ராட்சசனே? என் ரட்சகனே!!?
ராட்சசனா? ரட்சகனா? – 08❤️
அந்த பெரிய வீட்டின் முன் கார் நிற்க, வீட்டுத் தோட்டக்காரன் வந்து இரும்பு கதவை திறந்துவிட்டான். காரிலிருந்து கம்பீரமாக இறங்கியவனை கண்டு அனைவரும் ஆச்சரியத்தோடு வாயை பிளந்து பார்க்க, அதற்கடுத்து அவனோடு இறங்கிய பூமியை பார்த்தவர்கள் அதிர்ச்சியாகினர். அவனோ எதையும் கண்டுக்காமல், தன்னுடைய ஒரு கரத்தினால் பூமியின் கையை பற்றியபடியும்.. இன்னொரு கைகளால் தன் தலைமுடியை கோதியவாரே ஸ்டைலாக உள்ளே நுழைந்தான். “அடேய் நானே இங்கே வயித்துல புளியை கரைக்கிற மாதிரி நின்னுட்டு இருக்கேன் உனக்கு இந்த ஸ்டைல் தேவையாடா ராட்சா..” என்று மனதில் பொருமியவாரு தடக் தடக் என துடிக்கும் இதயத்தோடு நின்றிருக்க.. எதை பற்றியும் கவலையில்லாம்ல வீட்டின் காலிங் பெல்லை அடித்துவிட்டு பூமியின் முக பாவனைகளை பார்த்தவாரே நின்றுக் கொண்டிருந்தான் ரிகான்.
அக்கா இப்போ இந்த நேரத்துல யாரா இருக்கும் என்று கணகவள்ளி சாந்தாவிடம் கேட்க, தெரியலையே கணகு.. சரி இரு நான் போய் பாரக்கிறேன்.. என்றவாரே அடுப்பங்கரையில் இருந்து வெளியே வந்து சாந்தலட்சுமி முதலில் பூமியை பார்த்து சந்தோஷம் அடைந்தாலும்.. அவளின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பொன் தாலியை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார்.. அண்ணி யாரு வந்திருக்காக நீங்க ஏன் அப்படியே நிக்குறீக என்று கேட்டவாரே வாசலை பார்க்க.. பூமி கன்னு என்று அவளை ஆசையாய் அணைக்க போக.. பூமிக்கு பக்கத்தில் இருந்தவனும்.. அவளின் திருமாங்கல்யமும் அவரை அப்படியே சிலையாக நிற்க வைத்தது.
அவர்களின் நிலையை கண்டு ரிகான் தான் வாயை திறந்தான்.. “என்ன அத்தையாரே மாப்பிள்ளை வந்திருக்கேன்.. ஆரத்தி கூட எடுக்காம அப்படியே சிலையா நிக்குறீக” என்றவனின் குரலில் நக்கல் இருந்ததா இல்லை குறும்பு இருந்ததா என்பதை அவர்களால் பிரித்தறிய முடியவில்லை. பூமிக்கோ அவனின் இந்த புது அவதாரத்தில் ஷாக் அடித்தது போன்று நின்றிருந்தாள். அவர்களுக்கோ என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தவாரு இருக்க.. உள்ளே இருந்து வந்தார் அந்த குடும்பத்தின் ஆணி வேரான வேதநாயகமும் அவரின் மனைவி தெய்வானையும்.. வெளியே நின்றுக் கொண்டிருந்த தன் பேத்தியையும் அவனின் கணவனையும் பார்த்தவர் தன் மனைவிக்கு கண்ணை காட்ட, அவரும் புரிந்து கொண்டு..
சாந்தா எதுக்கு புள்ளைகள வெளியேவே நிக்க வைச்சிருக்கிக.. உள்ளே கூப்பிடுத்தா என்று சொல்ல அவரும் சரி அத்தை என்றுச் சொல்ல, அதற்குள் கணகு வந்து ஆரத்தியெடுத்துவிட்டு.. உள்ளே வாங்க மாப்பிள்ளை.. உள்ளே வா பூமி என்று அவளை முறைத்துக் கொண்டே கூப்பிட்டார்.. ஹா ஹா இந்த கணகு டார்லிங் என்ன நம்மள பார்த்து இப்படி முறைக்குதே.. இது சரியில்லையே எதாச்சும் ஒரு பிட்டை இப்ப போடனுமே என்று நினைத்தவாரு..
டார்லிங்… டார்லிங் என்று இருவரையும் கட்டிக் கொண்டு, நான் உங்களை பாரக்காம எவ்ளோ விசனபட்டேன் தெரியுமா என்று வராத கண்ணீரை துடைக்க.. அவளை இருவரும் விலக்கி விட்டு, நீங்க வாங்க மாப்பிள்ளை என்று ரிகானை அழைத்து ஹாலில் இருக்கும் சோபாவில் அமரவைத்தனர்.
அந்த காலத்தில் கட்டப்பட்டிருந்த வீடாக இருந்தாலும் அனைத்தும் சரியாக கட்டப்பட்டிருந்தது. பெரிய வராண்டா.. அதை தாங்கியவாரு நான்கு தூண்கள்.. கீழே சமையலறை, வீட்டு பெரியவர்களின் அறை இருக்க.. மேலே சிறியவர்களுக்கான அறையும் இரண்டு அறை விருந்தாளிகளுக்கு என்று இருந்தது. அந்த வீட்டையே கண்களால் அளந்துக் கொண்டிருந்தான் ரிகானுக்கு இன்னும் இந்த வீடு அப்படியே இருக்கிறது எதுவும் மாறவில்லை என்று நினைக்க சிறு நிம்மதி அவன் மனதில் எழுந்தது.
“தம்பி அது வந்து எப்படி தீடிர்னு இப்படி கல்யாண செய்து வந்து நிக்குறீக” என்றவாரே தன் ஆளுமையான குரலில் கேட்டார் வேதநாயகம். அவரை பார்த்திருந்தவனின் விழிகளில் அவரின் குரல் இன்னும் அதே கமபீரத்துடன் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டாலும்.. அதை வெளியேக் காட்டாமல் எதோ பேச வர அதற்குள், வீட்டின் உள்ளே நுழைந்த ஜீப்பில் இருந்து புயலென நுழைந்தார் காளிங்கம்.
“டேய் எவன்டா நீ.. எங்க பொன்னு மனசை கலைச்சி அவளை கல்யாணம் செய்துகிட்டு எவ்ளோ தில்லு இருந்தா எங்க முன்னாடியே, எங்க வீட்டுக்குள்ளே வந்து நிப்ப.. உன்னை உசரோடு விடபோறதில்ல.. ஏய் முத்து எடுறா அந்த அருவாள” என்று அவனின் சட்டையை பிடித்தவாரே கத்தினார் காளிங்கன். ரிகானோ கண்களில் ஒரு சிரிப்புடன் அவரையே பார்த்தவாரு இருந்தான். ஆனால் பூமியோ, அதிர்ந்தவாரு ரிகானையே பார்த்து கொண்டு இருந்தவள், அவரின் கத்தலில் சுய நினைவு வந்து “பெரியப்பா நானு தான் அவரை விரும்பி கல்யாண செய்துகிட்டேன்.. அவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறி அவன் முன் நிற்க.. எதற்காக அவனுக்காக தான் இப்படி சொல்கிறோம் என்று சிறிதும் அவள் மூளைக்கு தோன்றவில்லை.
“ஏய் கழுத ஒழுங்கா நகரு.. இல்லைனா அவனோடு சேர்ந்து உனக்கும் தெவசம் பண்ற மாதிரியாகிடும்” என்று அவளை பிடித்து தள்ள போக.. அதற்கு முன் அவரின் கை ரிகானின் பிடியில் இருந்தது. அவனின் கண்கள் கோவை பழம் போல் சிவந்திருக்க.. “என் பொண்டாட்டி மேலே கையை வைச்சிக அப்புறம் உங்க உசரு உங்ககிட்ட இருக்காது.. என்ன இவன் சிட்டியில் வளர்ந்தவன்.. இவனை இளனி சிவிற மாதிரி சிவிறலாம்னு நினைச்சுட்டிகளோ.. நானும் கிரமத்தான் தான் நான் குத்துனாலும் கத்தி இறங்கும்” என்று சிங்ககுரலில் கர்ஜிக்க அவனின் கத்தலில் காளிங்கன் மட்டுமல்ல அந்த மொத்த குடும்பமும் அதிர்ந்தது. அண்ணே நீ கொஞ்சம் அமைதியா இரு என்றவாரு தன் அண்ணனை அடக்கினார் நடராஜன். அவரும் தன் கையை அவன் சட்டையிலிருந்து எடுத்து அமைதியாக நின்றார்.
அங்கே ஒரு நிமிடம் அமைதி நிலவ, அதை கலைத்தார் வேதநாயகம். இங்க பாரு தம்பி.. என் பேத்தியே சொல்லிட்டா உன்னை விரும்பி தான் கல்யாணம் செஞ்செனு அப்புறம் அதை மறுக்கிறது எங்களுக்கு சரியா படல.. அவ விருப்பம் தான் எங்க விருப்பமும்.. அதனால நீங்க எவ்ளோ நாள் வேனும்னாலும் இங்கே இருக்கலாம் என்று சொல்ல குறுக்கிட்டார் காளிங்கன். “அப்பா அதுக்காக கண்டவங்க எல்லாம் இந்த வீட்டுல தங்க வைக்க முடியுமா” என்று கொதித்தெழ.. வேதநாயகம் பேசுவதற்கு முன் ரிகானே பேச ஆரம்பித்துவிட்டான்.
“நீங்க சரியா தான் சொல்றீக மாமா என்று கூறியவன்.. அவரின் காதருகே குணிந்து.. ஆமா நீங்க கண்டவகதானே இந்த வீடு இப்போ என் பொண்டாட்டி பெயருலையும் அப்புறம் அவளுக்கு புருஷனா வரப்போறவன் பெயருலையும் அதாவது என் பெயருலையும் இருக்கு.. அப்போ நீங்க வெளியே போய் தானே ஆகனும்” என்று சொல்ல.. அதனை கேட்ட காளிங்கனுக்கு இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்ற ரீதியில் அதிரச்சியோடு இருக்க.. “என்ன சின்ன மாமா நான் சொல்றுத சரிதானுக என்றவாரு சிரிக்க..” இருவருக்கும் பேச்சே எழவில்லை. அண்ணே இவனுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு.. இப்போதைக்கு இவனை ஏத்துக்கிட்ட மாறி நடிச்சு அப்புறம் இவனை பார்த்துகிடலாம் என்று தன் அண்ணனின் காதில் ராகசியம் பேசினார் நடராஜன். அவருக்கும் இந்த யோசனை சரியாக பட, உடனே தன் நடிப்பை ஆரம்பித்துவிட்டார்..
“என்ன மாப்பிளை இதுக்கெல்லாம் நீங்க கோச்சிக்கலாமா.. நாங்களே புள்ளையோட கல்யாணத்தை நேரில் பார்க்க முடியலையேனு விசனத்துல இப்படிலாம் பேசிப்புட்டேன். அதை நீங்க தப்பா எடுத்துக்கலாமா என்ன இருந்தாலும் நீங்க தானே இந்த வீட்டு முத்த மாப்பிள்ளை” என்று அப்படியே உல்லடாவாக பேச, அனைவரும் அவரின் நடிப்பை நம்பினாலும் நம்ப வேண்டியவனும் நம்பவில்லை.. அவனை பெற்றவர்களும் நம்பவில்லை. “சரி மாப்பிள்ளை எங்களுக்கு தோட்டத்தில் வேலை கிடக்கு அப்படியே போட்டுட்டு வந்திட்டோம், நாங்க கிளம்புறோம்” என்று தன் அண்ணனை கூட்டிக் கொண்டு சென்றுவிட்டார் நடராஜன்.
இதற்கு முன்பு வார்த்தைக்கு வார்த்தை வேலைக்காரன்..வேலைக்காரன் என்ன சொன்னவர்கள் இப்போது வாய் நிறைய மாப்பிள்ளை என அழைக்க, தனது முதல் திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில் செல்லும் அவர்களை கண்டு ஏளன சிரிப்பு ஒன்று உதட்டில் துளிர்த்தது ரிகானுக்கு. வேதநாயகமும், தெய்வானையும் அறைக்குள் புகுந்து கொள்ள, மற்ற இரண்டு மருமகள்களும் அடுப்பங்கரைக்குள் சென்றுவிட்டனர் அவர்களுக்கு விருந்து வைப்பதற்காக.
அப்போது தான் கைநிறைய மாங்காயை பறித்துக் கொண்டு உள்ளே நுழைந்த மிது, அங்கே தன் அக்கா இருப்பதை நம்ப முடியாமல், “அக்கா”, என்று கத்த பூமியும் திரும்பி மிதுனாவை பார்த்து “தங்கச்சி” என்று கத்திக் கொண்டே ஸ்லோ மோஷனில் ஓடிபோக.. அவளும் ஓடிவர, சரியாக மிதுனா பூமியை அணைக்காமல் மேஜை மீது இருந்த ரசகுல்லா பாக்ஸை எடுத்து கொண்டு ரிகான் பக்கத்தில் உட்கார்ந்து விட்டாள். பூமிக்கு தான் செம பல்பு..அவளை கண்டு ரிகான் சிரிக்க.. “இவன் வேற, டேய் பனைமரம் சிரிக்க சொல்லும் போதெல்லாம் உர்ருன்னு இரு.. இப்ப மட்டும் பெக்க பெக்கவென சிரி ராட்சன், ராட்சன்..” என்று அவனை திட்டிவிட்டு.. “அடியேய் இப்படி திணி திங்கிறதுக்கு எதுக்குடி பாசம் பொங்குற மாதிர கத்தின என்று அவளை முறைத்துக் கொண்டு கேட்க,”..
ஏன்க்கா இதெல்லாம் உனக்கே அநியாயமா தெரில.. நான் யாருனு உனக்கு தெரியும் நீ யாருனு எனக்கு தெரியும் அதைவிட்டுட்டு இந்த பாசமழை பாயாசமைழை நமக்கு செட்டாவது என்றபடி ரசகுல்லாவை நக்கி நக்கி சாப்பிட்டு.. மாமு இன்னொரு ஸ்வ்ட் பாக்ஸ் இருந்தா கொடுங்க என்று ரிகானிடம் கேட்டு அதையும் மொக்க பூமிக்கு தான் செம காண்டானது..
பூமி கண்ணு என்று அவளின் பெரியம்மா கூப்பிட.. சொல்லு டார்லிங் என்றபடியே சமையற்கட்டில் நுழைய, “என்ன புள்ள அந்த தம்பி எவ்ளோ நேரம் தான் இப்படி உட்கார்ந்துட்டே இருப்பாங்க.. உன்னுடைய அறையை காட்டு இதைக்கூட நான் சொல்லனுமா” என்று அவளின் தலையை தட்ட,,இவளுக்கு தான்” என்னங்கடா நடக்குது இங்க..” என்று புரியாமல் ரிகானிடம் சென்றவள்.. வாங்க உங்களுக்கு ரூம் காட்டுறேன் ரெஸ்ட் எடுங்க என்று அவனை அழைத்து சென்று அவளின் அறையில் விட்டுவிட்டு வெளியே வந்துவிட்டாள்.
பூமியின் அறையில் நுழைந்தவன், அவள் அறையை சுற்றி பார்க்க.. முன்பு எப்படியிருந்ததோ அதேப்போல் தான் இருந்தது. அவளின் சிறுவயது புகைப்படங்கள் அறையை நிரப்பியிருக்க, அதனை தன்னுடைய கரங்களினால் தடிவிக் கொடுத்தவன் உதட்டில் புன்னகை விரிந்திருந்தது. அவனின் நினைவுகளோ முதல் முதலாக பூமியை சந்தித்த நினைவுகளில் உழன்றுக் கொண்டிருந்தது.
அந்த பெரிய வீட்டின் உள்ளே நாற்காலியில் அமர்ந்தவாரு நேற்றைய கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார் பூமிகாவின் தந்தை விஜயன். அவரின் முன்னே, தன் மகனோடு கையை கட்டியவாரு நின்றிருந்தார் அந்த வீட்டின் டிரைவரான லிங்கம்.
சொல்லு லிங்கா.. என்ன விஷயம் என்றவாரு தன்னுடைய கண்களை நோட்டில் இருந்து எடுத்தவாரு அவரை பார்த்தார்.. அப்போது தான் அவரோடு நின்றிருக்கும் அந்த சிறுவன் அவர் கண்ணில் பட்டான். அவனின் விழிகளில், எந்தவொரு பயமும் இல்லாமல் தைரியத்தை தெளிவாக காட்டியது.
அய்யா இவன் என் பையன்க.. இவனை இங்க வீட்டில் வேலைக்கு ஒத்தாசையா வைச்சிக்கிட்டு கொஞ்சம் சம்பளத்தில் போட்டுக் கொடுங்க என்று சொல்ல.. அவருக்கு கோபம் தான் வந்தது..
நீ என்ன நினைச்சிட்டு இருக்க லிங்கா.. சம்பளம் அதிகம் வேனும்னா கேட்டு வாங்கிக்க அதைவிட்டுட்டு படிக்கிற பையனை இப்படி வேலைக்கு அனுப்புற என்று கத்த.. இல்லைங்க ஐயா!! என்று எதோ சொல்ல வந்தவரை கையை நீட்டி தடுத்தவர்.. அவன் இங்கேயே உன்கூடவே இருக்கட்டும்.. ஆனா வேலை செய்ய வேண்டாம்.. இங்கேயே படிக்கிட்டும், அதற்கான ஏற்பாட்டை நான் பார்த்துக்கிறேன் என்று கட்டளையாக செல்லிவிட அதற்கு மேல் ஒன்றும் அவர் சொல்லவில்லை.. ஆமா உன் பெயர் என்னப்பா என்று கேட்க.. அவன் சொல்வதற்கு முன் லிங்கமே சொன்னார்.. ராஜா ங்க ஐயா.. நல்ல பேருப்பா என்று அவன் கண்ணத்தை தட்ட, அவனும் லேசாக அவரை பார்த்து சிரித்தான். அங்கிருந்து கிளம்பும் போது தான், பாவடை சட்டை அணிந்துக் கொண்டு தன்னுடைய குட்டிஜடையை ஆட்டியவாரு தன் தந்தையின் முன் நின்று.. “அப்பா நான எப்படி இருக்கேனு சொல்லுங்க..” என்று தன் பாவாடையை பிடித்து கொண்டு சுத்தி காண்பிக்க “அழகா இருக்கா என் ராசாத்தி..” என்று முத்ததையை அன்போடு தன் ஆசை மகளுக்கு வழங்கினார்.
அப்போது தான் அவனை பார்த்தாள் இவள்.. அவளின் சுட்டி தனத்தையே தன்னை மறந்து பார்த்திருந்தவன், அவள் இவனை பார்த்து கண் சிமிட்ட சட்டென்று தன் பார்வையை வேறு பக்கம் திருப்பியவன், அங்கிருந்து கிளம்பும் போது கூட அவளை பார்க்கவில்லை. தன் தந்தையோடு அங்கிருந்த பெரிய வீட்டின் பக்கத்தில் இருந்த சிறிய வீட்டிற்குள் நுழைந்தான் ரிகான். இங்க பாரு ரிகா உன் பேரு இனி ராஜா தான் சரியா.. அப்புறம் இப்போ பார்த்தோம் இல்லை விஜயன் ஐயா இவரு மட்டும் தான் அமைதியா பேசுவார். பெரியய்யாவும்.. இன்னொரு சின்னய்யாவும் அதிகம் ஏசுவாங்க.. அதெல்லாம் எதையும் மனசுல போட்டு விசனபடக்கூடாது.. அவுக எதாவது வேலை சொன்ன மறுத்து பேசக்கூடாது.. செய்யனும் புரிஞ்சதா என்று தன் மகனுக்கு அறிவுரையை வழங்கிவிட்டு தன் வேலைக்கு சென்றுவிட்டார் லிங்கம்.
அந்த வீட்டையே சுற்றி சுற்றி பார்த்திருந்தவனின் கண்களில் விழுந்தாள் அந்த சுட்டி பெண்.. தன்னுடைய பாவடையை தூக்கியபடி, இவனை நோக்கி தான் நடந்து வந்துக் கொண்டிருந்தாள். அங்கே வந்ததும் தன்னுடைய குட்டி கண்களால் அவனையே உற்று உற்று பார்த்திருந்தாள்.. இந்த சுட்டி பெண் எதற்கு தன்னை இப்படி பாரக்கிறாள் என்று ஒன்றும் புரியவில்லை.. தன்னுடைய கீச் குரலினால் அழகாக பேச ஆரம்பித்தாள் அவள்..
“ஏய் சோட்டா பாய்.. உன் பேரு என்ன”, என்று கண்களை உருட்டி கேட்க, இவனுக்கு தான் சிரிப்பாக வந்தது. அதை அடக்கியவன்..
“ராஜா” என்று சொன்னவன்.. “உன் பேரு என்ன பாப்பா” என்று கேட்க, தன்னுடைய குட்டி கண்களால் முறைத்து கொண்டே கூறினாள்.. “நான் பாப்பா இல்லை.. என் பேரு பூமி..பூமிகா”, என்று தலையை சிலுப்பிக் கொண்டாள்.
ஆமா நீ என்ன படிக்கிற என்று கேட்க, தன்னுடைய விரல்களில் ஏழு விரலை காட்டி செவன்த் படிக்கிறேன் என்றவள், “சோட்டா பாய் நீ என்ன படிக்கிற” என்று கேட்க அவனும் அவளை மாதிரியே செய்துக் காட்டி எயிட்த் ( eighth) படிக்கிறேன் என்று சொன்னான் ரிகான்.
“சரி எதுக்கு என்ன பார்த்து முறைச்சிட்டே இருக்க” என்று ரிகான் கேட்க.. “நீ தான் என்ன பார்த்தும் பார்க்காத மாதிரி வந்திட்ட இல்லை.. அதுதான்.. ஏன் அப்படி பண்ண, இனி அப்படி பண்ண அவ்ளோ தான்” என்று கையை ஆட்டி அழகாக பேச, “சரி இனி நாம நண்பர்கள்” என்று கைநீட்ட.. “ஒன்னும் தேவையில்ல என்று அதனை தட்டிவிட” அவளின் குறும்புத்தனத்தில் தன்னை மறந்து சிரிக்க, அவனின் கன்னத்தில் குழி விழுந்தது.. அதை அழகாக ரசித்த அந்த மொட்டு.. ” இந்த குழி உனக்கு அழகா இருக்கு” என்று அதில் கையை வைத்து அழகாக சிரிக்க… இன்னும் அவளின் தொடுகை இருப்பது போன்றே இருந்தது ரிகானுக்கு.. பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தவன், நெடுநாள் கழித்து மனமகிழ்ச்சியில் புன்னகைத்தான். இவன் இங்கே இவளின் நினைப்பில் உழன்று இருக்க.. அவனின் நினைவை மறந்தவள்.. தன் பெரியம்மா, சித்தியுடன் கேலிப் பேசிக் கொண்டு இருந்தாள்..
அவள் வெளியே பார்க்க, அப்போது தான் அங்கிருந்த அர்ஜூனை கண்டாள். அவன் நிலையை கண்டு, டேய் அஜ்ஜூ பையா என்னடா இப்படி வந்திருக்க என்று சிரிப்புடன் கேட்க, “ஏய் பூசணி அமைதியா இருடி நானே செம கடுப்பில இருக்கேன் என்றவாறு திரும்ப அங்கே கையில் தண்ணீர் டம்பளரை கையில் வைத்துக் கொண்டு இவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள் மிதுனா .. இவனை கண்டு டொம்மென டம்பளரை கீழே போட… அந்த டம்பளரோ சுற்றி சுற்றி இன்னும் சத்ததை எழுப்பிக் கொண்டு இருந்தது.. அவளை கண்ட அர்ஜூன், ஏய் குட்டச்சி என்று கத்த…………………………………
* தொடரும்…❤️
***************
ஹாய் நட்பூஸ்,
இனி கதையோடே பிளாஷ்பேக் அப்போ அப்போ வரும்.. அதும் இன்டரஸ்டிங்கா கொண்டு போக முயற்சிக்கிறேன். இன்னைக்கு அர்ஜூன் மிதுனா சீன் காட்டாம தொடரும் போட்டேனு யாரும் சண்டை போடத் கூடாது ஹி..ஹி…. 😜
படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க டியரிஸ் 💓💓
