யாரோ இவள் என் காதலி

This entry is part 3 of 12 in the series யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

யாரோ இவள் என் காதலி

வணக்கம் அன்பு நண்பர்களே, தோழிகளே
நம்ம பையன் கார்த்திக் பெரிய பல்பா வாங்குனதுக்கு அப்புறம் எதுவுமே நடக்காத மாதிரி பஸ் விட்டு கீழே இறங்குறான்.
பாவம் நம்ம பையன் பஸ்ஸுக்குள்ள அடிச்ச கூத்து அவங்க அப்பாவுக்கு எதுவும் தெரியலை. தெரிஞ்சிருக்கணும் நம்ம பையனுக்கு அன்னைக்கு அங்கேயே நடந்துருக்கும் துர்கா பூஜை.
 கார்த்திக் மற்றும் அவனோட அப்பா 2 பேரும் ஒருவழியா அவங்க போக வேண்டிய இடத்துக்கு வந்து சேருறாங்க பஸ் ஸ்டாப்ல இருந்து காலேஜ் 1கி.மீ உள்ள நடந்து போகணும்.
இரண்டு பேரும் யோசிச்சுக்கிட்டே நடந்து போறாங்க, காலையில மணி 10 கொஞ்சம் வெயில் அதிகம் தான் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து போயிட்டிருக்காங்க…
கார்த்திக் பிறந்து வளர்ந்தது எல்லாமே கிராமத்திலே தான் அவன் நகரத்துக்குள்ள வந்ததே இல்லை. இங்கே பரப்பரப்பா ஓடிக்கிட்டிருக்க மனுசங்க, கார், பஸ் எல்லாம் பார்க்கும்போது ஆச்சரியம் தான்.
கூட்டிலிருந்த புழு சிறகுகள் முளைத்து எப்படி பட்டாம்பூச்சி ஆக மாறி பறக்க முயற்சி செய்யுமோ அந்த உணர்வு தற்போது அவனுக்கு,  முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சு பறவை எப்படி ஆச்சரியமாக இந்த உலகை பார்க்குமோ அதுபோல அவனும் ஆச்சரியமாக கண்கள் விரிந்து பார்க்கிறான்.
தாவணி உடுத்தி தலைகுனிந்து சென்ற பெண்ணை பார்த்து விட்டு இன்று சுடிதாரிலும், மாடர்ன் உடைகளிலும் உலா வரும் பெண்களை பார்த்து அவன் ஆச்சர்யப்படவில்லை என்றால் ஆச்சர்யமே!!!
நல்ல பெரிய காலேஜ் 2500 மாணவர்கள் படிக்கும் வசதியுடையது. கிராமத்துல கட்டாந்தரையில் அரைக்கால் டவுசர் போட்டு படிச்ச பையனுக்கு இவ்வளவு பெரிய காலேஜ் பார்த்ததும் சும்மா அசந்து போயிட்டான் நம்ம பையன்.
அவன் படிச்ச ஸ்கூல் அடிப்படை வசதி எதுவுமே இல்லாத ஸ்கூல் குடிக்க குடிநீர் வசதி கிடையாது. கழிக்க கழிவறை வசதி கிடையாது. 
பாவம் கார்த்திக் அப்பா அவரோட சக்திக்கு அவரால அந்த ஸ்கூலில் தான் பையனை படிக்க வைக்க முடிஞ்சது.
கார்த்திக் அப்பா நல்ல மனுஷன் எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லை அவருக்கு,  சாதாரண கூலி வேலை தான் அதுல கிடைக்கும் வருமானத்தை வச்சு தான் பையனை படிக்க வைச்சாறு.
நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் கார்த்திக் அப்பா அந்த காலத்திலே 200 ஏக்கர் நில வசதி கொண்டவர். இவர்கூட பிறந்தவங்க  சொந்தக்காரங்க எல்லாரும் நல்லா படிக்க இவர் மட்டும் சரியா படிக்கலை.
வீட்டுக்கு மூத்த மகன் ஒரே செல்லம், அதனால விளையாட்டு தனமா இருந்துவிட்டு சரியா படிக்கலை, யாரும் இவரை கண்டிக்கலை.
கார்த்திக் பாட்டா (கிராமத்தில அப்போவோட அப்பாவை இப்படி தான் கூப்பிடுவாங்க) 
அவர் அந்த கால மைனர் குடி, கூத்து, கூத்தியாள் அப்படின்னு மனுஷன் ஏக போகமா அனுபவிச்சு வாழ்ந்தாரு.
அவரோட ஆடம்பரமான வாழ்க்கை முறையால இப்போ எல்லா சொத்துக்களையும் இழந்துட்டாங்க, கடைசியா கார்த்தி அம்மாவை அவங்க அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமனார் வீட்டோட இங்கே வந்து செட்டில் ஆகிட்டார்.
ஒரு ஆம்பளை வீட்டோட மாப்பிள்ளையா இருக்கது எவ்வளவு கஷ்டம் அப்படின்னு அவருக்கு மட்டுமே தெரியும். மாமனார் வீட்டுல மரியாதை இருக்காது. சரியான வேலை வாய்ப்பு இல்லை. நிதி பற்றாக்குறை பொண்டாட்டிக்கு பூ வாங்க கூட  மாமனார் தயவு வேணும். யோசிச்சு பாருங்க அவர் வழி புரியும்.
ஒருவழியா நண்பர்கள் உதவியுடன் கூலி வேலை  ஒரு மரக்கடையில கிடைச்சு 500ரூபா சம்பளத்துக்கு வேலைக்கு போனாரு,  இப்போ 49 வயசு ஆச்சு 7000ரூபா சம்பளத்துக்கு வேலைக்கு போயிட்டு இருக்காரு.
அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஏன் டீ, காபி கூட குடிக்க மாட்டாரு. அவர் பசிக்கு எதுவுமே சாப்பிட மாட்டாரு, குழந்தைக சாப்பிடட்டும் அப்படின்னு இருப்பாரு.
கூட வேலை பாக்குறவங்க எல்லாரும் அவரை கஞ்சன் அப்படின்னு கிண்டல் பண்ணாலும் அதெல்லாம் நினைச்சு வருத்தப்பட்டதில்லை. 
வேலை பார்க்குற கடையில காலையில, சாயங்காலம் டீயும் வடையும் கொடுப்பாங்க,  கூலி வேலை செய்யுறவங்களுக்கு இவர் டீ, காபி சாப்பிட மாட்டாரு, கடைல கொடுத்த வடையை சாப்பிடாம வீட்டுக்கு எடுத்து வந்து குழந்தைகளுக்கு அதாவது கார்த்திக் அப்புறம் அவன் தங்கைக்கு கொடுப்பாரு, இப்படி எல்லாம் தான் குழந்தைகளை வளத்தாரு.
அம்மா பத்து மாசம் மட்டும் தான் வயித்துல சுமக்குறாங்க, ஆனா அப்பா மாருலயும், தோளுலயும் பையனை சாகுற வரை சுமக்குறாங்க.
திருவிழாவில் அப்பா தோள் மீது ஏறி சாமி பார்க்கும் போது தெரியவில்லை.
சாமி மீது தான் அமர்ந்து இருக்கிறோம் என்று.
கார்த்திக் வீட்டுக்கு மூத்தவன் இவனுக்கு அடுத்து தங்கை ஒருத்தி. இவன் அம்மா செல்லம், எல்லார் வீட்டிலும் பசங்க அம்மா செல்லம் தான். கார்த்திக்குக்கும் அவன் அப்பாவுக்கும் என்னைக்குமே ஆகாது.
எல்லா இளவயசு பசங்களுக்கும் அவங்க அப்பா வில்லன் தான். கார்த்திக் அப்பா கண்டிப்பானவர். இன்னைக்கு நாம இப்படி படுற கஷ்டம் நாளைக்கு நம்ம புள்ளை பட கூடாது அப்படின்னு நெனைச்சு உள்ளுக்குள்ளேயே உருகுறவர். ஆம்பளை மனசுக்குள்ள ஆயிரம் பாசம் இருக்குங்க ஆனால் வெளியே காட்டிக்க தெரியாது.
அப்பாவோட கண்டிப்பு எப்பவுமே கார்த்திக்குக்கு பிடிக்காது, அதனால அவங்க அப்பா கூட சரியா பேசவே மாட்டான். அவர் கூட எங்கேயும் வெளியே போகவும் மாட்டான், ஆனால் செலவுக்கு காசு வேணும்னா மட்டும் பையன் அப்படியே பாசமா நடிப்பாரு அப்படி இப்படின்னு எதாவது மொக்கை காமெடி பண்ணி ஏமாத்தி காசு வாங்கிடுவான். அந்த மனுஷனும் நம்ம பையன் தானே அப்படின்னு தெரிஞ்சே ஏமாந்து கொடுப்பாரு.
இன்னைக்கு காலேஜ் இன்டர்வியூ செலெக்ஷன். பையன் அவங்க அப்பாவை கூட்டிக்கிட்டு நடந்து போயிட்டு இருக்கான். இது கவர்மென்ட் பாலிடெக்னிக் காலேஜ். இங்கே அப்ளிகேஷன் பில் பண்ணி போட்டா நாம வாங்குன மார்க் அடிப்படையில இன்டர்வியூ வர சொல்லுவாங்க, அந்த தேதியில நம்ம சாதிக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில என்ன கோர்ஸ் இருக்கோ அதை கொடுப்பாங்க.
அந்த இன்டர்வியூவில கலந்துக்க தான் அப்பாவோட கார்த்திக் போயிட்டு இருக்கான்.
கார்த்திக் அப்பா யோசிச்சுக்கிட்டே வராரு, அவருக்கு நேத்து ராத்திரியிலே இருந்து தூக்கம் வரலை. பையனை பத்தி கவலை தான் வேற என்ன, நாளைக்கு பையனுக்கு காலேஜில சீட்டு கிடைக்குமா, கிடைக்காதா??? எந்த கோர்ஸ் படிக்க வைக்கலாம் அப்படின்னு பல யோசனை.
அதிக பேர் அவர்க்கிட்ட மெக்கானிக்கல் கோர்ஸ் உன் பையனை படிக்க வை நல்லா சம்பாதிக்கலாம் அப்படின்னு சொல்ல, அவருக்கு அது சரியா தப்பான்னு தெரியலை பையனை அந்த கோர்ஸ்ல சேர்க்கனும் ஆசை.
மனசுக்குள்ள பல யோசனை பையனை பத்தி யோசிக்கிட்டே  நடந்து வராரு, ஆனால் நம்ம பையன் பஸ்ஸுல பார்த்த நதியா போனா என்ன இங்க இவ்வளவு பொண்ணுங்களா அப்படின்னு பையன் ஜாலி மூடுல சைட் அடிச்சிக்கிட்டே வரான். என்ன பண்றது நம்ம பையன் வயசு அப்படி!!!
காலேஜ் போனாங்களா இன்டர்வியூ என்னாச்சு சீட் கிடைச்சதா??? நாளை படிக்கலாம் நண்பர்களே, தோழிகளே.
நன்றி வணக்கம்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *