ராஜாவின் ரோஜாப்பூ

This entry is part 1 of 7 in the series ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ

ராஜாவின் ரோஜாப்பூ 2
ரோஜா வாயில் கட்டோடு அவனைப்பார்க்க ..அந்த நெடியவனோ நன்றாக சாய்ந்து அமர்ந்து..

“நான் தஞ்சாவூர் அரண்மனை வாரிசு யுதனராஜா”..என்றவன் தன் கதையை சொல்ல ஆரம்பித்தான்..

தஞ்சை மன்னர்கள் ஆட்சியில் இருக்கும் போது ..யுதனராஜாவின் குடும்பம்தான் ராஜாவாக வழிவழியாக இருந்து வருகின்றனர்..இவன் தாத்தா யோகராஜா ..இவருக்கு இரண்டு பிள்ளைகள்..மேகராஜா, மேகலா ..மேகராஜாவிற்கு ராணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொடுக்க அவர்களுக்கு பிறந்த ஒற்றை மகனே இந்த யுதனராஜா.. மேகலா தன் அரண்மணையில் கணக்கராக இருந்த ராஜ் என்பவரை வீட்டிற்கு எதிர்த்து திருமணம் செய்ய.. அவள் தந்தை யோகராஜா சில சொத்தை கொடுத்து ஒதுக்கிவிட்டார்..ஆனால் மேகராஜா தன்தங்கை மேல் மிகவும் அன்பு வைத்திருந்த காரணத்தால் ..தன் தந்தை இறந்த பிறகு ..தங்கை மற்றும் ராஜ்ஜை தங்கள் அரண்மனையிலேயே தங்க வைத்தார்..ராஜ் வெளியே நல்லவராக நடித்து ..அரண்மனை பணங்களில் களவாடல் செய்ய ஆரம்பித்தார் ..பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பது போல் ..இவரோடு சேர்ந்து மேகலாவும் அத்தனை கள்ளத்தனங்களும் செய்ய ஆரம்பித்தார்..இவர்களுக்கு மேத்தா என்ற ஒரு மகள் ..கலிசடைகளுக்கு பிறந்தது எப்படி இருக்கும்..இதுவும் கலிசடையே..

யுதனுக்கு தன் குடும்பம் மீது மிகப்பெரிய அன்பு ..மேகலா யுதனுக்கு மொத்த பாசத்தையும் கொடுப்பது போல் பாசாங்கு செய்ய பாலகனும் முழுவதுமாக நம்பினான்.. தனது இருபத்தொரு வயதில் வெளிநாடு சென்று படிக்க ஆரம்பித்தான்.. ஐந்து ஆண்டு வெளிநாட்டில் இருந்துவிட்டு திரும்பும் நாளுக்காக காத்திருந்தான் யுதன்..

ஆனால் இங்கோ மேகராஜா தனது தங்கை மற்றும் தங்கை கணவரின் ஊழல் கண்டுபிடித்து கண்டிக்க..அப்போது மன்னிப்பு கேட்டு அழுதவர்கள்..அதன் பிறகு மேகராஜாவும் ராணியும் கொடைக்கானலில் உள்ள அவர்கள் எஸ்டேட் செல்லும்போது .. ராஜ் ஆட்களை ஏற்பாடு பண்ணி மலையில் இருந்து அவர்கள் காரை கவிழ்த்து இருவரையும் கொலை செய்ய..யுதனிடம் அக்ஸிடண்ட் என பொய் கூற..அவனோ அலறி அடித்து வந்து பார்த்தது தன் சிதைந்து போன தாய் தந்தையைதான்..  பின்னே இங்கே வந்து அத்தனையும் இவன் எடுத்து நடத்த ஆரம்பித்தான்..இவர்களின் கள்ளத்தனங்களை கண்டு கொண்டான்.. இருந்தாலும் அவர்கள் மேல் உள்ள அன்பில் தன்னோடு வைத்துக்கொண்டார்.. இதில் குறிப்பிட வேண்டியது..யுதனுக்கு பெற்றவர்கள் இழப்புக்கு காரணம் இவர்கள் என தெரியாது..

யாரும் இல்லாதவனுக்கு அவர்கள் காட்டும் போலி அன்பு தெரியாமல் போனது..தன் குடும்பமாகவே அவர்களை நடத்துகிறான்.. மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறான்..

இப்போது பிரச்சினை என்னவென்றால்  யுதன் திருமணம் செய்தால் மட்டுமே அவன் அந்த அரண்மனை ராஜ்ஜிய வாரிசாக இருக்க முடியும்..மேலும் அரண்மனை சொத்துக்களை மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்..இப்போது யுதன்  ஆதரவற்ற இல்லம் ஒன்று நடத்துகிறான்.. அதற்கு இந்த அரண்மனையை கொடுக்க வேண்டும்..ஆனால் இவனுக்கு திருமணம் ஆகாததால்..அதை அவர்களுக்கு கொடுக்க முடியவில்லை..அதை அறிந்து கொண்ட ராஜ் தன் மகளை திருமணம் செய்து வைத்தாள் பின் மொத்த சொத்தும் நமக்குதான் என நினைத்தான் .. அதன்படி ராஜ் மேக்னாவை திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார் ..

நாளை காலை திருமணம்..இது அவனுக்கு தெரிந்ததே இன்று காலைதான்.. ஏனோ அவனுக்கு தவறாக தோன்ற ..திருமணத்தை நிறுத்தலாம் என்றால் அரண்மனை கெளரவம் கெட்டுவிடும்..அதே சமயம் மேக்னா மீது பிடித்தம் இல்லை ..அப்போதுதான் அவன் கண்களில் ரோஜா பட..ஒருவரின் பர்ஸை திருடும் போது கண்டுகொண்டான்.. பணத்தைக் கொடுத்தால்  திருமணம் செய்து கொள்வாள்.. பிறகு அவள் வழியில் அவள் செல்லட்டும்..நம் வழியில் நாம் செல்லலாம் என நினைத்து அவளை பற்றி விசாரித்து அவள் பணத்தேவையை அறிந்து கொண்டவன்..அவளைக் கடத்த.. இதோ இப்போது அவன் முன்னாடி இருக்கிறாள்..

“இப்போ சொல்லு  கல்யாணம் பண்ணிக்கிறியா?..உன் தம்பிக்கு தேவையான பணம் நா தர்றேன்” …

“ம்ம்ம் ..ம்ம்ம்” 

“சொல்லு சம்மதமா”?

“ம்ம்ம் ம்ம்ம் “

அவள் வாயில் கட்டி இருந்த துணியைக் காட்ட(அட லூசுகளா எனக்கு கிடைக்கிற ஹீரோ எல்லாம் இப்படி நட்டு கலந்ததுகளா கிடைக்கிதே.. )..

யுதன் துணியை நீக்க ..

“நீ வெளிநாட்டுக்கு போயி மூளையை அங்கேயே வச்சிகீனு வர்தியாமே ..வாய கட்டி வச்சிகீனு பேசுனா எப்படிமே  பேசுறது”..

“ஸ்பா தா பாரு உன் கத சோக்கா இருக்கிது ..ஆனா அதுக்கோசரம் உன்னிய கல்யாணம் கட்டிக்க முடியாது”..என்றவள் எழும்பி வாயில் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.. 

“போகிறதுக்கு முன்னாடி  இத பாத்துட்டு போ “என்றான் யுதன்

“இன்னாத்த பாக்க சொல்ற” என்றவளின் கையில் யுதன் தன் போனை வைத்தான்..

அதில் இருந்ததைப் பார்த்தவள்   திகைத்தாள் .அவ்வளவும் அவள் திருடும் போது எடுத்தவை.(மாப்பு வச்சிட்டானே ஆப்பு)இனி ஒன்றும் செய்ய இயலாது..

இதை போலீஸ்காரரிடம் கொடுத்தாள் ..இதுவரை எந்த திருட்டிலும் அவள் மாட்டியதே இல்லை(அவ்வளவு நேக்கு) .இது கண்டிப்பாக அவளை ஆயுள்காலம்  வரை சிறையில் தள்ள போதுமானது..தான் எதற்காக இந்த தொழிலில் இருக்கிறேன் என்று சொன்னால் ஒத்துக்கொள்வார்களா.. ஜெயிலுக்கு போக பயமெல்லாம் இல்லை ..ஆனால் தன்னை நம்பி இருக்கும் தன் தம்பியின் வாழ்க்கை..நினைக்கவே பயமாக இருந்தது… ஒரு முடிவை எடுத்தவள் ..ஒரு பெருமூச்சு  ஒன்றை விட்டாள்..

“நீங்க இவ்ளோ கெஞ்சி கேட்டுக்கிறதுக்காக இதுக்கு ஒத்துக்கிறேன்”..  (குப்புற விழுந்தாலும் மண்ணு ஒட்டலையாம்)..

“ஆனா இதுல எனக்கு இன்னா கிடைக்கும்?”..

“உன் தம்பி படிப்புக்கு தேவையான அத்தனையும் நா பாத்துக்கிறேன்”..

“பணத்துக்காக கல்யாணம் பன்ன சொல்றியா”?

“அப்படியும் சொல்லலாம்..உனக்கு பணம் முக்கியம் …எனக்கு  என்  கல்யாணம் முக்கியம்”..

“எனக்கு இப்ப இக்கட்டான சூழ்நிலை..இல்ல உன் பணம் வேணா ஜெயில்ல பிடிச்சி போடுனு போய்க்கின்னே இருப்பேன்..ஆனா என் தம்பிய நினைச்சிகின்னுதான் ஒன்னுயும் பன்ன முடியல”…

“அது தெரிஞ்சிதான கார்னர் பன்றேன்”(வில்னாடா நீ)..

“சரி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன்”..

“சூப்பர் இன்னைக்கே உன் தம்பிக்கு பீஸ் கட்டிருறேன்”..

“நாளைக்கு  அரண்மனைக்கு இதோ இந்த சேலைகட்டி வா அப்புறம் இதுல நகை இருக்கு ஆட்டைய போட்டுட்டு போக மாட்டியே?”

“இந்தாம என்ன பாத்தா எப்படி இக்கிது உனக்கு?..ரொம்ப பண்ணாதே.. காலையில வர்றேன்..அப்புறம் இந்த நகையை தா போட்டுக்கிறேன்..எத்தனை நாள் உங்கூட இருக்கனுமே..”  

“சொத்து என் பேருக்கு மாறும் வர..நாளைக்கு உன் முகத்தை மறச்சி கூட்டிட்டு வருவாங்க..இவன்க சொல்றது போல கேளு.எதுவும் சொதப்பாத..உன் திருட்டு கை திருட்டு வேலை பாத்திச்சி.. பிறகு நா என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது”..

“உனக்கே தெரியாதத ரொம்ப கஷ்டப்பட்டு யோசிக்காதமே..என் கை திருட்டு பழகிருச்சி கஷ்டம்தான் முயற்சி  பண்ணிப் பாக்கிறேன்”.. 

“கைய வச்சி சும்மா இல்லை.. கையே இருக்காது ” ..

“தோ பார்டா இந்த மிரட்டல்லாம் எங்கிட்ட செல்லாது..போடா டுபுக்குனு போய்டே இருப்பேன்..சரி அவ்ளோதான..வீட்டில கொண்டு விட சொல்லு ..காலையில் இருந்து தொழில் பாத்து டயர்டா இக்கிறேன்.. வீட்டுக்கு போயி குந்திக்கின்னு சாப்பிடனும்”..  

“ம்ம்ம் சரி போ ..நாளைக்கு ரெடியா இரு  ”    

“டேய் அண்ணியக் கொண்டு வீட்டில் இறக்கி விடுங்கடா”.. என்றவன் புயல் வேகத்தில் வெளியே சென்றுவிட்டான்..

திருமணம் ரோஜாவோடா?மேக்னாவோடா?

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *