18 Mvt
18 மைவிழி விடு தூது
தலை நிறைய பூ.. வாசுவுக்கு பிடிச்ச சேலை என்று அன்று இரவு வெயிலில் அலைந்து திரிந்து சோர்ந்து வீடு வந்த கணவனுக்கு தேவதையாய் காட்சி தந்தாள் சுகன்..
ஜாதக எபெக்ட் eee
அக்கம் பக்கம் பார்த்து விசில் அடித்தான் கணவனும்.. லிப்ஸ்டிக் போடாதவள் இன்று லேசா தீற்றி வச்சிருக்க.. அது வேற வா வா என்னை ருசி.. கடி கடித்து தின்னு என்றெல்லாம் கண்டபடி ஒழுக்கமே இல்லாது அழைக்க…
வீட்டை உள்ளே ஒரு பார்வை பார்த்துட்டு இடுப்பை அணைச்சு அவளை நெருக்கி.. ரகசியகுரலில்
“என்னடி அலங்காரம் தூக்குது .. அம்மா இல்லையா?”
“அத்தையும் மாமாவும் அண்ணி வீட்டுக்கு போய்ட்டாங்க.. பாட்டிக்கு உடம்பு சரியில்ல என்று அண்ணன் போன் பண்ணி இருந்தாங்க.. என்னென்னு விசாரிச்சுட்டு காலையில் வரோம் .. சொல்லி போயிருக்காங்க உங்க கிட்ட அவங்களே சொல்றேன் என்று சொன்னாங்களே மாமா.. சொல்லலியா? வாசுவின் கைகளின் பாய்ச்சலுக்கு இழைந்து கொடுத்தே சுகி விவரம் சொல்ல..
ஓ.. பரவாயில்ல அதான் நீ சொல்லிட்டே இல்ல.. போதும்..
வாசுவுக்கு சுகியின் அனைத்துவித சிக்னலுடன் கூடிய அழைப்பே அறிவை முடக்கி விட…கழுத்துக்கு பின்னாடி கடிச்சு பூவோடு பெண் வாசமும் சுவாசத்தில் போதையாய் எற..
மணத்து கிடக்கேடி.. மிழற்றினான்..
ம்ம்ம்.. வாசுவின் வேர்வை வாசம் இன்னும் மேன்லியா சுகியை கட்டி இழுக்க..
ஒருநிமிசம்ங்க என்று வெளிவாசல் கேட் உள்வாசல் எல்லாம் முறையா பூட்டிட்டு ஹாலிலேயே படுத்துகிடந்த வாசுவின் இழுப்புக்கு வந்தாள்.. சட்டை பட்டன் பெல்ட் சாக்ஸ் என்று அவனுடன் இறுக்கமாயிருந்த அனைத்தையும் தளர்த்த..
“என் அழகிடி நீ..” கொஞ்சி சுகியை தன் மேலே போட்டு மின்னிகொண்டிருந்த இதழை கவ்வ.. ஹக் ஆசையா மனைவியும் அந்த முத்தத்தை வாங்கினாள்.. இதழோடு இதழ் கலந்து எச்சில் பரிமாறி விருந்து கொண்டாட.. வாசுவின் நெஞ்சின் மீது உறவாடிய பெண்மையின் ஸ்தூபிகள் தன் கோளவடிவை காட்டி அவன் கண்களை பறிக்க.. என்னென்னவோ ஆனான்.. முத ராத்திரியில் கூட இவ்ளோ கவர்ச்சியா இல்லையேடி நீ.. கீழே தள்ளி சோளியின் ஊக்கை கூட கழற்ற பொறுமை இல்லாது.. புறாவை தாண்டி தனியே தூக்கிட்டான் eee
அச்சோ.. போங்க போங்க.. சேலை கொண்டு சுகி அனிச்சையாய் மூட அதனுள் தலையை நுழைந்து குழந்தை சேட்டை செய்ய.. ஹ் ஹா.. ச்சு.. தடுப்பதாய் தடுத்தாலும் உரிமைக்காரன் விட்டு கொடுக்கல.. சுகம் தாளாது முனகினாள் சுகி… என்ன முயக்கத்தில் கிடந்தாலும் கணவனின் வயிறு நினைப்பு இருக்க..
சாப்பிட வாங்க மாமா.. மிச்சம் அப்புறம்.. பொறுமையாய் வாசுவின் தலை தடவி சொல்ல..
இப்படிலாம் தினமும் ட்ரெஸ் பண்ணியென்னா ஆபிஸ்க்கே போவமாட்டேன் பார்த்துக்கோ.. அழகாய் சிரித்து வாசு கேலி செய்தவாறே சாப்பிட எந்திரிக்க.. கண்ணுக்கு அழகான கணவன் அதுவும் ஏழு வருஷம் கண்ணிலேயே காதல் வரம் கேட்டு அடைந்தவள்.. ஒரே ஒரு குழந்தை மட்டும் கிடைச்சுட்டா வேறொன்றும் வேணாமே.. போதும் போதும் கொடுத்த ஆசீர்வாதங்கள் எல்லாம் .. மனசார கடவுளை வேண்டி நின்றாள் அந்த பேதை பெண்
சகணவன் மனைவிக்குள் இயல்பாய் அமையும் உறவை அசைவுகள் காட்டி தானா தூண்டுவது சுகன்யாவுக்கு வித்தியாசமா இருந்தாலும் குழந்தை ஆசைக்கு எனும் போதில் எதும் தவறில்லை என்றே தோணுச்சு..
இரா உணவு முடித்து டிவி பார்த்து பாதாம் பால் கொடுத்து வாசு உறங்க போகும் வரை இருவருக்குமான காதல் தருணங்கள்..
“கல்யாணத்துக்கு முந்தின வாழ்க்கை வீணான நாட்கள் சுகன்”
“எப்படி சொல்றீங்க?”
“இந்த லைப் தான் திவ்யம்டி… நீ என்னை நல்லா கேர் பண்ற.. உணவு செம்மடி பார்த்து பார்த்து பரிமாறுற.. எங்கம்மாவை ஓபி அடிப்பாங்க தெரியுமா? என் தொழில் நல்லது யோசனை எல்லாம் உன்கிட்டே மனசார சொல்றேன்.. எல்லாத்துக்கும் மேல .. என் தேவைக்கு நீ .. எவ்ளோ நல்ல விஷயம்.. அதுவும் குண்டு பொண்ணு பூசின சிவப்பு உடம்பு அரிசி பல்லு .. பட்டை உதடு.. ” ஒவ்வொன்றாய் சொல்லி சொல்லி ஆசையுடன் தீண்ட தீண்ட காதல் வழிச்சாலை சொர்க்க வாசல் சேர்ப்பித்தது..
சுகி பாவம் தான் எந்த வாக்கு தத்தங்களும் அவளின் மணி வயிற்றில் பிள்ளை தரிக்கும் நன்மை செய்யல.. ஆர்வம் அதிகமானதால் நாள் கூட மாதம் போலானது ஆசைகொண்டவளுக்கு..
ரெண்டு வருஷம் ஆனதும் ஊரை போல வாசுவே குடும்ப தலைவனாய் பொறுப்பெடுத்து இருவருக்கும் டெஸ்ட்
செய்து கொள்ள.. சுகன் க்கு ஏதோ தவறு இருக்கு என்று சொல்லி மூணு மூணு துளை போட்டு என்னென்னவோ மருந்துகள் கொடுத்தும் கடைசியில் இந்த பெண்ணுக்கு பிள்ளை பெறும் தகுதி போயிற்று என்று கையை விரித்து விட்டது நவீன மருத்துவம்
முடிவுகள் ..சுகியின் மனசை கொன்றது தான் மிச்சம்…
பிரமை பிடித்த மாதிரி இருந்த மனைவியை.. வா கண்ணம்மா ஒன்னுக்கு நாலு குட்டி பிள்ளைகள் எடுத்து வளர்த்து படிக்க வைப்போம் பெற்றால் தான் பிள்ளையா .. இன்னும் எந்த காலத்தில் இருக்க? மிக எளிதாய் வாசு சமாதானம் செய்ய..வரும்மாவும் கதிரேசனும் இதையே ஆமோதிக்க.. உயிரில்லா பார்வை பார்த்தாள் சுகன்யா…. என்னால் இவர்கள் குடும்பம் வாரிசு இல்லாமல் போவதா? வலித்தது..
என்னுடைய ரோல் என்ன? நான் பிறந்ததே வீணா? தன் எண்ணங்களே சத்ருவாக சுகி யாரும் சிதைக்காமலேயே தானா பாழ் பட்ட சிலையானாள்…
★★★★★★
நீ ரொம்ப மாறிட்டேக்கா … முன்பிருந்த என் சுகன்யா அக்கா இல்லை.. முகமே மாறிட்டது .. சிரிப்பு இல்லை.. தன்னம்பிக்கை இல்லை.. சுறுசுறுப்பு இல்ல.. அடுக்கினான் காலேஜ் படிக்கும் கைலாஷ்
வாசுவுடன் பிரிவு ஏற்பட்டு சரியாக 8 மாசமாகிவிட்டது.. இப்போவும் அதே எதிர் வீட்டில் தான் இருக்கிறார்கள் எதிரிகளாக.. இரு குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தை இல்லை.. ஒரு செவ்வாய்க்கிழமை மதியத்தில்..
வாசு, சுகன்யாவே வேண்டாம் என்று கழுத்தை பிடிச்சு இழுத்துட்டு வந்து மாமனார் வீட்டு வாசற்படியில் விட்டுட்டு போய்ட்டான்
ராகவனுக்கு ரொம்ப கோவம்.. வேட்டியை மடித்து கட்டி சண்டைக்கு போக முயல.. சுகி தடுத்தாச்சு..
“இப்படியே விடுங்கப்பா எங்களுக்குள்ள ஒத்துவரல.. இனியும் ஒத்துப்போகும் என்ற நம்பிக்கையும் இல்லப்பா.. சண்டை போட்டுட்டு ஒன்னா இருப்பதுக்கு பதில் பிரிந்து நிம்மதியா இருக்கோம்..”
சுகன் வீடு என்ன செய்வது தெரியாது.. வேணும்னே ஆள் விட்டு சீர் கேட்க… வரும்மா அழுததாக போனவர் கவலையோடு வந்து பதில் சொல்ல.. மறுநாள் அதிகமாகவே அங்கிருந்து பொருட்கள் சுகியின் பிறந்தகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன… யார் கண் பட்டதோ? இருகுடும்பங்களும் மௌனத்தை கனத்த போர்வையாக்கி நடுவில்
திரையிட்டுக்கொண்டனர்…
விடுதலை பத்திரம் தந்த பின் வாசு வெளியூர் கட்டுமானங்களில் தானே தங்க ஆரம்பித்து விட்டான்.. சென்னையில் இருக்கும் நாட்களிலும்
வருவதும் போவதும் கூட தெரியாது.. முகம் உம் மென்று அரிதாரம் பூசி இருந்தாலும் உடல் மெலிந்து இருந்தான்..
அன்றும் தாய் பரிமாற எப்பவும் போல வாசு டிவி பார்த்துட்டே உணவை விழுங்கி கொண்டிருக்க..
“சாப்பிட்டு முடிச்சுட்டு டிவி பாருடா வயிற்றில் ஒட்டாது” வரும்மா கண்டிக்க.. அமைதியா தட்டு பார்த்து உண்ணவாரம்பித்தான்..
“சுகி கிட்டே நான் பேசட்டா வாசும்மா..” எப்பவும் கேட்கும் கேள்வியை சலிக்காது தாய் கேட்க..
“இதோ பாருங்க.. இடையில் வந்தா இடையில் போய்ட்டா .. திரும்ப வந்தாலும் இருக்கமாட்டா.. ஏதாவது புது உரண்டையை கிளப்பி நிம்மதியை கெடுப்பா.. அதனால் அவ வேணாம் ம்மா.. எனக்கு நீங்க உங்களுக்கு நான் இதான் என்னைக்கும் நிரந்தரம் விடுங்க..”
“குடும்பம் ன்னா முன்னே பின்னே தான்பா இருக்கும்.. நூல் பிடிச்ச மேனிக்கு சரியா இருக்காது வாசு.. உனக்கும் இவ்ளோ கோவம் ஆகாது போப்பா..”
“எனக்கு குடும்பம் இல்லை.. தனி கட்டை என்று எழுத்து இருக்கு என்ன செய்ய? விடுங்க…” உண்டு முடித்தவன்… கை கழுவி, டிவி நியூஸ் விவாதத்தில் மூழ்கிவிட..
தன் அறைக்கு படுக்க போன வரும்மாவுக்கு கண்ணீர் தானா வழிந்தது.. அழும் சத்தம் கேட்டால் மகன் வருத்தப்படுவான் என்று.. சேலையில் வாய் மூடி அழுதார்..
ஜோசியர் சொன்ன மாதிரியே நடக்குதே எல்லாம் திகில் கொண்டார்.. மெய் தானோ?அப்போ வாசுவுக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ண வேண்டி வருமோ?
★★★★
அலங்கார பிரியனனான கணவன் கம்பீரமா ட்ரெஸ் பண்ணி குளிர் கண்ணாடி அணிந்து காரில் அலுவலகத்துக்கு போவதை.. ஏக்கமாய் தன் அறை நெட் ஸ்கிரீன் வழியே யாருக்கும் தெரியாது பார்த்துக்கொண்டிருந்தாள் சுகன்யா..
இருக்கும் நன்மையை நினையாது இல்லாதது நினைத்து கனவு கோட்டை கட்டுர இல்ல சுகன்.. இனி அடிப்படைக்கே ஏங்க வைக்கிறேன் பாரு.. அன்று தாய் வீட்டு வாசலில் விடும் போது வாசு சொன்னான்..
அதே போல வாசுவின் அண்மை நேசத்துக்கு இப்போ ஏங்குகிறாள்.. ஆனால் அவன் தீயா இருப்பதால் நெருங்கவே முடியாது.. சோ சாட்
ஆண்கள்லாம் ஏன் இப்படி பிடிச்ச பிடியில் நிக்கிறாங்க பாஸ்? பிடிச்சா தலையில் வைக்குதுக.. கோபமா? காலில் போட்டு மெறிக்குதுக? ஹுக்கும்.. இடையில் இணங்கி போகணும் .. விட்டு கொடுக்கணும்.. காது கொடுத்து என்ன சொல்ல வரோம் கேக்கணும்.. தோணுதா? ஹூக்கும்.. டூ பேட்.. சுகன் மைண்ட் வாய்ஸ் eee
நம்மதும் தான்.. சலிச்சு போச்சுயா .. முடில eee
வீரமா சண்டையில் இருந்தாலும் நீ வேணவே வேணாம் என்று வாசு சொல்லிட்டாலும் … சுகிக்கு தேடுச்சு.. கணவனின் தொடுகைகள் இப்போலாம் ஏக்கம் தந்தது எட்டு மாசம் அவன் ஸ்பரிசங்கள் இல்லை.. அவனுடன் இருந்தப்போ தாம்பத்தியம் அத்தனை ருசியா இல்ல.. கடமை போலவே இருந்ததால் சுகம் பழகி போச்சு..
இப்போ உணவு போல உறவு தேவை என்றது இளமை கொழுவீற்றிருக்கும் சுகியின் யாக்கை.. வாய்ப்பில்லை என்றான பின் வாசுவின் காதல்கள் தெய்வீகமா தெரிஞ்சுது.. பிள்ளை பெக்கத்தான் உறவோ? பிளசர்க்கா? முன்பு புரியாதது என்னென்னவோ புரிஞ்சது.. கணவன் மனைவி உறவு குறித்து அறியாமை விலகி.. தொடத் தொட தொடரும் உயிர் பந்தம் அது.. குழந்தை வேணும் என்று பள்ளு பாடி அடிப்படையையே ஆட்டுவித்துவிட்ட முட்டாத்தனம் சுகனுக்கு விளங்கிடுச்சு. அறிவு இப்போ வந்து என்ன பிரயோஜனம்?
வாசுவை எவ்ளோ வெறுப்பேத்த முடியுமோ அவ்ளோ பண்ணி பிரிஞ்சாச்சு
வீட்டில் வெறுமனே இருந்து பகல் இரவு தூக்கம் வாராது விழிச்சுட்டே கனவு கண்டு போரிங் ஆனது தான் மிச்சம்..
எம் ஈ பார்ட் டயம் படிக்கிறியா? நம்ம நண்பர் காலேஜ் தான்.. ராகவன் மகள் மனதை மாற்ற உபாயமா கேட்டுவைக்க..
சரிப்பா .. அவருக்காக சொன்னாள் சுகி..
என்னத்த படிச்சு? என்னத்த வாழ்ந்து?” சுகியின் தலைக்கு பின்புறம் பற்றில்லா ஒளிவட்டம் வந்துவிட்டது eee
குழந்தை ஆசை போய் புருஷன் ஆசை வந்ததை யாரிடம் சொல்ல முடியும்? ம்ம்ம்
எந்த கெட்ட பழக்கமும் இல்லாத கணவனிடம் தப்பு செய்ய பேராசை வந்தது .. பெண்ணாய் நாணம் தாண்டி வாசுவின் எச்சில் பண்டமாய் சுவைக்கப்பட சுட சுட இதழ் முத்தம் வேணும்னு ஆசை.. திரண்ட தோள் சாய ஆசை.. கூடல் பொழுதில் அவன் பாரம் சுமக்க ஆசை.. அவன் பல் உடலெங்கும் காயம் பண்ண ஆசை… திரிபுரம் பற்றிய தீயாய் தாபம் எழுந்தது..
கல்யாண ஆல்பம் பார்த்தவள்.. தன் கண்ணனின் அழகை ரசித்து மயங்கி நின்றாள்.. இப்போ கொஞ்சம் முகம் மெச்சூரிட்டியா இருக்கு அவருக்கு.. இதான் சரிவயசு ஆணுக்கு.. தானாய் லூசு போல புருஷனை ஆராய்ந்து புகழ்ந்தாள்..
ஆமாம் கைலாஷ் .. மாறித்தான் போய்ட்டேன்.. கல்யாணம் ஆனபின் ஏதோ ஒரு பேய் பிடிச்சு ஆட்டிவச்சு முடிச்சுட்டு.. இப்போ யாரும் இல்லாமல் அடங்கி கிடக்கு… சுகியின் கண்ணீர் துளிகள் கன்னத்தில் உருண்டு இறங்கி நெஞ்சை ஈரம் செய்தது..
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா அன்பே..
