ரப்பு டப்பு ராட்ஷஸா
2
ரப்பு டப்பு ராட்ஷஸா…
ஜியா ஜானவி ❤️
‘என்னை மனைவி என்கிறானே??!!’ என்று மண்டோதரி மயங்கி விழாத குறையாக ரோலக்ஸை பார்த்தவாறு நின்றிருந்தார்.
அவன் சொன்ன மனைவி என்ற வார்த்தையில் அந்த தீவே பூகம்பம் வந்தது போல ஒரு ஆட்டம் ஆடி அடங்கியது என்றால் மிகை இல்லை!!
பின்னே 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியை பார்த்து அவன் என் மனைவி என்றால் எவர் தான் நம்புவது? இவனும் வெடவெடவென்று உயரத்தில் ஒல்லி பெல்லியாக சுருட்டு முடியோடு இருக்க..
அந்த பெண்மணியோ ஓங்கு தாங்கு வளர்த்தியோடு!! அந்த வளத்தி குறுக்காகவும் அதி அமோகமாக இருக்க.. எப்படி ஒப்பார்கள் இந்த பொருத்தத்தை?? கூடவே அந்த மண்டோதரியாகப்பட்டவர் ஆசிரமத்தின் உபதலைவியாவார்!!
எல்லோரும் முகத்தில் என்ன மாதிரியான ரியாக்ஷனை கொடுக்க என்று குழப்பமாக இருந்தனர். சிலரோ வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டனர்!!
அந்த குறுக்கா வளர்ந்து மண்டோதரியும் இவனை நோக்கி வேக வேகமாக வந்து முறைத்து பார்த்து “ஏன் டா… உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா? திமிரு இருந்தா? என்னை பார்த்து உன் பொண்டாட்டின்னு சொல்லுவ?? என்னை பார்த்தா உன் பொண்டாட்டி மாதிரியா தெரியுது? ஓங்கி ஒன்னு கொடுத்தேனு வை.. தீவுக்குள்ள புதைஞ்சு போய்டுவ!!” என்று உருண்டு பெருத்திருந்த தன் புஜத்தை அவர் தூக்கி காட்டி
கோபத்தோடு கேட்க…
அனாவசியமா ஒரு காண்டாமிருகத்தை காண்டாகிட்டோமோ என்று மனதிற்குள் நொந்தவன், இதயம் இரும்பு பாதையில் ஓடும் ரயிலின் வேகத்தை விட வேகமாக ஓட அதையெல்லாம் வெளிக்காட்டாகாமல்.. இவனும் சிரித்த முகமாக “உங்களுக்கு என்ன மேடம் குறைச்சல்? என்ன கொஞ்சம் அமுல் பேபி மாதிரி மப்பும் மந்தாரமுமா.. ச்ச.. கொழுக்கும் மொழுக்குனு கொழுக்கட்டை போல இருக்கீங்க.. மத்தபடி யூ லுக் வெரி பியூட்டிஃபுல் மேம்!!” என்றான்.
மண்டோதரியை பார்த்து!!
புகழுக்கு மயங்காத மனிதர்களே கிடையாது!! ஆண் என்றால் அவனது பராக்கிரமங்களை.. வீர தீர சாகசங்களை.. சாணக்கியத்தை புகழ்ந்தால் போதும் அவனை மடக்க!! பெரும்பாலும் பெண்கள் மடங்குவது வீழ்வது அவர்களது அழகை புகழ்ந்தால்…
எந்த பெண்ணுக்கு தான் தன் அழகை ஒருத்தன் அதுவும் இளவயது ஆண்மகன் ஒருத்தன் புகழ்ந்தால் பிடிக்காது? அது அழகே இல்லை என்றாலும் சரி!! எந்த வயதிலும் சரி!!
தந்தி போல அவசரமாக வந்து ஒரு நாணம் மண்டோதரிக்கு ஒட்டிக்கொள்ள.. “சீ ராஸ்கல்… ஸ்வீட் ராஸ்கல்!!” என்று செல்லமாக அவனது முதுகில் ஒரு தட்டு தட்ட.. அதற்கே அவன் தள்ளாடி ஆடி ஆடி நின்றான்.
அதுவரை பெண்ணாய் அழகின் போதையில் மயங்கி நின்றவர்… அடுத்து அவ்வாசிரமத்தின் உபதலைவியாய் சிலிர்த்து எழுந்தார்.
“உண்மைய சொல்லு யார் நீ? எதுக்கு இங்க வந்திருக்க? ஏன் என்னை உன் பொண்டாட்டின்னு சொன்ன?” என்று அந்த தீவின் அதிகாரியாய் பாபாஜியின் விசுவாச உபதலைவியாய் அவர் சற்றே மிரட்டலோடு கேட்க..
“கோபப்பட்டா கூட உங்க கன்னங்கள் இரண்டும் அப்படியே செக்க செவன்னு செவக்குறது ஒரு அழகுனா… கண்கள் ரெண்டும் தீயை வாரி கொட்டுது அம்புட்டு அழகா இருக்கு!! இப்படி அழகே உருக்கொண்டு வந்த உங்களை விட்டுட்டு உங்க புருஷன் எப்படி போனாரு??” என்று இவன் ஒரு புதிய கேள்வியை கேட்டு வைக்க…
“ம்ஹீம்…!!” என்று ஒரு பெருமூச்சினை விட்டவர் “அவனுக்கு என் அழகு எங்கு தெரிந்தது? என் குண்டு மட்டும்தான் அவன் கண்ணுக்கு தெரிஞ்சது!! குண்டு.. குண்டுனு சொல்லிட்டே இருந்தான்.. அதான் தூங்கும்போது பெரிய குண்டு கல்லை தூக்கி அவன் தலையில் போட்டேன்.. இப்போ பைத்தியம் பிடித்து சுத்துறான் ஊருக்குள்ள.. எனக்கு தான் மனசு கஷ்டமாகி போய் பாபாஜி கிட்ட வந்து சேர்ந்திட்டேன்!!” என்று அசால்டாக கூறியவரை பார்த்து சற்றே ஜெர்க்கானது நம் நாயகனுக்கு!!
“சரி.. சரி.. பேச்ச மாத்தாம.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு??” என்றதும், அப்போது கூட்டமாக பெண்கள் கூட்டம் இவர் பின்னே நின்றிருப்பதை கவனித்தவன் அதில் ஒருத்தியை பார்த்து “நான் பொண்டாட்டின்னு உங்களை சொல்லல மேடம்.. உங்க பின்னாடி நிக்குற அவளை.. என்னவளைத்தான்.. சொன்னேன்!!” என்று ஒரு பெண்ணை காட்ட.. அவளோ இவனை காட்டமாக முறைத்தப்படி அருகில் வந்தாள்.
இவனோ அவளை முழுங்குவது போல பார்த்து…. ஐயையோ கிட்ட வந்துட்டாலே இவளை எப்படி கூப்பிடறது பேரு தெரியாதே என்ன செய்வது என்று நொடிக்கு குறைவான நேரத்தில் அவனது நியூரான்கள் காட்டுதனமாய் வேலை செய்து கண்டுபிடித்தது ஒரு நிக் நேம்மை!!
“பிஜிலி….!!” என்று அவன் உள்ளம் உருக.. ஊன் உருக.. உடல் உருக… காதோடு கூப்பிட… பார்த்திருந்த ஊரும் உருக… அதில் இன்னும் கடுப்பேறி மண்டை ஓடு இல்லாத பத்ரகாளியாய் அவன் முன்னே வேகமாக வந்தாள். கோபமாக வந்தவள் இவனிடம் என்ன பேச வருவாள் என்று அவனுக்கா தெரியாது? அதற்கு இடமே கொடுக்காமல்… இந்த ஜகஜாதஜித்தனோ சட்டென்று அவளது காலை யாரும் அறியாமல் வாரிவிட… வழுக்கி விழப்போனவளின் இடுப்பை இறுக்கப் பற்றி பிடித்து தாங்கிக் கொண்டான் தன் இரு கைகளால் வெகு நெருக்கமாக!!
நெருக்கம் என்றால் அதி நெருக்கம்!! பார்ப்பவர்களே சற்று கூச்சப்பட்டு கண்ணை திருப்பிக் கொள்ளும் வண்ணம் இருந்தது அந்த நெருக்கம்!!
“நீ யாருடா? எதுக்கு என்னை பெண்டாட்டினே?” அவனது நெஞ்சில் நன்றாக சாய்த்த படி கேட்டாள் அவள்!!
அவன் கைகள் அவளது இடுப்பை வளைத்துக் கொள்ள.. அவன் உதடுகள் அவளது வெண் கழுத்தில் கோலமிட்டன… “பிஜிலி… மச்சான பார்த்ததும் என்ன ஒரு ஆர்வம்? என்ன ஒரு ஆசை?? பார்க்குறவங்க எல்லாம் பயந்து கண்ண மூடிகிட்டாங்க உன் லவ்வ பார்த்து? பாஞ்சு வந்த உன்னை பார்த்து?” என்றான் சீட்டாக…
“என்ன?? ஆர்வமா? அட அரை மண்டையா!! நான்.. வந்து… ” என்று ஏதோ கூற வந்தவளை கண்ட மண்டோதரி, “ஓஓ… அப்போ.. இவரு தான் உன் புருஷனா?” என்று உள்ளே போன குரலில் கேட்டார்.
“இவர் கூட சண்டை போட்டுகிட்டு தான் நீ இங்க வந்துட்டியா? அதான் வந்ததிலிருந்து புருஷன் பேரு பேச்சு எடுத்தாலே எங்களையெல்லாம் திட்டிக்கிட்டே இருந்தியா?” என்று பெண்கள் கூட்டத்தில் இருந்து ஒரு பெண்கள் கேட்க..
“அடி கூமுட்டை!! ஒட்டுமொத்தமா எல்லாரும் சேர்ந்து இவன என் தலையில புருஷனு கட்டிடு வாங்க போலையே?” என்று அதிர்ந்தவள், “அதெல்லாம் ஒன்னும் இல்ல!! இவன யாருன்னு எனக்கு தெரியாது?” என்றாள் இன்னும் அவன் கைகளில் வாகாக இருந்து கொண்டு..
அவளையும்.. அவனையும்.. அவர்களது நெருக்கத்தையும்.. கைவளைவில் அவள் இன்னும் இருப்பதை கண்டவர்கள் தான் கேலிச் சிரிப்போடு ‘யார் என்று தெரியாதவனிடம் தான் இப்படி நெருங்கி நிற்பாயா?’ என்று கண்களால் கேள்வி கேட்டனர்.
அதற்குள் மண்டோதரி அப்பெண்ணை நெருங்கி “யாருன்னு தெரியலனு சொல்லுற… அவர் கையில் தான் இப்படி உரிமையா உரசிக்கிட்டு நிக்குற?”
“மாதாஜி….!!” என்று அவள் ஏதோ சொல்ல வர…
தன்னை அழகிய பெண் என்று கூறிய ரோலக்ஸ் முன் இவள் மாதாஜி என்கிறாளே என்று கடுப்பு கட்டுக்குள் அடங்காமல் வந்தது மண்டோதரிக்கு.
“இங்க பாரு மாதாஜி கீதாஜின்னு கூப்பிட்டு நின்னுட்டு இருக்காத.. ஒழுங்கா அவர கூட்டிட்டு போ உன் ரூமுக்கு போ!” என்றதும் அவள் அதிர்ந்து அவன் கையில் இருந்து துள்ளி குதித்து “நான் எப்படி அவன?” என்றாள்.
“என்ன அவன் இவனு மரியாதையா இல்லாம பேசுற?” என்றார் மண்டோதரி.
“இங்க பாருங்க மாதாஜி நெஜமாவே இவன் யாருன்னு எனக்கு தெரியாது!! என் புருஷன்னா நான் அவன் கூட போறதுக்கு எனக்கு என்ன கஷ்டம்? ஆமா.. எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை அதனால நான் பிரிந்து எனக்கு இல்லற வாழ்க்கை புடிக்கலன்னு இங்க வந்துட்டேன்!! அதுக்காக கண்டவன் வந்து புருஷன் சொன்னான் அவன் கூட எல்லாம் போய் குடும்பம் நடத்த முடியுமா? இவன் என் புருஷன் கிடையாது!!” என்று வெகு தீவிரமாக கையைக் கட்டிக் கொண்டு கூறியவளை அங்குள்ளவர்கள் நம்பத்தான் வேண்டி இருந்தது.
சற்றே சந்தேகத்தோடு அனைவரும் அப்படியே திரும்பி ரோலக்சை பார்க்க…
“என்னங்கடா.. அப்படியே எல்லாரும் என்னையே பாக்குறீங்க?” என்று மனதுக்குள் ஜெர்கானவன், எப்படி சமாளிக்கலாம் என்று யோசித்து சட்டென்று செண்டிமெண்ட்டாய் பெண்களை தாக்க முடிவு செய்தவன் “தப்பு தான்.. என் தப்பு தான்!! நீ அந்த நெக்லஸ் கேட்கும்போதே நான் வாங்கி தந்து இருக்கணும். என்ன அப்போ கொஞ்சம் என்கிட்ட பணம் பற்றாக்குறை.. வாங்க முடியல! ஆனா இப்போ உனக்காக இத்தனை நாள் சேர்த்து வச்சுட்டேன் தெரியுமா? வா போலாம் பிஜிலி!!” என்று அவன் ஆசையாக கூப்பிட… அதுவரை ஏதோ பெரிய பிரச்சனை என்று நினைத்தவர்களுக்கு ‘இவ்வளவுதானா? இதுக்கு தான் கோபித்து வந்து விட்டாளா?’ என்று தோன்ற..
இப்போது அனைவரும் பார்வையும் கண்டனத்தோடு அப்படியே அவள் புறம் திரும்பியது.
“இல்லை.. இல்லை.. நான் எந்த நெக்லஸூம் இவன் கிட்ட கேக்கல!! இவன் என் புருஷனே கிடையாது!! கேவலம் ஒரு நெக்லஸ்க்காக புருஷனை விட்டு யாராவது கோச்சிக்கிட்டு வருவாளா? இவன் யாருன்னு எனக்கு தெரியாது!! இவன் என் புருஷன் இல்லை இல்லை.. இல்லை!!” என்றாள் கோபமாக… அவள் கூறுவதும் நியாயம் தான்!! நெக்லஸ்காக எல்லாம் கணவனை பிரிய முடியுமா? என்று மீண்டும் சந்தேக பார்வையோடு அப்படியே அனைவரும் ரோலக்ஸ் பக்கம் திரும்ப…
‘இவனுங்க என்ன ஏதோ டென்னிஸ் பார்க்கிற மாதிரி இரண்டு பக்கமும் மாறி மாறி பாக்குறானுங்க! என்ன சொல்லி சமாளிக்க?’ என்று யோசித்தவன், “ஆரம்பிச்ச சண்டை என்னமோ நெக்லஸ் வச்சு தான்!! அதுக்கப்புறம் அப்படி இப்படினு சின்ன சின்னதா சண்டை வந்து தான் நாங்க பிரிஞ்சிட்டோம். ஆனாலும் என் அன்பை காட்ட.. என் காதலை புரிய வைக்க.. எனக்கு ஒரு சான்ஸ் கொடு பிஜிலி!!” என்று அவள் புறம் திரும்பி கெஞ்சிவனைப் பார்த்த அனைவருக்கும் மனம் நெகிழ்ந்தது.
அனைவரும் இதோ ஒரு காரணத்தினாலோ.. இல்லை மனைவி இறந்ததாலோ.. கணவன் பிரிந்து சென்றதாலோ.. இப்படி வந்து சேர்ந்தவர்கள். கணவன் மனைவி சண்டையில் ஈகோவை விட்டு இறங்க பாதிப்பேருக்கு மனம் வந்ததே இல்லை. மீதி பேரோ அந்த ஈகோவை பிடித்து ஆண்டு கொண்டிருக்கும் தன் இணையை கண்டு வெறுத்து வந்தவர்கள். அவர்களெல்லாம் ரோலக்ஸ் ஈகோவை விட்டு மனைவியிடம் கெஞ்சிக் கொண்டு இருந்ததை பார்த்ததும் உருகி போயினர்.
“ஆனாலும் உனக்கு இவ்வளவு அழுத்தம் ஆகாது!! பாவம் அந்த தம்பி இவ்வளவு நேரமா கெஞ்சுறாப்ல!” என்று கங்காதரன் ஆரம்பிக்க, மண்டோதரையும் “அதானே… அவரு இவ்வளவு கெஞ்சியும் நீ மனம் இறங்காமல் இருக்கன்னா.. எனக்கெனவோ தப்பு உன் மேல தான் இருக்கணும் தோணுது!!” என்று அப்படியே மண்டோதரி திருப்பி போட…
ரோலக்ஸோ “அப்படியெல்லாம் சொல்லாதீங்க ப்யூட்டி!! தப்பு என் மேல தான். என் பிஜிலி நான் தான் சரியா புரிஞ்சுக்கல… இனிமேலாவது உன்ன புரிஞ்சுட்டு நல்லபடியா குடும்பம் நடத்தணும்” என்று அப்பாவியான முகத்தோடு அவன் கூற அத்தனை பேரும் உச் கொட்ட… அங்கே சுற்றி திரிந்த நாய்கள் கூட வந்துவிட்டது.
“அடப்பாவி!!! இப்படி பர்பாம் பண்றானே!! யாருன்னு தெரியலையே இவன்?? எதுக்கு இவ்வளவு பெர்பாமென்ஸ் பண்ணி என்னை பொண்டாட்டின்னு சொல்றான்? எந்த திட்டத்தோட இந்த தீவுக்கு வந்தான்னு தெரியல.. இந்த மக்கு மாதாஜியும் அவன் பர்பாமன்ஸ நம்பி என்னை கோர்த்து விடுது!! ஐயோ ரங்கநாதர் எங்க இருக்க நீ??” என்று அவள் மனதுக்குள்ளே புலம்பி கண்களை மேலே உயர்த்தி வேண்டிக் கொள்…
அவள் அருகில் சென்றவன் “பிஜிலி… மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு நீ சத்தமா பேசிட்டு இருக்க.. நல்லா வேள மாதாஜி காதுல விழல.. இல்லனா நீ மக்கு மாதாஜினு சொன்னது அவங்க காதுல விழுந்து இருந்தா…” என்று சொல்லினால் நமட்டு சிரிப்போடு நகர்ந்து நின்று கொண்டான்.
அதில் இன்னும் கோபம் பொங்க.. “நீ யாருன்னு எனக்கு தெரியாதுடா!! நம்ம ரெண்டு பேரும் ஹஸ்பன்ட் அண்ட் வொய்ஃப்ங்கறதுக்கு என்ன ஆதாரம் இருக்கு காட்டு??” என்று அவள் கத்த… மீண்டும் டென்னிஸ் பார்ப்பது போல அனைவரும் ரோலக்சை பார்க்க…
“நீதானே பிஜிலி எல்லா ஃபோட்டோஸையும் டெலிட் பண்ண இப்ப கையில காமிக்கிறதுக்கு சட்டுன்னு ஒரு போட்டோ கூட இல்லை என்கிட்ட.. எப்படியும் நீ எனகிட்ட வந்துருவேன்னு உன்னை நினைச்சு நினைச்சு காத்துகிட்டு இருந்தேன். ஆனா இப்படி என்னையே யாருன்னு கேட்பேன் நான் எதிர்பார்க்கல.. எதிர்பார்க்கல!!” என்று வராத கண்ணீரை அவன் துடைத்துக் கொள்ள.. அவனின் அந்த நீலிக் கண்ணீரில் கரைந்து காணாமல் போனார் மண்டோதரி.
“பிராடு.. பிராடு.. என்னமா நடிக்கிறான்!! போட்டோ இருந்தா தானே காட்ட முடியும்?” என்று அவள் கெத்தாக கூற… பரிதாபப்பட்ட உள்ளங்கள் இப்பொழுது சந்தேகத்துக்கு மாறும் போல் இருந்ததை கண்டவன் “சரி நான் உன் புருஷன் இல்லைனா… உன் புருஷன் போட்டோவை நீ காட்டு!!” என்றான்.
இதை எதிர்ப்பார்க்காதவள், திக்கி திணறி “அது.. அது…என் புருஷன் கூட சண்டையில நான் டெலீட் பண்ணிட்டேன்!!” என்றாள்.
“அதைத்தான் நானும் சொன்னேன் பிஜிலி!!” என்றவன் மாட்டுனியா என்று பார்க்க..
இப்பொழுது மொத்த பேரும்.. இல்லை இல்லை கண்களும் ரோலாக்சுக்கு ஆதரவு!!
“இப்பவும் ஒன்னு கெட்டு போல பிஜிலி!! நானும் உன் கூட இங்கேயே இருந்திறேன். கூட சேர்ந்து வாழலைனாலும் பரவால்ல.. ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தாலே போதும்!! உன் அருகாமையை மட்டும் எனக்கு போதும்!! நீ சுவாசிக்கும் இந்த காத்தை நான் சுவாசித்தால் போதும்!! நீ இருக்கிற இதே மண்ணில நானும் இருக்கேன்னு… அந்த ஒரு பீலே எனக்கு போதும்!!” என்று ஏதோ ஜென்ம ஜென்மமாய்.. பல வருடங்களாய் காதலித்தவன் போல அவன் காதல் கணைகளை கவிதைகளாய் அவளை பார்த்து தொடுக்க.. அத்தனையும் அவளை சேரும் முன்னமே சற்று யூ டேன் எடுத்து அருகில் இருந்த மண்டோதரியை தான் தாக்கியது.
‘என்ன ஒரு காதல்!!
என்ன ஒரு அன்பு!!
என்ன ஒரு நேசம்!!
என்ன ஒரு பரிதவிப்பு!!’ என்று என்ன என்ன என்று என்னத்த கண்ணையா ரேஞ்சில் மண்டோதரி எண்ணங்கள் செல்ல…
“எனக்கு லாஸ்ட்டா ஒரு சான்ஸ் கொடுத்து தான் பாரேன் பிஜிலி!!” என்று அவள் முன் மண்டையிட்டு கூறும் அந்த புதியவனை விழிவிரித்து பார்த்தாள் அவள். ‘அடப்பாவி… ஏதோ பிளானோட இந்த தீவுல தங்குவதற்கு வந்திருக்கான் போல.. அதுக்கு என்னை ஏன்டா இப்படி கோர்த்து விடுற? நாசமா போறவனே!!’ என்று அவளுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை அவனைப் பார்த்து உதட்டு அசைத்து திட்டிக் கொண்டிருந்தாள்…
சத்தமாகத்தான் திட்ட முடியாது என்று இவனை!! இவனுக்கு என்று முளைத்த இந்த திடீர் உறவுகள் பாய்ந்து வந்து அவளிடமே சண்டை போடும் அல்லவா?? அதனால் தான் இந்த சைலன்ட் திட்டு!!
“இந்த மாதிரி ஒரு புருஷன் கிடைக்க நீ எல்லாம் தவம் பண்ணி இருக்கணும் தவம்…!!” என்று மண்டோதரி சிலாகித்து கூற…
“இல்லை இல்லை.. எல்லாம் பாபாஜியின் அருள் தான் ப்யூட்டி!!” என்றான் கையில மேலே கூப்பியபடி ரோலக்ஸ். அவ்வப்போது பியூட்டி என்று கூறி மண்டோதரியை தன் பக்கத்தில் அழுத்தமாக நிறுத்திக் கொண்டான்.
“சரியா சொன்ன.. சரியா சொன்ன..!!” என்று அவனை ஆமோதித்த கங்கோதரன், “மாதாஜி.. இந்த பிரச்சனை முடித்து விடுங்க. நான் மத்தவங்களை எல்லாம் பார்த்து செலக்ட் பண்ணனும்” என்றதும்
” சரி சரி” என்று கங்காதரனை பார்த்து கூறியவர், “அஞ்சலி… நீ உன் புருஷன குடிலுக்கு கூட்டிட்டு போ!!” என்றார் அவர்.
“என்னது??” என்று அதிர்ந்தவள், “அங்கு என்னோட சேர்த்து இன்னும் மூணு பொண்ணுங்க இருக்காங்க” என்றாள் மண்டோரியின் கண்டன பார்வையில் அமைதியாக..
“உன்னை அந்தக் குடில் பக்கம் செல்ல சொல்லல… குடும்பமா இருக்கிற குடில் பக்கம் போய் இருங்க.. உங்களுக்கு ஆனா குடில் அங்கு இருக்கிறவர் அலார்ட் செய்வார். போ.. போ.. ஏன் இன்னும் மசமசன்னு நின்னுகிட்டே இருக்க..” என்று அவளை விரட்டினார் மண்டோதரி
குடும்பங்களை சில பக்தர்கள் அந்த தீவில் இருக்க.. அவர்கள் இருந்த குடலுக்கு பக்கத்திலேயே ஒரு குடில் இவர்களுக்கு அலார்ட் செய்யப்பட அதை திறந்து உள்ளே சென்றதும் “யாருடா நீ? எதுக்குடா இங்கே வந்திருக்க? இதுக்கு என் பெயரை யூஸ் பண்ணிட்டு இப்படி பண்ற?” என்றதும் அவனும் சாவகாசமாக அந்த கட்டிலில் அமர்ந்து “என்ன பொண்டாட்டி… இப்படி கேட்டுட்ட?? நிஜமா உனக்கு என்னை ஞாபகம் இல்லையா? இல்ல மண்டையில் அடி பட்டுருச்சா?” என்று வெகு நக்கலாக கேட்டான்.
“உன்னை.. கடன்காரா…!!” என்று அவள் அவனை அடிக்கப் பாய… அவள் இரு கைகளையும் பிடித்துக் கொண்டவன், “அடியே… ராட்சசி!! ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளு!!” என்று அவனும் கத்த…
அதே சமயம் இவங்க ரெண்டு பேரும் நிஜமாலுமே புருஷன் பொண்டாட்டி தானா? எதுக்கும் நாம ஒரு டெஸ்ட் வைத்து பார்ப்போம்? என்று அந்தரங்க கேள்வியோடு அவர்களது அந்தரங்கத்தில் நுழைய முற்பட்டார் மண்டோதரி, அதன் பொருட்டு கதவைத் தட்டாமல் படார் என்று கதவைத் திறக்க..
கதவை திறந்து சத்தத்தில் ரோலக்ஸின் புலன் உணர்வுகள் சட்டென்று விழித்துக் கொள்ள அந்நிலையை சமாளிக்க வேண்டி தன் மீது பாய்ந்து பாய்ந்து சண்டையிடும் காரிகையின் கனிந்த உதடுகளை சிறை செய்தான்!!
“அஞ்சலி….!!” என்று உள்ளே நுழைந்த மண்டோதரி.. ஃப்ரீயாக மார்னிங் ஷோ பார்த்து அதிர்ந்து அச்சோ என்று கண்களை மூடிக்கொண்டார்!!
தொடரும்…
