ராஜா ராணி காதல்

This entry is part 1 of 3 in the series ராஜா ராணி காதல்

ராஜா ராணி காதல்

ராஜா ராணி காதல்

ராஜா ராணி காதல்

ராஜா ராணி காதல்

ராஜா ராணி காதல்

ராஜா ராணி காதல்

ராஜா ராணி காதல்

4 – ராஜா ராணி காதல்
கூச்ச்ச நாச்சமின்றி  தங்களின் உயரம் மறந்து இருவரும் கட்டி கொண்டு உருண்டனர். இருவரின் நண்பர்களும் என்ன இப்படி செய்கிறார்கள் என சற்று அருவருப்புடன் தான் பாரத்திருந்தார்கள்.  இருவரும் சண்டையை நிறுத்துவது போல தெரியவில்லை. இவர்களின் சண்டையை எவ்வளவு நேரம் தான் பார்ததிருக்க… பிரித்து விட முயற்சித்தனர்.
முயற்சி மட்டுமே முடியவில்லை… சாஹிஷ்ணுவை ஐந்து பேர்..சஹஷராவை ஐந்து பேர் என பத்து பேர் சேர்ந்து  கடும் போராட்டத்திற்கு பிறகு இழுத்துப் பிடித்தனர்.அப்பொழுதும் இருவரும் அடங்காமல் திமிறி கொண்டு வந்தனர்.
சாஹிஷ்ணுவின் நண்பன் விக்னேஷ் சஹஷராவிடம்.. “ஏன் சாரா இப்படி சண்ட போட்டுக்கறிங்க.. உங்க ஸ்டேட்டஸ்கு இது கேவலாமா இல்லயா..”
“விக்கியண்ணா.. என்கிட்ட கேட்காதிங்க.. அவன் தான் என்ன பிடிச்சு தள்ளிவிட்டு சண்டைய ஆரம்பித்து வைத்தான். அவன கேளுங்க…”
“டேய்.. எதுக்கு என்ன காட்டெருமைனு திட்டினா.. அத கேளு முதல்ல…”
“இவன் தான் என் பிசினஸ்கு இடைஞ்சல் கொடுத்தான். என்ன அடிச்சான்.. எனக்கு இவ்வளவு பெரிய பூட்டு வாங்கி அனுப்பிச்சான்.. இவன் இத்தனை பண்ணுவான்.. நான் இவன காட்டெருமனு சொல்லகூடாதா.. இது எந்த வித்த்துல நியாயம்..” என மூச்சிரைக்க பேசினாள்.
“இவ மட்டும் என்ன… என்னைய பதிலுக்கு திருப்பி அடிச்சா.. உண்டா..  இல்லையானு கேளுடா..”
“டேய்.. டேய்… நீங்க இரண்டு பேரும் இன்னும் ஸ்கூல் பசங்க இல்ல..  இரண்டு பேரும் பிசினஸ் பீப்புள்.. அந்த மெச்சூரிட்டியோட நடந்துக்குங்கடா..” விக்னேஷ் சலுப்புடன் சொல்ல..
“அத அவகிட்ட சொல்லு..”
“அவங்கிட்ட முதல்ல சொல்லுங்க.. அவன் தான் ஆரம்பிச்சு வச்சான்..”
இவர்களின் சண்டையில் கடுப்பான விக்னேஷ்..”அடேய்…  நிறுத்துங்கடா உங்க சண்டைய.. இரண்டு பேரும் எப்படி இருக்கறிங்க.. உங்க இரண்டு பேரையும் பார்த்தா சத்தியமா கோடீஸ்வர வீட்டு பிள்ளைங்கனு சொல்வாங்களா.. பாருங்கடா எப்படி இருக்கிங்கனு… என இருவரையும் தனித்தனியாக தன் செல்லில் போட்டோ எடுத்து அவரவர் போட்டோவை தனி்தனியாக காட்டினான்.
இரண்டு பேரும் தலை முடி கலைந்து பரட்டையாக.. தலையில் இருந்து  கால் வரை சேறும் சகதியும் அப்பி.. துணி எல்லாம் கசங்கி.. அங்காங்கே கிழிந்து.. இருவரின் நக கீறலும் உடம்பில் இருக்க.. பார்க்கவே சேற்றில் புரண்ட எருமை மாடுகள் போல  தான் இருந்தார்கள்.
இரண்டு பேரும் தங்களை பற்றி அவமானமாக நினைத்து ஒரு சில நிமிடங்கள் தான். சஹஷரா அவனைப் பார்தது கை தட்டி சிரித்தாள். 
“விக்கியண்ணா.. அவன பார்த்தா காமெடியா இல்ல… நான் காட்டெருமைனு சொன்னதுக்கு கோபப்பட்டான்ல.. இப்ப  பாருங்க  எரும மாதிரியே இருக்கான்..” 
“ஏய் யாரை பார்த்து எரும மாடு மாதிரி இருக்கான் சொல்ற.. நீ தாண்டி சாக்கடையில் விழுந்து எந்திரிச்ச தெருநாய் மாதிரி இருக்க..”
“யாரப் பாத்துடா  தெருநாய்னு  சொல்ற..” 
“உன்ன பாத்து தான்டி  சொல்றேன்.. நீ என்ன எருமைனு சொல்லும் போது நான் உன்ன நாய்னு சொல்லக் கூடாதா..” என இருவருக்கும் மீண்டும் ஒரு சண்டை ஆரம்பமானது.
விக்கிக்கு டென்ஷன் அதிகமாகி… “ரெண்டு பேரும் நிறுத்தப் போறீங்களா இல்லையா டா…” என கத்தினான்.
சஹஷராவின் நண்பர்களைப் பார்த்து.. “இவள கூட்டிட்டு போங்க..” என சத்தமிட்டான்.
பிறகு தன் நண்பர்களிடம்.. “இவனை இழுத்துட்டு வாங்கடா..” என்றான்.
இரண்டு பேரும் ஒருவழியாக சண்டை போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே ஏற்காடு ட்ரிப்பை முடித்துக் கொண்டு  நாமக்கல் வந்து சேர்ந்தனர்.
அதற்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. பேசிக் கொள்ளவில்லை.. என்றாலும் இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டுதான் இருந்தது.
நாமகல்லின் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வந்தது.
கடந்த இரண்டு வருடங்களாக அதன் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டான் சாஹிஷ்ணு. இந்த முறை வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றி. ரொம்பவே எதிர்ப்பார்போடு இருந்தான்.
இந்த முறை சஹஷரா அவனை எதிர்த்து போட்டியிட்டாள் தலைவர் பதவிக்கு.. தன்னை எதிர்த்து சஹஷரா போட்டியிடுகிறாள் என்றதும் சாஹிஷ்ணுவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
சஹஷரா நாமினேஷன் தாக்கல் பண்ண வந்த போது அவளுக்கு முன்னே நாமினேசன் தாக்கல் பண்ணிவிட்டு அவளுக்காக காத்திருந்தான் சாஹிஷ்ணு.
நாமினேஷன் தாக்கல் பண்ண வந்த சஹஷரா சங்கத்தின் கட்டிடத்தில் நுழையும் முன்பு.. வெளியே கார்பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த சாஹிஷ்ணுவை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு உள்ளே சென்றாள்.
அவளின் நக்கல் சிரிப்பு இன்னும் அவனுக்கு கோபத்தை கிளறி விட்டது போல் ஆகிவிட்டது. 
நாமினேசன் தாக்கல் பண்ணிவிட்டு வெளியே வந்தவளை.. “என்னை எதிர்த்து உன்னால  ஜெயிக்க முடியுமா… ரெண்டு வருஷமா அன்னப்போஸ்ட்ல ஜெயிச்சுட்டு இருக்கேன்டி..  அப்படி இருக்கும் போது என்ன  எதிர்த்து நிக்கிறியே.. கொஞ்சமாச்சும்  உனக்கு அறிவு இருக்காடி…  என்னை எதிர்த்து போட்டியிடுகிற.. தோத்து அசிங்கப்படும் போது நீ எப்படி இருப்பேனு நினைச்சா.. எனக்கு இப்பவே சிரிப்பு தாங்க முடியல..” என சொல்லி சத்தமாக சிரித்தான்.
“டேய்… சும்மா உதார் விடாதடா… இவ்வளவு நாள்ல உன்னை எதிர்க்க ஆளில்ல… இப்ப தான் நான் வந்துட்டேன்ல்ல..  உன்னை ஜெயிச்சு  காமிக்கறேன் பாருடா..” என்றாள் அவனைவிட நக்கல் அதிகமாக…
“எனக்கு எதிரா யாரும் போட்டியிடாத போதே.. என் பொசிஷன் உனக்கு தெரிய வேண்டாம்..”
“என்னை மாதிரி உன்ன எதிர்க்க யாருக்கும் துணிவில்ல போல..” என அவனை ரவுடி ரேஞ்சிற்கு மட்டம் தட்டி பேசினாள்.
“பாத்துக்கலாம் போடி யார் ஜெயிக்கிறார்கள்னு…” என சொல்லிவிட்டு தனது காரில் ஏறி சென்றுவிட்டான் சாஹிஷ்ணு.
இவளும் அவனை முறைத்துக் கொண்டு தனது காரில் ஏறி சென்றுவிட்டாள்.
இருவரும் தேர்தலுக்காக  தங்கள் வேலைகளை ஒதுக்கி விட்டு நிறைய உழைத்தார்கள். நடுவில் எங்காவது நேருக்கு நேர் சந்திக்கும் போது முறைப்புகளும்.. லேசான உரசல்களும் இருக்கத் தான் செய்தது.
தேர்தல் நாளும் வந்தது.. வாக்குப் பதிவு முடிந்து அன்று மாலையே முடிவும் அறிவிக்கப்பட்டது.  சஹஷரா வெற்றி பெற்றதாக அறிவித்தனர். 
சாஹிஷ்ணுவால் தான் தோற்றுவிட்டோம் என்பதை விட சஹஷரா வெற்றி பெற்றுவிட்டாள் என்பதை தான் தாங்க முடியவில்லை.
எப்படி… எப்படி.. இது சாத்தியமில்லையே.. என யோசித்து யோசித்து மண்டை காய்ந்தான். இந்த இரண்டு வருடங்களாக சங்கத்திற்கும் சங்க உறுப்பினர்களுக்கும் நிதி திரட்டியும்.. தனிப்பட்ட முறையிலும் நிறைய நல்ல காரியங்கள் செய்திருந்தான். அதன் பலனாகவும்… சஹஷரா புது உறுப்பினர் என்பதாலும் தனக்கு தான் இந்த முறையும் தலைவர் பதவி என இறுமாந்திருந்தான்.
பதவியேற்பு நாள்.. அது ஒரு ஞாயிற்றுகிழமை..
சாஹிஷ்ணுவிற்கு செல்ல விருப்பம் இல்லை போகாவிட்டால் அதற்கும் சங்க உறுப்பினர்களிடையே ஏதாவது பேச்சு வரும் என விழாவிற்கு சென்றான்.  அதுமட்டுமல்லாமல் தனது பொறுப்பை அவளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவும் சென்றான்.
விழாவில் அறிக்கைகள் வாசிக்கப்பட்டு புது செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்க.. தலைவர் பதவிக்கு பதவி ஏற்க வருமாறு அழைத்து பதவியேற்பு விழாவை நடத்தி வைத்தான். அவள் பதவியை ஏற்றுக் கொள்ளவும்  கிளம்ப நினைத்தவனை உடனே உறுப்பினர்கள்  பிடித்துக்கொண்டனர். 
பிடித்துக்கொண்டு அவனை பேச்சுவாக்கில் அவனின் தோல்வியையும் அவளின் வெற்றியையும்  நல்ல எண்ணத்தில் சிலரும்.. அவனின் மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் பலரும் பலவிதமாக வார்த்தைகளில் தேன்  தடவி வருத்தப்படுவது போல பேசி.. உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டனர்.
வேறு வழியின்றி விழா முடியும் வரை இருந்தவன் சாப்பிடாமல் கூட கிளம்பி விட.. கிளம்பியவனை வழிமறித்து…. “சாப்பிட்டு விட்டு செல்லாமலே முன்னாள் தலைவரே..” நக்கலாக சொன்னாள்.
”தலைவராகிட்டோம்னு தலக்கனத்துல இருக்கறியா.. ரொம்ப ஆட்டம் போடாத..என்ன புரிஞ்சுதா..” 
“ஏன்டா தோத்தும் உன் திமிரு அடங்குதானு பாரேன்..”
“அடங்காதுடி.. பொட்டச்சி உனக்கே இவ்வளவு திமிரு இருக்கும் போது ஆம்பள எனக்கு இருக்காதா..” என பிடறிமயிர் சிலிர்க்க கர்ஜிக்கும் சிங்கம் போல சிலிர்த்து நின்றான்.
“பொட்டச்சி அது இதுனு பேசின.. பல்ல பேத்துருவேன்டா..”
“ஆமாம்டி நீ பல்ல பேக்கற வரைக்கும்.. நான் வேடிக்கை பாரத்திட்டு இருப்பேனா..”
“டேய்..” என சஹஷரா ஏதோ திட்ட வர..
இவர்கள் வெளி வாசல் அருகே சஹஷரா வாசலைப் பார்த்து நிற்க.. சாஹிஷ்ணு உட்புறம் பார்த்து நின்று பேசிக் கொண்டிருக்க.. இவர்களின் பேச்சு காதில் விழுகவில்லை என்றாலும் இருவரின் உடல் மொழி  இவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் என்பதை காட்டிக் கொடுக்க.. பொரும்பாலோனர் இவர்களை வேடிக்கைப் பார்க்க.. இதனை கவனித்த சாஹிஷ்ணு..
“போனவனை கூப்பிட்டு வச்சு சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்கறியாடி.. சீன் போடறது… பந்தா பண்றது.. தம்பட்டம் அடிக்கறது ..  இது தானடி உங்க குடும்ப வழக்கம்.. அதை நீயும் கரெக்டா செய்யறியா.. என்கிட்ட இந்த மாதிரி எல்லாம் வச்சுகிட்ட தொலைச்சுறுவேன் ஜாக்கிரதை..” என விரல் நீட்டி எச்சரித்து விட்டு நிற்காமல் கிளம்பிவிட்டான். 
வீட்டிற்கு நேராக வந்து விட்டவனுக்கு இருப்பே கொள்ள முடியவில்லை. ‘எப்படி ஜெயிச்சிருப்பா…இப்ப தான் வந்திருக்கா… இந்த ரெண்டு வருஷத்துல இந்த சங்கத்துக்கு நான் எத்தனை நல்லது செய்திருக்கேன்..தனிப்பட்ட முறையில் சங்க உறுப்புனர்களுக்கும் உதவியிருக்கேன்.. என்ன விட்டுட்டு அவளை எப்படி அதுவும்  புது உறுப்பினர் அப்புறம் எப்படி ஜெயிக்க வச்சாங்க…’ என்றுபுலம்பியவாறே குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.
“நடுவில்  ஏதோ நடந்திருக்கு…  இவ வெற்றி பெற சான்ஸே இல்ல.. கண்டுபிடிக்கிறேன்..” என சரவணனுக்கு அழைத்து விசாரித்து உடனே தனக்கு ரிப்போர்ட் கொடுக்குமாறு சொன்னான்.
அவளிடம் தோற்றுப் போனதை அவமானமாக நினைத்திருக்க.. அவளின் பேச்சு எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போலானது. கோபதீ மனதில் கனன்று கொண்டிருக்க.. சரவணனின் போனுக்காக காத்திருந்தான்.
ஒரு அரை மணி நேரத்திலேயே சரவணன்  அழைத்துவிட்டான்.
“சொல்லு சரவணா..”
“சார் சஹஷரா மேம்  தாத்தா சிவதாணு சார்  இரவோடு இரவாக வெள்ளித் தட்டில் தங்க நாணயம் வைத்து கொடுத்து  ஓட்டுப்போட சொல்லி சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பரிசளித்துள்ளார் சார்..”
“பரிசுனு சொல்லாத.. லஞ்சம்னு சொல்லுடா..  தெரியும்டா இப்படி ஏதாவது ஒரு குறுக்கு வழியில் தான் ஜெயிச்சு இருப்பாள். அப்பவே நான் நினைச்சேன். நெனச்ச மாதிரியே நடந்துருச்சு..  இரு அவளை சும்மா விடுவதில்லை..” என சரவணின் காலை கட் பண்ணிவிட்டு அடுத்தது சஹஷராவிற்கு அழைத்தான்.
சஹஷரா விழா முடிந்து அப்போ தான்  வந்தவள் இவனின்  நம்பர் என தெரிந்ததும்  எடுக்கவில்லை. மிகவும் சோர்வாக இருக்க அவனிடம் பேசினால் தேவையில்லாமல் டென்ஷன் என நினைத்து பேசவில்லை.
மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தான். அவள் எடுத்துப் பேசாதது  இன்னும் கிளறிவிட்டது போல ஆகிவிட்டது. 
ஒரு கட்டத்தில் பொறுக்கமாட்டாமல் போனை எடுத்து விட்டாள்.
“எதுக்கு எனக்கு  நீ இத்தனை தடவ கால் பண்ணிட்டு இருக்க..” எரிச்சலாக பேசினாள்.
“ஏன்டி… லஞ்சம் கொடுத்து குறுக்குவழியில் ஜெயிச்சிட்டு  உனக்கு திமிர் பேச்சு வேறயா..”
“யாரு லஞ்சம் கொடுத்து ஜெயிச்சா… என்ன பொய் சொல்லிட்டு இருக்க… என்ன புதுசா கதை விடுறியா தோத்துப் போனதுல புத்தி பேதலிச்சுப் போச்சா..“
“யாரப் பாத்துடி பைத்தியங்கற… உங்க தாத்தா தாண்டி எல்லாருக்கும் வெள்ளி தட்டுல தங்க நாணயம் வச்சு கொடுத்து உனக்கு ஓட்டு போட சொல்லியிருக்காரு…  நேர்மையாய் ஜெயிக்க வேண்டிய தான… நேருக்கு நேர் மோதி நேர்வழியில் ஜெயிச்சிருந்தா உன் வெற்றிய பாராட்டி இருப்பேன்..  உங்க குடும்பத்துக்கு தான் நேர்வழியில் போகத் தெரியாதே.. குறுக்கு வழியில் தானே போவீங்க..”
“டேய் என்னப் பத்தி எதுனாலும் பேசு.. என் குடும்பத்த பத்தி பேசாத..”
“அப்படி தான்டி பேசுவேன்.. அந்த கிழவனுக்கு எதுக்கு இந்த குறுக்கு புத்தி.. என் கால்ல வந்து விழுந்து கேட்டிருந்தா.. நானே பிச்சையா போட்டு இருப்பேன்..”
“யாருடா உன் கால்ல விழுகனும்.. என் தாத்தாவா..”
“ஆமாம்டி அந்த கிழவன் தான்..”
“எவ்வளவு தைரியம் இருந்தா என் தாத்தாவ சொல்லுவ.. நீ அவ்வளவு பெரிய அப்பாடக்கரா டா.. உன்னை என் கால்ல விழ வைக்கல… நான் சஹஷரா இல்ல..”
“உன்னையும் உன் திமிரையும் அடக்கல..நான் சாஹிஷ்ணு இல்லடி..”
“நீ சரியான ஆம்பளையா இருந்தா.. செய்டா பார்க்கலாம்..”என சொல்லி  மேலும் பேசும் முன் வைத்துவிட்டாள்.
பேசிக் கொண்டுருக்கும் போதே போனை வைத்து விட்டது.. தன்னை ஆம்பளையா இருந்தா செய்டா என்றது எல்லாம் சேரந்து சாஹிஷ்ணு மனதில் வன்மத்தை தூண்டி விட..
சஹஷராவை ஆள் வைத்து தங்கள் கெஸ்ட் ஹவுஸிற்கு கடத்தி வந்துவிட்டான்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *