வாக்கிங்… வாட்சிங் 2

வாக்கிங்…. வாட்சிங் 2
……………………………………………

87…. திருட்டுக் கல்யாணம்னு அப்பச் சொல்லப் பட்ட காதல் கல்யாணம்…உறவுகள் எட்ட இருந்து ஏதோ விமர்சனம் பண்ணினாலும்.கிட்ட வந்து பேசத் துணியல…நம்ம ஜாதில பண்ணினானே..அது வரைக்கும் சந்தோசம்னு ஏத்துக்கிட்டாங்க… மாமனார் சைடுல கொஞ்சம் மொறைப்பு இருந்தாலும் மொள்ள ஒவ்வொண்ணா வர ஆரம்பிச்சாங்க….

15 நாள் கழிச்சு அங்கத்த பெரியவங்கோளோட வந்து மாமனார் கூப்பிட்டப்ப ”கால் நல்லான பின்னால அனுப்பறேன்“னு அம்மா ஒரேயடியா மறுத்துட்டாங்க…. ஆமாங்க… கல்யாணத்துக்கு முந்தின நாள் பைக் ஆக்ஸிடென்ட்ல கால் முட்டிச் ஜவ்வுல லேசா சேதாரம் பண்ணிக்கிட்டேன்…அதுக்கப்புறமும் அந்தக் கல்யாணம் நிக்காம நடந்ததுன்னா அது அவ தைரியம்

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *