வேனிற் கால வெண்ணிலா by ATMசந்தானலட்சுமி

வெண்ணிலா (6)

கிருஷ்ணா…….ரொம்ப தாங்ஸ்டா…..நீ மட்டும் சரியான நேரத்துக்கு அப்போ அங்க வரலைன்னா நானும் அம்மாவும் இப்போ எங்கப் போயிருப்போம்னே தெரியலை……வீட்ட விட்டு எதோ தைரியமா வெளியில வந்துட்டாலும் அடுத்தது என்ன அப்படிங்கற சின்ன பயம் மனசுகுள்ள இருக்க தான் செஞ்சது. நான் மட்டும்னா கூட பரவாயில்லை சமாளிச்சிருந்துருப்பேன் ஆனா அம்மாவையும் கூட்டிட்டு வந்துட்டதால அவங்களை பத்திரமா பாத்துக்கனுங்கற நினைப்பு தான் ரொம்ப அதிகமா இருந்துச்சுடா…….

கரெக்டா அந்த நேரத்துக்கு அங்க வந்த நீ எங்களை உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து உங்க வீட்லயும் பேசி உங்க அவுட் ஹவுஸ்லயே எங்களை தங்கவும் வச்சிட்டே……ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்டா….இதுக்கு மேல வேற என்ன சொல்றதுன்னு தெரியலை….

முடிச்சுட்டியா…..இன்னொரு தடவை தாங்க்ஸ் அது இதுன்னு சொன்ன மூஞ்ச பேத்துடுவேன்….ராஸ்கல்….நீயும் நானும் அப்படியா பழகியிருக்கோம்……ஒரு வேலை நான் உன் இடத்துல இருந்திருந்தா நீ எனக்காக செஞ்சிருக்க மாட்டியா….அதுபோல தான் இதுவும்….ஸோ எனக்கு தாங்க்ஸ் சொல்றதை விட்டுட்டு அடுத்தது என்ன செய்யலாம்னு இருக்க……அம்மா இப்போ எப்படி இருக்காங்க….நார்மலாகிட்டாங்களா அதை சொல்லு…..

படிப்ப பாதியில் விட முடியாதேடா அதுனால பார்ட் டைம் ஜாப் பார்க்கலாம்னு இருக்கேன்….அது தான் இப்போ இருக்குற சூழ்நிலைக்கு சரியாவும் இருக்கும்…..

அப்புறம் அம்மா…. இப்போ கொஞ்சம் பரவாயில்லை…..பாவம் ஆரம்பத்துல இருந்தே ரொம்ப கஷ்டப் பட்டாங்க……எனக்காக எனக்காகன்னே ரொம்ப பொறுமையா இருந்துட்டாங்க….அவுங்களை பார்த்து அப்படி பேச அந்த மனுசனுக்கு எப்படி தான் வாய் வந்துச்சுனே தெரியலை….ச்சே…..எனக்கு வர ஆத்துரத்துக்கு அப்படியே கொன்னு பொதைச்சிருப்பேன் ஆனா தப்பிச்சுட்டான்….அந்த ஆள சும்மா விடக்கூடாதுடா…அவர் அம்மாவ பேசுன ஒவ்வொறு வார்த்தைக்கும் பதில் சொல்லியே ஆகனும்…..நான் அவர் மகன் இல்லைன்னு சொன்னான்ல நான் அவர் மகன் தான் அப்படிங்கறதை அந்த ஆளுக்கு ப்ரூவ் பண்ணியே ஆகனும்….ஆனா அதுக்கு என்ன பண்றது எப்படி பண்றதுன்னு தான் யோசிச்சுட்டு இருக்கேன்.

அப்பொழுது அவர்கள் இருக்கும் இடம் வந்த ஆதி வாப்பா கிருஷ்ணா எப்போ வந்த என்றார்.

இப்போ தான்மா வந்தேன்

நீங்க பேசுனதை எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன்….என்று பொதுவாக சொன்னவர் பின் வசீயை நோக்கி வசீ நல்ல வக்கீலா பாரு….டைவர்ஸ்கு அப்ளை பண்ணலாம்…..என்றார்.

அம்மாஆஆஆ….

ஆதிம்மாஆஆஆ…..

இப்போ எதுக்கு நீங்க இரண்டு பேரும் இவ்வளவு அதிர்ச்சி ஆகறிங்க….நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவ எடுத்தேன்….

போதும் வசீ அவரோடான வாழ்க்கை. இன்னைக்கு புரிஞ்சுப்பார் நாளைக்கு புரிஞ்சுப்பார்னு காத்திருந்து காத்திருந்து மனசு ரொம்ப விட்டுப்போச்சு…..இவ்வளவு நடந்த பின்ன அதுவும் உன் பிறப்பை அசிங்கப் படுத்துன மாதிரி பேசுன அந்த மனுசன் எனக்கு வேணவே வேணாம்…..இவ்வளவு நாள் அவர் நடந்துகிட்ட முறைக்கும் பேசுன பேச்சுக்கும் அவர் நல்லா அனுபவிச்சே ஆகனும்…..

சமூகத்துல பெரிய மனுசன்னு நெஞ்சை நிமித்திகிட்டு திரியறாரில்லை அந்த பிம்பத்தை ஒடச்சு அவர் யோக்கியதைய ஊருக்கே தெரியும் படியா செய்யனும்…..

எல்லாத்துக்கும் மேல என்னை நடத்தை கெட்டவள்னு சொன்னான்ல அதை பொய்னு நிருபிச்சு அவரோட பிள்ளைதான் நீங்கறதை எல்லார்க்கும் உணர்த்தனும்……

வசீ- கண்டிப்பாமா நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுடலாம்…என்றான் உணர்ச்சி கொந்தளிப்புடன்.

அதன் பிறகு காரியங்கள் விரைவாக நடந்தேரின. கிருஷ் அப்பாவிற்கு தெரிந்த வக்கீல் மூலம் மனோரனுக்கு டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பப் பட்டது.

மனோகரனை சுற்றி இருப்போரில் பலரே அவருக்கு எதிராக அவரின் மன்மத லீலைகளை நீதிமன்றத்தில் புட்டு புட்டு வைத்தனர்….. அன்னகாமுவும் அவர் மகள் விஷயத்தை தவிர்த்து அவர் வீட்டில் நடந்து கொள்ளும் முறைகளை வந்து நீதிமன்றத்தின் முன் ஒப்பித்தார்.போதாததற்கு மருத்துவ அறிக்கையும் வசீயை அவரது பிள்ளை தான் என்று ஊர்ஜிதப்படுத்தியது….

பல்வேறு கட்ட விசாரனைகளுக்கு பிறகு மனோகரன் மேல் உள்ள குற்றங்கள் நிருபிக்கப்பட்டதால் ஆனந்தி கேட்ட விவாகரத்தை வழங்க உத்தரவிட்டது நீதிமன்றம்….

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

இதற்கு இடையில் விசாரனைக்காக ஒரு நாள் நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஆனந்தியை எதர்சையாக அவர் தந்தையின் நண்பனும் அவர்களின் குடும்ப வக்கீலுமான ராஜன் பார்க்க நேர்ந்தது….

ஆனந்தியை பற்றியும் அவரின் தற்போதைய நிலைமை பற்றியும் கேட்டறிந்த ராஜன் மிகவும் வருத்தமுற்றார்….

ஆனந்தி உன் வாழ்க்கை இப்படி எல்லாம் ஆகும்னு தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா உங்க அப்பா உன்னை திரும்பி அவன்கிட்ட அனுப்பி இருக்க மாட்டான்மா….அவன் நல்லதுன்னு நினைச்சு செஞ்சது இப்படி வினையா வந்து முடிஞ்சுடுச்சே….

அவன் சாவுறதுக்குள்ள உன்னையும் உன் பிள்ளையையும் ஒரு தடவையாவது பார்த்துடனும்னு ரொம்ப ஆசை பட்டான். அவன் மேல உள்ள கோவத்துல நீ அவனை எட்டி கூட பார்க்கலை. மகள் மருமகன் பேரபிள்ளைன்னு இருந்தும் யாருமில்லாம போய் சேர்ந்தாங்க உன்னை பெத்தவங்க….

அவர் கூறியதற்கு எதுவுமே பதில் பேசாமல் கண்ணீர் வழிய நின்றிருந்தார். அவர் மனம் என்றோ மறைந்த தாய் தந்தையரிடம் மன்னிப்பை வேண்டி நின்றது….வெறும் வீம்புனாலையும் என் பிடிவாதத்தாலையும் உங்க இறுதி காரியத்துக்கு கூட வர முடியலை என்னை மன்னிச்சிடுங்க….

ஆதிம்மா அழாதே…..உன்னை கஷ்டப் படுத்துறதுக்காக நான் இதையெல்லாம் பேசலை….சரி நடந்தது நடந்து போச்சு விடு.

உங்க அப்பா போறப்போ கூட உனக்கு நல்லதை பண்ணிட்டு தான் போனான். அவன் சாவப் போறதுக்கு முன்னாடி எல்லா சொத்தையும் உன் பிள்ளை பேர்ல எழுதி வச்சிட்டு தான் போனான்.

இந்த விஷயம் மேலும் ஆதியை குறுகச் செய்தது.

நான் அது விஷயமா உன்னை நேரா பார்க்க வந்தப்போக்கூட உன்னை பார்க்க உன் புருஷன் அனுமதிக்கலை…..

ஓஓஓஓஓஓஓ என்றார் ஆதி சுரத்தையே இல்லாமல்……

சரி விடு இப்போ உன் வீடு எங்க இருக்கு சொல்லுமா ஒரு நாளைக்கு நானே எல்லா டாக்குமென்ஸ்சையும் எடுத்துட்டு வந்து முறையா ஒப்படைச்சடுறேன்.

இல்லை மாமா அப்பா அம்மாவே போய்டாங்க அவங்களோட சொத்தை வச்சு என்ன பண்ண. அதுனால எங்களுக்கு இந்த சொத்து வேணாம். ஏதாவது ஆஸ்ரமத்துக்கு கொடுத்துடுங்க.

மையமாக சிரித்த ராஜன் உங்க அப்பா உன்னை எவ்வளவு நல்லா புரிஞ்சு வச்சிருக்கான்னு இதுலையே நல்லா புரியுது. நான் இந்த வாரத்துல உங்க வீட்டுக்கு வரேன் அங்க வச்சு மத்த விஷயங்களை பேசிக்கலாம். என்னோட கேஸ் தான் அடுத்தது அதுனால எனக்கிப்போ நேரம் இல்லை. நான் வரேன் மா….என்றவர் மறக்காமல் அவரது அஸிஸ்டன்டிடம் ஆனந்நியின் தற்போதைய அட்ரஸை வாங்கிக் கொள்ளச் சொன்னார்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

கோர்ட் ஆனந்திக்கும் மனோகரனுக்கும் விவாகரத்து அளித்து இன்றோடு ஒரு வாரம் முடிந்திருந்தது. ஆதியால் தனக்கு இவ்வளவு சுலபமாக விவாகரத்து கிடைத்ததை இன்று வரை நம்பக் கூட முடியவில்லை.

மனோகரனின் செல்வாக்கை எதிர்த்து ஜெயிப்பது கடினம் என்றே எண்ணியிருந்தார்.

எதிர்பாராமல் அவர்கள் நண்பர்களே இவருக்கு உதவ முன்வந்த போது தான் அவரது அட்டூழியங்கள் எந்த அளவுக்கு சென்றிருக்கின்றது என்றே உணர முடிந்தது.

வசீயின் பங்கு தான் இதில் அதிகம். விவாகரத்துக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து இதோ இன்று விவாகரத்து பத்தரத்தை பெற கோர்ட்டிற்கு சென்று வந்தது வரை ஒவ்வொரு விஷயத்தையும் அவனே தனி ஒருவனாய் செய்து முடித்தான். அவனின் சாதுர்யமான பேச்சும் நயிச்சியமும் தான் இதற்கு முழு முதற் காரணம். மனோகரின் நண்பர்கள் ஒவ்வொருவரையும் நேரில் சென்று பார்த்து அவர்களிடம் பேசி அவர்களை சாட்சியாகக்கொண்டு நிறத்தும் வரை படாத பாடுபட்டு விட்டான்….

அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வயதுக்கு மீறிய பக்குவத்துடனும் நேர்த்தியுடனும் இருந்தது

இப்படி ஒரு பிள்ளையை பெற உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்கனும். ஆண்டவன் ஒரு வழியில சோதிச்சாலும் இன்னொரு வழியில நிறைவா கொடுத்துட்டான்…..ஹ்ம்ம்ம்…….

இவ்வாறு வசீயை பற்றி எண்ணிக் கொண்டிருந்த ஆதியை வீட்டின் அழைப்பு மணி நடப்பிற்கு கொண்டு வந்தது.

கதவை திறந்து யார் என்று பார்த்தவர் வந்தவரை சுத்தமாக எதிர் பார்க்கவில்லை…..

வாங்க… அங்கில் வாங்க…..உள்ள வாங்க….

வரேன்மா…..என்ன இப்படி முழிக்கற….நீ முழிக்கறதை பார்த்தா சுத்தமா என்னை எதிர்பார்க்கலை போல……என்றார் ராஜன்

அவர் சொல்வது சரிதான் ஆதி அவரை எதிர்பார்க்காதது மட்டும் இல்லை…..அவரை சந்தித்ததையே மறந்திருந்தார்…..அதுவும் வசீயிடம் கூட அவரை சந்தித்ததை பற்றி சொல்லவில்லை……

ஒருவாரு தன்னை சமாளித்து… நல்லா இருக்கிங்களா அங்கில்…..என்ன சாப்பட்றீங்க

நல்லா இருக்கேன் மா….நீ எப்படி இருக்க……வெறும் தண்ணீர் மட்டும் போதும்…..உன் மகன் வீட்ல இல்லையா…..

அவர் கேட்ட தண்ணீரை கொண்டு வந்து அவரிடம் கொடுத்த ஆதி வசீ கோர்ட் வரை போயிருக்கான் அங்கில்….விவாகரத்து பத்திரம் வாங்கிட்டு வர……வந்துடுவான் போய் ரொம்ப நேரமாச்சு ……

ம்ம்ம்…..சரி நான் அன்றைக்கு பேசுனதை பற்றி யோசிச்சியா வசீகிட்ட கலந்து பேசுனியா என்ன முடிவு எடுத்திருக்கிங்க…..

மன்னிச்சுடுங்க அங்கில் உண்மையை சொல்லனும்னா நான் அன்றைக்கு உங்களை பார்த்ததையே மறந்துட்டேன் அதுனால அதை பற்றி ஒன்னுமே யோசிக்கலை……

ஓஓஓஓ……

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது சரியாக வசீ வீட்டினுள் நுழைந்தான்……

ஆதி – வசீ வாப்பா….ஏன் இவ்வளவு நேரம் ஆகிடுச்சு….ரொம்ப கூட்டமா இன்றைக்கு கோர்ட்ல…..

ராஜன் – வாப்பா…. வணக்கம்

யாரென்று வசீ கேள்வியாக ஆதியை நோக்கினாலும் வந்தவருக்கு முகமன் கூற மறக்கவில்லை….

வசீ இவர் ராஜன் அங்கிள் உங்க தாத்தாஅதாவது என் அப்பாவோட ப்ரெண்டு அவரோட குடும்ப வக்கீலும் கூட……இடையில நான் கோர்டுக்கு வந்தப்போ பார்த்துகிட்டோம்……

வாங்க வணக்கம் தாத்தா……அப்படி கூப்படலாம்ல……

தாராளமா வசீ நானும் உங்க தாத்தாவும் ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்…..அவனுக்கு தான் அந்த குடுப்பனை இல்ல அட்லீஸ்ட் எனக்காவது அந்த பாக்கியம் கிடைச்சதே……

ஆதியும் வசீயும் அவரின் பேச்சைக் கேட்டு மௌனமாய் நின்றனர். அவர்களுக்கு இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை…..

இதில் யாரைக் குற்றம் சொல்வது…..பிடிக்காத பந்தத்தில் பிடிவாதமாய் வாழ நிற்பந்தித்த ஆதியின் பெற்றோரையா…..

இல்லை அதற்குக் கோபித்துக் கொண்டு தாய் தந்தையர் விபத்தில் சிக்கி இறந்த போதும் கூட வீம்பாய் அவர்களை சென்று பார்க்காதிருந்த ஆதியையா….

எந்த உறவும் உடன் இருக்கும் பொழுது அதன் அருமை நமக்கு தெரிவதே இல்லை…..அந்த உறவு நம்மை விட வேறு உறவை விரும்பினாலோ இல்லை நம்மை விட்டு முழுமையாக விலகினாலோ தான் நமக்கு அதன் அருமை புரிகின்றது…..

காலம் கடந்து உணர்ந்து என்ன பயன்……

இப்பொழுது ஆதியின் நிலையும் அதுவே…..

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

ராஜன் – ச்சே…..எவ்வளவு ஆசையா தாத்தானு கூப்ட நான் பார் என்ன என்னமோ பேசி மனச கஷ்டப் படுத்தறேன்….சரி அதை விடுங்க நான் நேரா விஷயத்துக்கு வரேன்….

வசீ உங்க தாத்தா அவரோட எல்லா சொத்துக்களையும் உன் பேரில் எழுதிருக்கார்……

மறுத்து பேச வந்த வசீயை அடக்கி…..ஒரு நிமிஷம் நான் சொல்ல வந்ததை முழுசா சொல்லிடறேன்…..அப்புறம் உங்க விருப்பத்தை சொல்லுங்க…….

