6-என் மழை மேகமாய் நீ ஆகினாய்

6-என் மழை மேகமாய் நீ ஆகினாய்

6-என் மழை மேகமாய் நீ ஆகினாய்

6-என் மழை மேகமாய் நீ ஆகினாய்

6-என் மழை மேகமாய் நீ ஆகினாய்

என்ன செய்வ தென்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க , “அம்மா நம்ம லட்சுமி கண்ணு போட்டுருக்குதுங்க  இந்தாங்க சீம்பால் சின்னராஜாய்யா குடுத்துட்டு வரச்சொன்னார்”…

கந்தன் வந்து விஷயத்தைக் கூறி சீம்பால் கொடுக்க, மகிழ்ச்சியுடன் வந்ததை வாங்கிக்கொண்டு பாட்டி,” தம்பி  அங்கயா இருக்காரு கந்தா”??..

“ஆமாங்க பெரியராணியம்மா நடு சாமத்திலே லட்சுமிக்கு  வலி வந்துருச்சுங்க அப்போவே டாக்டருக்கும் சின்னராஜய்யாவுக்கும் போன்  பண்ணிட்டேங்க, ஐயாவும் அப்பவே வந்துட்டாங்க இன்னும் சித்த நேரத்துல வந்துருவேன் சொல்ல சொன்னாங்க”..

(பாட்டி..அடச்சே நாமதான் ஓவரா பில்டப் கொடுதுட்டோமோ …)

“சரி சரி சீக்கிரம் வர  சொன்னேன்னு சொல்லு,இன்னைக்கு எல்லாருக்கும் நம்ம வயக்ககாட்டிலேயே விருந்துக்கு சொல்லிடு கந்தா” என்றுஅவனிடம் பேசிவிட்டு திரும்பி வந்தவரை ஒரு மார்க்கமாக முறைத்தார் தாத்தா..

 காலைல எந்திரிச்சதிலிருந்தே நம்மளுக்கு இன்னைக்கு நேரம்  சரியில்ல போலிருக்கு நினைத்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து விட்டார் பாட்டி…

எங்காவது காலையில் எந்திரிச்சு வாக்கிங் போயிருக்குமாயிருக்கும் வீட்டை   சுத்தி தேடிப்பாருங்கள் அந்த பாப்பா வை” என்று தாத்தா கூற, எல்லா இடத்தில் தேடியும் வியாவை காணவில்லை..

கரிகாலனும் வீட்டிற்கு வந்துவிட  அவனும் சேர்ந்து தேட ஆரம்பித்தான் வீட்டு காம்பவுண்டுக்குள் ளும் அவள் இல்லை எங்கு போயிருப்பாள்  என்று தெரியாமல் மீண்டும் அவளறைக்குச் சென்று தேடிப்பார்க்க அவள் படுக்கையில் ஒரு லெட்டர் இருந்தது..

 அதை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தார் பாட்டி…

“அந்த பொண்ணு லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடிப்போயிருச்சுப்பா”.. என கூறியபடியே அந்த லெட்டரை தன் மகனிடம் நீட்டினார் …

விஜயாலயனுக்கும் இது சற்று அதிர்ச்சிதான், “அவ்வளவு சீக்கிரம் அந்த பெண் வீட்டை விட்டு போகும் என்று நான் நினைக்கவில்லை அம்மா” இனி என்ன செய்வது என்று புரியாமல் சற்று யோசிக்கத்தான் செய்தார்

அந்த ஊர் பஸ் ஸ்டாண்ட்டுக்கு  போன் செய்து காலை முதல் பஸ்ஸிலோ இல்லை இரண்டாவது பஸ்ஸிலோ அந்தப்பெண்  கிளம்பியதா?? என்று கேட்டால் இல்லை என்று பதில் வந்தது…

ஆட்டோ ஸ்டாண்ட் தலைவன்  குமரேசிடம் போன்பண்ணி கேட்டதற்கு அவனும் பெரிய வீட்டிலிருந்து யாரும் வரவில்லை என்று கூறினான்..

எங்கு தான் போயிருப்பாள் அவள்?? என்று அனைவருக்கும்   டென்ஷனாகிவிட்டது..

“முதலில்  அந்த லெட்டரை கொடுங்கப்பா என்ன எழுதியிருக்கான்னு  படிச்சு பார்க்கலாம்” என கரிகாலன் கேட்க, விஜயாலயன் கொடுத்தார்…

லெட்டரை  படித்துவிட்டு  ” காலைல நேரமா எந்திரிச்சு கோயிலுக்கு  போகிறாளாம், கொஞ்ச நேரத்துல வந்திடுவான்னு எழுதி இருக்கா எல்லாரும் போய் அவங்கவங்க வேலையை பாக்கலாம் வாங்க”  என்ன கடகடவென ஒப்புவித்து விட்டு மாடிக்குச் சென்று விட்டான் கரிகாலன்…

பாட்டிக்கு அவனது பதிலில் திருப்தியில்லை எனவே அவன் பின்னால் சென்று அவனிடம்  லெட்டரில் என்ன இருந்தது என்று கேட்கலாமென பின்னாலேயே சென்றார்..

 அங்கு கரிகாலன்  சுவற்றில் தலையை முட்டிக்கொண்டிருந்தான்..   

 “டேய் டேய்  பேராண்டி என்ன பண்ற சாமி?? எதுக்கு இப்படி நீயே உன் தலையை இடித்துக் கொள்கிறாய்??  வலிக்குமே பா”.. என்று பதட்டமும் ஆதங்கமுமாய் கேட்டார் பாட்டி..

 “வேற என்ன பாட்டி என்னை பண்ணச்சொல்றீங்க??  இப்படி ஒரு ரெண்டுங்கெட்டான் ரெட்டை வாலை எனக்கு கட்டி வச்சிட்டீங்களே?? நான் என்ன பாவம் செஞ்சேன்னு எனக்கு தெரியல!! அதுதான் முட்டிக் கொள்கிறேன்”..

“ஏண்டா பேராண்டி இப்படி நீ   நொந்துக்கற அளவு அப்படி என்ன நடந்துச்சு சாமீ”??

“என்ன நடந்துச்சா?? இதுவரைக்கும் நடந்ததெல்லாம் கூட  ஏதோ ஒரு வகையில எடுத்துக்கலாம் பாட்டி, இனிமேல் என்ன நடக்க போகுதுனு நினைக்கும் போதே  பயமாயிருக்கு பாட்டி, ஏன் நான் இப்படி வருத்தப்படுகிறேன்னு இந்த லெட்டரை படித்துப்பாருங்கள் புரியும்”..

பாட்டியும் விரித்துப் பார்த்தார்கள் அப்படியே தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது “நான் இன்னிக்கு பிபின் மாத்திரை எத்தனை போடணும்னு எனக்கே தெரியலடா பேராண்டி…

 உண்மையில் உன் நிலைமை பாவம் தான் டா பேராண்டி” சொல்லும் பாட்டியின் கண்களில் ரத்த கண்ணீர் வராத குறை…

அப்படி என்ன பில்டப் ஓவரா இருக்கு என்ன நினைக்கிறவங்க  நீங்களே அந்த லெட்டரை படிங்க,

 அண்புல்ல,

 ஆம்ம, சேர், பட்டி, தத்த, சீநீயார், மாட்ரோம் எள்ளாறுக்கூம், 

ஆதவது,  நண் களையிள் சிக்கீரமகவெ    யேலுந்தூகோண்டதல் தாலைய்க்கு  குலிசிச்சி கேயிலுக்க்கு பேய்   வாறுகிரென், யரும் ஏன்னாய் கன வெண்டாம் ஏண்ட்ரு   காவாளய் பாட வென்டாம் சிக்கிராம் வாந்து விட்டுகிரீன்..

இப்பாடிக்கி,

ஆவியா மானஸா,

B A இங்கிலீஷ் லிட்ரேச்சர் இரண்டாம் ஆண்டு

——கல்லூரி

சென்னை..

 

பார்த்ததுக்கே பாட்டிக்கு  பிபி எகிறி தலை சுற்றியது, என்ன முயற்சி செய்தாலும் அந்த லெட்டரில் என்ன எழுதி இருக்கிறது என்று யாராலும் படிக்க முடியவில்லை…

 விஷயம் இதுதான்,

அன்புள்ள அம்மா சார் பாட்டி தாத்தா சீனியர் மற்றும் எல்லோருக்கும்,

அதாவது நான் காலையில் சீக்கிரமாகவே எழுந்து கொண்டதால், தலைக்குக் குளித்து கோவிலுக்கு போய் வருகிறேன் யாரும் என்னை காண வேண்டாம் என்று கவலைப்பட வேண்டாம் சீக்கிரம் வந்து விடுகிறேன்,

இப்படிக்கு,

ஆவியா மானஸா..

யாரய்யா  இந்த பிள்ளைக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தது?? என்று நொந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது அந்த  லெட்டர்..

ஒரு சில மணி நேரங்களுக்குப் பின் வீட்டிற்கு வந்து சேர்ந்த அவள் கையில் ஒரு பெரிய கூடை…

“என்னம்மா நீ காலையில் யார் கிட்டேயும் சொல்லாம கிளம்பிப் போய்விட்டாய்?  உன்னை காணாமல் எல்லோரும் தேடினோம் தெரியுமா”?? என்று வல்லி கேட்க,

(ஆமா ஆமா இவ வந்த நாள்ல இருந்து எல்லோருக்கும் பயத்தை கிளப்பறதையே  வேலையா வச்சிருக்கா மகராசி…)

“எல்லோரும்  தூங்கிட்டிருந்தீங்கம்மா ஏன் தொந்தரவு பண்ணனு மென்று  தான் லெட்டர் எழுதி வைத்துவிட்டுப் போனேன்”..

(ஆமாடி நீ எழுதி வச்சாலும்  வெச்ச, எனக்கும் என் பேரனுக்கும் ரத்தக்கொதிப்பு வந்ததுதான் மிச்சம்…அது என்ன தமிழா இல்ல தகர டப்பா வா?? உங்கப்பா மட்டும் என் கையில்  கிடைத்தால் பொண்ணுக்கு தமிழ் கூட சொல்லிக்கொடுக்காத நீயெல்லாம் மனுஷனாடா?? என்று நல்லா நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டு என் கோபத்தை தணித்திருப்பேன்..)

“நான்  பெருசா தூங்கமாட்டேன் இனிமேல் எதுவாக இருந்தாலும் என்னை எழுப்பி சொல்லிட்டு போ” என்று பாட்டி கூறினார்…

( அவனவன் கஷ்டம் அவனவனுக்குத் தானே தெரியும்..  இவ என்னை நார் நாரா கிழித்து தோரணம் தொங்காமல் விடமாட்டா போலிருக்கு..)

“சரி பாட்டி இனிமேல் அப்படியே செய்றேன் என்றவள் இங்க பாருங்க கோயில் பூசாரி எல்லாருக்கும் பிரசாதம்   கொடுத்தனுப்பினார்..

(அது என்னடி இல்லாத புது  வழக்கமா புதுசா பிரசாதமெல்லாம் வீட்டுக்கு வருது??)

காலைல கோயிலுக்கு போனேனா ரொம்ப நேரம் ஆயிடுச்சு அதனால ரொம்ப  பசித்ததா,

(அதான பார்த்தேன் இத்தனை நேரம் எப்படி இந்த புள்ள பசி தாங்கும் என்று நினைச்சேன்??…)

  கோவிலில்  இன்னிக்கி சக்கரை பொங்கல் கொடுத்தாங்களா, எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ் வேறயா நிறைய வாங்கி சாப்பிட்டேன்…

(அப்போ குடும்ப மானத்தை கோவில்லையும் பறக்க விட்டுட்டு வந்துட்டேன்னு  பெருமையா சொல்லு..)

 அது தான்  எல்லாருக்கும் கொடுமா என்று பூசாரி  கொடுத்தார்” என ஒரு தூக்கு பாத்திரத்தை  காண்பித்தாள்..

அனைவரும் வாயடைத்து விட்டனர்!! ஒரு ஐந்து கிலோ பிடிக்கும் வாளி அது..

பொறுக்க மாட்டாமல் பாட்டி கேட்டு விட்டார், “அவ்வளவும் உனக்கே வா?? சாப்பிட முடியுமா உன்னால”??

“நானும்  கேட்டேன் பாட்டி இவ்ளோ கொடுக்கிறீர்களே , சாப்பிடு முடியுமான்னு??

எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்துட்டு சாப்பிடுமா  என்று சொன்னார்..

(சோழன் வம்சம் சோறுடைத்து தான்.. அதுக்காக  எங்களை சோதிக்கவே கடவுள் உன்னை அனுப்பிச்சி இருக்காரோ என்னமோ??  நல்லா இருடி அம்மா… பாட்டிக்கு இப்போ பிபி கூட ஹார்ட் பீட்ட்டும் செக் பண்ண வேண்டிய சூழ்நிலை)

 இது ஒரு நாள் முழுக்க கெடாதாம் பாட்டி அதனால்  நாம் எல்லாருமே தோட்ட வீட்டுக்கு போகும்போது இதயும்  எடுத்துட்டு போய் விடலாம்..

ஸ்நேக் மாதிரி அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாம், எப்படி என் ஐடியா பாட்டி”??

(உன் மூளையை கொண்டுபோயி கெடாமல் இருப்பதற்கு  பிரிட்ஜில் வெய்யுத்தா இந்த அளவுக்கு யோசிக்கிறது இந்தியாவிலேயே யாரும் கிடையாது போ..)

“சரிம்மா எடுத்துட்டு போலாம்”…

எனக்கு இப்படி ஒரு ஜென்மம் பொண்டாட்டியா வந்து வாச்சுருக்குதே என்று தலையில் அடித்துக்கொண்டான் கரிகாலன்…

“சரி எல்லோரும் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு கிளம்புங்க தோட்ட வீட்டுக்கு போகலாம்” என்றபடி விஜயாலயன் மற்ற அலுவல்களை கவனிக்க சென்றார்..

ஒருவழியாக காலை உணவு  முடிந்த தோட்ட வீட்டிற்கு  அனைவரும் சென்று செட்டில் ஆனபின்பு,

உங்க எல்லார்கிட்டயும் ஒரு சில விளக்கங்கள் நான் கொடுக்கணும் நான் பேசி முடிக்கிற வரைக்கும் இடையில் யாரும் பேசக்கூடாது”..

“அப்ப எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா நான் எப்படி கேட்கிறது சார்”…என்று ஸ்கூல் டீச்சரிடம் பேசுவது போல கையை உயர்த்தி எழுந்து நின்று தன் மிகப் பெரிய சந்தேகத்தை கேட்டாள் வியா..

“நான் சொன்ன கண்டிஷன் உன்னை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் பொருந்தும்  மா, உனக்கு ஏதாவது பேச வேண்டும் என்று தோன்றினால் நீ எப்பொழுது வேண்டுமானாலும் பேசலாம் உனக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது”…

(பாருடா என் மகன் நல்லவன் மாதிரி நடிக்கிறதை!! இவளிடம் கட்டுப்பாடாக இரு என்று  சொன்னாலும் இவ அப்படி இருக்கப்போறது இல்லை ,வீணா நமக்கு எதுக்குடா டென்ஷன் என்று  இவன் மாற்றி பேசுகிறான் இத அந்த பொண்ணும் நம்புது மொத்தத்தில் நாமதான் இளிச்சவாயர்கள் என்று பாட்டி நொந்திங்) 

“தேங்க்யூ சார் நீங்க ரொம்ப ஸ்வீட்”..

(ஆமாண்டி என் மகன் சுவீட்டு, என் பேரன் காரம்,நாங்கெல்லாம் பிசுகோத்து)

சொல்லியவள்  தன் இடத்தில் அமர்ந்து முறுக்கை  கடித்துக்கொண்டே அவர் என்ன பேச வருகிறார் என்பதை கவனிக்க ஆரம்பித்தாள்..

( இதென்ன வாயா இல்லை கிரைண்டரா எப்போ பார்த்தாலும் தின்னுகிட்டு இருக்காளே.. குடும்பத்துக்கே  சுட்டு வச்ச முறுக்கை இரண்டே நாளில் காலி பண்ணிட்டு தான் மறுவேலை பார்ப்பா போலிருக்கு..) என் கவலை எனக்கு என்ற நிலையில் பாட்டி…

“குடும்பத்தில்  யாருமே கண்டுகொள்ளவில்லை, எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்பது கரிகாலனின் குற்றச்சாட்டு..

நான்தான் யாரும் இதைப் பற்றி எதுவும் பேசக்கூடாது என்று கூறினேன், இந்த பிரச்சனை முடியும்வரை யாரும் கரிகாலனிடமும்  அதிகம் பேச வேண்டாம் என்று கூறியதும் நான்தான்..

(ஒஹ் ஐ சீ.. அதுக்குள்ள இந்த வீராச்சாமி என்னாலதான்  யாரும் பேசலை என்று புகார் பத்திரம் வாசித்து பிடில் ஊதினான்,   இருடா மகனேஉன்னை பிச்சு பிச்சு.. பக்காவா பிளான் பண்றேன்,உன் இமேஜை பஞ்செர் பண்றேன் சவால் டா முரட்டு பீசு..)

நம்ம வீட்டுப் பெண்ணுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தால் நாம் எப்படி நடந்துகொள்வோம், முடிந்த அளவு இதை சீக்கிரம் சரிசெய்துவிட தானே பார்ப்போம்??

(கரெக்ட் சார்.., வீட்டிலேயே நீங்கதான் சார் அறிவாளி..)

 அப்படித்தான் நானும் யோசித்தேன்ஆம்பள பிள்ளைகளுக்கு என்றுமே  பிரச்சினையில்லை, ஆனால் பெண்கள் விஷயம் அப்படி அல்ல, நம் சமூகமும் அதை எளிதில் விட்டு வைக்காது..

(மத்தவங்க எப்படியோ என் சித்தி ஒருத்தி போதும் கொள்ளிக்கட்டையை எடுத்து முகத்திலேயே வச்சிருப்பா ராட்சசி..)

 அதனால்தான்  காதும் காதும் வைத்தபடி முடிந்தளவு முடிக்க முயற்சியும் செய்தோம்,

 உங்களுடன் பேச ஆரம்பித்தால் உங்கள் கோபங்களை உடனே காட்டுவீர்கள் அப்பொழுது பிரச்சினை அதிகரிக்கத்தானே செய்யும்??

(அய்யய்யோ ஆமாம் சார், கண்டபடி கோபப்படுவார் சார் சீனியர்… நல்லவேளை இப்படி செஞ்சீங்க…)

 அதனால்தான் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொன்னேன்..உங்கள் மேல் எங்கள் அனைவருக்குமே முழு நம்பிக்கை உண்டு தம்பி..

(இந்த கரிமேட்டு  கருவாயனை பார்த்து பொண்ணுங்க அப்படியே சிரிச்சிட்டு வந்துவிட்டாலும்….., காமெடி பண்ணாதீங்க சார்…)

ஒருவேளை இது உண்மையாக இருந்தாலும் கூட எங்களுக்கு சந்தோஷம்தான்!!

(எனது லவ்வா…. இவனையா…சார் நானே தலைவிதியே என்று நொந்து போய் இருக்கேன் சார்.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல சார்..)

 நீங்கள் தவறு ஏதும் செய்யவில்லையே, ஒரு பெண் ஒரு பெண்ணை விரும்பி இருக்கிறீர்கள் அவ்வளவுதானே..

(இந்த முசுடு மூஞ்சிய வெச்சுட்டு இவனும் லவ் பண்ணினா எப்படி இருக்கும்??  … கற்பனை உலகத்தில் வியா..)

பல பெண்களை விரும்பியிருந்தாலோ அல்லது பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்தாலும்  அது தவறு என்று உங்களை கண்டிக்கலாம்…

ஒரு பெண்ணை விரும்புவது கூட தவறு என்று எவ்வாறு கண்டிப்பது??

நீங்கள்தான் சிறு விஷயத்தை பெரியதாக எடுத்துக் கொண்டீர்கள்  தம்பி…

உங்கள் இருவரைப் பற்றி தெரிய வந்த  முறை வேண்டுமானால் தவறாக இருக்கலாம், அதற்காக உங்களை வெறுப்பதற்கும் தவறாய் நினைப்பதற்கும் எங்களால் எப்படி முடியும்??

 ஒருவேளை அந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு பின்னர் இருக்கும் உங்களது அன்பு உண்மை தானே?? நாங்கள் அதற்கு தான் முக்கியத்துவம் கொடுத்தோம்..

(இன்னும் கற்பனை உலகத்திலிருந்து வியா மீண்டு வரவில்லை..)

அதனால்தான் உடனுக்குடன் திருமணம் செய்யவும் ஏற்பாடு செய்தோம்,ஆனால் அனைத்தையும் மிஞ்சிவிட்டது இந்தப் பெண்ணின் தியாகம்..

யாரும் யோசிக்க முடியாத ஒரு செயலை இந்த பெண்  சர்வ சாதாரணமாக செய்து விட்டது..

உங்கள் மேல் எங்களுக்கு சந்தேகமும் இல்லை வெறுப்பும் இல்லை, உங்களை சற்று அமைதிப்படுத்த நாங்கள் அமைதியாக இருந்தோம்.

உங்கள் கோபம் நியாயமானது என்று உணர்ந்ததால் தான் இப்பொழுது இந்த விளக்கங்களும் தருகிறோம்

நேற்று இந்த பாப்பா உங்களைப் பற்றி குறை கூறிய போது உங்களிடம் கேட்டதற்கு ஒரே காரணம்,  நீங்கள் யாரையும் மனம் நோகக் கூட பேச மாட்டீர்கள் எப்படி இந்த பெண்ணிடம் இவ்வளவு கோபமாக நடந்து கொண்டீர்கள் என்ற வருத்தத்தில் தான் கேட்டேனே ஒழிய உங்கள் மேல் வேறு எந்த கோபமும் கிடையாது…

ஊரைப் பொருத்தவரை ஒரு உதவி தேவை எனில் நம்மை புகழ்வார்கள் தேவையில்லை எனில் நம்மை இகழ்வார்கள் அவர்கள் பேசும் பேச்சுக்களை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்…  காதில் கூட வாங்க வேண்டாம்..

 மற்றவர்களின் பேச்சை கேட்டு நாம் வாழ முடியாது தம்பி நம் வாழ்க்கைக்கு என்று ஒரு சில கட்டுப்பாடுகள்  நெறி முறைகள் இருக்கின்றன அவற்றை பின்பற்றி வாழ்வோம் …

முடிந்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வோம் இல்லையெனில் அமைதியாய் இருப்போம்..

நாங்கள் அனைவரும் என்ன நினைத்தோம் என்பதை இப்பொழுது உங்களிடம் தெளிவாகக் கூறி விட்டோம் இதற்குப் பின்னர் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் சபையில் கூறிவிடுங்கள்”…

மிகத் தெளிவாக தங்களது உணர்வுகளை புரியவைத்த விஜயாலயன் இப்பொழுது கரிகாலனிடம் அவனது உணர்வுகளையும் அவனது முடிவுகளை கேட்க கேட்டார்..

தந்தை பேசப்பேச மகிழ்ச்சி பொங்கியது கரிகாலனுக்கு , குடும்பத்தினர் தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்களா?? என்று பேருவகை கொண்டான்…

ஒரே பிரச்சினை அவனுக்கு என்னவெனில் இந்த அரை வேக்காடை வாழ்க்கை முழுக்க எப்படி சகித்துக் கொள்வது என்பதுதான்..

என்ன செய்வது என்று  யோசித்தான்,ஒரு நல்ல ஐடியா புலப்பட சரி என்று அதை செயல்படுத்த ஆரம்பித்தான்..

“நான் கொஞ்சம் பேசவேண்டும் என்று நினைக்கிறேன் பேசலாமா” ??

  

” சொல்லுப்பா”

கரிகாலன் பேசலானான்  முறுக்கை அரைத்துக்கொண்டிருந்த வியாவின் வாய் அப்படியே நின்றுவிட்டது..

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *