இப்படிக்கு உன் இதயம்டா…!!!!
மறதி அரும்பெரும் வரம் நமக்காம்..மெய்யே..
பிரிந்துவிடுவோம் மறந்துவிடுவோம்…
நாம் நிதம் சந்திக்கும் கடற்கரையில்
காற்று கடல் ஆகாயம் சாட்சியாய் சொல்கிறாய்
மறக்க முடியுமா? அன்பே என்னால்…
என் நினைவுகளில் மட்டும் உன்னை வைத்தால்
இலக்கணப்படி நீ சொல்வது சாத்தியம் தான்..
ஆனால் உன்னை உயிரினில் மூச்சில்
உதிரத்தில் இதயத்தில் நரம்பினில் அல்லவா
பொதிந்து வைத்திருக்கிறேன்…தீராது
முத்திப்போனது காதல் நோய்..ஒன்று நீ மருந்து
அல்லது சாவு விருந்து… மட்டுமே அது சாத்தியம்.
அதை தரவும் சித்தமாயிருக்கிறேன்..அன்பே
உனக்காக…இப்படிக்கு உன் காதல் பெண்..
அடிமைப்பெண்ணும் கூட..வாழ வா….!!!