அப்படி உனக்கு அவரோட சொத்துக்கள் வேணாம்னா அது மாகேரனுக்கு அதாவது உன்னோட அப்பாக்கு போகும்….இது தான் அவரோட உயில்…..

பட் நீ இந்த சொத்தை ஏத்துக்கறதா இருந்தா உனக்கு இதை என்ன வேணாலும் செய்ய சகலவிதமான உரிமையிருக்கு…..ஆனா இதை நீ வேணாம்னு சொல்லி உங்க அப்பா கைக்கு போய்டுச்சுனா அவரோ இல்லை அவருக்கு பின்ன வரும் நீயோ இதுல இருந்து வரும் வருமானத்தை மட்டும் தான் அனுபவிக்க முடியும். அந்த சொத்துக்களை உங்களால் வேறு எதுவும் பண்ண முடியாது.

வசீ யோசிக்கவே இல்லை எனக்கு இந்த சொத்தெல்லாம் வேணாம். என்னால சுயமா சம்பாரிச்சு எங்க அம்மாவ காப்பாத்த முடியும்.

எங்க அம்மா அப்பாவ விவாகரத்து செஞ்சதற்கு கோர்ட் ஜீவனாம்ஸம் எதுவும் வேண்டுமா என்று கேட்டப்போ கூட நான் வேண்டாம்னு அம்மாவ விட்டு சொல்ல சொன்னேன்.

இவ்வளவு நாள் தான் நாங்க அடிமையாட்டம் இருந்துட்டோம் இனிமேலாவது அடுத்தவங்களை எதிர்பார்க்காம நிம்மதியா சந்தோஸமா இருக்க விரும்பறோம். அதுனால எங்களுக்கு யாரோட சொத்தும் வேணாம் தயவும் வேணாம்….

வசீ என்ன இப்படி பேசுற பெரியவங்கனு கொஞ்சம் கூட மரியாதையில்லாம…..உன்கிட்ட இருந்து நான் இதை எதிர் பார்க்கல….உனக்கு இதுல விருப்பம் இல்லைனா எடுத்து சொல்லி புரிய வைக்கனும் அதை விட்டு இப்படி எடுத்தெரிஞ்சு பேசக் கூடாது….

ஸாரி மா….ஸாரி தாத்தா…. ஆனா எனக்கு இதுல விருப்பம் இல்லை…..நீங்க அந்த சொத்தை என்ன வேணா பண்ணிக்கோங்க……

ராஜன் – பரவாயில்லை விடுப்பா….ஆனா இது உங்க தாத்தாவோட சொத்து நியாயபடி பார்த்தா உங்க அம்மாக்கும் உனக்கும் தான் சொந்தம்… நீ இதை இப்போ வேணாம்னு சொன்னா உங்க அப்பாக்கு தான் போகும் பரவாயில்லையா பின்னாடி நீயே நினைச்சாலும் அதை ஒன்னும் பண்ண முடியாது…

பரவாயில்லை தாத்தா எனக்கு இது வேணாம்…..என்னால சுயமா சம்பாதிக்க முடியும்……

ஆதிம்மா என்னமா அமைதியா இருக்க….. இதை பத்தி நீ ஒன்னுமே சொல்லலையே…..உங்கப்பா இப்படி உயில் எழுதிட்டானேனு கோவமா…..

முன்னாடி இருந்த ஆதின்னா கண்டிப்பா கோவம் தான் பட்டிருப்பா…. ஆனா வயசும் அனுபவமும் தந்த நிதானம் அவர் ஏன் இப்படி உயில் எழுதினாருன்னு புரிஞ்சுக்க வைக்குது.….

இந்த மாதிரி வசீ ஏத்துக்களைனா அவருக்கு தான் சொத்து போகும்கற பட்சத்துல நான் வீம்புகாகவாது சொத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு நினைச்சிருப்பார். அதானே அங்கிள்….

மெச்சுதலாய் ஆதியை பார்த்த ராஜன்…..நீ சொன்னது சரி தான்மா…..இப்போ சொல்லு என்ன பண்ணலாம். வசீ சொன்ன மாதிரி நீயும் இதை வேணாம்னு சொல்ல போறியா…..

இல்லை அங்கிள்…..நீங்க உயில் படி சொத்தை வசீ பேர்லையே மாத்திடுங்க…..

இதனை கேட்ட வசீ மிகுந்த வேதனை அடைந்தான்…..ச்சே நம்ம மேல நம்பிக்கை இல்லையோ…….

வெண்ணிலா வருவாள் இன்னும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *