4 கட்டா மீட்டா காதல்

This entry is part 3 of 3 in the series கட்டா மீட்டா காதல்

கட்டா மீட்டா காதல்

கட்டா மீட்டா காதல்

கட்டா மீட்டா காதல்

கட்டா மீட்டா காதல்

கட்டா மீட்டா காதல்

4 கட்டா மீட்டா காதல்

4 கட்டா மீட்டா காதல்

மிட்டாய் 4

மறுநாள் கிரவுண்டில் எல்லோரும் பயிற்சியில் இருக்க அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தாள் ஸம்ருதி..

தொளதொளவென்று டி-ஷர்ட்டும் முக்கால் ஷார்ட்ஸுடன் அங்கு வந்து சேர்ந்த அவளை எல்லாரும் ஆ வென்று வாய் பிளந்து பார்க்க… ருத்ராக்ஷன் மட்டும் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அவளைப் பார்த்தான்…

ருத்ராக்க்ஷனை பார்த்த அவன் நண்பர்கள் எல்லாரும் வழக்கம்போல் “ஆரம்பிச்சிட்டா யாரைப் பார்த்தாலும்” எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருக்க… அதைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்ட அவன் நண்பர்கள் இவனை வைத்துக் கொண்டு ஒரு சைட் கூட அடிக்க முடியாது நாளிதழை பார்க்க கூட முடியாது என்று கமெண்ட் பண்ணி கொண்டிருந்தனர்…

அப்பொழுது அங்கு வந்த ஸம்ருதியை உடனே…. ருத்ராக்ஷன்
“எல்லோரையும் ப்ராக்டிஸ் 9 மணிக்கு வர சொன்னா நீ அரை மணி நேரம் கழிச்சு வர என்ன நெனச்சிட்டு இருக்கு உன் மனசுல… நீ பெரிய ஆளா எப்படினாலும் இருந்தாலும் உன் க்ளாஸ்ல எப்படினாலும் இருக்கலாம்… நான் தான் உன்னோட கோச்சு காலேஜ்ல கேப்டன் எல்லாம் நான் தான் நான் சொல்றதைக் கேட்கலைன்னா உன்னை டீம்லையே எடுக்க மாட்டேன் யார் வந்து சொன்னாலும் சரி இப்ப நீ இப்போ லேட்டாக வந்தது உனக்கு பனிஷ்மென்ட்கிரவுண்ட சுத்தி 50 தடவை ஓடற..

ஸம்ருதி ருத்ராக்க்ஷனை மனதுக்குள் வறுத்து எடுத்து எதுக்கு நான் லேட்டா வந்து இருக்கேன் காரணத்தை கூட கேட்காமல் முதல் நாளே இப்படி செய்கிறான் இவனை பாரு என்ன பண்றேன் என்று மனசுக்குள்ள கருவி கொண்டு இத்தனை “பேர் இருக்க “ஆ” வென்னு பாக்குறான்… இவன்மட்டும் எப்படி மூஞ்சில சலனம் இல்லாம இருக்கான்” என்று எண்ணியப்படியே தன்னை டீம்குள் செலெக்ட் ஆகுறது முக்கியம் அதனால் இவன் சொல்றதெல்லாம் கேட்க வேண்டி இருக்கு எல்லாம் என் தலையெழுத்து…

என்று ஒரு பக்கம் மனது அவனைத் திட்டினாலும் இன்னொரு பக்கம் இந்த அம்பது ரவுண்டு ஓடுவது போல் அவனை சைட் அடிக்கலாம் “என்ன அழகா மேன்லியா எவ்வளவு சூப்பரா இருக்கும் பார்த்தவுடனே பச்சக் என்று மனசுக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் எப்படித்தான் இவன் மட்டும் எப்படி எல்லாத்தையும் பாத்துட்டு முகத்தில் எந்த ரியாக்க்ஷனும் இல்லாமல் இருக்கான் இதெல்லாம் எங்கே இருந்து போய் கற்று வைத்திருப்பான் நமக்கு இதெல்லாம் தெரிந்து தொலைய மாட்டேங்குது எப்ப பாரு எங்கிட்ட பல்பு வாங்குவது நமக்கு வேலையா போச்சு (நீயா இது நீயா இது அவள் மனசாட்சி அவளை கிண்டல் செய்தது) ”

“ஒருத்தன் உன்னை பார்த்தாலே அவன் வந்து பத்து நாளைக்கு உன் பக்கத்துல வராமல் தடுக்க பேசுற பேச்சுலையே ஓடிருவான்… இவன் மட்டும் என்ன ஸ்பெஸில் இவன இப்போ இப்படி ஆனு வாய் மூடாம பாத்துட்டு இருக்கே”… உன்னை பத்தி என்ன நினைப்பார் அவன் சொன்ன பனிஷ்மென்ட் ஸ்டார்ட் பண்ணு இல்லன்னா உன்னை டீம்ல எடுக்காமல் போயிட போறேன் போ போ” என்று அவள் மனசாட்சி அவளை சுயிங்கம் கம் போல் போல் மென்று துப்ப.. அவள் மனசாட்சி துப்பிய சுயிங்கத்தை
அலட்சியமாகத் தாண்டிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்…

ஸம்ருதி ஓட ஆரம்பித்ததை பார்த்துக் கொண்டிருந்த ருத்ராக்க்ஷன் அங்கு அனைவருக்கும் ப்ரக்டிசே ஆரம்பித்துவிட்டான்… மற்ற அனைவரும் இந்த “ஸம்ருதி எல்லாரையும் அவ்ளோ எதிர்த்து பேசுவது இவன் சொன்னா மட்டும் கேட்டுட்டு போகுதே” என்ன விஷயமாக இருக்கும் தீவிர சிந்தனையில் இருக்க ருத்ராக்க்ஷன் போட்ட ஒரு சத்தத்தில் எல்லோரும் சிந்தனை கலந்து ப்ராக்டிஸ் செய்ய தொடங்கினர் அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதை பார்த்து கொண்டு ஓடிக் கொண்டிருந்தாள் ஸம்ருதி…

ஆண்களிடம் அவன் காட்டும் கோபமும் பெண்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அவர்களிடம் அவன் காட்டும் கண்டிப்பும் அவர்கள் பார்வையை தவிர்த்து அவன் என்னை விட்டு ஒரு அடி விலகி நின்று அவன் பார்க்கும் பார்வையும் பெண்களிடம் வந்து பார்வையால் கூட கண்ணியம் காக்கும் அவனது குணமும் ஆறடிக்கு சற்று கூடுதலாக உள்ள உயரமும் .. உருண்டு திரண்டிருந்த அவனது புஜங்களும்.. நீளமாக இருந்த அவனது கால்களும் ஸம்ருதி கண்ணுக்கு விருந்தாகின…

50 ரவுண்டுகள் ஓடி முடித்து ருத்ராக்க்ஷன் பக்கம் வந்தாள்… அவளைப் பார்த்த ருத்ராக்க்ஷன் “இன்னிக்கு இது போதும் நாளைக்கு வேறு ப்ராக்டீஸ் வெச்சுக்கலாம் இப்போது எல்லோரும் கிளம்புங்கள்” என்று கூறி அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டான்..

அதைக் கேட்ட போதே “மனசுக்குள் இவனை கொஞ்ச நேரம் சைட் அடிக்கலாம்னு வந்தா நாளைக்கு ப்ராக்டீஸ் எல்லாமே முடிச்சு அனுப்பி விட்டுட்டான்… நான் என்ன பண்ண… எப்படி உன்னை பார்க்கலாம்???” என்று யோசனை முறையில் தன் மனம்போல் தன்னையே தலையில் தட்டிக் கொண்டு “நீ எவ்ளோ கெத்து ஏன் இவன் கிட்ட மட்டும் இப்படி இருக்க இவன் உன்ன அவன் பக்கம் சாய்த்து விடுவான் பார்த்து இவன் கிட்ட நீ வந்து
ஜாக்கிரதையாக இரு என்று மனசாட்சியின் பேச்சுக்கு காது கொடுத்து அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாள்…

மறுநாள் வகுப்பிற்கு வந்த ஸம்ருதி மத்தவங்களிடம் பந்தா காட்டிக் கொண்டும் திமிர்பிடித்தவள் போல் பேசிக் கொண்டும் உதாசீனப் படுத்துக்கொண் டும் இருந்தாள்..

இந்த ஊர் உதாசீனம் திமிர்த்தனம் எல்லாம் மாலையில் ருத்ராக்க்ஷனை காணும் வரையில் மட்டுமே அவனை கண்டதும் அவளது இயல்பு அப்படியே மாறிவிடும்…
ருத்ராக்க்ஷனை பார்த்ததும் அவளுக்கு மனது படபடவென்று அடிக்கவில்லை வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கவில்லை பின்னணியில் இளையராஜா இசை கேட்கவில்லை தேவதைகள் அவளை சுற்றி ஆடவில்லை ஆனாலும் அவனைக் கண்டதும் அவளுக்கு இனம் புரியாத ஒரு உணர்வு அவளை ஆட்டிப் படைத்தது அவன் சொல்வதை கேட்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று அவளை யோசிக்க வைத்தது..

இந்த உணர்வுக்குப் பெயர் அவள் இன்னதென்று அறியவில்லை அதை ஆராய முற்படவில்லை…. அந்த உணர்வு சுகமாக இருந்ததால் அதை அப்படியே சந்தோஷமாக அனுபவிக்க முடிவு செய்தாள்…

விளையாடும்போது அவர்கள் என்ன தவறு செய்து அவன் திட்டினாலும் அவளுக்கு விளையாட்டு மீது இருந்த ஆர்வத்தை அவன் திட்டுவது நன்மைக்காகத்தான் என்று ஸம்ருதி புரிந்துக் கொள்வதால் எந்தவித பிரச்சனையுமின்றி பயிற்சிகள் சென்றது..

ஒரு மாதம் கடந்த நிலையில் பயிற்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த போது ருத்ராக்க்ஷன் அவசர வேலை காரணமாக ஒரு வாரம் பயிற்சி அளிக்க வர முடியவில்லை ஏன் அவன் கல்லூரிக்கும் வரவில்லை அந்த சமயத்தில் ஸம்ருதி மிகவும் சோர்ந்து போனாள் அப்போது தான் அவள் தன் மனதை அவளை உணர்ந்தாள்..

ஸம்ருதி அவள் வீட்டின் படுக்கை அறையில் ருத்ராக்க்ஷன் ஏற்படுத்திய நினைவுகளுடன் படுத்துக் கொண்டிருந்தாள் அப்பொழுது தன் மனதை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் ருத்ராக்ஷம் அழகும் அவனுடைய மேனரிசமும் அவளைப் மிகவும் ஈர்த்தது அவன் மேல் பித்துக் கொள்ள செய்தது

ஸம்ருதி அழகே வடிவானவள்!!!

ஐந்தே முக்கால் அடியும் மாநிறத்திற்கு கூடுதலான நிறமும் சற்று பூசினார் போன்ற தேகமும் பெரிய கண்களும் தோள் அளவிலே உள்ள அவரது கூந்தலும்.. உன் கைகள் அவள் கையை கொண்டு சென்று விடும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்…

அவளை ஒரு முறை பார்த்தவர்கள் மறுபடியும் திரும்பி பார்க்காமல் செல்வது மிகவும் குறைவு என்றே சொல்லிவிடலாம் திமிர் பிடித்தவளாக இருந்தாலும் .. காலேஜில் அவளுடைய அழகுக்கும் செயலுக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு..

அவர்கள் எல்லாரையும் ஒரு திமிரான பார்வையில் தள்ளி நிப்பாட்டி விடுபவள் ருத்ராக்க்ஷனிடம் எப்படி விழுந்தாள் என்பது அவள் அறியா ரகசியமே!!!

காதல் மூன்றெழுத்து மந்திரச் சொல் சிலர் வாழ்க்கையில் அமைதியான நதிப் போல் நுழையும் சிலர் வாழ்க்கையில் ஆர்ப்பாட்டமான சூறாவளியாய் சுழன்று அடிக்கும்..
காதல் இன்பமா துன்பமா வரமா சாபமா அது அவர்களைப் பொறுத்து அவர்களின் வாழ்க்கையைப் பொறுத்தது..

ஒரு வாரம் கழித்து கல்லூரிக்கு வந்தவனை பார்க்க ஆவலாக சென்றாள் ஸம்ருதி..
கழுத்தில் விசிலை மாட்டிக்கொண்டு ஒரு முக்கால் பேன்ட் டி-ஷர்ட்டும் ஒரு கையில் பந்தை சுழற்றிக் பிடித்துக் கொண்டிருக்கும் அவனை கண்டதும் அவள் நெஞ்சம் அவன் காலடியில் சரிந்தது..

அவனது உயரமும் அதற்கேற்ற உடற்கட்டும்… விளையாட்டினால் அவன் முகத்தில் துளிர்த்த வேர்வையும் அலை அலையாய் படர்ந்த கேசமும் அவனது சிவந்த நிறத்திற்கு எல்லாம் எடுப்பாக தெரிந்தது… இவன் என் தேவதூதன் என் வாழ்க்கையில் மாற்றம் செய்ய வந்தவன்… இவன் எனக்கு வரமா சாபமா என்று மனதுக்குள் ஒரு பட்டி மன்றமே நடத்திக்கொண்டிருந்தாள்..

அவளாள் முடியவில்லை அவனை பார்க்க பார்க்க அவன் மேல் காதல் வழிந்ததை எப்படியாவது தன் மனதை அவனிடம் சொல்லிவிடவேண்டும் என்று எண்ணி இருந்தாள்…

அதற்கான சந்தர்ப்பம் அவளுக்கு இரண்டு மாதம் கழித்து அமைந்தது..
ஒருநாள் யாருமற்ற தனிமையில் இரு மற்றும் ப்ராக்டீஸ் செய்து கொண்டிருக்க அவள் தயங்கித் தயங்கி அவன் அருகில் செல்ல… அவளைபார்த்துக் கொண்டிருந்தான் ருத்ராக்க்ஷன்..

இவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருக்க அங்கு மொழிக்கு வேலை இல்லை..

மற்றவரிடம் படபடவென பாப்கார்னாய் வெடிப்பவள் தன்னை கண்டாள் மட்டும் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாள் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க..
அவளுக்கும் அதே யோசனை தான் மற்றவர்களிடம் வெடி மத்தாப்பு போல் வெடிக்கும் நான் இவனிடம் மட்டும் ஏன் பேச தயங்குகிறேன்…
ஒருவேளை இதற்கு பெயர் தான் காதலா!!
இதற்கு பெயர் தான் காதல் என்றால் “எஸ் ஐ லவ் திஸ் ஃபீலிங்”…
ஒரு நிமிடத்தில் என்னுடைய அடையாளத்தை மாற்றி இது நான் தானா என்றளவுக்கு எல்லோரும் என்னை ஆச்சரியமாக பார்க்க வைத்தது அவ்வளவு சக்தி இருக்கிறதா இந்த காதலுக்கு என்பதை டெஸ்ட் செய்து பார்த்து விடுவோம் என தன்னுக்குள்ளே திட்டமிட்டுக் கொண்டிருந்தாள்…
((நீ டெஸ்ட் மேட்ச் விளையாடுவியோ ஒன் டே மேட்ச் விளையாடுவியோ முதல்ல ஒரு டீ ட்வெண்ட்டி அதிரடியா விளையாடு அவனிடம் காதலை சொல்லி அதுக்கு அப்புறம் பாப்போம் என்று மனசாட்சி கவுண்டர் கொடுத்தது))

கனவு உலகில் மிதந்தவளை ருத்ராக்க்ஷனின் குரல் நிகழ் உலகிற்கு கொண்டுவந்தது”ஏய் என்ன கனவா??…. நீ இப்பதான் இப்படியா இல்லை எப்பவும் இப்படி தானா” அவன் தன்னை கேலி செய்கிறான் என்பதை உணர்ந்து..

அவளும் சலிக்காமல் ” வாவ்… உங்களுக்கு ட்ரைன் பண்ண மட்டும் தான் தெரியுமுன்னு நினைச்சேன் ஆனா பரவாயில்லை சீனியர் உங்களுக்கு அடுத்தவங்க மைண்ட் கூட படிக்க தெரியுதே” என்றப்படி அவனுக்கு தகுந்த பதிலடி கொடுத்தாள்….

அவளை முறைத்துப் பார்த்தவன் “என்ன கொழுப்பா??….

அம்பது ரௌண்ட் ஓடுனது பத்தலையோ??… இன்னொரு அம்பது தடவை ஓடுனா கொழுப்பு குறைஞ்சீரும்”அவன் அவளை மிரட்ட….

அவனைப் பார்த்து சிரித்தவள் “அவ்ளோ கொழுப்பா இருக்கு சீனியர்… பட் நான் ஸ்லிம்மா தானே இருக்கேன்…

சரி விடுங்க உங்களுக்கு வசதியா இல்லனா இன்னும் குறைச்சிறலாம்”அவள் இப்பொருள் படப்பேசினாள்…

“என்ன சொன்ன” என்று ருத்ராக்க்ஷன் கோபமாக கேட்ட

“இல்ல சார் ப்ராக்டிஸ் பண்ண உங்களுக்கு கஷ்டமா இருக்கும் அதான் சார் சொன்னேன் இன்னும் கொழுப்பை குறைச்சிறலாம்னு”…

அவளிடம் வாய் கொடுத்தால் தன் வாயையே பிடுங்குகிறாள் என்பதை உணர்ந்தவனாய் “இன்னைக்கு இந்த வாம் அப் போதும் …. மிச்சத்தை நாளைக்கு பாத்துக்கலாம்…

மழை வர மாதிரி இருக்கு… நீ வீட்டுக்கு கிளம்பு”

அவளோ “ஐயோ வீட்டுக்கா” என நினைத்தவள் “ஒன்னும் நம்பல பேசியே கொல்றான் இல்லனா பேக் அப் பண்றான்… ச்சே” என்று தன் மனதில் உருப்போட்டுக்கொண்டவளை இயற்கை அழகு திசை திருப்பியது… சில்லென்று காற்று வீச கருமேகங்கள் சூழ்ந்த ஏகாந்த இந்த மாலை நேரத்தில் தன்னவனுடன் தான் மட்டும் தனித்து இருக்கும் இந்த நேரம் அழகாய் மலரும் இந்த காதல் அரும்புக்கு நீரூற்ற

ஸம்ருதி மனதை இந்த ஏகாந்த சூழல் வரவேற்றது ஏதோ புரியா புது மொழியில் சிக்கிக் கொண்டதுப் போல் உணர்ந்தாள்… இது காதலின் மொழி அன்றோ… பாஷைகளுக்கு எப்போது பஞ்சமாகிறதோ அதுவே காதலின் தொடக்கம்…

அவளோ செல்லாமல் அங்கே நிற்கவும்… தன் உடமைகளை எடுத்துக்கொண்டு செல்ல ஆயுத்தமான ருத்ராக்க்ஷன் அவளைப் பார்த்தப்படி நின்று “என்ன இன்னும் கிளம்பலையா????” என்று கேட்க

அவன் அக்கரையில் உருகி கரைந்தவள் “இல்ல சீனியர் பிக் அப் பண்ண டிரைவர் வருவாரு…

கொஞ்சம் வர லேட் ஆகும்” என்று கூறியவளை தனித்து விட மனமில்லாமல்

“ஒஹ்ஹ்” என்றதோடு மட்டும் நிப்பட்டியவன் அவளுக்கு பாதுகாப்பு கொடுத்து சற்று தனித்து நின்றான்…

கருமேகங்கள் புடைசூழ்ந்து முத்து முத்தாய் சின்ன தூரல்களை சிதறி விட… மழை வருதை உணர்ந்த ருத்ராக்க்ஷன் சற்று தள்ளி உள்ளே சென்று நிற்க… ஸம்ருதி அந்த மழை தூரல்களை ரசித்தவளாய் விண்ணிலிருந்து ஊசிப் போல் பாய்ந்து வரும் மழை துளி அவள் முகத்தில் பட்டு முத்துக்குளிக்க தன் முகத்தை ஏதுவாக மழைக்கு காட்டியப்படி நினைத்துக் கொண்டிருக்க

சிறியதாய் கழுத்து வரை வெட்டப்பட்டிருக்கும் முடியை சிலுப்பி ஆட்டியப்படியும் கைகளால் மழை துளிகளை பிடித்துக் கொண்டு விளையாடியவளை ருத்ராக்க்ஷன் திரும்பி பார்த்த நொடி உறைந்த நிலைக்கு சென்றான்…

அவள் உடல் பாதியாக மழையில் நினைந்து மேலே போட்டிருக்கும் டீ ஷர்ட் அவள் எழில் உடலை இறுக்கமாக தழுவி பிடித்திருக்க… அதனை கண்டவனின் உள்ளம் ஆண்மகனாய் சிலிர்த்து உணர்வுகள் தட்டி மேலே எழும்பியது…

அமைதியான சூழல் ஏதோ சொல்ல சட்டென்று திரும்பி பார்த்த ஸம்ருதி… ருத்ராக்க்ஷன் பார்வையில் தன்னை தொல்லைத்தப்படி தலை குனிந்து நின்றாள்.. இன்றுதான் அவள் தன்னை முழு பெண்ணாக உணர்கிறாள்… மெல்ல அவன் அருகில் வந்தவள் அவன் தோள் தொட்டு சாய்ந்து அவன் மார்பில் முகம் புதைக்க ருத்ராக்க்ஷன் உறைந்த நிலையில் இருந்தான்…

ஒரு பெண்ணின் ஸ்பரிசம் அவன் உடல் உணர்ந்தது…. அவளது வசம் அவன் நாசி வழியாக சென்று அவனுள் அவள் வாசனையை நிறப்யியது…

அவன் மார்பில் முகம் புதைத்தப்படி அவனை தழுவி இருந்தவள் மழை சத்தத்தை விட தன் குரலை உயர்த்தி அவன் காதில் விழுமாறு “ஐ லவ் யூ … ஐ லவ் யூ….. ஐ லவ் யூ ரூடி… “என்றவள் அவன் எதிர் பாரத போது அவன் இதழில் தன் முத்திரையை பதித்திருந்தாள் ஆழமாக…

உறைந்த தேகமும் மறத்த மூளையும் அவள் கொடுத்த முத்தத்தில் உயிர் பெற… சட்டென்று அவளை தன்னிடமிருந்து பிரித்தவன் தன் வாயை புறங்கையால் துடைத்துக்கொண்டு

அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் ருத்ராக்க்ஷன் “ச்சீ…. பொண்ணாடி நீ… இப்படி பண்ண உனக்கு வெட்கமா இல்லை…

சீ…..” என்றப்படி மீண்டும் தன் வாயை அழுத்தி துடைத்தவன்

எரிமலை பொங்கும் சினத்தோடு அவள் முன் நின்றிருந்தான் “முதலில் ஒரு பொண்ணு மாதிரி நடக்க கத்துக்கோ… அப்புறம் ஆசைப்படு எல்லாத்துக்கும்… காதலாம்….

காதல்… மண்ணாங்கட்டி!!!… மரியாதை தெரியாதவளுக்கு காதல் ஒரு கேடு… தூக்கி குப்பையில் போடு உன் காதலை” என்றவன் அந்த இடத்தை விட்டு விரைந்து சென்றான்…. அவன் மனம் ஆரவில்லை அவள் செயலால்…

கொட்டும் அடை மழையில் ருத்ராக்க்ஷன் தன்னை அறைந்த கன்னத்தை தாங்கியபடி கீழே விழுந்தவளின் காதில் விழுந்தது அந்த இரண்டு வார்த்தை மட்டுமே முதலில் பெண்ணாய் நடந்துக்கொள் அப்புறம் ஆசைக்கொள் இந்த காதலுக்கு…

பின்பு உன் காதலை தூக்கி குப்பையில் போடு என்ற வார்த்தை அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க செய்தது….

காட்டம் தொடரும்…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *