1. நிகழ்வதை உரைத்திட வா….
எங்கும் இருள் சூழ்ந்து காட்சி அளிக்க…
மேக கூட்டத்துக்குள் இருந்த வெண்ணிற வெண்ணிலா கொஞ்சம் கொஞ்சமாக எட்டி பார்க்க இருள் மீது கொண்ட பயத்தை விட்டு வெளியில் வர தயாராகி வெளியில் தன்னை முழுமையாக கொண்டு வந்து தன் ஒளியை இருள் படிந்த தார் சாலையில் பரவவிட….
மேகக்கூட்டங்கள் தங்களுக்குள் ஓடிப் பிடித்து ஆடுவது போல் நிலவை சூழ்ந்து மாறிமாறி ஓடிக்கொண்டு இருக்க….
அந்நேரம் அந்த பழைய பேருந்து நிறுத்தத்தில் பல உயிர்களையும் உறவுகளையும் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு தள்ளாடியபடி தன்னகம் புகுந்தது அந்த பேருந்து.
அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறங்க அவர்களோடு அவனும் இறங்கினான்.
அதில் சிலர் அருகில் உள்ள பரோட்டா கடைக்கும் டீ கடைக்கும் தஞ்சம் புக…….
அந்த கடைகளில் வானொலியில் அந்த தொகுப்பாளினி ஏதோ ஒரு கதையை கூறிக் கொண்டு இருக்க அவன் அங்கு இருந்து தன் இல்லம் நோக்கி அந்த சாலையில் பயணமாக.
அந்த வானொலியில் பாடல் ஒலிர….
அதை ரசித்துக் கேட்டு கொண்டே நகர்ந்தான்.
பாடல் ஒலி குறைய குறைய அந்த பாட்டை முணுமுணுத்துக் கொண்டு அந்த நீண்ட தார் சாலையில் தன் கண்ணைப் பாதித்தான் ஒரு வண்டியை கூடக் காணவில்லை.
ஆட்டோக்கு காத்திருந்து காத்திருந்து கால்மணி நேரம் விணானதுதான் மிச்சம் நடந்து சென்று இருந்தால் இந்நேரம் பாதி தூரமாவது சென்று இருக்கலாம் என தோன்ற நடக்க ஆரம்பித்தான் வெறிச்சோடிய அந்த தார் சாலையில் இருமருங்கிலும் உயர்ந்தோங்கி வளர்ந்திருந்தது அந்த சவுக்கு மரங்கள் அதற்கு இணையாக உயர்ந்தோங்கி நின்று சீரான ஒளியை தன்னுள் இருந்து பரப்பிக் கொண்டிருந்தது அந்த மின்விளக்கு தனது ஒளியை அப்ப இப்ப என நிறுத்திக் கொள்ளும் நிலையில் அது இல்லை தான்..
அவன் நடக்க நடக்க அடிகள் நீள்வது போல் ஒரு உள் உணர்வு அவனுள் எழத்தான் செய்தது.
தன்னை யாரோ பின் தொடர்வது போல் தோன்ற பின் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு நடந்தான்.
அங்கு தார் சாலையில் போடப்பட்டு இருந்த வேகத்தடையில் கால் தடுக்கிக் கீழே விழுந்தான்…
மெல்ல மேலே எழுந்தவன் கண்ட காட்சியில் அதிர்ந்தான்.
ஆம்….. தார் சாலைகள் கொஞ்சம் கொஞ்சமாக பாலைவனமாக மாறியது பின் திரும்பி பார்க்க…
அவன் வந்த வழியில் உள்ள மின் விளக்குகள் வரிசையாக அணைய பயம் தொற்றிக்கொண்டது.
கடைசி விளக்கு அணைய வானில் அதிபயங்கர ஓர் இடிமுழக்கம் இருள் படர்ந்திருந்த அந்த தார் சாலை கொஞ்சம் கொஞ்சமாக பாலைவனமாக மாறுவதை கண்டு வேகமாக ஓடினான்.
பின் ஒரு கட்டத்திற்கு மேல் ஓட முடியாமல் கண் மூடி மூச்சு இறைக்க…
அவன் தோள்மீது ஒரு கையை கண்டவன் அதிர்ந்து வேகமாக கண்விழித்தான் எதிரில் இருப்பவரை ஒரு வித பயத்தோடு கண்டான்.
தொடரும்…
*************************************
