11 மவுனம் _சத்யா இராகவேந்திரா

11 மவுனம் _சத்யா இராகவேந்திரா

11 மவுனம் _சத்யா இராகவேந்திரா

11 மவுனம் _சத்யா இராகவேந்திரா

11 மவுனம் _சத்யா இராகவேந்திரா

11 மவுனம் _சத்யா இராகவேந்திரா

மௌனம் 11
நேரடி ஒளிபரப்பிற்காக, பல வாகனங்கள் நின்று இருக்க, என்னவென்று தெரியாமல் அந்த இடம் முழுக்க மக்கள் கூட்டம் சேர தொடங்கியிருந்தது…

ஆதிக்கு எதுவும் புரியவில்லை!!, எதற்கு இத்தனை மீடியாக்கள்?? இவ்வளவு கூட்டம்?? உள்ளே சென்று மதுவை அழைக்கலாம், என்று திரும்ப.. அவளும் வெளியே வர சரியாக இருந்தது…

“என்ன மாமா?”உன்னை கேட்டு வாசலில் ஒரு பெரிய கூட்டமே வந்து நிக்குது..
எட்டிப்பார்த்தவளை கண்டவுடன், “கங்கிராஜுலேசன் மேடம்”… என அனைவரும் ஒத்த குரலில் வாழ்த்துக்கள்
தெரிவித்தனர்..

ஓ ரிசல்ட் வந்திருச்சா!! என மனதில் நினைத்தவள், புன்னகை பூத்த வண்ணம் நன்றி உரைக்க.. இந்தியாவிலேயே பட்டய கணக்காளர்..(சி .ஏ) தேர்வில் முதலிடம் வகித்து இருக்கிறீர்கள்!!.. அதுவும் முதல் முயற்சியிலேயே… இந்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?? என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு மென் நகை மாறாமல்….

“இதற்கு நான் எனது தாய் மொழியில் பதில் கூற விரும்புகிறேன்”.. என்றவள், “ஒரு திருக்குறள் உண்டு, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.. என்று… இதுவே எனக்கு தாரக மந்திரம்”.. என்றதும் அங்கிருந்த மற்ற தமிழக வாசிகள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்….

“உங்களது எதிர்கால லட்சியம் என்ன??”
“ஒரே ஒரு முறையாவது இந்திய நிதி அமைச்சகத்தில் ஏதாவது ஒரு பதவியில் பணிபுரிய வேண்டும் என்பதே”.. என்று கூற அனைவரும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்..

“உங்களிடம் ஒரு தனிப்பட்ட கேள்வி”.. என ஒரு பெண் நிருபர் கேட்க, ” சொல்லுங்கள்”
” நீங்கள் முதலிடம் வகிப்பதாக தகவல் வந்த பிறகு, உங்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக உங்களுடைய ப்ரொபைல் பார்த்தேன்…

படித்தது கம்ப்யூட்டர் சயின்ஸ் அதுவும் அண்ணா யுனிவர்சிட்டி சென்னையில்… அனைத்து பாடத்திலும், கோல்ட் மெடல் வாங்கி இருக்கிறீர்கள்… பலவிதமான வெளி நாட்டு கம்பெனிகளின் வாய்ப்புகள் வந்த போதும்,இந்தியாவில் மிகச் சிறந்த ஒரு கம்பெனியில் நேரடியாக ஒரு பெரிய பதவி வகிக்கிறீர்கள்..

ஆக கண்டிப்பாக, வேலை பளு மிகுதியாக இருக்கும். எப்படி படித்தீர்கள்?? உங்களின் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டால்.. போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்தும், அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்”…

“கண்டிப்பாக… முதலில் எனக்கு கணக்கு பிடிக்கும்.. அதற்கு காரணம், என் கணித ஆசிரியர் திருமதி அருள் ஜோதி..அவர்கள் வெறும் பாடம் மட்டும் எடுக்கவில்லை.. வாழ்க்கையில் கணிதம் எப்படி உபயோகப்படுகிறது… என்று வாழ்க்கைப் பாடம் சொல்லிக்கொடுத்தார்…

அன்றிலிருந்து என் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியது கணிதம்… அதனால்தானோ என்னவோ, எனக்கு எத்தனை வேலைப்பளு இருந்தாலும்.. என்னை உற்சாகப்படுத்தும் ஒரு ஊக்கமூட்டி ஆகவே கணக்கு இருந்தது…

எனக்கு சி.ஏ படிக்க கஷ்டம் எதுவும் இல்லை.. அதனால் முதல்முயற்சியிலேயே வெற்றி கிட்டியது!!..எதை செய்தாலும் காதலுடன் செய்யுங்கள்.. கடமையாய் செய்யாதீர்கள்…

உங்கள் கனவை வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஆக்குங்கள்.. வெற்றி நிச்சயம்..,உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி… வணக்கம்”..

தன் பெரும் வெற்றியை, மிக எளிமையாக முடித்துக்கொண்டு சென்ற மதுவை… அனைவரும் வியப்பாகவே பார்த்தனர்..

இப்போ வரை நாம் ஆதி பக்கமே போகவில்லயே ஆதியை பார்ப்போமா??

வாயில் ஈ… போனால் கூட தெரிந்திருக்காது.. அப்படியே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவன்… கண்களோ வர்ணஜாலம் காட்டின..

இத்தனை திறமைகளை ஒருங்கே கொண்டவளா என் பாப்பு?…என்று ஆச்சரியத்தில் உறைந்தவன் தான்.. இன்னும் தெளிவில்லை…

அவனையும் இழுத்துக் கொண்டே உள்ளே சென்றவள்..” மாமா என்னது இப்படி நிக்கிறீங்க”?? “என்ன மது??” குறும்பாய்,
“ஏன் இப்படி பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி நிக்கிறீங்கன்னு கேட்டேன்”??

இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வராத ஆதி இவள் பேசியதை உள்வாங்காமல் “ஹேய் பாப்பு….. கடவுளே!! எவ்வளவு பெரிய விஷயம் இது”..

“ஏன் மாமா திடீர்னு சம்பந்தமில்லாம பேசுகிறாய்”??..

“ரொம்ப கஷ்டமான படிப்பு மா இது… இவ்வளவு எளிமையா பாஸ் பண்ணி இருக்க!!!என்னால நம்பவே முடியல!!..

இன்னைக்கு முழுக்க என்கூட தானே இருந்த… என்கிட்ட ஒரு பேச்சு சொல்ல மாட்டியா”??.. என்று செல்ல கோபத்தில் கேட்க..

“உண்மைய சொல்லனும்னா, நான் இதை எதிர்பார்க்கல மாமா….பாஸ் பண்ணிடுவேன்.. என்று தான நினைச்சேனே தவிர, இப்படி முதலிடம் வருவேன்.. என்ற எதிர்பார்ப்பு இல்லை”..

சிறிதும் தலைக்கனம் இல்லாமல்..
கூறியவளை, பெருமையும் காதலுமாக பார்த்தவன்.. இப்படி ஒரு தங்கத்தாரகை என் மனைவியாய் கிடைக்க என்ன தவம் செய்தேனோ நான்.. என உளமாற கடவுளுக்கு நன்றி கூறினான்…

” பாஸ் பண்ணதுக்கு அப்பறம் சொல்லிக்கலாம், என்று நினைத்தேன்.. இன்னைக்கு முடிவு வெளியிடுறாங்க என்பதையே நான் மறந்துட்டேன்… எனக்கு இது ஆனந்த அதிர்ச்சிதான் மாமா” என்று எதார்த்தமாக எடுத்துரைக்க

உண்மையிலேயே இத்தனை சிறப்பான குணங்களை உடையவள் மது என்பதில் பெருமிதம் கொண்டான்..

வெற்றி யை இயல்பாக எடுத்துக் கொண்டு இருப்பதிலேயே அவளின் குணம் தெரிய இவள் குத்துவிளக்கு போல தானும் சுடர்விட்டு தன்னைச் சுற்றியுள்ள நபர்களுக்கும் ஒளி கொடுப்பவள்..

இவளை கண்டிப்பா நாம நல்லா பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்..

“சரிடா செலிபரேட் பண்ணலாமா!! இந்த வெற்றியை”??” வேண்டாம் மாமா…. தப்பா எடுத்துக்காதீங்க.. நான் என்னுடைய பிறந்தநாள், அப்பறம் இந்த மாதிரி எந்த ஒரு நல்ல நிகழ்விற்குமே.. தனியா கொண்டாடுவது இல்லை….

மாறாக அந்த நாளன்று முதியோர் இல்லங்களில்… அல்லது தெருவோரம் வாழும் வசதி இல்லாத குடும்பங்களுக்கு.. அல்லது ஊனமுற்ற பிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கு… சென்று என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்..

இந்த முறை, நீங்கள் கொண்டாடலாம் என்று கூறுகிறீர்கள்.. உங்கள் தகுதிக்கேற்ப உங்கள் பட்ஜெட் ஐ கூறுங்கள்.. அந்த பணத்தை வைத்து இங்கு யார் யாருக்கு.. என்ன செய்யலாம்?? என்பதை நான் கூறுகிறேன் மாமா”… என்று மது கூறியதுதான் தாமதம்..

இடம் பொருள் ஏவல் அறியாது… அவளை கட்டி தூக்கி தட்டாமாலை சுற்றினான் ஆதி…

பத்மாவிற்கு சற்று கூச்சமாக போய்விட்டது…. எனினும் அவன் மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதம் அப்படி.. என்று அதை நல்ல விதமாகவே எடுத்துக் கொண்டார்..

” இறக்கி விடுங்க மாமா” என்றவளின் முகமும் வெட்க கவிதையாய்!!!

” அம்மா இருக்காங்க மாமா” என்று கிசுகிசுப்பாய் கூறிய பின்னரே சுற்றம் உணர்ந்தவன்..அவளை மெதுவாய் இறக்கிவிட்டு, “என் சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியல டா பாப்பு…

10 லட்சம் ரூபாய் பேபி… என்ன பண்ணலாம் யோசிச்சு சொல்லு”..
என கூரியவன் மகிழ்ச்சியுடன் சென்று வருகிறேன் எனக்கூறி தலையாட்டிவிட்டு கிளம்பினான்..

இப்போது வாயை பிளப்பது மதுவின் முறையாகியது…

“காசு இருந்தால் மட்டும் போதாது.. மது குட்டி .. அதை மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுப்பதற்கு.. மனது வேண்டும்..

அது மாப்பிள்ளையிடம் நிறைய இருக்கிறது.. இயல்பிலேயே தம்பி ரொம்ப நல்ல குணம்… மனசு நிறைஞ்சு இருக்குடா!! நீங்க ரெண்டு பேரும் சீரும் சிறப்புமாக நல்லா வாழனும்”… கூறிய பத்மாவின் அகமும் முகமும் மலர்ந்து நிறைந்திருந்தது..

“ஆமாம் அம்மா உண்மை தான்… மாமாவுக்கு உதவும் குணம்.. அதிகம் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன்..
சரி உனக்கு ரிசல்ட் முன்னாடியே தெரியுமா”??..

“போன் பண்ணி சொன்னாங்க டா… நான் தான் உனக்கு சர்ப்ரைஸா… இருக்கட்டுமேன்னு, சொல்லல.. கேசரி பண்ணியதற்கு அதுவும் ஒரு காரணம்” சொல்லி சிரித்தார்…

“அப்ப ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடித்து இருக்கிறாய் நீ … இம்….
இது தெரியாம.. நீ மாமாவுக்காக தான் கேசரி பண்ணினாய் என்று சாப்பிட்டு சாப்பிட்டு உன்னை பாராட்டி சென்றிருக்கிறார், இரு இரு போட்டு கொடுக்கிறேன்… செல்லமாய் மிரட்டினாள்”.. பத்மாவின் அன்பு தாரகை…

” தாராளமா போட்டு கொடு ..எனக்கு ஒரு பயமும் கிடையாது… மாப்ள நீ நினைக்கிற மாதிரி இல்ல.. அப்படியா!! ரொம்ப சந்தோஷம் அத்தை என்று தான் சொல்லுவார்”….

” பார்ப்போமா”??

“பாக்கலாம்.. பாக்கலாம்… முதலில் கிழக்கு பார்த்து உட்காரு,. சுத்தி போடணும்.. இன்னிக்கு ஊரு கண்ணே உன் மேல தான்…. அது மட்டுமில்லாம அந்தக் கொள்ளி கண்ணு வசுந்தராவின் வயித்தெரிச்சல் உன்ன ஒன்னும் செய்யக் கூடாது என்பதற்காகவாவது சுத்தி போடணும்”..

அவளுக்கு சுத்திய பின், அதை சென்று முச்சந்தியில் போட்டு விட்டு வந்து.. இரவு உணவிற்கான உணவிற்கானவேலையில் ஆயத்தமானார்….

குளுமையை அள்ளிப் பொழிந்தும்.. இரவு இத்தனை ரம்மியமானதா!! என்று உணரும் வகையில், இயற்கையின் கொள்ளை அழகை… எடுத்துக்காட்டும் முழுமதி..

தென்றலின் சில்லிப்பும்.. மல்லிகையின் நறுமணமும்.. ஏதோ ஒரு மாய உலகிற்கு அழைத்துச் செல்ல.. காதல்கொண்ட மனதிற்கு, இது அறிவை மனது வென்றிடும் நேரம்…இது தேகத்தின் உணர்வுகள் பேசும் வேளை… என்று உணர்த்த…

இதோ ஆதியின் அழைப்பு மதுவிற்கு..

” ஹாய் மாமா”..” என்னடா பண்ற”??
“சும்மாதான் மாமா அப்படியே நிலாவை பாத்துட்டு இருந்தேன்”… “ஹேய் பாப்பு நானும் இங்கு மொட்டை மாடியில் படுத்துகிட்டு நிலாவை தாண்டா பாத்துட்டு இருக்கேன்”…” அப்படியா”….

“ஆமாண்டா”…. “இம்ம்.. சொல்லு மாமா”..
“என்ன சொல்றது” கிசுகிசுப்பாக ஆதி…
” ஏதாவது சொல்லு… ரகசிய குரலில் மது..

“ஒரே நாள்ல எவ்வளவு திருப்பங்கள்.. எண்ணிலடங்கா சந்தோஷங்கள்… எதை நினைத்து மகிழ்வது என்று புரியல..
இது எல்லாத்துக்கும் ஒரே காரணம் நீ தான்டா”…

“நீ என் உயிர்…. என் ஜீவன்… என் அமுதசுரபி”… ” மாமா ஏன் திடீர்னு உளற ஆரம்பிக்கிறாய்”…. “ஏண்டி.. இங்கே நான் பீல் பண்ணி சொல்றது… உனக்கு உளருவது மாதிரி இருக்கா”.. “சரி மாமா எதுக்கு போன் பண்ணின?? அதை முதல்ல சொல்லு”..

” என் பொண்டாட்டியை கொஞ்சுவதற்காக போன் பண்ணினேன்.. இந்த நேரத்தில் வேற எதுக்கு கூப்பிடுவாங்க… இந்தியப் பொருளாாரத்தின் சரிவை பத்தி பேசரதுக்கா”??,.. “இதோ பாருடா …. சாருக்கு கோவத்தை”..

“இப்ப தான் கல்யாண பேச்சே ஆரம்பித்திருக் கிறது… அதுக்குள்ள என்னை பொண்டாட்டின்னு சொல்லுற”??..” நமக்கு கல்யாணம் ஆகி பல வருசம் ஆச்சு டி…என் போண்டா.. டீ..
புருஷனை மறந்துட்டியா நீ”??…

” எப்ப கல்யாணம் ஆச்சு அதுக்கு சாட்சி இருக்கா”??” நீ தான் என் சாட்சி”..
“அதெல்லாம் செல்லாது.. செல்லாது.. வேற சாட்சி இருந்தா சொல்லு”…
” அடிங்க… செல்லாதாமில்ல… நேர்ல வந்தேன்… பிச்சுப்புடுவேன் பிச்சு.. தெரிஞ்சுக்கோ”…

“யாரை மாமா”??..உங்க அம்மா சொன்னா அது சரி… நாங்கள் சொன்னா மட்டும் தப்பு??.. எந்த ஊரு நியாயம் மாமா”..

” இப்ப எதுக்குடி எங்க அம்மாவை.. இந்த நேரத்துல இழுக்க்கிராய்??..அவங்க பேச்சு தேவையா நமக்கு”??

” பின்னே என்ன மாமா??.. ஒரு பேச்சுக்கு நான் செல்லாது.. என்று சொன்ன உடனேயே, உனக்கு கோவம் வருது… இத்தன வருஷமா அவங்க இதை தானே செயல்படுத்தி இருந்திருக்காங்க”…

” வேற டாபிக் பேசலாம் பாப்பு பிளீஸ்..
நான் ரொம்ப ஜாலி மூடில் உனக்கு போன் பண்ணேன்”..

“இப்படி சொல்லியே எல்லா ஆண்களும் எஸ்கேப் ஆயிடுங்க..அம்மாவை சொன்ன மட்டும் உடனேயே டாபிக் மாத்த சொல்லி கேளுங்க… எங்களை பார்த்தால் மட்டும் உங்களுக்கெல்லாம் இளிச்சவாயா.. தெரியுது இல்ல மாமா”…

“எல்லா ஆண்களும் என்று சொல்ற??வேறு யாரடி உன்கிட்ட இந்த மாதிரிஉரிமையோட பேசுறது”….

நான் ஒன்னு சொன்னா நீ ஒன்னு கேளு..
சரியான ஆளு டா நீ…

“இம்… ஒருத்தன் கூட வாழ்வதற்கு வர பிரச்சினைகளை சமாளிக்கவே என்னால முடியலை… இன்னும் நிறைய பேரை வெச்சுகிட்டாலும்….. க்க்கும்… வெளங்கிரும்”….

“எது வெச்சுக்க போறியா…. ஒரு குடும்ப பொம்பள பேசுற பேச்சா டி இது”..

“தெய்வமே!!… முடியல மாமா உன் பிளேடு.. ஒரு பு பொண்டாட்டி கிட்ட பேசுற பேச்சா இது??… வேணும்னே பேசுறான் பாரு… நான் உன் கூட டூ”…

“சாரி டா பட்டு… சும்மா உன்ன கலாய்ச்சுட்டு இருந்தேன்… இப்போ மாமா கூட பழம் விடுடா செல்லம்…என் ராஜாத்தி இல்ல”…. சரி உன்னோட மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன்.. பழம்”… என்றதும், இருவரும் ஒருங்கே நகைத்தனர் …….

“மனசு முழுக்க உன்ன பத்தி ஏதேதோ எண்ணங்கள் சுத்துது….. உன்னை அங்கு விட்டுட்டு என்னால தனியா இருக்க முடியல… இத்தனை நாளா எப்படி இருந்தேன் என்று தெரியல… ஒரு ஒரு நிமிஷமும்… எனக்கு ஒரு ஒரு யுகம் மாதிரி இருக்கு”… என தாகமாக ஆதி பேச..

“எனக்கும் தான் மாமா… உன் கைக்குள்ளேயே இருக்கணும்.. உன் மடியில உட்கார்ந்து உன்னை கட்டி பிடிச்சுக்கணும்…. நீ சாப்பாடு ஊட்டி விட நான் சாப்பிடணும்.. நிறைய சின்ன சின்ன ஆசைகள் இருக்குது மாமா”..

“எல்லாவற்றையும் சொல்லுடா மயிலு..
மாமா அதை நிறைவேற்றுவேன்”..

“அஸ்கு புஸ்கு….அதெல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் ஒன்னொன்னா நீயே கண்டுபிடிச்சு நிறைவேற்று… அதுவரைக்கும் மூச்சிங்…. எங்க சங்கத்திலிருந்து ஒரு விஷயத்தை கசிய விடமாட்டோம் பார்த்துக்க”…

“அது சரி.. அப்படி என்ன பெரிய சங்கம் உங்களுடையது”??.. “வருத்தப்படாத வாலிபிகள் சங்கம்”…. என கூறினாள் நகைப்புடன்..வாய்விட்டு சிரித்தான் ஆதி…

“சங்கத்தில் உறுப்பினர்கள் யார் யாரோ”?? என கேட்க, “தலைவர் கைப்புள்ள- மதுமதி!! பொருளாளர், செயலாளர், கொ. ப. செ., எல்லாரும் அப்பப்போ கிடைக்கும் அடிமைகளை பொறுத்து.. தன் சிரிப்பை தன்னாலே அடக்கமுடியாமல்”டேய் பாப்பு குட்டி.. உன்ன பத்தி நீயே சொல்றதுக்கு சங்கம் தேவையா”??…

“சங்க உறுப்பினரை, தப்பா பேசாத மாமா. அப்புறம், நீ தேவையில்லாத பல பிரச்சினைகளை.. சந்திக்க வேண்டியது வரும்”… “அப்படி என்ன மேடம் பிரச்சனை வரும் தெரிந்துகொள்ளலாமா”?? என பவ்யமாக ஆதி கேட்க…

“பிரச்சனை நம்பர் ஒன்.. உங்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட மாட்டாது..
( அடிப்பாவி… எடுத்தவுடனேயே மெயின் ஸ்விச்லையே கைவைக்கிறா…). பிரச்சினை நம்பர் 2 ….உங்களுடைய தொலைபேசி அழைப்புகள் எடுக்கப்பட மாட்டாது …( இதெல்லாம் ரொம்ப அநியாயம்..)

.
நம்பர் 3… இதுதான் ஹைலைட் என்ன தெரியுமா?? நீங்க ஆசையா கிட்ட வரலாம் என்று நினைக்கும் பொழுது உங்க அம்மா முக்கிய வேலையா வந்து கூப்பிடுவாங்க.. அப்படி ஒரு விஷயத்தை செட்டப் பண்ணி வச்சுடுவோம்”….
(மொத்தமாக வச்சுட்டா ஆப்பு..).

“ஆத்தா பரதேவதை…. உன்னோட வம்புக்கு நான் வரல… சின்னப் பையன் கொஞ்சம் பார்த்து மனசு இலகுத்தா
ஏதோ தெரியாம பேசியிருந்தா மன்னிச்சுருத்தா… உனக்கு புண்ணியமா போகட்டும்…

எக்கச்சக்க கற்பனையில் வாழ்ந்துகிட்டு இருக்கேன்.. எல்லாத்தையும் நானே குழி தோண்டி புதைக்க தயாராயில்லை.. எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்டாட்டி!! இனிமேல், உங்க சங்கத்தை பத்தி மூச்சு விட மாட்டேன்”…. என பயந்தவன் போல பாவனை காட்டி ஆதி பேச…

இருவரும் காரணமே இல்லாது பல நிமிடங்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.. ஸ்வீட் நத்திங்ஸ்…. என்று கூறுவது இதுதானோ… என்பது போல, இருவரும் ஏதேதோ கதைகள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்..

நடுராத்திரியில்… மது ரூமில் ஏதோ சத்தம் கேட்குது, என்று பத்மா வந்து கதவை தட்டும் வரை இருவரின் உரையாடல்களும் தொடர்ந்த வண்ணமே இருந்தது… அப்புறம் என்ன??.. கப்சிப் தான்…

தூங்குவது போல பாசாங்கு செய்தவள்… தூக்கத்தில் ஏதோ உளறி இருப்பா போல என்று பத்மா திரும்பி சென்றுவிட… அப்பாடா.. என்று மணியைப் பார்த்தால்.. மணி மூன்று..

லைனிலேயே இருந்த ஆதியிடம் ” மாமா மணி 3 ஆயிடுச்சு போய் தூங்குங்க கொஞ்ச நேரத்துல விடிந்து விடும் ஆபீஸ்ல சந்திக்கலாம்”…. “சரிடா குட்டி… எனக்கு ஒரு முத்தம் கொடு வைக்கிறேன்.. என்று பேரம் பேசினான் அவளின் கலாபக் காதலன்….

மகிழ்ச்சியுடன் இருவரும் மாறி மாறி கொடுத்துக்கொண்டே இருந்த முத்தத்தின் சத்தம்…. வண்டுகளின் ரீங்காரம் போல்…. அந்த இரவில்… அறை முழுக்க பலமாக ஒலித்துக் கொண்டிருந்தது….

“ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றவாறு மீண்டும் முத்தங்களுடன் ஆதி வைக்க… கனவு லோகத்திற்கு அந்த ஆச்சாரங்கள் இருவரையும் அழைத்துச் செல்ல..
அங்கும் டூயட் தான் ரொமான்ஸ் தான்…

இதுக தொல்லை தாங்க முடியல பாஸ்..,….

********””****************”†*******************
*********””””***********************************
********************”””””””””*******************

“ஏண்டி நீ எல்லாம் பெண்தானா?? இப்படி பணத்துக்கு பேய் போல அலைகிறாய் முளைச்சு மூணு இலை விடும் வயசிலேயே ஆதி தம்பி யை வளைத்து போட்டவள் தானே நீ… இப்ப சொல்லவா வேணும்…..

அப்படி என்ன மாயம் மந்திரம் செய்தாய், என்று தெரியல.. வசுந்தரா அக்காவையே ஆதி தம்பியை விட்டு கேள்வி மேல கேள்வி கேட்கச் சொன்னியாமே??.. அக்காவுடைய வசதி என்ன?? அந்தஸ்து என்ன?? சரிசமமாக உட்கார நினைக்கிறாயே நீ…நியாயமா??

என் வீட்டுகாரர் கூடத்தான் பெரிய மச்சான் கூட பிறந்தவர்….. ஆனால் அவர்கள் அளவுக்கு நாங்க முன்னேறவில்லை…. தம்பி தானே என்று.. பெரிய மச்சான், எங்களுக்கு எத்தனை உதவி பண்ணிருக்கார் தெரியுமா…?? அந்த நன்றி எப்பவும் எங்களிடம் இருக்கு…

அதுபோல நீங்களும் உதவின்னு கேட்டு இருந்தா….. அக்காவும் மச்சானும் பிச்சைக்காசை அள்ளிவீசி இருப்பார்கள்.. அதை விட்டுட்டு முழு சொத்துக்கு ஆசைப்பட்டு வந்து நிக்கிறியே டி….

ஆதி தம்பி ஆசைப்பட்டதால் எதுவும் பண்ண முடியாம அக்கா திணறுகிறார்கள்… இதுக்கெல்லாம் சேர்த்துவைத்து அனுபவிக்கப் போகிறாய், நீ …

சராமாரியாக படபடவென பொறிந்து கொண்டிருந்த…. ஆதியின் சித்தியும் மதுவின் சின்ன அத்தையும் ஆன கனகா.. திடீரென அப்படியே உறைந்து போய் பார்க்க…

என்னடா ஒரு சத்தத்தையும் காணோமே, என்று மது நிமிர்ந்து சின்ன அத்தையை காண… அவர் ரியாக்ஷனை பார்த்து திரும்பி பார்த்தால்…

இவள் கண்ணும் சாசர் போல விரிந்தது…..

அம்மா நீ எப்போ வந்தே??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *