2 நிலவினில் உனை பார்த்தேன்

நிலவினில் உனைப் பார்த்தேன்

அத்யாயம் 2

உன்னை நினைத்தவுடன்
நிலை தடுமாறும்
நெஞ்சம்கொண்டு
நாட்களை நகர்த்துவது
நரகமாகவே உள்ளதடா….

அடேய்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இன்னுமா நீங்க கிளம்பல..ஒருவேளை ராகவனோட சீமந்துத்துக்கு தான் போவாய்ங்களோ….

ஹம்மாடி தப்பிச்சேன் … ராஜி பேக் பன்னின்ட்ருக்கா அப்ப கொன்பார்மா ரெடி… ஜருகண்டி ஜருகண்டி…

ராஜி மகளுக்கும் தனக்குமான பேக்கிங் முடித்துவிட்டார்…

தாத்தாவும் ஶ்ரீயிடம் இரண்டு நாளுக்கான பொறுப்புகளை ஒப்படைத்தாயிற்று…

தீபாவும் ரெடி… ஆனாலும் அவள் கிளம்புவதற்குள் ஓராயிரம் முறை பத்திரம் சொல்லித்தான் அனுப்பினார், அவளின் தந்தை.. ..தீபாவிற்கு தாய் இல்லை..இறந்து மூன்று வருடங்கள் ஆகிறது….

ராஜி தீபாவையும் மகள் போலவே பாவிப்பார்..அவளுக்கும் தன் கையாலேயே ஆடை தைத்து தருவார்…

திருச்சி பஸ்ஸில் ஒருவழியாக எல்லாருக்கும் இடம் போட்டு வச்சுட்டு…மூஞ்சியை ஒருமுழத்திற்கு நீட்டி வைத்திருந்தான் …யாருனு பாக்றீங்களா..ஹாஹா நம்ம ஶ்ரீ தாங்க…

பூரணி வழக்கத்திற்கு மாறாக இன்னிக்கு ரம்பபபப அழகாய்த் தெரிந்தாள் அவன் கண்களுக்கு…. அவளைவிட்டு பார்வையை அங்கே இங்கே திருப்பாமல் சைட்டோ சைட்…
அவளுக்கு தான் ஒரே சங்கடமாய்டுத்து..

ஏன்டா பக்கி… இப்டி மொறக்கிற.. ..ஹப்பாடா ரெண்டு நாள் உன் தொல்லை இல்லாம ஜாலியா இருப்பேன்…உன்னை யாரு இங்கே வரச் சொன்னது ஆத்துக்கு போ….என்று எரிந்து விழுந்தாள்..

இவ்ளோ நாளா அவ திட்ரதெல்லாம் ஒரு பொருட்டாவே எடுத்துக்க மாட்டான்…இன்றென்னவோ வார்த்தை அம்புகள் நச்சென்று நடு நெஞ்சில் பாய்ந்து விட்டது ஶ்ரீக்கு…பாவம்…முகம் சுருங்கிவிட்டது..
ஆனாலும் பாத்து..ஜாக்ரதை ..பூரி சாரி பூரணி என்றுவிட்டு தாத்தா விடம் சென்றுவிட்டான்..

பூரணிக்கு தான் மேலும் சங்கடமாகிப் போனது…கிளம்பும் போது அவனை நோகடித்துவிட்டோமோ என்று…ஸ்ஸ்ஆஆஆ…ஏன்டி எருமை இப்படி கிள்ளின….தீபாதான்

பின்ன..அவர் எப்டி பொறுப்பா…நம்மளை கொண்டு வந்து ஏத்திவிட்றார்..அவரைப்போய் ஏன்டி திட்ர…பாவம் பாரு அவர் முகமே செத்துடுத்து….உங்கிட்ட வலிய வந்து பேசறார்னு இளக்காரமாய்டுத்தா என்ன???

டீ…நீ வேற…அப்டிலாம் இல்ல..ப்ளீஸ்டி சொன்னா புரியாது உனக்கு விடு…

அதெல்லாம் புரியும்.. பச்சக் குழந்தை யா நான்… அவருக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டி..அவர் கண்ல உன்னை பார்த்ததும் பல்ப் எரியும்டி ..நான் கவனிச்ருக்கேன்…என்று மனதில் உண்டான வலியுடன் உரைத்தாள் தீபா..

தீபா ,நான் சொன்னா கோச்சுக்க மாட்டியே…இப்டி லூசு மாறி நினைச்சுன்டு இருந்தா மட்டும் போறாது…புரியுதா…
உனக்கு அவன்மேல லவ்னு எனக்கு தெரியும்… நீ சீக்கிரமே அவன்ட்ட சொல்லிடு அதான் நல்லது…

அவரை நன்னா தெரிஞ்சுருந்தும் எப்டி அவர்கிட்ட சொல்லச் சொல்ற….

அதனாலதான் சொல்றேன்டி மக்கு தீபா….அவனை முழுசா புரிஞ்சுன்ட.நீதான் அவனுக்கு ஏத்த ஜோடி..என்று கண்ணடித்தாள் பூரணி…

ச்சீய் போடி லூசு… எனக்கு வெக்கமா வருது..

ஆஹான்… ம்ம்ம்ம்.. பார்டா ..வெக்கமெல்லாம் வருமா நோக்கு…இவ்ளோ நாள் பார்த்ததில்லையே நான்.. ஹாஹா…

பூரணி ப்ளீஸ் டி.. நீதான் எனக்கு ஹெல்ப் செய்னும்…சரியா…நீ சொன்னா அவர் கேட்டுப்பார்டி…ப்ளீஸ்…

ம்ம்ம்…..என் மக்கு ஃப்ரன்ட் க்காக இத செய்றேன்….டன்….திருச்சி போய்ட்டு வந்த உடனே ஶ்ரீ கிட்ட பேசி..அடுத்த முஹுர்த்தம் வச்சுடலாம் ஓக்கே….

அடி தங்கமே …இச்..இச்..என்று முத்தம் வைத்து இறுக்கி அணைத்துக் கொண்டாள்..தீபா..

அடியே..விட்ரி…விட்ரி…எரும..நான் ஒன்னும் ஶ்ரீ இல்லடி….ஹாஹா… அவனுக்கு மிச்சம் வச்சுக்கோ…பக்கி…

பூரி அவரை ஏன்டி உனக்கு பிடிக்ல…

எனக்கு அவனை பிடிக்காதுனு உனட்ட எப்படி சொன்னேன் .எரும.. ஶ்ரீயை ரொம்ப பிடிக்கும் டி…ஆனா அது லவ் எல்லாம் இல்லடி…அது ஒருவித பாசம்டி…அவ்ளோதான்… வெறும் பாசத்தை வச்சுன்டு கல்யாணம் பன்னப்டாது…அது சரியா வராதுடி….

ஹம்ம்.. என்னவோ சொல்ற…சரி..சரீஈஈஈஈ அப்டினா நீ லவ் மேரேஜ் பன்னிக்கப் போறியா..

ம்ம்ம் ஆமாம்… எனக்கு அம்மா பாக்கர மாப்பிள்ளை ய லவ் பன்னி கட்டிப்பேன்…

ஹான்….அதெப்படி லவ் ஆகும்..ஒரே குழப்பமா இருக்கேடி பூரி…

ஹாஹா….எனக்கும் தான்.. அப்ரமா யோசிச்சு தெளிவாச் சொல்றேன்…வா வா அம்மா கூப்டரா பாரு….இறங்கலாம் வா….

திருச்சி பஸ் ஸ்டேன்டில் இறங்கி ஆட்டோ வைத்துக்கொண்டு மண்டபத்திற்குச் சென்றனர்…

வாசலிலேயே பெரிய எழுத்துக்களில் தெர்மகோலில் ..

*ராகவன்
வெட்ஸ்
மதுமிதா*

என்று அழகாய் அலங்கரித்து வைத்திருந்தார்கள்….

ஸ்ப்பீக்கர்களில் பாட்டு காதைப் பிளந்தது..
ஆட்டோவில் இருந்து பூரணி இறங்கிய நொடி,

மணமகளே மருமகளே வா வா –
உன் வலதுகாலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ் கோயில் வாசல் திறந்து வைப்போம் வாவா…
என்று பாட…பக்கென்று இதயத்தில் அதிர்வை உணர்ந்தாள் பூரணி….

உள்ளிருந்து ஆரத்தி தட்டுடன் அத்தை ராதா வந்தாள்…வாங்கோ வாங்கோ…..என பரபரப்பாய் நடந்து இல்ல இல்ல ஓடித்தான் வந்தாள்…

அப்போதான் கவனித்தாள் பூரணி , மணப்பெண்ணும் அவாளைச் சேர்ந்தவாளும் காரில் இருந்து இறங்கினார்கள்…..

ஹிஹி… ஆரத்தி அவாளுக்காஆஆ…. ஒரு நிமிஷம் ஜெர்க் ஆய்ட்டியேடி பூரணி..

பெண்ஆத்துப் பேரிடம் அத்தை வழிந்த வழிசலைப் பார்த்து பாட்டிக்கு காதில் புகை வராத குறைதான்….(இதுக்கேவா…ம்ஹம்..

பக்கத்தில் நின்ற கல்யாணத்தில் காதைக் கடித்து துப்பாத குறையாக..

ஏன்னா இதென்ன லோகத்துல இல்லாத திருநாளா பையன் ஆத்துக்காரா முன்னாடியே வந்து பொண்ணாத்துப் பேர வரவேற்த்துன்டு இருக்கா……நன்னாதான் இருக்கு போங்கோ என்று நச்சென்று தாவங்கொட்டையில் இடித்து கொண்டார்…(தயவுசெய்து யாரும் முயற்சி பன்ன வேண்டாம்…ஹாஹா.. பாட்டி அந்தகால பாடி வெரி ஸ்ட்ரோங்..நம்மல்லாம் தாங்கமாட்டோம்..ஹிஹி)..

ஏன்டி இப்டி இரையர…கொஞ்சம் வாயமூடின்டு வா…ராகவனோட மாமனார் குடும்பம் ஶ்ரீரங்கத்துலயே பெரிய வசதியானதுனு அன்னிக்கே சொன்னேன்லடி….இப்ப வந்து இம்ஸை பன்ற…

என்னதான் இருந்தாலும் இது கொஞ்சம் ஜாஸ்தின்னா…

போறுன்டி….இன்னும் எவ்ளோ நாழிதான் இங்கயே நிக்கரது…உள்ள போலாம் வாங்கோ..

ம்க்கும்… வந்தாவள வா னு கூப்ட ஆள்இல்ல..

என்னடி அங்க முனுமுனுப்பு…

ஒன்னுல்லனா… அவா எல்லாம் நகந்தாதான நாம போகமுடியும்னு சொன்னேன்…

வா வா….அவாகூடவே போலாம்..நீ வரேங்கரதுக்காக எல்லாரையும் வழிவிடச் சொல்லமுடியாது…

அப்பப்பா… வாயத் தொரக்கவிட்றாரா..இந்த மனுஷன்… ஹம்..பெருமாளே எப்பதான் இவருக்கு நல்ல புத்தி தரப் போறியோ…

மணப்பெண் மது அழகல்ல பேரழகுதான்…வர்ணிக்க நான் ஆணாய்ப் பிறக்க வேண்டும்.. ஹிஹி..

அளவாய் கத்தரித்த முடி…வில்லாய் வளைக்கப்பட்ட புருவம்… மஸ்காரா போட்டு மயக்கும் கண்கள்.. பேபி லிப்ஸ் உதடுகள்…அழகிதான்…

ஆனால் நம் இலக்கணத்தில் இத்தகைய அழகுக்கு வெறும் ஐம்பது மார்க் தான்…இந்த அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இதுலாம் மிஸ்ஸிங்…

எனக்கு நிகர் நானே என்ற அலட்சியப் பார்வையில் பார்ப்பவர்களை தெறிக்கவே விடுவாள் மது…ஒரே பெண்…அளவிலா செல்வம்… பெங்களூரு வாசம்..எல்லாம் சேர்ந்து அவளை அப்டி தான் வளர்த்து விட்டிருந்தது…

வாயைப் பிளந்து கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்த பூரணிக்கு அல்ட்ரா மாடர்னாய் தெரிந்தாள் மதுமிதா…

பாட்டியின் அலம்பல்களைப் பார்த்து பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை இடத்தை கருதி அடக்கியதால் கண்ணில் நீர் முட்ட அவர்களுடன் சென்றனர்…பூரணியும் தீபாவும்…ராஜி எப்பவுமே அமைதிதான்…கோபம்..சந்தோஷம்.. அழுகை எதுவுமே பாதித்தாக காட்டிக் கொள்ளவே மாட்டார்…

மண்டபத்தின் உள்ளே பார்த்த அடுத்த நொடி..
என்ன இம்பூட்டு கூட்டம்…
யப்பாஆஆஆஆ பூராபயலுகளும் நம்ம சொந்தக் கரைங்களாஆ….ஹிஹி…பூரணி மைண்ட் வாய்ஸ்….

அதை அப்படியே கேட்ச் பன்னி ஏன்டி பூரி இவா எல்லாரும் உன் சொந்தமா என்று தீபா ஓப்பனாவே கேட்டுட்டாள்…ஹாஹா

சரி சரி….இதெல்லாம் வெளிய காட்டிக்காத…அப்டியே கெத்தா பாட்டி பின்னாடியே பம்மிடலாம் வா…இது பூரணி..

அடச்சீய் இதான உன் கெத்து..த்தூஊஊ…என்று தீபா துப்ப

அசிங்கப்பட்ட பெண் சிங்கம்..நம்ம பூரணிதாங்க..

ஏன்டி பிசாசே ஒழுங்கா பூரணினு கூப்டு..

ம்க்கும் இதுக்கு மட்டும் வரிஞ்சுன்டு வாடி..என்று நொடித்துக் கொண்டாள் தீபா..

அடிஈஈஈ தீபா நம்ம சண்டை ய அப்பரமா கண்டினூ பன்லாம்டி வா…வா..பாட்டி அம்மாலாம் நம்மளவிட்டு போறா பாரு….

அவசரமாக இருவரும் ஓட குருக்கே வந்து குதித்தது ஒரு குரங்கு… (சாரி சாரி குரங்கு கோச்சுக்குமோ)

ஹேய் பேபீஸ்ஸ்ஸ்ஸ்……

யாரடா இது ஒரு குரங்கிடம் இருந்து தப்பி இங்க வந்தா இங்கயும் ஒன்னு பல்ல இளிக்குது..

ஹான்…பேபியா…இங்க யாரும் வாய்ல பால் பாட்டில் வச்சுன்டு இல்லியே….. நீங்க யாஆஆஆஆர தேட்றீங்க ..என்று ராகம் பாடினாள்…

ஹிஹி…. ஜோக்கா பேபி..அப்ரம் ஞாபகப்படுத்து சிரிக்குறேன்…

முகம் கடுக்க அவனைச் சுற்றிக் கொண்டு செல்லப் போக…
பூரணியின் கையை பிடித்தது அந்த குரங்கு…

அவ்வளவு தான் ஜான்சி ராணியாக மாறிவிட்டாள்…கையில் வாள் மட்டுமே மிஸ்ஸிங்…

ஏன்டா குரங்கே….அறிவில்ல உனக்கு…. யாரக் கேட்டுடா கையப் பிடிச்ச எரும எரும…மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க திட்ட…

அதைக் கேட்டவனுக்கோ….அவள் கண்ணே மணியே என்பதுபோல் சுகமா இருந்தது போல முப்பத்திரண்டு பல்லையும் காட்டிக்கொண்டு நின்றது அந்த அதிசய ஜந்து… ஹாஹா..

இதைப் பார்த்த தீபாவுக்கும் சிரிப்பு வந்து தொலைக்க…பூரணியை இழுத்துக்கொண்டு போனாள் அவ்விடம் விட்டு..

மாப்பிள்ளை அறை….என்னடா இது இங்கயும் ஒற்றே கும்பலா இருக்கே….ஹேய் தள்ளுங்க தள்ளுங்க…

அடடே மாப்பிள்ளை க்கு அலங்காரம் ஆகிறதா…பேஷ் பேஷ்…

டேய் ராகவா அசத்துரடா இந்த கோட்சூட்ல..

அதைக்கேட்டவனின் முகத்தில் அழகானதொரு வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது…

அதைப் பார்த்து ஹோ வென கூச்சலிட்டனர் அவன் நண்பர்கள்…

ஹேய் போதும் டா ப்ளீஸ்…. விட்ருங்க பொண்ணுக்கு கூட அலங்காரம் பன்ன இவ்ளோ டைம் ஆகாதுடா…இத்தனை நேரம் என்னை பாடா படுத்தி எடுத்துட்டீங்கடா…தெய்வங்களா….ஆளவிடுங்க

இன்னிக்கு நீதானடா ஹீரோ…. அழகா இருக்கு வேண்டாமா…..இருடா இன்னும் கொஞ்சம் டச்சப் மட்டும்…

நோ..நோ….வாசு…இனஃப்…ப்ளீஸ்..

என்னாங்கடா நடக்குது இங்கே….முடிஞ்சுதா இல்லியாடா ..

வந்து நின்ற ஷ்யாமைப் பார்த்து… அதுசரி நாங்கள்ளாம் இங்க இருக்க …சார் மட்டும் எங்க நகர்வலம் போய்ட்டு வரீரு…ம்ம்ம்

நான்… நான்.. சும்மா டா…மண்டபத்தை சுத்திப் பாத்தேன்…

ஆமாடா நீ சுத்தின லட்சனத்தை நானும்தான் பாத்தேனே…

எதூஊஊ….ஹேய்… என்னடா சொல்ற..

என்னடா வாசு ..எங்க போனான் இவன் ..அடுத்த நண்பன் சாரதி கேட்க..

அதுவா மச்சீஈஈஈ.. என்று வாசு இழுக்க..

டேய் டேய்…வாசு அடங்குடா…ஏதோ கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கே பாத்தா கண்ணுக்கு நல்லதாச்சேனு பாத்தேன்..இப்ப என்னடா…

(ஆமாங்க நீங்க நினைக்கறது கரீட்டு..அந்த குரங்கின் பெயர் ஷ்யாம்)

அதுக்குஉ….டேய்..

வாசுவை பேசவிடாமல் படாரென்று கதவை உடைத்து.. சாரி திறந்து கொண்டு ராதா ப்ரசன்னமானார்…

ராகவா ரெடியா… கிளம்பளாமா கோயில் இங்கருந்து ஒரு கிலோமீட்டர் இருக்கு…மாப்பிள்ளை அழைப்புக்கு நேரமாய்டுத்து….

ஹாம்மா…நான் ரெடி… அப்பா..பாட்டி எல்லாம் எங்கே..

அவாள்ளாம் ரகுவோட கார்ல போய்…நீயும் உன் ப்ரன்ட்ஸ் யும் உன் கார்லயே கிளம்புங்கோ…

நான் பொண்ணாத்துப் பேர்கூட வரேன்..

டேய் வாசு…பாத்து அழைச்சுன்டு வாங்கோடா…என்ன..சீக்கிரம்… நாழியாய்டுத்து…

சரி ம்மா…நீங்க டென்ஷன் ஆகாம கிளம்புங்கோ…மாப்ள சார நாங்க பத்ரமா கூட்டிட்டு வரோம்…

சிரித்துக்கொண்டே… சமத்து பசங்கடா…சரி எல்லாரும் ஒரு வாய் சாப்ட்டு வந்துடுங்க ..
என்னப்பா அமெரிக்கா நீயும் தான்..எங்க பக்கம் சாப்பாடு நன்னா இருக்கும்…பயப்டாம சாப்டு என்ன..

சரி டா ராகவா…நான் வரேன்..நீங்க டைமுக்கு வந்துடுங்க…

அவர் போனதும் நம்ம அமேரிக்கா ஷ்யாம் க்கு சந்தேகம் வந்துவிட்டது… வாசு ஒரு வாய் சாப்பிட்டா எப்டி டா பத்தும்..பசிக்காதோ…

கொலைவெறியில் பல்லை கடித்துக் கொண்டு அவனை முறைத்தபடியே சாப்பிட்டு முடித்தான் வாசு…

ராகவனின் பள்ளித் தோழன் தான் ஷ்யாம்… வாசு..சாரதி…ப்ரகாஷ்…எல்லோரும் கல்லூரி வரையிலும் ஒன்றாகப் படித்தவர்கள்…

ராகவின் கல்யாணத்தை முன்னிட்டு ஷ்யாம் வந்திருக்கிறான்…பத்துவருட அமேரிக்கா வாசம் …அங்கே அதிநவீன நாகரிகத்தில் திளைத்து நங்கையரையே கண்டு பழக்கப்பட்ட கண்களுக்கு… பூரணியின் பாவாடை தாவணி யும்…க்ராமத்தில் பிறந்து வளர்ந்த இயற்கை எழிலிலும் மயங்கித்தான் போய்விட்டான்..

ஆட்டோவில் இருந்து பூரணி இறங்கியது முதல் அவளையேதான் சைட் விட்டுக் கொண்டிருந்தான்…பார்த்த செகண்ட்டில் இன்ஸ்டன்டாய் ஒரு காதல் நிறைந்து மணம் வீசியது அவன் இதயக்கப்பில்….

(சரி வாங்க நாமலும் பந்திக்கு போய்ட்டு..மாப்பிள்ளை அழைப்புக்கு போவோம்..நான் மாம்பச்சை கலர் பட்டுப்புடவை.. நீங்க..ஹிஹி)..

அடடா ரேக்ளா வண்டி… வாவ்…அழகு குதிரைகள்.. ஹான் …இதுயாரு மஹாராஜா வா……அப்டித்தாங்க பாத்தவங்க எல்லாரும் நினச்சாங்க…

அவ்ளோ அழகும்..கம்பீரமுமாக…குழிவிழும் சிரிப்போடு …அடடடடடடாஆஆ…… நம்ம ராகவன் தாங்க..என் கண்ணே பட்டுடும் போலயே…கொள்ளை அழகுங்க…

(சுமார் பீஸூகளே மாப்ள களையில் சூப்பர் பீஸா மாறும் போது…. இவன் ஒரிஜினல் பீஸுங்க…ஹிஹி…ரொம்ப வழியுதோ…)

மஹாராஜா தேர்பவனி வருவதுபோல் …ராஜமரியாதையுடன்…பேண்ட் வாத்யம் ஒருபக்கம்… மேளவாத்யம் ஒருபக்கம்… பட்டாசு சத்தம் ஒருபக்கம் காதைப்பிளக்க…மழைபோல் பூக்கள் தூவப்பட்டு….வசீகரமாய் தன் மஹாராணியை கைப்பிடிக்க வந்து கொண்டிருந்தான்…

இங்கே மண்டபத்தில்… டீ பூரி..எனக்கு இந்த தாவணி நன்னா இருக்கா…சொல்லேன்டி..

அடடா…ஏன்டி படுத்துற பக்கி… இதோட நூறுதரம் கேட்டுட்ட…

நன்னாதாண்டி இருக்கு… ப்ளீஸ் டி…பாட்டி திட்ட போறா வா…

உனக்கு என்ன டி..நீ அழகி.. எது போட்டாலும் எடுப்பா இருப்ப..நா அப்டியா..

கண்ணாடி முன் தன் தலையில் பூவை வைத்துக் கொண்டிருந்த பூரணி…அழகான இளம்பச்சை நிற பட்டு பாவாடை யும்…தேன் கலர் தவணியும் ..அதற்கு தோதான…கை வளை…காதில் ஜிமிக்கி ஆட…வெகு அழகாய் தெரிந்தால்… அதிலும் வலது தாடையோர மச்சம் …ஆண்களை வாவ்வ்வ் சொல்ல வைக்கும்…

தோழியின் பேச்சில் கோபம் பொங்க…தீபா…அசடுமாறி பேசப்டாதுனு எத்தனை தரம் சொல்றது..

என்ன அழகு…அழகுங்கற…நாம பாக்கற பார்வைலதான்டி இருக்கு எல்லாம்… என் கண்ணுக்கு நீ ரொம்பபபபப அழகாத்தான் தெரியுர….சரியா…சமத்துல்ல…இந்த பூவ வச்சுன்டு சீக்கிரம் வா…

ரெடியாகி வந்த பூரணியைப் பார்த்து தாயுள்ளம் கலங்கியது….எவ்வளவு அழகு என் பெண் என்று… ம்ஹம்…பூரணிக்கு எவ்வாறு மாப்பிள்ளை பார்த்து… எப்டி கல்யாணம் செய்து வைப்பதென்று பெரிய ஏக்கம் கொண்டார் ராஜி..

வந்ததிலிருந்து தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாத நாத்தனாரை எண்ணி கசந்த முறுவல் தோன்றியது…அவளின் தம்பி யை கைப் பிடித்த தவறைத் தவிர வேறொன்றும் செய்யவில்லயே….

ஏதோ அப்பா…அம்மாகிட்ட பேசி அவாளை வரவேற்றவரைக்கும் போதுமானது…என்று தேற்றிக்கொண்டார்..

மற்றுமொரு கண்டம் உள்ளது ராஜிக்கு…அவள் மாமியாரிடம் இன்னும் பூரணியை ஆசீர்வாதம் வாங்கச் சொல்லவில்லை… அதை முடித்தாயிற்று என்றால் சற்றே நிம்மதி…

பூரணியை மாமியாரிடம் அழைத்துப்போகும் பொறுப்பை அம்மாவிடம் தந்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்…

அப்டியெல்லாம் ராஜியை ஒதுங்க விட்டால் நான் எப்டி அடுத்த அத்யாயம் எழுதறது …ம்ம்ம்ம்ம்..
மொத்தமா அந்த குடும்பத்துல சிக்க வச்சுடுவோமா…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *