக்கேன், கொஞ்சம் கூட அக்கறையே இல்லாமல் இப்படி சாப்பிட்டுக்கொண்டிருக்கிராய்..
 உனக்கு அறிவு இருக்கா?? ஒரு போன் பண்ணி கூட உன்னால சொல்ல முடியாதா?  அந்த சென்ஸ்  கூட உனக்கு இல்லையா”?? 
 இவ்வளவு கோபமாக அவன்திட்ட, வியாவின் ரியாக்சனோ வேறு மாதிரி இருந்தது..
“அதுக்கு முதல்ல உங்க போன் நம்பரை நீங்க என்கிட்ட  கொடுத்திருக்கனும் சீனியர்…  எல்லாத்துக்கும் என்னையவே குற்றம் சொல்லக்கூடாது”கூலாக பதில் சொல்லிவிட்டு மீண்டும்  தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள் வியா..
தலையில் அடித்துக்கொண்டான் க. கா….என்ன சொன்னாலும்  அதற்கு ஒரு பதிலை சொல்லிவிடுகிறாளே  ஒழிய, சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை….
 இரு இரு வர வைக்கிறேன்  என்று  நினைத்தவண்ணம்,” இன்னும் அஞ்சு நிமிஷத்துல நான் காரை  எடுத்து விடுவேன் அதுக்குள்ள வந்து கார்ல  ஏறிக் க்கோ,   இல்லையெனில் பஸ்  பிடித்தோ அல்லது எப்படி வர பிரிய மோ  அப்படி வந்து கொள்  எனக்கு கவலை யி ல்லை” சொல்லிவிட்டு தன் ஆள்காட்டி விரலில்  சாவியை சுற்றிக்கொண்டே ஒரு பாடலை விசிலடித்த படி மெல்லிய புன்னகையுடன் சென்று விட்டான்…
இப்பொழுது வியா விற்க்கு த் தான்  வியர்த்து விட்டது.. இது எந்த ஊர் என்று தெரியா து  எங்கிருந்து எப்படி செ ல்வ தென்று தெரியாது ஐஸ்கிரீமுக்கு பண மும் அவரிடம் தான் வாங்கிக் கொடுக்க வேண்டும்கொஞ்சம் யோசித்து செயல்பட்டிருக்க வேண்டு மோ என்று முதல்முதலாக   சிந்தித்தா தாள் வியா..
கரிகாலன் வேறு போய்க் கொண்டே யிரு ருக்கிறானே, அவன் பின்னேயே ஓடி சென்று, “சீனியர் என்கிட்ட காசு இல்லை, சாப்பி ட்ட ஐஸ்கிரீமுக்கு காசு கொடுக்கணும், கொஞ்சம் காசு தர முடியுமா நீங்க” என்று   சன்னக்குரலில்  தலையை குனிந்தவாறு கேட்டவளை ஒரு பார்வை பார்த்தவாறு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத் தான் கரிகாலன்..
“மீதி காசு” என்றாள் வியா..
“கடலமிட்டாய் வாங்கிக்கோ” என்றான் அவன் தாராள மனதுடன்…
” இல்லை சீனியர் மொத்தம் 700 ரூபாய், மீதி 600 ரூபாய் நான் தான் தர வேண்டும்” என்றவளுக்கு பேச முடியாமல் குரல் உள்ளே சென்றிருந்தது…
” அப்படி என்ன ஐஸ்கிரீம் சாப்பி ட்டாய் வா பார்க்கலாம்” என்றபடி சற்று கோபத்துடன் கடையை நோக்கி நகர்ந்தான்..    
“சார் இது இட்டாலியன்  இம்போர்ட்டட்  ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம், இதன் விலை 400 ரூபாயிலிருந்துதான் ஆரம்பிக்குது சார்…அவங்க  சாப்பிட்டதன்   விலை 700 ரூபாய்” என்று கடைக்காரன் தெளிவாய்க் கூற, திரும்பி அவளை பார்த்த பார்வையில் கண்டிப்பாய் அன்போ பாசமோ இல்லை..
ஒரு வார்த்தை பேசாமல் பணத்தைக்கொடுத்தவன் விரு விறு வென காருக்கு வந்தான்..
அவ்ன் பின்னே ஓட்டமும் நடையுமாக வியா..
அதன்பின் மிக அமைதியாக இவர்களது பயணம் வீட்டை அடைந்தது..
வாசலில் அவளுக்காக காத்திருந்த அன்னை, “வாடாமா ரொம்ப வாடிப்போயிட்டியே ஜுஸ் தரட்டுமா”? என்று கேட்டவாறு அழைத்து சென்றார் சமயலறைக்கு..
இவனிடம் ஒரு வார்த்தை மருந்துக்கு  கூட பேசவில்லை..ஆச்சர்யமும் சற்று பொறாமையும் உண்டானது அவனுக்கு..
பாட்டி வந்து பயணம் பற்றி கேட்க,இவனும் கூற.. 
இவனுக்காக அழுவதா அல்லது  நடந்ததை கண்டு சிரிப்பதா  என்று தெரியாமல் விழித்தார்…
எப்படி சீனிய ரை சமாதானம் செய்வது என்று யோசித்து அவன் கூறிய கண்டிசன்க ளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முடிவு செய்தாள் வியா.. முதலாவதாய் கையில் எடுத்தது சமையல்…
மிகவும் வித்தியாசமாக, ஆரோக்கியமான  உணவுப் பொருட்களை  கொண்டு சமைக்க வேண்டும்,அதேசமயம் இதுவரை யாரும் யோசிக்காத வகையில் செய்து அசத்த வேண்டும் இதை யூடியூபிலும் போட்டு சம்பாதிக்கலாம் என்று ஐடியா செய்தாள் வியா..
முதல் முயற்சி  இனிப்பிலிருந்து ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து,என்ன செய்வது எப்படி செய்வது என்று யோசித்து, நான் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வேன் என்று மார்தட்டிக் கொண்டு, தேசியக்கொடியின் கலரில் ஒரு இனிப்பு செய்ய முடிவு செய்தாள்..
முதலில் பச்சை குடை மிளகாயை விதை நீக்கி நன்கு அரைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அல்வா பதத்துக்கு கிளறி அதை தனியே எடுத்து வைத்தாள்,  பச்சை கலர் ரெடி..
அடுத்து ஆரஞ்சு பழத்தோலை அரைத்து அதனுடன் சர்க்கரையை சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு கிளறி  எடுத்து வைக்க ஆரஞ்சு கலர் ரெடி..
இப்போ வெள்ளை கலருக்கு என்ன செய்வது?? ஒரு சிறப்பான ஐடியா தோன்ற, மைதா மாவை நன்கு பசை போல காய்ச்சிஎடுத்து அதில் சிறிது சர்க்கரையையும் சேர்த்து அழகாய்  எடுத்து பச்சை கலரின் மேலே ஊற்றி அதன் மேல் ஆரஞ்சு கலர் வைக்க  இவையனைத்தும் நிமிடத்தில்  ஒட்டிக்கொண்டது…
இவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை எவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறேன் நான் என்று..
அனைத்தும் சூடாக இருக்கும் பொழுதே  இதய வடிவில் வெட்டி, சுட சுட அனைவருக்கும் இனிப்பை  பரிமாறினாள்…
இனிப்பு தானே அதுவும்   முதன்முதலாய்  செய்திருக்கிறது இந்த பெண் என்று நம்பி அனைவரும் வாயில் போட்டு விட்டனர்…
ஆஹா எவ்வளவு அபிநயங்கள் அனைவரிடமும்..
ஒருவருக்கு கண் கலங்கி நிற்கிறது, ஒருவருக்கு  முகமே சிவந்து நிற்கிறது, விதி விட்ட வழி என்று தாத்தா ஈசி சேரில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டார், மொத்தத்தில் குடும்பமே   அமைதியில்….
ஆனால் உள்ளே எரிமலை கொப்பளிக்க கரிகாலனின் வரவிற்ற்காக  காத்திருக்கிறது..
ஏனெனில் வாயை திறக்க முடியவில்லை பசை நன்கு ஒட்டிக் கொண்டுவிட்டது….
 பேசக்கூட முடியாமல் என்ன செய்வது?? ஒன்றும்  புரியாமல் அவளிடம் இனி உதவி கேட்க கூடாது என்று இவனுக்காக வெயிட்டிங்…
அவனும் வந்தான் இவள் ஆசை யாய் எடுத்துக்கொண்டு போய்  “நான் முதன் முதலில் செய்த ஸ்வீட் சாப்பிட்டு பாருங்கள் சீனியர்” என்று கொடுக்க,
அவள் பின்னே குடும்பமே வந்து  இரு கைகளையும், தலையையும் ஆட்டி வேண்டாம் வேண்டாம் என்று கூற முயற்சித்தனர் 
சாப்பிட்டானா கரிகாலன்???
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *