யாவும் நீயானாய் கண்மணி
யாவும் நீயானாய்-4
முத்த தீண்டலில் மூழ்கி வேட்கை அதிகரிக்கையில் வேகம் கூட்டி பதித்த பல் தடத்தில் சிவக்க வேண்டிய கண்ணமோ
இடியென இறங்கியிருந்த அறையில் இளவண்ணத்தில் இருந்து இரத்தின் நிறத்திற்க்கு மாறியிருக்க அதன் வலிதந்த எதிரொலிப்பில் ஒரு மூலையில் முடங்கிருந்தாள் முரடனின் காதலி.
அவன் வாழ்வின் மொத்த மகிழ்ச்சியாய் அவளை எண்ணுபவன் எங்கணம் அவளை கண்ணத்தில் அறைந்திருப்பான்?
அவனையன்றி அவளை உரிமையாய் தொட்டிடும் ஆண்மகன் உண்டெனில் அது அவளின் தந்தையும் தமையனையும் தவிற வேறு யாரையாய் இருந்திட முடியும்.
மகிழாவின் அண்ணனிடம் அவன் நண்பன் குருவின் வீட்டிலிருந்து வந்ததை கண்டாதக சொன்னதோடு மட்டுமின்றி அவர்கள் காதலிக்கும் விசயத்தையும் போட்டு உடைத்திருக்க கொதிகலனின் கொதிப்போடு வீடு வந்தவன் தன் தந்தையிடம் கூறி அவளை துவம்சம் செய்யும் நோக்குடன் அடிக்க துவங்கினான்.
ஒரு தந்தையாய் தான் வைத்திருந்த நம்பிக்கையை மகள் கொன்றதை எண்ணி கோபம் கொண்டவர் தன் மகன் அடித்ததை தடுக்காதவர் கனல் கக்கும் விழிவீச்சுகளை மகளை நோக்கி வீசிக்கொண்டிருந்தார்.
கோபம் இருந்த போதிலும் ஈன்றெடுத்த தாய் உள்ளம் அவள் வலியில் துடிப்பதை காண சகியாமல் மனம் கசங்கியது.
தன் கணவரும் மகனும் அவளை கொன்றாலும் ஆச்சரியம் கொள்வதற்க்கில்லை இருவரும் சாதிச்சாக்கடையில் மூழ்கிய மூடர்கள்.
அவர்களிடம் இருந்து அவளை காத்திட எண்ணியவர் எப்படியாவது இச்செய்தியை குருவிடம் கொண்டு சேர்த்திட துடித்தார்.
அவர் துடிப்பின் பயனாய் குருவின் ஆள் ஒருவன் அவர்கள் தெருவில் சுற்றிக்கொண்டிருக்க கணப்பொழுதில் காற்றில் தூது விடுவது போல் செய்தி அனுப்பியவர் அவன் புயல் வேகத்தில் வருவான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
சூறாவளிக்காற்று சுழன்று வீசியடிக்கும் வேளையில் அதன் வேலிக்குள்ளே சிக்குபவர்கள் எல்லாம் சிதறி சின்னாபின்னமாகி விடுவர்.
அதன் வேகத்திற்க்கு சற்றே குறையாத வேகத்தோடு தன் காதலியினை காணவந்தவன் அவள் இருக்கும் நிலை கண்டு புழுவாய் மாறி துடித்தான்.
எதிரிகளின் வேங்கை புழுவாய் மாறியது மாயம் செய்யும் காதலி அவள் மகிழாவின் முன்னல்லவா.
இருள் கண்டு அரளும் சிறுமி போல மூலையில் இரு கால்களையும் கட்டிக்கொண்டு அழுகை அருவியாய் கொட்டிட மருண்டு விழிக்கும் பார்வையோடு கண்ணத்தில் வரியாய் இழுத்திருந்த கைத்தடத்தோடு அவள் இருந்த கோலம் அந்த இரும்பின் திடம் உடையவனின் இதயத்தில் ஈட்டியாய் தாக்க மறுநொடி
குருவின் ஒரே அடியில் மறுநொடி மகிழாவின் அண்ணன் தரையில் சுருண்டிருந்தான்.
இறக்கை விரிக்கும் ராஜாளி கழுகாய் இவன் கையிரண்டினை விரித்திட அதற்கே காத்திருந்தவள் போல அடைக்கலம் புகுந்துகொண்டாள் அழகிய பெண்ணவளும்.
உடல் துளைக்கும் குளிர் உயிர் வரை ஊடுருவுகையில் நொடிக்கொரு முறை துள்ளியடங்கும் உடலினை போல மகிழா பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்க தன் இறுகிய அணைப்பின் இதத்திலே அவளை கொஞ்சகொஞ்சமாய் தேற்றிக்கொண்டிருந்தான் குரு.
இதனை எல்லாம் இமைக்காமல் பார்த்திருந்த மகிழாவின் தந்தை கணப்பொழுதில் யாருமறியாவண்ணம் தான் மறைத்து வைத்திருக்கு வெட்டருவாளை ஓங்கிய நொடி நடுவே குருவின் மேல் ஓங்கிய நொடி அவரின் கைகள் முறிக்கப்பட்டிருந்தது குருவின் பணியாட்களினால்.
தன் உயிரின் மீது உணர்வுகளை வைத்திருந்தவன் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என உணரவில்லை.
ஆனால் அந்த மகாராஜனின் பாதுக்காப்பு படை அவனை பத்திரம் பண்ணிவிட்டது.
தன் மார்பிலே புதைந்திருந்த மணிக்குயிலின் முகத்தினை தன் கையிரண்டில் ஏந்தியவன் மயக்கும் மதிமுகத்தின் நெற்றிப்பொட்டில் அழுத்தமாய் இதழ்ப்பதித்தான்.
அவன் இதழ்கள் கூட இரும்பின் பலத்தினை இதயத்திற்க்கு அளித்திடும் என்கையில் அந்த இடையழகியும் இனிதாய் அதிர்ந்தாள்.
“என் பொண்டாட்டி இந்த மாமா உயிரோட இருக்கிற வரைக்கும் எதுக்காவும் அழக்கூடாது” அவள் கருவிழிகளை தன் கண்ணினால் கட்டிப்போட்டபடி கட்டளையிட்டவன்
தன் பணியாட்கள் புறம் திரும்பி
“முத்து அம்மாவோட பெட்டிய எடுத்துட்டு வா” என குரல்கொடுத்த அடுத்த நொடி
அவன் முன்னே அந்த பெட்டி வந்து பவ்வியமாக வைக்கப்பட்டது.
பெட்டியை அவள் கையில் திணித்தவன் “என் கோட்டைக்கு மகாராணியா போய் தயாராகு போ,இந்த வீட்டுல இருந்து நீ எதையும் எடுத்துட்டு வரக்கூடாது” என அவன் உரைக்க
தொப்புள் கொடியினை எவ்வாறு முறிப்பாய் என நிதர்சனமும் சற்றே விழகி நின்று அவனை பார்த்து எள்ளல் பார்வை ஒன்றை வழங்கியது.
அவன் கூறிய வார்த்தைகள் உயிரின் வேரினையே அறுத்த போதும் வேறு வழியில்லை எனும்பட்சதத்தில் கிளம்பிட விளைந்தாள் கிளிப்பிள்ளையாய் குருவின் சொல்கேட்டு.
சில மணித்துளிகளுக்கு பின்னே கதவுதிறக்கும் ஒலி தடதடவென கேட்க அதன் பின்னே ஒரு மெல்லிய கொலுசொலி நெருக்கி முத்து வைத்துக்கோர்த்த தங்கக்கொலுசு அவள் தாமரை இதழ்பாதங்களை தாங்கியிருக்க
வெள்ளிசரிகையில் நெய்த வெண்பட்டு அதில் அரக்கில் பார்டர் கட்டி அவள் மெழுகு சிலை மேனியாய் மென்மையாய் தழுவியிருந்தது.
மணிக்கழுத்தில் சூடியிருந்த மாலையிலோ அவள் மனம்கவர்ந்த மன்னவனின் மதிமுகம் பொறிக்கப்பட்டிருக்க
மணிக்கட்டை தாங்கியிருந்த பிரேஸ்லட்டிலோ இருவரின் பெயர்களின் முதலெழுத்துகளை தாங்கி ஜோடிப்புறாக்கள் முத்தமிட்டுக்கொண்டிருந்தன
காதணியோ அவள் அடுக்குமல்லி சூடும் குழலோடு இணைந்த மாட்டலோடு ஐந்து அடுக்கு ஜிமிக்காய் தோகை மயிலை மேலே தாங்கி மின்னியது.
அப்பப்பா அவள் சொக்க வைக்கும் அழகில் சொடுக்கிட்டால் தான் சுயநினைவிற்கே வருவான் சொக்கிநின்ற தலைவனும்.
அசரடிக்கு அழகினைக்கொண்டவள் மெல்லிய பூப்பாதங்களால் பூமாதேவி நோக வண்ண மெல்ல நடையிட்டு மன்னவன் முன் வந்து நிற்க
“ஐயா வண்டி எடுக்க சொல்லலாமா” என தன் காதோரம் ஒலித்த பணிவான குரலில் தான் சுயம் பெற்றான் சுற்றம் மறந்து சொக்கிநின்ற குருவும்.
மெல்ல தலையசைத்து சரி என்றவன்
தன் அகன்ற கைகளுக்குள்ளே அவள் கைகளை அதக்கி கொள்ளும் பொருட்டு அவள் முன்னே கை நீட்ட
வெண்டைபிஞ்சு விரல்களில் தவழ்ந்த வைர மோதிரங்கள் ஒளி வீச அவன் கைக்குள்ளே தன் கையை ஒடுக்கிக்கொண்டாள்.
அவள் கரங்களுக்காகவே காத்திருந்தவன் போல தன் வலிய கரத்திற்க்குள் வசதியாய் மறைத்துக்கொண்டவன் அவள் உள்ளங்கை மென்மையில் உயிர் வரை சிலிர்த்தான்.
ஒரே ஒரு முறை அவள் விழிகள் கண்ணீரோடு அவளை ஈன்றவளை தொட்டுச்சென்றது.
அங்கோ பெற்ற மனமும் பரிதவித்தது.
போகிறதே தன் கணவன் கைபிடித்து தன் வீட்டின் கைக்குழந்தை என பரிதவித்தது.பாய்ந்து சென்று தன் பச்சிளம் சிசுவை தன் மடியிலே போட்டு தாலாட்ட துடித்த கைகளுக்கு முயன்று விலங்கிட்டு அவளைப்பார்த்து மெல்ல தலையசைத்தார் அவளுக்கு விடைகொடுக்கும் பொருட்டு.
ஓடிச்சென்று அவரை கட்டிதழுவ துடித்த மனதினை மன்னவன் கை அழுத்தம் வந்து அறுத்தெறிந்தது.
அவள் கைக்கோர்த்து வெளிச்செல்ல திரும்பியன்
கீழே கிடந்த இருவரையும் நோக்கி
“இவ என்னோட மகாராணி,இவளுக்கு இனிமே எப்பவாவது உங்களால ஒரு சின்னகீறல் வந்தாக்கூட உங்க இரண்டு பேருக்கும் உயிரோட சமாதி கட்டிடுவேன்” எச்சரிக்கும் குரலில் சுட்டு விரல் நீட்டி மிரட்டியவனின் கர்ஜனை குரல் அவ்விருவரின் அடிவயிற்றில் பயப்பந்து ஒன்று உருண்டு அவர்களை பயப்போர்வைக்குள்ளே சுருட்டிக்கொண்டது.
அனல் பார்வை அவர்களை நோக்கி வீசிவிட்டு மீசையை முறுக்கியவன் தன்னையே பயந்து நோக்கும் தன்னவளைக்கண்டதும் நெஞ்சம் பாகாய் உருக மெல்ல மென்மையை தத்தெடுத்தது அவன் முகம்.
கனிவாய் அவளை நோக்கியன்
“போகலாம் வா அம்மு” என கைபிடித்து அழைத்து செல்ல அங்கே அவர்களுக்கான காரின் அருகில் கதவினை திறந்து வைத்துக்கொண்டு அவன் பணியாட்கள் காத்திருந்தனர்.
அந்த அகன்ற தெருவினை முழுவதும் ஆக்ரமித்திருந்தது அணிவகுத்து நின்ற அவனுடைய கார்கள்.
அதில் இருந்ததிலே உயர்தரமான கார் ஒன்றில் அவள் கைப்பற்றி பூவைப்போலே அவளை அமரவைத்தவன் அவள் அமர்ந்தவுடன் அவன் பணியாட்களுக்கு கண் அசைத்து விட்டு காரிலே ஏறினான்.
அவன் கடைக்கண் பார்வையை கைப்பற்றிய அவன் கைப்பாவைகள் அனைவரும் சீறும் வண்டிகளோடு அவனுடைய வண்டியை பின் தொடர்ந்தனர்.
ரத ஊர்வலம் ராஜாதி ராஜனின் அருகே நளினத்தின் ராணியோடு கூடிய ஒரு ரத ஊர்வலம்.
ராணியின் நயனங்களில் அவை நனைந்ததின் அடையாளம் இருக்க
மெல்ல அவள் அருகில் நெருங்கியவன்
கொடியிடையின் ஊடே தன் கரங்களை கொண்டு சென்று தன்னருகே இழுத்தவன் அவள் பயந்த பார்வை பார்க்கையிலே மெல்ல அவளை தன் கைச்சிறைக்குள்ளே பதுக்கி கொண்டான்.
அவளுக்கு மட்டுமே கேட்கும் கிசுகிசுப்பான குரலில் அவள் ஜிமிக்கியின் நுனியோடு தன் உதடு உரச
“அம்மு நான் எடுத்த அளவு பிளவுஸ் உனக்கு ரொம்ப கரெக்டா இருக்குடி”
எனக்கூற
செங்காந்தாள் நிறமென்ன என்பதை எடுத்துரைத்தது அவள் மேனி.
வெட்கத்தில் சிவந்த அவள் மேனி உணர்ச்சி மிகுந்த அவ்வரிகளின் தாக்கத்தில் தலைக்குனிந்து கொண்டாள்.
நாணச்சிரிப்பு ஒன்று இதழொன்றில் பூக்க அவள் கண்களோ அலைப்புற்றுக்கொண்டிருந்தது அவன் கண்களை சந்திக்க முடியாமல்.
அவளின் அலைப்புறுதலைக்கண்டு ஆனந்தம் கொண்டவன்
இன்னும் அவள் முகத்தில் நவரசங்களின் நாட்டியத்தை கண்டிட வேண்டி தொடந்து பேசினான்.
“பார்த்தீயா அம்மு மாமா கண்ணால பார்த்ததுலே உனக்கு கரெக்டா அளவெடுத்து இருக்கேன்,இன்னும்”
இன்னும் என்ன என்ன பேசியிருப்பானோ அவன் முரட்டு இதழ்களுக்கு தன் கரங்களால் முற்றுகை இட்டவள் கண்களை முன்னே இருந்த டிரைவரை காட்டி மிரட்டும் தோணியில் செய்கை செய்ய அவளை இழுத்து தன் தோள்களிலே சாற்றிக்கொண்டான்.
தான் தேடியலைந்த பொக்கிஷம் ஒன்று தன்னை தேடிவந்த நிறைவு அவனுக்கு.
அவன் கரிசல் காட்டில் பூத்த காட்டுமல்லியவள்.
மகிழ்வோடு அவன் அணைப்புக்குள்ளே ஒடுங்கியவளும் தன் தற்போதைய கவலைகளை ஒரு ஓரமாய் தள்ளினாள்.
தேனி மாவட்டமே தெறிக்கும் அளவிற்க்கு பிரம்மாண்டமாய் அவர்கள் திருமணத்தை திருவிழா போல் கோலாகலமாய் திகட்ட திகட்ட கொண்டாடினான்.
திருமணத்திற்க்கு சில முக்கிய புள்ளிகளும் வந்திருக்க அனைவரும் திரும்பி பார்க்கும் அதிமுக்கிய விழாவாகே அவர்கள் திருமணம் நடந்தேறியது.
திருமணத்திற்க்கு வந்திருந்தவர்களின் கண்ணெல்லாம் மகிழாவின் மாசற்ற எழிலில் தான் நிலைத்தது.
அவள் பிறைநிலா நெற்றிதொட்டு வைரமூக்குத்தி ஒளிவீச நீண்டிருக்கும் கூர்மூக்கில் பயணித்து அவள் செம்பவழ இதழகில் லயித்து அவள் வளைவுகளில் வியந்து என இப்படியும் பேரழகியா என ஆச்சரியத்தில் அசந்தனர்.
அந்த அழகுக்கெல்லாம் உரிமைகோருபவன் ஒருநொடியாவது அவளை விலக எண்ணிடவானா?
அவன் கட்டழகு மேனிக்குள்ளே அவளை கைது செய்து தேக்கு மரதேகத்தால் அவளை மோகத்தில் வென்றெடுத்து தேடல்களில் எல்லாம் தேவை தீர்ந்திடுமா என எண்ணுகையில் அது தாகம் கொண்டு மேலும் மேலும் என முண்டிக்கொண்டு வர முடிவில் அவளிடமே மீண்டும் மூழ்கிவிட்டான்.
