14-என் மழை மேகமாய் நீ ஆகினாய்
14-என் மழை மேகமாய் நீ ஆகினாய்….
இந்த முறை உஷாராய் ஏற்கனவே தான் வாங்கி வைத்திருந்த காய்ச்சல் மாத்திரையை அவளுக்கு கொடுத்து, நெற்றியில் மென்மையாக ஒரு முத்தம் கொடுத்து தூங்கச் சொல்லிவிட்டு இவனும் அமைதியாய் படுத்துக்கொண்டான்…
வியாதான் இவன் காட்டிய அன்பிலும் நெருக்கத்திலும் விதிர்விதித்து, திண்டாடி.. தூக்கம் தொலைத்து.. இந்த பருவ மயக்கத்தில் உழன்று தவித்தாள்….
மறுநாள் காலை..
வேலைகள் பொருட்டு இவன் சீக்கிரமாகவே வெளியே சென்று விட,மீண்டும் காய்ச்சல் வந்துவிட்டது என்று கூறியதோடு, அதைக் காரணம் காட்டி காலேஜுக்கு மட்டம் அடித்துவிட்டாள் வியா..
“நேற்றும் கரிகாலன் ஏதாவது ரகளை பண்ணினானா”?? இது பாட்டியின் கேள்வி….
எண்ணத்தை சொல்லுவது,?? அதை எப்படி சொல்லுவது?? மேலும் அவனாக வலிய வந்து எதுவும் பண்ண வில்லையே…
என அவன் பக்கமாக சாய தொடங்கிய இள மனது எடுத்துரைக்க, அவன்மேல் எந்த குற்றமும் சுமத்த மனம் வராமல் முதல் நாள் வந்த காய்ச்சலின் தொடர்ச்சியே இது…
முழுதாய் சரியாகாமல் மீண்டும் வந்துவிட்டது அதனால் தான் இன்று ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்று கூறி மழுப்பினாள்…
சரி என்று அவளுக்கு பத்தியமாக கஞ்சி வைத்துக் கொடுக்க, அடக்கடவுளே இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் காய்ச்சல் என்று சொல்லியிருக்கவே மாட்டேன்…
நல்லா வக்கனையாக சாப்பிடலாம் என்று நினைத்தால், கஞ்சி கச்சி ஊற்றுகிறார்களே?? என்று மனதில் நினைத்த வண்ணம் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்…
ஒரு அண்டா சாரி ஒரு குண்டா கஞ்சி குடித்த பின்பு ரெஸ்ட் எடுக்கிறேன் பேர்வழி என அறைக்குள் சென்றவள் முதல் நாள் இரவு நிகழ்ச்சியை அசை போட ஆரம்பித்தாள்..
ஏதேனும் மாயமந்திரம் போட்டு என்னை மயக்கி விட்டாரா சீனியர்?? என்னால் ஏன் எப்பொழுதும் போல இருக்க முடியவில்லை?என் உணர்வுகளின் பாஷையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே….
என் உடலில் புது ரத்தம் பாய்ந்தது போல அப்படி ஒரு எனர்ஜியா இருக்கிறதே.. இது எதனால்….
என் ரத்த நாளங்கள் மட்டுமல்ல, எலும்புகளிலும் சதைகளிலும் கூட ஏதோ ஒரு குறுகுறுப்பு உள்ளூர செல்கின்றதே… அது எதனால்??
இதுவரை எந்த ஆண் மகனைப்பார்த்ததும் எனக்கு எதுவும் தோன்றியதில்லை, வேறு பாலினம் அவ்வளவு தான் எனக்கு தோன்றியதுஎல்லாம், ஆனால் இன்று??
சீனியரின் முகம் பார்க்கக் கூட எனக்கு கூசுகிறது,கள்ளத்தனமாய் அவரின் முகம் காண மனம் துடிக்கிறது இது எதனால்??
நேற்று அவர் என்னை தொட்ட பொழுது எனக்கு கோபம் வரவில்லையே, மாறாக குழைந்து போய்த்தானே நின்றேன் எவ்வாறு நான் அப்படி மாறினேன்??
என் எண்ணங்களை கூட மயக்கும் சக்தி அந்த தொடுகைக்கு வந்தது எப்படி??
என் அங்கங்கள் அனைத்தும் அவரது தொடுகையை உணர்ந்து உருகியதே எதனால்??
மனம் அவர் மீது வெறுப்பையும் கோபத்தையும் காட்டாமல் அவரின் தொடுகையை ரசித்தது.. உடலோ இந்தக்கணம் இன்னும் நீளாதா என்று ரகசியமாக தேடியதே… அவ்வளவு வெட்கம் கெட்டவளா நான்??
இந்த உணர்வுக்குப் பெயர் என்ன?? நானும் அதை யோசிக்கதானே செய்கிறேன் ஒன்றும் புரியாமல் குழப்பமாய் தவிக்கிறேன்…
அவரின் செயல்களை ரசிக்கத்தானே செய்தேன்!! பாட்டியிடமோ, யாரிடமும் இதைப்பற்றி கூறவில்லையே.. கூறவும் மனம் வரவில்லையே..
நினைக்கும்போதே இனிக்கின்றது நேற்றைய ஒட்டுதல்கள்…, வேறு சிந்தனை வருவது கூட பொறுக்காமல் நேற்றைய நிகழ்வினை மீண்டும் மீண்டும் நினைத்து அசை போட நினைக்கின்றேன்…
காலேஜ்க்கு கூட இதனால் போவதை தவிர்த்துவிட்டு, அவன் நினைவாய் இருக்கிறேனே!! ஏன் இப்படி நான் மாறிப்போனேன்??
தொட்டுப் பேசுவது தவறு என்று கூறிக் கொண்டிருந்த நானா இவ்வாறு ஒருவர் தொடுகைக்காக ஏங்குகிறேன்…
எனக்கு தலையே வெடித்து விடும் போல் இருக்கிறதே முருகா.. யாரிடமாவது என் மனதில் உள்ளவற்றை கூறி இது என்ன மாதிரியான வியாதி என்றாவது கேட்கலாம் என நினைத்தால், யாரிடம் கேட்பது?? எப்படி கேட்பது??
என்னை அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?? ஒன்றும் புரியாமல் விழித்தாள் வியா…
இருப்பினும் முந்தைய நாள் நிகழ்வினை மீண்டும் மீண்டும் நினைத்து கண்ணங்களில் செம்மை பூக்க… ஏதோ ஒரு அரை மயக்க நிலையில் இருப்பது போன்ற ஒரு தோரணையில்… அவளே தானாக சிரித்துக் கொண்டும் கற்பனையில் மிதந்து கொண்டும் இருந்தாள்….
இந்தப்பித்து நிலை மாலை கரிகாலன் வரும் வரை நீடித்தது…
மற்றவர் முன்னிலையில் இவள் ஏதும் காட்டிக்கொள்ளவில்லை எனிலும் இவளது முகத்தின் பிரகாசமும்,இவளின் குழப்பமும்,ரகசிய சிரிப்பும்… வாழ்ந்து அனுபவப்பட்டவர்களுக்கு எந்த மாதிரியான உணர்வில் இவள் இருக்கிறாள் என்பது கூடவா புரியாது..
இவளை நன்கு உணர்ந்து கொண்ட பாட்டி மாலையில் இருவரையும் கோவிலுக்குப் போய் வரச்சொன்னார், உள்ளூர குது காலம் வியாவிற்கு,..
கரிகால னுடன் ஜோடி போட்டுக் கொண்டு செல்கிறோமே என்கின்ற சந்தோஷமே அதற்கு காரணம்..
அவனுக்காக இன்று நாள் முழுவதும் புடவையை மாற்றி மாற்றி கட்டி கொஞ்சம் பழகி, ஓரளவுக்கு தடுக்காமல் நடக்கப் பழகி, அவன் பாராட்டுக்காக சிறு குழந்தை போல வெயிட்டிங்…
ஒரே நாளில் எப்படி இப்படி ஒரு மாற்றம் சிந்தித்தாலும் இவளுக்கு விடை வரமாட்டேன் என்றது,அதை தற்சமயம் டீலில் விட்டு விட்டு அவனுக்காக சற்று மெனக்கெட்டாள்…
முதன் முதலாய் தன் அழகின் மீது அக்கறை செலுத்தி, மெலிதாய் கண் மை தீட்டி, காம்பேக்ட் பவுடர் அடித்து,சிறிய மெருன் கலர் வட்ட பொட்டு வைத்து, உதடுகளை ஈரமாக்கி லேசாக லிப் பாம் போட்டு, காதில் ஜிமிக்கி அழகாய் நர்த்தனம் புரிய, அதற்கு மிகச் சரியாய் பொருத்தமான ஆன்ட்டிக் நெக்லஸ், வளையல் என்று அலங்கரித்தாள்…
தலையில் சற்று தாராளமாய் சூடிய ஜாதிமல்லி தன் மணத்தினை அவள் மேலும் மெலிதாய் படர விட்டது…கண்ணாடியில் தன் அழகை தானே ஒரு தரம் ரசித்து அவனுக்கும் பிடிக்கும் என நம்பி,ஆசையாய் பாட்டியிடம் கேட்டு வாங்கி வந்த பட்டு புடவை உடுத்தி மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்தவளை ஏற இறங்க பார்த்தான் கரிகாலன்..
“இப்ப எதுக்கு இந்த கோலம்?? நாம் போகும் வழி முழுக்க தார் ரோடு தான் போட்டுருக்காங்க விழுந்து கைய காலை உடைத்து விட்டு அதற்கு நான் தான் காரணம் என கூற போகிறாயா??
பேசாம போய் உன்னுடைய சுடிதாரை போட்டுக் கொண்டு வா…இங்க தான் நான் நின்னா குத்தம் நடந்தா குத் தம்முனு எல்லாரும் பேசுறாங்களே தேவை இல்லாமல் என்னை வீண் வம்பை விலைக்கு வாங்க வைக்காத, போய் சீக்கிரம் மாத்திட்டு வா”…
சூரியனைப் பார்த்து மலர்ந்த தாமரை போல ஆசையாய் வந்தவளை kk இப்படிக் கூறியதும் கூம்பிப்போன முகத்துடன், போடா பெரிய இவன் நீ..
இவனுக்காக நான் புடவை எல்லாம் கட்டினேன் பார் என்னைச் சொல்ல வேண்டும்.. இரவு முத்தம் கேட்டு வருவாய் அல்லவா அப்போது நான் யார் என்று உனக்கு காட்டுகிறேன் என்று மனதில் அவனை திட்டிய வண்ணம் உடைமாற்ற உள்ளே சென்றாள்..
“ஒரு நிமிஷம் நில்லு”
சற்று கோபத்துடன் அவள் திரும்பிப் பார்க்க,
“ஆமா எப்படி நீ கீழே தடுக்கி விழாமல் நார்மலாக நடந்து சென்றாய்?? இன்நேரம் இரண்டு மூன்று தடவையாவது தடுக்கி விழுந் திருக்கவேண்டும் அல்லவா”?? என்று தன் பெரும் சந்தேகத்தை வினவினான்…
(இதெல்லாம் வக்கனையா கேளு..இங்கே ஒருத்தி உன்ன பாத்து சிரிச்சுக்கிட்டு பேச வரேன் நீ என்கிட்ட நல்லபடியா பேசி விடாதே..
உனக்குகரிகாலன்னு பேரு வச்சதுக்கு பதிலா எரிகலன் என்று வச்சிருக்கலாம், எப்ப பார்த்தாலும் எரிந்து விழுவது மட்டும் தான் உன் வேலையா இருக்கு… இக்கும்.. போடா)
“புடவை கட்டி கொஞ்சம் பழகியிருக்கிறேன் சீனியர் அதனால் தடுக்கி விழாமல் என்னால் நடக்க முடியும்”.. ஏதோ கட்டுரை ஒப்பிப்பது போல இவள் படபடவென கூறினாள்..
“உன்னால இந்த புடவையை கட்டிட்டு கோயில் வரைக்கும் நடந்து வர முடியுமா?? முடியும் எனில் வா, இல்லை எனில் டிரஸ் மாத்திட்டு வா…
முடிவு உன்னுடையது தான் என்னுடையதல்ல அனைவர் முன்னலையிலும் தான் சொல்லுகிறேன், அப்புறம் யாரும் என்னை குற்றம் சொல்லக்கூடாது…
முதல் நாள் இவள் சொன்னதை நம்பி அனைவரும் இவனிடம் கோபம் கொண்டதை மனதில் வைத்து இப்பொழுது குத்தி காமித்து பேசுகிரானம்..
கடகடவென படி இறங்கி வந்தவள்,” வாங்க போகலாம் சீனியர்” என்றாள்..
சரி என அரைகுறையாக சம்மதித்தான் கரிகாலன்….
இன்னும் உள்ளூர அவனுக்கு இவள் மேல் நம்பிக்கை இல்லை இருந்தாலும் ஏதோ மேனேஜ் பண்ணுகிறாள் என்று அவளுடன் நடக்க ஆரம்பித்தான்..
மாலை மங்கும் நேரம், அருகில் தான் புதிதாக காதலிக்கும் பெண்..உரிமை இருந்தும் மனதளவிலும் அவள் தன்னை முழுமையாக ஏற்ற பின்னர் தான் அவளோடு முழுதாய் கலக்க வேண்டும் என்று அதற்கான பிரயத்தனத்தினை எடுத்திருப்பவன்…
இது அவனுக்கும் ஒரு ரம்மியமான பொழுதுதான்.. மென்மையாய் அலங்கரித்து, பச்சைப்பட்டுடுத்தி.. வாசனையான மலர்ச்சரம் தொடுத்து.. இவன் அருகில் வியா நடந்து வருகையில்,இவனது எண்ணங்களும் உணர்வுகளும் ஏதேதோ கதை பேசின…
இயற்கையாகவே இருவருக்கும் ஈர்ப்பு விதி வேலை செய்ய, சற்று தள்ளி நடந்து கொண்டிருந்தவர்கள் மிக அருகில் பட்டும் படாமலும் நடக்க ஆரம்பித்தனர்…
பொதுவாகவே தீபாவளியின் பொழுது அதிகமாக உபயோகப்படுத்துவது புஸ்வானமும் கம்பி மத்தாப்பும்…
இவை இணையும் வேளையில் எதுவும் தெரியாது, சிறிது நிமிடம் கழித்துத்தான் அந்த ஒரு சிறு உராய்வின் வேகம் விபரீதமாக இருக்கும்….
உள்ளிருந்து மிகுந்த வேகத்தில் நெருப்புப் பொறிகள் வெளிவந்தாலும், அவை காண்பவர் கண்களுக்கு அழகாய் விருந்தாய் அமையும்…
அதுபோலவே நடந்து செல்கையில் இருவரின் தோள்களும், கைகளும் அவ்வப்போது உராய்ந்து கொள்ள,அந்த நிமிடம் எதுவும் உணராமல் விலகிய பின்பு, அந்த உரசலின் வேகம் இவர்கள் மனத்திற்கு மகிழ்வையும் குதூகலத்தையும் அள்ளிக் கொடுத்தது…
பின்னே காதல் என்றால் சும்மாவா??
இன்றளவும் அதற்கான விளக்கங்களும் உவமைகளும் காலத்திற்கு ஏற்ப, நபர்களுக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருந்தாலும் நிரந்தரமாக என்றும் அழியாமல் நிலைத்து நிற்பதோடு… இந்த மனித குலத்தை அன்போடு ஜீவிக்க வைப்பதும் இந்த காதல் மட்டுமே…
இருவரும் தத்தமது உலகத்திற்குள் சென்று கற்பனையாய் கோட்டை கட்ட, அங்கு மௌனமே இவர்களது கற்பனைக்கு தீனி போட்டு மேன்மேலும் அதற்கு மெருகூட்டியது…
ஒருவழியாய் கோவில் வர, இருவரும் அர்ச்சனை தட்டு வாங்கிச்சென்று இறை வழிபாடு முடித்து பிரகாரத்தில் அமரும் வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை….
இருவர் கண்களும் இங்கு பாஷை பேசும் கருவியாக மாறியது தான் விந்தை..
கிளம்பலாமா என்பது கூட கரிகாலன் கண்களால்தான் தான் கேட்டான்..அதை இவளும் உணர்ந்து சரி என தலையாட்ட, மீண்டும் அம்பாளை தரிசித்து விட்டு செல்லலாம் என்று மனதார தங்கள் வேண்டுதல்களை எல்லாம் வைத்தவர்கள் திரும்பிச் செல்ல எத்தனிக்கும் போது பூசாரி இவர்களை அழைத்தார்..
“தம்பி, இன்னைக்கு வெள்ளிக்கிழமை, இருவரும் சேர்ந்து ஜோடியாய் கோயிலுக்கு வந்து இருக்கீங்க, அந்த பொண்ணுக்கு குங்குமம் வெச்சு விடுப்பா தாலி பாக்கியம் நிலைக்கும்” என்று கூறினார்….
அதோடு அம்பாளின் பாதத்தில் இருந்து சிறிது குங்குமம் எடுத்துக் கொண்டு வந்தும் கொடுத்தார்..
அகிலத்தை காப்பவளே எங்களையும் காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையோடு வியாவின் நெற்றி வகிட்டிலும் அவளது மாங்கல்யத்திலும் குங்குமம் வைத்தான் கரிகாலன்..
இந்த செய்கை அவளுக்கு ஏதோ ஒரு குறுகுறுப்பை நெஞ்சில் ஊட்டியது.. அதுமட்டுமல்லாமல் இவனது பந்தம் என்றென்றைக்கும் நிலைக்கும் ஒரு உயிர் பந்தம் என மனதில் இவனை இன்னும் அவளுக்கு நெருக்கமாக அறிமுகப்படுத்தியது இந்த குங்குமம்..
மனநிறைவுடன் இருவரும் வெளியே வர அந்த அமைதி தொடர்ந்தபடியே அந்த முன்னிரவு பொழுதில் மெல்ல நடை போட்டபடியே இருவரும் கண்களால் கவி எழுதிக் கொண்டும் உள்ளூர அதை ரசித்துக் கொண்டும் வந்து கொண்டிருந்த வேளையில்….
திடீரென்று, எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று இவள் மேல் பாய்வது போல் வந்து ஒரு சிறு சந்தில் புகுந்து செல்ல,பயத்தில் முகம் வெள்ளி கையில் இருந்த அனைத்து பொருட்களையும் கீழே போட்டுவிட்டு வீல் என்ற சத்தத்துடன் கரிகாலன் மேலே நிமிடத்தில் குரங்கு குட்டி போல தாவி இடுப்பில் அமர்ந்துவிட்டாள்…
ஐயோ பாவம்……. என்ற நிலை கரிகாலனுக்கு..
வியாவின் வெயிட்ட்டை தாங்க முடியாமல், பேலன்ஸ் செய்யமுடியாமல் அவனும் கீழே விழ, ரோட்டில் இருவரும் புரண்டு கொண்டிருந்தனர் ஆளுக்கொரு பக்கமாய்….
