வெண்பனி மேகங்கள்
வெண்பனி மேகங்கள்….!!!!
அத்தியாயம் 4
மாங்கல்யத்தை தொட்டு யோனையில் நின்றிருந்த ஆதிராவின் மோன நிலையை கலைக்கும் எதிரொலியாக ” ஏம்மா ஆதிரா இன்னும் நீ வெளிய வராமல் ரூம்ல என்ன பண்ணீட்டிருக்காய்… குல சாமி கோவிலுக்கு போகணும் சீக்கிரம் வாம்மா ” என அஐயின் தாயாரின் அழைப்பிலேயே சுய உணர்வு பெற்றவளாய் “இதோ வந்திட்டேன் அத்தை” என குரல் கொடுத்தவளாய் வேகமாக ரெடியாகி அறையை விட்டு வெளியே வந்தாள் ஆதிரா.
வெளியே வந்த ஆதிராவின் முகத்தினை மிக கூர்மையாக ஆராய்ந்த அந்த மாமியாரின் முகத்தில் சிறு கவலையின் கோடுகள் விழத்தான் செய்தன. இதனை கொஞ்சம் எதிர்பார்த்தவளாய் இருந்த ஆதிராவும் அவரின் மனதை உடைக்க வி.ரும்பாதவளாய் “அத்தை திடீரென கல்யாணம் நிச்சயமாகியதில நாம ரெண்டு பேருமே மனசு விட்டு பேசலை. ஸோ நாம மனசளவில கொஞ்சம் தயாராகினதுக்கப்புறம்…..” என மிகுதியை முடிக்கக முடியாதவளாய் திணறிய தன் மருமகளை வாஞ்சையுடன் லேசாக அணைத்து “அது ஒண்ணுமில்லடா பெத்த மனசு கொஞ்சம் எதிர்பார்த்திட்டு ஆனால் நீ சொல்றதும் சரிதான்மா நீங்க கொஞ்சம் பேசி பழகிடுங்க ஆனால் நிறைய நாள் காக்க வைச்சுடாதடா என்ன? நீ கில்டியா ஃபீல் பண்ணிக்காதை. சரி சரி வாம்மா சாப்பிட போகலாம்” என மருமகளை அழைத்துக் கொண்டு டைனிங் கோலை நோக்கிச் சென்றார்.
தனது மருமகளும் அவளின் மருமகளும் வருவதை வாஞ்சையுடன் பார்த்த அஐஐயின் பாட்டியோ ” இனி என் மாருமகளை பிடிக்கவே முடியாதுடா அவ தன் மருமகளோட கைகோர்திட்டா இனி என் பாடுதான் சோகமாய் முடியப் போகுது” எ போலியாக சோகத்தை காட்டிய பாட்டியின் இதழோரத்தில் நிம்மதியான புன்னகை உதிர்க்கவே செய்தது”
“அது சரி அத்தை நான் என் அம்மாவை விட்டுடுவேனா? அத்தை நீங்க எப்பவும் என் அம்மாதான் நான் உங்க பொண்ணு தான் அதை யாராலும் மாற்ற முடியாது என ” உரிமையாய் கூறி அவரின் அருகில் வந்து நின்றார் லக்ஸ்மி.
இப்போது நிஜமாவே அஜயின் பாட்டியின் கண்களில் நீர் கசியத்தான் செய்தது. சட்டென சுதாகரித்துக் கொண்டவர் “என்ன மருமகளே சாப்பாடு போடமல் பாலபிஷேகம் பண்ணப் போறியா? என்ன? எனக்கேட்டு” மருமகளை வாரி விட்டார் அந்த மூத்த மாமியார்.
“ச்சோ அத்தை இதோ “என சாப்பாட்டு தட்டத்தை எடுத்துப் பரிமாற போனவரின் கைகளில் இருந்த தட்டத்தைப் பற்றி “அத்தை நீங்க உட்காருங்க நான் பரிமாறுறேன்” என கூறிய ஆதிராவை எல்லோருமே பார்த்தனர். அஐயோ புருவம் உயர்த்தி சற்று கேள்வியாகவே பார்த்தான்.
எல்லோர் பார்வையையும் எளிதாக எடுத்துக்கொண்ட ஆதிராவுக்கு கணவனின் பார்வையில் இருந்த புதிரை எதிர் கொண்டாலும் அதனை சாட்டை செய்யாது அனைவருக்கும் பரிமாறினாள்.
“நியும் உட்கார்ந்து சாப்பிடம்மா” என மருமகளை உபசரித்தாலும்.
” இல்லத்தை நா அப்புறமாய் சாப்பிட்டுகிறேன்” எனக் கூறிவிட்டு பரிமாறினாள்.
அவளின் செயல்களை பார்த்த வண்ணமே உண்டு முடித்த அஐய் கை கழுவுவதற்காய் எழுந்து வாஷ் பேசன் அருகே செல்ல. ” ஆதிரா அஐயை போய் பாரும்மா” என லக்ஸ்மியின் அன்புக்கட்டளைக்கு இணங்கி பின்னோடு சென்ற ஆதிரா. கை கழுவி விட்டு துடைப்பதற்காய் துவாலை அங்குமிங்கும் பார்த்தவனின் கண்களில் அது காணாமல் போகவே அதை உணர்ந்தவளாய் தன் சேலையின் முந்தானையை தன்னிச்சையாய் எடுத்துக் கொடுத்த தன்னையும் அதில் தன்னிச்சையாய் எழுந்த தன் கைகளையும் துடைத்துக் கொண்ட இருவரையும் அவர்காளையறியாமலேயே விதி மெதுமெதுவாய் பந்தத்துள் இழுந்துச் சென்றதை இருவரும் அறியார்.
தடுமாறிய சில கணங்களில் மீண்டவனாய் “தேங்ஸ்” என சிறு புன்னகையை சிந்திவிட்டே சென்றான் அஐய். இவற்றைப் பார்த்த பெரியவர்களின் மனமும் நிறைந்து போனததோடு வயிறாற உண்டுவிட்டு எழுந்து செல்லவே. ஆதிரா அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள்.
அறையை அடைந்த அஜயின் கைகளோ அவளின் முந்தானை கொண்டு துடைத்த குறுகுறுப்பை உணர்த்திக் கொண்டு அவன் யோசனைகள் எதிரும் புதிருமாய் ஓடிக்கொண்டுதான் இருந்தது…….
அஜயின் இந்த தடுமாற்றம் அவன் வாழ்வை அவளுடன் இணைக்குமா……….பார்ப்பபோம்…….
