ரமணி Vs ரமணி

ரமணி Vsரமணி

அத்தியாயம்10

ரமணியும் டெல்லியும் சிவா சா மில் என்று எழதப்பட்டு தன் வண்ணங்களை இழந்திருந்த போர்டின் முன் வண்டியை நிறுத்தி இறங்கிய போது சாமில்லின் உள்ளே மயான அமைதி நிலவியது. வரிசையாக அறுத்து அடுக்கப்பட்டிருந்த ரீப்பர்களையும் கைரேகையை போல் பக்கவாட்டில் விநோத வடிவத்தில் இருந்த மர உருளைகளையும் பார்த்து கொண்டிருந்த போது தான் ஏதோ ஓரு மரத்தின் பின்புறமிருந்து அவன் தோன்றினான். பொன்னம்பலத்தின் அக்கா மகனை போல் உருண்டு திரண்டு கடா மீசையோடு இருந்தவன் என்ன பாஸ்? என்ன மரம் வாங்க வந்தீங்க? என்றான். அவன் அணிந்திருந்த டீ சர்ட் புஜங்களின் வீக்கத்தை மறைக்க முயன்று தோற்றிருந்தது.

முதலாளிய பாக்கனும்?’ என்றான் ரமணி

நீங்க யாரு?

ரமணி ன்னு சொல்லுங்க. அவருக்கு தெரியும்.

டீ சர்ட் சட்டென்று தூக்கி கட்டிய லுங்கியை அவிழ்த்து விட்டான். அந்த கண்ணாடி கேபினுக்குள்ள போங்க. உங்கருக்காகஅண்ணன் வெயிட் பண்ணிட்டு இருக்காரு. என்றான்.

ரமணி டெல்லியை சாடையாகப் பார்த்து எப்படி மரியாதை கொடுத்தான் பார்த்தியா?என்றான் கண்களால் .

அதே நேரம் ஒரு மாருதி வேன் சாமில் முன்பாக வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நால்வரில் ஒருவன் இந்த கடைதானே? என்றான்.

அவர்களை நெருங்கிய டீசர்ட் உள்ள வாங்க பாஸ். என்ன வேணும்?சாலா? தேக்கா? என்றான்.

இறங்கியவர்களில் ஓருவன் வாகை கிடைக்குமா? என்றான்.

நின்று கொண்டிருந்த ரமணியையும் டெல்லியையும் பார்த்த டீ சர்ட் நீங்க உள்ளே போங்க என்றான்.

இருவரும் அலுமினிய பாட்டிசியன் அலுவலக அறையை நோக்கி நடந்தனர். என்னமோ நடக்கப் போவுதுப்பா என்றான் டெல்லி .

ஓன்னும் நடக்காது. கம்னு வா என்றான் ரமணி .

இருவரும் தன் அலுவலகத்தை நோக்கி வருவதை கேமிராவில் பார்த்து கொண்டிருந்த சிவா டிராவிலிருந்த தன் துப்பாக்கியை இடுப்பில் சொருகி கொண்டான்.ரமணியும் டெல்லியும் உள்ளே நுழைந்ததும் சீட்டிலிருந்து எழந்து வாங்க’ரமணி சார்’ என்றவன் சட்டென்று தன் துப்பாக்கியை எடுத்து நீட்டி ஏண்டா தக்காளி? எங்க பொருளை எடுத்து எங்களையே பைத்தியக்காரனாக்குறியா? சாவுடா ? என்றான். இதை எதிர்பாராத ரமணி திடுக்கிட்டு நின்றான். ஆனால் டெல்லி எதிர்பாராத ஒன்றை எதிர்பார்த்திருந்தான்.

அண்ணே’எங்களை விட்ருங்கண்ணே என்று சிவாவின் காலில் விழந்தான் டெல்லி .கால்மிதி மேட்டின் மீது நின்றிருந்த சிவாவை மேட்டை இழுத்து தள்ளிவிட்டு விடலாம் என்பது டெல்லியின் மனதில் தோன்றிய பிளான். அப்படி ஒரு யோசனையுடன் டெல்லி சிவாவின் காலில் விழுந்த போது இரண்டு தோட்டாக்கள் அடுத்தடுத்து வெடித்தன.வெளியே நின்றிருந்த நால்வரின் கையில் துப்பாக்கி முளைத்திருந்தது. அதில் ஒன்று ஆபிஸின் பக்கம் திரும்பியிருந்தது. டீ சர்ட் ஒரு மரத்தின் மீது இரத்தக்கறையுடன் மல்லாந்து கிடந்தான். இழுத்த மேட் சுலபமாக கையில் வர டெல்லி பதட்டமாக நிமிர்ந்தான். சிவா துப்பாக்கி ஏந்திய கையோடு பிணமாக சரிந்தான். அவனது வலது புறமார்பில் ஒரு ரத்த ஊற்று உற்பத்தியாகியிருந்தது.

நால்வரில் ஒருவன் சீக்கிரமா வண்டிய எடுத்துட்டு கிளம்புங்க என்றான் ரமணியை பார்த்து.

கேமரா ? என்றான் டெல்லி

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *