2 தேவ மல்லிகை பூவே

This entry is part 2 of 2 in the series 1. தேவ மல்லிகை பூவே

1. தேவ மல்லிகை பூவே

1. தேவ மல்லிகை பூவே

1. தேவ மல்லிகை பூவே

2 தேவ மல்லிகை பூவே

2 தேவ மல்லிகை பூவே

2. தேவ மல்லிகை பூவே

திருமணத்திற்கு வந்தவர்கள் முழுதாக ஒரு 25 பேர் தான்.. அதில் பொண்ணுவீட்டு சைடு சாம்சன் மட்டுமே மீதி பேர் மாப்பிள்ளை வீட்டு சைட் இருபது என நின்றிருந்தனர்.

ஈஸ்வர் பெண்ணின் கையை அழுத்தப்பிடித்து இழுத்து செல்வதைப் பார்த்து விஜயாவின் சொந்தகாரர்களில் ஒரு பெண்மணி “நம்ம ஈஸ்வர் பொறுப்பான பையனாச்சே.. சபைக்கு மரியாதை கொடுக்காம அந்த பொண்ண இழுத்துட்டுப் போறானா? என்னவா இருக்கும்? எது பேசறதாயிருந்தாலும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் பேசறதுதானே முறையும் கூட.. ஈஸ்வர் கிட்ட இதை எதிர்பார்க்கல” என விஜயாவிடம் முறையிட..

“ஒரு நிமிஷம் அமைதியா இருங்க அண்ணி.. என் பையன் கல்யாணத்துக்கு சம்மதிச்சே பெரிய விஷயம்.. அவன் எதை செய்தாலும் காரணம் இல்லாம செய்யமாட்டான்.. கல்யாணத்துக்கு வந்து ஆசிர்வாதம் செய்துட்டு போங்க.. அவன குத்தம் சொல்ல வேண்டாம்.. என் பையன் வாழ்க்கைல ரொம்ப நொந்து போய் இருக்கான் அண்ணி” எனத் தவிப்புடன் கூற.. அந்தப் பெண்மணியும் கப்சிப் என வாயை அடைத்துக்கொண்டார்.. 

பக்கத்தில் நின்ற அந்தப் பெண்மணியின் கணவர்.. 
ஏய் கல்யாணத்துக்கு வந்து அட்சதைய போட்டியா.. இட்லி, பொங்கல், கேசரி சாப்டமானு கிளம்பி இருக்கணும்.. உன் வாயை கொஞ்ச நேரம் சும்மா வைக்க மாட்டியா” என மனைவியைக் கடிந்து கொண்டார்.

கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பினால் அபிநயா அழுக ஆரம்பிக்க குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேடிக்கை காட்டச் சென்றார் விஜயா.

விஜயா குழந்தையை தூக்கிச் செல்ல.. அபிநயாவை சமாதானம் செய்து வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த விஜயாவின் பின்னே சென்று “அம்மா விஜயா” என்று சாம்சன் கூப்பிட…

சொல்லுங்கண்ணா?

“என்னம்மா இது என் கண்ணு முன்னாலயே உங்க மகன் என் பொண்ண இப்டி இழுத்துட்டுப் போறாரு..” என கண்கலங்கி கேட்க.

“அண்ணா நீங்க வருத்தப்படாதீங்க.. என் பையன் கொடுமைக்காரன் கிடையாது.. ரெண்டு பேருக்குள்ள ஏதோ இருக்கு.. என் பையனும் உங்க பொண்ணும் லவ் பண்ணுனாங்கனு தெரிஞ்சு தானே இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன்.. அவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்க மனவருத்தத்தை அவங்க பேசி தீர்த்துப்பாங்க.. தாலி கட்டிட்டு அம்போன்னு விட்டுப் போக மாட்டான் என்னோட ஈஸ்வர்.. என் வளர்ப்பு எப்பவும் சோடை போகாது.. அதோ நான் பெறாத பையன் கோபி, ஈஸ்வர் கிட்டப் போறான்.. அவன் எல்லாத்தையும் சரி பண்ணிடுவான்.. இதை நீங்க பெரிசு பண்ணாம லேசா விடுங்க..” என கலக்கப்பட்டு நிற்கும் சாம்சனை சமாதானம் செய்தார் விஜயா.

காரிகையின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றது மணமகன் அறைக்குள்.. அங்கே சென்றதும் அவளை ஒரு சுற்று சுற்றி நிற்க வைத்ததில் மயக்கமே வந்து விட்டது பெண்ணவளுக்கு.. நேற்று இரவிலிருந்து மறுக்கல்யாணத்தை நினைத்தே கவலைப்பட்டு மனம் அச்சுற்று போனது அவளுக்கு.. எங்கே தன் முதல் கணவனைப் போல இவனும் இருந்து விட்டால் நான் என்ன செய்வேன்.. இப்போது இருப்பது வெறும் உயிரற்ற ஜடம் தான்.. என நேற்றிலிருந்து ஒரு பருக்கை அன்னம் கூட சாப்பிடாமல் இருந்தவள்.. இப்போது அதிகாலை வேளையில் தன் கழுத்தில் தாலி கட்டியவன் தன் மனம்  கவர்ந்த கள்வன் அவன்.. தன் கைகளை அழுந்தப் பிடித்து இழுத்து வந்து சுற்றியதில் அங்கிருந்த கட்டிலில் தொப்பென்று விழுந்துவிட்டாள்.

“ஏய் ரொம்ப நடிக்காதடி எழுந்திரு..” என அரை மயக்கத்தில் படுத்திருந்தவளை மேலிருந்து கீழ வரை அவளை அளவெடுத்தவன்.. “உடம்பு தான் வத்திப்போய் கிடக்கு ஆனா இன்னும் உன் கன்னம் ஆப்பிள் போல ப்ரஸா இருக்கு..” என மங்கையின் கன்னத்தை அழுத்தப்பற்ற.. கண்திறந்து பார்த்தாள்.. 

கண்ணுக்கு கீழ் கருவளையம் இருந்தாலும் அவளின் மான்விழிகள் ஆயிரம் கதை பேசின.. ஈஸ்வரின் நெற்றிக் கண்ணிலிருந்து வரும் தீப்பொறிகளை காணமுடியாமலும்.. அவனிடம் பேசத் துடித்த ஆரஞ்சு உதடுகளும் அவனுக்கு  கோபத்தை ஏற்படுத்தியது.. “இப்படி இந்த கண்ணை உருட்டி உருட்டி என்னை மயக்கின.. என்னோட முகத்துல முழிக்கக் கூடாதுனு சொல்லிட்டுதானடி வந்தேன்.. இப்ப என் கையால தாலியும் வாங்கிட்ட.. என்ன தைரியம்டி உனக்கு.. ஹா உன் முத புருஷன எப்படி கொன்னுப் போட்ட.. இப்ப அடுத்து என்னையும் கொல்லாம்னு வந்தியா” என ஏற்கனவே காயப்பட்ட பெண்ணின் மனதை விஷம் தோய்த்த சொல்லம்புகளால் குத்திக் கிழித்து பெண்ணவளின் சங்குக் கழுத்தை நெறிக்கப் போக.. 

“வே..வேணாம் ஈஸ்வர்.. நான் சொல்றத கேளுங்க ப்ளீஸ்..” என மெல்லிய குரலில் கத்த.. 

“உன்ன கொல்லப்போறேன்டி.. நீ பேசும் அழகத்தான் இரசித்து ஏமாந்து போனவன்டி நான்… இன்னும் உன் பின்னாடி நாய் போல சுத்தின அதே ஈஸ்வர்னு நினைச்சயாடி..” என இப்போது மெல்ல அவள் கழுத்தை நெறிக்கத் துவங்கினான்.

“வே.வேணாம் ஈ.ஈஸ்வர்” என கால்கள் துள்ள.. என்ன நினைத்தானே தெரியவில்லை.. “என் மஹாவை தொட்ட கையலா உன்ன தொடுறது எனக்கு அசிங்கம்டி” என இறுக்கிப் பிடித்த கழுத்தை விட்டு முகத்தை திரும்பினான்..
கழுத்தை நெறித்துப் பிடித்ததில் மங்கைக்கு லேசாக இருமல் வர ஆரம்பிக்கப் பக்கத்திலிருந்த தண்ணீரை கூட எடுத்து தரவில்லை ஆணவன்.

அதுவரை கணவன், மனைவிக்குள் உள்ளே போக வேண்டாம் என்று கதவின் வெளியே நின்று கொண்டிருந்த கோபி இப்போது தன் தங்கையாக நினைக்கும் ஜேஸ்மினுக்கு உதவி செய்ய உள்ளே சென்றான்.

டேபிளிலில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஜேஸ்மின்க்கு கொடுத்தான் கோபி.

தண்ணீரை வாங்கிக் குடித்துக் கோபியை பார்த்து “அண்ணா நான் எதுவும்” எனப் பேச வாயெடுக்க…

“அவள பேச வேணாம்னு சொல்லுடா.. என்னை மறுபடி ஏமாத்த வந்திருக்கா.. என் பொண்ண இவள நம்பி, இவக்கிட்ட எப்படி ஒப்படைப்பேன்.. கொன்னாலும் கொன்னுபுடுவா” என்று வார்த்தைகளால் அவளுக்கு சவுக்கடி கொடுத்தான்.

“நிறுத்துங்க ஈஸ்வர்.. நான் ஒன்னும் அவ்ளோ கல்நெஞ்சுக்காறி கிடையாது.. எனக்கு நீங்க தான் மாப்ளைனு தெரியாது.. அப்பா என்னக் கல்யாணம் பண்ணச்  சொல்லி வருத்தப்பட்டாங்க.. தினம் தினம் என்னால அவர் மனசு உடைஞ்சு போறாரு.. அவரு என்னைப் பார்த்து இதே நான் உன்ன பெத்த அப்பாவ இருந்தா நான் சொல்றத கேட்டிருப்பன்னு சொன்னதும் நான் அப்டியே செத்துப் போய்ட்டேன்.. மாப்ள போட்டோவ கொடுத்தாரு.. நான் போட்டோவப் பார்க்கல.. பார்த்திருந்தா வேணாம்னு சொல்லியிருப்பேன்” என அழுகையுடன் கூற.

“ஏய் நடிக்காதடி! சினிமால நடிக்க போயிருக்கலாம் நீ!”

“டேய் நிறுத்துடா நான் தான் இந்தக் கல்யாணம் நடக்கறதுக்கு முழுக்காரணம்” எனக் கூற..

“இருவரும் வாயடைத்துப் போய் கோபியை பார்த்தனர்.

“என்னடா சொல்ற” எனக் கோபியின் முன்னே நின்று அவன் சட்டை காலரை பிடித்தான். 

“கைய எடுடா.. ப்ராக்டிக்கலா திங்க் பண்ணு ஈஸ்வர்.. ஜேஸ்மினும் கணவனை இழந்துட்டா.. உனக்கு மஹா இல்ல.. அதுவும் நம்ம அபிய பாத்துக்க சரியான ஆள் ஜேஸ்மின் தானு என் மனசுக்கு பட்டுச்சு.. உங்க ரெண்டு பேருக்கும் தெரியாம ஜேஸ்மின் அப்பாகிட்டயும், நம்ம அம்மாகிட்டயும் உங்களைப் பத்தி பேசி சம்மதம் வாங்குனேன்.. நீங்க ரெண்டு பேர்தான் பொண்ணு மாப்பிள்ளை தெரியாதவாறு நாங்க நடந்துகிட்டோம்.. ஜாஸ்மின்கு  நீ தான் மாப்ளைனு தெரியாதுடா.. அவள குத்தம் சொல்றத நிறுத்து..” என இன்னும் சட்டையைப் பிடித்திருந்த ஈஸ்வரின் கையைத் தட்டிவிட்டான்.

“நீயும் என்னை ஏமாத்திட்டடா.. உன்னைப் போய் நம்பினேன் பாரு” என சுவற்றில் கையை குத்திக்கொண்டான்.

“டேய் உன்னோட நல்லத்துக்குத்தான் இந்த கல்யாணம் நடத்தி வச்சேன்.. நீ என்னோட உயிர் நண்பன்னா இன்னும் ஐஞ்சு நிமஷத்துல ஜாஸ்மின் கையைப் பிடிச்சு கூட்டிட்டு வர” என விரைப்பாக பேசி வெளியே சென்றான் கோபி.

நண்பனிடம் எப்படி பேசினால் அவனை வளைக்க முடியும் என்பதை அறிந்தும் வைத்திருந்தான்.. ஈஸ்வரால் எப்போதும் கோபியை வெறுக்க முடியாது.. ஈஸ்வரை எந்த இடத்திலும் தோற்க விட மாட்டான்.. மஹா இறந்த போது கல்போல இறுகிக்கிடந்தான் ஈஸ்வர்.. அவனைத் தேற்றிக் கொண்டு வந்தது கோபியே.
கோபி சென்றதை உறுதிப்படுத்தி அதுவரை கதவை தாள் போடாமல் இருந்தவன்.. இப்போது கதவைத் தாள் போட்டு விட்டு கட்டிலில் அமர்ந்திருக்கும் ஜேஸ்மினின் அருகே வந்தமர.. கொஞ்சம் பயந்து போய் தள்ளி உட்கார.. அவளின் செய்கையில் கடும்கோவம் கொண்டு மூக்கு விடைக்க “அப்டியே உன் மேல பாய்ச்சுட மாட்டேன்.. என் விரலுக்குக் கூட உன்னை தீண்டுவது பிடிக்காது.. அப்புறம்” எனக் கையை முறுக்கியவன்.. நான் பர்ஸ்ட் பேசிடுறேன்..அவள் முகத்துக்கு முன்னே கையை நீட்டி “இங்க பாரு நான் போட்ட கன்டிசனை உங்க வீட்டுல சொன்னாங்களானு எனக்கு சந்தேகமாயிருக்கு.. முதல்ல என் பக்கம் நீ வரக்கூடாது.. என்னோட வேலைகளை நீ செய்யக்கூடாது.. என் பேபி அபிநயாவ மட்டும் நீ பார்த்துக்கணும்.. அப்புறம் ஏதாவது குழந்தை வேணும்னு பெரியவங்க கேட்குறாங்கனு என்கிட்ட வந்து நின்ன கொன்னு போடுவேன்.. நமக்குள்ள நடக்கறது நாலு சுவத்துக்குள்ள இருக்கணும்.. எங்காவது வெளியே மூச்சு விட்ட நடக்கறது வேற ஜாக்கிரதை.. எங்கம்மா முன்னால நாம ஹேப்பியா இருக்கறது போல நடிக்கணும் தெரியுதா.. அதற்கும் உச்சத்தில் கத்தினான்.. என்னோட மஹா காதலுக்கு முன்னால நீ கால் தூசுக்கு பொற மாட்டடி” என இதழை வளைத்துச்  சிரித்தான்.. 
உன்னை முட்டாள் போல சுத்தி சுத்தி வந்திருக்கேன்.. ஆனா என்னோட மஹா என்னை சுத்தி சுத்தி வருவா தெரியுமா.. அவன் ஜேஸ்மினிடம் பேசிய பத்து வார்த்தைகளில் 9 வார்த்தை மஹானுதான் சொல்லியிருப்பான் ஈஸ்வர்.

ஈஸ்வர் பேசுவதைக் கண்கொட்டாமல் ஆடாமல் அசையாமல் அவள் கேட்டிருந்தாள்.. சற்று மஹாவின் மேல் ஜேஸ்மின்க்கு பொறாமையே வந்து விட்டது.. மஹா எந்தளவு ஈஸ்வரின் மனதில் பொதிந்து கிடக்கிறாள்.. இப்போதும் தன் முன்னே இருப்பது மஹாவின் கணவனாகத் தெரிந்தான்.. தான் காதலித்த ஈஸ்வரை தேடுவது ரொம்பக் கடினம் என்பதைத் தெரிந்து கொண்டாள்.. தான் மஹாவாக இருந்திருக்க கூடாதா? என ஏங்கித்தான் போனால் பெண்ணவள்.

சிலையென சமைந்திருந்தவளை அவள் முகம் முன்னே சொடக்குப் போட்டு.. காதலனாப் இருந்த ஈஸ்வரத்தான நீ பார்த்திருக்க.. இப்ப இருக்கறது உன்னோட புருஷன் மத்தவங்களுக்கு.. என் பெண்டாட்டினா அது என்னோட மஹாலஷ்மி மட்டும்தான்டி.. நீ வெறும் என்னோட குழந்தையப் பார்த்துக்கப் போற கேர் டேக்கர் மட்டும் தான்.. சுருக்கமா சொன்னா சம்பளம் இல்லாத ஆயா வேலைக்கு வந்திருக்க.. இனி உன் வாழ்க்கையில் நரகம்னா என்னனு காண்பிக்கப் போறேன்” என அவளை மீண்டும் மீண்டும் வார்த்தைகளால் வதைத்து கையைப் பற்றி இழுத்துச் சென்றான்.. கொஞ்ச நேரம் முன்னே கையை தொடமாட்டேன் என்ற வார்த்தையை மறந்து போனான் போல ஈஸ்வர்.. ஜெனி ஏற்கனவே வாழ்க்கையில் பல நரகத்தை அனுபவித்து வந்திருக்கிறாள் என்பது ஈஸ்வருக்கு தெரியவில்லை.

ஈஸ்வர், ஜாஸ்மினின் கையைப் பிடித்து வருவதைக் கண்டுதான் சாம்சன் சற்று ஆசுவாசமடைந்தார். விஜயாவும், சாம்சனும் மட்டும் கோவிலில் நின்றிருந்திருந்தார்கள்.. அபிநயா அதிகாலையில் எழுந்ததால் இப்போது கலைப்பில் தூங்கியிருந்தது..
“ஈஸ்வர், சாம்சன் அண்ணா காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கு” என்று விஜயா கூறியதும்..

“ஆமா இது ஒண்ணுதான் குறைச்சல்” என முணுமுணுத்து சாம்சனின் காலில் விழுந்தான்.. ஜாஸ்மினும் அவர் காலில் விழுந்தாள்.. இருவரது தோள்களையும் பற்றி “ரெண்டு பேரும் தீர்க்காயுசா.. பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழணும்” என ஆசிர்வாதம் செய்தார்.

ஈஸ்வருக்கு, சாம்சன் தான் ஜேஸ்மினின் அப்பா என்று நினைத்திருந்தான்.. அதுதான் அவர் காலில் விழுவது அவனுக்கு பிடிக்கவில்லை.. தாய் விஜயாவின் மனம் நோகக்கூடாதுன்னு சாம்சனின் காலில் விழுந்தான்.

பிறது விஜயாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக் காருக்கு சென்றனர்.. 

“விஜயா நான் கிளம்புறேன் என் மக.. இல்ல என் பொண்ண நல்லா பார்த்துக்குங்க.. அவ வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.. உன்ன நம்பி என் பொண்ண ஒப்படைக்குறேன்” எனக் கூறிவிட்டு.. 

“ஜாஸ்மின் அப்பா வரேன்டா.”. என குரல் கம்மியது சாம்சனுக்கு

“அப்பா நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க” என அவரின் கண்ணைத் துடைத்துவிட…

கூப்பிட வேண்டியவன் பாறை போல இறுகி கடப்பாறையை விழுங்கியவன்  போல நின்றிருந்தான்.

“இல்லம்மா நான் நாளைக்கு வரேன்.. நீ சந்தோஷமா கிளம்புமா “என அவரின் காரை எடுத்துச்சென்றார்.. சாம்சன் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.. ஈஸ்வரின் வசதிக்கு குறைந்தவர் அல்ல.. பணம் இருந்து என்ன பயன் அவனைத் துயரத்தில் தவிக்கவிட்டு சென்றான் ஒருவன்.

சாம்சன் கார் மறையும் வரை பார்த்திருந்தவள் திரும்பும் போது விஜயா குழந்தையை வெயிலில் வைத்திருக்க முடியாது காருக்குள் சென்று அமர்ந்து விட.. ஈஸ்வரும் காருக்குள் அமர்ந்து விட்டான்.. தனியே நின்றிருந்தாள் பேதைப்  பெண்.. வா என்று கூட சொல்லவில்லை ஈஸ்வர்.. அத்தனை கோவம் அவள் மேல்.

கோவிலில் பார்மால்லிட்டிஸ் எல்லாம் முடித்து வந்தவன் வெளியே நின்றிருந்த ஜாஸ்மினைப் பார்த்து “என்னமா வெளியே நிக்குற காருக்குள்ளப் போய் உட்காரு” எனக் காரின் கதவை திறந்து விட்டான்.

அதுவரை பின்னால் குழந்தையை மடியில் வைத்திருந்த ஈஸ்வர் ஜாஸ்மின் அவன் பக்கம் உட்கார பார்க்க..

“இரு நான் முன்னாடி போய் உட்கார்ந்துக்குறேன்” என எழும்ப.. 

அபிநயா உச்சா போய்விட அழுக அரம்பித்தது.. ஈஸ்வரின் வேஷ்டியும் நனைத்துவிட்டது.

“அம்மா அபியப் பிடிங்க” என விஜயாவிடம் குழந்தைய நீட்ட..

“ஈஸ்வர் எனக்கு ஏதோ தலைசுத்துறதுப் போல இருக்கு அபிய, ஜாஸ்மின் கிட்ட கொடு” எனக் கூறி கண்ணை மூடி சீட்டில் தலைசாய்த்தார்.

“இந்தாடி குழந்தை அழறால பார்த்துக்கிட்டே  இருக்க.. காருக்குள்ள ஏறுடி” எனச் சற்று தள்ளி அமர்ந்தான்.. அவன் அருகே அமர “கேப் டிஸ்டன்ஸ்ஸ மெயின்டன் பண்ணுன்னு “அபிய, ஜேஸ்மினிடம் கொடுத்தான்.. இருவரையும் இணைக்கும் பாலமாக இருக்கும் அபியை கண்ணில் மகிழ்ச்சியுடன் வாங்கினாள் ஜெனி ஜேஸ்மின்.










Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *