1---நீயில்லாத வாழ்க்கை ஏனோ???
சகுந்தலாவின் புதிதான பாசம் ஒரு பக்கம்… யுதிஷ்டிரனின் நினைவு மறு பக்கம் என்று அவளை வாட்டி வதைத்தது…
நிம்மதி இழந்து…. தனிமையை நாடியவள்.. சரியாக பாடத்தில் கவனம் செலுத்தாமல்…. அந்த வருட செமஸ்டரில் ஜஸ்ட் பாஸ்ஸாகியிருந்தாள் சைரந்தரி.
பகலிரவு பாராமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும்…
சைரந்திரியின் சோகமான முகத்தையும்… மெலிந்த உடலையும் கவனிக்க தவறவில்லை.. அதனால் இது பற்றி… ஓர் நாள்… யுதிஷ்டிரனிடம் பேசினார் ஐனகர்.
“சார்… இப்படி கேட்கிறேன்! என தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.. உங்களுக்கும்…
குட்டிமாவிற்கும் ஏதேனும் மனஸ்தாபமா?… “என நேரிடையாக அவனிடம் கேள்வி கேட்க.. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“புரியும் படி சொல்லுங்க..ஐனகர்?”
என அவளை பற்றிய விஷயம் என்பதால்… ஊன்றிக் கவனிக்க தொடங்கினான்… யுதிஷ்டிரன்.
“குட்டிம்மா…தான் காலேஜில் ஃபர்ஸ்ட் மார்க் எடுப்பாள். ஆனால்.. என்றும் இல்லாத வருஷமாக… ஜஸ்ட் பாஸ் ஆகியிருக்கிறாள். எப்போதும் எதோ… பறிகொடுத்ததை போன்றிருக்கிறாள். மெலிந்து வேறு காணபடுகிறாள்….” என கவலையுடன் கூறினார் ஐனகர்.
“ஒரு மாதமாய் அவளை பார்க்கவில்லை… பேசவில்லை. வெளிநாடு சென்றிருந்தேன்.. இன்று அவளிடம் பேசுகிறேன்”
என்றதும்…
“உங்களை காணாமல் தான்… குட்டிம்மா தவித்துக் கொண்டிருக்கிறாள் என நினைக்கிறேன்…குட்டிம்மாவிற்கு இப்படியோர் சொந்தம் கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னிடம் கூட இதை பற்றி சொல்ல தயக்கம் கொள்கிறாள் … சார்!” என ஐனகர் மனமாற கூறினான்…. அவரிடம் சிறு தலை ஆட்டலுடன்… தோலை குலுக்கினான்…. யுதிஷ்டிரன்.
தன் மனதிற்குள் இருப்பதை வெளியில் சொல்லவும் முடியாமல்… நிமிடத்திற்கு நிமிடம் தவித்துக் கொண்டிருக்க.. விதியே! என காலேஜிற்கு வருவதும்..போவதுமாக நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தாள். எதிரில் வருபவர்களை காணாதவாறு எங்கோ….பார்த்த படி நடந்துக் கொண்டிருந்தவளின்
கை பிடித்து… தடுத்து நிறுத்தினான்… யுதிஷ்டிரன்.
அவனை பார்த்தும், கண்ணீர் பெருக்கெடுக்க… தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டாள். அவளின் மெலிந்த மற்றும் கலையிழந்த முகத்தை.. பார்த்து … யுதிஷ்டிரனின் மனம் வாடியது
“சைலு! ஏன் இப்படியிருக்கிறாய்? என்ன பிரச்சனை… எதுவாக இருந்தாலும் சொல்லும்மா?” என்ற அவனது வார்த்தைகள் தேனொழுக மனதை இனிக்கச் செய்தது.
அவன் முகம் பார்ப்பதை தவிர்த்து… “உடம்பு சரியில்லை..” என கையில் வைத்திருந்த புக்ஸை பார்த்த படி பேசினாள்.
அவளின் முகத்தை நிமிர்த்தி… “உன் உடம்பு… எப்போது சரியில்லாமல் போகும் என்று எனக்கு தெரியும்… ஆனால்… இப்போது ஏன் பொய் சொல்லுகிறாய்? உன் கண்ணீல் ஏதோ… தேடல் தெரிகிறது…” என சரியாக கனித்தான் யுதிஷ்டிரன்.
இது தான்… நீங்கள்! உங்களுடைய இந்த பாசம் தான் என்னை பாடாய் படுத்துகிறது… என அவனை பார்த்த படி… “அதெல்லாம் ஒன்றுமில்லை..! ” என்றாள்…
“பொய்… சொல்லாதே? சைலு!… என்னிடம் சொல்ல… உனக்கு என்ன தயக்கம்?..”
“எனக்கு என்னவானாலும் பார்த்துக் கொள்வதற்கு.. என் மாமா இருக்கிறார்… அவருக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதற்கு? ” என சட்டமாக பேசினாள்.
அவளுடைய வார்த்தைகள்.. அவனுக்கு கோபத்தை வரவழைக்கும் என எதிர்பார்த்து நிற்க… பொறுமையாக “உன்னிடம் எனக்கில்லாத உரிமையா?….” என சிரித்த படி அவளது முகத்தை தாங்கிருந்த கைகளை விடுத்தான்.
“நீ என்ன வேண்டுமானாலும், பேசு… எனக்கு கோபமே வர போவதில்லை… ஏனென்றால்
உரிமை உள்ள இடத்தில் தான் கோபம் இருக்கும். அதனால்… இதற்கு சிறந்த தீர்வு! நம்மிருவரின் கல்யாணம் தான்.. உடனடியாக அதற்கு எற்பாடு செய்ய வேண்டும் என்றான்….”
அய்யோ! கடவுளே… இவனுக்கு எப்படி சொல்லி நான் புரிய வைப்பேன்?… என பதட்டதுடன் “எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை?…” என மேலும் வேறு ஏதும்… பேசாமல் நடையை கட்டினாள் சைரந்திரி.
அவளுடைய நடவடிக்கைகள், சிரிப்பை வரவழைத்தாலும்… “நானிருக்கும் போது ஏன் நீ… இன்னும் கஷ்டபடணும்? உன்னை என் நெஞ்சுக்குள் வைத்து பாதுகாப்பேன். யாரும் வாழ்ந்திடாத வாழ்க்கையை திகட்ட… திகட்ட… நாமிருவரும் வாழ வேண்டும் என்று…. ஐனகரின் மூலம்… மீண்டும் கல்யாண பேச்சை எடுத்தான்…
சகுந்தலா… “குட்டிம்மாவின் கல்யாணத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என மாப்பிள்ளை சொல்லுகிறார்….” என ஐனகர் கூற..
“எதற்கு அவசரமாக கல்யாணத்தை செய்ய வேண்டும்?… அவள் படிப்பு முடியட்டும்… வீட்டு வேலைகள் எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டாமா?…” என கல்யாணத்தை தடுக்க இல்லாத காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தாள்.
“நீ… என்னம்மா!…. குட்டிம்மா என்ன சாதாரண வீட்டிற்கா மருமகளாக போகிறாள்..?… அரண்மனை போன்றது மாப்பிள்ளையின் வீடு… என சிரித்தவர்… அங்கே வேலை பார்க்கும் வேலையாட்கள் ஏராளம்மா?.. “என்றார்.
அவரின் முன்பு தானும் சிரித்த படி.. நடித்தவள்… மறுநாள் தன் தம்பியை போனில் அழைத்தாள்.
“என்னடா!… நான் உன்னை வர சொல்லி எவ்வளவு நாளாச்சு?…” என சகுந்தலா கேட்டதற்கு…
“அக்கா!.. திக்கிக் கொண்டே… நான் ஒரு புள்ளைய உயிருக்கு உயிராய் விரும்புகிறேன்… அவளை தவிர வேறு யாரையும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியாதுக்கா…” என்றான் சகுந்தலாவின் தம்பி கிருஷ்ணன்.
முதலில் ஷாக்காக இருந்தாலும்.. தன்னை சமாதானம் செய்து கொண்டு “சரி டா!… நான் உன்னை, நடிக்க தானே சொல்கிறேன்… நீ நேரில் வா.. மற்றதை நாம் பேசிக் கொள்வோம்…” என போனை வைத்தாள்… உடனே… சைரந்திரியிடம் அழைத்து அவனது வரவை பற்றியும் கூறினாள்.
ஏற்கனவே மரணத்தின் பிடியில் சிக்கிக் கொண்டது போல…
நொடிக்கு நொடி.. செத்துக் கொண்டிருந்தவள்.. கிருஷ்ணன் வருகிறான் என கேள்வி பட்ட அந்நொடியிலிருந்து, மரண பயத்தை உணர்ந்தாள்.
அன்று விடுமுறை.. காலையிலிருந்து, எந்த வேலையும் செய்ய பிடிக்காமல்… தன் சோகங்களை மெத்தையில் முகம் புதைத்து…விடுதலை வேண்டி குமறிக் கொண்டிருந்தாள்.
கிருஷ்ணனும், சகுந்தலாவும் அவளை தேடி அவளது அறைக்கு வந்தனர்.
“சைலு!..எப்படி இருக்கிறாய் ? உன்னை பார்க்க தான் வந்திருக்கிறேன் என கிருஷ்ணன் அவளை பார்த்து… கூறிக் கொண்டிருக்க… முகத்தில் சுதியே இல்லாமல் மெளனமாக எழுந்து அமர்ந்திருந்தாள்.
“சரி… நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க… நான் காபி போட்டு கொண்டு வரேன்” என நைசாக அங்கிருந்து நகர்ந்தாள் சகுந்தலா… அதற்காக காத்திருந்தது போல… அவளருகில் நெருங்கி அமர்ந்தான்…. உடனே சைரந்திரி எழுந்து விட…மேலிருந்து… கீழ் வரை அளவெடுத்தான்.
நான் நினைத்து பார்க்க முடியாத அழகி நீ.. உன்னை கல்யாணம் செய்து கொள்வதென்றால் எத்தனை காதலையும் இழக்கலாம் என அவளை பார்த்த மறுகனமே… தான் காதலித்த பெண்ணிற்கு துரோகம் செய்ய முடிவெடுத்து விட்டான். தன்னையே ஒருத்தி உயிராக நினைத்து.. உடலையும் கொடுத்திருக்கிறாள் என்று துளி கூட எண்ணமில்லாமல்… சைரந்தரியின் மேல் ஆசை கொண்டான்.
“என்னை உனக்கு பிடிக்க வில்லையா? என மெதுவாக அவளது கை பிடித்தான் கிருஷ்ணன்.
தன் கைகளை உருவிக் கொண்டவள்… “எனக்கு தலைவலியாக இருக்கிறது அத்தான்… ப்ளீஸ் நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்…” என்றாள் கண்ணீருடன்… அதனால் ஒன்றும் போசாது அமைதியாக வெளியில் சென்றான்…
“அக்கா!.. உன் செலக்ஷன் சூப்பர் கா… உண்மையிலே சைரந்திரியை எனக்கு பிடித்திருக்கிறது. வாழ்ந்தால் அவளுடன் தான் வாழ்வேன். இல்லையெனில் எனக்கு கல்யாணமே வேண்டாம்…” என சகுந்தலாவின் கை பிடித்து சுற்றினான் கிருஷ்ணன்.
“என்னடா? தீடீரென்று இப்படி சொல்கிறாய்.. அப்போ… நீ காதலித்த பெண்” என கேள்வியாய் அவனை நோக்க…
“நான் சொன்னதை நம்பி நன்றாக ஏமாந்து விட்டாயா?… உன்னிடம் சும்மா விளையாண்டு பார்த்தேன்..” என சிரிக்க.. அவனது பேச்சை.. இப்போது நிஜமாகவே நம்பி விட்டாள் சகுந்தலா…
அக்காவிடம்….ஒரு காதலி இருக்கிறாள் என்றும்…இப்போது அவள் கற்பமாக வேறு இருக்கிறாள் என்றும் தெரிய கூடாது… என முடிவெடுத்தான். சீக்கிரமாக சைரந்திரியை கல்யாணம் செய்து… இந்த வீட்டில் செட்டிலாகி விடனும் என மனதிற்குள் கணக்கு போட்டான். கிருஷ்ணன்.
அதனால்… ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டான்.. ட்ரஸ் வாங்கி கொடுப்பது… பூ வாங்கி கொடுப்பது என அவளை அணுகினான்… ஒரு நாள்… இது பற்றி ஐனகர் கூட ஆச்சரியத்துடன் கேட்டார்.
“அதில்லை மாமா!.. அப்பா… அம்மா இருந்திருந்தால் அவளுக்கு தேவையானதை செய்வாங்க… அந்த இடத்தில் நீங்கள் பார்த்து… பார்த்து செய்தாலும்… என் பங்கிற்கு நானும் செய்கிறேன்..” என நல்லவனுக்கு நல்லவன் வேஷம் போட்டான்…
“என்னங்க! சைரந்தரி மேல்… என் தம்பி எவ்வளவு அக்கரையாய் இருக்கிறான் பாருங்க!..” என சந்தடி சாக்கில்… கிருஷ்ணன் மேல்… அவரது அபிப்ராயத்தை தெரிந்துக் கொள்ள… எதிர் பார்த்து காத்திருக்க…
“நல்ல பையன் மா!.. சைரந்தரி கல்யாணம் முடிந்த உடனே… அவனுக்கும் நல்ல பெண்ணாக பார்த்து… நாமிருவரும் முன்னின்று திருமணத்தை நடத்தி வைப்போம்…” என கூறிச் சென்றார்
சைரந்தரி வாயாலே… நான் கிருஷ்ணனை தான் விரும்புகிறேன் என சொல்ல வைக்கிறேன். அப்புறம் கல்யாணம் தானாக நடக்கும் என சகுந்தலா மனதிற்குள் நினைத்தாள்..
“அப்படியென்றால்… நாம் அனைவரும்… இருவருக்கும் நல்லபடியாக கல்யாணம் நடக்க வேண்டும் என்று திருப்பதி
சென்று வருவோமா?.. சைரந்தரியும் கல்யாணம் முடிந்த பிறகு… உங்க முதலாளி வீட்டிற்கு சென்று விடுவாள். என் தம்பியும்… கிராமத்திற்கு சென்று விடுவான்… அப்புறம், நீங்கள் நான்.. பூமிஜாவும் தான் இருப்போம்… மூன்று பேருக்கு எதற்காக? அவ்வளவு பெரிய ட்ரீப்… “என்றாள் சகுந்தலா.
“நீ சொல்வதும் சரி தான்ம்மா… நாம பேமிலியாக எங்கும் சென்றது கிடையாது… நாள பின்ன அது… ஒரு குறையாக சைரந்திரிக்கு போய் விட கூடாது…” என ஐனகர் சந்தோஷமாக பேசினார்.
“இப்ப கூட அவ மனசு கஷ்டப்பட கூடாதுன்னு தான் சொல்கிறாரே.. தவிற… மகள், மனைவி பற்றிய நினைப்பு இவருக்கு… கிடையவே கிடையாதா?…” என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்..
“சரிம்மா.. நான் அலுவலகத்தில் லீவு கேட்டு விடுகிறேன்.. இந்த வார இறுதியில் நாம் அனைவரும் நீ சொன்ன படி.. திருப்பதி சென்று வரலாம்… அதற்கான ஏற்பாட்டை கிருஷ்ணனை பார்க்க சொல்லு. இந்தம்மா… அதற்கான பணம்?….” என அவளிடம் கொடுத்துவிட்டு…பேமிலி டூர்க்கு யுதிஷ்டிரனிடம் அனுமதியும் பெற்றுக் கொண்டார். ஐனகர்.
“அடுத்த மாதம் ஒரு நல்ல நாளில்… நிச்சயதார்த்தை வைத்துக் கொள்வோம்… அதன் பின்னர் ஆறு மாதத்தில் சைரந்திரி படிப்பும் முடிந்து விடும்.. அப்போது கல்யாணத்தை வெகு விமர்சியாக வைத்துக் கொள்ளலாம்.. நீங்க போய் யிட்டு வாங்க” என யுதிஷ்டிரன் கூறிவிட… ஐனகருக்கும் ஆறு மாத அவகாசம் தேவைபடுவதால்…’ சரி ‘என்றார்.
வழக்கம் போல அவளுக்காக காத்திருந்தான்… “பார்த்த முதல் நாளிலே மழையானவள்… இன்று கடல் போல்.. என்னை சூழ்ந்து விட்டாய்…. ” என அவளது புகைப்படத்தை பார்த்து பேசிக் கொண்டிருக்க….எதிரில் அவள்.. வருவது தெரிந்து கொண்டு காரிலிருந்து இறங்கினான். சைரந்திரியுடன் புதிதாக ஒருவன்..வருவதை கண்டதும்… யாரென்று கேட்போம் என அவளது அருகில் சென்றான். யுதிஷ்டிரன்.
“சைலு!… இப்போது உன் உடம்பு எப்படி இருக்கிறது?…” என அவளுடன் உரிமையாய் பேசிக் கொண்டிருக்க…
“யார்.. நீங்கள்… என் சைலுகிட்ட உங்களுக்கு என்ன பேச்சு?.. யார் சைலு இது… உன்னை ரொம்ப நலம் விசாரிக்கிறார்?…” என கிருஷ்ணன் கேட்கவும்… திரு திருவென முழித்து கொண்டிருந்தாள்… சைரந்தரி.
இப்படியோர் நாள் வர கூடாது என்பதற்காக தானே… நான் தவித்துக் கொண்டிருந்தேன்…
இவன்..எப்படி தாங்க போகிறான்?இன்றே சொல்லி விட வேண்டும்.. இதற்கு மேலும்.. இதை தள்ளி போட கூடாது.. என நினைத்தாள்
“சொல்லு சைலு!… என்னையே யார் என்று கேட்கிறேன்… முதலில் அவன் யாரென்று சொல்லு!..” என யுதிஷ்டிரன் கேள்வி கேட்டகவும்… நீங்கள் யார்? என்பது என் மனதிற்கு மட்டும் தான் தெரியும்…. இனி அது யாருக்கும் தெரிய போவதில்லை… என நினைத்தவள்.. பயத்துடன் அவனை ஏறிட்டு
“என்னை கல்யாணம் செய்து கொள்ள போகிறார் என்றதும்…” தன் கண்களில் அணிந்திருந்த கூலரை கழற்றினான்…
“என்ன சொன்னாய்?…” என நம்பாமல் மீண்டும் கேட்டான்… யுதிஷ்டிரன்.
“நான்… இவரை விரும்… விரும்புகிறேன்…. கூடிய சீக்கிரத்தில் மாமாவிடம் தெரியப்படுத்தி… கல்… கல்யாணம் என சொன்னவள் அழுக ஆரம்பித்தாள்… சைரந்தரி.
“சைலு!.. அழுகாத?…என்னால் தாங்க கொள்ள முடியாது..” என அவளின் கை பிடித்தவனின் .. கையை பிடித்து முறுக்கி… முதுகு புறமாக திருப்பினான் யுதிஷ்டிரன்.
வலியில் கிருஷ்ணன் கத்த ஆரம்பிக்கவும்… “ப்ளீஸ்… விடுங்க!…உங்களுக்கு பயந்து தான்… சொல்ல தயங்கினேன்.. அன்றே! என் மாமாவை வேலையை விட்டு தூக்கி விடுவதாக மிரட்டியதால்… தான் சொல்லவில்லை…. ..
ஒவ்வொரு தடவையும்… உங்களிடம் சொல்லலாம் என நினைப்பேன்.. ஆனால் உங்கள் கோபம் தான்… எனக்கு பயத்தை தந்தது…. என அவனது கை பிடித்து கெஞ்சினாள்…. “
“நீ… எப்படி இவனை கல்யாணம் செய்கிறாய் என நானும் பார்கிறேன்..” என்று…. அவனது சட்டையை பிடித்து கர்ஜிக்க… அதில் பயந்த கிருஷ்ணன் ஒரு… அடி பின்னால் நகர்ந்தான்…
“அவர்… இ.. இல்ல.. இல்லையெனில் நானும் உயிருடன் இருக்க மாட்டேன்..” என கிருஷ்ணனின் கை பிடித்து அழைத்து சென்றாள் சைரந்திரி.
அவள் செல்வதையே, பார்த்து கொண்டிருந்த வனுக்கு… என்ன செய்துவது என தோன்ற வில்லை.. தலையை கோதிய படி.. நின்றான்.
ரோட்டில் நின்று கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட… வேகமாக காரினை கிளப்பியவன்… அவள் சொல்லிய வார்த்தைகளை நினைவு கூர்ந்த படி… ட்ரைவ் செய்தான்…
“என்னை விட.. அந்த பொடி பையன் பெரிதாக போய்விட்டானா?… அப்படி என்னடி, அவனிடம் கண்டாய்? என்னிடம் இல்லாதது.. அவனிடம் அப்படி என்ன இருக்கிறது…?” என கையில் மது கிண்ணத்துடன் கெஸ்ட் ஹவுஸில் அமர்ந்து விட்டான்…. யுதிஷ்டிரன்.
ஏதே… அளவோடு குடித்தவன் அன்று.. அங்கிருந்தவற்றை முழுவதுமாக குடித்து காலி செய்தான். அதோடு… மட்டுமல்லாது கார்.. டிரைவ்விங் செய்து ஆக்சிடன் ஏற்படுத்தினான். அது தெரியாமல்… சைரந்தரி அங்கு வாதாடிக் கொண்டிருந்தாள்…
“அத்தை!.. ப்ளீஸ்…நான் ஏதும் செய்யவில்லை. உங்களது பாசத்திற்காகவும்…காலம் முழுவதும் மாமாவின் அருகில் இருக்கும் வரம் கிடைக்கும் என்பதாலும்… இந்த கல்யாணத்திற்கு ‘சம்மதம்’ என்றேன்…என்னை நம்புங்கள்..” என கையெழுத்து கூம்பிட்டாள்… சைரந்தரி.
“ஆமாம்… கா!… உண்மையிலே இது தான் நடந்தது.. அவனிடம் கூட என்னை விரும்புவதாக தான் கூறினாள்..” என கிருஷ்ணன்.. சைரந்தரிக்கு பரிந்து பேசினான்.
“அது இல்லடா!…இவள் மட்டும் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்க வில்லை என்றால்… நீ செத்துறுவேன் என்கிறாய். நீயில்லாமல்… நான் மட்டும் உயிருடன் வாழ்ந்து என்ன செய்ய போகிறேன்? நானும் உன் கூடவே வந்திருவேன் டா.. ” என கதறி அழுதவளிடம்… கை பிடித்து… “அத்தை… நீங்க அப்படி சொல்லாதீங்க!… மாமாவிற்கு உங்களை விட்டால் யாருமில்லை ?… “என ஆறுதல் கூறினாள். சைரந்தரி.
“ஆனால்… எனக்கு அந்த பணக்காரனை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது… அவன் ஏதாவது கிருஷ்ணனை செய்து விடுவானோ?… ” என்று
உண்மையிலே… சகுந்தலா பயந்தாள்.
“அத்தானுக்கு எதுவும் ஆக விட மாட்டேன் அத்தை…! நீங்க தைரியமாக இருங்கள்…”
” சரிம்மா!… இன்று இரவு திருப்பதி செல்வதற்கு தேவையானவற்றை எடுத்து வை. அப்படியே!… பூமிஜா துணிமணியையும் உன்னுடைய பையில் வைத்துக் கொள்!…” என கூறினாள்… சரி… என்று தலையாட்டி விட்டு… தன் அறையில் சென்று…. பூட்டிய கதவின் மீது சாய்ந்து கண்ணீர் வடித்தாள்….
“ப்ளீஸ் திரன்! என்னை மன்னிச்சிருங்க! உங்களை ரொம்ப காய படுத்தி விட்டேன். என்னால், உங்களுக்கு எந்த வித சுகமும் இருக்காது…நான் ராசி கெட்டவள்… என்னை விட படிப்பிலும், அந்தஸ்திலும், அழகிலும்… சிறந்த பெண்ணை நீங்கள் கல்யாணம் செய்யனும்…. அது தான் இப்போதைக்கு என்னுடைய ஆசை… என மனதிற்குள்… நிமிடத்திற்கு நிமிடம்…யுதிஷ்டிரனிடம் மன்னிப்பு வேண்டினாள்… சைரந்தரி….
இரவு பயணம் இதமாக ஆரம்பித்தது….. அனைவரும் குடும்பத்துடன் திருப்பதி கிளம்பினார்கள். “அந்த ஏழு மலையானிடம்…நகை, நட்டு, பணம் என்று கேட்காமல்… நிம்மதியை மட்டும் வேண்டினாள்.. சீக்கிரம் யுதிஷ்டிரனுக்கும்… நல்ல படியாக திருமணம் நடக்க வேண்டும்…
வழக்கம் போல தன்… மாமாவின் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்….திருப்பதி சென்று வந்தால்… திருப்பம் வரும் என்பார்கள். அது போல, அங்கு சென்றது, மனதிற்கு அவ்வளவு ஆறுதலை சைரந்தரிக்கு அளித்தது… நல்லபடியாக தரிசனம் முடிந்து.. வீட்டிற்கு திரும்பினார்கள்.
சாலையின் இரு பக்கமும் மரங்களை கடந்து சென்ற படி… பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது…. சாலையில் கண் பதித்த படி… சைரந்தரி அமர்ந்திருக்க… அவளது தலையினை கண்ணீருடன் தடவினாள்…சகுந்தலாவிடம் என்றுமில்லாத ஒரு பாசம் தென்பட்டது. அவளை பார்த்து புன்னைகத்து மீண்டும் சாலையின் பக்கம் தன் பார்வையை திருப்பினாள்…
அப்போது… காரை நிறுத்துங்க! என சகுந்தலா குரல் கொடுக்கவும்.. சைரந்திரியும், சகுந்தலாவும் காரிலிருந்து இறங்கினார்கள்…..
“என்னாச்சு அத்தை!… என பதற்றத்துடன் கேட்க… குடம் குடமாய்… வாந்தி எடுத்தாள்
சகுந்தலா.
அவளது கை பற்றி… சிரிப்புடன்
“உங்க மாமா!… மீண்டும் அப்பா ஆகிருக்கிறார்…” என களைப்பாக கூற… சைரந்தரிக்கு சந்தோஷத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை….
“சூப்பர் அத்தை!…நான் தான் குழந்தையை வளர்ப்பேன்… உங்களுக்கு கூட தர மாட்டேன்..” என மகிழ்ச்சியாக இருவரும்…பேசிக் கொண்டிருந்த சமயம்… நின்றுக் கொண்டிருந்த
காரின் அருகில் கட்டு பாட்டை இழந்த லாரி… வந்த வேகத்தில் அந்த காரின் மீது மோதியது….
வெடித்து சிதறிய காரின் அருகில் நின்றிருந்த இருவரின் மீது பட்டு… இருவரும் தூக்கி வீச பட்டனர். அதில் சகுந்தலாவிற்கும், சைரந்தரிக்கும் பலமாக அடிபட்டது…. அவர்கள் மருத்துவமணையில் அனுமதிக்க பட்ட….அதே சமயம், யுதிஷ்டிரனும் கார் விபத்தில்… காலில் ஏற்பட்ட பிராக்சர் காரணமாக வெளிநாடு சென்றிருந்தான்….
மேடம் என்னை பாருங்க!… மேடம் என யாரோ.. தன் கன்னத்தை தட்டி எழுப்ப… கண்களை திறக்க முயற்சி செய்தாள். ஆனால், அவளால் முடியவில்லை…..
விபத்து ஏற்பட்டு, மூன்று நாள் கழித்து… கண் விழித்து பார்த்தவளின் நினைவிற்கு…. அந்த கொடூர சம்பவம் தான்… நினைவிற்கு வந்தது…. அவளது கை, கால்கள் எல்லாம் அசைவது தெரிந்து…செக்கப் செய்து பார்த்தனர்…கை, கால்களில் சிறிது வீக்களுடன் காண பட்டாள்…
டாக்டர்… என் குடும்பம் என கேட்க… சாரிம்மா!.. அந்த காரில் இருந்த மூன்று பேரும்… ஸ்பார்ட் அவுட்… இன்னொரு லேடிக்கு மட்டும்… என இழுத்தனர்.
“அ… அத்… அத்தை…! அவர்களுக்கு என்னவானது?..” என அழுகையுடன் கேட்கவும்…
“அவர்களுக்கு தலையில் பலமாக அடி பட்டிருக்கிறது.. அதனால் நினைவு திரும்ப வில்லை … அவர்கள் கர்ப்பமாக இருந்தார்கள்… நடந்த விபத்தில் குழந்தையும் கலைந்து விட்டது..” என கையை விரித்தனர்.
“அய்யோ!… ஏன் எனக்கு மட்டும் இப்படியானது ?…” என ஆங்…… “நான் என்ன பாவம் செய்தேன்?..” என சைரந்திரி அழுத.. அழுகையால்… அங்கிருந்தவர்களுக்கும் கூட கண்ணீர் வந்தது…
“மனச தேத்திக்கோமா… நீ இப்படி அழுது கொண்டிருந்தால்… உன் அத்தையை யார் பார்த்துக் கொள்வது?… நீ தான்… ஒரு சின்ன குழந்தை போன்று கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்…. அவர்களுக்கு சீக்கிரம் நினைவு திரும்பிவிடும்… மா…” என யாரோ, முகம் தெரியாதவர்கள் ஆறுதல் கூறினார்கள்….
அவர்களின் துணையுடன்… ஒரு மாதத்திற்கு பிறகு… அவளுடைய சொந்த ஊருக்கு திரும்புனாள்… தினமும் கண் மூடினால்.. அந்த கோர விபத்து தான்… அவளது கண் முன் வந்து…தான் இழந்த சந்தோஷத்தை நினைவு படுத்தியது.
அந்த சின்ன பிஞ்சு குழந்தை என்ன செய்தது?…. என்று பூமிஜாவை நினைத்து… மன வறுத்ததுடன்… அமர்ந்திருந்தவள்…பூமிஜாவின் விளையாட்டு பொருட்களை எல்லாம்… ஆனாதை ஆசிரமத்திற்கு கொடுத்து விட்டாள்… அவர்கள் சம்மந்த பட்ட… அனைத்தையும்… இல்லாதவர்களுக்கும்..
இயலாதவர்களுக்கும் கொடுத்து விட்டாள்…. சைரந்தரி.
“அத்தை!… இனி மேல் உங்களுக்கு நான் இருக்கிறேன்!… நீங்கள் முன்பு போல்… என்னை அதட்டி வேலை வாங்கணும்…அதற்காகவாது… சீக்கிரம் உங்களுக்கு, நினைவு திரும்ப வேண்டும் என நித்தமும்… தன் அன்றாட நிகழ்வுகளை, அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்…
அப்போது… மேடம்!… என்ற அழைப்பு கேட்டு, வெளியில் வந்தாள்… சைரந்தரி.
நான் ஐனகரின் பிரண்ட்… அவனுடன் கம்பெனியில் வேலை பார்க்கிறேன்… என்று கூறவும்… அவரை வரவேற்று அமர வைத்தாள்…
“யாராலும் தாங்க முடியாத இழப்பு மா!… நீ தான் உன்னை தேற்றிக் கொண்டு, அவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஐனகரின்….. ஒய்வு ஊதியம், இன்சூரன்ஸ் அமெண்ட், இதலாம் சேர்த்து ஐம்பது லட்சம் இருக்கிறது. அது மட்டுமல்லாது, மாதா… மாதம் கம்பெனியிலிருந்து…
ஐனகரின் மனைவிக்காக,. உடல் நலம் கருதி.. அவர்களுக்கு சரியாகும் வரை மூவாயிரம்… உன் அக்கவுண்டிற்கு வரும் படி செய்திருக்கிறோம்…. “என கூறினான்…..
“நன்றியை தவிற… வேறு எதுவும் சொல்ல முடியாது அண்ணா!..” அப்போது யுதிஷ்டிரனின் நினைவு வர… “உங்.. உங்கள்… எம். டி. யா?… இந்த ஏற்பாடு எல்லாம் செய்தார்..” என அவனை பற்றி தெரிந்துக் கொள்ள கேட்டாள்…
“சின்ன எம். டி… மேற்படிப்பிற்காக வெளி நாடு சென்றிருக்கிறார்… அவருடைய அப்பா தான், இதற்கெல்லாம் ஏற்பாடு செய்தார்…” என சொல்லி விட்டு சென்றார்…… நாட்கள் ஓடியது… தன் மாமாவின் ஆசை படி.. கல்லூரி படிப்பை முடித்து விட்டு…
நினைவு இழந்து தவிக்கும்… சகுந்தலாவிற்கு… அனைத்து பணிவிடைகளையும்… செய்து விட்டு… வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்… மூன்று வருடங்கள்… ஒரே கம்பெனியில்.. தாக்கு பிடித்து… நன்றாக வேலையை கற்றுக் கொண்டாள்.. அவளை பற்றி முழுவதும் தெரியாத யுதிஷ்டிரனுக்கு… அவளை மறக்கவோ… மன்னிக்கவோ… முடியவில்லை…
அவளது நிராகரிப்பு பிறகு…. தொட்டத்திற்கெல்லாம்… அக்னியாய் வார்த்தைகளை வெளி படுத்தினான்… ஈவிரக்கம் இவையெல்லாம் என்ன விலை? என்று கேட்க ஆரம்பித்தான்.
புதிய ஊர்.. புதிய நாடு என்றிருந்தும்.. அவனது மனதை மாற்ற முடியவில்லை.. வருஷங்கள் கடந்து செல்ல… அரக்க குணமுடைய மனிதனாக உருமாறினான்…
அவளை அணு அணுவாக தண்டிக்க நினைத்தான்… அவனுடைய கோபம்.. வெறி எல்லாம்…. தலைக்கு மேல் ஏறி… அவளை துன்புறத்த வேண்டும் என நினைத்தது.. அவனது நடவடிக்கையை கவனித்துக் கொண்டிருந்த… நந்தர் தான்… சைரந்தரி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து… அந்த கம்பெனியை விலைக்கு வாங்கும் ஐடியாவையும் கொடுத்தான்.
யுதிஷ்டிரனின் இந்த தீடீர் மாற்றத்திற்கு முழுக்க.. சைரந்தரி தான் காரணம் என்றும்.. அவள் கிடைத்து விட்டால்… மீண்டும் பழைய படி… மனிதனாக மாற வாய்ப்பு உண்டு என கருதி…..தாயகம் அழைத்து வந்தான்.
இருவரும்… தங்கள் துணையை உயிருக்கு உயிராய் காதலிக்கின்றனர்… அவர்களின் பிரிவிற்கு ஏற்பட்ட.. சூழ்ச்சி தெரியாமல்.. காதலால் ஒருவரின்… அருகாமையை மற்றொருவர் விரும்பினர்…. என்பதை நந்தர் தெரிந்துக் கொண்டு அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தான்….
மதிய வேளையில், கண்களை திறந்தவள்… அறையை நோட்டமிட்டாள். ஏதோ புதிய இடம் என்று மூளைக்கு எட்ட, ஏழ நினைத்தாள் முடியவில்லை… தூக்கத்திலும் இரும்பு பிடியாக, அவளை பிடித்த படி… அவளருகில் உறங்கிக் கொண்டிருந்தான் யுதிஷ்டிரன்.
அவனை கண்டதும் பதறி எழுந்தாள். திறந்த புத்தகம் போன்றிருந்த மேனி… வேறு மேலும் அவளை பயமுறுத்த நேற்று…நேற்று, நான்..ஏன்… இப்படி? என யோசிக்க முடியாமல்… கண்களில் கண்ணீர் மழையாய் பொழிய ஆரம்பித்தது.
அவனிடம் எழுப்பி, நடந்ததை பற்றி கேட்க…பயமாக இருந்தது. அவர்களது நிலைமையே… அவளின் நிலையை தெளிவாக சொல்ல… சத்தமில்லாமல் கண்ணீர் சிந்தினாள்.
எந்த பெண்ணிற்கும்… இந்த நிலை வர கூடாது. “தான் காதலித்தவனிடம்.. தாலியை வாங்காமல்.. வயிற்றில் புள்ளைய வாங்கிக் கொள்வது… எவ்வளவு பெரிய இழுக்கு…” என நெஞ்சமெல்லாம் ரணமாய் துடித்தது.
காதலித்தவளையே… கை பிடிக்க வேண்டி… உறுதியுடன் நின்றானே!.. நான் தான்
கேட்கலையே!.. என தன் தலையில் அடித்துக் கொண்டாள் சைரந்திரி.
தூக்கம் கலைந்து… வெற்று உடம்புடன்… எழுந்தமர்ந்தவன்.. அவளை பார்த்து புன்னகை… தலை குனிந்து கொண்டாள்.
“இப்போது…நான் யாரென்று தெரிகிறதா?” என கேட்க… ஓ.. வென்று ஆழ ஆரம்பித்தாள்.
“இப்போது என்ன நடந்தது என்று அழுது கொண்டிருக்கிறாய்?.. இதலாம்… இப்போது சர்வ சாதாரணம்…” என எழுந்து அவன் உடை மாற்ற, அவளுக்கான உடையை அவளிடம் வீசினான். உடையை கூட மாற்ற வேண்டும் என அவளது நினைவிற்கு எட்ட வில்லை…
தான் செய்தது.. எவ்வளவு பெரிய தவறு என நினைத்து, அவள் கூனி குறுக்கி கொண்டிருக்க.. அவனது வார்த்தைகள், வேறு மேலும் அவளை சாகடித்தது.
“ஓ…! உன் வேஷம் வெளிப்பட்டு விட்டது என்று அழுகிறாயா?..
இல்லை… ஒரு தடவை யூஸ் பண்ணிய பொருளை… மறுதடவை யூஸ் பண்ணுற பழக்கம் எனக்கில்லை என்பதால்… வருதபடுகிறாயா?..” என்றான்.
“அய்யோ!… இல்லங்க… நான்..” என ஆரம்பித்தாள்… அவன் மேல்.. உயிரையே வைத்திருக்கும்.. தன் காதலை எப்படி நிருபிப்பது? என தவித்தாள்.
“எந்த பெண்ணிடமும், நான் இப்படி நடந்துகிட்டது கிடையாது… நேற்று உன்னுடைய ஒத்துழைப்பை பார்த்து.. எனக்கு இப்பொழுதெல்லாம்… நீ வேண்டும் என்று தோன்றுகிறது. எப்போது…. அப்படி தோன்றுகிறதோ.. அப்போது தாராளமாக உன்னை அழைக்கிறேன்… அணைக்கிறேன் சரியா!..” என்றதும்,
“போதும்… நிறுத்துங்க!.. நான் உங்களை உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன். அதனால் தான்… நேற்று..” என.. அவள் பேசிக் கொண்டிருக்க.. அவளது கழுத்தை பிடித்து நெறித்தான் யுதிஷ்டிரன்.
“என்னடி சொன்ன! நீ என்னை விரும்புகிறாயா?.. உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தமிருந்தால்.. வேறு எவனையோ காதலித்தாக சொல்லிய, நீ…. இப்போது என்னை காதலிக்கிறேன் என்கிறாய்.. உன்னை கொன்றாலும்.. என் ஆத்திரம் அடங்காது…” என… மேலும் அவளது கழுத்தை அழுத்தி பிடித்தான்.
நான் இந்த நிலைமையில் உயிர் வாழ்வதை விட, உங்கள் கையால் உயிரை விடுவது எனக்கு சந்தோஷம் தான்! என்று கண்களில் வழியும் நீருடன் அவனை நோக்கி படி ஆடாமல், அசையாமல் நின்றாள்.
அவளது கண்ணீர் துளிகள்… அவனது கையில் பட,… ‘என்ன நினைத்தானோ ? தெரியவில்லை… கைகளை விலக்கி கொண்டான்.
